Category: Texts

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் (ஔவையார் எழுதியது)

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்⁠05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் ⁠10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! ⁠15

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து ⁠20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் ⁠25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து ⁠30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் ⁠35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் ⁠40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் ⁠45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் ⁠50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து ⁠55

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் ⁠60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் ⁠65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் ⁠70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! 71

மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்

ஜயசக்தி.

மெய் பதினாறு – ஷோடச ஸத்யம்

அன்றொரு நாள் காலையிலே எழுந்திருந்தேன்
வானமதை நோக்கி நின்றேன் அதிசயித்தேன்
பகலவனின் கிரணத்தை
பார்த்திருந்தேன்
தகதகக்கும் சுடரை யார்
தோற்றுவித்தார்? -1

சற்று முகமசைக்க சீராக
மரத்தினது இலை கண்டேன்
கொத்தாக மலர் கொட்டும்
கொன்றைப் பூக்கள்
மெத்த அதிசயித்தேன் மனதில்
மகிழ்ச்சி
சத்தமின்றி செய்தது யார் ? யோசித்திருந்தேன்-2

பூனையொன்று குறுக்காலே போனதப்பா
பூனைவந்தால் சகுனமோ நான் படைப்பைப் பார்த்தேன்
பானையிலே நின்றுகொண்டு
அது எட்டிப் பார்க்க
பானைக்கு குயவனைப்போல்
படைத்தவன் யாரோ?-3

நாய் குழையும் மோப்பமிடும் நன்றாய்ப் படைத்தார்!
வேய்ங்குழலை வாய்வைக்க இசை வளரும்
பாய்ந்து வரும் அவ்வோசையினை
ஒலிப்பதாரோ?
ஆய்ந்து அதில் இராகமொன்று ஆவதென்னே?-4

மேயும் பசுமடியில் மூன்று
குடம் பால் கறப்பார்
தூய்மை மிகு பாலதனை தினம் தருவதாரோ?
தாயதனின் மடி பற்றி பசியாறும்
கன்றைப் பார்த்தேன்
ஓய்ந்துவிடும் என் ஆராய்ச்சி மூலம் அறிந்தால்!-5

ஒருவனுக்கு ஒருத்தி என்னும்
மனிதக் கூட்டம்
கருத்தோடு வாழுமந்த வாழ்க்கை முறைகள்
தருகின்ற வேதத்தின் சாகை நூல்கள்
அருமையாக ஆக்கியது எந்த சக்தி?-6

கண்ணுக்கு மை தீட்டும் காதல் மனைவி
பெண்ணுக்கு நகை பூட்டும் அழகுக்கழகு
மண்ணுக்குள் வாசனையாம் மழையும் பெய்தால்
விண்ணுக்குள் உட்கார்ந்து இவை வார்த்ததாரோ?-7

கை படைத்தான் அதில் பத்து விரல் படைத்தான்
கால் படைத்து காலணியை அணிய வைத்தான்
தோல் படைத்தான் தோளியர்மேல்
துவள வைத்தான்
வேல் விழியார் கூட்டத்தில் விழவும் வைத்தான்-8

இலை பரப்பி இன்சுவையாய்
உணவு வகைகள்
கலையதனை காசினியில் கொடுத்ததாரோ?
தலைவாரி பின்னலிடும்
மாதர் கூட்டம்
பலப்பலவாய் பகன்றிடலாம்
போதும் இதுவே-9

இது யாவும் மாயையென்று ஒரு வரியில் சொல்வார்
இல்லையில்லை மாயையென்று ஒதுக்க மாட்டேன்
பல்வகையாய் படைத்து நிற்கும் பரத்தின் சக்தி
நல்லோர்க்கு நாயகியாம் அவள் நிஜத்தின் சொந்தம்-10

இல்லையப்பா இல்லையில்லை மாயை இல்லை
கல்லைதினம் கும்பிடலாம் காணும் காசினி பொய்யோ
தொல்லையென்று தந்துணையை தவிக்க விட்டு
கால்வலிக்க காட்டினுள்ளே நடப்பது நன்றோ!-11

அன்னையவள் கருக்குழியில் கிடந்தது பொய்யோ
பின்னையவள் யோனியதில் பிறந்தது பொய்யோ
கண்ணே முத்தென்று அவள் கொஞ்சலும் பொய்யோ
தன்னுயிரை தந்து காக்கும் தாய்மையும் பொய்யோ-12

அத்வைதம் என்பதுவோர் கொள்கை சொல்வார்
அத்தனையும் பொய்யில்லை அறியாமை பொய்யாம்
மித்தையென்று மேதினியை ஒதுக்க வேண்டாம்
வித்தையினை வகுத்தாரே வீணோ சொல்வீர்-13

குணம் காப்பீர் மனை காப்பீர் மனைவி காப்பீர்
பணம் பாத்து மயங்காமல் மனதைக் காப்பீர்
இனம் காப்பீர் இல்லறமாம் நல்லறம் காப்பீர்
வனப்போடு வாழ்வதுவே சிறந்த வாழ்வாம்-14

துறவு மனம் கொண்டோர்கள் வனம் புகட்டும்
அறமாற்றி அனுதினமும் வாழ்தல் மேன்மை
உறவாடி உதவிடுதல் உலகில் உண்மை
பிறந்ததற்கு பொருள் வேண்டும் புரிந்து கொள்வீர்-15

மனைமகவு பொய்யென்று ஒதுக்க வேண்டா
தினையளவும் தப்பிதமாய் நடக்க
வேண்டா
தனையறியும் தனிக்கலையே வேதாந்த மாண்டா
சனைச்சனைச் சொல்லுகின்றேன் துன்ப மண்டா!-16

(வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)

சித்தர் வழியில் சின்மய பூஜை

சித்தர் வழியில் சின்மய பூஜை

மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை.

ஸம்ப்ரதாய குரு தோத்திரம்

மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே
மூலமான பேர்களை முன்னர் கூறவேண்டுமே
ஆலவேரின் மத்தியில் அமர்ந்து கூறும் மந்திரம்
காலகாலகாலமாய் காதில் வந்து விழுந்ததே

யாகமந்திர ப்ரவேசம்

பூபுரத்தின் வாயிலில் பாதம் வைக்கும் உபாசரே
ஸ்ரீபுரத்தின் சன்னிதியில் சோதியாக இருப்பதார்?
ஸ்ரீபுரத்தின் உள்ளுக்குள் சிந்தை தன்னை வைப்பீரேல்
அப்புரத்தின் அப்புறம் அஹத்தில் வந்து அமருமே

குரு பாதுகை

பாதமிடும் பாதுகை பரக்க பேசும் உபாசரே
பாதமிடும் பாதுகை சிரத்தில் வந்ததெங்கனே
வேதமிடும் வாக்கியம் வாக்கில் கூற வல்லீரேல்
நாதர் வந்து நோக்குவர் நாதம் கேட்கலாகுமே
ஆசன பூஜை

ஆற அமற ஆற்றவென்று அமர்ந்திடும் உபாசரே
ஆற்றும் பூசை மண்டலத்தின் ஆனமஹிமை அறிவீரோ
போற்றுகின்ற மந்திரம் போகும் இடம் அறிந்திட்டால்
கூற்று வந்து அழைத்திடும் கூத்து இங்கு நடக்குமோ

ஸங்கல்பம்

முப்பத்து ஆறையும் முணுமுணுக்கும் உபாசரே
இப்பத்து இந்திரியம் வசிக்கும் இடம் எவ்விடம்
தப்பத்து காலத்தை தாண்டி விடவல்லீரேல்
அத்தத்துவங்களும் அன்னை இமை மூடலே

கண்டா பூஜை

கணம் கணம் என்று மணி அடிக்கும் உபாசரே
கணப்பொதும் கருத்திலே காளி தன்னை வைப்பிரேல்
ஓடிடும் இராக்கதர் ஒடுங்கிடும் புலன்களே
குணங்கள் மூன்றும் கடந்து நீீவிர் இங்கே
உணர்விலே லயிப்பிரே

தீப பூஜை

ஒளியை ஏற்றி உயரத்தில் நிறுத்தி வைக்கும் உபாசரே
வளியை ஏற்றி உம்முடை வாசல் தன்னில் வைப்பிரேல்
களிப்பை எய்தி கருத்துளே கடவுள் வந்தமர்வளே
இருளை நீக்கும் இறைவியும்
உருவில் உம்முள் வருவளே

பூதசுத்தி

சுத்தி சுத்தி சுத்தி என்று மூக்கைத் தொடும் உபாசரே
சுத்தி சுத்தி சூழ நிற்கும் சொரூபத்தை அறிவிரே
வித்தை முத்தி தந்திடும் வீரனாக ஆவீரே
குத்தமில்லா குருஉரு உம்முளே கூடுமே

நியாசம்

அம்மோடு க்ஷம் வரை நியசிக்கும் உபாசரே
அம்மம்மா ஆயிரம் இடங்களில் நிறுத்திடில்
இம்மைக்கும் மறுமைக்கும் இழுத்தடிக்கும் மாய்கையும்
உம்மைவிட்டகன்றிடும் உண்மை உண்மை உண்மையே

பாத்திர(ஆ)சாதனம்

பலகையில் படம் போடும் பராசக்தி உபாசரே
உலகம் சுற்றும் மனமதை மண்டலமாய் எழுதிடில்
கலகம் யாவும் ஓய்ந்திடும் கவலையும் மறந்திடும்
வலயத்தின் மூன்றிலே வாகாய் மனம் நின்றிடும்

பலகையில் பாத்திரங்கள் வைத்திடும் உபாசரே
தூலமாக தொட்டு தொட்டு மூலமதை ஜபிப்பீரேல்
ஜலம்கூட விசேடமாய் இனிக்கும் வகை அறியலாம்
பால்குடிக்கும் குழந்தையும் பரம்பொருள் அறியுமே

சங்கு இடையில் ஸ்தாபிக்கும் சீர்மைமிகு உபாசரே
பொங்கும் கடலில் பொருக்கும் சங்கு பூசைகானதெவ்வகை
அங்கும் இங்கும் ஆர்பரிக்கும் அந்த மனம்
சங்குதான்
இங்கிதமாய் கண்டுவிட்டால் எல்லம் இறை காட்சிதான்

லக்குமியை இலகுவாக அழைத்திடும் உபாசரே
ஆகச்ச ஆகச்ச என்றழைத்தால் வருவளே
பூக்களை பாத்திரத்தில் பொறுமையாய் போட்டிடில்
தூக்கத்தில் கூட உந்தன் ஸ்வரூபத்தை அறியலாம்

வ்ருத்தி வ்ருத்தி வ்ருத்தி என்று வேய்ந்திடும் உபாசரே
வ்ருத்தி வந்ததெவ்விடம் வ்ருத்தி போனதெவ்விடம்
உருத்திரத்தின் உருவையேற்றி உரக்க கூற வல்லீரேல்
வருத்தி நிற்கும் விருத்திகள் விலகிபோகலாகுமே

திரவ்வியங்கள் ஐந்து ஐந்தாய் கிரஹித்திடும் உபாசரே
திரவ்வியங்கள் ஐம்புலன்கள் ஆன வகை அறிவீரோ
பரப்பி வைக்கும் பாத்திரத்தில் விசேடத்தில் ஒருதுளி
குருவினதாக்யயால் நம்மை தன்யனாக்குமே
அந்தர் யாகம்

கனத்திடும் இதயத்தில் கோலமிடும் உபாசரே
மனதினில் கோயில் கட்டி மாலை போட வல்லீரேல்
சினமது அகன்றுமே சின்மயத்தை உணரலாம்
தினம் தினம் தாயவள் தோன்றுவள் சிரத்திலே

மூலத்தை வாயுவால் முன்னேற்றி ஆரத்தில்
காலத்தை வென்றவளை கும்பிட்டு நின்றிட்டால்
ஆலத்தை உண்ணலாம் அமிழ்தாக மாறிடும்
நீலமான மூர்த்தியை கண்ணால் காணலாகுமே

ஆவாஹனம்

உள்ளதேது வெளியதேது உள்ளும் வெளியும் உம்முளே
உள்ளில் உள்ள மூர்த்தியை வெளியில் வைக்கலாகுமோ
கள்ளம் உள்ள மனதிலே காட்சி தோன்றலாகுமோ
வள்ளல் குருனாதன் சொன்ன வழியும்
பொய்தலாகுமோ

அஹம் அஹம் என்று உள்ளே ஆர்பரிக்கும் மூர்த்தியை
இஹத்தில் உள்ள வாயுவால் வெளிக்கொணர வேண்டுமே
தஹதஹக்கும் தாயவள் கண்ணெதிரே தோன்றுவாள்
கசகசக்கும் மனதிலே காட்சி தோன்றலாகுமோ
உபசாரம்

மணி மணியாய் கோர்த்து மாலை போடுகின்ற உபாசரே
உன்மணிதான் மாலை என்று உள்ளார உணர்வீரே
கண்மணியில் தோன்றும் காட்சிமனக்கண்ணால் பாருமே
பொன்மணியை தரித்துமே பராசக்தி தோன்றுவாள் .

குருமண்டல பூஜை

குருகுருக்கும் பார்வையால் குணத்தை தந்த குருவிடம்
துருதுருக்கும் மாய்கையும் தூரத்தள்ளிப் போகுமே
அருவருக்கும் அவித்தையும் ஆட்டம்
காணலாகுமே
சிறுவனுக்கும் சிறுவனாய் சிந்தை பாதம் வையுமே

மணமணக்கும் பாத்திரம் மனமென்ற பாத்திரம்
தொணதொணக்கும் வினையது தொலைந்து போகலாகுமே
சினமறுக்கும் சின்மயம் அருக்கியமாய்
ஆகுமே
கனவில் வந்த குருவுரு கண்ணில் தோன்றலாகுமே

திதி நித்யா

காலகால காலமாய் காத்திருந்த காலங்கள்
மூலமூலமூலமாய் முன்னிருக்கும் போதிலே
தூலதூலதூலமாய் துதித்து நிற்கும் உபாசரே
நாலும் நாலும் எட்டு என்று நாட்களும் கடக்குமே

பத்தினைந்து நித்தையும் பரத்தை சுற்றி நிற்குமே
உத்தி செய்து உன்மனியை உயரகாணும் உபாசரே
பத்திசெய்ய சொல்லுதே பத்ததியும் பாரிலே
மத்தியிலே மூணுகோணம் முறைமை காண முடியுமோ

சதுராயதனம்

கணபதியும் குணபதியும் நெடுமாலும் நடுவிலே
கணகணக்கும் சூரியன் குன்றில் வாழும் இளையவன்
பனியில் உள்ள பரசிவன் பஞ்சபூத பூஜையை
தனியாய் நின்று செய்வீரேல் தன்னை அறியலாகுமே

லயாங்கம்

அன்னை அன்னை அன்னையவள் அண்டையிலே இருக்கையில்
விண்ணில் செய்யும் வேதகோஷம்
வெளிக்கொணரலாகுமோ
தன்னில் நிற்கும் ஜோதியை பீஜமாய் அழைக்கயில்
உன்னில் வந்து நிற்பளே உணரவேண்டும் உபாசரே
ஷடங்கம்

மண்ணுக்குள்ளே வாசம் என்றால் மூக்கும் அதை முகருமோ
கண்ணுக்குள்ளே ஒளியும் வர காட்சி தோன்றலாகுமோ
விண்ணுக்குள்ளே வேதம் உண்டு மனதில்
காணலாகுமோ
பெண்ணின் உருவந்ததே பரம்பொருளாய் ஆனதே

ஆவரணம்

முதலாவரணம்

சதுரமான பூபுரம் சக்கரத்தின் அப்புரம்
மதுரமான மேல்புரம் நான்கான பேறுகள்
விதவிதமாய் வாடிகை வாகான முத்திரை
சிதராமல் மனதில் வைப்பீர் வித்தையின் உபாசரே

இரண்டாம் ஆவரணம்

பத்தினாறு இதழிலே பழகி நிற்கும் பரத்தினை
முத்துமுத்தாய் மந்திரம் மனதில் கூற வல்லீரேல்
மித்தையான உலகமிது மங்கி மங்கி மறையுமே
வித்தை வித்தை சிரியின் வித்தை விதவிதமாய் கூறுதே

மூன்றாம் ஆவரணம்

எட்டி எட்டி போய்விடும் உந்தன் மன மாசுகள்
கட்டி வைத்த சோறுகள் கூடகூட வாருமோ
முட்டி முட்டி மோதுமே துரியத்தின் முதலுமே
அட்டதளம் அறிவீரோ அம்பிகையின் உபாசரே

நான்காம் ஆவரணம்

தூங்கி தூங்கி நின்றிடும் துரியத்தின் நிலையதை
அங்கு வந்த ஆசானும் அன்பினால் அருள்வரே
பொங்கி வரும் பாக்களை புரிந்து கொள்ளும் உபாசரே
அங்கியாம் அவளினை அறிவினால் அறிவிரே
ஐந்தாம் ஆவரணம்

அஞ்சு அஞ்சு ஆனபொருள் ஆண்டவளின் கைமலர்
அஞ்சாதே என்று சொல்லும் ஆசானே ஆண்டவர்
துஞ்சாமல் தூங்குகின்ற துரீயத்தின் அடுத்தது
சஞ்சலங்கள் அகன்றிடும் சொரூபத்தை அறிவதால்

ஆறாம் ஆவரணம்

அருகிலே வந்து நின்றார் ஆரு நீ அறியென்றார்
கருவிலே குமியாத குரூப ஸதனமாம்
பெரும் படிப்பு படித்திடும் பழம்பெரும் உபாசரே
அரும்பொருள் தன்னைத் தரும் ஆசானை அடைவீரே

எழாம் ஆவரணம்

சொன்னசொல் சுரீரென்று தைத்திடும் மனதிலே
பண்ணி வைத்த பாவங்கள் பஞ்சாக போய்விடும்
தண்ணி வைத்து குடத்திலே தலையிலே சரித்தரே
கண்ணினால் தீட்சை செய்து கர்மத்தை தொலைத்தரே

எட்டாம் ஆவரணம்

அவித்தை தன்னை அழித்திடும் அன்னைகை ஆயுதம்
தவித்திடும் மனதை இங்கு மனனத்தால் மாத்துமே
பவித்திடும் பரம்பொருள் பார்க்க பார்க்க பரவசம்
குவிந்திடும் மனமதை குருவருள் மாற்றுமே

ஒன்பதாம் ஆவரணம்

நவ நவமாய் உள்ளதெங்கள் நாயகியின் மந்திரம்
பவபவமாய் பிறந்த பொய்மை போனஇடம் எவ்விடம்
தவதவமாய் ஏற்றுவோர்க்கு தலைமை இடம் பிந்துவும்
சிவசிவமாய் ஜொலிக்குது பார் சிந்தையின் மணிக்ருஹம்
பஞ்ச பஞ்சிகா

அஞ்சு அஞ்சாய் பீடம் போடு அன்னையின் உபாசரே
விஞ்சி நிற்கும் லலிதையும் வந்து அதில் அமர்வளே
கொஞ்சி பேசும் சிவனிடம் கூட நிற்கும் சக்தியை
நெஞ்சத்திலே அமர்த்தினால் அஞ்சிடும் மாய்கையது காத தூரம் ஓடுமே

ஆம்னாயம்

மந்திரங்கள் லக்‌ஷம் கோடி மனம் ஜபிக்கும் உபாசரே
விந்தையிலும் விந்தைதான் அதன் அருத்தம் தன்னை அறிவீரோ
அந்தமிலா மந்திரத்தை அழுத்தமாய் உரு ஏற்றினால்
பொந்திலே வசிக்கும் பாம்பு ஆரத்திலே ஏறுமே

ஷட்தர்சனம்

ஆறுஆறாய் வகுத்துவைத்தர் ஆறுகாட்டும் பூசையை
வேறுவேறாய் தத்துவங்கள் விளங்கினிற்கும் அதனுள்ளே
பேறுதரும் பூசையின் பூருவத்தை அறியவல்லீரேல்
ஆறும் வழிவிட்டகலுமே குழந்தையாக தெய்வம்வந்தருளுமே

ஷடாதார பூஜை

மூலத்திலே இருக்கின்ற முக்கண்ணன் புதல்வரை
மேலேற்றி நிற்கவைக்கும் மேலான உபாசரே
காலத்தில் கருத்தை வைத்து கடைமை ஆற்ற வல்லீரேல்
மேலேறும் குண்டலினி மேதினியை மறைக்குமே

தண்ட நாதா அர்ச்சனை

நம நம என்றருச்சனை நாவால் கூறும் உபாசரே
நானில்லை சீவனென்று நிறுத்தி கூற வல்லிரேல்
நமனுமில்லை இல்லை என்று நூறுகாதம் ஓடுமே
அரியும் இல்லை அரனும் இல்லை அன்னையிலே அடக்கமே

தூபம்

ஆளைதூக்க தூபம் காட்டும் அறிஞரான உபாசரே
வாசனை போகவென்று எண்ணம் ஏதும்
உள்ளதோ
கர்மவாசம் போகவென்று ஆணை இட வல்லிரேல்
மர்மமாக மறைந்திடும் மண்ணில் வாசம்
உண்மையே

தீபம்

நெய்யை கொண்டு தீபத்தை நீள காட்டும் உபாசரே
தூய்மை கொண்டு உள்ளொளியை
தரிசிக்க வல்லீரேல்
பொய்மை போனதெவ்விடம் புலன்கள் நின்றதெவ்விடம்
தாய்மை நெஞ்சில் தோணுமே
ஒளிரும் ஞானஒளி வீசுமே

நைவேத்தியம்

வடையும் அடையும் விதவிதமாய்
படைகின்ற உபாசரே
உடைமை எல்லாம் உண்மையில் நைவேத்தியம் அவளதே
கடமை என்பதவளிடம் காட்டி காட்டி நிற்பதே
தடைவை ஏழு மூலத்தால் தொட்டு காட்டு தாயிடம்

குலதீபம்

உள்ளுக்குள்ளே ஒளிரும் ஒளி வெளியினிலே வாருமோ
கல்லுக்குள்ளே கடவுள் காட்சி
காணும் வழி தெரியுமோ
அந்தர் ஜ்யோதி பஹிர் ஜ்யோதி
ஒன்றாகி போகுமோ
ஸந்ததமும் ஸாமயிகர் ஸத்துவத்தை
சேருமே

கர்பூர நீராஜனம்

எரியும்கர் பூரத்தை எதிரே காட்டும் உபாசரே
விரியும் இந்த புவனத்தை விட்டுவிடலாகுமோ
பிரியும் உடல் சூக்குமமும் போகும்வழி
தெரியுமோ
ஒளிரும்கர் பூரம் போல உந்தன்மனம்
கரையட்டும்

புஷ்பாஞ்சலி

புலன் ஐந்தும் புட்பங்கள் போட்டுவிடு
பாதத்தில்
வலம் வந்து வேதத்தை வாயில் கூற வல்லிரேல்
புலம்பெயரும் வினைகளும் பூவாக
மணம்வீசுமே
நலம் தருவாள் நாளுமே நவ நவத்தின் நாயகி

தோத்திரம்

பாடி பாடி பாடி பாடி தோத்திரம் செய்திடில்
கூடி கூடி கூடி கூடி கைவல்யம் வாருமே
தேடி தேடி தேடி தேடி திருவருள் கிடைத்தபின்
நாடி நாடி நாடி நாடி நாட்டம் மனம் மறையுமே

காமகலா த்யானம்

தாய்மை கொண்ட துணைவியை தேவியென்னும் உபாசரே
தூய்மை கொண்ட மனதிலே தாயும் இடம் கொள்ளுவாள்
ஈயும் மொழி மந்திரம் இதயம் காண வல்லீரேல்
போயும் போயும் கருக்குழி பின்பும் கண்ணில் தோன்றுமோ

வீரவீரவீரனென்று வாயில் சொல்லும் உபாசரே
தாரதாரதாரத்தை தாயாய் காண வல்லிரேல்
தீரதீரதீரனென்று தரணி மாந்தர் அழைப்பரே
பாரபாரபாரமான பூமிதன்னில் பிறப்பரோ

பலிதானம்

இரஹசியமாய் பலியினை தானம் போடும் உபாசரே
காமக்ரோத லோபத்தை கொன்று பலி
கொடுப்பீரேல்
ஸாமவேத ஸாரங்கள் சிந்தை வந்தமருமே
வாமபாக இறைவனுக்கு உகந்த பலியாகுமே

மந்த்ர ஜபம்

கரஷடங்கம் கையால் சுற்றும் காதிவித்தை உபாசரே
பரம்பொருளின் மூலமதை பக்குவமாய் ஜபிப்பீரேல்
வரம்தரும் தெய்வமது வாக்கில் வந்தமருமே
மராமரா என்றதும் இராம நாமம் ஆனதே

ஸ்வாசினி பூஜை

சக்தி சக்தி சக்தியென்று சிரம் தொடும் உபாசரே
உடலின் சக்தி உயிரின் சக்தி எந்த சக்தி கூறுமே
இடத்தின் சக்தி ஈசன்போல் இன்பம் காண
வல்லீரேல்
தடத்தின் முக்தி கரத்தினில் எழுந்து வந்தமருமே

சத்துருவை சம்ஹரிக்க சித்தம்கொண்ட உபாசரே
புத்துருக்கு நெய்போல சக்தி துணை இருக்கையில்
சத்துருவும் வாருமோ சங்கடங்கள் ஆகுமோ
மாத்துருவும் மாத்துவாள் மித்தை என்று மண்ணிதை

அழுகை செய்தரட்டுகின்ற குழந்தைமன உபாசரே
தொழுதெழுதால் அருள்தருவாள் துணவியான தாயவள்
பழுதுபோன்ற மாய்கையை பாம்பென்று பதறுவீர்
குழந்தை என்று உனை அழைத்து கூற்றதை கொல்வளே

ஸாமயிக பூஜை/தத்துவ சோதனம்

மண்டலத்தில் கூடி நிற்கும் மஹா மஹா உபாசரே
அண்டலத்தில் ஆன்மபூஜை அனுதினம் ஆற்றுவீர்
பிண்டலத்தில் பிரம்ம ஜ்யோதி பிரகாசிக்கும் பாருமே
உண்டுவைத்த உருண்டையாக உடலிதை சுமப்பதேன்

முப்பதின் தத்துவங்கள் மனம் ஸ்மரிக்கும் உபாசரே
உப்பதின் கரைவு போல உடல் கடல் சேருமே
தப்பாத தலைவன் வந்து தூது ஓலை அனுப்புமுன்
அப்பாதம் சேர்ந்து நின்று ஆன்மாவை சோதியும்

ஆணவத்தின் மலங்களை அமர்ந்து கூறும் உபாசரே
சாணியும் சாமியாகும் சுத்தவித்தை தெரியுமோ
பாணிபாத தத்துவத்தை பானம் வைத்து சோதித்தால்
தூணிலே வந்த சிம்மம் தரிசனம் தாருமே

குரு யஜனம்

ஹம்ஸ ஹம்ஸ என்று கூறி குருவணங்கும் உபாசரே
தம்மை தாமே தெரிந்து கொள்ள குருவினருள் வேண்டுமே
இம்மை மறுமை இரண்டும் தாரும் இனியபாதம் பணிந்திட்டால்
செம்மையான சிரத்தில் முத்தி சீக்கிரமாய் வாருமே

மூவுலகும் வசமாக்க முத்ரை போடும் உபாசரே
நாவதனை அடக்கிவிட்டால் நாலு வேதம் தெரியுமே
பாவத்தின் புண்ணியங்கள் ஜுஹித்திடும்
உபாசரே
கேவலம் குருகிருபையே கொடுத்திடும் சீவன்முத்தியை

ஆத்மானுசந்தானம் ஐக்கியம்

வாசிகட்டி வாயுவால் வெளியில் செய்த பூஜையை
மாசிலாத மனதினால் மீண்டும் மூலம் வைப்பரே
தூசிலாத அம்பரத்தில் தீதிலாமல் நின்றிடும்
பூசைசெய்த பரம்பொருள் திரும்ப வந்தமர்ந்ததே

சாந்திஸ்தவம்

ஒம்சாந்தி என்று சொல்லும் ஓம்கார உபாசரே
உம்மனத்தில் சாந்தி வந்தால் ஊரெல்லாம் சாந்தியே
நம்மைதான் நமக்குளே நாம் செய்தோம் பூசையை
கம்மென்று இருப்பதுதான் கடவுளரின் பூசையாம்

குலத்தினது ஈசரை கும்பிடும் உபாசரே
உலகமிது உமக்குள்ளே உருண்டு வருவதறிவீரே
உலகமிது உம்முளே சுழல்வதை உணர்ந்திடின்
திலகமிடும் உபாசரும் திரிபுரையாய் தெரிவரே

நான்கான வாக்கியம் நாவில் கொண்ட உபாசரே
நான்நான் எனஸ்புரிக்கும் நாதமே உபாசனை
என்னை என்னில் பூசை செய்து ஏகாந்தம் இருப்பதே
அன்னை அவள் பூசையாம் அதுவேதான் சமாதியாம்.

(ஸ்ரீ குருவருல்ளால் ஆக்கியது : நாகசுந்தரம்)

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 3

ஜயசக்தி
ஆன்மபோதம் – 35 *புழுவண்டாதல்*

எல்லா விதங்களிலும் ஆத்மாவே தெரியும் நிலைக்கு நாம் ஆட்படவேணுமானால் நமது அப்யாசங்களை தொடரவேணும் என்பதை உறுதி செய்யவேணும். இடையில் இதற்கு ஒரு பழைய 100 ஆண்டு கால ஆத்மபோதநூல் பாடலில் கண்டவாறு சில விளக்கங்களை இங்கு சொல்லுகிறேன்.
அக்ஞான காரியங்களான வாஸனைகளினாலே கலங்கியிருக்கிற ஜீவனை ஆத்மஞானமானது வெகு காலபயிற்சியினாலே முன்புள்ள அக்ஞானத்தை தொலைத்துவிட்டு அதன் வழியே அந்த அக்ஞானகாரியங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாவற்றையும் அழித்துவிடும். கலங்கின ஜலத்தை தெளிவிக்கும் தேத்தாம்கொட்டை போல், தானும் நசித்துவிடும் என்று ஒரு உதாரணம் சொல்கிறார்.
தேத்தாம்கொட்டை என்பது இக்கால இளைஞர்களுக்கு தெரியாது. ஏன், பெண்களுக்குக்கூட புதிதுதான். பார்வைக்கு புளியங்கோட்டை போல இருக்கும். பெண்கள் முற்காலத்தில் ஆற்றுநீர், கிணற்றுநீர், குளத்துநீர் என்று எடுத்து வருவார்கள். (எல்லா நீர்நிலைகளிலும் தண்ணீர் நிறைய நிறைந்திருந்த காலம் அது) அது சிலசமயம் கலங்கி இருக்கும். அதில் இந்த தேத்தாம்கொட்டையை போட்டுவைத்தால் சுமார் இரண்டு மணிநேரம் கழித்து பார்த்தால் நீர் தெளிந்துவிடும். அதில் போட்ட தேத்தாம்கொட்டையும் காணாமல் போயிருக்கும். இதுபோல் விருத்தியானது அக்ஞான காரியங்களாக இருப்பதாலும் அந்த விருத்தியில் பிரதிபிம்பித்த ஞானம் ஆத்மபாசமான படியினாலும் அந்தஞானமும் ஆத்மாவிடத்கில் தானே ஐக்கியத்தை அடையும். அதாவது ஞானம் என்ற ஒரு நினைவும் விஷயமுமே சுத்தமாக போய்விடும்.
அந்த நூலிலேயே மேலும் ஒரு பாடல் வருகிறது..

சொற்பனம் போல்வதன்றோ தொடரும் ராகத்வேஷாதி
பற்று ஸம்ஸாரந்தான் பார்க்கினக்ஞானகால
முற்றுஞ்சத்தியமாத்தோன்று மோகந்தீர்ப்ரபோத காலம்
உற்ற நித்திரை தெளிந்தாலொழி கனா ஜகம்போற் பொய்யாம்

ராகம், த்வேஷம் இவைகளினாலே நிறைந்த ஸம்ஸாரமானது பொய்யாயிருந்த போதும் தனக்கு காரணமான அக்ஞானமிருக்குமளவில் உண்மையாயிருந்து பின்பு மஹாவாக்கிய அர்த்த சிரவணத்தை முன்னிட்டு உண்டான பிரஹ்மஸாக்ஷாத்கார திசையிலே நித்திரை தெளிந்த உடனே ஸ்வப்னஉலகம் பொய்யாவதுபோல அசத்தியமாக போய்விடும்.
அதிலேயே வந்த மற்றொரு பாடலில் சொன்ன ஒரு உதாரணம் மட்டும் இங்கே பார்க்கிறோம்.
எப்படி கிளிஞ்சலில் தோன்றிய வெள்ளி என்ற ஞானமானது அதிஷ்டான கிளிஞ்சலில் (அதனுடைய கருத்த பின்புறமும், முக்கோணம் முதலானதூம்) விசேஷ ஞானம் வராதவரை ஸத்தியமாக இருந்தது. விசேஷஞானம் வந்தவுடன் ஆரோபிதமான உலகஅறிவு அஸத்தியமாக போய்விடும். முதலில் சொன்னவாறு ஞானமும் ஐக்கியமான பின் மிஞ்சுவது என்ன! ஒன்றுமில்லை. அதுதான் ஜீவன் முக்திஸ்திதி. கொஞ்ச கொஞ்சமாக நாம் அந்தநிலையை எட்டி வருகிறோம். (வெறும் பாடம் – படிப்பு என்ற அளவில் மட்டுமே! நிறைய பயிற்சி தேவை)
மேலே சங்கரரை தொடருவோம்…..

ஜீவன்முக்தஸ்து தத்வித்வான்பூர்வாபாதிகுணான் ச த்யஜேத் |
ஸச்சிதானந்தரூபத்வாத் பவேத்ப்ரமரகீடவத் ||

சீவன் முக்தன் வித்வான் தேரு அதன் முன் தன்னை
மேவும் உபாதி குணம் விட்டு உடனே – மேவுவான்
தன்னுரு சத்சித்தின்பை தான்கீடம் வண்டின் உருத்
தன்னையுறல் போலத் தரி.

தனது உண்மை சொரூபத்தை உணர்ந்து ஜீவன்முக்தனான சிறப்பை அடைந்தவன், தனக்கு முன்பு இருந்த தேகம், மனம், புத்தி போன்ற உபாதிகளையும், ஸத்வ-ரஜ-தமோ குணங்களையும் நீக்கிவிட்டுத் தன் உண்மை ஸ்வரூபமான ஸச்சிதானந்த நிலையை அடைகிறான். வண்டினால் கொட்டப்பட்ட புழுவானது வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்.

இதன் விரிபொருள்
ஸ்தூலமான நம் உடலும், மெலினமான நம் மனம், புத்தி போன்றவைகளும் நமது பாவனைகளாலும், எண்ணங்களாலும், செயல்களாலும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான். நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகின்றாய் என்பதால் “பிரஹ்மத்தையே ஸதா நினைத்துக் கொண்டிருப்பவன் பிரஹ்மமாகவே ஆகிவிடுகின்றான்” என்றாகிறது. இங்கு வேதஉபநிஷத் வாக்கியத்தையே சங்கரர் மற்றும் பகவான் இருவருமே சுட்டிக்காட்டுகிறார்கள்.
வண்டு தன்னை வந்து கொட்டுமே என்று வண்டைப் பற்றியே ஸதா நினைத்துக் கொண்டேயிருக்கும். ஆனால் அந்த வண்டு வந்துவந்து கொட்டுவதால் மட்டுமல்லாமல் புழு தன் ததேகசிந்தனையினாலுமே (அதே நினைவினாலே) வண்டாகவே மாறி விடுகிறது என்பதை இங்கு உவமையாக காட்டுகிறார்..
இதேபோல மனிதன் தன் மனம், புத்தி இவைகளின் துணைகொண்டு மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனித்தே காட்டும் தன் தேகத்தை ஒரு பொருட்டாக நினைக்காது, ஸதாசர்வகாலமும் ஆன்மாவைப் பற்றியே சிந்தித்து, அதையே த்யானித்து, அந்தப் பாவனையில் விடாப்பிடியாய் இருந்தால், வண்டால் பலமுறை கொட்டப்பட்ட புழு அதையே நினைத்து தானும் வண்டாகவே ஆனதுபோல இவனும் தன் ஆன்ம ஸ்வரூபத்தை நிச்சயம் உணர்வான்.
அந்த நிலையை ஒருவன் அடைவது என்பது அவனது வாழ்நாளின் இறுதியிலோ அல்லது இனி வரப்போகும் பிறவியிலோ என்பது அவசியமில்லை. இந்தப் பிறவியிலேயே அவனது உயிர் இருக்கும்போதே அது முடியும் என்பதைக் உறுதிசெய்ய *ஜீவன்முக்தன்* ஆகிவிடுறான் என்று சொல்கிறார்.
ராமகிருஷ்ணபரமஹம்ஸர் பகவான்ரமணமஹரிஷி, நமது காஞ்சிஸ்ரீபெரியவா போன்றவர்கள் இந்த யுகத்தில் நம் காலத்தில் நாம் நன்கறிந்த ஜீவன்முக்தர்கள் அல்லவா!
ஒருவன் படிக்கும்போது அதை ஞாபகத்தில் இருத்திக்கொள்ள திரும்பத் திரும்பப் படிப்பதும், படித்ததைச் சொல்லிப் பார்ப்பதும், படித்ததைச் சிந்தித்துப் பார்ப்பதும் போன்ற லோக அப்யாசங்கள்தான் ஆன்மீகஸாதனையிலும் முன்னேறு வதற்குமான வழிகள் என்று புரிகிறது.
முன்னது வெளிப்பார்வை கொண்டு செய்யப்படுவது, பின்னது சிந்திப்பது என்பது உட்பார்வை கொண்டு சிந்திக்க வேண்டியது.
முதலில் காணப்படும் இந்த தேகத்தை பொருட்படுத்தாமல் இருக்கணும்.
முன்பே சொன்னேன், பகவான் ரமணர் ஆபரேஷனுக்கு முன் “மயக்கமருந்து அவசியமில்லை, இந்த தேகம்கட்டை போன்றதுதான், அதைத் தாராளமாகக் கத்தி கொண்டு அறுக்கலாம்” என்று சொன்னதாத படிதிருக்கிறோம். எல்லா ஸாதகர்களுக்கும் இப்படி முடியுமா என்று கேட்டால் அது எல்லோருக்கும் முடியாத விஷயம் என்பது நடைமுறை. ஆனாலும் உலகியல் வாழ்க்கையில் அவசியத் தேவை என்கிறபோது ஒருவன் தன் தேகநிலையைப் பொருட்படுத்தாது கூட தன் கடமையைச் செய்துமுடிக்கிறான் என்பது நாம் அனுபவமாக பார்க்கிறோம். இதுபோன்ற மனநிலை ஸாதகனுக்கு முதலில் இருந்தால் பழகப் பழக தனக்கு தேகம் இருப்பதும் தெரியாமல் போகும். பகவானுக்கு ஆபரஷன் முடிந்ததும், “தங்களுக்கு வலியே இல்லையா?” என்று கேட்டவருக்கு “அதற்கென்ன, வலி இல்லாமல் போகுமா என்ன, அது பாட்டுக்கு இருக்கு” என்று சொன்னார்களாம் பகவான். அத்தகைய வலிபொருட்படுத்தாத மனோநிலை நமக்கு வேண்டும். அது மனதாலேயே தேகத்தைக் கட்டுப்படுத்துவது. மனஸை தனியாக வைத்து “நானை” தனியாக வைத்து பார்த்திருக்கிறார்.
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற மஹான் இருந்து இப்படி ஒரு அனுபவம் இருந்திருந்தால் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. நமது அதிர்ஷ்டம் பாருங்கள். நமது பாக்கியம் வெறும் நூல் வாயிலாக தெரிந்துகொள்ளாமல் தங்கள் அனுபவம் மூலமாக நம் காலத்தில் நம் கண் எதிரே தேகபற்றை நீக்கி ஜீவன்முக்த நிலையை வாழ்ந்து காட்டிய பகவான் ரமணமஹரிஷி, பரமஹம்ஸர், பெரியவா போன்றவர்களை அடைந்தது எத்தனை பாக்கியம்.
இதுபோல எது வேண்டுமோ அதைப்பற்றி மட்டுமே நினைக்கவேணும்.
அடுத்து புத்தியால் அலைபாயும் மனத்தையும், ஆன்மாவைப் பற்றிய ஒரே ஒரு சிந்தனையை வைக்கவேணும். பின் கூர்மையான புத்தியையும் கட்டுப்படுத்துவது என்ற நிலையை அடையவேணும். இப்படி ஒவ்வொன்றாக சிந்தித்து செயல் படவேணும். எவ்வளவுக்கு எவ்வளவு நமது சிந்தனைகள் ஆழமாகப் பாய்ந்து நமக்குள்ளே வாஸனைகளைத் கொண்டுவருகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவைகளை விடுவிக்க நமது அப்யாசங்களும், முயற்சிகளும் தேவைப்படும். அதற்காகவே ஏற்பட்டது நமது ஸ்ரீவித்யை. இதில் உபதேசம் தொடங்கி, ஜபம், பூஜை, நியாசம், பாராயணம், ஹோமம் என்றபடி ஒவ்வொரு நிலையிலும் இந்த ஜீவன்முக்த நிலைக்கு நம்மை குருநாதர் அழைத்து செல்கிறார். நாமும் இந்த ஜீவன்முக்தநிலையை லக்ஷ்யமாக வைத்தே ஸாதனையை செய்ய வேணும்.
“இந்த உபாஸனை நமது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை நீக்கவோ, இன்னொருவரை மகிழ்விக்கவோ, படாடோப பூஜை-ஜபம் செய்து பிறரை மலைக்க செய்யவோ இல்லவே இல்லை.”
இதை உணர்ந்து உங்கள் உபாஸனையை தொடருங்கள். இதுபற்றி நிறைய சிதானந்தஅலையில் உள்ளன. எதிலும் போலவே இதிலும் விடாமுயற்சி வேண்டும்.
இறுதியில் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உபாதிகள் அகல, நல்லது-கெட்டது போன்ற எதனையும் அலசிக் காணும் குணங்களும் நம்மை விட்டொழிய வேணும். ஆன்மாவைப் பற்றிய சிந்தனை ஒன்றினால் மட்டுமே ஆன்மாவாகவே அமர்ந்திருக்கும் நமது இயல்பான நிலை நமக்கு நிச்சயம் வந்தடையும். ஆனாலும்கூட அது நமக்கு புதியதாக வந்துள்ள நிலை அல்ல என்பதை அதை அனுபவிக்கும் ஆன்றோர்கள் நமக்குக் சுட்டிக்காட்டி அருளுகின்றனர்.
தொடருவோம்……

ஆன்மபோதம் – 36 *மோஹக்கடலும்-ஞானியின் நிலையும்*

இன்று ஒரு மஹாத்மாவின் ஜயந்தி! நாமும் இங்கே பல மஹாத்மாக்களைபற்றி பார்த்து வருகிறோம்.
நேற்று பலர் உங்கள் பக்திமிகுதியினாலும், அன்பினாலும், உங்கள் குருவை ஜீவன்முக்தாராக போற்றினீர்கள். இது உங்கள் நிலையில் சரியாக இருக்கலாம். குரு என்பவர் அப்படித்தான் இருக்கவேணும். ஆனால் நான் இன்னும் ஸாதகனே! ஆதலால் நானும் உங்களுடன் சேர்ந்தே இந்த பாடம் படிக்கிறேன். ஆனால் உண்மையான ஜீவன்முக்தர்கள் பற்றி நேற்று சொன்னேன். அவர்களெல்லாம் முன்பு இருந்தவர்கள். அதன் தொடர்ச்சியாக இன்று சில சொந்த, பிரத்யக்ஷ அனுபவ சிந்தனைகள் சொல்கிறேன். உண்மையான *ஜீவன்முக்தர்* இவரே! இது மிகையில்லை.
இங்கு உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். யார் தெரியுமா? உங்களுக்கு நன்றாக தெரித்தவர்கள் தான். நமது *ஸ்ரீகாமேஸ்வரிமாதாவே*! அவள் உடல் நலிவடைந்த நேரம். உடம்பிலோ தாங்கமுடியாத வலி உபத்ரவம். நித்தியபடி குடும்ப காரியங்களை பற்றியோ, அல்லது எதிர்காலம் பற்றியோ எந்தவிதமான பேச்சும் இல்லை. அவளுக்கு வலி இருப்பது எங்களால் உணர முடிந்ததே தவிர அவளுக்கு எங்கே-எப்படி வலிக்கிறது என்று ஒருநாள் ஒருபொழுதுகூட சொன்னவளில்லை. (இதனை நம்மில் குடும்பத்தார் தவிர சிலர் கூட இருந்தவர்கள். பார்த்தவர்கள் உண்டு.. மிகையாக நான் சொல்லவில்லை.)
ஆனால் டாக்டர் கொடுத்த பல நிறங்கள் கொண்ட மாத்திரைகள் கண்டிப்பா சாப்பிடுவாள். காலை 5, மதியம் 5, மாலை 3 எனவும் சாப்பிடவேணும். காலை 5 ஐ கையில் எடுப்பாள். அப்படியே வாயில் மொத்தமாக போட்டுக்கொண்டு விடுவாள். அப்போது சொல்லுவாள் – *நீங்க ஆவரணபூஜை செய்வேளே! அப்ப ஒவ்வொரு ஆவரணத்துக்கும் ஒவ்வொரு கலர்லே புஷ்பம் வேணும்னு சொல்லி வாங்கி செய்வேளே! அப்படி இருக்கோனோ இந்த மாத்திரைகள். கலர் கலரா.* என்று இப்படி சொன்னாள். மாத்திரை சாப்பிடுவதையே ஆவரண பூஜையாக செய்திருக்கிறாள். Chemotherapy Treatment நடக்கிறது. அப்போது மெஷின் உள்ளே போகும்போதும் சண்டி ஜபம் தான். வெளியே வரும்போது நான் பார்ப்பேன். ஜபம் வாயிலே மௌனமாக ஓடிக்கொண்டிருந்ததை பார்த்தவன் நான். ஒருநாள் அவளது சகோதரன் ஸ்ரீகிருத்திவாசன் “அக்கா ! உனக்குத்தான் நிறைய ஜபம் தெரியுமே! பண்ணேன்” என்று சொன்னதிற்கு உடனே இவள் *நா ஜபம் நிறைய பண்ணிட்டேன். நீ பண்ணு* அப்படின்னாள். யாரால் இம்மாதிரி ஸாதனை பண்ணிவிட்டேன் என்று தீர்மானமாக சொல்லமுடியும்.? ஸாதனையா இது? இல்லை. கீதை சொல்லும் யோகநிலை, உபநிஷத் சொல்லும் ஸகஜஸ்திதி, மற்றும் சங்கரர்-ரமணபகவான் சொல்லும் முக்தநிலை, சாரதாமணி தேவியின் அனுபவநிலை என்றெல்லாம் இங்கே நாம் சிந்திக்கிறோமே அதுதானே இது! அப்படிபட்ட ஒரு ஞானிக்கு சேவை செய்த பாக்கியமோ என்னவோ, இந்தநிலையில் என்னால் சிந்தித்து எழுத முடிகிறது. இப்படியெல்லாம் இருக்கவேணுமானால் உலகஆசை, இன்பம் எல்லாம் கடந்தவர்களால் தான் ஸாத்யம். இந்த ஆசை அல்லது மோஹம் என்பதை எப்படி கடப்பது என்பதையே சங்கரர் இங்கே மேலே தொடருகிறார். நம்ம கதைக்கு வருவோம்….

