Founder/President

Shri Arutsakthi Nagarajan

Sri Arutshakti Nagarajan was born in Aathikulam, a village near Kumbakonam in Tamil Nadu. He was the second son of Sri Ramachandra Ayyar and Srimathi Janakiyammal. From a young age, he developed an interest in Vedanta and began writing spiritual messages.

He married named Srimathi Bhuvaneshwari, who later revealed herself as a divine embodiment.

In 1967, he met his enlightened guru, Sri Ananthanandanathar, from the lineage of Guhananda Mandali. The moment he saw him, he felt spiritually fulfilled through Nayana Deeksha (initiation through the guru’s gaze). As he continued to meditate upon his guru, he, along with his wife, received Poorna Deeksha (initiation) in the village of Vidayal karuppur.

Later, he moved to Chennai and continued his spiritual practice. In 1989, he established the Ritambhara Gnana Sabha, a Vedanta society, where he, along with a few disciples, conducted several Sri Vidya worship rituals and fire sacrifices (yagnas). Based on the knowledge gained during his spiritual journey, he authored several books and actively participated in spiritual gatherings and rituals through Sri Vidya Guru Mandala Parishad. His guru himself honoured him with the title “Arutshakti.”

In 2000, at the Sri Vidya Sammelanam in Chennai, he was awarded the title “Sri Vidyopasana Shresta”, and his organization, Sabha, honoured him with the title “Gyana Sorkondal”. His significant spiritual contributions include conducting a 6-crore Bala Japa Yagna in Chennai in 2007, a Lalitha Laksharchana in Kumbakonam in 2011, and a Sri Chakra Puja in Madipakkam in 2015 with visual representation.

On March 23, 2025, in Velachery, he was honoured with the “Lifetime Achievement Award in Sri Vidya” by Pudukkottai Bhuvaneshwari Peetham Sri Pranavananda Mahaswamigal. He continues to guide his disciples through in-person and online Satsangs (spiritual gatherings), carrying forward his profound spiritual legacy.

தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் ஆத்திக்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன் அவர்கள்.. ஸ்ரீராமச்சந்திரஅய்யர் ஸ்ரீமதி ஜானகியம்மாள்

இவர்களின் இரண்டாவது குமாரர். இளமையிலே வேதாந்தத்தில் நாட்டமும், அருள்வாக்குகளை எழுதியும் வந்தார். ஸ்ரீமதி புவனேச்வரி என்ற பெண்ணை மணம் புரிந்தார். அவள் பிற்காலத்தில் தன்னை தேவியாக வெளிக்காட்டி கொண்டவள். 1967 ல் தன் ஞான குருவான, குஹானந்தமண்டலி பரம்பரையில் வந்த ஸ்ரீஅனந்தாநந்தநாதர் அவர்களை கண்ட மாத்திரத்தில் நயன தீக்ஷையால் தன் ஞானதாகம் அடங்கினதாக உணர்ந்து, பின் அவரையே நினைத்துவந்தபோது, விடயல்கருப்பூர் என்ற கிராமத்தில் பத்தினியுடன் சேர்த்து பூரணதீக்ஷை பெற்றார்.. பின்பு சென்னையில் குடியேறினார். சாதனையில் தொடர்ந்தார். 1989 முதல் தான் தொடங்கின ருதம்பரா ஞான ஸபா என்ற வேதாந்த ஸபையில் சேர்ந்த சில சீடர்களின் துணைகொண்டு பல ஸ்ரீவித்யாபூஜைகளும், யாகங்களும் செய்துள்ளார் தன் குருகுலவாஸத்தில் அறிந்தவைகளை கொண்டு பின அனேக நூல்கள் செய்தார். ஸ்ரீவித்யாகுருமண்டலபரிஷத் மூலம் நூல் வெளியீட்டிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டுள்ளார். தன் குருநாதராலேயே அருட்சக்தி என்று கூப்பிடும் பேறு அடைந்தவர். சென்னையில் 2000 ல் நடந்த ஸ்ரீவித்யா ஸம்மேளனத்தில் ஸ்ரீவித்யோபாஸனச்ரேஷ்ட என்ற விருதையும், தன் ருதம்பரா ஞான ஸபாவினரால் ஞானசொற்கொண்டல் என்ற விருதையும் பெற்றவர். தன் சாதனையில் 2007 இல் சென்னையில் 6 கோடி பாலா ஜப யஞமும், 2011 இல் கும்பகோணத்தில் லலிதா லக்ஷார்ச்சனையும், 2015 இல் மடிபாக்கத்தில் ஸ்ரீசக்ரபூஜையை visual ஆகவும் செய்தார். சென்ற 23-03-2025 இல் வேளச்சேரியில் புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடம் ஸ்ரீபிரணவானந்த மஹாஸ்வாமிகள் திருக்கரங்களால் சபாவினரால் வழங்கப்பட “ஸ்ரீவித்யையின் வாழ்நாள் சாதனையாளர் விருது” பெற்றார். இன்னும் பல சாதனைகளும், தன்னுடைய சீடர்களுக்கு நேரிலும், நேரலையிலும் சத்சங்கம் நடத்தி வருகிறார்.

Achievement Award-edited-nks