தீர்த்வா மோஹார்ணவம் ஹத்வா ராகத்வேஷாதிராக்ஷஸான் |
யோகீ சாந்தி ஸமாயுக்த ஆத்மாராமோ விராஜதே ||

மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று – யோகி
அமைதியொடு கூடி ஆன்மாவின் இன்பத்து
அமைந்து ஒளிர்வன் என்றே அறி

மோஹம் என்ற பெருங்கடலைத் தாண்டிவந்து மூண்டு எழுகின்ற ஆசை, கோபம் முதலான அரக்கர்களை முற்றிலுமாக ஒழித்து, யோகியானவன் அமைதியுடன் ஆன்மாவிடத்தில் ஒன்றி ஆனந்தத்தை அடைந்தவனாகி ஒளி வீசுபவனாய் இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்.
இதன் விரிபொருள்

இந்த ஸ்லோகத்தில் “ஆத்மாராம:” என்ற வாக்கியம் சொல்கிறார். “ஆன்மாவிலேயே திளைத்து இன்புற்று” என்ற பொருளில் இங்கே வருகிறது. இங்கே எனக்கு ஒன்று தோன்றுகிறது “ராம:” என்று வந்திருப்பதால் இந்த ஸ்லோகம் அத்யாத்மராமாயணம் என்றதில் தத்வார்த்தமாக ராமாயணநிகழ்ச்சிகளை சொல்வதாக தெரிகிறது. இப்படியும் சில ஆன்றோர்கள் பொருள் சொல்லுவார்கள். அதாவது ராமன் ஸீதையை இழந்து தவிப்பது போல ஜீவனும் சாந்தியை இழந்து தவிக்கிறான் என்ற உருவகப்படுத்துகிறார்கள்.
அதன்படி விருப்பு-வெறுப்பு எனும் வாஸனைகளாகிய அசுரர்களினால் மோகம் எனும் கடலின் நடுவிலே சாந்தி எனும் சீதை சிறை வைக்கப்படுகிறாள். அப்போது தொலைந்து போன ஸீதையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த ஹனுமார் போல, குரு வடிவில் ஒருவர் சாந்தியை அடைவதற்கு உரிய வழியைக் காட்டுகிறார்.
அந்த வழிகாட்டுதலின் படி, ஜீவனாகிய ராமன் தியான யோகபயிற்சிகள் என்ற பாலத்தின் துணையினால் மோஹம் என்ற அக்ஞானக்கடலைத்தாண்டி வருகிறான். சிறை வைக்கப்பட்டுள்ள அமைதி என்ற ஸீதையை ஆன்மவிசாரம் எனும் ராமபாணத்தினால் வாஸநைகள் என்ற அரக்கர்களிடமிருந்து தப்பிக்கவைக்கிறான். அமைதியுடன் தன் இயல்பான இடமான (யுத்த்மில்லாத இடம்) அயோத்தியை அடைகிறான். பின் ஆனந்தமாய் இருந்தான் என்றும் இதற்கு தத்துவமாக அர்த்தம் செய்யலாம்.
முன்னும் பின்னுமாக இங்கே ஜீவன்முக்தனின் லக்ஷ்ணங்களையே விவரமாக சொல்கிறார். வெளியுலக விஷயங்களில் ஆசைகளை வளர்த்துக்கொண்டு, அதனால் பெருகி வரும் ஸம்ஸார வினைக்கடலில் மூழ்கியுள்ள ஜீவன், தன் மன அமைதியை இழக்கிறான். ஆனாலும் அவன் என்றோ செய்த நல்வினைப் பயனாக, அவனுக்கு வழிகாட்ட ஒரு *ஸத்குரு* அமைகிறார். அவர் சொல்படி அவன் முயற்சிகள் எடுக்க, அவனது மனம் ஆன்மாவுடன் ஒன்றுபடுவதே *யோகம்* எனப்படுகிறது. அப்படிப் பண்பட்ட மனம் வெறும் மனோலயத்தோடு நின்று விடாது. ஆன்ம விசாரத்தினால் *மனம் என்று ஒரு பொருளேயில்லை* என்று பகவான்ரமணர் சொல்வதுபோல மனோநாசமாகி, ஆத்மானுபவத்திலே திளைத்து ஆனந்தமயமாய் இருப்பதே *முக்திநிலை* என்று சொல்லப்படுக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது பழமொழி. இப்படி ஆத்மானந்தமாய் இருப்பவன் ஆன்மாவினுடைய தன்மையால் எப்போதும் ஒளி வீசிக்கொண்டு பிரகாசமாக இருப்பான். என்று முடிக்கிறார். தொடர்ந்து அவன் நிறைககுடமாக இருப்பான் என்று தொடருகிறார்.

பாஹ்யாநித்யசுகாஸகிதம் ஹித்வாத்மசுகநிர்வ்ருதஹ |
கடஸ்ததீபவத் ஸ்வஸ்தம் ஸ்வாந்தரேவ பிரகாசதே ||

அனித்த வெளி இன்பிச்சை அற்றானாய் ஆன்மா
தன் இன்பில் திருத்தி தனையுற்று – அனிசமும்
தன்னொளியால் குடந்தன்னுள் விளக்கெனத்
தன்னுளே தான் ஒளிர்வன்தான்

தனக்கு வெளியே உள்ள பொருட்களினால் வரும் நிலையற்ற இன்பங்களில் ஆசை இல்லாதவனாய், ஆன்மானுபவத்தினால் வரும் இன்பம் ஒன்றிலேயே திருப்தி அடைபவனாய் இருந்து, குடத்துக்குள் இருக்கும் விளக்கைப் போல, அவன் எப்போதும் தனக்குள்ளே தானாய்ப் பிரகாசிப்பவன்.

இதன் விரிபொருள்

யஜுர்வேத தைத்ரீயோபனிஷத் என்பதில் ஆனந்தங்களை வரிசைப்படுத்தி சொல்லப்படுகிறது. மனிதர்கள் அனுபவிக்கும் ஸூகங்களிலேயே உயர்வானது அரசசுகம். அதாவது மனிதஆனந்தம். அதையும் விட உயர்ந்ததாக கந்தர்வஆனந்தம். அதற்கும் மேலாக தேவானந்தம். இவ்வாறு படிப்படியாக வந்து இறுதியில் *ப்ருஹ்மானந்தம்* என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப் ப்ருஹ்மானந்தமோ பரமானந்தக்கடலின் ஒரு துளிக்கு மட்டுமே ஸமம் என்றும், ஆத்மாவை உணர்ந்தவனின் ஆனந்தம் அந்த பரமானந்தக்கடலுக்கே ஸமம் என்றும், அதனை எல்லாவற்றிலும் உயர்ந்ததாக அங்கே சொல்லப்படுகின்றன. மனிதனின் வெளிப்பார்வையால் அடையப்படுக்கிற உலகவிஷயஇன்பத்திற்கும், உள்முகப் பார்வையால் அடையப்பெறும் ஆத்மஞானத்தால் வரும் ஆனந்தத்திற்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் இது.
இவ்வாறு வெளியுலக விஷயங்களில் மூழ்குவது என்பது ஒரு டிவி சீரியல் அல்லது ஸினிமா பார்ப்பது மாதிரியே!. அங்கு சீன்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்வரைதான் ஒருவனுக்கு அதில் ஈடுபாடு இருக்கும். அதில் இன்பமும் வரும்; துன்பமும் வரும். அதனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்பதையே வாழ்க்கையின் போக்கு என்று சொல்லி, அதை அனுபவிப்பதே வாழ்வின் இலக்கு என்றுதான் பலரும் நினைத்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இங்கே சீன்கள் தோறும் திரையோ, டிவி ஸ்‌கிரீனோ இல்லையானால், மற்றெதெல்லாம் இருந்தும், இங்கு காணும் காக்ஷி இல்லை என்ற உண்மையை யார் தீர்மானமாக உணர்ந்துள்ளானோ அவனே ஞானி. வெறும் காக்ஷியை மட்டும் கண்டு களித்துக் கொண்டிருப்பவன் அக்ஞானிதான்.
அப்படிப்பட்ட ஞானியின் ஆனந்தத்தை (பார்ப்பவர்கள்) உணரமுடியாது. ஏனென்றால் அது குடத்துக்குள் வைத்த விளக்கு போல ஆடாது-அசையாது ஒளி விட்டுக்கொண்டிருக்கும். அது வெளியே தெரியாது. அவனால் அந்த ஆனந்த நிலையைப் பற்றி ஓரளவுக்கு சொல்ல முடிந்தாலும், அதன் முழு பரிமாணத்தையும் விளக்க முடியாது. அவனது வாழ்க்கை முறை, செய்கைகள், மற்றும் பேச்சுக்கள், நடைமுறைகள் இவைகளைக்கொண்டுதான் அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும். இன்று நிறைய எழுதிவிட்டேன்.
நாளை தொடரும்……

ஆத்மபோதம் – 37 *ஞானியின் நிலை*

ஞானியின் நிலைபற்றி சிந்தித்து வருகிறோம். இதுபற்றி சங்கரரின் பஜகோவிந்தத்தில் உள்ள ஸ்லோகத்தின் பொருளை சிந்திப்போம்.
ஸத்துக்களுடைய (புண்ணியாத்மாக்கள்) ஸங்கம் கிடைத்தால் பந்த பாசத்திலிருந்து விடுதலை கிடைக்கும். பந்தபாசவிடுதலை நம்மை மோஹத்திலிருந்து (மாயை) விடுபட செய்யும். மோஹம் அதாவது ஆசை அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும். ஸ்திரமான வஸ்து விளங்கினால் அதுவே *ஜீவன்முக்தி* நிலை. இப்போது அந்த ஸ்லோகம் படிப்போம்..

ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம், நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம், நிச்சல தத்வே ஜீவன் முக்தி:

ஆத்மவிசாரம் செய்ய நமக்கு ஒரு வழிகாட்டி வேண்டும். அதுதான் ஸத்துக்களுடைய ஸங்கம். ஸத்துக்கள் என்றால் நம்மைப்பொருத்தவரை நமது குருநாதர் தான். (இதுபற்றி அருட்சக்தியின் தனி கட்டுரை உள்ளது)
உபாஸகதர்மம் என்ன சொல்கிறது? குருவுடனேயே அவருக்கு பணிவிடை செய்துகொண்டு இரு என்கிறது. அதுதான் ஸத்ஸங்கம். குருசேவையின் மகிமை பற்றி தத்தாத்ரேயர் சம்பந்தப்பட்ட ஒரு கதை உங்களுக்கு முன்பே சொல்லி இருக்கிறேன். இப்படி நல்வழியில் செல்லும் ஞானிகலோடு கொண்டிருந்தால் அவர்கள் நமக்கு நல்வழிகாட்டுகிறார்கள். அப்படி அவர்கள் வழியில் சென்றால், பந்தபாசங்கள் ஒழியும். அதுஎப்படி? மேலே சொல்லப்பட்ட ஆத்மவிசார பாதையில் செல்ல அவர்கள் நமக்கு உதவுவார்கள். இவ்வாறு ஆத்மவிசாரம் செய்தால் மோஹம் (Illusion) அகலும். அதாவது மாயை என்பது காணாமல் போய்விடும். அதாவது ஞானம் உதயமாகும். அப்படி மாயையும் போய் ஆத்மஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து *நான்* (Self) நமக்கு புலப்படும். அப்படி புலப்பட்டால் அதுவே நமக்கு மன அமைதியை தந்து இந்த உடல் இருக்கும்போதே ஜீவன்முக்த நிலையைத்தரும். இதைத்தான் ஸ்ரீரமணபகவான் (Self-Realization) *நான்யார்* என சொல்லுவார்கள். இதையே திருப்புகழ் “ஸ்வானுபூதி” என்கிறது. முன்பே உங்களுக்கு பலமுறை சொன்னதுதான். மறுபடியும் சொல்கிறேன். *லலிதா ஒரு இன்பக்கலப்பு* என்ற நூலில் கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் சொன்ன “நான் என்கிற-லலிதாவின் பொருள்” இதுதான். இதைத்தான் ஆத்மஸாக்ஷாத்காரம் என்று வேதாந்தம் சொல்கிறது. *லலிதானந்தம்* என்று நான் சொல்கிறேன். அதாவது தன்னை தானே அறிந்துகொள்வது. இதுதான் நம்முடைய வாழ்க்கை லக்ஷியம்.
மேலும் தொடர்ந்து ஞானிகள் பற்றி சங்கரர் சொல்வதை பார்ப்போம்….

உபாதிஸ்தோபி தத்தர்மைரலிப்தோ வ்யோமவன்முனி: |
ஸர்வவின்மூடவதிஷ்டேதஸ்கதோ வாயுவச்சரேத் ||

உபாதி உற்றானேனும் ஒட்டா விண்போல அவ்
வுபாதி தர்மங்களோடு ஒட்டான் – உபாதியிலான்
முற்றறிவன் ஏனும் முனி மூடன் என வாயுபோல்
பற்றற்றுச் சஞ்சரிப்பான்

ஞானி உபாதிகளுடன் இருந்தாலும், ஆகாயம் எதனாலும் பாதிக்கப்படாது இருப்பது மாதிரி, ஞானியும் உபாதியின் தன்மைகளோடு ஒட்டாமல் இருப்பான். அவன் உபாதிகள் இல்லாதிருந்தால், முற்றும் உணர்ந்த முனிவனாயினும் மூடனைப் போலவும், காற்றைப் போலவும் எதனிலும் பற்றில்லாமல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருப்பான்.

இதன் விரிபொருள்

ஆத்மஞானம் அடைந்தவன் எப்போதும் ஆனந்தமாய் இருப்பான் என்றும், அது பொருட்களின் சேர்க்கையால் ஒருவனுக்கு ஸாதாரணமாக வரும் இன்பத்தைவிட வேறானது என்று முன்பு நாம் பார்த்தோம். மற்றவர்களைப் போலவே ஞானியும் உலக வாழ்க்கையில் இயல்பாக ஈடுபடுவதைப் பார்க்கிறோமே, அப்படியென்றால் அவனுக்கும் மனம், புத்தி போன்றவைகள் எல்லோருக்கும் இருப்பது போலத்தானா என்ற சந்தேகம் வருகிறதே! அதுக்கு இங்கே பதில் கொடுக்கிறார் சங்கரர்.
இவ்வுலகில் பிறந்துவிட்டான் என்பதால் ஞானிக்கும் மற்றவர்களைப் போலவே தேகம் இருக்கிறது என்பது தவிர, மற்றவர்களைப் போலவே மனமும், புத்தியும் இயங்குகிறது. ஆனாலும் மற்றவர்கள் மனமும் புத்தியுமே தான் என்று தன்னைப் பற்றிக் கருதுவது போல ஞானி தன்னை அவ்வாறு குறுக்கிக் கொள்ளமாட்டான். மேலும் அவனுடைய தேகம் என்பதுகூட மற்றவர்கள் பார்வைக்கு இருந்தாலும், அவனைப் பொருத்தவரை அவன் தன்னை தேகம் என்றும் நினைக்கமாட்டான். அதனால் அவனது உடலுக்கு ஏது நேர்ந்தாலும் ஏதோ வேறு ஒரு பொருளுக்கு அது தனக்கு அன்னியமாக நடப்பது போலவே அவனுக்கு உணர்வு இருக்கும். அதைப் போலவே அவனது மனமும், புத்தியும் இயங்கும். குழந்தைகள் எப்படி வெகுளித்தனமாகப் பேசி எல்லோரையும் மகிழ்விக்கின்றனரோ, அதே போல ஞானியின் பேச்சும் செயல்களும் இருந்தாலும், அவனது பேச்சு மற்றும் செய்கைகளில் ஒரு முதிர்ச்சியும் இருக்கும். ஆனாலும் குழந்தைகள் எப்படி தனது செயல்களின் விளைவுகளால் பாதிக்கப்படுவதில்லையோ, அதே போன்ற மனநிலைதான் ஞானிக்கும் இருக்கும். அவனுக்கு இருப்பதெல்லாம் தனது இருப்பு (ஸத்) என்ற உணர்வு ஒன்று மட்டுமே. மற்றதையெல்லாம் அவன் ஒரு சாக்ஷியாக மட்டுமே, எவருக்கோ நடப்பது போலப் பார்த்துக் கொண்டிருப்பான்.
முன்பு வேறொரு ஸ்லோகத்தில் நாம் பார்த்தது போல, எப்படி எல்லாவற்றிலும் ஆகாயம் பரவிவிரிந்து இருந்தாலும் அதில் இருக்கும் பொருட்களின் குணத்தால் பாதிக்கப்படுவது இல்லையோ, அதேபோல ஞானி உபாதிகளுடன் இருந்தாலும் அவைகளின் குணத் தன்மைகளால் அவன் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்திலே, மற்ற நான்கு பூதங்களான மண், நீர், நெருப்பு, வாயு இருந்தாலும் எப்படி ஆகாயம் பாதிக்கப்படுவது இல்லையோ, அதேபோல ஞானியும் உபாதிகள் இருந்தாலும் அவைகளால் பாதிக்கப்படுவது இல்லை. அவனுக்கு உபாதிகள் இருப்பதுபோல நமக்குத் தெரிகிறது என்பதுதான் வெளியே புலப்படாத ஓர் உண்மை. வலிக்கறது மாதிரி முகத்தை வைத்துகொள்ளுவார்கள். ஆனால் வலி உணர்வு அவர்களை பாதிக்காது.
உபாதிகள் இன்று ஞானிக்கு இருப்பதுபோலத் தோன்றினாலும் அவை மறுநாளும் இதேபோல் இருக்கும் என்றும் சொல்ல முடியாது. ஒரேயடியாக ஞானிக்கு எப்போதுமே உபாதிகள் இல்லாமலும் போகலாம். அப்படியிருந்தால் அவன் காற்று எங்கும் பரவி, விரிந்து இருப்பதுபோல எந்த இடத்திலும் நில்லாமல் அலைந்து கொண்டிருப்பான். அதனையே “சித்தம்போக்கு, சிவம்போக்கு” என்று சொல்வது. அதாவது அந்த நிமிடத்தில் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி நடப்பார்கள் என்பதுதான் அதில் நாம் காணவேண்டியது. குண விசேஷங்கள் ஏதும் அவனுக்கு அப்போது வெளிப்படையாகவும் இல்லாதபடியால் அவனது செய்கையும் புரியாத புதிராக இருக்கும். கிட்டத்தட்ட அவனது செய்கைகள் ஒரு பைத்தியம் போலவே இருக்கும். இதற்கு திருவண்ணாமலையில் இருந்த ஸ்ரீசேஷாத்ரிஸ்வாமிகளே சான்று. தன்னுடைய தேகத்தை விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர், “இந்த சட்டை கிழிந்துவிட்டது, தூக்கிபோடணும்” அப்படின்னாராம். இது எதனால், தேகத்தை அவர் தனக்கு அன்னியமாக வைக்கமுடிந்திருக்கிறது நமது சட்டையை போல. மேலும் ஞானிக்கு பிராரப்தம் எனச் சொல்லப்படும் ஊழ்வினை மீதம் இருப்பதால் மட்டுமே அவன் தேகம் எடுத்து வந்திருக்கிறான் என்று காரணம் சிலர் சொல்லுவார்கள். அதனால், நம்மைப் பொருத்தவரை, நாம் ஞானியைப் பார்க்கும் பிராரப்தம்-அதிர்ஷ்டம் நமக்கு இருக்கிறது என்று வேணுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஞானியைப் பொருத்தவரை பிராரப்தம் மட்டும் அல்ல, ஸஞ்சிதம், ஆகாமியம் என்று சொல்லப்படும் மற்ற இருவினைகள் கூட அவர்களை ஒட்டவே ஒட்டாது. இதனையே நமது கோடகநல்லூர் ஸ்ரீசுந்தரஸ்வாமிகள் சொவார்… “மூன்று மனைவியுள்ள தசரதன் இறந்துவிட்டான். ஆனால் கௌசல்யா விதவை. மற்ற இருவரும் சுமங்கலிகள் என்பது எத்தனை கேலிக்குரியது?” என்று. இதுபோலத்தான் ஞானிக்கு மூவினையும் கழன்றுவிடும். இதெல்லாம் முடிவுபெறாத ஞானவிசாரங்கள். இதில் உங்கள் சிந்தனை அதிகம் போகக்கூடாது. விஷயம் தெரிந்து கொள்ள சற்று விவரமாக எழுதினேன். (ஸாதனையில்தான் மனம் ஈடுபடவேணும்.)
தொடர்ந்து பார்ப்போம்…..

ஆத்மபோதம் -38 – *விதேகமுக்தி*

ஸாதனையில் மனம் ஈடுபடவேணும் என்று பார்த்தோம். இப்படியான நமது ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ரஉபாஸனையின் இறுதியில் ஸர்வானந்தமான ஜீவன்முக்த நிலையின் அடைவு என்பதை நமது தத்வார்த்தநூல்கள் சொல்கின்றன. இங்கு சங்கரர் அதன் அடுத்த படியாக விதேகமுக்தி பற்றி பேசுகிறார்.

உபாதிவிலயாத்விஷ்ணெள நிர்விசேஷம் விசேன்முனி: |
ஜலே ஜலம் வியத்வ்யோமின் தேஜஸ்தேஜஸி வா யதா ||

உபாதி நாசத்தால் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே – அபேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயில் தீயும் போலத் தேர்

தண்ணீரில் தண்ணீரும், நிர்மலமான ஆகாயத்தில் ஆகாயமும், நெருப்பில் நெருப்பும் கலப்பது போல, ஸ்தூலமாகிய தேகம் நீங்கும்போது, மீதமுள்ள மிகநுண்ணியதான மனம், புத்தி இவைகளும் நீங்கி ஞானியானவன் உபாதியில்லாத, எங்கணும் நிறைந்த பிரஹ்மத்தில் கலந்து இரண்டற்ற நிலையை அடைவான்.

இதன் விரிபொருள்

முந்தைய ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்ட ஒரு ஜீவன்முக்தன் விதேகமுக்தன் ஆகும்போது நடப்பது பற்றி இங்கு சொல்கிறார். ஒரு ஸாதகன் ஆத்மஞானம் பெற்று ஜீவன்முக்தன் ஆகும்போது, பரம்பொருளிலிருந்து அவனை அதுவரை பிரித்து அறியக்காரணமாயிருந்த அவனுடைய அவித்தையான காரணதேகம் நாசமடைகிறது. அவனுக்கு இந்தஉலகில் இருக்கும் பிராரப்தம் எனும் வினை இருக்கும்வரை, மற்றவர்களைப் பொருத்தவரை ஸ்தூலமாகிய அவனது உடலும், நுண்ணியதான அவனது மனமும், புத்தியும் எல்லோருக்கும் இருப்பது போலவே இயங்கும். ஆனால் அவனது தேகம் இறக்கும்போது அந்த ஸ்தூலம் மட்டுமன்றி, நுண்ணிய தேகங்களும் நாசமடைகின்றன என்று நமது நூல்கள் பகர்கின்றன. எனவே அவித்தையான அஞ்ஞானம் அழிவதுதான் முக்கியமே தவிர, மற்ற தேகங்கள் இருப்பதும் இல்லாததும் ஒரு விஷயமேயில்லை. அப்படி ஞானம் அடைந்தவர்கள் உலகில் ஸஞ்சரித்துக்கொண்டு வருவது, நம்மைப்போன்றவர்கள் ஞானம் பெற்று உய்வதற்கே!
இங்கு ஆத்மபோதம் தொடர் தொடங்கியதே நமது உபாஸனையின் நோக்கத்தை புரிந்து கொள்ளவே! ஒரே குரு, ஒரே மந்த்ரம், ஒரே தெய்வம் என்ற நிலையில் சிந்திக்கவேண்டியது இது. அந்த வழியில் இங்கு ஒரு *சிதானந்தஅலை* அடிக்கிறது. காரணதேகம் நாசமடைகிறது என்கிறார். நவாவரணபூஜையில் காரணகலசம் என்று ஒன்று இருப்பது தெரியும். அது பூஜையின் முடிவில் காலியாகிமற்ற எல்லா பாத்திரங்களின் அர்க்கியமும் காலியாகிவிட்டது. அப்போது என்ன சொல்கிறோம். ஆர்த்ரம் ஜ்வலதி…. என்று ஒரு மந்த்ரம். அது எதை குறிப்பிடுகிறது. பராசக்தி என்கிற அகண்டாகார விருத்தியில் நானும், என் விருத்திகளும், இந்த உலகமும் ஒன்றாகி அப்படியான விருத்தியையே என்னில் நானே ஆஹூதியாக ஆக்கிவிடுகிறேன் என்பது தானே! இதுதானே விதேகமுக்தி!
மேலே இப்படி விதேகமுக்தியின் நிலையை சில உபமானங்களைக்கொண்டு சங்கரர் விளக்குகிறார்.
ஒரு குடத்தில் தண்ணீர் இருக்கிறது, அதை ஒரு பாத்திரத்தில் மொண்டு எடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது குடத்துதண்ணீரும், பாத்திரதண்ணீரும் அவை இருக்கும் இடத்தினாலே வேறுவேறாக இருக்கின்றன. ஆனால் அந்த இரண்டு தண்ணீரையும் ஒன்றாகக் கலந்துவிட்டால் அவை இரண்டும் எப்படி வித்தியாசப்படும்? அதேபோல ஒரு காலி குடத்திலும் ஆகாயம் இருக்கிறது, வெளியேயும் ஆகாயம் இருக்கிறது. அப்போது குடத்தின் உள்ளே-வெளியே என்று ஆகாயத்தைப் பிரித்துச் சொல்ல முடியும். குடத்தை உடைந்துவிட்டால் உள்ளே இருந்த ஆகாயம் வெளியே கலந்துவிட்டது என்று சொல்லமுடியுமா? அது போன்றே எரியும் அக்னிப்பிழம்பிலிருந்து ஒரு நெருப்புக்கனலை எடுத்தால் அவை இரண்டையும் வெவ்வேறாகக் குறிப்பிடுவோம். மறுபடியும் அந்தக் கனலை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டால் அவை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்திச் சொல்ல முடியும்? அப்படியாக பரம்பொருளையும், ஜீவனையும் பிரித்து வைத்த உபாதிகள் நீங்கியதும், ஜீவன் எங்கும் பரவி விரிந்துள்ள பிரஹ்மத்துடன் கலந்து ஒன்றாகிவிடுகிறான் என்பதே உண்மை.
இதனை சிந்தித்தால் உண்மை வேறாக இருப்பது நமக்குத்தெரியும். குடம் இருப்பதால் ஆகாயம் பிளவுபட்டது போலத் தோன்றுவது நமது பிரமை. குடத்துக்குள் இருந்த ஆகாயம்தான், குடம் இருந்தபோதும் இல்லாதபோதும் எப்போதும் அங்கேயே இருந்திருக்கிறது. ஆகாயம் அப்படி பிளவுபடாது இருப்பது போல, பரம்பொருள் என்றும் ஜீவன் என்றும் தனித்தனியாக தோன்றுவதும் நடுவில் வந்த உபாதிகளால் வந்துள்ள ஒரு பிரமைதான். எனவே உபாதிகள் நீங்கியதும் ஜீவன் “தான் பரம்பொருள்” அன்றி வேறில்லை என்பதை உணர்வதே முக்தி, அல்லது அதுவரை அவனைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த பிரமையிலிருந்து அவனுக்கு விடுதலை என்று சொல்லப்படுகிறது. இன்னிலை உயிர் உள்ளபோதே நடந்தால் அவன் ஜீவன்முக்தன். அப்படியும் அவனது முன்வினைப்பயனால் ஸ்தூல மற்றும் சூக்ஷ்மதேகங்கள் இயங்கிக் கொண்டிருந்தால், அவனது உயிர் பிரியும்போது அவைகளும் மறைகின்றன. அப்போது தனியே இருந்தது போலக் காணப்பட்ட ஜீவன் எல்லா தேகங்களையும் இழந்ததால், பிரஹ்மத்தில் ஒன்றாகி இழந்தது போல இருந்த நிலையிலிருந்து மீள்கிறான். அதனால் இதனை *யோகம்* என்கிறது வேதாந்தம்.
தொடரும்……

ஆன்ம போதம் – 39 *ப்ரஹ்மலக்ஷ்ணம்*

விதேகமுக்தி லக்ஷ்ணம் என்பதை நாம் நமது ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர பூஜை பாத்ராஸாதனம் மூலம் சற்று கண்டோம். அதுபற்றி மேலும் இங்கே எழுதப் போவோமானால் இது ஒரு சிதானந்தஅலையாகி விடும். மேலும் நவாவரணபூஜை முழுவதும் நன்றாக தெரிந்த ஸாதகர்களுக்கே, அறிஞர்களுக்கேகூட இந்த காரணகலசம் விஷயம் ஒரு பெரிய கேள்விக்குரியான, சிந்தனைக்கான நிலையில் இன்று வரை தொடருகிறது. எனவே நாம் சிந்திப்பது ஆத்மபோதம் என்ற நினைவில் மேலே தொடருவோம். விதேகமுக்தி அடைந்த பின் என்ன? *ப்ரஹ்மஸாக்ஷாத்காரம்*. அதுதான் அடையவேண்டிய இறுதி நிலை. அதைபற்றித்தான் சங்கரர் அடுத்து சொல்ல வருகிறார்.

யல்லாபான்னாபரோ லாபோ யத் சுகான்னாபரம் சுகம் |
யஜ்ஞானான்னாபரம் ஞானம் தத்ப்ரஹ்மேத்யவதாரயேத் ||

எவ்வடைவில் பிறிதேதும் அடைதற்கின்றோ
எவ்வன்பினில் பிறிது இன்பு இன்றோ – எவ்வறிவு
தன்னில் பிரிதறிவுதான் இன்றாமோ அது
தன்னைப் பிரமமெனச் சார்

எதை அடைந்தபின் வேறு எதையும் அடைய வேண்டியது இல்லையோ, எந்த இன்பத்தை விட வேறு உயர்ந்த இன்பம் இல்லையோ, எந்த அறிவைக் காட்டிலும் சிறந்த உயர்ந்த வேறு அறிவு இல்லையோ, அதுதான் பிரஹ்மம் என்று உறுதியுடன் சேர்வாய்.

இதன் விரிபொருள்

இதற்கு முந்தைய ஸ்லோகங்களில் ஜீவன்முக்தன்-விதேகமுக்தன் லக்ஷணங்கள் விரிவாகப்பார்தோம். இனி வரும் ஸ்லோகங்களில் ப்ரஹ்மஸ்வரூபத்தின் லக்ஷணங்களும், அதனால் வரும் ஆனந்தநிலையையும் விளக்குக்கிறார்.
முன்பு நாம் பார்த்தது போல, இங்கும் நேர்மறையாய் இல்லாது எதிர்மறையில் விளக்கங்கள் வருகின்றன. அதற்குக் காரணம் நம் வாழ்க்கையில் ஸாதாரணமாக நமக்கு வரும் அனுபவங்களே காரணம். தினசரி நடக்கும் நமது செயல்களைக் கூர்ந்து பார்தோமானால் புரியும். நாம் எப்போதுமே இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்வுடன் இருப்பதேயில்லை. அதற்கும் மேல் ஏதாவது கிடைத்தால், அதனால் மேலும் இன்பம் பெறலாமோ என்றபடிதான் நமது செயல்கள் அமைகின்றன.
இதற்கு இன்றைய உலகில் நிறைய உதாரணம் சொல்லலாம். மாட்டுவண்டி, மோட்டார்சைக்கிள், கார், கார் ஒன்று மட்டும் இல்லை – குடும்பத்தில் உள்ள மனைவி, பையன் என தனித்தனியாகவே, இப்படி நமது தேவைகள், ஆசைகள் கூடிக்கொண்டே போகின்றன. கேட்டால் இது தவிர்க்க முடியாது என்று பதில் வரும். அதனால் ஆசைக்கு அளவே இல்லை. அப்போது எப்பதான் இதற்கு முடிவு? ஆன்மவிசாரம் தான். அதனால் நமக்கு இறுதிநிலை என்ற ஒன்றை விளக்கும் போது, அது ஒன்றுதான் இறுதி; அதற்கு மேல் பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லித்தானே முடிக்க முடியும். அதனாலேயே இங்கு சொல்லப்பட்டிருக்கும் எல்லாமே அப்படி எதிர்மறை விளக்கங்கள் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றன.
அதன்படி எது நம்மிடம் இருக்கிறதோ அதை நாம் மிகவும் பொருட்படுத்துவதே இல்லை. அதை குறைத்து மதிப்பிடுவோம். உலகியல் நியதிப்படி எதை எடுத்துக்கொண்டாலும் நிலைமை அப்படித்தான். இன்று ஒன்று கிடைத்து விட்டால், நாளை அதையும் விட சிறப்பானது எது என்றுதான் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம், (இன்று மொபைல் விவகாரம் இப்படித்தான் நாட்டில் ஓடுகிறது) அதனால் எதையும் அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்க வேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் மிகவும் சிறப்பான ஒன்று நம்மிடம் ஸதாசர்வகாலமும் இருப்பதை அறியாமல் இருப்பதுவும் நமது தலையாய குணங்களில் ஒன்றுதான்.
அதனால் எவராவது நம்மிடம் இருக்கும் சிறப்பானதைக் குறிப்பிட்டுச் சொன்னால், அதையும் விட சிறப்பானது ஒன்று இருக்கலாமோ என்ற ஸந்தேகம் நமக்கு வருகிறது. ஒருவனின் வெளியுலகப் பார்வையில் தென்படும் எல்லாமே இந்த நியதியால்தான் கட்டுப்பட்டிருக்கிறது.
மனிதர்களில் பலருக்கும் ஒன்று கிடைத்து விட்டதால் வரும் மகிழ்ச்சியை, அது கிடைக்கப் போகிறது என்ற எண்ணமே கூடதந்துவிடும். அதாவது ஸ்தூலத்தை விட அதன் தொடர்பான நுண்ணிய அறிவே நாம் வலைபோட்டுத் தேடும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றுதான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். முதலில் வாழ்வதற்கு உண்டான பொருட்களையும், அவைகளைப் பெற்றுத்தரும் செல்வத்தையும், பின்பு அவை மேலும் கிடைப்பதற்கான வழிமுறைகளையும் தேடுவோம். அவை எல்லாமே கிடைத்ததும் அவைகளைப் பாதுகாக்கும் அறிவையும் தேடுவோம். (இன்று சுவிஸ்பாங்க் இருப்பு அப்படித்தானே கூடியுள்ளது) இப்படியாக ஸ்தூலத்திலிருந்து நுண்ணிய பொருட்களில் கவனம் சென்று கொண்டிருப்பதே நமது வாழ்க்கைமுறை என்றாகிவிட்டது. இறுதியில் எதுவும் பெறக்கூடிய அறிவினைத் தேடுவோம். அத்தகைய அறிவிலும் சிறந்த அறிவு எது என்பதும் நாம் தேடிக்கொண்டிருக்கும் நமது பழக்கங்களில் ஒன்றுதான். ஆனால் அதைப் புரிந்துகொள்ளாது உலகியல் பொருட்களும், இன்பங்களும்தான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று பலரும் அத்துடன் நின்று விடுகின்றனர். அப்படி இல்லாத சிலருக்கு அவர்களின் அறிவைப் பற்றியதேடல் தீவிரமாகும் போதுதான் *ஞானவேட்கை* தொடங்குகிறது. ஆன்மவிசாரம் மனதுக்கு வருகிறது.
அந்த நிலைக்கு வந்துள்ள ஒருவனுக்கு ஆன்மா பற்றிச்சொல்லி, அதை வெளியே தேட முடியாது; உள்முகப் பார்வையால் மட்டுமே அறியமுடியும் என்று சொல்லி அதன் தன்மைகளைப் பற்றி குருநாதர் விளக்கும் போதுதான் தெரியவருகிறது. அதன் மஹிமையை சங்கரர் இவ்வாறு உணர்த்துகிறார்.
“நீ எப்போதும் ஒன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாய். அது உன்னிடமே உள்ளது. அதைத் தேடி நீ அதை அடைந்துவிட்டால், அதனிலும் சிறப்பானது என்று எதுவும் கிடையாது. அத்தகைய உன்னதமான ஒன்று உனக்குக் கிடைத்துவிட்டால், இனி நீ வெளியே தேடி அலையும் வேலையே உனக்கு இல்லை. நீ அப்படி அலைந்ததன் நோக்கமே அதனால் உனக்கு கிடைக்கும் இன்பமே; இதுவரை நீ பெற்றதெல்லாம் சிறிது இன்பத்தைக் கொடுத்து அப்புறம் துன்பத்தைக் கொடுத்தது, அல்லது அந்த இன்பமே காலப்போக்கில் இல்லாது போயிற்று. ஆனால் நீ தேடிக்கொண்டிருக்கும் *இது* மட்டும் உனக்குக் கிடைத்துவிட்டால் உனக்கு எப்போதும் ஆனந்தமே கிட்டும். அதனால் உனக்கு சலிப்பு ஏற்படாது, அதற்கும் மேலான *ஆனந்தம்* தரும் பொருள் என்று உலகில் வேறு எதுவுமே கிடையாது” என்றெல்லாம் சொல்லி குருவழி காட்டுதலைத் தொடங்குவார். (இதுதான் நமது ஸர்வானந்தமயம்). இங்கு கொஞ்சம் ஸ்வய புராணம் – ஏதோ ஒன்றை மனம் தேடி அலைபாய்ந்து எதில் பொருந்தினால் இதற்கு நிம்மதி என அறியாது தவிக்கும் காலத்தில் குரு வந்தார். நீ தேடும் *அது* காட்டிலோ மேட்டிலோ இல்லையப்பா, உன் மனசுக்குள்ளே இருக்கு. அதுக்கு ஒரு இடம் வேண்டாம். எங்கும் இருக்கிறது அது. ஆனால் தேடவேணும்! என்றார். தேடினேன். அதனை அன்றுமுதல் உறுதியாய் பிடித்துக்கொண்டதாலே தானே அதே குரு வழிகாட்ட வந்தார். அப்படி அந்த வழிகாட்டுதல் படி செல்லும் ஒருவன் “இறுதியில் எதை அடைந்தால் அது ஆனந்தம் மட்டுமன்றி, அதுவே அறிவின் ஊற்றாய் ஆனந்தமாய் திகழ்ந்து, அதற்கும் மேலே பெறுவதற்கு ஒன்றுமில்லை என்று நின்று விடுமோ அதனை அடைவான். அதுவே பிரஹ்மம், அதை நீ உறுதியாக அடைவாய்” என்று குருவாக இருந்து ஸ்ரீபகவத்பாதசங்கரர் இங்கு சொல்கிறார். இவர் தானே ஆதிகுரு ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் மறுவடிவமாச்சே!

யத் த்ருஷ்ட்வா நாபரம் த்ருச்யம் யத் பூத்வா ந புனர்பவ: |
யஜ்ஞாத்வா நாபரம் ஞேயம் தத் ப்ரஹ்மேத் யவதாரயேத் ||

எதுகாணக் காண்டற்கு எதுவுமே இன்றோ
எதுவான பின் சன்மமின்றோ – எதுவறிந்த
பின் அறியத்தக்க பிறிதோர் பொருள் இன்றோ
அன்னதுதான் பிரமமாம்.

எதைத் தனது உண்மையான உருவமாகக்கண்டவனுக்கு அதன் பின் காண்பதற்கு என்று வேறு எதுவுமே இல்லையோ, எந்த உருவமாகவே தான் ஆகிவிட்டால் அதன் பிறகு பிறவி எனும் ஸம்சாரகட்டு ஒருவனுக்கு இல்லையோ, எதைத் தெரிந்துகொண்டால் அதற்கும் மேல் தெரிவதற்கு என்று ஒரு பொருளும் இல்லையோ, அதுதான் பிரஹ்மம் என்பது.

இதன் விரிபொருள்

மலையுச்சில் உள்ள ஊற்றிலிருந்து பெருகி வரும் நீர், அது ஓடி வரும் வழியில் கூடசேரும் மற்ற நீரோடைகளுடன் கலந்து ஓர் ஆறாகப்பெருகி, இறுதியில் கடலோடு கலக்கிறது. அதன் பின் அந்த நீருக்கு எப்படி தனியாக ஓர் அடையாளம் கிடையாதோ, அதே போன்று ஆத்மஸாதகன் இறுதியில் ஆத்மஸாக்ஷாத்காரம் அடைந்தபின் அவனுக்கு இருப்பது எல்லாமே இருக்கும் ஒன்றேயான ஆன்மாதான். அவன் பார்ப்பதெல்லாம் அந்த ஆன்மக் கடலின் அம்சங்கள் தான்.
சரி, அப்படி வேறு ஏதேனும் இருக்கிறதா என்று எதையாவது கேட்டு அறியலாம் என்றால், அங்கு வேறு என்ற ஒன்று இருந்தால் தானே கேட்கவோ, அறியவோ முடியும்? அதுவும் முடியாது என்றால் தன் மனம், புத்தி இவைகள் மூலம் கற்பனை செய்து எதையாவது உருவாக்கலாம் என்றால், அங்கு அத்தகைய உபாதிகள் இருந்தால்தானே எதுவும் செய்ய முடியும்? மனம் புத்திதான் இங்கு இல்லாததாகிவிட்டதே! அந்த நிலை அடைந்தவன் இருக்கும் நிலைதான் பிரஹ்மம் என்று சொல்லப்படுகிறது.
இதுதான் முடிவில் அடையப்போவது என்றால் அதை ஏன் இப்போதே நாம் அடைந்துவிட்டதாக பாவனை செய்துகொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில்தான், ஸாதகனை *ஆன்மா ஒன்றேதான் இருப்பது* என்ற பாவனையில் இருக்கச்சொல்லி, அங்கு கேட்பதற்கு ஒன்றுமில்லை, அனுபவித்துப் பார்ப்பதற்குத்தான் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்களோ? எதைப் பற்றியும் கேள்வி கேட்கும் மனோபாவம் உலகியலுக்குத் தேவையாக இருக்கலாம். ஏனென்றால் உலகம் என்று வந்துவிட்டாலே “நான்-நீ”யும், பகுத்தறிதலும் வந்து விடுகிறதே! அதற்குக் கேள்விகள் தேவைப்படுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் உள்ள அந்த உலகிலும் தராதரம் பார்த்துத்தான் கேள்விகளும் கேட்க முடிகிறது. ஏனென்றால் அங்கு பதிலும் கிடைக்கலாம், மாறாக அடிஉதைகூட கிடைக்கலாமே! இதுக்குத்தான் தர்க்கம் வேணும், குதர்க்கம் உதவாது என்றார்கள்.
அது தவிர பாரமார்த்திகமாகவே பார்த்தாலும், முடிவில் அடைவது என்றும் ஒன்றில்லை, அது ஒன்றுதான் எப்போதும் இருப்பது என்றும், அதற்குத் தொடக்கம் என்று எதுவும் கிடையாது என்பதையும் அனுபவிப்பவர்தானே ஸாதகனுக்கு வழி காட்டும் குரு என்பவர்.
அவர் சொல்வதற்கு மேல் ஒன்றுமில்லை என்று நம்பும் ஸாதகனுக்கு கூடிய விரைவில் எல்லாம் தெரியவரும். ஆனால் இந்த நேரான, எளிமையான வழி தவறி பலப்பல தத்துவங்களையும், அவை தரும் புத்தகங்களையும் அறிந்த கற்றோருக்கு எல்லாவற்றையும் நீக்குவது என்பதுவும் இன்னுமொரு தடையை விலக்குவதாக அமைகிறது. அதனாலேயே பகவான்ரமணர் சொல்கிறார்:
“கற்றும் அடங்காரில் கல்லாதாரே உய்ந்தார்”. அதனால் கேள்விகள் கேட்கும்போதும் ஒரு தன்னடக்கம் வேண்டும் என்று புரிகிறது. இல்லையேல் கேள்விகள் கேட்பவர் தனக்குத் தெரிந்ததை வெளியே காட்டிக்கொள்ளும் வகையில் அமைந்துவிடும்.
குரு காட்டிய வழியில் சென்று எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதைத் தன்னுள் உணர்ந்தபின் அதற்கு மேல் தெரிவதற்கு ஒன்றுமில்லை என்பதில் தெளிவு பெறுகிறான். அது மட்டுமல்லாது, அறியாதிருந்தேன் என்று இருந்த தனது முந்தைய நிலையிலும் இப்போது இருப்பது போல தான் எப்போதும் அப்படியே இருந்ததையும் உணர்கிறான். அதற்கும் மேல் தான் அடைவதற்கு வேறு என்று ஒன்றுமில்லை என்று தெளிந்து, அந்த நிலையிலிருந்து சிறிதும் வழுவாது நிற்பவனை பிரஹ்மத்தை உணர்ந்த ஞானி என்பார்கள். அதற்கும் மேல் ஒன்றுமில்லை என்பதால் அவன் மீண்டும் பிறந்து உழல மேலும் பிறவிகள் கிடையாது என்பதும் இங்கே உறுதியாகிறது.
தொடரும்….

ஜயசக்தி!

ஆத்மபோதம் – 40 *ஸச்சிதானந்தம்*

மேலே பிறவிகள் இல்லாத நிலை ஏற்படும் என்பதை பார்த்தோம். தொடர்ந்து இன்னும் ப்ரஹ்மத்தை விவரிக்கிறார் சங்கரர். தொடருவோம்…

திர்யகூர்த்வம்த: பூர்ண ஸச்சிதானந்தமத்வயம் |
அனந்தம் நித்யமேகம் யத் தத் ப்ரஹ்மேத்யவதாரயேத் ||

எதுகுறுக்கு மேல்கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித்து இன்பு இரண்டல்ல – எது அனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் மதி.

எந்தப் பொருளை குறுக்காகவோ, மேலோ, கீழோ எப்படிப் பார்த்தாலும் எங்கும் நிறைந்திருக்கிறதோ, எது ஸத்சிதானந்த ஸ்வரூபமாயும், இரண்டற்றதாகவும், எது முடிவில்லாததாயும், அழிவற்று எப்போதும் உள்ளதாயும், எது தானே ஒன்றாய் இருந்து விளங்குமோ, அந்தப் பொருளையே ப்ரஹ்மம் என்று உணர்வாய்.

உலகில் உள்ள பலவிதமான பொருட்களை விளக்குவதற்கு, நமக்கு நன்கு அறிமுகமான பொருட்களில் அதைப் போல உள்ள வேறு எதையாவது உதாரணமாக சொல்லியோ, காட்டியோ அது அப்படிப்பட்டது என்பார்கள். நாம் அதிகம் பார்த்திராத வரிக்குதிரையை விளக்கிச் சொல்வதற்கு ஒரு குதிரையைக் காட்டி அது முழுவதும் கருப்பு நிறமாக இருந்து அதன் மேல் வெள்ளை வரிகள் இருந்தால் எப்படியிருக்கும் என்று சொல்லலாம். ஆனால் ப்ரஹ்மம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று விளக்கிச் சொல்வதற்கு காட்டக்கூடிய பொருள் என்று உலகில் எதுவும் இல்லை. ஏனென்றால் எங்கும் காண்பது அதுவே என்பதால் காணும் அதையே எப்படிக் காட்டுவது? “அதுவாக இரு அப்போது தெரியும்” என்றுதானே சொல்ல முடியும்? அப்படியாக அனைத்துப் பொருளின் ஆதாரமாக இருக்கும் அதை முதலில் யூகத்தினால் மட்டுமே அறிய முடியும்; அல்லது *பா*வத்தினால் மட்டுமே இருக்க முடியும். பின்பு அதை உணர்ந்தே அறிய முடியும். தான் தேகம் என்ற அறியாமையில் உழல்வதால், தன் கண்ணுக்கு முன் உள்ளது மட்டுமே இருப்பதாக மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் எவருமே தான் ஒருவனாயும், முதலாவதாகவும் இருப்பதை விட்டுவிட்டு தான் பார்க்கும் உலகத்தை மட்டும் எப்போதும் இருப்பதாகப் பார்க்கிறார்கள். அவர்களது பார்வையை சரி செய்தால் மட்டுமே உள்ளதை உள்ளபடி பார்க்க இயலும்.
ஆகவே ப்ரஹ்மத்தைக் காட்டி விளக்குவதற்கு வேறு பொருள் இல்லையாதலால், எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும் அதனுடைய தனித் தன்மையைக் கொடுக்கும் ஐந்து அம்சங்களான ஸத்து, சித்து, ஆனந்தம், நாமம், ரூபம் இவைகளைக் கொண்டு ப்ரஹ்மம் விளக்கப்பட வேண்டும். இந்த ஐந்து அம்சங்களில் பிரம்மத்திற்கு முதல் மூன்றான ஸத்-சித்-ஆனந்தம் அம்சங்கள் மட்டுமே உண்டு. மற்ற இரண்டு அம்சங்களான நாமமும், ரூபமும் கிடையாது. உலகில் காணப்படும் எல்லா பொருட்களுக்கும் நாமமும், ரூபமும் உண்டு. அவைகள் எதற்குமே பிரத்தியேகமாக முதல் மூன்று அம்சங்கள் கிடையாது. அந்தப் பொருட்கள் இருப்பது (ஸத்) போலவும், அவைகளை அறியமுடியும் அறிவு (சித்) உண்டு என்பது போலவும், அவை ஆனந்தம் தருகிறது என்பது போலவும் காணப்படுவது அவைகளுடன் பிரம்மம் சேர்வதால் தான். அப்படி பிரம்மத்தின் சேர்க்கை இருப்பதால் மட்டுமே அவை உணரப்படுகின்றன. அப்படி இல்லாது போனால் அவை மாயை எனப்படும். அதனால் உலகம் இருக்கிறதா என்றால், ப்ரஹ்மத்தின் சேர்க்கையால் இருக்கிறது என்றும் ப்ரஹ்மம் இல்லாத உலகம் மாயை என்றும் சொல்லப்படுகிறது.
அதனால்தான் நமது ஆழ்உறக்கத்திலும் அந்தப் ப்ரஹ்மமாக நாம் இருக்கிறோம். ஆனால் நமது அவித்தையாகிய அஞ்ஞானத்தால் நாம் அதைஉணர்வதில்லை. அப்படி நாம் உணராவிட்டாலும் அதன் தன்மைகளால் அது தான் இருப்பதையும், அறிவாகவும் ஆனந்தமாகவும் உள்ளதை நம்மை “ஆனந்தமாகத் தூங்கினோம்” என்று அப்போது உணர்ந்ததைப் பின்பும் சொல்லவைக்கிறது. உறக்கத்தால் நாம் பெறும் அந்த ஆனந்த நிலை கூட அவ்வப்போது நமக்கு கிடைக்காது போனால் நம் கதி அதோகதி தான். ஆனால் அதை நாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது, நனவு உலகம் ஒன்றையே பெரிதாக மதித்து, மேலும் மேலும் அதைப் பிடித்துக்கொண்டு அதில் ஆழ்ந்து மூழ்கிப் போகிறோம்.
அந்தப் ப்ரஹ்மமாகிய ஒன்று இல்லாது போனால் எதுவும் இல்லை என்பதால் நாமும் இல்லை என்றுதானே ஆகிறது. தேகம் என்பது உலகத்தில் உலவுவதால் அதற்கும் மற்றப் பொருட்களைப் போலவே பிந்தைய இரண்டு அம்சங்கள்தான் உண்டு. அத்துடன் பிரம்மம் சேர்வதால்தான் நாம் நாமாக இருக்கிறோம். அந்த பிரம்மம் ஒன்று மட்டும்தான் தானே தானாக இருக்க முடியும். அதை விடுத்து இரண்டாவது என்பது கிடையாது. அது எப்போதும் இருந்தாக வேண்டும் என்பதால் அது அழிவற்றது. அது ஒன்றே அனைத்துக்கும் அறிவையும், ஆனந்தத்தையும் கொடுப்பதால் அதுவே அறிவாயும், ஆனந்தமாயும் இருக்கிறது. அதனால் அதுவே *ஸத்சிதானந்தம்* எனப்படுகிறது. இது பற்றி சற்று விரிவாக நாளை ஆராய்வோம்…..

ஆன்ம போதம் – 41 *ஸச்சிதானந்தம்* – தொடர்ச்சி

ஸத், சித், ஆனந்தம். என்ற மூன்று பதங்களின் விளக்கம் தொடருகிறது…
ஸத்தின் விளக்கம் (நான் இருக்கிறேன் என்ற உணர்ச்சி) எல்லோருக்கும் உண்டு. சித் விவேகிக்கு விளங்கும். ஆனந்தம் பூர்ண போதம் அடைந்தவனுக்குதான் விளங்கும். இம்மூன்றையும் உடையவனுக்கு அமிர்தமயமான ,அத்யந்த,துக்க நிவர்த்தி என்று பொருள் கூறுவர். பகவான் அவர்கள் வேறுவிதமாக சொல்கிறார்.

கண்ணுக்குக் கண்ணாய்க் கண்ணின்றிக் காணூனைக்
காணுவ தெவர்பா ரருணாசலா

நாம் நமக்கு வெளியிலுள்ள வஸ்த்துக்களை காண்பது நமது கண்களால் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை. இந்த ஸ்தூல கண்ணுக்கு கண்ணாயிருப்பதைக் குறித்து கூறுகிறார் இந்த சுலோகத்தில். நமது ஸ்தூல சரீரத்தில் இருக்கின்ற அங்கங்களில் மிகவும் முக்கியமானது கண்கள் தான். கண்களில்லையென்றால் நாம் இந்த உலகத்தை காண்முடியாது. ஒளி இருந்தால்தான் பொருள்கள் நம் கண்களுக்குத் தெரியும். ஒளியிருந்தாலும் கண்கள் இல்லாவிட்டால் பொருள்கள் நமக்கு தென்படமாட்டா. ஆனால் இந்த கண்களை இயக்குவது எது? அது தான் நமது மனம். கண்கள் திறந்திருந்தாலும், நமது மனம் காண்பவையில் லயிக்காவிட்டால் கண் முன்னால் உள்ள பொருட்கள் நமக்கு தென்பட மாட்டா. மனம் காணுகின்ற கட்சிகள் தான் நமக்குத் தெரியும். நாம் கண் இருந்தும் குருடர்களாவோம். நாம் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் நிறைய காக்ஷிகள் நம் முன்னே ஓடிக்கொண்டேயிருக்கும்.. அது எப்படி?
நமது மனம் அதன் ஸ்ருஷ்டி சக்தியால் (கிரியாசக்தியால்) கண்களையும் மற்ற இந்திரிய உறுப்புக்களையும் கற்பனையில் உருவாக்கி நமக்கு காண்பதற்கான கேட்பதற்கான,வாசனையை கிரஹிக்கக் கூடிய சக்தியை கொடுக்கிறது.
ஆனால் இந்த மனமும் செயல் இழந்திருக்கும் பொழுது- அதாவது உறக்கத்தில்- ஸ்வப்னாவஸ்தையில் நாம் பல காக்ஷிகளைக் காண்கிறோம், ஒலிகளை கேட்கிறோம். அதற்கான ஊக்கசக்தியை அளிப்பது அல்லது உருவாக்குவது “நான்” என்ற ஆன்மா தான்.. உறக்கத்தில் இல்லாததை இருப்பதாகக் காட்டுவதும் விழிப்பில் இருக்கிறதை மறைப்பதும் இந்த ஆன்மாவே தான். உறங்காத கண்களாம் இந்த ஆன்மாவை பகவான், ”உள்ளது நாற்பது” என்கின்ற நூலில் ‘அந்தமிலாக் கண்’ என்று சொல்கிறார். இந்த ஆன்மா தான் ‘நான்’. அந்த நான் தான் பிரஹ்மம்.
நம் கண்களுக்கு காணும்சக்தி வேண்டும் என்றால் அந்த பிரஹ்மத்தின் உதவி வேண்டும். ஆனால் பிரஹ்மத்திற்கு காண்பதற்கு யார் உதவியும் தேவை இல்லை.
இந்த ஆன்மா, பிரஹ்மம் என்பது ஒரு ஸ்தூலமல்ல. அது ஒரு அனுபவம்; ஒரு அனுபூதி. அதை அனுபவித்துத்தான் உணர வேண்டும். அதை உணர வேண்டுமென்றால் நாம் பக்குவப் பட வேண்டும். இப்படியான பக்குவம் எளிதாக்க் கிடைக்காது.. பகவான்ரமணர் அப்படியான ஒரு ஞானத்தை-ஆத்மானுபூதியை சிறுவயதிலேயே அடைந்துவிட்டார்.
வேறு ஒரு கோணத்தில் சிந்திப்போம்.
எது ஒன்று எல்லாவற்றிற்கும் ஆதி காரணமாக இருக்கிறதோ,அதுவே தான் அதன் விளைவாகவும் இருக்கிறது..அதனிலிருந்து உண்டாகும் மற்றெல்லா வஸ்துக்களும் வெறும் பெயர்களே. இவ்விஷயத்தில் நமது உபனிஷத்துக்களும் மற்ற வேத கிரந்தங்களும் பிரம்மத்திற்கு ஐந்து கோணங்களுண்டு என்று கூறுகின்றன. சத்- சித்- ஆனந்த- நாம- ரூபம் என. இதில் முதல் மூன்றும் ஸத்யமானவை. கடைசி இரண்டும் மாயை-இருப்பது போல் தோற்றமளிக்ககூடியவை. இந்த சந்தர்ப்பத்தில் ரமணர் கூறின ஒரு கதையை நினைவு கூறுவது தவறகாது.
மனிதன் ஞானம் பெறுவதற்கு பல விதமான் பிரதிபந்தங்கள் உள்ளன .இவைகளைப் பற்றி விளக்கிக் கூறுமாறு ஒரு பக்தர் பகவானிடம் கேட்டதற்கு இணங்கி பகவான் கீழ்கண்ட கதையைக் கூறுகிறார்.
பிரதிபந்தங்கள் பல விதமனவை…“…அவைகளைத் தான் பூத-பவிஷ்யத்-வர்தமான (இறந்தகால, எதிர்கால, நிகழ்கால) பிரதிபந்தங்கள் என்பார்கள். அந்த மூன்றில் பூதபிரதிபந்தத்திற்கு உதாரணமாக உபனிஷத்திலும், வாசுதேவமனனத்திலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
பெரிய குடும்பியான ஒரு பிராமணன் ஜீவனத்திற்காக ஒரு எருமையை வளர்த்தான். அது கொடுக்கும் பால், தயிர், நெய் முதலானவற்றை விற்று குடும்பத்தை பராமரித்து வந்தான். எருமைத்தீனிக்காக பசும்புல், பருத்திக்கொட்டை, முதலியவை சேகரிப்பதிலும், எருமையை கவனிப்பதிலும் குறியாக இருந்தான். கர்ம வசத்தினால் அவனுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் வரிசையாக சிறிது காலத்திற்குள்ளேயே இறந்துவிட்டார்கள். அதன் பிறகு அவனுக்கு எருமையின் மீது பிரியம் இருமடங்காயிற்று. சில வருடங்களில் அந்த எருமையும் இறந்துவிட்டது. தன்னந்தனியனாகிவிட்ட அவனுக்கு இகலோக வாழ்க்கையில் வெறுப்பு வந்து ஸந்நியாசியாகி ஒரு ஸத்குருவின் ஸந்நிதியில் சிரவண மனனங்கள் செய்து கொண்டு வந்தான்.. அவனால் சிரத்தையாக சிரவண மனனங்களில் ஈடுபட முடியவில்லை. குரு இதைக் கவனித்து அவனது பூர்வ கால வாழ்க்கையும் அப்பொழுது அவனுக்கு ஏற்பட்ட பந்தபாசங்களும் தான் அவனது ஸன்னியாச வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டார். ஒரு நாள் குரு அவனை அழைத்து சொன்னார்-
பிரம்மத்தை அஸ்தி, பாதி, பிரியம் என்று சொல்வார்கள்.அஸ்தி (இருக்கிறது), என்றால் உள்ள பொருள் (ஸத் வஸ்து ) பாதி என்றால் பிரகாசிப்பது, பிரியம் என்றால் அன்பானது. உன்னுடைய எருமை உனக்கு பிரியமானதால் அதுவும் பிரஹ்மம் தான். ஆனால் அதற்கு நாமமும் ரூபமும் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நீ செய்ய வேண்டியது என்னவென்றால், உன்னுடைய நாம ரூபத்தையும் விலக்கி அதனுடைய நாம ரூபத்தையும் விலக்கிவிட வேண்டும். அப்போது உள்ளது பிரஹ்மம் ஒன்று தான்..”
சிஷ்யனும் நாம ரூபங்களை விட்டு விட்டு ஆன்ம சிந்தனையில் ஈடுபட்டான்; ஞானமும் அடைந்தான்.” பகவன்ரமணர் சொன்னார், ‘ பொருள்கள் பலதானாலும் உள்ள பொருள் ஒன்றே தான். அவை நாம ரூபத்தில் தான் வேறு படுகின்றன.”
நாம் அஸ்தியும் பாதியும் பிரியமும் பிரஹ்மத்தின் உருவகங்களே என்று தெரிந்து கொண்டால், இவையெல்லாம் ஸகஜஸ்வருப லக்ஷணங்கள் என்று புரிந்து கொண்டால் இவையெல்லாம் ஸத்-சித்-ஆனந்தத்தின் மறு பெயர்களே என்று புரிந்துகொண்டால் நமது அகக்கண் அதாவது ஞானக்கண் திறக்கப்பட்டுவிடும். நாம் ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை நெருங்கி விட்டோம் என்று அர்த்தம்.
பகவானின் அக்ஷரமணமாலயிலும் கேனோபனிஷத்திலும் இதே கூறப்பட்டுள்ளது.

யச்சக்ஷுஷா ந பஸ்யதி யேன சக்ஷும்ஷி பஸ்யதி
ததேவ ப்ரம்மதுவம் வித்தி நேதம் யதிதமுபாஸதே”

ஸ்தூலக் கண்களால் காண முடியாததும், ஆனால் அந்தக் கண்கள் இயங்குவதற்கு காரணமான அந்த சுத்தசைதன்யம் தான் பிரஹ்மம் என்று அறிக. நீ உபாசிக்கின்ற மற்றவையெல்லாம் பிரஹ்மமல்ல.என்கிறது உபனிஷத்.

காணுகின்றவர் ( பார்க்கின்ற) கண்களுக்கு கண்ணாக இருந்து கண் இல்லாமலேயே சகலமும் காண்போனாகிய அந்த ஸத்-சிதானந்தனை எப்படி காண முடியும் என்று பகவான் அக்ஷரமணமாலையில் கேட்கிறார். அதற்கு நீ தான் துணை நிற்க வேண்டும் என்கிறார். இதே கருத்தை ஆன்மவித்தைக்கீர்த்தனத்தில் அவர்களே இவ்வாறு கூறூகிறார்.

விண்ணாதிய விளக்கும் கண்ணாதிய
பொறிக்கும் கண்ணாய் மனக்கணுக்குங் கண்ணாய்… என்றும்

காணொணாத கண் காட்சி பற்பல
காட்டினாய் மனக் கண்ணுளே

காண்பவன், காணப்படும் பொருள், காணுகின்ற செயல் எல்லாம் பிரஹ்மத்தின் செயலே.. நானும் பிரஹ்மம், நீயும் பிரஹ்மம், எல்லாமே பிரமமம் என்று புரிந்து கொண்டு நான் என்ற அகந்தையை அழித்து விடு. அதற்கான அருளை எனக்கு தர வேண்டும் அருணாசலா” என்று பகவான் நமக்காக அருணாசலனிடம் வேண்டுகிறார்.

நமது ஸபர்யாபத்ததி இங்கே என்ன சொல்கிறது என்று காணுவோம். பூஜையின் தொடக்கத்திலேயே இந்த உறுதி செய்ய நம்மை தயார் படுத்துகிறார் குருநாதர்.

ஸர்வேந்த்ரிய ஜன்யேஷு ஞானேஷு யே விஷயாஸ்தேஷு
ஸச்சிதானந்த அம்ச அஸ்ய அனுகதஸ்ய பானம்,
ந த்வஅனுகதயோர் நாம ரூபயோ: இதம்
ரிதம்பரா ஞானமிதி ப்ரஸித்தம் ஸா
பூஜா பராஞானமிதி கத்யதே

இந்த நாட்டமே பராபூஜா எனப்படும். அதாவது இந்த ஸகல உலகங்களும் சர அசர வடிவமானவையே. இதனை அத்வைத பாவனை (இருவேறாக காணாத நிலை) என்கின்ற அம்ருதத்தினால் நனைந்ததாக நினைக்கவேண்டும். பிறகு பேதமாகிற அத்யாஸ விகற்பங்களை முற்றுமற, ஒழித்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த ஸாதகன் பரமானந்த பரிதனாக ஆகிவிடுகிறான். பின்பு மிகுந்த உத்ஸாகத்தோடுகூட மனனம் (என்ற நினைத்தலையும்) நிதித்யாஸனம் (என்ற பயிற்சியையும்) இவைகளோடு கூடிய ஆத்மாவை அனுஸரித்த செயலினால் (ஆத்மகோசர வ்ருத்தி) அத்வைத ரூபமான சிவத்தை அறிய வேண்டும். இவ்வாறு உள்-வெளி என்ற பேத மில்லாமல் எங்கும் எப்போதும் எதையும் சித்தாகக் காணுவதே பரா பூஜையாம் என நமது பூஜா பத்ததி நமக்கு சொல்கிறது..
நாளை சங்கரரின் பிரஹ்மத்தின் லக்ஷணத்தை தொடருகிறோம்….

ஆன்ம போதம் – 41 * ப்ரஹ்மானுபவம்*

முதலில் நேதிநேதி இதுஇல்லை இதுஇல்லை என்பதையே விளக்குகிறார்….

அதத்வயாவ்ருத்திரூபேண வேதாந்தைர்லக்ஷ்யதே த்வயம் |
அகண்டானந்தமேகம் யத் தத்ப்ரஹ்மேத் யவதாரயேத் ||

ஏது அழிவில்லாதது எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் – யாதொன்று
அகண்ட இன்பாகி அமரும் அது தானே
திகழும் பிரமம் தெளி

வேதங்களின் முடிவில் உள்ள உபநிஷத்துகள், இருப்பதுபோலத் தெரிவதையெல்லாம் இதுவல்ல, இதுவல்ல என்று மறுதலித்து எதை விளக்குகின்றனவோ, எது அழிவில்லாததாயும், இடைவிடாத இன்பம் தருவதாயும், எப்போதும் ஒன்றாய் இருப்பதாகுமோ அது தானே ப்ரஹ்மஸ்வரூபமாய் விளங்கும் என்று தெளிவாய்.

இதன் விருபொருள்

வேதங்களின் ஆரம்பபாகத்தை கர்மகாண்டம் என்றும், அதன் கடைசீப் பகுதியான உபநிஷத்தை ஞானகாண்டம் என்றும் சொல்லுவார்கள். ஞானம் என்பது அறிவு சம்பந்தம்உடையது. ஆனால் இங்கு கூறப்படும் அறிவோ அறியும்தனக்கு வெளியே உள்ள பொருட்களைப் பற்றிய அறிவு அல்ல. இது தன்னைப் பற்றிய அறிவே. தன்னைப்பற்றித் தானே அறியும் அறிவு இது என்பதால் “அறியுமறிவு” என்று ஒன்றும், “அறியப்படுமறிவு” என்று மற்றொன்றும் இருப்பதற்கு அங்கு இரண்டு அறிவுகள் இல்லை. அதனால் அதை இப்படி, அப்படி என்று விளக்க முடியாது. அதை விளக்குவதற்கு ஒரே வழி ஸாதகன் அறிந்துள்ள அனைத்தையும் சொல்லி, இதுவல்ல அதுவல்ல (நேதி-நேதி) என்றுதான் விளக்க முடியும்.
உடலாலும், உள்ளத்தாலும் காண்பது அனைத்தையும் அவை தானல்ல என்று விட்டுவிடச்சொல்லி, அவை தெரிவதால் அவைகளைக் காண்பவன் யார் எனும் கருத்தில் ஸாதகன் “தான்யார்” என்பதை ஆராயவேணும். அது எப்படி முடியும் என்றால், ஆரம்பத்தில் அதைத் தன் உடலிலும் நுண்ணியதான மனம், புத்தி போன்ற நம் கருவிகளை வைத்துக்கொண்டுதான் விசாரத்தைத் தொடங்க முடியும். “நான்யார்” என்ற இந்த வினாவும் ஓர் எண்ணம்தானே, அது கேட்கப்படும்போது இயங்குவது மனம்தான். அதனை ஆராய்ந்து அதற்கு விடை காணத் துடிப்பது நமது புத்திதான். மனம், புத்தி இந்த இரண்டும் ஸ்தூலம், ஸூக்ஷ்மம், காரணம் என்று பல பொருட்களை ஒவ்வொன்றாகப் பற்றிக்கொண்டு நம் வினாவுக்கு விடை தேட முயற்சிக்கும். அப்படித் தெரியவரும் பொருட்கள் எல்லாம் நம்மிலும் வேறு என்பதால் அவை நாம் அல்ல என்ற முடிவுக்கு வருவோம். இறுதியில் கேட்கும் மனமும், விடைகாண முயலும் புத்தியும் நம் கருவிகளாக இருப்பதால் அவைகளும் நாமல்ல என்ற ஒரு தெளிவும் பிறக்கும். அதன் பின் அத்தகைய கருவிகளும் தானாக இயங்குவதில்லை, ஆனாலும் அவை இயங்கின என்பதாலும், கேட்பவன் இன்னும் இருக்கிறான் என்ற நிலை உணரப்படும்.
மனம், புத்தி இவைகளின் எல்லை உணரப்படும்போது அவைகள் தானே அடங்கி, இருக்கும் ஒன்றேயான பிரஹ்மம் தானே விளங்கும். மனம், புத்தி இவைகளுக்கும் அப்பால் உள்ளது “நான்” என்னும் இறுதித் தெளிவான ப்ரஹ்மமாய் இருப்பதையே ஸச்சிதானந்தநிலை என்பர். அது (அஸ்தி) இருப்பாகிய “ஸத்”தாகவும், (பாதி) இருக்கிறேன் என்று உணரும் அறிவாகிய “சித்”தாகவும், (ஆனந்தம்) எப்போதும் தானே “ஆனந்தமாய்” இருப்பதாலும், நாம் உலகில் காண்பது, அனுபவிப்பது அனைத்தும் இதனிலிருந்து வரும் குணங்களே என்றும் அறிகிறோம். அது இல்லை என்றால் எதுவும் இல்லை என்பதே உண்மை. அதை அனுபவித்தே உணர முடியும். வாய்ச்சொற்கள் இங்கே பயனில்லை. ஏன், மனதாலுமே முடியாது. “அவாங்மானஸகோசரம்” என்கிது இதை வேதஉபநிஷதம்.
இவ்வுலகில் உள்ள பொருட்களைப் பற்றி விளக்கும் சொற்களே ஓரளவுக்குத்தான் அதைச் செய்ய முடிகிறது. உதாரணம் பார்ப்போம். வெல்லம், சர்க்கரை, தேன் என்ற மூன்று பொருட்களை எடுத்துக்கொண்டால் அவை தித்திப்பாக இருக்கும் என்றுதான் சொல்ல முடியுமே தவிர ஒவ்வொன்றின் தித்திப்பு தன்மையை தனித்தனியே எப்படி விளக்கமுடியும்? அதைத் தனித்தனியே வாயில் சுவைத்து அனுபவித்துத்தானே உணர முடியும்? இவைகளே இப்படி என்றால் இது எல்லாவற்றையும் கடந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் தன்னுள்ளடக்கிய ப்ரஹ்மத்தை எப்படி விவரிப்பது? அதனால்தான் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பர்.
இப்படி மேலேகண்ட நான்கு ஸ்லோகங்களிலும் “யத்தத்ப்ரஹ்மேதி அவதாரயேத்” என்று சொல்லி “இதுவே ப்ரஹ்மம் என்று உறுதியாக அறிந்துகொள்” என்று அறிவுறுத்துகிறார். இப்படி நான்கு முறை சொல்லப்பட்டுள்ளதை “சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல்” என்பதன் எதிர்மறையாகக் “கூறியதுகூறல்” என்ற முறைப்படி வருவதாகச் சொல்வார்கள். இது குற்றமாகாது. ஏனெனில் விளக்கவந்தது மாபெரும் தத்துவம், அதனால் இதற்கு மேல் ப்ரஹ்மத்தைப் பற்றிச் சொல்வதற்கும் ஒன்றில்லை என்று முடிந்துவிடுகிறது.
அடுத்து இந்த *ப்ரஹ்மானுபவம்* எப்படி என சொல்கிறார்….

அகண்டானந்தரூபஸ்ய தச்யானந்தலவாச்ரிதா: |
ப்ரஹ்மாத்யாஸ்தாரதம்யேன பவன்த்யானந்தினோகிலா ||

அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் – திகழும்
பிரமாதி ஏனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரமாகத் தரி

எங்கும் பரவி, எப்போதும் ஆனந்தமயமாய் இருக்கும் ஆன்மாவின் சுகத்தில் இருந்து, தேவர்களாக விளங்கும் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் முதலானோர் அவரவர் தகுதிக்கு ஏற்ப சொற்பமான சுகத்தையே பெற்று உயர்வும், பெருமையும் அடைந்தவர்கள் என்பதை திடமாக அறிவாய்.

இதன் விரிபொருள்

வேத உபநிஷதங்கள் ஆனந்தத்தை விளக்க என தனி வல்லிகள் என்ற பாகத்தை சொல்கிறது.
ஆன்மா ஆனந்தமயமானது என்றால் எவ்வளவு என்று கோடி காட்டுவதற்காக இங்கு ஒரு Comparison சொல்லுகிறார். ஆன்மாவின் ஆனந்தத்தை ஒரு கடல் என்று சொல்லி, அதில் ஒரு துளிதான் மிக ஆனந்தமாய் இருக்கும் பிரஹ்மாவிற்கே கிடைக்கிறது என்று சொல்லி ஆன்மாவின் ஆனந்தத்தை விவரிக்கிறார். ஒன்று பெரியது என்று காட்டுவதற்கு என்ன பண்ணுவோம். அதன் பக்கத்தில் ஒரு வேறு ஒரு சிறு கோடு போடப்படும் “இருகோடுகள்” தத்துவம்தான் இது. ஆனால் இங்கு ஒன்று மிகச் சிறியதாவும், மற்றொன்று மஹா பெரியதாகவும் இருக்கிறது.
தைத்திரியஉபநிஷதம் சொல்லுகிறது. ஒரு நல்ல இளமையுடன் இருக்கும் பலசாலி மற்றும் அறிவாளி சக்ரவர்த்தியாக இருக்கும்போது அனுபவிக்கும் ஆனந்தமே மனிதஆனந்தம் என்று வரையறுக்கப்படுகிறது. அதாவது மற்ற சாதாரணமக்களின் ஆனந்தம் எதுவுமே ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை. அந்த மனிதனில் தொடங்கி பிரஹ்மா வரை சொல்லப்பட்டு, அந்த பிரஹ்மா அனுபவிப்பதே ஆத்மானந்தத்தின் ஒரு துளி என்றும், மற்றவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆனந்தம் கிடைத்தும், அவர்கள் எல்லோருமே உயர்வாய் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களே அப்படியிருந்தால் ப்ருஹ்மத்தை உணர்ந்து அந்த ஆன்மானுபவத்தை அடைபவன் கடலளவு ஆனந்தம் அனுபவிப்பவன் என்பதால் அவன் இன்னும் எவ்வளவு பாக்யவான் என்று கோடி காட்டப்பட்டிருக்கிறது.
அதாவது மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பிரஹ்மாவின் சுகமே கொஞ்சமோகொஞ்சம் என்பதால் இவ்வுலக சுகத்தை நாடுவதில் ஒருவனுக்கு என்ன லாபம் இருக்கமுடியும்? இவ்வாறுசொல்லி ஸாதகனின் மனத்தை இவ்வுலக இன்பங்களிலிருந்து திருப்பிவிட்டு, அவனுக்கு ஆனந்தக்கடலைக் காட்டி, அவன் ஆன்மவிசாரத்தில் ஈடுபடுவதே மிகப்பெரும் நன்மை கொடுக்கும் வழி என்று இங்கு காட்டுகிறார்.
அது இல்லாத இடமே இல்லை என்பதை அடுத்து சொல்கிறார்….

ஆன்ம போதம் -42 *ப்ரஹ்மஉணர்வு*

இந்த விஷயமே தொடருகிறார்…..மறுபடியும் மறுபடியும் இந்த ப்ரஹ்மத்தை பற்றியே எழுத வேண்டியுள்ளது. உங்களுக்கு சற்று Bore அடிக்கும்தான். இருந்தாலும் பொறுமையாக படியுங்கள். திரும்ப திரும்ப படியுங்கள். அதுதான் மனனம் என்பது. வேத, உபநிஷத ஸத்யங்கள் அத்தனையும் திரட்டி ஹல்வா மாதிரி பகவத்பாதர் நமக்கு இதில் ஊட்டுகிறார். அல்லது நமது மனசுக்கு வந்த நோய்க்கு மருந்து கொடுக்கிறார். எப்படியானாலும் நமக்கு இது மிக்க தேவையே! எத்தனை ஜன்மா இப்படியே கழிக்க போகிறோம்? இப்பவாவது முழிக்க பண்ணுகிறாரே என்று மகிழ வேண்டாமா? அழலாமா? வாழ்வின் அழுகையை ஒழிக்கத்தானே இது. ஸ்ரீவித்யையாம்-ப்ரஹ்மவித்யையை வேறு உபாஸனைக்கு எடுத்துக்கொண்டு இருக்கிறோமே! பொறுமை தேவை. நவராத்திரி நாளை தொடங்குகிறது. அதில் கொலுவில் வைக்கும் பொம்மைகள் அத்தனையும் பலவித்தில் இருந்தாலும் எல்லாமே இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நானாவிதமான விருத்திகள் தானே! அத்தனையையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து வைப்பதாலே அகண்டாகாரவிருத்தி திடப்படுகிறதை உணரவேண்டும்.

தத்யுக்தமகிலம் வஸ்து வ்யவகாரச்ததன்வித: |
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்மா க்ஷீரே ஸர்பிரிவாகிலே ||

அதனிடத்துள்ளது அகிலமும் செய்கை
அதை அடுத்துள்ளதேயாகும் – அதனால்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய் போலவே

எல்லாப் பொருட்களும் ப்ரஹ்மத்தினிடமே இருக்கின்றன. அதனால் எல்லாச் செய்கைகளும் அதை ஒட்டியே நடக்கின்றன. பால் முழுவதும் நெய் பரவி இருப்பது போல, ப்ரஹ்மம் எங்கும் பரவி வியாபித்து இருக்கின்றது.)

இதன் விரிபொருள்

முன்பே நாம் சிந்தித்தமாதிரி எந்தப் பொருளுக்கும் ஐந்து குணங்கள் உண்டு. சொல்லியது சொல்லல் என்றில்லாமல் விஷயம் முக்கியமானதால் மறுபடியும் இங்கே சிந்திக்கிறோம். அவைகளில் முதல் மூன்றான அஸ்தி (ஸத்), பாதி (சித்), ப்ரியம் (ஆனந்தம்) ப்ரஹ்மத்தின் சொரூபம் என்றும், கடைசியான நாமம், ரூபம் இரண்டும் மாயையின் குணங்கள் என்றும் சொல்லப்படும். எங்கு நாமரூபங்கள் தோன்றுகின்றனவோ அங்கு உலகம் தெரிகிறது என்று பொருள். இவ்வுலகில் உள்ள பொருட்கள் எதற்கும் முதல் மூன்று குணங்கள் கிடையாது. ஆனாலும் அவைகளுக்கும் அந்தக் குணங்கள் இருப்பது போலத் தோன்றுவது, அந்தப் பொருட்களுடன் இருக்கும் ப்ரஹ்மத்தின் தொடர்பால் மட்டுமே.
ஒரு பொருளை வாங்கி வந்தோம், அல்லது ஒரு வேலையைச் செய்துமுடித்து விட்டோம் என்றால் நமக்கு வரும் ஆனந்தம் அந்தச் செயலால் வருவது என்றுதான் நாம் பொதுவாக எல்லோரும் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அந்தச் செயலை செய்வதற்கு முன் நமக்கு இருந்த மன ஓட்டங்களும், கவலைகளும் செயல் முடிந்ததும் தீர்ந்து விட்டதால், நாம் நமது இயல்பான ஆன்மநிலைக்கு ஒரு நொடியேனும் திரும்புகிறோம். ஆக எப்போதும் அறிவுடன் இருக்கும் ஆன்மாவின் ஆனந்த இயல்பையே நாம் அப்போது உணர்கிறோம். அது அப்படியே நீடிக்காமல் இருப்பதன் காரணம் முன்பு கலைந்து போன கவலைகளின் இடத்தில், நாம் ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் வாஸனையால், வேறு ஒரு கவலை குடி புகுந்து விடுகிறது. இப்படியே நம் வாழ்க்கை தொடர்ந்து போகிறது.
ஒரு குறுகிய இடைவெளியிலேயே நமக்கு அப்படிப்பட்ட ஆனந்தம் கிடைக்கிறது என்றால் அதை நீட்டி எப்போதும் அதில் நிலைத்து நிற்க வேண்டிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதுதானே இங்கு நாம் தெளியவேண்டிய முக்கியமான பாடம். அதற்கு நமது எண்ணங்கள், செயல்கள் அனைத்துமே பழைய வாசனைகளைத் தீர்க்கும் முகமாகவும், புதிய வாசனைகள் எதையும் சேர்க்காமல் இருப்பதாகவும் இருக்கவேண்டும். அப்படிச் செய்து வரும்போது உள்ள ஒன்றான ஆன்மா தனக்குத்தானே ஒளிர்விட்டு விளங்கும்.
நாமம், ரூபம் மட்டுமே உள்ளதால் இவ்வுலகப் பொருட்கள், செய்கைகள் எல்லாமே மாயையாகி விடுகின்றன. அவைகளும் அந்தப் ப்ரஹ்மத்தின் ஸந்நிதியில்தான் இருக்கின்றன, நடக்கின்றன. அதைத்தான் நமது அவ்வப்போதைய ஆனந்தநிலை காட்டுகிறது. அப்படி எல்லாமே பிணைந்து இருப்பதை நாம் எளிதாகக் காண இயலாது. எப்படி பாலில் இருக்கும் நெய்யைக் காண முதலில் பாலைத் தயிராக்கி, ஆடையான பின், அதைக் கடைந்து, வெண்ணையைத் திரட்டி, பின்பு அதையும் உருக்கி நெய்யை அடைகிறோமோ, அதேபோல தொடரும் நம் ஆன்மவிசாரம் எனும் பெருமுயற்சியால் ப்ரஹ்மம் எதிலும் இருப்பதை உணரலாம்.

ஆத்மபோதம் – 43 *மரமும் – நாயும்*

இதில் தக்க உதாரணத்துடன் ப்ரஹ்மம் விளக்கப்படுகிறது.. இன்று சற்று நீண்ட பதிவு. பயம் வேண்டாம். தயவுசெய்து பொறுமையாக படியுங்கள். நன்றாக விளங்கும்.
சங்கரர் சொல்கிறார்.

அனண்வஸ்தூலமஹ்ரஸ்வ மதீர்தமஜமவ்யயம் |
அரூபகுணவர்ணாக்யம் தத்ப்ரஹ்மோத்யவதாரயேத் ||

பருமையும் நுண்மையும் உற்பத்தி விநாசம்
குறுகலும் நீட்சியும் கூடாது – உருவம்
குணம் குலம் நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று

எது தூலமாகவோ, நுண்ணியதாகவோ இல்லாது, உற்பத்தி, நாசம் என்ற நிலைகளும் இல்லாது, சுருங்கி குறுகியதாகவோ, நீண்டதாகவோ இல்லாது, உருவம், குணம், குலம், பெயர் என்று ஏதும் இல்லாது இருக்கிறதோ, அதைக் கூர்த்த மதியால் உணர்ந்து ப்ரஹ்மம் என்று அறிக.

*இதன் விரிபொருள்*

ஸ்தூலமாக எது இருக்கிறதோ அதற்கு “நாம-ரூப” என்னும் நியதிப்படி பெயரும், உருவமும் இருக்கும். அது நீண்டதாகவோ, குட்டையாகவோ, ஏதோ ஒரு பரிமாண அளவுடன் இருக்கும். தூல உருவைத் தவிர அந்தப் பொருளுக்கு நுண்ணிய குணங்களும் இருந்தால், அதைப் போன்ற பல உருவங்கள் ஒரு சூழ்நிலையில் ஒன்றாய் இருக்கும்போது, அந்த ஒட்டு மொத்த சேர்க்கைக்கும் சில குணங்கள் ஏற்பட்டு ஒரு குலம் உருவாகிறது. தனித்தனியான பெயர்கள் போல, அந்தச் சேர்க்கைக்கும் ஒரு பெயர், குணம் எல்லாம் உருவாகிறது. ஒரு நிலையில் அவை இல்லாதும் போகலாம். அப்படி நேர்ந்தால் எப்படி முன்பு இருந்ததோ அப்படியே அவை மறுபடியும் உற்பத்தியும் ஆகலாம். இவையெல்லாமே உலகில் உள்ள எந்தப் பொருட்களுக்கும் பொருந்திய விவரங்கள்தான்.
இந்த விவரங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவைகள் ஆகையால், ஆன்ம ஸாதகன் ப்ரஹ்மத்தையும் அதே பரிமாணங்களுடன் பார்க்கலாம் என்பதால் அவை அனைத்தையும் சொல்லி, ப்ரஹ்மம் அத்தகையது அல்ல என்று முன்பு போல் எதிர்மறையாக உணர்த்தப்படுகிறது. அதாவது உலகில் உள்ளவைகள் எல்லாம் மேலே சொல்லப்பட்டுள்ளபடிதான் இருக்கின்றன; அதனால் உலகம் தெரியும்வரை ப்ரஹ்மமும் தெரியாது என்றும் உணர்த்தப்படுகிறது. அப்படியானால் அனைத்திலும் ப்ரஹ்மம் வியாபித்திருக்கிறது என்றால் என்ன பொருள்? ப்ரஹ்மத்தை விட்டுவிட்டு உலகத்திற்குத் தனியானதொரு இருப்பு இருக்கிறது என்பதுதான் தவறு என்று அதன் பொருள்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை என்பது பொருள்.
அ-வ்யக்த,(indistinct), வ்யக்த (distinct) இவ்விரண்டும் ஸமஸ்க்ருத சொற்கள். .
“அவ்யக்த” என்பது தோற்றத்திற்கு அப்பாற்பட்டது. அது இத்தேகத்தினுள் குடிகொண்டுள்ள உயிர் அல்லது ஆத்மஸ்வரூபமாகும்.
“வ்யக்த” என்பது தோற்றத்திற்கு உட்பட்டது. அதுவே இவ்வுடல் என்பதாகும்.
இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் “யாம்” என்னும் சொல் அவ்யக்த, வ்யக்த இவ்விரண்டும் இரண்டறகலந்த ஒரு பன்மைச்சொல்லாகும். இத்தகைய தகுதியில் யாம் தம் மெய்யை காண்கின், அவ்வாறு கண்டவற்றுள் வாய்மை என்னும் ஸத்தியத்தை தவிர வேறு எதுவுமே தோன்றாது, என்னும் பொருள்பட நமக்கு எடுத்துரைக்கிறார். இங்கு இவர் சொல்லும் வாய்மை என்பதே பிரஹ்மமாம்.
நமது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் என்ன சொல்கிறது என்று காணுவோம்.
“மித்யாஜகத் அதிஷ்டானா” 735 ஆவது நாமா. அதாவது மித்யா ரூபமான இந்த பிரபஞ்சத்துக்குள் அதிஷ்டானமாக இருப்பவள் அம்பாள். ஒரு ஸ்வாமிகளின் அதிஷ்டானம் என்றால் அவரின் பூதஉடலை உள்ளே வைத்திருக்கிறார்கள் என்பதுதானே! எப்படி அந்த அதிஷ்டானத்தை ஸ்வாமிகள் என்று வணங்குகிறோமோ அதுபோல்தானே இந்த ஜகத்தையும் அம்பாளாகவே – ப்ரஹ்மமாகவே காண்பது.
உங்களுக்கு தெரியும் “கல்லை கண்டால் நாயைக்காணோம். நாயைக்கண்டால் கல்லைக்காணோம்” என்று ஒரு பழமொழி. தெரு நாயை அடிக்கன்னு நாம நினைக்கிறோம். இல்லை. இது வேதாந்த பழமொழி. சிற்பி செதுக்கிய ஒரு கல்லில் மிகவும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்கும் நாய் ஒன்றைப்பார்த்துவிட்டு அது நாய்தான் என்று நினைப்பது தவறுதானே? அது நாய் என்றே நினைத்துக்கொண்டு இருந்தால் அந்தக் கல் தெரியாதல்லவா? அதேபோல்தான் இதுவும். ஒரு விளக்கம் கொடுப்பதற்காக சொல்லப்பட்ட உவமைதானே தவிர, இது முழு உண்மையையும் தரவில்லை. ஏனென்றால் உலகியற்படி கல் என்றும் நாய் என்றும் இரண்டு பொருட்கள் உள்ளன. அதிஷ்டானத்திலும் இரு வேறு தன்மைதான். ஆனால் இதைப்போலவே இங்கே திருமூலர் ஒரு பாடல் சொல்கிறார்..

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே!

இந்த பாடலுக்கு நம் தெய்வத்தின் குரல் விளக்கம் இதோ அப்படியே:

“ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீக்ஷிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மரயானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது. மர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, “அப்பா! யானை கிட்டப் போகாதே அது முட்டும்” என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், “இது மரப்பொம்மைதான்; முட்டாது” என்று சொல்லிச் ஸமாதானம் செய்து அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான். குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.
மரத்தை மறைத்தது மாமத யானை,
மரத்தில் மறைந்தது மாமத யானை
திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே!
யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர். பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் ப்ரஹ்மமயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.
இப்போது எனது விளக்கத்தைவிட பெரியவா சொன்னது உங்களுக்கு நன்னா புரிந்திருக்கும். எல்லாமே இங்கு ப்ரஹ்மம் தான். உலகியல் பழமொழி, திருமந்திர விளக்கம் என விரிவாக சிந்தித்தோம்.
மித்யாஜகத்அதிஷ்டானனாவிலும் திருமந்திரத்திலும் சொல்லியிருப்பது ஒன்றே என்பதுதான் உண்மை. ஆனால் உலகம்-பிரம்மம் இவைகளில் இருப்பது ப்ரஹ்மம் ஒன்றே; காணப்படுவதாகத் தோற்றம் அளிப்பது உலகம். ஒரு டிவி சீரியலில் நாம் கவனமாகப் ஒன்றியிருக்கும்போது அந்தக் காக்ஷியை உண்மை என நம்புவது போலத்தான் இவ்வுலகக் காக்ஷிகளும் உள்ளன.
முன்பு சொல்லப்பட்ட ஸ்தூல பரிமாணங்கள் இல்லாததால் நம் புலன்கள் ஐந்தாலும் ப்ரஹ்மத்தை அறியமுடியாது. அதற்கு அந்த நுண்ணிய பரிமாணங்களும் இல்லாததால் அதை மனம்-புத்தி கொண்டும் அறிய முடியாது. அதனால் இருக்கும் ப்ரஹ்மத்தை அறிவதற்கு அது எப்படி இருக்கிறதோ அப்படியிருந்து மட்டுமே அறிய முடியும். இவ்வாறு அறிவதற்கு முயலும்போது, அதற்கு வருகின்ற தடைகளை நமது கூரியமதியால் உணர்ந்து அவைகள் ஒவ்வொன்றும் கிளம்பியதுமே அவைகளை விலக்கவிடவேண்டும். அதாவது இருப்பது நான், இடையில் வந்திருப்பது எண்ணங்களும், அதைத் தொடர்ந்து வரும் செயல்களுமே; அவை நானல்ல என்று ஒதுக்கப்பட வேண்டும். அப்படிப் பழகப் பழகத் தடைகள் குறைந்தும், வலுவிழந்தும் செல்லச்செல்ல, நமது இருப்பாகிய நிலை வலுவடையும். அதை நாம் இயல்பாக அடையவேண்டும். ஆக ஆன்மவிசாரம் என்பது ஸதாஸர்வகாலமும் மிகுந்த விழிப்புடன் இருந்து, இறுதியில் தன்னை முற்றிலுமாக உணர்வதுதான்.
நாளை தொடருவோம்.

ஆத்மபோதம் – 44 *இதுவும் ப்ரஹ்மமே*

இன்றைய ஸ்லோகம் நேரே வேத உபநிஷதத்திலிருந்தே வருகிறது.

யத்பாஸா பாச்யதேர்காதி பாஸ்யைர்யத்து ந பாஸ்யதே |
யேன ஸர்வமிதம் பாதி தத் ப்ரஹ்மோத் யவதாரயேத் ||

எதன் ஒளியினால் ஒளிருமே இரவி யாதி
எதனை அவை ஒளிர்க்க வேலாது – எதனாலே
இந்த உலகெல்லாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி

எது தரும் ஒளியால் கதிரவன் முதற்கொண்டு அனைத்தும் உலகில் பிரகாசமாக இருக்கின்றனவோ, எதனை அவைகள் எதுவும் ஒளிரச் செய்ய முடியாதோ, எதன் ஒளியால் இந்த உலகமெல்லாம் பிரகாசமாய் இருக்கிறதோ, அந்தப் பொருளே ப்ரஹ்மம் என்று அறியவேணும்.

இதன் விரிபொருள்

நாம் காணும் வெளிச்சம் என்று தொடங்கி நம்மைக் காண வைக்கும் ஒளியைப் பற்றிய மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய இந்த ஸ்லோகத்தை நாம் நன்கு புரிந்துகொள்ள முயற்சிக்கவேணும். உலகத்தை நாம் காண்பது ஏதேனும் ஒரு ஒளியைக்கொண்டே நடக்கிறது. பகல் நேரம் என்றால் அது சூரிய ஒளியாகவும், இரவு நேரம் என்றால் சந்திரன், நக்ஷத்திரம் மற்றும் ஒரு விளக்கின் துணை கொண்டோதான் நாம் எதனையும் பார்க்கிறோம். நமக்குப் பார்ப்பதற்குக் கண் இருந்து, நமது அந்தக்கரணங்களும் நம்முடன் ஒத்துழைப்பதனால் ஒன்றை நாம் காண முடிகிறது என்றாலும், ஒளி இல்லையேல் நம்மால் எதையும் பார்த்து அறிய முடியாது. இந்தத் தத்துவத்தைத்தான் *முண்டககோபநிஷத்* உண்மையை நமக்கு நினைவூட்டுகின்றது.

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
ந இமா வித்யுதோ பாந்தி குதோயம் அக்னி
தமேவ பாந்தம் அநுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் ஒளிர்வதில்லை; மின்னல் ஒளிர்வதில்லை. மற்றும் அக்னிதான் எப்படி ஒளிர முடியும்? ஒளிர்கின்ற ஆன்மாவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் ஒளியால் ஒளிர்கின்றன. (இந்த உபநிஷத் வாக்கியம் பூஜையில் கற்பூர ஆரத்தியின் அனைவரும் சொல்வது என்பது நமக்கு தெரியும்.
ஏதோ கோவிலுக்குச் சென்றோம், அங்கு கிடைத்த தரிசனத்தை பார்த்தோம், பிரசாதத்தை சாப்பிட்டோம். வீட்டுக்கு வந்தாச்சு. இப்படித்தானே தினசரி நடவடிக்கைகளில் அதையும் பத்தோடு பதினொன்றாக சேர்த்துவிடுகிறோம். கோவிலின் தத்துவார்த்த அமைப்புகளைப் பற்றியும், அங்கு வாழ்க்கைக்கு உதவும் தத்துவங்களை உணர அங்கு நடக்கும் பூஜை விஷயங்களின் அர்த்தங்களையும் நன்கு மனதில் பதித்துக்கொள்ள வேண்டும். இதேபோல்தானே நமது வீட்டிலும் நவாவரணபூஜையில் ஆரத்தியை பார்க்கிறோம். (இன்னும் அநேக விதத்தில் பூஜையில் தத்துவங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதனை தெரிந்துகொள்ள சிதானந்தஅலை படிக்கணும்.)
இந்த ஆரத்தியின் விசேஷம் என்னவென்றால்,
“நீ பார்த்துக்கொண்டிருப்பது சூரிய ஒளியில்லை, சந்திர, நக்ஷத்திர, மின்னலின் ஒளியுமில்லை. நீ பார்ப்பது ஒரு அக்னித் துண்டத்தின் ஒளிதான். அது தானாகவே ஒளிர்கின்றது என்று நீ நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் உண்மையில்லை. பார்த்துக்கொண்டிருக்கும் நீ வெறும் உடலா? நீ இருப்பதாக நினைக்கும் இந்த உலகம் உண்மையா? தேகம் உணர்வு இல்லாது நீ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எங்கே போச்சு இந்த உலகம்? அதனால் உன் தேகம் இல்லாது உன் உலகமும் இல்லை. உனக்கு தேகம் உணர்வு வரும்போது, நீ வெறும் ஸ்தூலமாகிய தேகம் மட்டுமேயா? அப்போது ஸூக்ஷ்மமான மனம், புத்தி, மற்றும் அவைகளிலும் அதிஸூக்ஷமமான நான் எனும் எண்ணமாகிய அஹங்காரம் இவைகள் இல்லையா? ஆக அவை இல்லாமல் தேகம் எங்கே இருக்கிறது? அப்போது அந்த நான் என்னும் அதிஸூக்ஷமமான எண்ணம் வருவதற்கு முன்பேயே, நீ உன்னை நான் என்று உணர்வது இல்லையா? அந்த உணர்வே *ப்ரஹ்மம்* ‘அதுவே நீ’ – நீ அதுவாக இருப்பதாலேயே எதனையும் காண முடிகிறது. (தத்வமஸி) அந்த உனது உள்ளொளியை வேறெதுவும் ஒளிர்விக்க முடியாது”
என்ற இந்த உண்மைகளை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. ஆரத்தியைப் பார்க்கும் நம்மில் எத்தனை பேர் இந்தக் கருத்தை உணர்கின்றோம்? இந்த ஸத்-சித்-ஆனந்தமய ஸத்தியத்தை விடுத்து, அதனை நமக்குக் காட்ட வந்துள்ள மாயையாகிய நாம-ரூபத்தில் அல்லவா மயங்கி நின்று விடுகிறோம்!
இதையேதான் பகவான்ரமணர் கூறுவார்….

காணும் தனை விட்டுத் தான் கடவுளைக் காணல்,
காணும் மனோமயமாம் காக்ஷி,
தனைக் காணும் அவன்தான் கடவுள் கண்டானாம்

—- என்று.
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இதைத்தான் சொல்வது.
எப்போதுமே நாம் நமது இருப்பை விடுத்து இல்லாததில் மயங்குவதாலே தான், இந்த ஸத்தியத்தை நமக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்றே நமது ஆன்றோர்கள் கோவில்கள், குளங்கள், தீர்த்தயாத்திரை, மூர்த்திதரிசனம் என்று பலவற்றையும் உருவாக்கி, போற்றி, வளர்த்து வழிகாட்டிச் சென்றிருக்கின்றனர். இவைகளின் உண்மையைச் சரிவரப் புரிந்துகொள்ளாது, கோவில்களை வைத்துக்கொண்டு இன்று போல் அறமில்லாச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை;
சூரியன் உலகையே ஒளிர்விக்கலாம்; ஆனால் அது என்னை ஒளிர்விப்பதில்லை; இதற்குமாறாக எனது ஆன்மஒளியால் சூரியனின் ஒளியே தெரிகிறது என்பதையே இந்த ஸ்லோகத்தால் சங்கரர் புரிவிக்கிறார்கள்.
திருமூலரும் இதையே சொல்கிறார்.

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக் கரந்து
துளங்கு ஒளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கு ஒளி ஊன் இடை நின்று உயிர்க்கின்ற
வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே.

இதற்கு அர்த்தம் பிறகு சொல்லுகிறேன்.

ஆன்மபோதம் – 45 *தப்தபிண்டம்*

அன்று சொன்ன திருமூலர் திருமந்த்ரத்துக்கு பொருள் வேறு சமயம் பார்க்கலாம். இப்போது இன்றைய நிலவரத்துக்கு தக்கவாறு சங்கரர் தொடருகிறார் பாருங்கள்.

ஸ்வயமந்தர்பஹிர் வ்யாப்ய பாஸயன்னாகிலம் ஜகத் |
ப்ரம்ம பிரகாசதே வஹ்நிப்ரதப்தாய ஸபிண்டவத் ||

ஒளிர்த்து உலகமெல்லாம் தான் உள்வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் – ஒளிரும்
நெருப்பினில் காய்ந்து அங்கி நேர் ஒளிரும் அந்த
இருப்புண்டையைப் போலவே

நன்கு காய்ந்து எரியும் அக்னியில் இடப்பட்டுள்ள ஓர் இரும்புக் துண்டு, அக்னியைப் போலவே பிரகாசிக்கும். அவ்வாறு ஒளி விடும் துண்டைப் போலவே உலகில் உள்ள அனைத்தையும் ப்ரஹ்மம் பிரகாசிக்கச் செய்கிறது, அவை அனைத்தின் உள்ளும், புறமும் வியாபித்துத் தானும் ஒளிர்விடுகிறது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளவேணும்.

இதன் விரிபொருள்

முந்தைய ஸ்லோகத்தில் நாம் பார்த்த கதிரவன், சந்திரன் முதலானவைகளினின்று புறப்படும் கிரணங்கள் எதன் மேல் விழுந்து தொடர்பு கொள்கின்றனவோ அவைகளை மட்டுமே பிரகாசிக்கவைக்கின்றன. அதைப் போல ப்ரஹ்மமும் தன்னுடன் தொடர்பு கொண்டவற்றை மட்டும்தானே பிரகாசிக்க வைக்கும்? எப்படி எல்லாவற்றையும் அது ஒளிர்விக்கும்? என்று வினாவுக்குத்தான் இந்த ஸ்லோகம் மூலம் எளிதில் விளங்கக்கூடிய ஓர் உதாரணம் மூலம் பதில் வருகிறது.
கொழுந்து விட்டு எரிகின்ற அக்னிப்பிழம்பில் போடப்பட்டுள்ள ஓர் இரும்புக் துண்டு. அந்தக் துண்டுக்குச் சாதாரணமாக ஓர் உருவம் உண்டு; கருமையான நிறமும் உண்டு. அக்னிக்கோ உருவம் கிடையாது; உஷ்ணமும், நிறமும் உண்டு. அக்னியில் இடப்பட்ட துண்டு சிவப்பாக நிறம் எடுத்துக்கொண்டு, தொடவும் முடியாதபடி தகிக்கிறது. அதனால் அந்த இரும்பை அக்னி என்றா சொல்லமுடியும்? ஆனாலும் நாம் பேசும்போது இரும்புசுடுகிறது என்கிறோம். அதற்குச் சுடும் தன்மை அக்னியால் வந்ததுதானே? சுடுகிறது என்பதால் அக்னி உருண்டை வடிவம் கொண்டுவிட்டது என்று சொல்லமுடியுமா? அந்த வடிவம் இரும்பினால் வந்ததுதானே? அதாவது அக்னியின் உஷ்ணம், மற்றும் நிறம் ஆகிய தன்மைகள் இரும்புக் துண்டின் உள்ளும், புறமும் படர்ந்து, துண்டின் உருவத்தையும் கொண்டுள்ளது. அதேபோல, ப்ரஹ்மமும் அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் வியாபித்துத் தனது ஸத்-சித்-ஆனந்தம் முதலான தன்மைகளை அந்தப் பொருட்களின் மேல் ஏற்றிக் காட்டுகிறது. இதுபோல் நமது அன்றாட வாழ்க்கையிலும் நிறைய உண்டு. சாதம் சுடுகிறது. பாத்திரம் சுடுகிறது. என்றெல்லாம் சொல்கிறோமே! இதுபோல்தான்.
ஆக உலகியல் பொருட்கள் அனைத்திற்குமே இருப்பு என்ற நிலையோ-ஸத், தாம் இருக்கிறோம் என்ற அறிவோ-சித், தனது இருப்பையே அறிவதால் உள்ள ஆனந்தமோ தன்னளவில் எதுவுமே கிடையாது. அவையெல்லாமே பார்ப்பவனின் தன்மைகளால் வியாபிக்கப்பட்டு, அத்தன்மைகள் அந்தப் பொருட்களுக்கு இருப்பன போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே ஒரு பொருளின் உள்ளும், அதைக் கடந்தும் பரவியிருக்கும் அந்த உண்மையைக் “கடவுள்” என்று உருவகப்படுத்தி நாம் தொழுகிறோம். அதன் பொருளே சகல ஜீவராசிகளும் “அதுவே” என்பதும், உலகியலில் அதை அறிந்தோர், அறியாதோர், உணர்ந்தோர், உணராதோர் என்ற பாகுபாடுகள் இருக்கலாமே தவிர, வேறெந்தப் பாகுபாடுகளும் இருக்கின்றன என்பது உண்மைக்குப் மாறான செய்தியே!
இன்று பாருங்கள். எனக்கு ஜுரம் வந்தது. உடம்பு சூடுகிறது என்று மருந்து சாப்பிட்டேன். உண்மையில் உடம்பா சுட்டது? இல்லை. எப்போதுமே தேகத்தில் சூடு உண்டு. பஞ்சபூதங்களால் ஆனதால் எப்போதுமே சரியா அளவில் அக்னியின் கலப்பு இருக்கும். ஆவரேஜ் எத்தனை இருக்கணுமோ அதைவிட உள்ளே உள்ள அக்னியானது அதிகமாவதால் உடம்பு சுட்டது. அப்போது ஜுரம் என்கிறோம்.
இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்துகொள் என்று சொல்லி, ப்ரஹ்மத்தின் ஸ்வரூப லக்ஷணங்களை முன்பே தொடங்கி இந்த ஸ்லோகம் வரை விவரமாக விளக்கப்பட்டுள்ளது.
நாளை பார்க்கலாம்.

ஆன்மபோதம் – 46 *கேள்விவிசாரம்*

உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன். ஸ்ரீஆவுடையம்மாள் என்ற ஒரு ஞானி பற்றி. அவளைப் பற்றி முகநூலில் ஒரு பதிவுகூட எழுதியுள்ளேன். அவள் பாடல்கள் அத்தனையும் வேதாந்த – ஆத்ம சம்பந்தமானவை. அவள் பாடல் ஒன்றில் ஒரு கேள்வியை வைத்திருக்கிறாள்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக்கரணம் ஜடம், ஆத்மாவோ நிர்விகாரி, விஸ்வன், தைஸஜன், பிராக்ஞன் என்கிற சிதாபாஸனோ மாயை இதில் அனுபவமான சுகதுக்கம் யாருக்கு? இதுதான் கேள்வி.
கேள்வியை புரிந்துகொள்ள நிறைய வேதாந்தம் படிக்கணும், அதாவது ஸ்ரீசங்கரரின் விவேகசூடாமணி, ஸ்ரீவாசுதேவபிரஹ்மத்தின் வாசுதேவமனனம் என்ற நூல்கள் முதல்படி. நாம் அதையெல்லாம் முதலில் உங்களுக்கு படித்து பாடம் சொல்லாது நேராக (Direct) ஆக முக்கால் தூரத்திலிருந்து தொடங்கி விட்டேன். ஏனென்றால் காலம் நெருங்கிவிட்டது. சென்றடைய வேண்டிய தூரம் மிக அருகில் வந்து விட்டதாக அறிகிறேன். எனவே சொல்லிவிட்டால் என்றாவது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற உறுதியில் பாடம் நடக்கிறது. எனக்கும்- சங்கை ஊதி வைப்போம், விடியும்போது விடியட்டும் என்பார்களே அதுபோல் பல வேலைகளுக்கு மத்தியில் பாடம் நடத்தினார். ஆனால் அன்று புரியத்தான் இல்லை. ஆனால் அவர் கருணாமூர்த்தியாச்சே! ஓரளவு புரியவைத்துவிட்டார். உங்களுக்கும் அப்படித்தான். படியுங்கள். சிந்தியுங்கள். நிச்சயம் ஒருநாள் ஒளி கிடைக்கும். சரி.
இடையில் வந்த கேள்வியையும் இடையிலேயே சிந்தித்துவிடுவோம் என்றுதான் இன்றே இப்போதே எழுதிவிட்டேன்.
இந்த கேள்வி பல ஆண்டுகளாக மனதில் விடை காணமுடியாத நிலையில் மனதில் ஓடினது. சுந்தரும், நானும் இதுபற்றி பலமுறை விசாரித்துள்ளோம். இன்று அதிகாலை ஓரளவுதான் பதில் சமாதானம் கிடைத்தது. குருவருளே! ஆனால் எழுதவோ, பேசவோ, விசாரம் செய்யவோ தான் உபயோகம். ஆத்மானுபவம் வரணுமே! விரைவில் வரவேண்டுவோம்.
இதனை நாம் இங்கு சற்று சிந்திப்போமா!
அவஸ்தையை அனுபவிப்பனிடம் தான் சாக்ஷித்துவம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது, அவஸ்தாசாக்ஷித்துவம் அந்நியனிடம் இருப்பது போல காணப்படுகிறது! இந்த அவஸ்தையை உடையவன் யார்? அந்தக்கரணத்தில் பிரதிபிம்பித்த சிதாபாஸனே! அவன் தான் (மாயா) பொய்யானவன். அவனே ஜீவன் எனப்படுகிறான். ஜீவனோ விகாரமுடையவன். ஆத்மாவோ நிர்விகாரி. எனவே ஆத்மாவுக்கே இந்த சாக்ஷித்துவம் பொருந்தும். சரியா?
அந்தக்கரண பிரதிபிம்பத்தினால்தான் ஆத்மாநிர்விகாரி என்பது தெரியும். இந்த அந்தக்கரணமும் அதன் பிரதிபிம்பமான ஜீவனும் ஆத்மாவை அறியாது. ஏனெனில் அறியப்படுவதாகவும், த்ருச்யம் என பார்க்கப்படுவதாகவும் உள்ள ஆத்மா த்ருக்ரூபன். அதாவது பார்க்கின்ற ஸூபாவமுடையவன்.
காணப்படுகின்ற குடம் காண்பவனை அறியாதே! ஆனால் காண்பவனோ ஸ்வயம்பிரகாசமுடையவன் ஆதலால் தன்னைத் தான் அறிந்து கொள்ள முடிகிறது. குடத்தையும் அறியமுடிக்கிறது. ஆகவே காணப்படுகின்ற அஹங்காரமும், அதன் அவஸ்தை, மற்றும் வியாபாரங்கள் அத்தனையும் ஆத்மாவைத் தொடாது.
இப்படி ஆத்மாவை எவன் ஒருவன் அவஸ்தாத்ரயசாக்ஷியாகக் காண்கிறானோ அவனே *ஜீவன்முக்தன்* இப்படியாக வேறு ஒரு கோணத்தில் இந்த ஜீவமுக்த லக்ஷணத்தை அறிகிறோம். இதனை அங்கேயே சொல்லி இருக்கணும். இன்றுதானே அவர் சொல்லவைக்கிறார். ஏனெனில் சங்கரரின் இன்று அடுத்த ஸ்லோகம் இது சம்பந்தமாக பேசுகிறது. என்ன பொருத்தம் பாருங்கள்.

ஜகத்விலக்ஷணம் ப்ரஹ்ம ப்ரஹ்மணோன் யன்ன கிஞ்சன |
ப்ரஹ்மான்யத் பாதி சேன்மித்யா யதா மருமரிசிகா ||

பிரமம் உலகில் பிறிதாகும் அந்தப்
பிரமத்தணுவில் பிறிதாய்ப் – பிரமத்திற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் அது மித்தை
உன்னுக கானல் நீர் ஒத்து

அறியும் பிரஹ்மம் அறியப்படும் உலகத்திற்கு வேறான இயல்பு உடையது. பிரஹ்மத்திற்கு அப்பாற்பட்டு வேறெந்தப் பொருளும் இல்லை. பிரஹ்மத்திற்கு அன்னியமாக வேறெதுவும் தோன்றினால் – அது உண்மையில் இல்லாததாயினும் காட்சிக்குத் தோன்றும் கானல் நீர் போன்றதொரு பொய்த்தோற்றமே!

இதன் விரிபொருள்

எங்கும் எப்போதும் இருப்பது பிரஹ்மம் என்றால், காணப்படும் உலகப் பொருட்களைக்கொண்டே பிரஹ்மத்தை அறிந்து கொள்ளக்கூடாதா என்ற கேள்விக்குப் பதில் அளிப்பது போல இந்தச் செய்யுள் உள்ளது.
அனைத்தும் பிரஹ்மமே என்றாலும், உலகின் இயல்பும், பிரஹ்மத்தின் இயல்பும் வெவ்வேறானது. உலகம் நிலையில்லாதது. வந்துபோகும் இயல்புடையது. அதனால்தான் நமது விழிப்பு நிலையில் காணப்படும் உலகம் ஆழ்உறக்கத்தில் அறியப்படுவதில்லை. நமது கனவிலோ நாம் வேறோர் உலகத்தையே உருவாக்கிக் கொள்கிறோம். உலகின் நிலை இப்படி இருக்கும்போது பிரஹ்மமோ எப்போதும் உள்ளது. நிலையானது.
உலகம் ஓர் அறிவற்ற ஜடம், பிரஹ்மமோ அறிவுமயமானது. உலகம் துன்ப மயமானது. பிரஹ்மமோ ஆனந்தமயமானது. அதனால் உலகம் பிரஹ்மம் அல்ல. நாம் முன்பு கண்ட தீயில் இட்ட ஓர் இரும்புக் துண்டு தீயின் தன்மையை எடுத்துக்கொள்வது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் பிரஹ்மம் வியாபித்து இருப்பதால், அவைகள் பிரஹ்மத்தின் தன்மைகளை எடுத்துக்கொள்கின்றன. இப்படியாக பிரஹ்மத்திற்கு அப்பாற்பட்டு எந்தப் பொருளும் இல்லை என்பதால், பிரஹ்மத்தை விடுத்து உலகத்தின் ஸத்தியத்தை அறியமுடியாது. அதனால் உலகில் உள்ளவைகளைக் கொண்டு பிரஹ்மத்தை அறியமுடியாது என்றாகிறது.
மேலும் பிரஹ்மத்திற்கு அன்னியமாக உலகம் இருப்பதாகத் தோன்றினால், அது இருப்பது போலத்தோன்றும். கானல்நீர் என்கிறோமே அதுபோல ஒரு பொய்க்காக்ஷி தான். உண்மையை அறியாதவனுக்கு இல்லாத கானல்நீர் இருப்பதாகத்தான் தோன்றும். உண்மையை அறிய முயற்சிப்பவனுக்கே அது மாயை என விளங்கும்.

ஆத்மபோதம் – 47 *ஞானக்கண்*

நமது இந்த ஆத்மபோதபாடம் வருகிற 50 பாகத்துடன் நிறைவுறும் என எண்ணுகிறேன். தொடர்ந்து வேறு பாடம் படிப்போம். இதில் நமக்கு உலகையும் உள்ளத்தையும் காண ஞானசக்ஷு என்கிற ஞானக்கண் கொடுக்கிறார். அதைக்கொண்டு சிந்தியுங்கள். நாம் வேண்டுவது கிடைக்கும். காண்பது அத்தனையும் ப்ரஹ்மமாக காணும் தன்மை ஸித்திக்கும். இது குரு ஸாசனம்.

ஸர்வகம் ஸச்சிதாத்மானம் ஞானசக்ஷுர்நிரீக்ஷதே |
அக்ஞான சக்ஷுர்நேக்ஷேத பாஸ்வந்தம் பானுமந்தவத் ||

சருவத்தும் சார்ந்த தாம் சச்சிதானந்தப்
பிரமத்தை ஞானக்கண் பெற்றான் – தரிசிப்பான்
ஞானக்கண்ணில்லாதான் நண்ணானே காட்சி ஒளிர்
பானுவை அந்தன் போலப் பார்

எங்கும் நிறைந்து வியாபித்துள்ள ஸத்-சித்-ஆனந்தமே உருவாயுள்ள ப்ரஹ்மத்தை ஞானக் கண் கொண்டவனே தரிசிக்க முடியும். அவ்வாறு ஞானக்கண் இல்லாதவன், அதி பிரகாசத்துடன் கூடிய சூரியனை ஒரு குருடன் பார்க்க முடியாதது போல, அதை அணுகவே முடியாது.

இதன் விரிபொருள்

ப்ரஹ்மம் எங்கும், என்றும் இருந்து, எதிலும் வியாபித்துள்ளது என்றால் அது இங்கு, இப்போது தெரிய வேண்டுமே என்று கேட்பவர்களுக்கு இங்கே சங்கரர் பதில் சொல்கிறார். ஆதி காலத்தில் நாம் கண்ணால் பார்ப்பதுவும், காதால் கேட்பதுவும் வெவ்வேறு வழிமுறைகளால் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவை மட்டுமல்லாது வேறு பல வகையான தகவல்களும், வெவ்வேறு அலைக் கற்றைகளால் வந்தடைகின்றன என்பதை வளர்ந்து வந்த விஞ்ஞானம் நமக்குக் கற்பித்தது. எந்த அலை வரிசையில் ஒன்று வருகிறதோ அதை அறிந்துகொள்ள அதற்கேற்ற கருவி நம்மிடம் இருக்க வேண்டும். ஒளியைப் பார்ப்பதற்கு நமக்குக் கண்ணும், ஒலியைக் கேட்பதற்கு நமக்குக் காதும் என்று இருவேறு கருவிகள் இருக்கின்றன. அதேபோல நாம் கேட்கும் ரேடியோ மூலம் வரும் பேச்சுக்களும், பாட்டுக்களும் வெவ்வேறு அலை வரிசைகளில் வருகின்றன. (அதை Ether என்றோம்.) அவ்வாறு வரும் ரேடியோ விவரங்களை நாம் கேட்க நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள ஒரு ரேடியோகருவி தேவைப்படுகிறது. இப்போது காக்ஷிகளை பார்ப்பதற்கும் கருவி – டிவி வந்துவிட்டது. இதைப் போல ப்ரஹ்மத்தை உணர்வதற்கும் அதற்கு உரிய சாதனம் நமக்குத் தேவைப்படுகிறது.
நமது ஊனக்கண்ணால் நமக்கு முன்பு உள்ளதைத்தான் பார்க்க முடியும். அப்படியும் கூட நம் முகத்தையே நாம் பார்க்க முடியாது; அதன் அமைப்பு அப்படி. ஞானம் எனப்படுவது நமது *உள்நிலையைப்பற்றியஅறிவு*. அதை உணர்வதற்கு அதற்கேற்ற கருவியான *ஞானக்கண்* வேண்டும். அந்தக் கண்ணைப் பெறுவதற்குத்தான் முன்பே சொல்லியிருக்கும் சிரவணம், மனனம், நிதித்யாஸனம் போன்ற வழிமுறைகள் தேவை. கதிரவன் என்னதான் பிரகாசமாக இருந்தாலும், ஊனக்கண் இல்லாதவன் அதைப் பார்க்க முடியாதே! அதே போல ஞானசூரியனான *ப்ரஹ்மம்* என்னதான் பிரகாசமாக இருந்து, ஸர்வவ்யாபியாக இருந்தும் அதை உணரக்கூடிய ஞானக்கண் இல்லாதவன் எங்கும், எப்போதும் நிறைந்துள்ள ஸத்-சித்-ஆனந்தம் என்ற தன்மைகளைக் கொண்ட ப்ரஹ்மத்தை அறிய முடியாது.
இங்கு கண் என்று சொன்னபோது மற்ற இந்திரியங்களையும் சொன்னதாகவே ஆகும். அதனால் உலகில் உள்ளவைகளை நமக்கு அறிவிக்கும் புலன்கள் எதையும் கொண்டு நம்மால் ப்ரஹ்மத்தை உணர முடியாது என்பதே இங்கு சொல்ல வந்த கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள வேணும்.
தொடர்ந்து நாளை பார்ப்போம்….

ஆத்மபோதம் – 48 *ஞானஎரி*

ஆடி பதினெட்டாம் பெருக்கில் பொங்கதொடங்கிய நமது ஆத்மபோதம் என்கிற வெள்ளம் புரட்டாசி நவராத்திரியில் – கலைகளுக்கு அதிதேவதையான ஸ்ரீஸரஸ்வதிதேவியின் பூஜைதினத்தில் ஸத்குருவின் அவ்யாஜகருணையால் நிறைவெய்துமோ என நினைக்கிறேன். எல்லாம் அவர் கிருபை.
நேற்று ஞானக்கண் தேவையானால் சிரவணம், மனனம், நிதித்யாசனம் என்ற ஸாதனங்கள் தேவை என பார்த்தோம். அதையே இந்த ஸ்லோகத்திலும் வலியுறுத்துகிறார். அதனால் தொடர்ந்து நம்மை அவர் தான் சொல்லவந்த ஆத்மபோத நிலையை இங்கு நிலை நிறுத்துகிறார்.

ச்ரவணாதிபிருத்தீப்த ஞானாக்னி பரிதாபித: |
ஜீவ: ஸர்வமலான்முக்த: ச்வர்ணவத்யோததே ஸ்வயம் ||

சிரணவம் ஆதிகளால் தேசுறு ஞான
எரியினில் காய்ச்சி எடுக்கச் – சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில் பொன்போல் நிர்
மலனாகித் தான் ஒளிர்வான்

கேட்டல், சிந்தித்தல், தெளிதல் போன்ற வழிகளில் பிரகாசமடைந்த மனதை கொழுந்து விட்டெரியும் ஞான அக்னியில் புடம் போட்டு எல்லா விதமாசுகளும் நீக்கப்பட்ட ஜீவன், நெருப்பினில் புடம் போட்டு மாற்று ஏறிய தங்கத்தைப் போல ஜொலிக்கின்றான்.

இதன் விரிபொருள்

சிரவணம் என்ற கேட்டல், மனனம் அதைப்பற்றி சிந்தித்தல், நிதித்யாசனம் என்கிற கேட்டுத்தெளிதலும், அதன்படி பயிற்சிகள் மேற்கொள்ளுதலுமான வழிகளைப் பின்பற்றியும், கேட்டறிந்த விவரங்களால் மனத்தெளிவை ஸாதகன் அடையவேண்டும். அப்போது மனமும் மனத்தால் உருவாகும் எண்ணங்களும் இருக்கும். அவை ராஜஸ அல்லது ஸாத்விக குணங்களோடு இருக்கும். அந்த அளவில் இயக்கங்களும் நம்மிடம் தொடரும்.
அப்போது தனக்கு நேரும் பல வகை அனுபவங்களையும் எடை போட்டு, அவை அனைத்தையும் தத்துவரீதியில் “அவை யாருக்கு வருகிறன்றன? அவை ஏன் எனது விழிப்பு நிலையில் மட்டும் காணப்படுகின்றன? அவை காணப்படாத ஆழ்உறக்கத்திலும் நான் இல்லையா? அப்படி இருப்பதால்தானே இப்போதும் நான் இருக்கிறேன்?” என்பன போன்ற கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டு தனது ஞானயக்ஞத்தைத் தொடங்கவேண்டும். அவ்வாறு பல காலம் நீண்டு தொடரும் யக்ஞத்தின் ஞானாக்னியில் நம்மை மறைக்கும் திரைகள் ஒவ்வொன்றாக விலக, நமது உண்மை நிலையை மறைத்த மாசுகள் அனைத்தும் நீங்கும். அந்த நிலையை அடைந்தவன் எப்படி இருப்பான்? தங்கத்தை நெருப்பில் புடம் போட்டு, அதில் உள்ள மாசு-மறுக்கள் என்ற மலங்கள் நீக்கப்பட்டு சுத்தமான தங்கமாக சுடர் விடுவதைப்போல் இவன் ஒளிர்வான் என்கிறார்.
தங்கத்திற்குத் தானாகவே ஒளி வீசும் தன்மை உண்டுதான். இருந்தாலும் மேலும் அதனுடன் மற்ற மாசுக்கள் சேர்வதால் அதன் இயற்கை ஒளி எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை. இருந்தாலும் அதனை புடம் போட்டால் தானே மாசு, மறுக்கள் நீங்கி தங்கம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பும். அதே போல ஜீவனது எந்தவிதமான ஆசை, கோபதாபங்கள் போன்ற மலங்களால் ஆன்மா பாதிக்கப்படுவதில்லை. ஜீவனது மலங்கள் நீங்க நீங்க ஆன்மாவின் வீச்சு அதிகமாகி அதன் இயல்பான ஒளிநிலைக்குத் திரும்புகிறதே தவிர, எந்தப் பயிற்சிகளாலும் ஆன்மா புதிதாக எந்த நிலையையும் அடைவதில்லை. விசாரம், பயிற்சிகள், ஸாதனைகள் அனைத்துமே ஜீவனின் கர்மவினைப் பயனாய் அடையப்பெற்ற மலங்களை அகற்றுவதற்கு மட்டுமேதான். மேகங்கள் விலகிய சூரியன் ஒளிர்வது போல, சூழ்ந்திருந்த மலங்கள் விலகிய ஆன்மா பிரகாசமாக ஒளிரும். இப்படி ஒளிரும் இந்த ஞானஒளியின் தன்மை பற்றி அடுத்து சொல்கிறார். இங்கு ஸ்ரீபகவான்ரமணர் இந்த ஞானாக்னியை என்ன அழகாக *ஞானஎரி* என்று தான் தமிழில் சொல்கிறார். இப்படி ஒரு தமிழ்ஞானியை நாம் பெற்றது மட்டுமில்லை, இன்று அவர்களே நமக்கு ஆத்மபோதம் பாடம் போதிக்கும் முகமாக அமைந்துவிட்டது என்ன பாக்கியம். ஸ்ரீபகவான்ரமணரது ஆராதனா ஸ்ரீசக்ரத்தை பெற்று தன்னுடைய தங்க கையால் பிரதிஷ்டை செய்யும் பாக்கியம் பெற்ற குருநாதரை நான் அடைந்தது என் பூர்வஜன்ம பாக்கியமே!
பாக்கியங்கள் தொடரட்டும்….

ஆன்மபோதம் – 49 *உதயரவி*

ஒரு நூல் படித்தோமானால் முடிவில் அதன் ஸாரத்தில் மனம் தோய்ந்திருக்க வேணும் என்பது தத்துவம். அதுபோல் நமது மனமும் *ஆன்மபோதத்தில் தோயட்டும்* என்ற பிரார்த்தனையுடன் இன்றைய பாடத்துக்கு போவோம்.
பகவான் ரமணர் சொல்வார்கள் தனது உபதேச உந்தியார் என்ற நூலில்….

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடு தரலிலை யுந்தீபற.

இதன் பொருள் என்னவென்றால் வினைகளின் பலன் அவற்றை அனுபவிப்பதனால் நாசமடைகின்றது. ஆனால் வாஸனாரூபமான கர்ம பிரவிருத்தியானது விதைவடிவமாக நின்று ஜீவனை மீண்டும் மீண்டும் கர்மத்தையே செய்யும்படி தூண்டி, பிறவிக் கடலில் ஆழ்த்தி விடுமேயன்றி, மோக்ஷ வீட்டினை அடையச் செய்யாது. என்கிறார். எனவே நாம் இத்தனையும் படித்துவிட்டு மறுபடியும் கருவடையும் குழியில் விழக்கூடாது என்பதில் உறுதியாய் நிற்போம்.
மேலும் சங்கரபகவத் பாதாள் அவர்கள் செய்த பாடல்களிலேயே ஸாதனபஞ்சகம் தான் மிக உயர்வு என்பார்கள். அவர் மறைவுக்கு முன் பாடியது. அதில் சொல்வார்…
“இது பகவான் செய்த லோகம். ஸர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை என்ற உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாக கிரஹிக்க முடியும். கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.” என்று நமது பூஜையின் முக்கியத்தையும் சொல்லி ஞானத்தையும் புகட்டுகிறார்கள். அருட்சக்தியின் ரிதம்பராஞான தத்துவத்தை அவர்கள் கடைசீ காலத்தில் சொல்கிறார்கள் பாருங்கள். நேற்று எனது தனி பதிவும் அதுபற்றி தானே!
*ஞானரவி* புறப்பட்டால்தான் நமது அறியாமை அழியும். அதற்குதான் இந்த ஆத்மபோதம் படிக்கிறோம். இன்னும் கொஞ்சம் ஸ்லோகம் பாக்கி இருக்கே! பார்க்கலாம்.

ஹ்ருதாகாஷோதிதோ ஹ்யாத்மா போதமானுஸ்தமோபஹ்ருத் |
ஸர்வவ்யாபி ஸர்வதாரி பாதி பாஸ்யதேகிலம் ||

இதயவெளி தோன்றி இருளையழி ஞான
உதயரவி ஆன்மா ஒளிரும் – நிதமுமே
எல்லாவற்றும் பரவி எல்லாமும் தாங்கி நின்(று)
றெல்லாம் ஒளிர்விக்கும் எண்

அஞ்ஞான இருளை அழித்து ஞானோதயமாகிய ஆத்மா என்னும் கதிரவன் உதிப்பதும், மறைவதும் என்ற மாறுபாடு இல்லாது எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அது எல்லாப் பொருட்களிலும் வியாபித்து, எல்லாவற்றிற்கும் ஆதாரமாக நின்று, எல்லாவற்றையும் தனது ஒளியினால் ஒளிர்விக்கச் செய்யும் என்று எண்ணுவாயாக.

இதன் விரிபொருள்

நமது ஊனக்கண்ணைப் பொருத்தவரை நாம் காண்பனவற்றுள் கதிரவன் ஒன்றே தானே ஒளிர்வதாகவும், அதிலும் மிகப் பிரகாசமானதாகவும் இருப்பதால்தானே தானே ஒளிரும் ஆன்மாவிற்கு அதை ஒப்பிட்டுச் சொல்லப்படுகிறது. நமது உண்மை நிலையைப் பற்றி ஸத்குருமூலம் நன்கறிந்த ஒருவன் அதை உணர்ந்துகொள்ள, ஸாதாரணமாக வெளியுலகை நோக்கியுள்ள தனது பார்வையை உள்முகமாகத் திருப்பி, தியானம் செய்து அதனால் இடைவிடாது இருக்கும் உள்ளொளியை அனுபவத்தில் உணர்வதே *ஆன்மபோதம்* என்று சொல்கிறார்.
கதிரவன் உதித்ததும் வேறு எந்த முயற்சியும் இல்லாது இருள் தானே அகன்றுவிடுவது போல ஆன்மாவைப்பற்றிய ஞானம் பிறந்ததும் நம் உண்மை நிலை பற்றி நமக்கு முன்பு இருந்த அறியாமையும் தானே விலகுகிறது. ஆனால் கதிரவனோ காலத்திற்குக் கட்டுப்பட்டு காலை, மாலை என உதிப்பதும் மறைவதும் என இருக்க, அனைத்தையும் ஒளிர்விக்கும் ஆன்மாவைப் பற்றிய போதமோ எப்போது உதிக்கிறதோ அதன்பின் அதற்கு அழிவோ, மறைவோ இல்லாது எப்போதும் நின்று நிலைத்து விடுகிறது. எப்படி கதிரவனின் ஒளியில் நாம் உலகில் உள்ள அனைத்தையும் காண்கிறோமோ, அதே போல ஆன்மஒளியினாலேயே நமது அனுபவங்கள் எல்லாமே நிகழ்கின்றன. ஆன்மாவின் தன்மைகளே உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் வியாபித்து நமக்கு வெவ்வேறு அனுபவங்களைத் தருகின்றன. ஆனால் அதை அறியாத போது நாம் அவைகள் எல்லாம் அந்தந்தப் பொருட்களின் தன்மைகள் என்று தவறாக எண்ணுகிறோம். அந்த அறியாமையைப் போக்குவதே *ஆன்மபோதம்* .
அதனால் ஆன்மாவே தனது ஒளியால் அனைத்துப் பொருட்களையும் காட்டுவதோடு அல்லாமல், அனைத்திற்கும் ஆதாரமாகவும் அமைகிறது. அது இல்லாமல் அனுபவிப்பவன் இல்லை என்பதாலும், அனுபவிப்பவன் இல்லாமல் அனுபவிக்கப்படும் பொருட்கள் எதுவும் இல்லை என்பதாலும் அதுவே அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது.
நாளை சரஸ்வதி பூஜை. அவளை வேண்டி தொடருவோம்……

ஆன்மபோதம் – 50 *நான் எங்கும் நிறைந்தவன்*
(நிறைவுப் பகுதி)

“அவனருளால் அவன் தாள் வணங்கி” என்று மணிவாசகப்பெருமான் சொன்னபடி நாம் குருவருளால் குருதாள் வணங்கினோம். அதனால் பதினெட்டாம்பெருக்கு அன்று தொடங்கிய நமது ஆன்மபோதம் தொடர் பாடம் இன்று நவராத்திரி இறுதியான கலைமகளாம் ஸரஸ்வதி தேவியின் பூஜை தினத்தில் இந்த முதல் பாடங்களை நிறைவு செய்ய இருக்கிறோம். ஆடி 18 ல் தொடங்கினது அக்டோபர் 18 ல் நிறைகிறது. இதுவே நல்ல சகுனம்.
இந்த பகுதி சரியாக 50 ல் நிற்கிறது. மாத்ருகை என்கிற அம்பாள் அக்ஷரங்களில் நிறைகிறது நமக்கு ஆசி கூறவே! நாம் நினைத்தோமா? இது இன்று கலை ஞானத்தில் நிறையும் என்று.
அப்பாடா! ஆன்மபோதம் விட்டது என்று நினைக்காதீர்கள். ஆன்மபோதத்திற்குள் நம்மை திருவருள் கூட்டிவிட்டதே என்று நினையுங்கள். ஸ்ரீபகவத்பாதாள் பிரஹ்ம ஸூத்ரபாஷ்யம், உபநிஷத்பாஷ்யம், மற்றும் பகவத்கீதைக்கு உரை என்று எல்லாம் செய்தார்கள். இவை கற்றறிந்தவர்கள் படிப்பவை. பின் பிரகரணகிரந்தங்கள் என்று சிறிய பெரிய நூல்கள் வேறு செய்தார்கள். அதுவும் நம்போன்றவர்களுக்கு கடினமே! எல்லாம் எதற்கு? தன்னியறியவே! “தன்னையறிந்தால் தனக்கொரு கேடில்லை” என்பர். இவ்வாறு தன்னையறிய புறப்பட்ட நமக்கு (தன்னியறியவே தான் நமக்கு ஸ்ரீவித்யாஉபாசனையே வந்தது.) அவர்களது ஆன்மபோதம் கண்ணில் பட்டது. நமது பயணத்தை தொடங்கி விட்டோம் இனி நிற்காது என்று உறுதி கொள்வோம். அதற்கு காலமோ தேசமோ இடையூறே செய்யாது. ஏனெனில் குருவருள் நம்மை அழகாக இட்டுசெல்லும். கவலை வேண்டாம்.
இதுவரை பல ஸ்லோகங்களில் பல வழிகளில் நமக்கு ஆத்மஞானத்தை ஊட்டினார். இந்த இறுதி ஸ்லோகத்தில் என்ன சொல்கிறார் என்று காணுவோம்.

திக்தேசகாலாத்யநபேக்ஷ்ய ஸர்வகம்
சீதாதிஹ்ருன்னித்யசுகம் நிரஞ்சனம் |

ய: ஸ்வாத்ம தீர்த்த பஜதே விநிஷ்கிய:
ஸ ஸர்வவித் ஸர்வகதோம்ருதோ பவேத் ||

திக்கு இடம் காலம் முதல் தேடாமல் என்றும் எத்
திக்கும் ஆர்ந்தே குளிர்முன் தீர்ப்பதாய் – எக் களங்கும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்துள் தோய்
வுற்றவன் யார் செய்கை ஒன்று இன்றி – மற்றவன்
யாவும் அறிந்தோனாய் எங்கும் நிறைந்து ஆர் அமிர்தன்
ஆவன் எனவே அறி. (பஃரொடை வெண்பா)

திசை, தேசம், காலம் முதலியவற்றைத் தேடி அலையாமல், எப்போதும், எந்தத் திசைகளிலும் நீக்கமற நிறைந்து குளிர், வெப்பம் போன்றவைகளை நீக்க வல்லதாய், எந்தவிதக் களங்கமும் இல்லாது, எப்போதும் ஆனந்தவடிவமே கொண்ட தனது ஆத்மவடிவ புனித ஊற்றுக்குள்ளேயே மூழ்கித் தோய்ந்திருப்பவன் எவனோ, அவனே மேலும் செய்வதற்கு ஏதுமின்றி, எல்லாவற்றையும் அறிந்தவனாய், எங்கும் நிறைந்து ஒளிர்பவனாய், மரணமில்லா பெருவாழ்வு வாழ்பவனாய் ஆகிறான் என்பதை அறிந்து கொள்.

இதன் விரிபொருள்

இந்த ஸ்லோகத்துக்கு தமிழ் வெண்பாவில் பொருள் எழுதிவந்த பகவான்ரமணர் அவர்கள் இங்கு 6 அடி வெண்பா பண்ணியிருக்கிறார். இது பஃறொடை வெண்பா என்ற வகையை சேர்ந்தது இது. நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா. இந்த பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும்.
ஏன் இந்த இலக்கண வகை பற்றி இங்கே சொல்கிறேன் என்றால் இதுவரை 4 அடிகள் மட்டுமே எழுதினார். இவர்கள் பள்ளிக்கூடத்தில் தமிழ் இலக்கணம் முழுமையாக படிக்கவில்லை என்பது தெரியும். பின் எப்படி இது சாத்தியம்? தவம் காரணம். அருணாசலம் காரணம். பள்ளியில் படிக்காத பாடங்களே தவத்தினாலே கைகூடும் என்றால் நாமும் ஏன் அதனை ஏற்கக்கூடாது? முன்ஜென்ம விட்டகுறை தொட்டகுறை என்பர். அதுவும் சாத்தியமே! நிறைய நம்மிடம் சான்று உள்ளது. நாம் இப்போது அதை ஆராய, சிந்திக்க வரவில்லை.
நிறைவாக வரும் இந்த ஸ்லோகம் ஆன்மபோதம் என்ற இந்த நூலின் சாராம்சத்தையே இது கொடுக்கிறது. *ஆன்மஞானம்* பெறுவதற்கு உரியவர்கள் எவர் என்று முதல் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருந்தது போல, இந்த இறுதி ஸ்லோகத்தில் அதை அடைவது எப்படி என்றும், அதைப் பெறுவதினால் என்ன பயன் என்பது பற்றியும் சுருக்கமாகச் சொல்லுகிறார்.
நாம் நம்மை முதலில் ஸ்தூலமான தேகஅளவில் குறுக்கிக் கொள்வதால் நமது வாழும் காலம், நாமிருக்கும் திசை மற்றும் தேசம் என்ற அளவிலும் கட்டுப்படுவதாக எண்ணுகிறோம். நான் புதுடில்லி, நீங்கள் சென்னை, பெங்களூர், கும்பகோணம், அமெரிக்கா என்றெல்லாம் தேசத்தால் பிரிகிறோம். அமெரிக்காவில் இரவு என்றால் இந்தியாவில் பகல் என்று காலத்தால் பிரிகிறோம். இதை வேதாந்தம் தேச,கால,பரிச்சின்னம் என்று சொல்லும். இதெல்லாம் இல்லாமல் காலத்தால் பிரியாத, இடத்தால் பிரிவுபடாத, எப்போதும், எங்கும் என்றும் இருக்கக்கூடிய, ஒன்றைத்தேடி அலையும்போது அந்தத் தன்மைகளைக் கொண்டவனாக கடவுளை – நம் பராசக்தியை முன்னிறுத்தி சரணடைகிறோம்.
அப்போதும் நமது குறுக்கும் தன்மைகள் நம்மை விட்டகலாததால் இறைவன் இப்படி இருப்பானா அல்லது அப்படி இருப்பானா, இங்கிருப்பவனா இல்லை அங்கிருப்பவனா என்ற சந்தேகங்கள் நம்மை விடாது. அதற்காகச் சில பல உருவங்களை உண்டாக்கி வைத்துவிட்டு, அவைகளை வழிபடுவதற்கு அவைகள் இருக்கும் இடத்தை நாடிச் செல்கிறோம். அதனாலேயே மூர்த்தி, தலம், தீர்த்தம் எல்லாம் விசேஷமாக சொல்கிறோம். அதே போல காலஅளவில் இப்போது வழிபட்டால் நல்லது, அப்போது வழிபட்டால் நல்லது என்றும் கருதி நல்ல நேரங்களும் பார்த்துச் செல்கிறோம். (நமக்கு தெரியுமே – ராகுகாலத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றுவது என்று)
நமது தினப்படி வழக்கத்தில் நீராடிவிட்டு வரும் போது, நமது தேகம் அழுக்குகள் களையப்பட்டு அதனால் ஒரு புத்துணர்ச்சி வருவதை நாம் உணர்வதால், அதே போன்று இயற்கையாகவே அமைந்துள்ள ஆறுகளின் தன்மைகளையும், ஓடும் திசைகளையும் பொறுத்து அவைகளில் நீராடினால் நுண்ணியதாக நம்மிடம் வளர்ந்துள்ள நமது மாசுகளும் கழுவப்பட்டு நாமும் புனிதமாகலாம் என்று கருதுவதால் அவைகளை நோக்கிப் போகிறோம். அதிலும் சில விசேஷமான இடங்களில் இருக்கும் ஊற்றுகள், குளங்களிலும், அவை போன்ற இடங்களில் இருந்து புறப்பட்டோ அல்லது அவ்விடங்களைத் தொட்டுச் சென்றுகொண்டோ இருக்கும் ஆறுகளிலும் நீராடுவதை புனிதமாகக் கருதுகிறோம். இவைகளை தீர்த்த யாத்திரை என்கிறோம். இப்போது தாமிரபரணி புஷ்கரம் என்கிறார்கள். கும்பகோணம் மஹாமகம் நமக்கு தெரியும்.
இப்படியாக மூர்த்தி தரிசனம், தீர்த்த யாத்திரை செய்வதெல்லாம் நமது மலங்களை நீக்கி இறைவன் ஸந்நிதானத்தில் நம்மைப் புனிதமாக்கிக் கொள்ளவே என்ற கருத்து நமக்கு இருந்தாலும், அப்படிச் செய்யும் நாம் யார் என்ற எண்ணம் ஒரு சிலருக்கே தோன்றுகிறது. மூர்த்திகளும், தீர்த்தங்களும் உலகில் இருப்பவை போன்று நாமும் உலகில் இருப்பதாக எண்ணும் வரை அவையெல்லாமே சரியான வழிபாட்டு முறைகளே. எல்லாம் இறைவனால் இயக்கப்படுகிறது என்ற எண்ணம் இருக்கும் போதும், ஒரு சிலருக்கே அந்த இறைசக்தி இல்லாது நாமே எப்படி இயங்கமுடியும் என்று தோன்றுகிறது. அப்படித் தோன்றுபவர்களிலும் வெகு சிலரே *நான்யார்?* என்று தன்னைப் பற்றியே கேள்வி கேட்டுத் தனது பார்வையை உலகில் வெளிமுகமாக விடாது, காணும் தான்யார் என்பதை அறிந்துகொள்ளத் தனது கவனத்தை உள்முகமாகத் திருப்பி, தியானத்தால் தன் உள்ளொளி பெறுவதே *ஆன்மபோதம்* என்று பலபடித்தாய் சொன்னார்.
இவ்வாறாக எந்தத்திசையில், எந்த இடத்தில் என்ன இருக்கிறது, அதை எந்தக் காலத்தில் தரிசிப்பது என்று இங்கும் அங்கும் அலையாமல், அவை அனைத்தையுமே காணும் அல்லது காணப்போகும் தன்னைப் பற்றி விசாரம் செய்ய வேண்டும் என்று இங்கு சொல்கிறார். அப்படிச் செய்தால் குளிரோ, வெப்பமோ எதுவானாலும் அங்கும் இருந்து, எந்த விதக்குற்றம், குறைகளையும் தனது தன்மைகளாய்க் கொள்ளாது, எப்போதும் ஆனந்தம் ஒன்றையே தனது இயல்பாய்க் கொண்டுள்ள ஆன்மசைதன்யமாகிய தனது ஸ்வரூபத்திலேயே திளைத்து, அங்கு ஊறும் ஆனந்தப்புனித நீரில் மூழ்கி எக்காலத்தும் இன்புறும் ஒருவனே உலகில் வாழ்ந்த பயனை அடைந்தவன் ஆகிறான். அந்த நிலையை அடையும் வரை இருமைகளும் இருக்கும், அதனால் வரும் வறுமைகளும் தொடரும். ஆனால் ஆன்மஸாகரத்தில் மூழ்கி முத்தை அடைந்தவனுக்கு அதற்கும் மேல் செய்வதற்கு என்று ஏதும் இருக்காது, அவன் ஸத்தே உருவாகியுள்ள ஆன்மாவோடு ஒன்றி இருப்பதால், இருக்கும் அனைத்தும் அவனுக்கு அதுவாகவே தோன்றும்; எந்த வித வேற்றுமைகளும் தெரியாது. அவன் சித்தே வடிவான ஆன்மாவாய் இருப்பதால் அறிவு மயமாகவே இருப்பான். அவன் மேலும் அறிவதற்கு ஒன்றும் இருக்காது. தனது பேரறிவு எனும் ஒளியால் தானும் பிரகாசித்துக்கொண்டு, அனைத்தையும் ஒளிர்வித்துக்கொண்டும் இருப்பான். அவன் ஆனந்த வடிவேயான ஆன்மாவாக ஒன்றிவிட்டதால், இப்போதுண்டு, அப்புறமில்லை என்ற குணங்களைக் கொண்ட இன்ப-துன்பங்களைக் கடந்து, எப்போதும் ஆனந்தமாகவே இருப்பான்.
என்றும், எங்கும் உள்ள ஆன்மாவாயானதால் அவன் *நித்யன்*
இனி பிறப்பு, இறப்பு எனும் கால அளவைகள் இல்லாத அவன் மரணமில்லா ஆனந்தப் பெருவாழ்வில் நிலைத்து நிற்பான் இந்த ஆத்மன். அப்படியே வேண்டுவோம்.
அன்பர்களே! தயவுசெய்து நீங்கள் படித்த வரை, புரிந்து கொண்டதை என்னோடு பகிருங்கள். பொது குரூப்பில் வேண்டாம். என் தனி மொபைல் எண்ணுக்கு எழுதுங்கள். ஆத்மஞானவிஷயமில்லையா! குருவுக்கும் சீடனுக்கும் மட்டுமே இது இருக்கட்டும்.
விரைவில் வேறு ஒரு கோணத்தில் நம் ஆத்மஞானத்தை படிக்க, புரிந்துகொள்ள முயலுவோம். என் எழுத்தை, கருத்தை மேலும் விரும்பி வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
வெல்க குருவின் புகழ்!

மெய்ஞான வேட்கை என்கிற ஆன்மபோதம்
(வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)

(ஆன்மபோத பதிவுகள் நிறைவுற்றன. மனமும் குணமும் செம்மையுற்றன. அந்த அசைபோடலில் அகப்பட்டது இந்த கவிதை. ரசியுங்கள். நீங்களும் அசைபோடுங்கள்)
விளக்கவுரை – *அருட்சக்தி*

பித்தனடா பக்தி நிலை உச்சம் உச்சம்
சித்தனடா சிவனைபோல் சித்தம் சித்தம்
சுத்தனடா சொரூபத்தின் மொத்தம் மொத்தம்
முத்தனடா முக்தி நிலை முழுதும் பெற்றோன் 1

ஒருவன் பக்தியின் உச்சத்துக்கு போனால் அதாவது பக்தியில் பித்தனானால் அவன் பித்தன் என்ற சிவன். அந்த சிவனைப்போல் எவனுடைய சித்தமானது ஸ்திரமானால் அவனே ஸித்தன். தன்னுடைய ஆத்மவடிவத்தில் மொத்தமாய் தோய்ந்துவிட்டால் அவன் சுத்தன். அதாவது மனசுத்தன். இப்படி பக்தி, சித்தம், ஸ்வரூபம் எல்லாமே பெற்றுவிட்டால் அவனே முக்திநிலை எய்திய முக்தனாவான்.

பிறப்பில்லை என்று சொல்லும் வேதம் வேதம்
இறப்புமில்லை எதுவுமில்லை எல்லாம் மாயம்
குறவனைப்போல் குவலயத்தில் நடப்பான் நில்லான்
உறவில்லை ஒட்டுமில்லை கைஓடும் இல்லை 2

முக்தியடைந்த ஒரு ஆத்மாவுக்கு பிறப்பே யில்லை என்கிறது வேதம். பிறப்பு இல்லையானால் மரணமுமே இல்லையே! நாம் சொல்லும் பிறப்பு, இறப்பு எல்லாமே மாயை. அதாவது அறியாமை. நாட்டில் குறவர் என்ற ஒரு பிரிவினர் உண்டல்லவா! அவர்கள் ஒரு ஊரில் நிரந்தரமாக இருப்பதில்லை. போய்க்கொண்டே இருப்பர். முக்தியடைந்த ஒரு ஆத்மாவுக்கு இங்கு ஒரு உறவுமுல்லை, பிச்சை வாங்கி உண்ண கையில் திருவோடும் தேவையில்லை.

நேற்றிருந்தேன் இன்றுள்ளேன் நாளை நிற்பேன்
குற்றமில்லா குருபாதம் உண்மை உண்மை
பற்றில்லை பசையில்லை எல்லாம் பந்தம் பந்தம்
சுற்றி சுற்றி வரும் காலை அது சர்ப்பம் சர்ப்பம் 3

காலம் என்பதற்கு ஒரு அடையாளம் இல்லை. நேற்று, இன்று, நாளை என்பது நமது நினைவுதான். இந்த ஆத்மா என்றுமே இருக்கும். இந்த அறிவைக்கொடுத்த மாசில்லாகுருவின் பாதங்கள் ஸத்யம். ஆத்மாவுக்கு எதிலும் பற்றோ, ஒட்டுறவோ இல்லை. ஜீவனின் இந்த உலக பந்தங்கள் எல்லாமே காலை சுற்றிவரும் பாம்பு போல. இங்கே பந்தம் என்றது சுஷும்னையில் ஓடும் ஸ்வாஸப்பாம்பு.

செய்ததுவும் மீதமதும் போச்சே போச்சே
உய்வதற்கு வேறு வழி காணலாச்சே
பெய்கவென பெய்யும் மழை பத்தினிப்போல்
ஐயமற ஐந்தும் ஓதி அறியலாச்சே 4

ஆத்மனால் செய்யவேண்டியது என்று ஒன்றுமேயில்லை. வேறுவழியை அல்லவா இது கண்டுவிட்டது. இந்த ஆத்மா மழை பெய் என்றால் பெய்யும். ஒரு தர்ம பத்தினி போல என்ற உவமை இங்கே! ஆத்மாவைப்பற்றி அறியும்போது இந்த ஜீவன் பஞ்சபூதத்தில் உள்ள சந்தேக விபரீதங்களை பூராவும் நீக்கிக்கொண்டு விட்டான்.

அக்ஞானம் என்பதுவும் குப்பை குப்பை
மெய்ஞான புலம்பலது செம்மை செம்மை
கையாலே மலரெடுத்து அம்மை அம்மை
தாயவளின் அடியினிலே சேர்த்தால் நன்மை 5

ஆத்மாவுக்கு அக்ஞானம் என்பது வெறும் கழிவே! அதற்கு வேண்டுவது எல்லாமே மெய்ஞான வழியே! இதெல்லாம் எப்போது வரும்? அம்மையை மலரால் அவளது திருவடியில் பூஜித்தால் வரும்.

விக்ஞான விளக்கமெல்லாம் போதும் போதும்
மெய்ஞான விளக்கதுவே ஒளிரும் ஒளிரும்
கைம்பெண்ணின் கதைபோல மெய்மை மெய்மை
கைவிட்டு போனதடா மாயை மாயை 6

விக்ஞானம் எல்லாமே உலக அறிவு. வேண்டியமட்டும் படித்தாச்சு. மெய்ஞான விளக்கு என்ற தேஜஸ் இங்கே ஒளிவிட்டு பிரகாசிக்கும். ஒரு பெண்ணுக்கு கணவன் என்கிற ஒரு பிடிப்பு போனதுபோல மாயை என்கிற அறியாமை இங்கே ஜீவனை விட்டு போய்விட்டது.

தேடிடடா தேடிடடா தூக்கம் மறந்து
கூடிடடா கூடிடடா கூட்டம் துறந்து
பாடிடடா பாடிடடா பாட்டை சிறந்து
சாடிடடா சாடிடடா சேட்டை மனத்தை 7

சம்சார துக்கத்தை மறந்து ஆத்மாவை தேடு. அஸத் சங்கத்தை விட்டு ஸத்சங்கத்தை நாடு. மனத்தில் ஏற்படும் சேஷ்டைகளை விட்டு ஆத்ம ஞானபாட்டை பாடு. இப்படியெல்லாம் ஜீவமனதை பார்த்து சொல்லுகிறது..

வேட்டிடடா வேள்வியினை வேதியர் போல
நாட்டிடடா கோட்டையினை நாகரசத்தில்
கூட்டிடா ஓர்நிலையில் உந்தன் மனத்தை
மூட்டிடடா மெய்க்ஞான தீயின் தழலை 8

அந்தணர்கள் வேள்வி போல சிதக்னியை மூட்டு. நாகரஸம் என்ற ஆத்ம கோட்டையை உலகில் நாட்டு. மனதை ஒரே நிலையில் வை. அப்போதுதான் மெய்க்ஞான தழல் மூட்டப்படும்.

அன்றொரு நாள் சித்தன் வந்தான் காரைக்கோட்டை
என்றும் நாம்வாழ காய கல்பம் தந்தான்
அன்றவன் சொன்னதெல்லாம் கனக வைப்பு
நன்றாக உணர்ந்தாலோ அது சினம் துறப்பு 9

காரைக்கோட்டைசித்தன் என்கிற காரைஸித்தன் வந்தான், வந்தவன் சாகாகல்வியை அதாவது காயகல்பம் என்ற ஞானமூலிகையை கொடுத்தான். சொன்னதெல்லாம் தான் கனகவைப்பு என்ற நூலில் வைத்தான். அதை கற்றால் அல்லவோ நமது சினம் என்ற அறியாமை நீங்கும்.

மண்ணிதனை பொன்னாக்கும் சித்தர் கூட்டம்
கண்மூடி மயங்கி நிற்கும் மாந்தர் கூட்டம்
விண்மீது செலுத்துகின்ற அம்பைப் போல
தன்மீது திரும்பிவரும் வினையின் ஓட்டம் 10

சித்தர்கள் எல்லாமே மண்ணை பொன்னாகும் வித்தை தெரிந்தவர்கள். அதைப்பார்த்து மயங்கி நிற்பார் மனிதர்கள். அதிலே புகுந்துவிட்டாலோ வானத்தில் செலுத்திய அம்புபோல அது திரும்பி வந்து இவனையே தாக்கும்.

காலணா கொடுத்து விட்டால் ஓடம் ஏற்றும்
பாலையவள் மந்திரம்தான் பாதை மாற்றும்
காலையவள் பற்றிவிடு காட்டம் குறையும்
கலியவனின் கொட்டமது அடங்கிப் போகும் 11

கங்கையை கடக்க ஓடத்துக்கு அந்த காலத்தில் காலணா (பழையநாணயம் – இக்கால நயாபைஸா 1½) கூலி. அப்படியெல்லாம் கொடுக்கவேண்டாம். பாலையின் மஹாமந்த்ரம் இருக்கே! இங்கு அக்கரை என்றது ஞானம். அவள் பாதத்தை பிடித்துவிட்டால் கலிகால கொடுமை இவனை ஒன்றும் செய்யாது.

சாகின்ற மனிதருக்கு ஏது நட்பும் பகையும்
போகின்ற பாதையெலாம் புட்பம் புட்பம்
வேகின்ற கட்டையிது அற்பம் அற்பம்
ஏகிவிடு ஏகாந்தம் அது நுட்பம் நுட்பம் 12

பிறவி இல்லா பெருநிலையில் நட்பும் பகையும் எது? செல்லும் பாதையெல்லாம் பூப்பந்தால்தான். இந்த கட்டைஉடலோ நெருப்பில் வேகும் தன்மை. இந்த உடலை விட்டு தனித்த ஏகநிலை என்ற மிக நுண்ணிய முக்தநிலை அடைவாய்!

சாகாது நிற்பாயோ என்று கேட்பார்
ஆகாத செயல்நின்றால் அதுவும் கூடும்
போகாத ஊருக்கு வழியேதென்பார்
நோகாமல் நோக்கின்ற நோன்பறியாரே

உலகினர் ஆகாத செயல், போகாத ஊருக்கு வழி என்றெல்லாம் சொல்வர். சாகாமல் இருப்பயோ என்றும் கேட்பர். ஆனால் இந்த ஆத்மஞானவழி எந்த வித பரிசிரமமும் அடையாமல் செல்வது.

புட்பமொன்றெடுத்து பாதம் போடு போடு
குட்டமதும் போய்விடுமே வாழும் நாடு நாடு
எட்ட நின்று பார்த்தாலோ தெரியா வீடு
அட்டகாசம் செய்யாது அந்த மாயக் காடு

ஆர்ப்பாட்டம் செய்யும் மாயை என்கிற அறியாமை எப்ப போகும்? புஷ்பம் எடுத்து அவள் பாதத்தில் போடும்போதுதான். வியாதிகள் வாராது. ஜீவனுக்கு இது மிக தூரம். ஆத்மாவின் அருகில் நெருங்கினாலே தெரியும்.

அமராவதியிருந்த அந்த பாரிஜாதம்
தமதாக்கி கொண்டானே தாமோதரனும்
சமதமங்கள் கொள்கையெலாம் தேறி நீயும்
அமர்க்களமாய் அடியினிலே நாளும்போடு

கண்ணன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மலர் கொண்டுவந்தான். இங்கு பாரிஜாதம் என்றது ஆத்ம புஷ்பம். அது கிடைக்க வேணுமானால் சமம், தமம் என்ற சாதனைகளை செய்ய வேண்டும். அப்போது நீயும் தாமோதனாகலாம்.

கண்ணனவன் காதல் செய்த கதையைக் கேளு
பெண்ணுரு எல்லாமே எமக்கன்னை என்பான்
விண்ணகர வேந்தனுக்கு விகல்பம் இல்லை
மண்ணிதிலே மனமகற்றி மாதரைப் பாரு

கண்ணனின் கோபிகாகாதல் கதை ஒரு தத்துவம். அது எல்லா பெண்களையுமே தாயாராக பார்க்க சொல்வது. இங்கு விண்ணகர வேந்தன் என்ற ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்த ஒருவன். அவனுக்கு மண் என்றும் பெண் என்றும் தெரியாதே!

மின்னியலில் மயங்காதே மூழ்க்கும் மூழ்க்கும்
அன்னியனின் அலங்கோலம் அகலும் அகலும்
பொன்னி நதி வழிவந்த நம்மனோர்க்கு
கன்னியான அன்னையது அருளும் அருளும்

இன்றைய உலகம் மின்னியல் (Electrical). இதிலே நாம் மூழ்கி கிடக்கிறோம். இது அயல்நாட்டினரின் இறக்குமதி. காவிரி பாயும் நம் நாடு ஆத்ம ஞானமே இதன் அருள் வழி. இதை அன்னை அருளுவாள்

இருளினிலே தேடும்பொருள் கைப்படுமோ படுமோ
அருளாலே கிடைத்ததப்பா ஆன்ம போதம் போதம்
பொருளறிந்தோம் பதிவு செய்தார் நித்தம் நித்தம்
கருக்குழியில் செல்ல மாட்டோம் யோகம் யோகம்

நாம் தேடும் இது இருட்டிலே (அறியாமை) தேடினால் கிடைக்காது. இந்த ஆன்மபோதத்தை அருள் என்ற வெளிச்சத்தை கொண்டு தேடுவோம். ஆத்மபோதத்தின் பொருளை தினம் பதிவு செய்தார். இனி கர்ப்பவாசம் இல்லா பரம யோகத்தை இதன் பொருளறிந்ததால் அடைந்தோம்.

ஆதியிலே சங்கரரும் ஆர்பரித்தார் வேதம் வேதம்
மீதியெலாம் பூர்த்தி செய்தார் இரமண மவுனம் மவுனம்
வீதியிலே கடைவிரித்தார் அருட்சக்தி நாதம் நாதம்
பாதியிலே போகவில்லை வேகம் வேகம்

முற்காலத்தில் சங்கரர் வேதமாக இதனை சொன்னார். மௌனமாக உபதேசித்த ரமணபகவானும் நமக்கு தமிழில் கொடுத்தார். நாதமாகவும் வேகமாகவும் முழுவதுமாக நமக்கு அருட்சக்தி கடைவிரித்ததன் மூலம் கிடைத்தது.

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 2

ஆத்மபோதம் – 24 ‘’நான் ப்ரஹ்மமே’’

ஆத்மஸ்வரூபம் நீதான் – உன்னை விட்டு வேறில்லை. இதுதான் குருபாதுகா மந்த்ரம் நமக்கு தினம் தினம் அறிவுறுத்துகிறது. குருபாதுகா மந்த்ரம் அருளப்படும்போது தன்னையும் தன்னுடைய ப்ரகாசத்தையும்-தானும் ப்ரகாசமும் ஒன்றாக ஆகும் விதத்தையும் குரு காட்டிக்கொடுக்கும் வண்ணம் அதன் தத்துவம் விரிகிறது. இங்கேயே அவர் நம்மை ஆத்மஸ்வரூபம் என்று கூறி விட்டார். அதனை ஸந்தேக விபரீதமற தெரிந்து கொள்ள ஸாதனை அவசியமல்லவா! ஸாதனையோடு கூட இந்த மாதிரி ஆத்ம விசாரமும் செய்தல் மிகமிக அவசியம். அதனால்தான் இங்கே நாம் அதனை செய்கிறோம். சங்கரரை தொடருவோம்….

ஆவித்யகம் சரீராதி த்ருச்யம் புத்புதவத்க்ஷரம் |
ஏதத்விலக்ஷணம் வித்யாதஹம் ப்ரஹ்மேதி நிர்மலம் ||

அவித்தையால் ஆனவை ஆக முதற்காணும்
இவை குமிழிபோல அழிவெய்தும் – இவற்றின்
அயலாம் அமல அகம் பிரமமாம் என்று
அயராமல் என்றும் அறி

மாயை எனும் அவித்தையினால் உண்டான தேகம் முதலாகக் காணப்படும் இவைகள் யாவும் நீர்க்குமிழிகள் போல அழிந்துவிடும். இவைகளிலிருந்து வேறுபட்ட நிர்மலமான பிரம்மமே நான் என்று சிறிதும் சோர்வடையாமல் எப்போதும் அறிந்துகொள்வாய்.

இதன் விரிபொருள்
இல்லாதது இருப்பதுபோலத் தோன்றுவது மாயை. முன்பே பார்த்தோம். கயிறு பாம்பாகத் தோன்றுவதால் பாம்புதான் மாயை; இருப்பது கயிறு மட்டுமே! அதுபோல இருப்பு எனும் தன்மை மட்டுமே கொண்ட ஆன்மா, உடலில் தொடங்கி மனம், புத்தி என்று இல்லாத வஸ்துக்களாக தோற்றம் அளிப்பதுதான் மாயை. அதனால் அவை யாவும் பொய்யானது ஆகும். அவைகள் அனைத்தும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அழியக்கூடியது. அப்படி அழியக்கூடியவற்றால் அழியாத சேதனப் பொருளான ஆத்மாவை உணரமுடியாது. உள்ள ஒரே பொருளான ஆத்மாவை உள்ளபடி உணர்வதற்கு ஒரே ஒரு வழிதான் இங்கே இருக்கு. கயிற்றை பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும்வரை அந்தப் பிரமை அகலாது. அதன் உண்மையை அறிய தேவையான வெளிச்சம் வேண்டும். அந்த வெளிச்சமும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும். அதேபோன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். தேகம், மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினமானம் வரும் அனுபவங்களிலேயே அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தபின்பும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து, அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள் கொண்டே அறிய முயல வேண்டும். அழியும் பலவும் நமக்கு இருந்தாலும், இப்படிக் கேட்டு அறிய முயற்சிப்பவன் யார் என்று பார்க்கும்போது மனம் சிறிதும் தளராது தனது முயற்சியைத் தொடர வேணும்.
உலக வழக்கம் என்னவென்றால் அழியும் பொருட்களின் மேல் ஆசை வைப்பதுதான். அந்த மாயையிலிருந்து விடுபட்டு, மீண்டும் அந்தப் பிரமை ஸாதகனை பிடித்து ஆட்கொள்ளாமல் இருக்க, அழியும் பொருட்கள் மேல் ஆசையின்மையும், அழியாத நிர்மலமான ப்ரஹ்மமே தான் என்ற நினைப்புடனும் ஸதாஸர்வகாலமும் இருக்கவேண்டும். அத்தகைய நினைப்பு, அறிவாக மாறி, அனுபவமாக ஆகும் வரை சிறிதும் சோர்வடையாமல் இருந்தால் உள்ளதை உள்ளபடி உணர முடியும் என்று இங்கு சொல்லுகிறார்.
மேலே அடுத்த பாடலுக்கு செல்கிறோம்.. மிக கவனமாக இனி சிந்தனை செய்ய வேணும்.

தேஹான்யத்வாத்ர மே ஜன்மஜராகார்ஷ்யலயாதய: |
சப்தாதிவிஷயை: சங்கே நிரிந்த்ரியதயா ந ச ||

உடலுக்கு வேறு எனக்கு உண்டாதல் மூத்தல்
ஒடு குன்றல் சாவு முதல் ஒன்றா – படர்ந்த
ஒலி முற்புலன்களோடு ஒன்றால் எனக்கு இன்றே
அலன் பொறிகள் யான் ஆதலால்

நினைவில் இருக்கும் ஸ்தூலதேகம், கனவில் வரும் ஸூக்ஷ்மதேகம், ஆழ்உறக்கத்தை அனுபவிக்கும் காரணதேகம், இம்மூன்று தேகங்களிலிருந்தும் நான் வேறுபட்டவன். அதனால் எனக்கு பிறப்பு, முதுமை, தேகமிளைத்தல், சாவு முதலான விகாரங்கள் பொருந்தாது. எங்கும் படரக்கூடிய ஒலி முதலான இந்திரிய விஷயங்களும் எனக்குப் பொருந்தாது. நான் இந்திரியங்கள் இல்லாததால் அவைகள் எனக்கு இல்லை.

இதன் விரிபொருள்:
வேதாந்த உண்மைகளை மஹாவாக்கியங்கள் மூலமாகவோ குருமுகமாகவோ கேட்டறிந்த பின்பு ஸாதகன் செய்ய வேண்டிய தியானம்பற்றி இங்கு கூறப்படுகிறது. எது நித்தியமோ அதை மட்டும் பற்றிக்கொண்டு, அநித்தியமான வைகளை அகற்றுவதில் முதல்படியாக தேகம் பற்றிய உண்மைகளை இங்கு அறியலாகிறது.
நம்மை யாராவது சுட்டிக் காட்டும்போதோ, அல்லது ஆழ்ந்த தூக்கத்தின் பின்போ நாம் முதலில் காண்பதும், உணர்வதும் நமது ஸ்தூல தேகத்தைதான். அதற்கே பிறப்பு, வளர்ச்சி, இறப்பு முதலான பருவங்கள் இருக்கின்றன. அதேபோல நமது கனவில் நாம் உருவாக்கும் ஒரு ஸூக்ஷ்மதேகத்துக்கும் வெவ்வேறு பருவங்கள் இருப்பது போலத்தான் கனவில் தெரிகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் காரணதேகம் பற்றி நாம் நன்கு அறியாவிட்டாலும், நமது அனுபவத்தின் படி அதுவும் தினம் தினம் வந்து போவது போலத்தான் அவைகளை நாம் அறிகிறோம். அதாவது ஸ்தூல மற்றும் ஸூக்ஷ்மதேகங்கள் அந்தக் காரணதேகத்தில் தினந்தோறும் அடங்கி, பின் எழுகிறது. அப்படி அடங்கமுடியாது போனால் சில நாட்களுக்குள்ளேயே ஸ்தூலதேகமும் காணாது மறைந்து விடும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக இவை எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் இருப்பது நன்கு தெரிகிறது. இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பதல்லாது, இவை அனைத்தையும் சாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் “நான்” இவைகளிலிருந்தும் வேறுபட்டவன்.
நமது தேகம் நமக்குத் தெரிந்த பின்தான் உலகமே நமக்குத் தெரிய வருகிறது. அந்த உலகத்தை நாம் நமது ஸூக்ஷ்ம ஐம்புலன்களால் அறிகிறோம். ஐம்புலன்களும் செயல்பட அதனதற்கு வேண்டிய ஸ்தூலக்கருவிகளும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளும் நமது தேகத்தின் உறுப்புக்களே. தேகமே நாம் அல்ல என்கிறபோது அந்தக் கருவிகளோ, அல்லது அவைகளை இயக்கும் நுண்புலன்களோ நாமாக எப்படி இருக்க முடியும்? அதனால் அவைகளும் நாம் அல்ல. அப்படியென்றால் நம்மை நாமாக எப்போதும் உணர்கிறோமே, அந்த “நான்” யார் என்று கேட்டு, அதைப் பற்றி ஸதாஸர்வ காலமும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தொடரும்……

ஆத்மபோதம் 25 ஆன்மாவே நான்

நான் நான் என்று சிந்திக்க சொன்னோமல்லவா! இதுபற்றி பகவானே தன் உபதேச உந்தியாரில் சொல்கிறார் பாருங்கள்…..

நானென்னுஞ் சொற்பொரு ளாமது நாளுமே
நானற்ற தூக்கத்து முந்தீபற
நமதின்மை நீக்கத்தா லுந்தீபற.

அதாவது நானென்ற சொல்லுக்கு, உண்மைப் பொருளாகயிருப்பது, எக்காலத்திலும் எல்லாவித அவஸ்தைகளிலும் தன்னுடைய தன்மை மாறாது விளங்கும், பரிபூரண வஸ்துவே. தேகத்தை நானென்றபிமானிக்கும் உணர்வற்ற, தூக்கத்திலும் நாம் இல்லாமற் போனோம் என்ற உணர்வு இல்லாததினாலும், நான், இருக்கிறேன் என்ற உணர்வு நிரந்தரமாக இருந்து கொண்டேயிருப்பதாலும் நானென்பது அந்தப் பரவஸ்துவேயாகும். *ஆன்மாவே நான்* என்கிறார் இங்கே.
இன்னொரு பாடலான உள்ளதுநாற்பது அனுபந்தப்பாடலில் அழகாக தேஹம் நாஹம் கோஹம், ஸோஹம் என்ற நான்கு சொற்களைக் கொண்டே விளக்குகிறார் பாருங்கள்..

தேஹம் கடம் நிகர் ஜடம், இதற்கு அஹம் எனும் திகழ்வு இலதால்
நாஹம்; சடலம் இல் துயிலினில் தினம் உறும் நமது இயலால்
கோஹம் கரன் எவண் உளன்? உணர்ந்து உளர் உளக்குகை உள்ளே
சோஹம் புரண அருணகிரி சிவவிபு சுயம் ஒளிர்வான்.

“இந்த ‘நான்’ என்று கிளம்புகிறவன் யார்? எங்கு இருக்கிறான் என்று ஆராய்ந்து உணர்ந்து இருப்பவர்களின் இதய குகைக்குள்ளே, தானே தானாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் சிவமயமான அருணாசலன் ஸ்வயமாக தானே பிரகாசிப்பான்” என்று இங்கு அவர் கூறுகிறார்.
அதேபோல சங்கரரும் இதனையே “மனோபுத்திஅஹங்கார சித்தானிநாஹம்” என்று ஆரம்பித்து “சிவானந்தரூப:சிவோஹம் சிவோஹம்” என்று முடியும் “நிர்வாணஷட்கம்” அல்லது “ஆத்மஷட்கம்” என்று கூறப்படுகிற ஆறு ஸ்லோகத் தொகுப்பில் வலியுறுத்துகிறார்.
ஸாதகனின் தவம் எல்லாம் தனக்கு வெளியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் நிரந்தரமற்றது என்பதாலும், அவைகளைக் காணும் தானே அவைகளை விட முக்கியம் என்பதாலும், அந்த விஷயங்களில் மனத்தை விடாது, அதனால் அவைகளால் கவர்ந்து ஆட்கொள்ளாப்படாது, எப்போதும் தானாக இருக்க முயற்சி செய்து கொண்டிருப்பதே!
ஜபம் செய்துகொண்டிருந்தாலும், பூஜை செய்துகொண்டிருந்தாலும், தியானம் செய்துகொண்டிருந்தாலும் இதுகளில் ஆட்கொள்ளப்படாது நமது இருப்பிலே அதாவது நான் என்பதிலே நிலையாக இருக்கணும் என்பதே இங்கு நாம் புரிந்து கொள்ளவேண்டியது.
சங்கரரை தொடருவோம்

அமன்ச்த்வாத்ர மே துக்கராகத்வேஷபயாதய: |
அப்ராணோ ஹ்யமனாஹா சுப்ர இத்யாதி ஸ்ருதிசாஸநாத் ||

மனம் அலன் ஆதலால் மன்னு துயர் ஆசை
சினம் அச்சம் ஆதி எனைச் சேரா – இனமாக
அப்பிராணன் மனமில்லான் சுத்தன் என்று மறை
செப்புகின்றதன்றோ தெளி

நான் எண்ணங்களின் தொகுப்பான மனமில்லை என்பதால், மனத்தினால் அடையும் துயரம், ஆசை, கோபம், அச்சம் முதலானவைகள் என்னைச் சேராத வகைகளாகும். ஆத்மாவாகிய நான் அந்த வகையைச் சேர்ந்த பிராணனோ, மனமோ இல்லாதவன். எனவே மிகவும் தூய்மையானவன் என்று வேதவாக்கியங்கள் சொல்வதை நன்கு உணர்ந்து தெளிவு பெறுவாயாக.

இதன் விரிபொருள்:

எண்ணங்களே மனம்யாவினும் நானெனும் எண்ணமே மூலமாம் உந்தீபற
யானாம் மனம் எனல் உந்தீபற

-என்று ரமணர் “உபதேசஉந்தியார்” எனும் படைப்பில் சொல்வது “எண்ணங்கள் அனைத்திலும் ‘நான்’ என்று தன்னை அபிமானிக்கும் எண்ணமே மனம் என்றும், அதுவே எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான எண்ணம்” என்றும் சொல்கிறார். அது அபிமானிக்கும் “நான்”; எண்ணும் “நான்”. அதற்கு எல்லாவித ஆசை, துயரம் எல்லாம் உண்டு. ஆனால் மேலே சங்கரர் சொல்லும் “நான்” இருப்பாகிய ஆன்மாவே. அது “நான்” எனும் உணர்வாதலால், அதற்கு எந்தவித விகாரங்களும் கிடையாது. (இங்கே கவனமாக படியுங்கள் – இரண்டுதரம் படியுங்கள்)
எப்போதும் எதையாவது எண்ணிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. அந்த எண்ணப்படி தன்னிலும் வேறு என்று ஒன்றைப் பார்ப்பதுதான் முதல்படி. அந்த *நான்-நீ* என்ற பாவனையால், எனது-உனது என்ற வேற்றுமைகள் வளர ஆரம்பிக்கின்றன. அதனால் ஒரு பொருளை “தனது” என்று அடைய விரும்புவதுதான் ஆசை. அது கிடைக்காமல் அல்லது தன்னிடம் தங்காமல் போய்விட்டால் வருவது துக்கம். அது தனக்குக் கிடைத்தும், அது ஒருவேளை தன்னைவிட்டுப் பிறரிடம் போய்விடுமோ என்று எண்ணுவது அச்சம். தன்னிடமிருந்து பிறர் அதை எடுத்துக் கொண்டுவிட்டால் வருவது கோபம். தன்னிடமே அது இருக்கவேண்டும் என்று எண்ணுவது பற்று. மற்றவர் அதைப் பெற்றுவிட்டால் அவரிடம் நமக்கு வருவது வெறுப்பு. இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான்.

இரண்டாம் பாகம் தொடரும்……

ஆத்மபோதம் – 26 *எண்ணங்கள்*

நேற்று இப்படியான வித விதமான உணர்ச்சிகளுக்குக் காரணம் நம் எண்ணங்கள்தான் என்று முடித்திருந்தோம் அத்தகைய எண்ணங்களின் தொகுப்பே மனம், அந்த மனமே தன்னை ‘நான்’ என்று அபிமானிக்கிறது. அந்த மனம் போன்ற வர்க்கத்தைச்சேர்ந்ததே பிராணன் எனும் ஸூக்ஷ்மசக்தியுமாக தேகம் எனும் ஜடப்பொருள் அல்லாது, பிராணன், மனம் எனும் ஸூக்ஷ்ம தேக வர்க்கங்களும் அநித்தியமானவைகள். அதனால் அவைகளும் தள்ளப்பட வேண்டியவைகளே.
ஆனால் மற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாது எப்போது ஒருவன் “நான்” என்று தன்னிருப்பை மட்டும் உணர்ந்து தன்னிலே இன்புற்று இருப்பானோ, அப்போது அவனுக்கு மற்ற விஷயங்களில் நாட்டமும் இல்லை. அவை வந்தாலும் அதனால் இன்பமும் இல்லாமல், போய்விட்டால் அதனால் துன்பமும் இல்லாமல் ஆகிறது. மற்றவர்கள் என்று அவனுக்குத் தெரிந்தாலும், அவர்களும் தன்னைப் போலவே இருப்பவர்கள் என்றுதான் அவனுக்கு இருக்கும். ஆன்மஞானம் என்பது எவருடைய தனிஅனுபவம் என்றாலும் அது எந்தத் தனி மனிதருடைய சொந்தச் சொத்து அல்ல. சொத்து என்று வந்துவிட்டாலே அதற்கு சொந்தக்காரன் என்றும், அதில் பன்மையும் வந்துவிடும். ஞானம் தொன்றுதொட்டு இருக்கும் அதீத அனுபவம் என்பதாலேயே அதன் துவக்கத்தை வேதத்தினின்று காணலாம் என்பதை உணர்த்தவே இங்கு வேத வாக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.
அதனால் முந்தைய ஸ்லோகத்தில் ஸ்தூலமான பொறி, புலன்களைக் களையச் சொன்னது போல, இங்கு பிராணன், மனம் ஆகிய எந்தவித சூக்ஷ்ம விகாரங்களும் இல்லாது தூய்மையாய் இருப்பதே அந்த “நான்” என்னும் உணர்வு என்று வேத வாக்கியங்கள் சொல்வதால் அதனையே எப்போதும் நினைத்து, அதையே தனது தாரக மந்திரமாக்கி, அதனையே தியானித்து அதன் கருத்தை நன்கு உணர்ந்து தெளிவாய் என்று சொல்ளுகிறார். இன்னும் இந்த ஆத்ம தெளிவிற்கு உபநிஷத் கதை ஒன்று சொல்கிறேன்.
பல உதாரணங்களைக் கொடுத்து, படிப்படியாகத்தனது மகனான சுவேதகேதுவுக்கு ஆருணிமுனிவர் முற்றிலும் உணர வைக்கின்றார். அவனுடைய ஆன்மிக இருளைப் போக்கி ஆத்மாவை உணரவைக்கிறார். அதனை நாம் படித்தால் இந்த இடத்தில் நமக்கு இன்னும் தெளிவு உண்டாகும்.
மண்ஒன்று, அதை வைத்துக்குயவன் பல மண்பாண்டங்களைச் செய்கின்றான். பாண்டங்கள் பெயரிலும் உருவத்திலும் வெவ்வேறாக இருக்கலாம். அவற்றிற்கு அடிப்படை மண்தான்.
தங்கம்ஒன்று. தங்கத்திலிருந்து தட்டான் பல ஆபரணங்களைச் செய்கின்றான். அவற்றிற்கு மூலம் தங்கம்தானே.
சூரியனைக் காண்கின்றோம். சூரியனுடைய கிரணங்களில் பல நிறங்கள் கலந்து நிற்கின்றன. ஆனால், அவையெல்லாம் சூரியனிடமிருந்து எழுந்தவைதான்.
பால் தயிராகிறது தயிர் வெண்ணெய் ஆகிறது. வெண்ணெய் நெய் ஆகிறது. எல்லாவற்றிற்கும் தயிர்தான் அடிப்படையாக இருப்பது.
பரம்பொருளே. நாம் பார்ப்பது, அனுபவிப்பது போன்றவைக்குப் பரம்பொருளே ஆதாரமாகும். அதுவே மூலப்பொருள்.
தேனீக்கள் பல பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கின்றன. ஆனால் தேன் ஒன்றே உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாமுமே பரம்பொருளில் சேருகின்றன. உலகெங்கிலும் பல நதிகள் கிழக்கிலும் வடக்கிலும், மேற்கிலும் தெற்கிலும் பாய்ந்து கடலை அடைந்து அங்கே தங்குகின்றன. கடலை அடைந்தவுடன் நதிகளுக்கெனத் தனிப்பெயர் கிடையாது. உருவம் கிடையாது.
மனிதன் விழித்திருக்கும்பொழுதும், உறங்கும்பொழுதும், கனவு காணும் பொழுதும், அவனுடைய உயிரானது தொடர்ந்து இயங்குகின்றது.
ஒரு சிறிய ஆலமரவிதை நாளடைவில் பெரிய மரமாக விழுதுகளுடன் வளருகிறது. விதையிலும் மரத்திலும் இருக்கின்ற மூலப்பொருள் ஒன்றே.
ஒரு பாண்டத்தில் தண்ணீரை வைத்து அந்தத் தண்ணீரில் சிறிது உப்பைக் கலக்கும்பொழுது தண்ணீர் முழுவதும் உப்பாகின்றது. அதேபோல பரம்பொருள் எல்லாவற்றிலும் அடிப்படையாக, மூலமாக, ஸாரமாக நிற்கின்றது. இதுவே உண்மை. *அதுவேஆத்மா அதுவே நீ ஆகிறாய்* என்று ஆருணிரிஷி சுவேதகேதுவிற்கு விளக்குகின்றார்.
இனி நேரடியாக சொல்ல வருகிறார் சங்காரர். அவரைத் தொடருவோம்……

நிர்குணோ நிஷ்க்ரியோ நித்யோ நிர்விகல்போ நிரஞ்சன: |
நிர்விகாரோ நிராகாரோ நித்யமுக்தோஸ்மி நிர்மல: ||

நிர்க்குணன் நிரஞ்சனன் நித்தன் நிராகாரன்
நிர்விகாரன் சுத்தன் நிட்கிரியன் – நிர்விகற்பன்
நித்த முக்தன் முன் நிகழ்த்திடப்பட்டவை
அத்தனையும் நான் என்று அறி

குணங்களற்றவன், பற்றற்றவன், என்றும் இருப்பவன், உருவமில்லாதவன், மாறுபாடுஇல்லாதவன், பரிசுத்தமானவன், செயலற்றவன், செய்யவேண்டும் எனும் சிந்தனையில்லாதவன், எப்போதும் விடுபட்டவன் இப்படியாகச் சொல்லப் பட்டவை அனைத்தும் என்னைப் பற்றியே என்று அறிந்து கொள்.

இதன் விரிபொருள்:
நமது ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களில் இந்த குணங்களின் பெயரையே அம்பாள் பெயராக உள்ளதை நாம் அறிவோம். நிர்குணா, நிஷ்க்ரியா. நித்யா. நிர்விகல்பா, நிர்விகாரா, நிராகாரா நித்யமுக்தா நிர்மலா – பாருங்கள் இந்த பெயர்களை வைத்தே ஆத்மபோதம் ஸ்லோகத்தை செய்கிறார். இந்த பெயர்கள் அத்தனையும் நான் தான் என்கிறார். நான் பலதடவை சொல்லியுள்ளேன். நாம் வழிபடும் லலிதை நம்மைத்தவிர வேறல்ல என்று. சிதானந்த அலையும் இதையே சொல்கிறது.
முன்பு “அது அல்ல” என்ற பொருள்படும் “நேதி”பற்றி சொல்லப்பட்டது. இங்கும் அதே போன்ற எதிர்மறையான சொற்றொடர்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. சொல்வதை நேரடியாகச் சொல்ல முடியாதா என்ற சந்தேகம் எவருக்கும் வரலாம். முதலில் அதைப் பார்ப்போம்.
நமது தினசரி வாழ்வில் நாம் காண்பதெல்லாம் மெய்யானது என்றும், அந்த உணர்வை நம் எண்ணங்களாலும், செய்கைகளாலும் நாம் மேலும் வலுப்படுத்திக் கொண்டேபோய் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் நமது கனவில் வரும் அனுபவங்கள் எப்படி விழித்தபின் மாயமாய் கரைந்து போகின்றன என்பது நமக்கு நன்றாகவே தெரிந்தும், அந்த நிகழ்வுகள் நமக்கு ஏதேனும் படிப்பினையைத் தெரிவிக்கிறதா என்று நம்மில் பலர் சிறிதும் யோசனை செய்துகூட பார்ப்பதில்லை. இது இப்படி என்றால், நம் ஆழ்ந்த உறக்கத்தில் வழக்கமாக “நான்” என்ற உணர்வுடன் இருக்கும் நம்மையே நாமிழந்து, அத்துடன் நாம் சாதாரணமாகக்காணும் உலகத்தையும் இழந்து போனாலும், மீண்டும் நனவு நிலை திரும்பும்போது நமது முந்தைய கனவு-உறக்க நிலை அனுபவங்கள் எதையுமே ஒரு பொருட்டாகக்கூட எண்ணாது, அது அப்படித்தான் இருக்கும் என்ற மனநிலையில், சாதாரணமாக உலக வழக்கில் ஈடுபட்டுவிடுகிறோம்.
இந்த நமது உலகப் பார்வையும் கயிற்றை பாம்பாகப் பார்ப்பது போலத்தான். அப்படி இருக்கும்போது அவனிடம் முதலில் “அது பாம்பு அல்ல” என்றுதானே ஆரம்பிக்க முடியும்? இல்லாவிட்டால் அவன் பார்ப்பதை பாம்பாகத்தான் பார்த்துக்கொண்டே இருப்பான். அதிலிருந்து அவன் கவனத்தைத் திருப்ப “அது பாம்பு அல்ல” என்றுதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதே போல ஆன்மீகத்திலும் “நீ பார்க்கும் ஒன்று அதுவல்ல” என்ற எதிர்மறையாகவே தொடங்குகிறது. உலகில் நாம் எதை எடுத்துக்கொண்டாலும் அதனைச் சில குணங்களோடுதான் பார்ப்போம். அதுதான் நாம் வழக்கமாகச்செல்லும் வழி. அதனாலேயே நல்லது-கெட்டது, நண்பன்-எதிரி, பாவம்-புண்ணியம், மேலானது-கீழானது என்ற இருமைகள் புகுந்துவிடுகின்றன. இந்த பாகுபாடுகள் இல்லாமல் ஒன்று இருக்க முடியும் என்பதை நம்மால் அறிவுபூர்வமாகக் கூட உணரமுடிவதில்லை. அப்படியே இருந்தாலும் அது கிடைப்பதோ, அல்லது அதைக் காணுவதோ மிகவும் அரிது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட ஒன்று இருப்பதால் தான் நாமே இருக்கிறோம் என்பதை சீடனுக்கு உணர்த்துவது குருவின் கடமையாகிறது. அதனால் அனைவர்க்குமே நன்கு தெரிந்தவைகளில் ஆரம்பித்து அவர் சீடனுக்கு “அவை-அவை அல்ல” என்று உபதேசம் செய்கிறார். அதனாலேயே எதிர்மறை விளக்கங்கள் இங்கு சொல்கிறார்.
ஒருவனை வாழ்த்தும்போது நல்ல குணங்களான “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்” என வாழ்த்துவோம். ஆனால் குணங்கள் புத்தியைச் சார்ந்தவை. அத்தகைய குணங்கள் ஒருவனின் சாதாரண வாழ்வுக்கு உதவி அவனை மேலும் நன்கு சிந்திக்க வைக்கும். ஆனாலும் ஒரு முற்றிய ஆன்மீக நிலையில் அவன் “அந்தக் குணங்கள்” யாருக்கு என்றும் சிந்திக்க வேண்டிவரும். அப்போது புத்தியைச் சார்ந்த குணங்கள் எதுவும் இல்லாத ஆன்மாவாகிய “நான்” என்பதை அறிந்து கொள்வதால் “நான் நிர்க்குணன்” என்ற நிலை தெரியவரும். ஒருவன் கர்மங்களைச் செய்யும்போது அதன் விளைவுகளிலும் மனம் ஈடுபடுவதால், அவை மனத்தைச் சார்ந்தவை. நான் மனமல்ல என்பதால், அந்தப் பற்றுக்களினால் வரும் அழுக்கு ஏதும் இல்லாத நிரஞ்சனன். காலத்தை எவ்வளவு நீட்டினாலும், குறுக்கினாலும் நான் எப்போதும் உள்ளவன் என்பதால் நான் நித்தியன். உருவம் என்று ஒன்று இருந்தால் அது இருக்கும் இடம் என்றும், இல்லாத இடம் என்றும் சொல்லவேண்டி வரும். ஆனால் எனக்கோ எங்கு இருந்தாலும் நான் என்ற உணர்வு இருப்பதால் நான் நிராகாரன் (உருவமற்றவன்). தேகம் என்ற உருவத்திற்குத்தான் இளமை, முதுமை போன்ற நிலைகள் ஏற்படுவதால் தேகம் விதவிதமான மாறுபாடுகளை அடைகின்றன. நான் என்ற உணர்விற்கு இந்த மாறுபாடுகள் ஏதும் இல்லாததால் நான் நிர்விகாரன் (மாறுபாடு இல்லாதவன்). உருவம் என்று ஏதும் இல்லாத உணர்வாகிய நான் என்பதால் உருவத்தை ஒட்டும் தூசுகள் ஏதும் இல்லாத பரிசுத்தன். (துரிசறுத்து… என்கிறார் மணிவாசகர்.) ஏதும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாததால், நான் ஸங்கல்பம், விகல்பம் அற்றவன். அப்படியே ஏதேனும் செய்தால் “நான் செய்கிறேன்” என்ற சிந்தனை இல்லாததால் நான் நிஷ்கிரியன். பந்தம் என்ற ஒன்று இல்லாததால் அதிலிருந்தும் விடுதலை என்றும் இல்லாது போகிறது. எனக்கு பந்தம் ஏதும் இல்லாததால் நான் நித்யமுக்தன். இப்படியாகச் சொல்லப்பட்ட அனைத்தும் நானே என்பதை தீர உன்னுள் விசாரித்து “நான்தான் அது” என்று அறிவாயாக என்று அறிவுறுத்துகிறார்.

ஆத்மபோதம் -27 *ஆன்மா எங்கும் உள்ளது*

ஒரு அறியாகக்குழந்தையிடம் ஒரு வேற்றுதாளை கொடுத்தால் அது அதனை கிழித்துவிடும். அதுபோல் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுங்கள். அதையும் முன்போல்தான் கிழிக்கும். ஏன்? அதற்கு இரண்டின் மதிப்பும் தெரியாது. அப்போது அதற்கு ரூபாய் நோட்டின் மதிப்பை தெரியவைத்து பின் கொடுத்தால் அப்போது கிழிக்காது. மதிப்பை உணரும். இதுபோல் அமையில்லாமால், ஸதா பறந்து கொண்டிருக்கிற மனதுக்கு எத்தனை உபதேசம் செய்தாலும் ஏறாது. அதனால் மனதை நெறிப்படுத்தி உபதேசம் ஊட்டினால் சட்டென பிடிக்கும். அதனால் தான் திருவருட்பாவில் *பரப்பமைய்ந்துகேண்மின்* என்றார். மேலும் உலக நுகர்ச்சியிலேயே மனம் இருப்பதால் இது புரியாது. பால் பாத்திரத்தின் அருகில் உள்ள ஒரு பூனை பாலை குடிக்காமல் பக்கத்தில் இருக்கிற கரப்பான் பூச்சியை பிடிக்க போவதுபோல் இருக்கிறது என்று உதாரணம் சொல்கிறார். எனவே உலக நுகர்ச்சியில் அமுங்கி கிடக்கும் மனவேகத்தை அடக்கி உபதேசத்தைக் கேட்கவேணும்.
எந்த ஓன்றையும் செய்யும்போது அதற்குரிய மனநிலையில் நாம் இருக்க வேண்டியது அவசியமல்லவா!. எந்தவேலையைச் செய்கிறோமோ அதற்குரிய மனநிலையை வரவழைத்துக் கொண்டு, அதன்பிறகு அந்தச்செயலில் ஈடுபடுவது சிறப்பல்லவா! அதனால் தான் நமது ஆலயங்களை சுற்றி பல பிராகாரங்கள் அமைந்திருப்பதன் காரணம். ஒவ்வொரு பிரகாரத்தில் சுற்றி வரும்போதும் மற்ற எண்ணங்களை எல்லாம்விட்டுவிட்டு, கடைசியாக கருவறையில் சென்று கடவுளை தரிசிக்கும்போது, நம்மால் முழுமனதுடன் தெய்வசிந்தனையில் ஈடுபடமுடிகிறது. அதற்காகத்தான் *அனுபூதிக்கருவுக்கு* மூலமான உபநிஷதங்களை, ஆத்மஞான நூல்களை படிக்கப் புகுமுன், அல்லது குரு உபதேசத்துக்கு முன் நமது சிந்தனையை அவற்றுடன் இசைவுபடுத்தி மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேணும். ஆன்மாவின் இயல்பை புரிந்து கொள்ளவேணும். *ஆன்மாவின் இயல்பு* என்ன என்று யஜுர்வேதம் ஈசாவாஸ்யஉபநிஷதம் சொல்கிறது. “ஆன்மா அசைவற்றது, ஒன்றேயானது, மனத்தை விட விரைவானது. புலன்கள் அதனை அடைய இயலாது. அது நிலையாக நின்றபடியே அனைத்திற்கும் முன்னால் செல்கிறது. ஓடுகின்ற அனைத்தையும் முந்துகிறது. அது நிலையாக இருப்பதால் பிராணன் அனைத்தையும் இயக்குகிறது என்று.
ஒரு பொருள் அசையவோ இயங்கவோ வேண்டுமானால் அந்த இயக்கத்திற்கு ஓர் இடம் வேண்டும். எங்கும் நிறைந்த ஒன்று எங்கே அசையும்? எனவேதான் ஆன்மா அசைவற்றது. மனம் புறத்திலுள்ள ஒரு பொருளை நினைக்கும் போது, அது வெளியில் சென்று அந்தப் பொருளின் வடிவை எடுப்பதாக நமது தத்துவ நூல்கள் கூறுகின்றன. இதுவரை விக்ஞானம் கண்டறிந்துள்ள ஒலியின் வேகத்தைவிட, ஒளியின் வேகத்தைவிட மிகமிக வேகமாக மனம் சென்று அந்த பொருளின் வடிவை எடுக்கிறது. அவ்வளவு வேகமாக மனம் சென்றாலும், மனம் செல்வதற்கு முன்பே அங்கே ஆன்மா இருக்கிறது.
புலன்களால் ஆன்மாவை அறியமுடியாது. ஒவ்வொரு கருவியும் ஒரு குறிப்பிட்ட பணியைச்செய்யத்தான் செய்யும். தொலைநோக்கிக் கருவியால் தூரத்திலுள்ள பொருளை மட்டுமேதான் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றைப் பார்க்கமுடியாது. மைக்ராஸ்கோப் என்கிற நுண்ணோக்கியால் மிகச் சிறியனவற்றைக் காணமுடியும். அதுபோல் புலன்கள் புற உலகை அனுபவிப்பதற்காகப் படைக்கப்பட்டவை. அகவுலக உண்மைகளையோ ஆன்மாவையோ காண அவற்றால் முடியாது. இதையே கீதையில், ‘உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு தெய்வீகக் கண்ணைத் தருகிறேன்’ என்று கண்ணன் கூறுகிறார்.
அசைகின்ற பிராணன் இயங்குவதற்கு அசைவற்ற ஆதாரமாக உள்ளது ஆன்மா. அசைவற்ற ஆதாரம் என்றவுடன் ஆகாயம் நினைவுக்கு வருகிறது. அதைத்தான் அடுத்த பாடலுக்கு சங்கரர் எடுத்துக்கொள்ளுகிறார்.
அஹமாகாசவத்ஸர்வ பஹிரந்தர்கதோச்யுத: |
ஸதா ஸர்வசம: சித்தோ நிஹிசங்கோ நிர்மலோச்சல: ||

ஆகாயம் போல அகிலத்தின் உள் வெளியான்
சாகாதான் சர்வசமன் சித்தன் – தேகாதி
யாவற்றும் பற்று அற்றான் என்றும் அமலன் சலியான்
ஆவன் நான் என்றே அறி

ஆகாயத்தைப் போல அனைத்துப் பொருட்களிலும் உள்ளும் புறமும் வியாபித்துள்ளவன், மரணமில்லாதவன், கீழோ மேலோ எங்கும் ஸமமாயிருப்பவன், எப்போதும் உள்ள சித்தன், ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேகங்கள் முதலிய அனைத்கிலும் இருந்தாலும் அவைகள் எதனிலும் பற்றில்லாதவன், சலனமற்றவன் இப்படியாக நான் இருப்பவன் என்று நன்கு அறிந்துகொள்வாயாக.

இதன் விரிபொருள்:

முன்பு எதிர்மறையான சொற்றொடர்களை வைத்துக்கொண்டு ஆன்மாவைப் பற்றி விளக்கம் சொன்னாரால்லவா!. இங்கு *ஆகாயம்போல* என்று நேர்மறையாகத் தொடங்கிவைத்து ஆன்மாவின் சொரூப லக்ஷணம் துல்லியமாக விளக்கப்படுகிறது. இங்கும் எதிர்மறைகள் தவிர்க்கப்படவில்லை என்பதையும் காணலாம். ஆகாயம் என்பதை Sky என்று குறுகிய அளவில் கொள்ளாது, Space என்று விரிந்த அளவில் பொருள் கொண்டால் நன்கு விளங்கும்.

ஒரு காலியாக உள்ள குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் சொல்வோம். ஆனால் அந்தக் குடத்திற்குள் ஆகாயம் இருப்பதை அக்குடத்தை உடைத்தாலோ, அல்லது அதை அங்கிருந்து நீக்கினாலோ தானே நமக்கு விளங்குகிறது. அது மட்டுமில்லை அந்தக் குடம் ஜடமாக ஓர் இடத்தை முன்பு அடைத்துக்கொண்டு இருந்தாலும், குடத்தை அகற்றியதும் அந்த இடம் கூட ஆகாயத்துடன் ஒன்றாகிவிடுகிறதல்லவா? அதனால் ஆகாயத்தை எந்தப் பொருளின் உள்ளும் புறமும் வியாபித்துள்ளது என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும். அதாவது இருப்பது ஆகாயம் ஒன்றுதான், மற்றதெல்லாம் வந்து போவது என்றுதான் ஆகிறது. அந்த ஆகாயம் ஓரிடத்தில் தொடங்கி மற்றோர் இடத்தில் முடிகிறது என்று சொல்ல முடியாது என்பதால் அதற்குப் பிறப்பும் இல்லை, மரணமும் இல்லை என்று ஆகிறது.
எங்கும் என்று சொன்ன பிறகு, அதற்கு கீழ்-மேல் என்றோ ஒரு வருணனை எப்படி இருக்க முடியும்? திடமாக இல்லாது வாயுவாக ஸூக்ஷ்மதாக காற்று போல ஒரு பொருள் இருந்தால், அது கூட இவ்வளவு உயரம் வரைதான் இருக்க முடியும் அதற்கு மேல் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால் அந்தக் காற்றே இருக்கும் பரந்த வெளியோ எங்கும் வியாபித்து இருப்பதால் அதற்கு கீழ்-மேல் என்று ஒன்றும் இல்லாது இருப்பதுதானே லக்ஷணம்! அப்படி வேற்றுமைகள் ஏதும் இல்லாததால் எங்கும் சரி சமமாக இருப்பவன் ஆன்மா என்று விவரிக்கப்படுகிறது.

இல்லாத ஒன்றை உருவாக்கும் போது, அதனைச் செய்வதற்கு என்று சில வரைமுறைகள் இருக்கும். அந்த வரைமுறைகளே பலரும் பாடுபட்டு சில-பல தோல்விகளைச் சந்தித்தபின் கண்டறிந்ததாக இருக்கும். அதுதவிர அதைத் தற்போது செய்வதற்கும் ஓர் ஈடுபாடுடன் கூடிய மனம் ஒன்றும் வேண்டும். அதனையே சித்தம் என்பார்கள். அந்தச் சித்தம் வருவதற்கோ, வளர்வதற்கோ முன்னாலேயே ஒருவனது இருப்பு என்பது ஒரு முன்னோடியாதலால், அந்த இருப்பையே என்றுமுள்ள சித்தன் என்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. “ஸித்தர்கள்” என்று நாம் சொல்வோமே அவர்களை இங்கு நினைத்து குழம்பிக்கொள்ள கூடாது. ஸித்தர்கள் காட்டும் சித்து எல்லாமே மனம் என்ற கருவியைக்கொண்டே செய்யப்படுவது.
அதையே பகவான் ஒரு பாட்டில் சொல்கிறார்.
சித்தத்தின் சார்பு இன்றி சித்தியாச் சித்திகளில் சித்தம் தோய்வார்,
எங்கண் சித்தக் கலக்கம் தீர் முக்தி சுகம் தோய்வார் மொழி
அதாவது சித்தம் என்ற ஒன்று தீர்ந்தால் முக்தி என்னும்போது, அதை எப்படி சித்தத்தைக் கொண்டு செய்யப்படும் ஸித்திகள் மூலம் அடையமுடியும்? என்று கேட்கிறார். ஆதலால் என்றுமுள்ள சித்தன் எனப்படுவது அந்த முக்தி நிலையைக் குறித்துச் சொல்லப்படுவது என்றும், அதாவது நம்மைப் பொருத்தவரை நமது எந்த நிலையிலும் நம்மை நாம் என்று உணர்கின்ற என்றும் உள்ள இருப்பு என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆத்மபோதம் – 28

சித்து எல்லாமே மனம் என்ற கருவியைக்கொண்டே செய்யப்படுவது என்றால் நாம் நினைவும் கூட அவ்வாறுதானே!
ஆத்மாவை தனித்து பார் என்றால் சிறிது கடினம் தான். இன்று காலை நினைத்து பார்த்தேன். உடம்புக்கு வியாதி வரது. உடம்பில் எங்கோ வலிக்கறது. டாக்டர் வந்து ஊசி போடுகிறார். வியாதி வலி ஒருபக்கம். ஊசி போடும்போது அதன் வலி ஒருபக்கம். இரண்டையும் இந்த மனம் தனித்தனியாக உணர்கிறது அல்லவா! அப்பாடி ! டாக்டர் வைத்தியம் பார்த்து விட்டார். டாக்டர் பேரில் ஒரு நம்பிக்கை. மருந்திலும் நம்பிக்கைதான். சிந்தியுங்கள். வலி உணர்வு மனத்தில். சௌக்கிய உணர்வும் அதே மனதில்தான். மனசுக்கு இரண்டு இடமா? இல்லை. நம்மால் நாம் மனதை இரண்டாக பிரித்து உணர முடிகிறது என்பதுதான் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது. அப்போது இந்த “நான்” என்பதை மட்டும் தனித்து பார்க்க முடியாதா என்ன? முடியும். ஒருநாள் முடியும். *குருவாக்கியத்திலும், சாஸ்திரத்திலும் நம்பிக்கைவைக்க* நமது தர்மம் சொல்வதை இங்கு நினைவு படுத்திக்கொள்ளுங்கள். இன்னும் பாருங்கள். வேறு ஒரு உதாரணம். ஸ்ரீரமணபகவான் கையில் ஆபரேஷன் நடந்தது. அவருக்கு வலி உணர்வு இல்லை என அவர்களது சரித்திரத்தில் கண்டுள்ளது. இது எப்படி? நமது காஞ்சி ஸ்ரீமஹா பெரியவாளுக்கு கண் ஆபரேஷன் நடந்தது. அப்போது கூட வலிதெரியாமல் இருக்க முதலில் ஊசி போடவேணும் என டாக்டர் பத்ரிநாத் சொன்னதுக்கு பெரியவா “அதெல்லாம் வாண்டாம். என்னை கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடு” அப்படியென்று சொல்லி 15 நிமிடங்கள் கழித்து ஆபரேஷன் செய்ததாக படித்துள்ளேன். அவராலும் வலியை உணராமல் கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது. உடனே நாம் சொல்லுவோம். நான் என்ன பெரியவாளா ? அல்லது மகரிஷியா ? என. ஆம். சந்தேகமில்லாமல் நாம் மஹானே! எவனால் இதுபோல் மனதை தனியாகவும் “நானை” தனியாகவும் வைக்க முடிக்கிறதோ அவனும் மஹானே! இந்த ஆத்மபோதம் படித்து இதன் பரிணாமத்தல் நம்மில் பலர் ஞானிகளாக நிச்சயம் வருவதற்கு வாய்ப்பு உண்டு.
नघटितघटना पटीयसी माया நகடிதகடனா படீயஸீ மாயா… சங்கரர் மாயா பஞ்சகம் என்று ஒன்று எழுதியுள்ளார். அதில் இந்த வாக்கியம் வருகிறது. அர்த்தம் சொல்லட்டுமா? “இந்த மாயை இருக்கிறதே அடாடா, அதைப் போல் ஆட்டிவைப்பது வேறெதுவும் இல்லை. வேத சாஸ்திரங்கள் நியாயங்கள், சகலமும் கற்றவர்களும் நாலு கால் விலங்குகளும் ஒன்று தான் என்பது போல் எல்லோர் மனதையும் கெடுத்து மாற்றி விடுகிறது இந்த மாயாசக்தி. அது தான் அவர்களை ஆசை காட்டி மோசம் செய்வது . அந்தோ என்ன கொடுமை இது!” நமது உபாஸனையில் மாயா என்பதே பராசக்தி தான். அவள் கருணை நமக்கு உண்டு. இப்போது சொல்லுங்கள். உங்களால் ஏன் மஹானாக ஆகமுடியாது? முடியும் என்று Positive ஆக நினையுங்கள். நாம் பணக்காரனாக ஆகிவிடுவோம், பெரிய வீட்டில் வாழுவோம் என்றெல்லாம் நினைத்ததில்லையா ! அதுபோல் ஆத்மஞானியாக ஆவோம் என்று நினையுங்கள். இது என் அனுபவம். ஆத்மஞானியான, பரமஹம்ஸர் போன்ற ஒரு மஹான் எனக்கு குருவாக வர வேணும் என்று 55 ஆண்டுகளுக்கு முன் நினைத்துக்கொண்டு இருந்தேன். அதுபோல் கிடைத்தாரா இல்லையா! குரு மட்டுமா எனக்கு ஆத்மஞானி – இல்லையே! பத்நியும் அல்லவா அப்படியே வந்தாள். உண்மை அல்லவா! எண்ணங்களுக்கு என்றும் பலமுண்டு. எனவே இன்று நமது ஆத்மபோதம் சிந்தனை இவ்வாறாக தொடங்கி விட்ட இடத்தை தொடுவோம்.
நமது அன்றாட நனவு-கனவு-உறக்க அனுபவங்களில் வந்து போகும் ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண தேகங்களுக்கு ஏற்றாற்போல் விதவிதமான மலங்கள் இருக்கின்றன. ஸ்தூல தேகத்துக்கு வியர்வை, சிறுநீர் போன்ற நமது கழிவுகளான மலங்கள் உள்ளன. இவை அவ்வப்போது அகன்றால் தான் நமது ஸ்தூல தேகமே இந்த உலகில் தங்க முடியும். அவை போன்றே கனவில் நாம் ஸூக்ஷ்மதேக அடைவின் காரணமே நமது ஆசை, பொறாமை, பழி வாங்கும் மனம், துயரம் போன்ற மலங்கள் தான். அவை எதுவும் இல்லாது போனால், எந்தக் கனவும் இல்லாது ஒரு மனிதன் அமைதியாகத் தூங்கியிருப்பான். நமது ஆழ்உறக்கத்தில் வரும் காரண தேகத்தின் மலமோ “தான் இருக்கிறோம்” என்றுகூட தன்னைப் பற்றியே அறிய முடியாத தன்மையான அவித்தை எனப்படும் அறியாமைதான். இப்படி தேகங்கள் பல வந்து போனாலும், இவை எதையுமே பற்றிக்கொள்ளாது, அதனால் இவை எதனாலுமே பாதிக்கப்படாது, நிர்மலமாய் இருப்பவன் என்று இந்த *ஆத்மா* சொல்லப்படுகிறது.
ஸ்தூல வடிவில் ஜடப்பொருளாக இருந்தால் இங்கே அங்கே என்று அசைவுகள் இருக்கும். ஜடமாக இல்லாமல் எங்கும் பரவி இருப்பதால் ஓர் இடைவெளியும் இல்லை, அது அசைவதற்கு இடம் என்றும் ஏதுமில்லை. அதனால் சலனம் ஏதுமில்லை. ஸூக்ஷ்மவடிவில் மனம் போல இருந்தாலோ ஏதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்றோ அல்லது செய்ய முடியவில்லை என்றோ, அது அப்படி இருக்க வேண்டும் என்றோ அல்லது கூடாது என்றோ, விதவிதமான வகைகளில் சலித்துக்கொண்டு இருக்கும். அப்படி இல்லாததனால் அது நிச்சலத்தன்மை கொண்டுள்ளது. இந்த நிச்சலத்தன்மை வந்தாலே *ஜீவன்முக்தி* என்று இதே சங்கரர் வாக்கியமாக அவரின் பஜகோவிந்த ஸ்லோகத்தில் காணலாம்.
இப்படி எல்லாத் தன்மைகளும் கொண்ட ஒன்றே ஆத்மா ஆகும், அதுவே நான் என்பது என்றும் அறிந்துகொள்வாயாக என்று முதல் ஸ்லோகத்தில் கூறினார். அடுத்ததில் இங்கு வேத-உபநிடத வாக்கியங்களையே வைத்து இந்த ஆத்மாவை விளக்குகிறார்.

நித்யசுத்தவிமுக்தைகமகண்டானந்தமத்வயம் |
ஸத்யம் ஞானமனந்தம் யத்பரம் ப்ரஹ்மாஹமேவ தத் ||

எது நித்தம் சுத்தம் எது முக்தம் ஏகம்
எது அகண்ட இன்பு இரண்டல்லது – எது சத்து
சித்து அனந்தம் ஆகும் திகழ் அப்பரப் பிரம
வத்து யானேயா மதி

எந்தப் பொருள் என்றும் இருப்பதாயும், எப்போதும் பரிசுத்தமாய் இருப்பதாயும், எந்தப் பந்தமும் இல்லாததாயும், இரண்டற்ற ஒன்றேயாக இருப்பதாயும், இடைவிடாத ஆனந்தவடிவானதாயும், இருக்கும் பொருள் உண்மையாயும் அறிவுமயமாயும், முடிவில்லாது விளங்குகிறதோ அந்தப் பரப்பிரம்மமே நான் என்பதை உணரவேணும்.

*இதன் விரிபொருள்*
தொடர்ந்து இந்த செய்யுளிலும், ஆன்மாவின் லக்ஷணங்களைப் பற்றிக் கூறுகிறார்.
வருவது போவது என்றில்லாமல் என்றும் இயல்பாய் உள்ளதால் அது *நித்தியன்*
எந்த விதமான மலங்களும் அதற்கு இல்லாமையால் அது *பரிசுத்தன்*
அது ஒன்று இருப்பதால்தான் தேகம் போன்ற மற்றவைகள் இருக்க முடியும் என்பதாலும், எதனையும் பற்றுவதற்கு அதற்கு ஏதும் பற்றுக்கோடுஇல்லாததாலும் அது எந்தப் பந்தமும் இல்லாது இருப்பது எனச் சொல்லப்படுவதால் *அத்வயன்*
அதனால் வேறு எவை தோன்றினாலும் அவை எதனாலும் பாதிக்கப்படாது, ஆனாலும் அவை அனைத்தையும் ஸாக்ஷியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் *ஏகன்* வேறு ஒன்று வேண்டும் என்றால்தான் எதிர்பார்க்கப்படுவது வருமோ, வராதோ என்ற சம்சயங்கள் இருக்கும். வந்தால் இன்பமும், வராவிட்டால் துன்பமும் அடைவது இயல்பான தொடர் நிகழ்வுகள். தன்னைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றால் எதிர்பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை, அதனாலே வரக்கூடிய எந்த மாறுபாடான நிகழ்வுகளுக்கும் இடமில்லை. தான் மட்டும் இருப்பதால் தன்னிலே இன்புற்று *தனியன்*
அதற்கு வேண்டுவது ஏதும் இல்லையாதலால் அது எப்போதும் *ஆனந்தம்*
உள்ள பொருளான அது ஒன்றே இருப்பதால் அதைத் தவிர வேறு இருக்கிறது என்று சொல்வதற்கு ஏதுமில்லை என்பதால், அது ஒன்றே *ஸத்யம்*
இருப்பது என்று மட்டும் இல்லாது, தான் இருப்பதை உணர்ந்துகொண்டும் இருப்பதால் அது ஒன்றே *சுத்தஅறிவு*
*ஸத்யம் ஞானமனந்தம் ப்ரஹ்மா* இது உபநிஷத் வாக்கியம்.
அதனாலேயே உலகில் உள்ள மற்ற அனைத்திற்கும், அவைகள் இருக்கின்றனவா இல்லையா என்று சொல்வதற்கு சாக்ஷியும், நிரூபணமும் தேவை என்னும்போது, எவருக்கும் தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எப்போதும் வருவதில்லை. அதனாலேயே எவரிடமும் அதைக் கேட்பதும் இல்லை. அவரவர் புத்தியின் மூலம் வரும் தன்னைப் பற்றிய அந்த சிற்றறிவு கூட, அந்தப் பேரறிவு இருப்பதால் வரும் அறிவே என்பதை உணர்ந்தே தெரிந்துகொள்ளமுடியும். சிற்றறிவு என்பது கண்ணாடியில் பிரதிபலிக்கும் நம் மறுவடிவம் அல்லது நம் நிழல். நாம் அவைகளைப் பிடிக்கலாம்; ஆனால் மறு உருவமோ, நிழலோ நம்மைப் பிடிப்பது எப்படி? அதுபோல பேரறிவைப்பற்றி சிற்றறிவு எப்படி அறிய முடியும்? நம் அறிவால் அதனை அறியும் முயற்சியை விட்டுவிட்டு, அதுவாக இருப்பதால் மட்டுமே அந்தப் பேரறிவை உணர்ந்துகொள்ள முடியும்.
இருக்கிறோம் என்ற உணர்வுக்கு ஒரு தொடக்கம் இல்லாததால் அதற்கு ஒரு முடிவும் கிடையாது. அந்த உணர்வு கூட முடிவு என்றில்லாத அந்தப் பேரறிவின் இயல்பினால்தான் ஒருவனுக்கு வருவதாகும்.
இப்படியாக மேலே சொல்லப்பட்ட அனைத்து இயல்புகளும் ஆன்மாவினுடையதாக உணர்ந்துகொள்ளவேணும். அதுவே “நான்” என்ற உணர்வாக நம்மிடம் விளங்குகிறது என்று தெளிக.

ஆத்மபோதம் -29 *ஆத்மஸித்தி*
தினமும் நீங்கள் ஆத்மபோதம் படிக்கிறீர்கள். இது கதையில்லை. நிகழ்வும் இல்லை. மனதில் அனுபவிக்கவேண்டியது. Chemical Reactions தெரியுமா உங்ளுக்கு. அதுபோல் இது. நம்மை கொஞ்ச கொஞ்சமாக மனதளவில் மாற்றவேணும். உங்களுக்கே தெரியாமல் இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கும். நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ரஸாயனமாற்றம் இது. இன்று எப்போது ஆத்மபோதம் பகிர்வு எப்போது வரும் என நீங்கள் எதிர்நோக்குகிறீர்கள் என்றால் அதுதான் மாற்றத்தின் அறிகுறி. சங்கரரும் அடுத்த ஸ்லோகத்தில் இது பற்றியே பேசுகிறார்.
ஏவம் நிரந்தராப்யஸ்தா ப்ரஹ்மைவாஹஸ்மீதி |
ஹரத்யவித்யாவிக்ஷேபான் ரோகாநிவ ரஸாயனம் ||

நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்
பிரமமே யான் ஆவன் என்னும் – உறுதி
அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்
ஒழிக்கும் இரசாயனம் ஒத்து

அந்தப் பிரம்மமே நான் என்ற பாவத்துடன் ஸதா சர்வகாலமும் தியானிக்க, அதன் பயனாகப் வரும் உறுதியானது, தீர்க்கமுடியாது என நினைத்துக்கொண்டிருக்கிற நோய்களையும் குணமாக்கும் மஹாமருந்தாகிய ரஸாயனக்கலவை போல, அஞ்ஞானத்தினால் ஏற்படும் மனக் குழப்பங்களையும் அழித்துவிடும்.

*இதன் விரிபொருள்*
நாம் பெறுவதிலேயே பெறற்கரிய பெரியபேறு ஆத்மாவை உணர்வதுதான். அந்தப் பேற்றை அடையும் நேரடியான வழி இங்கே சொல்லப்படுகிறது.
இதுவரை ஆத்மாவின் லக்ஷணங்களைப் பற்றி விவரமாகப் பார்த்தோம். அதனை உணரும் நேர்வழியை இனி சொல்கிறார். எல்லாவற்றிலும் ஒன்றை அடைய முடியாதபடி தடுத்துக்கொண்டிருப்பது ‘அதுமுடியுமா, முடியாதா’ போன்றதில் தொடங்கி அடுக்கடுக்காக வரும் பலவிதமான மனக்குழப்பங்கள்தான்.
இங்கும் அதே பிரச்சினை என்றால் ஆன்மாவைத் தேடி அலைவதும் மற்ற உலகியல் பிரச்சினைகள் போன்றதுதானா என்ற சந்தேகம் எவருக்கும் வரலாமே? தொடக்கத்தில் அதுதான் உண்மை என்றால் எங்கோ கொஞ்சம் இடிக்கிறது போல் இருக்கிறதல்லவா.
தியானம் என்றால் என்ன?
சொன்னவற்றை மனத்தில் இருத்தி, அதில் உள்ள உண்மைகளை மனத்தில் ஏற்றி, அதைப்பற்றி ஸதாசர்வகாலமும் சிந்தித்து, சிறிதுசிறிதாக அறிவினால் அலசி ஆராயப்பட்ட அந்த உண்மைகளை தன் சொந்த அனுபவத்தில் காண முயற்சிப்பதுதான்.
இந்தப் பயிற்சியில் ஆரம்பம் முதல் இதுவரை சொல்லப்பட்டது எல்லாமே மனம், புத்தி இவைகளின் துணை இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்பதுதான். அந்த தொடர்முயற்சியின் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவம் என்று வந்த பின்தான் அனைத்தும் ஒருவன் உள்வாங்குகிறான். அதனால் வெளி உலகைக் காணும் கருவிகளான மனமும், புத்தியும் இயங்கும் வரை ஆன்மாவைத் தேடும் முயற்சியும், மற்ற எந்தவிதமான உலகியல் பிரச்சினைகள் போலவே, குழப்பங்களும் நேரிடலாம். இப்படி வருவதெல்லாம் எனக்கு என்றால், “நான் யார்?” என்று கேட்கப்படும் கேள்வியும் தொடக்கத்தில் அறிவுடன் கேட்கப்படுவதுதான். அதற்குப் பதிலை அறிவோடுகூட புத்தியின் துணையுடன் தேட முயற்சித்தால் ஆன்மாவை உணரமுடியாது. ஆனாலும் இடைவிடாது கேள்வி கேட்டு, கேட்டு பயிற்சியைத் தொடர்ந்துகொண்டே இருக்க, போகப்போக அறிவுபூர்வமாகக் கேட்பவனும் மறைந்து, கேள்வியும் மறைந்து, கேட்கும் ஒருவன் தனது இருப்பை உணரும்போது, உறுதியாக உணரப்படும் தன்னைத் தானே அறிய, அதுவரை *தான்அறியவில்லை* என்ற அந்த அஞ்ஞானமும், தீராது என நினைக்கப்பட்ட நோய்களைப் போல அழியும். அப்படி இருக்கும் ஒன்றான ஸத்தை மறைத்து நின்ற அனைத்தும் அழிய, இறுதியில் இருப்பதானது அறிவுமயமாய் நின்று ஆனந்தமாய் இருப்பது அனுபவத்திலே உணரப்படும் என்கிறார்.
அருட்சக்தியால் சிந்திக்கப்பட்டு எழுதி வெளிவந்த *லலிதா ஓர் இன்பக்கலப்பு* என்ற நூலில் இந்த ஆனந்த அனுபவம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு சென்று சற்று அந்த நூலை எடுத்துப்பார்த்தீர்களானால் தெரியும்.
அடுத்த ஸ்லோகம் தொடருகிறது…

விவிக்ததேஷா ஆஸினோ விராகோ விஜிதேந்த்ரிய: |
பாவயே தேகமாத்மானம் தமனந்தமன்யதீ: ||

ஏகாந்த தேசத்து இருந்து ஆசையின்றி வெளி
போகாது வென்று பொறிகளை – ஏகமாய்
அந்தமில் ஆன்மாவை அன்னியமில் புந்தியனாய்ச்
சிந்திக்க வேண்டும் தெரி

தனிமையான இடத்தில் இருந்துகொண்டு ஆசைகள் அற்றவனாய், வெளி விஷயங்களை நோக்கிப் போகும் ஐம்புலன்களை வென்று, தன்னைத் தவிர வேறெந்த விஷயத்திலும் மனத்தை விடாத ஒரே சிந்தனை உடையவனாகி, எல்லா ஜீவர்களையும் உள்ளடக்கிய ஆன்மாவை மட்டுமே சிந்திக்கவேண்டும் என்று தெரிந்து கொள்வாய்.

*இதன் விரிபொருள்*
மனமும் புத்தியும் இயங்கும் போதுதான் நான் யார், நம்மால் ஆவதென்ன, நம் வாழ்க்கையின் பொருள் என்ன என்றெல்லாம் நம்மைப் பற்றி சிந்திப்போம். அப்படி சிந்திக்கும்போது எவருக்கும் தன் முன்னே தெரியும் உலகமும், அதில் தானொரு அங்கம் என்றும், அந்த உலகத்தில் தான் செய்யவேண்டியது என்ன என்றபடி எண்ணங்கள் தோன்றும். வெகு சிலருக்கே அப்படி யோசிப்பவன் யார் என்ற எண்ணம் வரும். அப்படி தன்னைப் பற்றி யோசிக்காது, தனக்கு வெளியே உள்ளவற்றைப் பற்றியே யோசிப்பவனுக்கும் தன்னைப் பற்றிய யோசனை ஒரு காலத்தில் வரும். அப்படி வரும்போது, அவனை அதுவரை இயக்கிக்கொண்டிருந்த அவனது மனத்தையும், புத்தியையும் உள்முகமாக்கி தன்னைப் பற்றி அறிய, அவன் முழு முயற்சி எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
அப்போது அவன் அதுவரை தன்னை ஆட்கொண்டிருந்த உலக வாஸனைகள் அனைத்திலுமிருந்து விலகுவது என்பது முதல் படி. அதற்கு அவன் தனிமையை நாட வேண்டும். இல்லையென்றால் பழையபடி அவனால் உலகத்தைத்தான் கவனிக்க முடியும்; கவனிக்கும் தன்னை அறிய முடியாது. தனிமையில் இருக்கும் அவன் அதுவரை தன்னை வெளியே இழுத்து அலைபாயக் காரணமாகத் தன்னுள் இயங்கிக்கொண்டிருந்த தனது இந்திரியங்களையும் அடக்கி, அவைகளால் முன்பு வெவ்வேறு விஷயங்களில் வைத்திருந்த ஆசை முதலான குணங்களையும் விட்டு, அவை எப்போதெல்லாம் மறுபடி எழுகின்றதோ அப்போது அவன் தனது உள்முக நாட்டத்தை உறுதியாக்கிக் கொள்ளவேண்டும். இப்படி உறுதி வரும்வரை பழகப் பழக, அவன் தன்னைப் பற்றிய ஒரே சிந்தனையுடன் இருக்க முடியும். அந்த உறுதி வரவில்லையென்றால் தனித்திருந்தும் பயன் இல்லாமல் போய், மனத்தின் கண் இருக்கும் வாஸனைகளால், உடலால் இல்லாது போனாலும் உள்ளத்தால் உலக விஷயங்களில் நாட்டம் ஏற்படும்.
ஒரே சிந்தனையுடன் இருக்கும் அவன் “தன்னையன்றியாருண்டு?” என்றும், தன்னுணர்வுக்குப் பின்பே மற்றெவரையும் உள்ளடக்கும் உலகம் வருகிறது என்பதையும் உணரும்போது, அவனுக்கு மற்ற ஜீவராசிகளும் தன்னைப் போலவே இருப்பதையும் உணர வாய்ப்பு வருகிறது. அதனால் தான் மட்டுமன்றி எவரும் இருப்பது அனைவரையும் உள்ளடக்கும் *ஆன்மா* என்பதை இடைவிடாது சிந்திக்க வேண்டும். மனம், புத்தி இவற்றால் உந்தப்பட்டு இப்படி முயற்சி எடுக்கும் ஒருவனுக்கு, அவைகளையும் கடந்து இருக்கும் ஒன்றான ஆன்மா விரைவில் ஸித்திக்கும்.

ஆத்மபோதம் – 30 *சிதானந்தசிந்தனை*

ஐந்துபூதமுமாறு சமயமுமந்த்ர வேதபுராண கலைகளும் ஐம்பதோர்விதமான லிபிகளும் …… வெகுரூப – என்ற அருணகிரியின் திருப்புகழ் தெரிந்திருக்கும். அதில் எல்லாமே சிவயோகம் என்கிறார். சிவயோகம் தான் ஆத்மயோகம் என்று இங்கே சங்கரர் சொல்கிறார். தினம் தினம் நமது சிந்தனை வரவர சற்று உயர்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் கவனமுடன் தொடருங்கள். நிதானமாக படியுங்கள். அப்போதுதான் நாம் புத்திமான் என்று சங்கரரும் பகவானும் சொல்லும் நிலைக்கு நாம் உயரலாம். அடுத்த பாடல் அதையே வலியுறுத்துகிறது…..

ஆத்மன்யேவாகிலம் த்ருச்யம் பிரவிலாப்ய தியா சுதி: |
பாவயே தேகமாத்மானம் நிர்மலாகாசவத் ஸதா ||

புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவில்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே – சுத்தமாம்
விண்ணென ஒன்றாய் விளங்கிடும் ஆன்மாவை
எண்ணுக எப்போதுமே

கேட்டல், சிந்தித்தல் முதலான வழிகள் மூலம் கற்றுணர்ந்து தேர்ந்தபுத்தியை உடையவன், தான் ஆன்மாவாய் இருப்பதால், தான் காணும் வெளியுலகப் பொருட்கள் எல்லாவற்றையுமே அந்த ஆன்மாவின் பிரதிபலிப்பாக தனது புத்தி மூலம் அறிகிறான். எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்யவேணும்.

*இதன் விரிபொருள்*
நம்மை யாராவது அவதூறு பேசினால் அதைப் பொருட்படுத்தினால் மட்டுமே அது நம்மை பாதிக்கும். அந்தப் பழிச்சொல்லை நாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அது பேசியவரோடு நின்றுபோய்விடும் அல்லவா? அதே போலத்தான் ஒரு பொருளை நாம் பார்க்கிறோமென்றால் அந்தப் பொருள் இருப்பது என்பது தவிர, நம்மைப் பொருத்தவரை அது இருப்பது என்பது நாம் பார்ப்பதால்தான் என்கிற உலகியல் தத்துவம் இங்கு நமக்குக் கை கொடுக்கிறது.
நான் தேகம் மட்டுமில்லை, அதனிலும் ஸூக்ஷ்மதான மனம். அதைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தும் புத்தி. இப்படி இருந்தாலும் நம்மை நாமே அறியாதவாறு உள்ள நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதைப் பார்த்தோம். அதனாலும் அது தவிர நமக்குத் தெரிந்த மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் இதுபோன்ற நிலைகள் உள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கும் ஆன்மாவே நாம் என்றும் பார்த்தது. அப்படி நாமே ஆன்மா என்றால் நாம் பார்ப்பது, கேட்பது எதுவும் ஆன்மாவைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும் என்று நிச்சயிப்பதுதானே அடுத்த நிலை. நாம் நம்மைப் பற்றி நன்கறிய இப்படியாகக் கேட்டு, சிந்தித்து அதனால் தெளிவு பெற்ற புத்தியுடன் இருக்கும்போது, நம் ஒவ்வொருவரையும் முதலாகக் கொண்டே மற்றது எதுவும் அமைகிறது என்பது விளங்கும். இந்த வாதம் எவருக்குமே பொருந்தும்.
ஆன்மாவைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று இவ்வாறாக உணர்வதை பரந்து, விரிந்த ஆகாயத்திற்கு ஒப்பாக இங்கு சங்கரர் விவரிக்கிறார். மாசுகள் எதுவும் இல்லாதது ஆகாயம். அப்படி மாசுகள் எதுவும் இருந்தால், (மேகம் போன்றவை) அவை ஆகாயத்தைப் பாதிக்காது. அதேபோல ஆன்மாவும் அகன்று விரிந்து இருப்பது மட்டுமன்றி, ஆசைகள், எண்ணங்கள் எதனாலும் ஆன்மா பாதிக்கப்படாது. எங்குதான் ஆகாயம் இல்லை, அதேபோல எங்குதான் ஆன்மா இல்லை என்பதை இவ்வாறாக புத்தியளவில் அறிவது போதாது. அது உள்ளத்தளவில் உறைந்து நிற்பதற்கு ஆன்மாவைப் பற்றி எப்போதும் தியானம் செய்யவேண்டும். எப்போதெல்லாம் ஸாதனை தளர்ந்து மனமும், புத்தியும் வெளியுலகை நோக்கிச் செல்ல முனைகிறதோ அப்போதைக்கு அப்போதே அதனைத் தடுத்து உண்முகமாக ஆன்மாவைத் தியானித்தல் அவசியம் என்று ஆகிறது.
அடுத்த பாடல்….

ரூபவர்ணாதிகம் சர்வ விஹாய பரமார்தவித் |
பரிபூர்ண சிதானந்தஸ்வரூபேணாவதிஷ்டதே ||

உள்ளது உணர்ந்தோன் உருவம் வருணம் முதல்
உள்ள மயல்கள் ஒருங்கு ஒழித்து – உள்ளம்
திகழ் பரிபூரண சிதானந்தம் தானாத்
திகழ்ந்திடுவன் நாளும் தெளி

உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற சிதானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்.

*இதன் விரிபொருள்*
ஒரு பொருளைப் பார்க்கும்போது நமக்கு அதன் உருவம், நிறம் போன்ற தன்மைகள்தான் முதலில் தெரியும். அதேபோல ஓர் மனிதனை சந்திக்கும்போது நமக்கு அவரது நிறம், உருவம் தவிர நம் மனதளவில் அவருடைய வேறு பல குணங்கள், செய்கைகள் என்று ஞாபகத்திற்கு வரும். இதுதான் உலகியல் நியதி. எப்படி ஒரு பொருளைக் காண்பதைவிட ஓர் மனிதனை சந்திக்கும்போது, வெறும் ஜட சம்பந்தமானவைகள் தவிர பல ஸூக்ஷ்மத்தன்மைகளும் புலனாகிறது. அதுபோல மேலும் ஸூக்ஷ்மதான பார்க்கப்பட்டதின் உண்மைத் தன்மை என்று ஒன்று இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும் என்று பலருக்கும் தோன்றுவதில்லை. அதாவது நமது நண்பன் ஒருவன் நீண்ட நாட்கள் பார்க்கவில்லை. திடீரென்று ஒருநாள் பார்க்கிறோம். “என்னப்பா! எப்படியிருக்கே? சௌக்கியமா? என்று கேழ்க்கிறோம். அவரும் “சௌக்கியம்” என்கிறார். உடனே நமக்கு அவனது இளமை பழக்கமான கிண்டல், கேலி பேசுவது நமக்கு ஞாபகம் வருகிறது. இதைத்தான் இங்கே சொல்கிறார் – ஸூக்ஷ்மத்தன்மைகளும் புலனாகிறது என்று. எவரும் தனது உண்மைத் தன்மையை அறியாமல் இருப்பதே. நம்மை எப்படிப் பார்க்கிறோமோ அதேபோல மற்றவரையும் பார்க்கும் வழக்கம்தான் நம்மில் ஓங்கியிருக்கிறது.
உருவம், நிறம் போன்ற தன்மைகள் எல்லாம் ஒன்றை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குணங்கள். பார்த்தவுடன் முதலில் அப்படித் தெரியும் வேற்றுமைகளைப் பார்த்துக்கொண்டே இருப்பவனுக்கு அவை மட்டும்தான் தெரியும். எப்படி ஒருவனைப் பார்க்கும்போது அவனுக்கும் நமக்கும் இருக்கும் வேற்றுமைகளைப் பாராட்டாது, நாம் அவனையும் நம்மைப்போல மனிதன்தான் என்ற ஒற்றுமையைப் பார்ப்பது உலகியல் வழக்கப்படி முன்னதைவிட உயர்ந்ததோ, அதேபோல ஆன்மீகத்திலும் நாம் பார்க்கும் பொருளின் வேற்றுமைகளை நீக்கிவிட்டு அவைகளின் உண்மைத் தன்மையை அறிய முயற்சிக்கவேண்டும்.
பகவான் உபதேசத்தை இங்கு நினைவு படுத்திக்கொள்வோம். ஒரு ஸாதகர், ‘‘பகவானே இந்த மனம் தானாகவே சென்று ஆத்மஸ்தானத்தில் சென்று உட்கார்ந்து கொள்ளக் கூடாதா‘‘ என்று கேட்டார். பகவான் அமைதியாக இருந்தார். அருகே அணில் ஒன்று நிறைய குட்டிகள் போட்டிருந்தது. அங்கும் இங்கும் தலையை தூக்கி ஓட எத்தனித்தது. மகரிஷி அதை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு சிறியகுடுவையில் எடுத்து பத்திரமாக வைத்து உணவும் கொடுத்தார். எதிரே இருந்தவர் முகம் மலர்ந்தது. பகவான் புரிகிறதா… என்பதுபோல பார்த்தார்.
‘‘இந்த அணில் குஞ்சுகளுக்கு நாம வெளியபோனா நம்மள பூனையோ, வேறு பிராணியோ கொத்தி தூக்கிண்டு போயிடும்னு தெரியாது. அதுக்கு அந்த விவேகம் வரவரைக்கும் நாமதான் அதை உள்ள போட்டுண்டே இருக்கணும். அதுமாதிரிதான் மனசுக்கு வெளிய போறதுனால துக்கம் வரும்கற விஷயம் தெரியாது. மனசுக்கா தெரியற வரைக்கும் நாமதான் அதை வெளியிலிருந்து உள்ள பிடிச்சு போட்டுண்டே இருக்கணும்’’ என்று எளிமையாக கூறினார். எத்தனை உண்மை பாருங்கள்.
நாம் காண்பதெல்லாம் எப்போதும் நமக்குச் சரிவரத் தெரிவதில்லை. அவையெல்லாமே நம் நம்பிக்கைக்குத் தகுந்தபடியும், சில சமயம் நம் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றவாறும் இருப்பதைத்தான் பார்க்கிறோம். ஆனாலும் ஒன்றின் தன்மைகளைப் பற்றி அறியும் முன்பாக, நாம் காண்பது முதலில் அங்கு இருக்கிறது என்பது உண்மைதானே? அதைக் காண்பதற்கும் முன்னால் நாம் இருக்கிறோம் என்பதும் உண்மைதானே? ஆக காணப்படும் ஒன்று எப்படி இருக்கிறதோ, அதேபோல காணும் ஒன்றாகிய நாமும் இருக்கிறோம் என்பதை யார் மறுக்க முடியும்? அப்படிக் காண்பவன் தன்னை அறிவதுபோல, காணப்படும் அதுவும் தன்னை அறிந்திருக்கலாம் என்று சொல்வதும் சரிதானே?
இப்படி இருப்பதும், அறிவதுமாய் உள்ள அந்த நிலை எவர்க்கும் பொதுவானதே. அந்த நிலையிலேயே நிற்பவனுக்கு எந்தவிதமான வேற்றுமைகளும் தெரியாது. அப்போது அவன் ஸதாசர்வகாலமும் ஆனந்தமாகவே இருப்பான். அந்த நிலையிலிருந்து வழுவி விடுபவனுக்கு மட்டுமே வேற்றுமைகளும், அதனால் வரும் இன்ப-துன்பங்களும் வரும்.

ஆத்மபோதம் 31 *த்ருபுடி*

பலநாட்களுக்கு முன்பு பாவனோபநிஷத் என்கிற நமது உபாஸனைக்குரிய வேத வாக்கியங்களைப்பற்றி சொல்வதாக எழுதி இருந்தேன். ஞாபமிருக்கும். அதனை விளக்கவேண்டிய நேரமிது. அந்த தத்துவங்களையே இங்கு சங்கரர் சொல்லப்போகிறார். எனவே இங்கு சங்கரர் சொல்வதை முதலில் படிப்போம். பிறகு பாவனோபநிஷத் விளக்கம் சொல்கிறேன். ஓரளவு ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர நவாவரணபூஜை தெரிந்தவர்களுக்கும், சிதானந்தஅலையை நன்றாக படித்தவர்களுக்கும் பாவனோபநிஷத் என்பது நன்றாக புரிய வாய்ப்பு உண்டு. “பாவனோபநிஷத்தோ, ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர நவாவரணபூஜையோ தெரியாத வர்கள்கூட ஆத்மஞானம் அடைவதில் எந்த தடையும் இல்லை.” ஆனால் ஒன்று. ஸ்ரீவித்யா-ஸ்ரீசக்ர நவாவரணபூஜையும் அதற்கான தீக்ஷையும் ஸ்ரீஸத்குரு முகாது பிறவிப்பயானால் அடைந்தவர்களுக்கு வெகு சீக்கிரம் ஆத்மஞானம் கிட்டும் என்பது ஸத்யம். மற்றவர்களுக்கும் பிறவிப்பயனும், ஸாதனா பலமும், குருவாக்கியத்திலே சிரத்தையும் இருக்கும் பக்ஷத்தில் நிச்சயம் அவர்களும் ஞானம் அடைவதில் எந்த தடையும் இல்லை. அனைத்துக்கும் மூலம் தத்துவஞானமே! விசாரமே! முதலில் அதனை புரிந்துகொள்ளுங்கள்.
தொடர்ந்து சங்கரரை பின்பற்றுவோம்….

ஞாத்ருஞானஞேயபேத: பரே நாத்மனி வித்யதே |
சிதானந்தைகரூபத்வாத்திப்யதே ஸ்வயமேவ தத் ||

அறிவான் அறிவோடு அறிபடுவ பேதம்
உறு பரமான்மாவில் உறாதே – அறிவின்
புருவாய் ஒன்றாய் அஹ்து உறுவதனால் தன்
உருவாலே தான் ஒளிரும் ஓர்

அறிபவன், அறிவு, அறியப்படுவது என்ற மூன்றுபுடிகளான வேற்றுமைகள் என்பது சாசுவதமான ஒன்றேயான ஆத்மாவிற்குப் பொருந்தாது. ஆன்மா அறிவுமயமாய், ஆனந்த வடிவாய், ஒரே பொருளாக இருக்கும் தன்மையதால் தானே தானே ஒளிரும் என்று உணர்ந்துகொள்.

*இதன் விரிபொருள்*
நாம் ஒன்றைத் தெரிந்து கொண்டிருக்கிறோம் என்றால் தெரிந்துகொண்டுள்ள அந்தப் பொருளையும், நம்மையும் தவிர, நமக்கு அந்த பொருளை பற்றியுள்ள அறிவு என்று மூன்றையும் பிரித்துச் சொல்வது வழக்கம். அதாவது அறிவு என்பது நம்மையும் அந்தப் பொருளையும் இணைக்கும் ஓர் உறவு என்று கூட சொல்லலாம். ஆத்மாவைப் பற்றிச் சொல்லும்போதும் அத்தகைய பிரிவுகள் உண்டா என்ற சந்தேகத்திற்குப் பதில் சொல்வதுபோல அமைந்திருக்கிறது இந்த ஸ்லோகம். இன்பம்-துன்பம், நல்லது-கெட்டது என்பன போன்ற குணங்கள் என்று வந்தால் இருமைகள் வந்துவிடும் என்று முன்பே பார்த்தோம். அதைப் போல அறிவு என்ற ஒன்று வந்துவிட்டால் முப்புடிகள் உண்டு என்று இங்கே பார்க்கிறோம். அதனால் ஆன்மாவைப் பற்றிய அறிவு வரும்போதும் இத்தகைய வர்ணனை உண்டா என்ற சந்தேகம் வருவது சகஜமே!
முப்புடிகளாகிய வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு ஆள் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு ஆள் இல்லை. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான் என்ற இரு “நான்”கள் அல்லவா இருக்கவேண்டும். “நான்” என்ற நமது உணர்வு எப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளதால், அது என்றும் ஒன்றே. அங்கு இரு “நான்”கள் இல்லாததால் முப்புடிகளான வேற்றுமைகள் ஆன்மாவிற்குப் பொருந்தாது. ஆனால் ஒருவன் ஆன்மாவைப் பற்றிப் பேசும்போது, அப்படிப் பேசுபவன் “நான்” என்று எண்ணுபவனாதலால் ஆன்மா ஒரு பேசப்படும் பொருளாகி வேற்றுமைகள் தெரியும். அந்த வேற்றுமைகள் “தான்” என்று உணரப்படும் ஆன்மாவிற்குப் பொருந்தாது.
இங்கு சற்று மனசாந்திக்கு உதாரணம் காணலாம். நமது பூஜையை எடுத்துக்கொள்வோம். எதிரில் பூஜை செய்ய வைத்துள்ள ஸ்ரீசக்ரம் – ஸ்ரீமேரு அல்லது சாளக்கிராமம் ஏதோ ஒன்று. பூஜை செய்ய உள்ள நாம். பூஜா திரவ்யங்கள். அதாவது நீர், புஷ்பம் முதலியன. சரியா? இங்கு மூன்று விஷயம். ஆதனால் இது திருபுடி-முப்புடி என்பர். (ஞாத்ருஞானஞேயனாம் அபேதபாவனம் ஸ்ரீசக்ரபூஜனம் – இது பாவனோபநிஷத் வாக்கியம். அறிபவன் – அறிவு – அறிபடும் பொருள் என்று.) (we know in English subject – predicate – object. These are not separate)
இங்கு ஆத்மா – அறிவு – நான் மூன்று இருக்கிறதா? இல்லை. இங்கு ஆத்மா ஒன்று மட்டுமே இருக்கிறது. மேலும் அது தன்னையே உணர்ந்து கொள்ளும் அறிவுமயமாயும் இருக்கிறது. “நான்” என்று சாதாரணமாக நம்மை நினைத்துக்கொண்டு செயலாற்றும் போது நமக்கு உள்ள புத்தியும் அந்த அறிவின் பிரதிபலிப்பாய் அதிகரிக்கிறது. ஆன்மாவோ அறிவுமயமாய் மட்டும் இல்லை, எப்போதும் ஆனந்தம். அப்படி அது இருப்பதற்குக் காரணம் அது தங்க்குத்தானே ஒளிர்வதால் மட்டுமேதான். அதனால் ஒருவன் தான் பார்க்கும் வேற்றுமைகள் அனைத்தையும் விலக்கி ஆன்மாவின் இருப்பிலே தனித்து இருந்தால் அறிவதற்கு என்று வேறு ஒன்றும் தனியாக இருக்காது; ஆனந்தம் என்பதும் அவனுக்கு வெளியில் இருந்து வரவேண்டும் என்ற அவசியமும் ஏற்படாது. அவனுக்கு அவனே ஆனந்தம். இப்படி உள்முக தியானம் செய்துவர வர அறியாமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும். அதைத்தான் அடுத்து சங்கரர் சொல்கிறார்……

ஏவாமாத்மாநௌ த்யானமதேனே சததம் க்ருதே |
உதிதாவகதிர்ஜ்வாலா ஸர்வஞானேன்தனம் தஹேத் ||

ஆன்மாவெனும் அவ்வரணியில் இவ்வித
ஆன்மத் தியான அகமதனம் – தான் முயன்று
சந்ததம் செய்தலால் சார் ஞானத் தீ மடமை
இந்தனம் எல்லாம் எரிக்குமே

உள்முகநோக்கம் கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக்கட்டையில் இப்படியாக ஆன்மத்தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியால் எப்போதும் செய்துவந்தால், அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்.

*இதன் விரிபொருள்*
ஆன்மா எத்தகையது என்றும் ஆன்மத் தியானம் எத்தகைய பாவனையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் இதற்கு முன் நாம் படித்த பாடல்களில் சொல்லப்பட்டன. இரு அரணிக்கட்டைகளை ஒன்றின்மேல் ஒன்று வைத்து, தொடர்ந்து வெகு வேகமாகக்கடைந்து அதிலிருந்து வரும் தீப்பொறிகளில் தேங்காய்நார்களை வைத்து, (யாக) வேள்விகளுக்குத் தேவையான அக்னியை அந்தணர்கள் உண்டு பண்ணுவார்கள். அதைப்போல ஆத்மஸாதகனும் தன் மனமாகிய கருவியைக்கொண்டு, அதனை வெளியுலகில் செல்லவிடாது உள்முகமாக திருப்பி, தொடர்முயற்சியினால் ஆன்மாவைப் பற்றிய தியானத்தைப் பழகவேண்டும்.
ஆரம்பத்தில் வெளியுலக விஷயங்களை விடுவதிலும், தான் தேகத்தையும், மனஸையும் கடந்த ஆன்மா என்று பாவிப்பதிலும் தடைகள் பலவரும். இது எல்லாமே அவரவர்களுடைய பழைய வாஸனைகளினால் வரும் இடையூறுகளே!. அதனால்தான் தொடர்பயிற்சியும், எடுத்துக்கொண்டுள்ள விஷயத்தில் வைராக்கியமும் அவசியம் வேணும். எப்படி அரணிக் கட்டைகளை மிருதுவாக உராசுவதாலும், தொடர்ந்து கடையாமல் விட்டுவிட்டுச் செய்வதாலும் தீப்பொறிகளை உண்டாக்குவதில் பயனிருக்காதோ, அதேபோல ஆத்மஸாதகனின் தொடர் முயற்சியும், மனோபலமும் இல்லாவிட்டால் அவனுக்குத் தேவையான பலன்கள் கிடைக்காது.
மனத்தை அரணிக் கட்டையாகவும், இடைவிடாத ஆத்மத்தியானத்தை கடைவதற்கு உண்டான மற்றொரு கட்டையாகவும், அதனால் வரும் ஆத்மாகார மனோவிருத்தியை கடைவதால் கிளம்பும் நெருப்பு பொறியாகவும் இங்கு உருவகப்படுத்திச் சொல்லப்படுகிறது. ஆத்மாகாரமனோவிருத்தி (இதை விருத்திஞானம் என்பர்.) (அதாவது ஆங்கிலத்தில் Perceivable Knowledge என்பர்) பரவி கொழுந்துவிட்டு எரியும் ஞானத்தீயை (ஸ்வரூபஞானம் என்பர்.) (அதாவது ஆங்கிலத்தில் Existential Knowledge என்பர்.) கிளப்பி, இறுதியில் ஆன்மாவேறு தான்வேறு என்ற பாவனையை அழித்துவிடும்.
இவ்வாறாக முயற்சியும், பாவனையும் சரிவர அமைந்துவிட்டால் ஸாதகனுக்கு அதனால் வரும் ஞானம், (தீயானது தன்னைச் சூழ்ந்திருக்கும் கட்டைகளை ஒன்றுவிடாமல் பொசுக்கி சாம்பலாக்கி விடுவதைப்போல,) அதுவரை தன்னைப் பற்றி அவன் அறியாதிருந்தது என்று அவன் எண்ணிய நிலையை சுத்தமாக நீக்கி அவனது எப்போதுமுள்ள உண்மையான நிலையை அனுபவிக்க வைக்கும். ஆன்மா இருப்பதும் அல்லாது அறிவுமயமாயும், ஆனந்தமாயும் இருப்பதை அவனுள் காட்டுவதோடல்லாமல், அவனது வெளியுலகமும் அதே அறிவோடும், ஆனந்தமாயும் இருப்பதை உணர்த்தும். எல்லாம் ஒன்றே என்ற நிலை அமையும். அதன்பின் எப்படி இருமைகளோ, முப்புடிகளோ இருக்கும் அல்லது தோன்றும்?

ஆத்மபோதம் – 32 *ஆன்மஒளி-ஞானத்தங்கம்*

அருணேனேவ போதேன பூர்வ சந்தமசே ஹ்ருதே |
தத் ஆவிர்பவேதாத்மா ஸ்வயமேவாம்சு மானிவ ||

அருணனாலே அல்லகலுதல் போல் முன்
மருவு அறிவால் அம்மடமை – இரியவே
பொங்கும் ஆன்மா பரிபூரணமாகவே
பொங்கும் ஆதித்தனைப் போல்.

அருணன் ஓட்டிவரும் ஸூரியரதம் கிளம்‌பினதும் இருள் தானே அகன்று விடுவது போல அதற்கு முன்பு இருந்த மடமையான அக்ஞானம் விலகி, ஒளி வீசும் சூரியனைப்போல பரிபூரணமான ஆன்மா தானாகவே பொங்கி ஒளிரும்.

இதன் விரிபொருள்

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல *அருணோதயம்* என்பது விடியற்காலையில் ஸூரியன் உதிப்பதற்கு முன்பாக வரும் ஒளியை குறிப்பிடுவோம். அதை அருணன் என்ற ஸாரதி ஓட்டிக்கொண்டு வருவதாக சொல்லுவார்கள். ஸூரியன் வருவதற்கு முன்பாகவே அவனது வரவைக் கட்டியம் கூறுவதுபோல வரும் ஒளியால் இரவு முழுதும் கவிந்திருந்த இருள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிவிடும். இந்த இயற்கை நிகழ்வை உவமையாக எடுத்துக் கொண்டு, ஸாதகனின் தீவிர ஸாதனையால் அடையப்பெறும் விருத்திஞானத்தால் ஆன்மாவைப் பற்றின அறியாமை அதாவது அக்ஞானம் அகலும் நிலையோடு பகவத்பாதர் ஒப்பிடுகிறார். முதலில் கிளம்பும் தீப்பொறி அதனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் சுட்டு எரிக்கமுடியாது. அது சுற்றி இருப்பதைப் பற்றிக்கொண்டு கொழுந்துவிட்டு எரியும்போதுதான் அதற்கு வலிமை கூடும். அதேபோல இங்கும் விருத்திஞானம் கிளம்பியதும் அது ஸ்வரூபஞானமாகி அனுபவத்தில் கொண்டு விடுமுன் உள்ள நிலை பற்றி இங்கே சொல்கிறார்.
முதலில் நாம் பார்த்த மாதிரி அறியாமை என்ற ஒரு நிலைக்கு இருப்பு என்பது தனியே கிடையவே கிடையாது. ஆன்மாவைப் பற்றிய அறிவு இல்லாமையே தான் அறியாமை அறியாமை என்கிறோம். அப்படி ஆத்மாவை மறைத்துக் கொண்டிருக்கும் நமது வாஸனைகளான மறைப்புகள் ஒவ்வொன்றாக அகலும் நிலைதான் இங்கு குறிப்பிடப்படும் அருணோதயநிகழ்வுகள்.
வாஸனைகள் முற்றும் அகலவே, திடீரென்று கண்ணைக்கூசுகிற அளவு ஒளி மிகுந்த சூரியன் உதிப்பதுபோல ஆன்மா தானே ஒளிர்ந்து, அதுவரை இடைவிடாத தியானத்தால் (நிதித்யாஸனம்) ஸாதகன் முயன்று அடைந்த விருத்திஞானத்தையும் அழித்து அவன் தானே தானாக இருக்கும் ஸ்வரூபஞானத்தை அளிக்கும்.
(நடுவில் நம்நிலையை சற்று பார்ப்போம். இதுதான் *ஸ்வரூபநிரூபணம்* என்பது. இதனை இவ்வளவுதூரம் பயிற்சி செய்யாமல் தன் ஒரு சொல், ஒரு ஸ்பர்சம், ஒரு பார்வை இதானாலேயே தன் சீடனை ஆத்மஞானியாக்குகிறார் நமது ஸத்குரு. சிலர் அதிலேயே அப்போதே ஆகிவிடுகின்றனர். பலருக்கு உலகியல் ரீதியாக வாஸனை, பந்தங்கள் இருப்பதால் அவனுக்கு தொடர் பயிற்சி தேவையே! அதுக்குத்தான் இது. கை வலிக்க தட்டச்சும், படி படி என்ற ஊக்குவிப்பும்.)
அந்த நிலை ஓர் அறிவுபூர்வமான நிலையாக இல்லாது ஓர் அனுபவ நிலையாதலால், அதை அனுபவிப்பவனுக்கு தான் வேறு, தான் காணும் காக்ஷி வேறு என்று இல்லாத *பரிபூரணமானஞானம்* கிட்டுகிறது. ராமராஜ்ஜியத்தில் எவரும் உண்மையைத்தவிர வேறு எதுவும் பேசியதில்லை என்பதாலே குடிமக்களுக்கு உண்மை என்றால் என்ன என்றே தெரியாது. அதைப்போல அனைத்தையும் உள்ளடங்கிய ஆன்மாவிலேயே லயித்து இருப்பவனுக்கு அனைத்தும் ஆன்மாதான். அதனால் அனுபவிப்பவன் என்றும் தனியாக ஒருஆள் என்று அங்கில்லை. எல்லாம் ஒன்றே, அதுவே பேரறிவு, அதுவே அன்பு, அதுவே ஆனந்தம் என்பதால், அது மட்டுமே இருக்கிறது என்பதுதான் ஸத்யம். அதுவே இப்போதும் எப்போதும் எவருக்கும் உள்ளநிலை என்பதே உண்மை. அதைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதைத்தான் ஒருபாடல் சொல்கிறது…
“இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே” என்று.
சரிதானே! ஆத்மஞானம் அடைந்தவர்களுக்கு அனைவரும் எதுவும் எப்போதும் எங்குமே *ஞானத்தங்கமே!* ஆனால் நமக்கு இது புதிதாக அடையப்பட்டதுபோல் தெரிகிறதே என்றால் தொடர்ந்து சொல்கிறார்..

ஆத்மா து சததம் ப்ராப் தோப்ய ப்ராப்தவத வித்யயா |
தன்னாசே ப்ராப்தவத்பாதி ஸ்வகண்டாபரணம் யதா ||

ஆன்மா எப்போதும் அடைந்துளதே ஆனாலும்
தான் மடமையால் அடையாதாய் அமரும் – மால் மடிய
எய்தப் பெற்றார் போல் இலகும் தன் கண்ட அணி
எய்தப் பெற்றார் போலவே

ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அரியாமையால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்திலேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் தெரிகிறது.

இதன் விரிபொருள்

ஸ்ரீபகவான் சொவார் – எண்ணங்களே மனம் என்று. மனம் என்று ஒன்று வந்துவிட்டால் அது நம்மைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. இருப்பதை இல்லாததாகக் காட்டும்; இல்லாததை இருப்பதாகக்காட்டும். நமக்கு வேண்டியது என்றால், அது நல்லதல்ல என்று எல்லோரும் சொன்னாலும், அதை எப்பாடு பட்டாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பெற்றதை வைத்துக்கொண்டு ஆளவும் வேண்டும் என்றும் தோன்றும். நமக்கு வேண்டாதது என்றால், அது கிடைப்பது நல்லது என்றாலும், அதுவே நம்வீட்டு வாசலைத் தட்டிக்கொண்டு தானே உள்ளே வரநினைத்தாலும், நம் முகத்தை வேறு பக்கம் திருப்பி அது இல்லாதது போல நடிக்கும். இன்றைய தேவை நமக்கு நாளை வேண்டாததாகும்.
இன்று ஒன்றைத் தேடி அலையும் மனஸ், நாளை காரணம் ஏதும் அறியாமலேயே அதை வெறுத்து ஒதுக்கும். இவை யாவும் மனஸின் குணங்கள்.
தன்னிடம் என்ன இருக்கிறது என்பதைக்கூட அறிய முடியாதபடி தடுப்பதும் அந்த மாதிரியான மனஸின் விளையாட்டுக்களில் ஒன்றுதான். பெரும் தனிகனாக இருக்கலாம். ஆனால் தான் ஓர் ஏழை என்று மனது நினைத்தால் அவன் ஏழைதான். இருக்கும் செல்வமெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது. அதேபோல விலை மதிக்க முடியாத பெருநிதி ஒன்று தன்னிடம் இருக்கிறது என்பதையும் அறிய முடியாது தடுப்பதும் அந்த மனம்தான். ஏன்? நம்மையே எடுத்துக்கொள்ளுங்கள். பிறவியை போக்கும் வித்யை இது, 21 தலைமுறைகள் கரயேற்ற வைக்கும் வித்யை இது, எத்தனை ஆண்டுகள் தவமிருந்தாலும் கிடக்காத வித்யை இது என்றெல்லாம் நமது உபாஸனையை நமது குருமண்டலமும், அறநூலும் எத்தனை சொன்னாலும் நாம் கேழ்க்கிரோமோ? அதுபோல்தான்.
அதனால் ஒருவன் தான் போட்டுக்கொண்டிருக்கும் நகை காணாது போய் விட்டதே என்று நினைக்கிறான். அது அவன் கழுத்தில் இருக்கும்போதும் காணாமல் போன நகைதான். அவன் எங்கெங்கெல்லாம் சாதாரணமாக நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோனோ, அங்கு கூட சென்று தொலைந்து விட்டதாக நினைத்த நகையைத் தேடி அலைவான். ஆனால் அவன் காதிலோ, கழுத்திலோ அந்த நகையைப் பார்த்த நண்பன் இவன் தேடுவதைபார்த்து “நீ தேடும் நகை உன்னிடமே உள்ளது” என்று சொல்லி, அவனது கையைக் கொண்டோ அல்லது ஒரு கண்ணாடி கொண்டோ அவனுக்கு நிரூபித்தான் என்றால், அப்போது அவன் மனம் மகிழ்ந்து விடும். நகை தொலையவும் இல்லை ஆனால் அது தொலைந்து விட்டதே என்று விசனப்படுவதும், தொலைந்து போனதாக நினைத்த நகை மீண்டும் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்ததுமான இந்த உதாரணத்தை காட்டி, ஆன்மாவைத் தேடி அலையும் ஸாதகனின் மனநிலையை பகவத்பாதாள் இங்கு விளக்குகிறார். நகை கெட்டுப்போனது இல்லை. திரும்பக்கிடைத்தது என்பதும் இல்லை. இரண்டுமே ஸத்யமல்ல. இருந்தாலும் அவை நடந்தது போல நினைப்பது மனத்தின் லீலைகள். இல்லையானால் முதலில் துக்கமும், பின்பு சந்தோஷமும் ஏற்படுமா? ஆகவே கடைசியில் தொலைந்தது மனஸின் காக்ஷிகளே. ஸாதகனின் பயிற்சிகளும், முயற்சிகளும் அதே போல இல்லாத நினைப்புகளை நீக்குவதற்கே என்று உறுதி செய்கிறார்.
இதனையே தொடர்ந்து நாளை காண்போம்…..

ஆத்மபோதம் – 33 *ஒன்றே ஆத்மா*

அவன் ஆன்மாகவாகவே இருந்துகொண்டு ஆன்மாவைத் தேடி முயன்று ஆன்மாவை அடைந்துவிட்டதாக எண்ணுகிறான். உண்மையில் ஆன்மா அப்படியேதான் எப்போதும் இருக்கிறது. மாற்றங்கள் எல்லாம் தான் ஆன்மா இல்லை* என்று அஞ்ஞானத்தினால் எண்ணிய இவனுக்குத்தான். அஞ்ஞானம் அகல *ஞானம்* புதிதாக வந்திருக்கிறது என்று சொல்வதை விட, தான் எப்போதும் அப்படியேதான் இருக்கிறோம் என்றுணர்ந்ததால், தானாக வரவழைத்த அஞ்ஞானம்தொலைந்தது என்று சொல்வதுதானே இங்கு பொருத்தமாக இருக்கிறது.
அடுத்த பலடலில் வேறு ஒரு உதாரணம் சொல்லி இதை உறுதி செய்கிறார்.

ஸ்தாநௌ புருஷவத் ப்ரான்த்யா க்ருதா ஜீவதா |
ஜீவஸ்ய தாத்விகே ரூபே தச்மின்த்ருஷ்டே நிர்வததே ||

பிரமத்தில் சீவன் பிராந்தியால் கட்டை
புருடன்போல் கற்பிதன் பொய்யாம் – உருவத்தின்
தத்துவம் யாது என்று உணரின் அவ்வுருவம்
வத்து ஆகாது மதி

இருட்டில் இருக்கும் மரத்துண்டு ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால் பிரம்மத்தில் ஜீவன் கற்பிக்கப்படுகிறான். கற்பனையில் உருவான இந்தப் பொய்யாகிய உருவத்தின் உண்மை எதுவெனத் தான் உணரும்போது அந்தக் கற்பனையுருவம் பொருளற்றது என்று அறியவேணும்.

இதன் விரிபொருள்

ஓவ்வொருநாளும் மாலை வந்ததும் இருள் பரவத்தொடங்கும், அப்போது நிலவு மற்றும் விளக்குகள் ஒளிரும். தவிர, சிற்சில இடங்களில் இருள் கவிந்திருக்கும். அத்தகைய சூழலில் ஒரு மரத்துண்டை பார்த்துவிட்டு ஏதோ ஓர் மனிதன் நிற்பதுபோலத் தோன்றினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நம் மன நிலைக்குத் தகுந்தவாறு அந்த ஆள் திருடனோ அல்லது வேறுயாரோ தெரியவில்லை. ஒரு மனிதன் நிற்கும்போது எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரிந்த உருவகத்தை நாம் அந்த மரக்கட்டை மேல் ஏற்றிப் பார்க்கும் நம் பார்வையே தவிர, உண்மையில் அங்கு ஒருவன் இல்லை; இருப்பது மரத்துண்டுதான். இந்த உபமானத்தை வைத்து பகவத்பாதாள் இருக்கும் பிரம்மத்தின் மேல் இல்லாத ஜீவனை ஏற்றிப் பார்ப்பதை விளக்குகிறார். இருளில் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு போனால் அது யார் அல்லது என்ன என்று தெரிந்துவிடும். இருள்தான் நமது அறியாமை. அங்கு ஆன்மஅறிவு என்னும் விளக்கை ஏற்றிவிட்டால் (குரு உபதேசம்) உண்மை என்ன என்று தெரிந்துவிடும்.
இதற்கு எனது தாத்தா தன் நண்பருக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியை என்னிடம் சொல்லியுள்ளார். அது அப்படியே இதுபோல் நடந்தது. சரியான சமயத்தில் எனக்கு ஞாபகம் வந்தது. சொல்கிறேன். கிராமத்தில் தாத்தாவின் நண்பர் விடியற்காலை ஒருவரை பார்க்க சுமார் 1 கிலோமீட்டர் நடக்கணும். தூரத்தில் ஒருமரத்தடியில் கருப்பாக ஏதோ ஆடியது. இவருக்கு உள்ளூர பயம். ஏனெனில் அது ஒரு பிசாசு என இவருக்கு எண்ணம். அது மரத்தின் அடியில் ஆடிக்கொண்டுள்ளது. பார்த்துக்கொண்டே கையில் ஒரு குச்சியுடன் தான் செல்கிறார். இருந்தும் பயம். மெதுவாக அடிமேல் அடி வைத்து நடக்கிறார். அருகிலும் சென்றுவிட்டார். மிகுந்த பயம், நடுக்கத்துடன் தைரியத்தை வரவழத்துக்கொண்டு, தெய்வங்களையெல்லாம் மனதில் வேண்டிக்கொண்டு கண்ணையும் மூடிக்கொண்டு கையில் உள்ள கம்பால் ஓங்கி அதை ஒரே அடி வைத்தார். அவ்வளவுதான். பொலபொலவென ஒரு கொடி மரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்த அது (இதை ஓணாங்கொடி என்பர்.) தூள்தூளாக விழுந்தது. ஏனென்றால் அடி அவ்வளவு பலம். உடனே “ச, கொடிதான், பிசாசு இல்லை”. என்று தானாகவே சொல்லிகொண்டு சற்று ஆசுவாசபடுதிக்கொண்டு போகவேண்டிய இடம் சென்றுவிட்டார். மாலையில் சொந்த வீட்டுக்கும் வந்து விட்டார். மறுநாள் முதல் நல்லஜுரம் கண்டு 4 நாட்கள் படுத்திருந்து இறந்தும் விட்டார் என்பது தாத்தா சொன்ன உண்மை நிகழ்ச்சி. பாருங்கள். இல்லாத பிசாசு இவருக்கு எமனாக வந்தது. அழுத்தமாக பிசாசு உண்மையில் இருக்கிறது என்றுதான் நினைத்தாரே தவிர அழுத்தமாக இல்லை என்று நினைக்கவில்லை. இவர் ஆன்மவிளக்கை ஏற்றவே இல்லை. அதுதான் காரணம்.
எவரும் தாம் இருப்பதை அறிந்துள்ளனர். அதேபோல தன் விழிப்பு நிலையில் தம் புலன்கள் மூலம் உலகம் இருப்பதையும் அறிகின்றனர். இரண்டும் தனக்கு உண்மையாகத் தோன்றுவதால், மனிதர்களில் பலரும் அதற்கு மேல் தனது அனுபவங்களைப் பற்றி மேலும் சிந்திப்பதில்லை. வெகு சிலரே தாம் காண்பது, அனுபவிப்பது என்பது எல்லாம் தனது கனவு என்று யோஜிக்கின்றனர். மற்றவர் அனைவரும் காணப்படுவதுதான் உண்மை என்றும், தானும் உலகமும் இருப்பதால் அவைகள்தான் அந்த உண்மையின் பாகங்கள் என்று உறுதி செய்து விடுகின்றனர். அதற்கும்மேல் சிந்திக்கும் சிலருக்குத்தான் ஜீவராசிகளின் படைப்பில் காணப்படும் வேற்றுமைகள் உண்மையல்ல; அந்த வேற்றுமைகளைக் கடந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையான மூலகாரணம் ஒன்று உண்டு என்று அறிகின்றனர்.
தங்கள் வளர்ந்த விதத்தால் அவர்கள் அந்த மூலத்தை வெவ்வேறு வடிவில் சொல்கின்றனர். அனைத்தையும் கடந்தும் அதேசமயம் அனைத்தின் உள்ளும் இருப்பதால் அதைக் கடவுள் என்று சொல்லி சிலர் அதை கும்பிடுகின்றனர். அனைவரிடமும் இருப்பது ஒன்றே, அதுவே பலப்பலவாகக் காணப்படுகிறது என்று சிலர் அந்த ஸத்தை ஆன்மா என்று சொல்கின்றனர். ஒன்றாய் இருப்பது பரமாத்மா என்றும், தனித்தனியாய் காணப்படுவது ஜீவாத்மா என்றும் கூறி, தனி என்று சொன்னாலும் அந்தப் பரம்பொருள் இருப்பதால்தான் ஜீவன் இருக்கிறது என்று விளக்குகின்றனர்.
இந்த விளக்கங்களைச் சரியாக தெரியாதவர்கள், காணப்படும் ஜீவன்தான் இருக்கும் ஒன்றே என்று மரத்துண்டில் காணப்படும் மனிதனைப்போல ஜீவனை பரத்தின் மேல் ஏற்றிக் காண்கின்றனர். இப்படி அவர்கள் தவறாக அறிந்துள்ளதைப் புரியும் காலம் அவர்களுக்கு வரும்போது, தான் கண்டது வெறும் கற்பனையே, பொய்யே என்றும், உண்மையில் உள்ளது பரம்பொருளான ஆத்மா ஒன்றே என்றும் அறிகின்றனர். இதற்கு குரு கிருபை வேணும்…
அடுத்த பாடல் பார்ப்போம்.

தத்வரூபானுபவாதுத்பன்னம் ஞானமஞ்சஸா |
அஹம் மமேதி ச ஞானம் பாததே திக் ப்ரமாதிவத் ||

தத்துவ சொரூப அனுபூதியால் தானுதி
உத்தம ஞானம் உடனே அம் – மித்தையாம்
நான் எனது அஞ்ஞானம் நசிப்பிக்கும் திக்பிரமை
பானு உதயத்து எனவே பார்.

இருட்டில் திசைகளை அறியமுடியாத திக்பிரமையானது சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான ‘நான்’ என்ற அகங்காரத்தையும் ‘எனது’ என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்மஸ்வரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்.

இதன் விரிபொருள்

ஒரு புதிய ஊரில் திசைகளுக்கு எப்போதும் தடுமாட்டம் இருக்கும். அதுவும் அப்போது இருட்டு என்றால் குழப்பம் வருவதற்கு வேறு காரணம் கேட்கவே வேண்டாம். அப்போது வேறொருவர் சொல்லி நமக்குத் திசைகளைப் புரியவைப்பார். ஆனால் சூரியன் உதித்து விட்டால், அது கிழக்குத் திசை என்பதால், வேறு எவருடைய துணையும் இல்லாமல் குழப்பம் தனக்குத் தானே தீர்ந்துவிடும். அதைப்போல தன் *ஸ்வரூபஞானம்* வந்ததும் ஜீவனுக்கு தன்னையும் உலகையும் பற்றிய குழப்பம் நீங்கிவிடும்.
ஜீவன் எனத்தன்னைப் பாவிக்கும் ஒருவன், இப்பரந்த உலகத்தில் தான் மற்ற எல்லோரையும் போல இன்னுமொருவன் என்றே நினைக்கிறான். “நான்என்று ஒருவன்” என்ற அந்த எண்ணத்தில் இருக்கும் அவனுக்கு, “தனக்கு” என்று சில பொருட்களும் சில மனிதர்களும் இருப்பதாகவும் எண்ணங்கள் வளர்கின்றன. இந்த எண்ணம் அவனுக்கு எப்படி வந்தது என்று கேட்டால் அவனுக்கே அது புரியாது. அவனைப் போலவே மற்றவர்களும் “தான் – தனது” என்று இருப்பதால் அவனுக்கு தனக்கு உள்ள அந்த எண்ணத்தைப் பற்றிய சந்தேகமும் வருவதில்லை. இதற்கெல்லாம் காரணம் அவனது உண்மை நிலையை அவன் அறியாமல் இருப்பதே. இந்த அறியாமைதான் அவனது இருள்.
வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அவனுக்கு தனது நிலையைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் வரும்போது, அவனை அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான சூழ்நிலைகளும் அமைகின்றன. (ஆத்மவிசாரம்) அப்போது அவனுக்குப் பொதுவாக இரண்டு வழிகளே இருக்கின்றன என்று ஸ்ரீபகவான்ரமணர் சொல்கிறார்.
ஒன்று அவன் தன்னை யார் என்று கேட்டு தன் உண்மை ஸ்வரூபம் தெரிந்துகொள்வதற்கு ஞானவிசாரம் செய்து தெளிவடைவது.
இரண்டாவது தேர்ந்த குருவிடம் தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டி அவரைத் சரண் அடைவது. அப்படி நீரே கதி என சரணாகதி வேண்டிச் சென்றவனின் மனத்தை குரு நிர்மூலம் ஆக்கி அவனது உண்மை ஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டுவார்.
ஸ்ரீபரமஹம்ஸரும் அதே போலச் சொல்லி, நரேந்திரர் எப்படி தனது அஹங்காரத்தை பூதாகாரமாக்கி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் தனதாக்கிக்கொண்டார் என்றும், நாகமகாசயர் எப்படி தனது அஹங்காரத்தைச் சுருக்கி தன்னை ஒன்றும் இல்லாமல் செய்துகொண்டார் என்றும் சொல்கிறார்.
1. விசாரம் செய்து பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே தான் என்று உணர்வது,
2. குருவே எல்லாம் என்று அடிபணிந்து தன்னை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக்கொள்வது.
இந்த இரண்டு வழிகளில் தனக்கு ஒத்துக்கொள்ளும் வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறி தனது உண்மை சொரூபத்தை அறிபவனுக்கு, உதிக்கும் சூரியன் முன் இருள் ஓடிப்போவதூம், திசைகள் தானே விளங்குவதுபோலவும், பிசாசு இல்லை இது கொடிதான் என்று அறிவது போலும், அதுவரை அவனை ஆட்கொண்டிருந்த அறியாமை தானே விலகும். எல்லாம் அப்போது ஒன்றே என்று தெரியவருவதால் “நான்-எனக்கு” என்ற எண்ணங்களும் அங்கு நிலைப்பதில்லை.
தொடர்ந்து நாளை பார்ப்போம்…..

ஆத்மபோதம் – 34 *ஆத்மவேதம் – மனப்பாலம்*

அறியாமை விலகி எல்லாம் தானே என்ற எண்ணம் திடப்படும் என்றோமே அது எப்படி என்று காணுவோம்…

ஸம்யாக்விக்ஞானவான் யோகீ ஸ்வாத்மன்யேவாகிலம் ஜகத் |
ஏகம் ச சர்வமாத்மானமீக்ஷதே ஞானசக்ஷுஷா ||

நன்று தனை அறி விக்ஞானியாம் யோகியும்
ஒன்றும் எலாம் தன்னில் உறுவதை – ஒன்றான
தான் எல்லாமாய் உளதைத் தன் ஞானக் கண்ணினால்
தான் காண்பான் என்றே தரி.

தன்னை நன்கு அறிந்த விக்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.

இதன் விரிபொருள்

இங்கு விக்ஞானி என்ற சொல் அனுபவத்தில் காண்பவன் என்ற பொருளைக் குறிக்கும். (Scientist என்ற பொருளில் இங்கு வராது.) எப்போது ஒருவன் ஆத்ம விசாரம் செய்து அனுபவத்தில் தன்னைத்தான் நன்கு தெரிந்து கொள்ளுகிறானோ அப்போதே அவன் யோகியாகிறான். அவனுக்குத் தான் காணும் உலகில் உள்ள எல்லாமும், தான் பார்ப்பதால், தன்னுள்ளே இருப்பதாகவும் தெரியும். தன்னுடைய இருப்பைச் சார்ந்தே அனைத்தும் காணப்படுவதால் பார்க்கும் அனைத்தும் தன்னைப் போலவே ஆத்மமயமாக இருப்பதாகவும் உணர்கிறான். இதுதான் யோகம் என்பதன் பொருளாகும். பகவத்கீதை சொல்கிறது:

அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்….

இந்த ஸ்லோகம் கேட்டிருப்பீர்கள். இதற்கு என்ன பொருள்? வேறு எண்ணமின்றி, அனவரதமும் என்னையே நினைத்துக் கொண்டு என்னையே என்றும் உபாஸித்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பவர்களின் யோகக்ஷேமத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நமது யோகக்ஷேமம் என்றால் என்ன? தெரியுமா? இதுதான். தன்னையன்றி வேறு ஒன்றும் இல்லை என்ற யோகம் தான். இதனை உணர்ந்தால் இதுவே க்ஷேமம்தான். எனவே ஸாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காக்ஷி என்ற திரிபுடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காக்ஷி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காக்ஷி. ஒரு யோகிக்கு அந்த ஸாதாரண ஊனக்கண் காக்ஷி கிடையாதா என்று கேட்டால் உண்டு. ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும். அதாவது முற்றும் உணர்ந்த யோகிக்கும் உலகம் உண்டு. அவனுக்கும் வலிக்கும். பசிக்கும். ஆனால் அது ஆன்மவடிவாய்த் தெரியும். அதனாலேயே அவனைப் பொருத்தவரை எல்லோருமே ஞானிகள்தான். சிலர் அதை அறிந்தவர்கள், வேறு சிலர் அதை அறியாதவர்கள். ஸாதாரணப் பார்வையில் எல்லோரும் வேற்றுமையைக் காண்கின்றனர். யோகியோ அனைத்திலும் ஒற்றுமையைக் காண்கிறான். இந்த இரண்டையும் ஸமஸ்க்ருதத்தில் முறையே “பேததிருஷ்டி” என்றும் “அபேததிருஷ்டி” என்றும் சொல்லுவார்கள். இதையே “யாதுமாகி நின்றாய் காளி…” என்பான் பாரதி! அருட்சக்தியின் குருப்ரகாசமலரில் “எல்லாம் நானே! …. என ஒரு கவிதை இருக்கும். அது நாம் தேவிக்கு செய்யும் உபசாரங்கள் அத்தனையையும் ஆத்மாதான் என்றபடி அமைந்திருக்கும். அங்கு சென்று படித்து பாருங்கள். 1989-90 களில் இந்த நினைவை – அனுபவத்தை ஸ்ரீகுருஜி அவர்கள் அருளினார்கள். தேவிக்கும் எனக்கும் ஒரு மனப்பாலம் போட்டார். நடந்தேன். அதற்காக அருட்சக்தியை யோகி என்று சொல்ல வரவில்லை. இந்த அனுபவத்தில் இந்த சிந்தனையில் மனம் தோய்ந்திருந்ததை உங்களுக்கு சொல்லுகிறேன். நீங்களும் இந்த மனப்பாலத்தில் நடங்கள். நீங்கள் யோகியாகலாம்.
அடுத்த பாடலில் இதே கருத்தை சங்கரர் வலியுறுத்துகிறார்…….

ஆத்மைவேதம் ஜகத்ஸர்வம் ஆத்மனோன்யன்ன வித்யதே |
ம்ருதோ யத்வத்கடாதீனி ஸ்வாத்மானம் ஸர்வமீக்ஷதே ||

ஆன்மாவே இவ்வுலகு எல்லாமாகும் அற்பமும்
ஆன்மாவுக்கு அந்நியமாய் இல்லை – ஆன்மாவாய்க்
காண்பன் எல்லாமும் கடாதிகள் மண்ணின் வேறாய்க்
காண்பதும் உண்டோ கழறு.

காணப்படுகிற இவ்வுலகில் இருப்பது எல்லாமே ஆன்மாதான். எந்தச் சிறிய பொருளை எடுத்துக்கொண்டாலும் அது ஆன்மாவுக்கு அந்நியமானதாக இல்லை. எல்லாவற்றையும் ஆன்மாவாக பார்ப்பவன் மண்பானைளை அவைகளின் மூலபொருளான மண்ணிலிருந்து வேறானதாகக் பார்க்கமுடியுமோ, சொல்லுங்கள்.

இதன் விரிபொருள்

இருப்பது ஒன்றே என்று கண்டபின், எல்லாமும் ஆன்மாவே என்று சொல்வதில் உள்ள “எல்லாம்” என்றால் என்ன? காணப்படும் சிறு துரும்பு கூட ஆன்மா வடிவம்தான். அது தன்னை அறிந்ததாக இருந்தால் அதுவும் நம்மைப்போல ஆன்மாதான். தன்னை அறியாததாக அது இருந்தாலோ, அதன் இருப்பதைத் தெரிந்துகொள்வதும் ஆன்மாவாகிய ஒருவனால்தான் என்பதால், அதன் இருப்பே ஆன்மாவால்தான் என்று சொல்கிறார். ஆக இவ்வுலகில் காணப்படுகிற எல்லாமும் ஆன்மாவே என்று ஆகிறது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. இது குறள்.

இல்லையென்றால் நாம் காண்பதின் நாமத்தையும் ரூபத்தையும் பார்த்து அவைகள் ஒவ்வொரு பொருளுக்கும் வேறாக இருப்பதால் அந்த வேற்றுமைகளைப் பார்த்து ரஸித்துக்கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் அவைகளே உண்மை என்று நினைத்து, அதில் நமது மனமும் லயித்து, அதற்குண்டான உணர்வுகளையும் உள்ளத்தே காட்டுவிக்கும். அதனால்தான் நாம் ரஸித்துப் பார்க்கும் சீடிவிரியலின் காக்ஷிகளுக்கு ஏற்ப நமக்கு சிரிப்பும் துக்கமும் வருவதோடு மட்டுமில்லை. வில்லிகளிடம் நமக்கு கோபமும், வெறுப்பும் வருகிறது. இவையெல்லாம் நாம-ரூபங்கள் உண்மையென நம்புவதால் வரும் விளைவுகள்தான். இதேபோல உலகின் நிகழ்வுகளையும் உண்மையென நம்புவோரிடம் அதேபோன்ற சலனங்கள் நிச்சயமாக இருக்கும். ஆனால் அனைத்தையும் ஆன்மாவாகக் பார்ப்பவன், அதாவது எதனையும் ஆன்மாவுக்கு அன்னியமாகக் காணாதவன், எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் மெய்ப்பொருளை மட்டுமே உன்னிப்பாக கவனிப்பான். குடம், பானை, பொம்மை என்று விதவிதமான பெயரும் உருவமும் கொண்ட பொருட்களை பார்க்கும்போது அவை அனைத்துக்கும் மூலகாரணமான மண் ஒன்றுதான் அவனுக்குத் தெரியும். அதேபோல விதவிதமான ஆபரணங்களைப் பார்க்கும்போதும் அவை அனைத்துக்கும் மதிப்பு கொடுக்கும் தங்கம் ஒன்றுதான் பார்வையில் பதியும். அந்தப் பார்வைதான் உள்ள பொருளை உள்ளதாகப் பார்க்கும் பார்வை. அதனால் தன்னை உணர்ந்து அனுபவிக்கும் ஞானிக்கு ஆன்மா ஒன்றைத் தவிர வேறு எதுவும் புலப்படாது. இருக்கும் அந்த ஒன்றே பலவாகத் தெரிவதாகவும் அவன் தெளிவான். இடையே ஆத்மதரிசனம் என்றும் சொல்லலாம்.
தொடரும்….

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 1

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம்
விளக்கவுரை- ஸ்ரீஅருட்சக்தி நாகராஜஅய்யர்
(தினசரி வாட்ஸ்ஆப்பி‌ல் பகிர்ந்தது)

ஒம்ஶக்தி! ஜயசக்தி!
முன்னுரை-
03-08-18 ஆடி 18 ம் பெருக்கு முதல் ஸ்ரீஆதிசங்கரரின் ஆத்மபோதம் என்ற நூலில் இருந்து நமது பாடங்கள் தொடங்குகிறோம்.
அறிவுத்தேடலில் குருவிடம் அமர்ந்து அவர் சொல்வது கேட்டு அறிந்துகொள்வது முதல் வகை. நாமே பல புத்தகங்களையும் படித்து அறிவு பெறுவது இரண்டாம் வகை. கேட்டும், படித்தும் முற்றிலும் தெளிவு பெறாத நிலையில் அதை எழுதிப் பார்த்து அறிய முயற்சிப்பது மூன்றாம் வகை. பலரும் முதல் வகையிலும், சிலரும் இரண்டாம் வகையிலும் பயில, வேறு சிலரோ மூன்றாம் வகையில் அதை முயன்று பார்க்கிறார்கள். இவ்வகையில் நாம் தொடங்கலாம்

முதலில் குரு வணக்கம் செய்வோம்.

காமாக்ஷி சரணாம் போஜம் பாவயந்தம் ஸதாஹ்ருதி
அனந்தானந்த நாதம் தம் சிந்தயே ஸதா

ஓளி இருளை நீக்கும். கயிற்றில் தெரியும் பாம்பு. சூரியனை மறைக்கும் மேகம் என்ற உதாரணங்கள் எல்லாமே இப்படி அறிமுகம் ஆவது தான். ஒளி வந்தவுடன் இருள் தானாக விலகுவதுபோல பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு அதைப் பற்றிய அறியாமை தானாக விலகுகிறது. அதனால் பிரம்மம் ஒளி போன்றது. பாம்பு என்ற எண்ணம் இருட்டு இருக்கும் வரையில்தான். அங்கு ஒளி வந்ததும் அது கயிறு என்று தெரிகிறது. எங்கோ> எப்போதோ பார்த்த பாம்பு என்ற எண்ணத்தை இங்கு, இப்போது இருக்கும் வேறு ஒரு பொருளின்மேல் படரவிட்டாலும், ஒளி வரும்வரை பார்ப்பவனுக்கு அது பாம்புதான். இப்படியாக பலப் பலவாக இருப்பதைப் பார்க்கும் அறியாமை இருக்கும் வரை எல்லாம் ஒன்றாய் இருக்கும் பிரம்மத்தை உணரமுடியாது. எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு. மேகம் மறைந்தவுடன் தானே ஒளிரும் சூரியன் தெரிவது போல, தானே தானாய் இருக்கும் பிரம்மம் நாம் செய்யும் கர்மங்களால் இடையில் வந்த நமது உபாதிகள் மறைந்ததும் தானாய் ஒளிரும். இப்படியெல்லாம் உவமானங்களை வைத்துக் கொண்டு மேல் நிலை உண்மைகளை ‘பிரகரண கிரந்தங்கள்’ என்ற சில நூல்கள் விளக்கிச் சொல்லும். இப்படியான உண்மைகளும், உவமைகளும் எந்த நிலையில் சொல்லப்பட்டிருன்தாலும், அன்;த நிலைகளில் மேலிருன்து கீழே வர வர விவரங்களும், விளக்கங்களும் மிகுதியாக இருக்கும்.
அதாவது எந்த நிலையிலும் இருக்கும் விஷயம் ஒன்றுதான்; அதன் விளக்கங்களில் தான் அளவிலும் விவரங்களிலும் அந்தந்த நிலைகளில் சொல்லப்படுபவை மாறுபடுகின்றன என்பதை நன்கு புரின்து கொள்ளவேண்டும்.
ரிபுகீதை என்ற ஒரு கீதை உண்டு. அதில் ஒரு உண்மை சொல்லப்படுகிறது. அதை முதலில் படிப்போம்.
கறையற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
காண்பதுவுங் கேட்பதுவும் எவையு மில்லை
நிறைவுற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
நினைப்பதுவும் நினையாதும் எவையு மில்லை
மறைவற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
மற்றவெலாம் ஒருகாலும் இலவே இல்லை
குறைவற்ற அப்பிரமம் நானே என்று
கோதறவே எப்போதும் தியானஞ் செய்வாய் !…………
தோடரன்து பார்ப்போம். நீங்களும் இதனைப் படித்து உங்கள் சன்தேஹங்களையும், சிந்தனைகளையும் பகிரவும்.

ஆன்மபோதம் – 1 முதல் பாகம் – 4-8-18

உங்கள் சிந்தனைகளை பகிர்ந்தமைக்கு மகிழச்சி. தொடர்ன்து பார்க்கலாம். நாம் முதலில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்;டது ஆத்மபோதம். நீங்கள் ரிபுகீதை பற்றி கேட்டுள்ளீர்கள். புராணங்களில் அநேக கீதைகள் உண்டு. பிரபலமாக எல்லாருக்கும் தெரிந்தது கண்ணன் சொன்ன பகவத்கீதைதான். ரிபுகீதை பற்றி பிறகு சொல்லுகிறேன். முதலில் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பில் சிநிதிப்போம். ஆன்மா என்கிற ப்ரஹ்மத்தின் உண்மை தெரியவே ரிபுகீதை வசனத்தை உதாரணம் காட்டினேன். அவ்வளவுதான்.
ஆன்மாவைப்ற்றி தெரின்து கொள்ளவேணுமானால் முதலில் நமது தேக அமைப்பு பற்றி அறின்துகொள்ளவேணும். நமது தேகம் ஸ்தூல ஸூக்ஷம காரணம் என 3 நிலைகளில் அதாவது அடுக்குகளில் உள்ளது. நமது கண்ணால் காணும் இந்த தேகம் ஸ்தூலம். இரவில் நமது கனவில் நாம் உலா வருகிறோமே அது ஸூக்ஷமம். காரண தேகம் என்பது மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற நால்வரின் கூட்டுருவம். இந்த 3 தேக அமைப்பைப்ற்றி விவரமாக நாம் அறியவேணும். இந்த 3 தேகத்திற்கு அன்னியமாக ஆனால் அவை இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது ஆன்மா. இந்த ஆன்மாதானே எல்லாவற்றையும் பிரகாசிபிக்கிறது.
இந்த ஆத்மசக்தி இல்லாமல் ஒண்ணுமே இயங்காது. இது எப்படி வெளிப்படு கிறதுன்னு பார்க்கலாம்.
ஆன்மா எப்பவும் பிரகாசிக்கும். அதை சுத்தி இருக்கிறது அவித்தை அல்லது காரண சரீரம். புத்தியை சூழந்த இது நித்திரை என்கிற ஆழ் உறக்க நிலை – ஸுஷுப்தியால் சூழப்பட்டு இருக்கும். காலம் கருமம் பிராணன் ஆகியவற்றால இந்த உறக்க கதவு கலைஞ்சா ஆத்ம ஒளி அகங்காரம் வழியா வெளி அறையில பிரகாசிக்கும். இது ஸ்வப்ன நிலை இல்லையா?
இந்த வெளி அறையிலிருன்து முற்றத்துக்கு வெளிச்சம் வரணும்ன்னா அது இன்திரியங்கள் என்கிற ஜன்னல் வழியாதான் வரும்.
இப்ப ஆத்ம தரிசனத்துக்கு. போகணும்!
பஞ்ச இன்திரியங்களையும் தாண்டிப்போக ஸ்வப்னம். அதையும் தாண்டிப்போக ஆழ்தூக்கத்தில அவித்தை. அகங்காரத்தையும் தாண்டிப்போக உள்ளே ஆன்மா மட்டுமே பிரகாசிக்கும்.
இப்ப ஆதி சங்கரரின் ‘ஆத்மபோத’த்தை பகவான் ரமணமகரிஷி தமிழில் மொழிபெயர்த்து ‘ஆத்ம போதம்’ என்று வெண்பா வடிவில் எழுத நேர்ந்தபோது இந்த வெண்பாவை மங்கலச் செய்யுளாக கொடுக்கிறார்.

*ஆன்மாவின் போதம் அருள் ஆசானாம் சங்கரன் அவ்
வான்மாவுக்கு அன்நியன் ஆவனோ – ஆன்மாவாய்
என்னகத்தே இருன்தின்று தமிழ் சொல்வானும்
அன்னவன் அன்றிமற்று யார்*

இச்செய்யுளில் ‘ஆத்மபோதத்தை நமக்கு அருளிய சங்கரர் ஆன்மாவின் வடிவமே அல்லாமல் வேறு என்னவாய் இருன்து நமக்கு அதை அருளினார்? இன்று அந்த ஆன்மாவே என்னகத்தில் இல்லாது போனால் அதைத் தமிழில் சொல்வதும் அதுவன்றி வேறு யார்?’ என்று கேட்கிறார். மிகவும் கூர்ன்து ஆராய வேண்டிய கேள்விகளை நம்மைப் பார்த்து பகவான் தொடுத்திருக்கிறார். எப்போதும் எல்லாமுமாய் இருப்பது ஆன்மாவே என்று தெரின்தும் புரியாதவர்கள் முன்பு சம்ஸ்க்ருதத்தில் எழுதிய சங்கரர்தான் இப்போது தமிழிலும் இயற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் கொள்ளலாம்.. அல்லது ரமணரே முன்பு சங்கரராய் இருன்து (அதாவது ஆன்மாவாய் இருன்து) முன்னதைத் தன்தார் என்றும் கொள்ளலாம் அல்லவா!

ஆத்ம போதம் -2

முன்பு சங்கரராய் இருன்து (அதாவது ஆன்மாவாய் இருன்து) முன்னதைத் தன்தார் என்றும் கொள்ளலாம் அல்லவா! என்று எழுதியிருன்தேன். சங்கரராய் இருன்தாலும் ரமணபகவானாய் இருன்தாலும் மற்று நாமாயிருன்தாலும் ஆத்ம வடிவமே எனலாம். ஆன்மாவே எல்லாம் என்றிருப்போருக்கு அன்றும் இன்றும் என்றும் ஆன்மாவே தானாகவும் இருக்கிறது; தன்னைப் பற்றிச் சொல்லாமலும் சொல்கிறது என்று புரியும். அதாவது ஆன்மா இல்லாது வேறு என்னதான் உலகில் இருக்கிறது என்பதே இங்கு அனைவரும் காண வேண்டிய உண்மை. இதுபற்றி மேலே சொன்ன ஒரு மங்கலச் செய்யுளிலேயே ஆன்மாவைப் பற்றி நல்ல போதனை செய்திருக்கிறார்.
இங்கு ஆத்ம சிந்ததனைக்கு பகவான் சம்பந்தமான சில குறிப்புகள் பார்ப்போம். நமது சிந்தனைக்கு இது தேவையே!
ரமணபகவான் வாழ்க்கையில் அவர் தானாகவே எழுதியது என்பது மிகவும் குறைவு. தெரியாது மறைன்து இயக்கும் ஏதோ காரணங்களால் உந்தப்பட்டு தெரின்து அருகில் இருக்கும் எவராலோ அது பற்றி விசாரிக்கப்பட்டு தானே உதிர்ந்த முத்துக்களைக் கோர்த்து வைக்கும் பணியைத்தான் அவர் செய்துள்ளார் என்பதுதான் பொருத்தம். அது போன்றே இந்தப் படைப்பும் உருவான நிகழ்ச்சியை ஒருவர் தனது நூலில் எழுதியிருப்பதை இங்கு பார்ப்போம்.
‘சம்ஸ்க்ருதபாஷை ஓரளவுக்குத் தெரிந்திருந்த முஸ்லீம் பண்டிதர் ஒருவர் ஆதிசங்கரர் சம்ஸ்க்ருதத்தில் இயற்றிய ஆத்மபோதத்தின் ஸ்லோகங்களுக்கு தமிழ் அனுவாதமாக பாடல்கள் எழுதி வெளிவன்திருந்தது. அதில் இரண்டு புஸ்தகங்கள் தபால் மூலமாக ஆஸ்ரமத்திற்கு வன்துள்ளன. ஒருவர் தபால் கொண்டு வரும்போது அத்துடன் சேர்த்து இந்த ஆத்மபோத நூலையும் பகவானிடம் கொடுத்தார். வழக்கம் போல் தபாலைப் பார்த்து விட்டு பிறகு அந்த நூலைத்திறப்பதும் பார்ப்பதும் பிறகு மூடி வைப்பதும் மறுபடி திரும்பப் புரட்டி பார்ப்பதுமாக இருந்தார் பகவான்.
புஸ்தகத்தை அப்படி இப்படி புரட்டும்போது பகவானின் முகத்தைப் பார்த்தால் உள்ளுக்குள்ளே ஏதோவொரு சிந்தனை இருப்பதுபோல் தோற்றமிருந்தது. அதன் பிறகு அந்தப் நூலை புத்தகசாலைக்குக் கொடுத்துவிட்டார். பிறகு வேறு ஒருவரைக்கூப்பிட்டு சங்கரர் நாகரிலிபியில் எழுதியுள்ள ஆத்மபோதம் நூலைக் கொண்டுவரச் சொன்னார். அதை அடிக்கடி புரட்டிப் பார்த்து வன்தார். பிறகு ஒரு காகிதத்தில் இரண்டு பாட்டுக்களை தமிழில் வெண்பாவாக எழுதினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்பராமையா என்னும் ஒரு பக்தர் பகவானை நோக்கி ‘என்ன! பகவான் ஏதோ நூலைத் திறப்பதும் படிப்பதும் மூடுவதும் எழுதுவதுமாக இருக்கிறதே! அது என்ன நூல்?’ என்று கேட்டார். அப்போது பகவான் தான் எழுதிய ஆத்ம போத ஸ்லோகத்தின் தமிழ் அனுவாதமான இரண்டு பாடல்களை அவரிடம் காட்டினார். அதைப் பார்த்த அவர் ‘இப்படியே மீதி சுலோகங்களையும் எழுதினால் நன்றாயிருக்குமே’ என்று கூறினார்.
பகவான் அதற்கு ‘சரி சரி அதெல்லாம் எதற்கு?’ என்று சொல்லி விட்டார். அதெல்லாம் எதற்கு என்று சொல்லளவிலே சொன்னாரே ஒழிய உள்ளே பகவானுக்கு ஏதோவொன்று தூண்டிக்கொண்டே இருன்திருக்க வேணும். இரண்டேநாளில் இன்னும் சில பாடல்கள் எழுதி ஒருவரிடம் காட்டி ‘நாம் எதற்கு எழுத வேண்டுமென்று சும்மாயிருன்தால் இது நம்மை விடாதுபோல் இருக்கிறது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக எதிரே வன்து நிற்கிறது! என்ன செய்கிறது!’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் சில பாடல்கள் எழுதியபிறகு ‘இனிமேல் இது நம்மை விடாது ஓய்! ஒரு புஸ்தகம் தைச்சுக்கொண்டு வாரும்!’ என்று சொல்லி தான் எழுதிய மங்கலவெண்பாவையும் காட்டினார்.
பிறகு சில நாட்களுக்குள்ளாகவே நூல் முழுவதும் (69 சுலோகங்களும்) தமிழ் வெண்பாக்களாக எழுதி முடிக்கப்பட்டன. பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்து ‘நாற்பது வருஷங்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த சின்ன மலையாள நோட்டுப் புஸ்தகத்தில் இது இருக்கிறது. அப்போ அதற்கு தமிழில் எழுதவேண்டுமென்ற எண்ணமே உண்டாகவில்லை’ என்று கூறினார். ‘எதற்கும் காலம் வரவேண்டாமா?’ என்று ஒரு பக்தர் சொன்னார்.
அதற்கு பகவான் ‘ஆமாமாம்! இப்போ இது ஒன்று எழுதியதும் இன்னொன்று தோன்றிக்கொண்டே வருகிறது. முன்னே எப்பவோ படித்த மாதிரியும் இருக்கிறது. இதற்கு முன் யாரும் இதை எழுதவில்லையே? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பகவான்.
‘வெண்பாக்களாக இதுவரை யாரும் எழுதவில்லை’ என்று எதிரில் இருந்த முருகனார் கூறிவிட்டு மேலும் சொன்னார்; *பகவானுக்கு ஒன்றன் பின் ஒன்று தோன்றுவதில் என்ன ஆச்சரியம். ஒவ்வொரு கல்பத்திலும் வேதங்கள் பிரம்மாவிற்கு எதிரில் தோன்றுமென்பதுதானே புராண வரலாறு. இதுவும் அதைப் போன்றதுதான்!* என்று கூறினார்.
அதற்கு பகவான் சிரித்துக்கொண்டே ‘அது சரிதான்! ஜயதேவர் கதையில் வருவதுபோல யாராவது வன்து நான்தான் எழுதினேனென்று சண்டைக்கு வருவார்களோ என்னவோ!’ என்று சொல்லி முடித்தார்.
இப்படி (முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்ததுதல் பெறப்பட்டு) ஒரு ரஸமான பின்னணியுடன் இந்த ‘ஆத்ம போதம்’ தமிழில் உருவெடுத்தது. பகவான் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. அந்த சம்பவங்களெல்லாம் யாரும் எழுதி வைக்காததினால் நமக்குத் தெரியவில்லை. ஏதோ சிலவற்றிற்கு மட்டுமே அவை எழுதப்பட்ட காரணங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.’

ஆத்ம போதம் – 3

எல்லோரும் படிக்கிறீர்கள் என்ற நிநைப்பில் தொடர்ந்து எழுதுகிறேன். ஒவ்வொரு கல்பத்திலும் வேதங்கள் பிரம்மாவிற்கு எதிரில் தோன்றும் …. என்பதிலே சிலருக்கு ஐயம். ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மா வேறு வேறு தான்! ஆநால் ஜீவன்கள் மாத்திரம் விநைகளுக்கு ஏற்ப பிறக்கும் தான்! அதனாலே சங்கரர் ரமணர் இவாளெல்லாம் அப்படியே பிறந்து வருவாள்ன்னு இல்லை. மேலே ஆத்மபோதம் ஸ்லோகம் 2 பார்க்கலாம்.

தபோபி⁴: க்ஷீணபாபானாம்ʼ ஶான்தானாம்ʼ வீதராகிஸிணாம்ʼ |
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ ள்யமாத்மபோஸிதோ⁴ விதீ⁴யதே ||

தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய் சாந்தி
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆத்ம
போதமாம் ஈது புகல்

தவங்கள் செய்ததனால் மேலும் பாவங்கள் செய்வதை தவிர்த்தவர்களாகவும், மனத்தில் சாந்தி அடைந்தவர்களாகவும், உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், பிறப்பிறப்புச் சுழல்களில் இருந்து விடுபட விரும்புவோர்களாகவும் இருப்போர்களு க்கு என்று இந்த ஆத்ம போதம் சொல்லப்படுகிறது.

இதன் விரிபொருள்:
எடுத்த எடுப்பிலேயே முதல் ஸ்லோகத்திலேயே இந்தப் படைப்பின் தலைப்பு ஆத்ம போதம் என்றும் குறிப்பிட்டு, இதைப் படிப்பவர்களுக்கு வேண்டிய தகுதிகளையும், அதாவது யார் படிக்கலாம் என்றும், அவர்கள் படித்தால் என்ன பயன் விளையும், அதாவது ஏன் படிக்க வேண்டும், என்றும் விவரமாகச் சொல்கிறார். தகுதிகளைப் பற்றி நாம் மேலும் விவரமாக ஆராயலாம். இதைப் படிப்பவர்களுக்கு ஆன்மாவைப் பற்றிய ஞானம் (போதம்) கிடைக்கும் என்பது இதன் பயன் என்பதை அந்தத் தலைப்பிலேயே கொடுத்துள்ளார்.
மேலே இருக்கும் முதல் செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகளைப் படித்துவிட்டு அன்பர்கள் தனக்குத் தானே எடை போட்டுக்கொண்டு, தான் மேலும் படிக்கும் தகுதி வாய்ந்தவர்களா இல்லையா என்று குழம்ப வேண்டாம். ஒரு வேளை அந்தத் தகுதிகள் தொடக்கத்தில் இல்லை என்றாலும் கூட, மேலும் படிக்கப் படிக்க அந்தத் தகுதிகளை எப்படிப் பெறுவது, எப்போது பெறுவது என்று தன்னை அறியாமலேயே ஒவ்வொரு மனதிலும் வேர் விட்டுத்தழைத்து அதற்கேற்ற படிப்பவன் நாடவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் எண்ணம்.
ஆன்மாவைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பும் நாம் அதற்கு வேண்டிய தகுதிகளின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாமே.
எவன் ஒருவனுடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டம் வரும். அதுதான் அவன் ஏதேனும் ஒரு மரண சம்பவத்தைச் சந்திக்கும் கட்டம். இது ரமணர் போன்ற ஞானிகளுக்கும் வந்திருக்கிறது; தெருவில் போகும் ஒருவனை இடித்துத் தள்ளக்கூடிய வாகனத்திலிருன்து மயிரிழையில் தப்பியவனுக்கும் வந்திருக்கிறது; வாழ்வில் ஒன்றை மிகவும் எதிர்பார்த்து அது கிடைக்காது அலுத்துப்போய் இறந்து போகலாமா என்று யோசித்தவனுக்கும் வந்திருக்கிறது. அல்லது தான் மிகவும் நேசித்தவர் இறந்ததும் அவரது உயிரற்ற உடலைப் பார்க்கும்போதும் அது வந்திருக்கிறது. இந்த எண்ணம் வருவதற்கு இதுதான் தகுதி என்று எதுவும் கிடையாது. அப்படி வரும்போது மரணத்தைப் பற்றிய அவனுக்குள் உதிக்கும் எண்ணங்கள்தான் அவரவர்க்கு ஏற்ப வகைவகையாய் மாறுகின்றன. அதாவது வைராக்யம்.
எல்லோருக்கும் ஆரம்பம் பிறப்பு என்றாலும், அவனை மிகவும் சிந்திக்க வைப்பது அவனுக்கு ஒரு நாள் வரக்கூடிய அவனது இறப்புதான். ஏனென்றால் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து ஒருவன் வேண்டியது அனைத்தையும் பெற்றவனுக்கும் மரணம் வருகிறது. அதேபோல வாழ்க்கையை வாழத்தெரியாது தவித்து, இருப்பதையும் இழந்து, இன்னும் என்ன செய்வது என்றும் தெரியாது, இறப்பது ஒன்றுதான் தனக்கு விடுதலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவனுக்கும் மரணம் வருகிறது. ஆக அனைவருமே மரணத்தை வாழ்க்கையின் உறுதியான ஒரு முடிவு என்றே பார்க்கின்றனர். ஆனால் இறப்பைப் பற்றி வைராக்கியமாக தீவிரமாக யோசிப்பவனுக்குத்தான் அந்த பிறப்பின் மறுபக்கம் என்று தெரிகிறது.
அதாவது பிறந்தால் இறப்பது நிச்சயம் என்றும், அப்போது தான் ஏன் பிறந்தோம் என்ற எண்ணமும் வருகிறது. அப்படி யோசிப்பவனு க்குத்தான் பிறப்பு இறப்பு என்ற ஒரு சம்சாரச்சுழலில் சிக்காமல் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணமும் கூடவே வருகிறது. அப்படி ஒரு சாகாநிலை இருக்குமானால் அதை எப்படி அடைவது என்ற சிந்தையும் உந்துதலும் இருப்பவனையே *முமுக்ஷூ* என்று கூறுகிறார்கள். அதாவது இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் *முமுக்ஷூ* என்ற ஸாதகன்.

ஆத்ம போதம் 4

ஒருவன் இறன்துவிட்டால் அவன் இயற்கை எய்தினான் என்று சொல்கிறோம். தன்னைச் சுற்று முற்றும் பார்த்து இயற்கையில் என்ன நடக்கிறது என்று கூர்ன்து பார்ப்பவனுக்கு இதன் உண்மை புரியும். சுற்றியுள்ள மனிதர்கள் தன்னைப் போலவே விதவிதமாய் எண்ணுபவர்கள் ஆதலால், அவர்கள் தங்களது செயலால் தங்கள் சுற்றத்தை மாற்றி அதைத் தங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளமுடிகிறது. அதைச் செயற்கை என்று சொல்லி, அதைச் செய்வதுதான் அவனது இயற்கை என்று தெரின்துகொள்கிறோம். அதுமட்டும் அல்லாமல் ஒவ்வொருவனும் வெவ்வேறு மாதிரியாக இருப்பவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிறது.
மனிதனைப் போலவே தன் இன விருத்தி என்று ஒரு சில விஷயங்களில் மற்ற ஜீவராசிகள் ஈடுபட்டாலும், மனிதனளவு ஒரு குடும்பம், சமூகம், தேசம், உலகம் என்ற விதவிதமான கட்டுக்கோப்பான வெளிப் பார்வைகள் இல்லாது, பொதுவாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவைகள் வாழ்வதையும் அவன் பார்க்கிறான். ஒரு சில மிருகங்கள் கூட்டாக வேட்டையாடினாலும், வேறு பல விஷயங்களில் சேர்ன்து இருன்தாலும், அவனது பார்வை போல பொதுவாக அவைகளுக்கு இல்லை என்பதால் மட்டுமே அவைகளை ஒதுக்கிவிட முடியாது; அவைகளில் சிலவற்றிற்கு அவனை விடவும் கூர்மையான பார்வையோ, மோப்பமோ, இருளில் காணும் சக்தியோ, அதிர்வுகளை உணர்வதோ அல்லது அதுபோன்ற வேறு சில இந்திரியாதி விஷயங்களிலோ அவனை விடவும் அவைகளுக்குத் தேர்ச்சி இருக்கின்றன என்றும் அவன் தெரின்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அவைகள் அப்படி இருப்பது அவனுக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதில் அவனுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. அது மட்டுமல்லாது ஒன்று தனக்குத் தெரியும் என்பதோடு, அது தெரியும் என்பதும் தெரியும். ஆனால் அவைகளுக்கோ ஒன்று தெரியும், அப்படித் தெரிவதாலேயே அவைகள் தங்கள் தினப்படி வாழ்க்கையை நடத்துகின்றன, ஆனால் தனக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் உண்டு. இங்குதான் மனிதன் அவைகளினின்றும் வித்தியாசப்படுகிறான் என்று இதுவரை தெரிந்து வைத்திருக்கிறான். அதாவது ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்.
நாம் நாமாக எப்போதும் இருக்கிறோம் என்றால் நமது உண்மை நிலை என்ன என்று கேட்டு அதை அறிய முயற்சிப்பவன் தான் முமுக்ஷூ. அந்த அறிவைப் பெற முயல்பவன் இந்த ஆத்ம போதம் சொல்லப்போவதைக் கேட்பதற்குத் தகுதியுள்ளவன் ஆகிறான். அந்த வேட்கை தீவிரமாக இருக்க வேண்டும் என்றால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்ததால் அந்த நிலைக்கு வன்திருப்பான் என்றும் சங்கரர் இங்கு கூறியிருக்கிறார்.
தன்னைத் தானே அறிவது என்பது ஒரு தீவிர முயற்சி என்பதால் அந்த நிலையை அடைவதற்கு ஒருவன் சில நிலைகளைத் தாண்டி வன்திருக்க வேண்டும். எப்போது ஒருவன் பிறப்பையும் இறப்பையும் தன் உடலோடு தொடர்புகொண்டு பார்க்கிறானோ, அப்போதே அவனுக்கு உடல் இருக்கிறது என்று உணரப்படுகின்ற விழிப்பு நிலையில்தான் உலகமும் தெரிகிறது என்ற உண்மையும் புரிகிறது. அத்தகைய உடல் இருப்பதே தெரியாத அவனது கனவு மற்றும் உறக்க நிலைகளிலும் அவனுக்குச் சில அனுபவங்கள் இருப்பதாலும், அந்தக்கனவைக் காணும் அவனுக்கே வேறோர் உடலும், அதனுடன் வேறோர் உலகமும் காணப்படுவதால் அவனுக்கு விழித்தவுடன் காணப்படும் உலகைப் பற்றிய சந்தேகம் வளர்கிறது.

ஆத்ம போதம் 5

கனவிலிருந்து விழித்தவுடன் சந்தேகம் வந்ததில் போன பாடம் நிற்கிறது.. நினைவு படுத்திக்கொள்ளுங்கள்……
உங்களுக்கு இங்கு ஒரு நல்ல செய்தி சொல்லவேணும். நேற்று வலைதளத்திலிருந்து மிக அபூர்வமான ஆத்மபோதம் நூல் Pdf கிடைத்தது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் தமிழில் செய்யுளாக எழுதியது. இன்னும் நாம் தெளிவாக சிந்திக்க அது மிக்க உப யோகமாக இருக்கும்.
எப்போதும் இருக்கும் உண்மையான நிலையைத் தேடுபவனுக்கு வந்து வந்து போகும் இந்த உலகங்கள் எப்படி உண்மையாய் இருக்கும் என்ற எண்ணம் தீவிரமாக வளரும்போது அவனுக்கு உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாது போகின்றன. இதை ‘வீதராகிணாம்’ என்ற சொல்லால் சங்கரர் குறிப்பிடுகிறார். ஆசைபோகிறது என்றால் விரக்தி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் – அவைகளின் மேல் இருக்கும் ஈர்ப்பு வெகுவாகக் குறைகிறது என்று கொள்ளலாம். தினப்படி வாழ்வின் தேவைக்கு மேல் அநாவசியமான ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது என்று சொல்லலாம்.
எப்போது உலகியல் விஷயங்களில் ஈடுபாடு குறைகிறதோ அப்போதே அவை கிடைக்காததால் தனக்கு முன்பு வந்த ஓர் ஏக்கமும் பிறருக்குக் கிடைத்துவிட்டதால் வந்த பொறாமை கோபம் முதலானவைகளும் போய்விட்டன என்று நம்ப இடம் இருக்கிறது. இவை தவிர மனமும் உண்மை நிலை ஒன்றைத் தேடி ஒரு வைராக்கியத்தோடு இருப்பதால் இவை எல்லாம் ஒருமுகமாகச் சேர்ந்து மனத்தளவில் ஒரு அமைதியைக் கொடுத்திருக்கிறது. இதை ‘சாந்தானாம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
உலக விஷயங்களிலும் முன்பு போல் நாட்டமில்லைஇ மனமும் அடங்கியிருக்கிறது என்னும்போது தனக்கும் பிறருக்கும் வேண்டிய வேலையை மட்டும் செய்வதால் நல்ல காரியங்கள் தவிர வேறு எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. தான் பிறர் என்ற பாகுபாடு இருந்தால்தானே தனக்கென ஒன்றும் பிறர்க்கு மற்றொன்றும் என்று செயல்கள் வளர்ன்து பாவம் செய்யத் தூண்டியிருக்கும். இப்போதுதான் அப்படி இல்லையே; அதனால் அவர்கள் பாவச் செயல்களை ஒழித்தவர்கள் ஆகிறார்கள். இந்த நிலையை ‘க்ஷீணபாபானாம்’ என்ற சொல் குறிப்பிடுகிறது.
இந்த மாதிரி நிலைமையை அடைந்திருப்போர் கீதை சொல்கிறபடி தன் சரீரத்தாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றுபட்டு தவம் செய்திருக்க வேண்டும். அப்படி அவை மூன்றும் நடன்திருக்கவில்லை என்றால் நான் என்ற அகந்தை ஓங்கியும் அதனால் இரட்டைகளான தான்-பிறர் என்ற பாகுபாடும் அதை ஒட்டிய பாவச் செயல்களும் நடந்துகொண்டிருக்கும்.
சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் வரைய வேண்டும் என்பது போல் உலகின் நிலையற்ற தன்மையையும் அதனால் என்றும் உள்ள உண்மையையும் அறிவதற்கு உடலே முதல் காரணம் என்று மட்டும் அல்லாமல் கருவியாகவும் ஆகிறது. இதைக்கொண்டுதான் திருமூலர் உடம்பினில் உறுபொருள் கண்டேன் உடம்மையிருந்து ஓம்புகிறேன்……என்றார் போலும்.
முதலில் உடல் அளவில் உலக விவகாரங்களில் ஈடுபட்டு பல அனுபவங்களையும் பெற்று அப்புறமாக சில சந்தேகங்கள் வரவும் அதைப் பலரிடம் கேட்டும் பேசியும் படித்தும் தெளிந்தும் ஒரு நிலைக்கு வரும்போது மேற்கொண்டு கேட்டவைகளில் மனதை ஒருமுகப்படுத்தி மேலே செல்வதற்கு என்று ஒன்றன்பின் ஒன்றாக நமது பயிற்சி தொடங்குவதற்கு உடலும் அதைச் சார்ந்த மனமும் கருவிகளாக உள்ளன. நம்மை விடப் படித்த சான்றோர்கள் நல்வழி காட்டும் குருமார்கள் தினப்படி நாம் காணும் ஆசிரியர்கள் வேதம் ஓதும் அந்தணர்கள் என்று நம் வாழ்வில் இவர்கள் போல் வரும் பலப்பல பெரியோர்களிடம் நாம் காட்டும் மரியாதை அடக்கம் என்பது தவிர உடலைக் கட்டுப்படுத்தும் சில வழிமுறைகளான தூய்மையாய் இருத்தல் விரதம்காத்தல் சாத்விகஉணவருந்தல் என்பதனால் புலனடக்கம் வருவதால் சரீரத்தவம் என்ற முதல் படியில் வருகிறது. மற்றவரைப் புண்படுத்தாமல் பேசுதல் உண்மையே பேசுதல் அனைவரும் மகிழும்படி பேசுவது தவிர நல்ல ஆன்மிகத்தேடலைத் தூண்டியும் வளர்க்கவும் உதவும் நூல்களைப் படித்தல் என்பவை எல்லாம் வாக்தவம் என்ற இரண்டாம் படியில் வருகின்றன. தன்னைச் சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பாய் இருத்தல் அமைதியோடு இருந்து தன் வாழ்க்கை மூலம் அனைவருக்கும் வழி காட்டுதல் எதற்குத்தேவையோ அதை மட்டும் பேசி பொதுவாக மௌனம் காத்தல் என்றிவ்வாறான இதய சுத்தியுடன் இருப்பது மானசதவம் என்ற மனதளவில் கடைப்பிடிக்கப்படும் தவமாக அடுத்த படியில் வருகிறது. இத்தகைய தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. இவைகள் எல்லாம் ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும். நமது முன்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள திரைகளை அகற்ற உதவும். இதனால் பாவச் செயல்கள் குறைந்து மனம் ஓர் அமைதி நிலைக்கு வந்து அதனால் உலகச் செயல்களில் தேவைக்கு மேல் அதிகமான நாட்டம் நமக்கு இல்லாதபடி செய்து பிறப்பு இறப்பு என்றால் என்ன என்று நம்மை முன்னே கூறியபடி சிந்திக்க வைக்கும். இத்தகைய தொடர் நிகழ்வுகளால் மட்டுமே ஆன்மாவைப் பற்றிய சிந்தனை பலப்படும். என்றும் உள்ள ஆன்மாவை உணர்வது என்பது வெறும் அறிவு பூர்வமானது என்றிருந்தால் தொடக்கத்தில் எடுத்துவைத்த வாதங்களைப் படித்ததுமே நாம் ஆன்மாவை உணர்ந்திருக்கவேண்டும். ஆனால் படிப்பது சிந்திப்பது என்பதெல்லாமே நமது மனம் அறிவு இவைகளின் மூலம் நடப்பதாலும் என்றும் உள்ள ஆன்மாவை திரை போட்டு நாமே மறைத்து வைத்திருப்பதால் அத்திரையை அகற்ற முயற்சி செய்வதே இந்தச் சிந்தனையின் முதல் பயன் என்பதாலும் நாம் அறிவு கொண்டு ஆன்மாவை உணரமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.

ஆத்ம போதம் – 6

இந்று சற்று நீண்ட பதிவு. பொறுமையாக படியுங்கள்.
நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம். பேரறிவு ஒளிரவேண்டும் என்றால் ஒளிரவேண்டியதுதானே? அது ஒன்றே உண்மை என்றால் பொய்யாகிய திரை எப்படி குறுக்கே நிற்க முடியும்? அது ஏன்வருகிறது? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாம். இப்போதைக்கு அதற்கெல்லாம் பதில் தேவை இல்லை. ஏனென்றால்இ இவைகளுக்கு பதில் சொன்னால் புரிவதற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் விவரங்கள் வேணும். அதனால் மேலே போவோம்.

போ³தோ⁴ளன்யஸாத⁴னேப்⁴யோ ஹி ஸாக்ஷான்மோக்ஷைகஸாத⁴னம் |
பாகஸ்ய வஹ்னிவஜ்ஜ்ஞானம்ʼ வினா மோக்ஷோ ந ஸித்⁴யதி ||

அறிவொன்றே நேர்முக்தி சாதனமாகும்
பிற சாதனங்களின் பேறாம் – அறிவின்றி
ஆகாது முக்தியுறல் அக்கினியின்றிப் பாகம்
ஆகாதவாறு என்று அறி

எப்படி மற்ற எல்லாப் பொருட்கள் இருந்தாலும் நெருப்பு இல்லாமல் சமையல் செய்யமுடியாதோஇ அப்படியே ஞானம் இல்லாது ஒருவனுக்கு முக்தி சித்திக்காது. ஏனென்றால் மற்ற வழிகள் எல்லாவற்றையும் விட தன்னைப் பற்றிய ஞானம் ஒன்றுதான் முக்தி அடைய நேர்வழி ஆகும்…..

இதன் விரிபொருள்:
இந்தச் செய்யுளில் ரமணர் ‘அறிவு’ என்ற சொல்லை பேரறிவை உணர்த்தும் ஞானம் என்பதைக் குறிப்பிடப்பயன்படுத்துகிறார். முன்பகுதியில் ‘அறிவு’ என்பதை நமது மூளையால் அலசப்பட்டு நமக்கு வரும் ‘மழெறடநனபந’ என்ற சொல்லைக் குறிப்பிடப் பயன்படுத்திநோம்.
இந்தச் செய்யுளை அலசுவதற்கு முன்னால்இ நாம் சிறிது பின்னோக்கி ஆதி சங்கரர் காலத்துக்குச் செல்லவேண்டும். அவரது காலத்தில் பற்பல சித்தாந்தக் கருத்துகள் பரவியிருந்தன. அவற்றில் ஒன்று பூர்வமீமாம்ச வாதம். அதன்படி வேதத்தின் நோக்கம் ஒருவன் செய்யவேண்டிய கர்மங்களை விவரமாகக் கூறுவதே. அந்த முறைப்படி செய்யப்படும் எந்த விதமான யாகம்இ யக்ஞம் போன்ற கர்மத்திற்கும் பலன்கள் உண்டு. ஆதலால் அதற்கென்றே உண்டான சில யக்ஞங்களைச் செய்து ஒருவன் முக்தி நிலையையும் அடையலாம் என்பதே அவர்களுடைய நிலை. அவர்களுக்கு கர்மம் வெறும் ஜடம்இ அதற்குப் பலன் தருவது கர்மபல தாதாவாகிய இறைவன் என்பதை வாதங்கள் செய்து நிரூபித்துஇ அவர்களில் சிலரைஇ பாரதம் முழுதும் சுற்றி வந்துஇ தான் பரப்பிக் கொண்டிருந்த அத்வைத மார்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஆதி சங்கரர். அப்படி மாறி வந்தவர்களில் ஒருவரான மண்டனமிஸ்ரர் என்பவர்தான் சுரேச்வராசார்யர் என்று பெயர் மாறி சங்கரரின் பிரதமசீடர்களில் ஒருவராகிஇ சிருங்கேரி சங்கரமடத்தின் முதல் ஆச்சாரியராக நியமிக்கப்படுகிறார்.
இறைவனை நினைத்துச் செய்யப்படும் செயல்கள் யாவும் நம் கருத்தைத் திருத்திக் கதிவழி காண்பிக்கும். ஆக கர்மயோகம் வழி காட்டும் என்பது சரி. அது போன்றே மற்ற யோகங்களும் ஒவ்வொரு விதத்தில் நம்மை முக்தியை நோக்கி இட்டுச் செல்லும். பூஜைஇ ஜபம்இ தியானம் முறையே இறைவனிடம் உள்ள பக்தியால் உடலாலும்இ வாக்காலும்இ உள்ளத்தாலும் செய்யப்படும் கர்மமே என்று ரமணபகவான் ஒரு இடத்தில் கூறுவார். அதில் முன்னது ஸ்தூலமாகவும்இ பின்னது நுண்ணியதாவும் இருப்பதால்இ நுண்ணியதாக இருப்பதே மற்றதைவிட மிக உயர்ந்தது என்பார். அதற்குக் காரணம் நாம் இவைகளினின்றும் நுண்ணியதான எண்ணத்தையும் தாண்டி உள்ளதை அடைந்து அந்தப் பேரறிவை உணரவேண்டும் என்பதே. அப்படிச் செல்லக்கூடிய ஞான வழி ஒன்றே நமது தவறான எண்ணத்தைச் சரி செய்து நமக்கு முக்தி அளிக்கும் என்றும் அதில் விவரமாகக் கூறுவார். அதுவே யோகங்களில் எல்லாம் சிறந்த மகா யோகம் என்றும் ரமணர் குறிப்பிடுவார்.
அதன்படி முமுக்ஷூ ஒருவன் அந்த அளவுக்கு விவேகம் கொண்டுஇ வேகத்தோடு ‘உந்து’வதால் அடையும் திறன் கொண்டுஇ அவன் ‘பற’க்கும் நிலைக்கு வரவேண்டும் என்றும் பொருள் வைத்து ரமணர் உந்திபற என்று உபதேசஉந்தியார் என்ற நூல் செய்தார். ஓர் ஆகாய விமானம் தரையில் வேகமாகச் சென்று உந்திக்கொண்டு பறக்கும் நிலையை அடைவது போன்றதுதான் இதுவும். இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தரை வழியாக ஓர் இடத்தை அடைவதைவிட ஆகாய மார்க்கமாக அங்கு அடைவது ஒரு நேர் கோட்டில் செல்வதாகவும் இருக்கிறதுஇ அதே சமயம் தரையில் இருக்கும் மலைஇ ஆறு போன்ற பல தடைகளையும் தாண்டுவதாகவும் அமைகிறது. அதே போன்று இங்கும் இந்த ஞானமார்க்கத்தில் சென்றால் உடல்இ மனம் இவைகளினால் வரும் தடைகளையும் தாண்டிஇ நேராக முக்தி நிலையை அடைய முடிகிறது. முக்தியடைய வெவ்வேறு வழிகள் சொல்லப்பட்டிருப்பதன் காரணமே ஒவ்வொருவரும் அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றார்கள் என்பதே. பலருக்கும் தன் வாழ்க்கையின் பயனைப் பற்றியோஇ அல்லது அதன் காரணத்தைப் பற்றியோ யோசனை வருவதில்லை. எல்லோருக்கும் வாழ வேண்டும் என்றும்இ வாழ்க்கையில் சுகமாய் இருக்க வேண்டும் என்ற ஆவல் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் எதைச் செய்தால் அந்த சுகம் கிடைக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.
ஒன்றன்பின் ஒன்றாகப் பொருளும் மாறிஇ அதன் மேல் உள்ள ஆசையும் மாறி ஒரு விதமாக ஓயும்போதும்இ அல்லது என்னதான் முயன்றும் ஏதும் நாம் ஆசைப்பட்டது கிடைக்காமலோஇ கிடைத்தும் அதை அனுபவிக்க முயலாமல் போவதாலோ விரக்தி வரும்போதும்இ ஒருவனுக்கு உலகின் மீதும் அதன் பொருள்களின் மீதும் உள்ள கண்ணோட்டம் நாளடைவில் மாறுகின்றன. எது செய்கிறதோ இல்லையோஇ காலம் இந்த நிலைக்கு ஒருவனைத் தள்ளிக்கொண்டு வரும். சிலருக்கு இந்தக் காலஅளவு குறைவாகவும்இ வேறு சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கலாமே தவிர கடைசியில் ஒருவன் இந்நிலைக்கு வந்தே ஆக வேண்டும். அப்போதும் ஒருவனது மனோநிலையைப் பொருத்தே அவன் எப்படி மாறுவான்இ அடுத்து என்ன செய்வான் என்பதும் இருக்கிறது. ஏனென்றால் எந்த நிலையிலும் மனிதன் மனிதன் தான். அவனது மிஞ்சியிருக்கும் ஆசாபாசங்களைப் பொருத்தே மேலே வரப்போவது அமையும்.
முமுக்ஷூவுக்குப் பல வழிகள் இருந்தன என்று சொன்னோம். அதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
பலரும் செல்லும் பக்தி வழியின் முக்கிய அம்சம் இறைவனிடம் சரண் அடைவது. இது வெறும் சொல்லளவிலே மட்டும் இல்லாது மனத்தளவில் ஆழமாக இருந்தால்தான்இ அது பரிபூரண சரணாகதி ஆகும். அப்படி இருன்தால் சரணடைந்தவன் நான் தான் இறைவனிடம் சரணடைன்துவிட்டேனேஇ எனக்கு இது நடக்கவில்லையேஇ அது கிடைக்கவில்லையே என்று நினைக்கவும் மாட்டான்இ சொல்லவும் மாட்டான். அப்படிச் சரணடையும்போது மனம் பூரண அமைதி கொள்ளும். அப்போது அந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருப்பவன் யார் என்று கேட்டால் அவனால் என்ன சொல்லமுடியும்? நான் என்று சொல்வானா அல்லது இறைவன் என்பானாஇ அல்லது இறைவன் தன்னுள் இருப்பதால் என்பானா? அப்படியே எதுவும் சொன்னாலும் முன்பு இறைவன் அவனுள் இல்லாது போயிருன்தானாஇ இல்லாது போய் இருந்தால் அப்போது அவன் என்னவாய் இருன்தான் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் வரும்? ஆக பக்தி வழி மன அமைதியைக் கொடுக்கும் என்பதோடு சரி. அமைதியாய் இருக்கும் அவன் யார் என்பதற்கு அங்கு பதில் இல்லை. பக்தி வழியில் வரும் பெரும்பாலானோரின் செயலாக பூஜையையும்இ ஜெபத்தையும் எடுத்துக்கொண்டுஇ ரமணர் அவைகளை முறையே உடலாலும்இ வாக்காலும் செய்யப்படும் கர்மம் என்பார்.
அடுத்ததாக நாம் இறைவனிடம் ஒன்றாவதையே சிலர் யோகம் என்பார்கள். அல்லது நமது மனம் செல்லும் வழிகளைக் கட்டுப்படுத்த நமது புத்தியை ஒருமைப்படுத்துவது என்று சொல்லலாம். ராஜ யோகத்தில் பெரும்பாலும் இது மனதை உண்முகமாகச் செலுத்திஇ அதை அமைதிப்படுத்த ஏதேனும் சில பயிற்சிகளை உடலளவில் செய்வார்கள். நமது உடல் தூலம் என்றால்இ அந்த உடலுடனேயே முதலிலிருந்து இறுதிவரை இருப்பது சுவாசம் என்பதால்இ அதுதான் நாம் உயிருடன் இருப்பதைப் பிறர் அறியவும் உதவும் காணக்கூடிய பொருள். அது உடலைவிட நுண்ணியதானது. அதைப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தினால் நாம் காணமுடியாத நமது நுண்ணிய தேகமும் வசப்படும். அதன் மூலம் தூலமாய் இல்லாது நுண்ணிய வடிவில் இருக்கும் இறைவனுடன் நாம் ஐக்கியம் ஆகலாம் என்று பல தியான முறைகளையும் அவர்கள் சொல்வார்கள். அப்படித் தியானிப்பதாலும் மற்ற பல பயிற்சிகளாலும் மனமும் அமைதி அடையலாம்இ தூலமாய் விளங்கும் உலகின் மீதும் பற்றுதல் இல்லாது அதன் விஷயங்களிலிருந்தும் விலகியிருக்கலாம். ஆனால் அப்படி விலகியிருப்பவன் யார்இ அமைதியை அனுபவிப்பவன் யார் என்று கேட்டால் பதில் இருக்காது. இந்த யோகத்தின் அங்கமாய் விளங்கும் தியானத்தை ரமணர் உள்ளத்தால் செய்யப்படும் கர்மம் என்பார்.
மேலே சொல்லப்பட்ட முறைகள் எல்லாமே ரமணரைப் பொருத்தவரை விதம் விதமான கர்ம யோகங்கள்தான். இவை தவிரஇ செய்யப்படும் எந்தச் செயலும் இறைவனுக்காக என்றும்இ இறைவன் நமக்குக் கொடுத்த சக்தியால் என்றும் கருதிச் செய்வதையே குறிப்பாக கர்மயோகம் என்கிறார்கள். மேலே சொன்னதுபோல இதுவும் நிச்சயம் கதி வழி காட்டும். மன அமைதியையும் கொடுக்கும். ஆனாலும் நாம் செய்யும் கர்மத்தோடு பந்தப்பட்டது போலஇ அதாவது கட்டுண்டது போலஇ ‘நாம் செய்கிறோம்’ என்கிற நினைப்பு நமக்குச் சிறிதாவது இருக்கலாம். அதிலிருந்தும் கர்மத்திற்கு உண்டான விளைவுகளை எதிர்பார்ப்பதில் இருந்தும் நமக்கு விடுதலை கிடைக்குமா என்றால் அது நாம் செய்யும் கர்மத்தால் இல்லை என்பதே பதில். விடுதலை அல்லது முக்தி வேண்டுமானால்இ அதற்கு உரிய மனோநிலையும்இ அறிவும் வேண்டும். வெறும் கர்மத்தால் அது ஆவது இல்லை. மேலும் கர்மத்தில் ஈடுபடுவதால் அதன் நேரடி விளைவாக ஆன்மாவைப் பற்றித் தெளியலாமா என்றால் அதுவும் இல்லை. சாஸ்திரங்கள் சொல்கிறபடி கர்மங்கள்இ அதன் விளைவுகளையும்இ முறைகளையும் பொருத்து நான்கு வகைகளில் இருக்கின்றன.
ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறலாம். இது ‘ஆப்யகர்மம்’ எனப்படுகிறது. அதாவது ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று அரிசி வாங்குவதையும்இ ஒரு பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆன்மா ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்று இல்லாததால் ஆன்மாவை அப்படி அடைய முடியாது.
கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது ‘உத்பாத்யகர்மம்’ எனப்படுகிறது. ஆன்மா இப்போது இல்லாது வேறொரு சமயத்தில் கிடைக்கும் என்பதும் கிடையாது. ஏனென்றால் ஆன்மா எங்கும் அல்லாது எப்போதும் இருப்பது.
மூன்றாவது வகையான கர்மம்இ ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது ‘விகார்யகர்மம்’ எனப்படுகிறது. இது பாலைத் தயிராக மாற்றிக் காட்டுவது போலத்தான். ஆன்மாவை அப்படி மாற்றுவதற்கு முன்பு ஓர் உருவம்இ பின்பு வேறொன்று என்று அதற்குக் கிடையாது என்பதால் ஆன்மாவை அப்படியும் அறிய முடியாது.
நாலாவதாக ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்கினால் அந்தப் பொருளை நன்கு காணலாம். அதற்கு ‘சம்ஸ்கார்யகர்மம்’ என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவில் அசுத்தம் என்று ஏதும் கிடையாது. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே. ஆக இந்தக் கர்மம் செய்தும் நாம் ஆன்மாவை உணர முடியாது.
இப்படியாக எந்த விதமான யோகமுறைகளைப் பின்பற்றினாலும் அதைச் செய்வதில் மனம் ஈடுபடுவதால்இ மனத்திற்குச் சாந்தி கிடைக்கும். ஆக எல்லா வழிகளும் நன்மை தருபவையே. ஆனால் ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்து முக்தி நிலை அடைவதற்கு ஞானம் ஒன்றே நேரடியான சாதனம்.
சமையல் செய்வதற்கு பாத்திரம்இ அடுப்புஇ பல வகைச் சாமான்கள்இ தண்ணீர் என்று எல்லாம் வேண்டும் என்பது போல மேலே சொன்ன வழிகள் எல்லாமே பயன் தரும் என்கிறார் சங்கரர். இங்கு முக்கியமாக என்ன இல்லை என்றால் அடுப்பை உபயோகிக்க வேண்டும் என்றால் நெருப்பு வேண்டுமல்லவாஇ அது இல்லாதுபோனால் மற்றவை இருந்து என்ன பயன்? அதேபோல மன அமைதிஇ உலகில் பற்றில்லாமைஇ நுண்ணிய அறிவு என்ற மற்றதெல்லாம் இருந்தும் அமைதி கொள்பவன் யார்இ பற்றில்லாதிருப்பவன் யார்இ அறிவுடன் இருப்பவன் யார் என்ற அந்தத் தேடல் இல்லாதுபோனால் மற்றவை இருந்தும் பயன் இல்லை என்கிறார். ஆகவே அந்தத் தேடலின் மூலம் நமக்கு சித்திக்கும் ஞானம் இல்லாது போனால் மற்றவை பயனில்லை என்று ஆகிறது.

ஆத்மபோதம் – 7

இங்கு ஒரு சந்தேகம் வருகிறது. என்ன? கர்மங்கள் விசித்ரமாக பலவகையாக இருப்பதால் ஏதாவது ஒரு கர்மமே அக்ஞானத்தைப் போக்கட்டுமே – ஞானத்தால் ஆகவேண்டியதென்ன என்கிற விநாதான். இதன் பதிலாகத்தான் சங்கரர் தன் அடுத்த ஸ்லோகத்தை சொல்கிறார்.
அதன் தமிழ் செய்யுளைப்பார்ப்போம். இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீபொன்னையாமுதலியார் என்கிற சிவானந்தமூர்த்தி என்பவரின் கவிதை.

கன்மமஞ்ஞானந்தன்னை கலந்தவிரோதியாகும்
மன்னியங்கதவிர்தி வழங்கிடதல்ல
இன்னிய ஞானமொன்றேயிருணீக்குஞ்சுடரதொப்பர்
சொன்னவவ்வித்தை தன்னைத்துறந்திடுமுற்றுமனனோ!

இது சற்று கடினமான தமிழ்தான். ரமணரது போல் இருக்காது. பரவாயில்லை. நாம் அர்த்தம்தான் பார்க்கபோகிறோம்.
ஜடமாகிய யாகம் போன்ற கர்மமானது அக்ஞானத்துக்கு வேறாக இருப்பதால் அந்த அக்ஞானத்தை அழிக்க முடியாது. தனக்குத்தானே ஒளிவிடக்கூடிய ஞானமே இருளைப் போக்கும் சுடர்போல அக்ஞானத்தை போக்கிவிடும்.
சாத்திரங்களில் பலவிதமான கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. முறைப்படி செய்தால் ஒவ்வொன்றுக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பதும் உண்மை. அஷ்டமா சித்திகளும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். அதாவது செய்யப்படும் கர்மத்திற்கு அதன் விளைவு என்று ஒன்றிருக்கிறது. அவைகளை அனுபவிப்பவன் என்றும் ஒருவன் இருக்கிறான். கர்மங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு அதற்கான பலன்களையும் தொடர்ந்து அனுபவிப்பவன் என்ற நிலைதான் அவனுக்கு மிஞ்சுமே தவிர அதனால் அவனுடைய முக்திக்கு வேண்டிய அறிவு கிடைக்காது. கர்மங்கள் செய்து கொண்டிருப்பதால் அவைகளைச் செய்பவனுக்கு தான் செய்கிறோம் என்ற கர்வம் தலைக்கேறவும் வாய்ப்பு இருக்கிறது. அது தூலமாகவும் இருக்கலாம் நுண்ணியதாகவும் மாறலாம். ஸ்தூலமாக இருக்கும்போது அவனது அகந்தை வெளிப்படையாக மற்றவர்களை விரட்டுவது.. உதாசீனமாகப் பார்ப்பது என்று இவ்வாறாகத் தெரியும். நுண்ணியதாக மாறும்போது.. இவ்வளவு செய்திருக்கிறேனே அதற்கு இதுதானாபலன் என்று புலம்புவதாகவோ இவ்வளவு என்னிடம் வாங்கிக் கொண்டார்களே அதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று அரற்றுவதாகவோ ஆகிவிடும். அதனால் கர்மம் செய்பவன் எந்த மனநிலையில் செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி செய்பவனுக்கே ஞானம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெளிவாகவே சொல்கிறார்.

இனி அடுத்த பாடல் ஆத்மா சரீரங்கள் தோரும் தனித்தனியாக இருக்கின்றதால் தனித்தனியாக அனுபவிக்கப்படுகின்றதால் அந்த ஆத்மாவுக்கு விடுதலை அதாவது மோட்சம் எப்படி கிடைக்கும் என்ற சங்கை வருகிறது. அதற்கு பதிலாகத்தான் அடுத்த ஸ்லோகம் வருகிறது…….

அவிரோதி⁴தயா கர்ம நாவித்⁴யாம்ʼ வினிவர்தயேத்
வித்⁴யாவித்⁴யாம்ʼ நிஹன்த்யேவ தேஜஸ்திமிரஸங்க⁴வத

அறியாமைக்குப் பகை அன்று அதனால் கன்மம்
அறியாமை தன்னை அகற்றாது – அறிவே
அழிக்கும் அறியாமை ஒளி அந்தகாரக்கும்பு
ஒழிக்குமாறு என்றே உணர்

அஞ்ஞானம் போக வேண்டுமென்று செய்யப்படும் கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால் அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படக் கூடியதால் அது ஒன்றே ஞானம் எனக்கு இல்லை என்ற அறியாமையைப் போக்கும். இங்கு ரமணர் அறிவு என்று சொன்னது ஞானத்தைக் குறித்தே! காரிருளை நீக்குவதற்கு எப்படி ஒளி தேவைப்படுகிறதோ அப்படியே அஞ்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் தேவைப்படுகிறது.

இதன் விரிபொருள்:
கும்மிருட்டைப் போக்குவதற்கு ஒளி தேவைப்படுவது போல தனக்கு ஞானம் இல்லை என்ற அறியாமையைப் போக்குவதற்கு வேண்டியதே ஆத்ம ஞானம். அதைக் கர்மத்தால் செய்யமுடியாது. ஞானம் பெறுவதற்கும் ஏன் ஒரு கர்மம் சொல்லப்படவில்லை என்றால் அதன் காரணமே அப்படிச் செய்யமுடியாத காரியம் அது என்பதால்தான். எந்தக் கர்மமும் ஒருவனுடைய மனத்தின் ஈடுபாட்டால்தான் முடியும். ஆனால் ஆத்மஞானத்தின் முதல் படியே மனத்தைப் பற்றி விசாரிப்பதே. அதனால் கர்மம் செய்வதின் மூலம் அறிவது என்பது மனத்தைக்கொண்டே மனத்தைப்பற்றி விசாரிப்பது என்பதால் அது ஒரு திருடன் திருடனைப் பிடிப்பது போன்றது. அது முடியுமா? அது நாடகத்தில் வேண்டுமானால் நடக்கும். ஆனால் நடக்கும் வாழ்க்கையில் ஒருபோதும் நடப்பதில்லை. கர்மம் என்பது ஒரு வேலையில் ஒரு குறிக்கோளோடு ஈடுபடுவது. அது வேலை செய்யாது சோம்பேறி த்தனமாக இருக்கும் தமஸ் நிலைக்கு எதிரானது. ஆகவே கர்மம் தமஸ் நிலைக்கு எதிரி. கர்மம் தொடங்கியதும் தமஸ் நிலை முடிவடைகிறது என்று சொல்லலாம். ஆனால் கர்மம் செய்வதால் ஞானம் வரும் என்று எப்படிச் சொல்லமுடியும்? அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது இல்லையே. மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கிற வாழ்க்கையின் பயன் என்ன என்று கேள்வி கேட்டு. அதன் தொடர்பாக தனது வெவ்வேறு நிலைகளையும் அலசிப்பார்த்து விட்டு. அவை எல்லா வற்றுக்கும் ஆதாரமாக ‘நான் இருக்கிறேன்’ என்ற ஒரு தொடர் உணர்வு இருக்கிறதே இது என்ன? என்ற தேடலில் இருக்கும் முமுக்ஷூவிற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உள்ள கர்மம் எப்படிஒரு தொடக்கமோ முடிவோ இல்லாத ஞானத்தைப் பற்றி அறிய உதவும்?

ஆத்ம போதம் – 8

ஒரு தொடக்கமும் முடிவும் உள்ள கர்மம் எப்படிஒரு தொடக்கமோ முடிவோ இல்லாத ஞானத்தைப் பற்றி அறிய உதவும்? ………. இந்த விநாவைத் தொடர்ந்து மேலே பார்ப்போம்……..

நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டும்; ஏனென்றால் நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று எதிரி. அங்கு நீருக்குப் பதிலாக மண்ணெண்ணையோ, பெட்ரோலோ உபயோகப்படுத்தினால் என்னவாகும்? அதே போன்று அறியாமையைப் போக்க கர்மம் என்றால், நாம் முன்னே பார்த்தவாறு அகந்தை வேறு விதமாக வளர்ந்து, இருக்கும் பிரச்சினைகளை மேலும் வளர்க்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இருளும் வெளிச்சமும் ஒன்றுக்கொன்று முரணானவை. அதனால் இருட்டைப் போக்குவதற்கு ஒளி கொண்டு வந்தால் போதும். இருட்டைப் போக்க இருட்டால் முடியாது. ஸ்ரீபரமஹம்சர் சொல்லுவார்…… “உன்னுடைய இதயம் என்னும் குகையில் அக்ஞானம் என்னும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. ஞானம் என்னும் வெளிச்சத்தை ஏற்றிவை. அஞ்ஞானம் தானே அகன்று விடும்”
இருளுக்கு என்று ஒரு தனி இருப்பு கிடையாது. எங்காவது இருட்டைக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த இடத்திற்கு வரும் ஒளியை மறைக்கும் செயலைச் செய்வது ஒன்றே அந்த வழி. ஆக ஒளி தானே….தானாக இருக்க முடியும், ஆனால் இருள் அப்படியில்லை. அதனால் ஓரிடத்தில் ஒளி வரவேண்டும் என்றால் அந்த இடத்தில் இருக்கும் மறைப்புகளையும், திரைகளையும் விலக்க வேண்டும் என்பதுதான். அப்படி ஒளி வந்ததும் இருள் எங்கே போயிற்று? எங்கேயும் போகவில்லை. இருள் என்று ஒன்று இருந்தால்தானே அது எங்கேயாவது போவதற்கு! அதனால் இருள் என்பதை மாயை என்பார்கள். இருட்டையே பார்த்துக்கொண்டு இருப்பவன் இருள் உண்மையாகவே இருக்கிறது என்றுதான் சொல்வான். கொஞ்சம் யோசித்தால்தானே அதன் உண்மை புலப்படும். உண்மையில் எந்ந நடந்தது இந்த இடத்தில். ஒளி இல்லாத இடத்திற்கு ஒளி வந்தது என்று சொல்வதுதானே பொருத்தம்? அதுபோலத்தான் அறிவு-அறியாமை என்ற இரட்டையின் குணமும்.
ஆன்மாவைப் பற்றிய ஞானம் என்பது மட்டுமல்ல; எந்த வகையான உலகியல் அறிவைப் பொருத்தும் அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது. ஆனாலும் மற்ற உலகியல் அறிவுக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் முன்னது தன்னை விட்டு மற்றவைகளைப் பற்றி அறிவது, பின்னதோ அறிவுறும் தன்னைப் பற்றியே அறிவது. எப்படி ஒருவன் தானே திருடனாகவும் தானே போலீசாகவும் இருக்கமுடியும் என்பதுதானே உங்களுக்கு இப்ப வந்த ந்தேகம்? மேலும் படித்துப் புரின்துகொள்ளலாம்.

பரிச்சி²ன்ன இவாஜ்ஞானாத்தன்னாஸே² ஸதி கேவல: |
ஸ்வயம் ப்ரகாஸ²தே ஹ்யாத்மா மேகா⁴பாயேம்ʼsஸு²மானிவ ||

அறியாமையால் மறைவானது போல் ஆன்மா
அறவே அஹ்து ஏகமதாகி – நிறைவாய்
இலகுமே தானாய் இரியவே மேகம்
இலகும் ஆதித்தன் எனவே

எங்கும் இருக்கும் ஆன்மா அதைப் பற்றிய அறியாமையால் ஏதோ எல்லைக்குள் அடக்கப்பட்டது போல் மறைந்து கிடக்கின்றது. அந்த அறியாமை அழிந்ததும், மேகத்தால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மேகம் கலைந்ததும் எப்படி பளீரெந்று தெரியுமோ, அப்படியே இருக்கும் ஒன்றேயான ஆன்மா பரிபூரணமாகப் பிரகாசிக்கும்.
ஏதோ ஒன்று புதிதாக அடையப்படவேண்டியது என்றால், அது முன்னதாக இல்லாது இருந்தது என்றாகிறது. நம் உடல் அப்படிப்பட்டதுதான். முன்பு இல்லாது இருந்தது, பின்பும் இல்லாது போகிறது. ஆன்மா அப்படிப்பட்டதாக எப்படி இருக்க முடியும்? நாம் இருக்கும் ஒன்றைத்தானே தேடுகிறோம். ஏனென்றால் நாம் முன்பு பார்த்த நமது வெவ்வேறு நிலைகள் எல்லாம் வந்துவந்து போய்க்கொண்டு இருந்தனவாக உணர்ந்தோம். அதனால் அவை அனைத்துக்கும் ஆதாரமாய் இருக்கும் ஒன்றைத் தேடுகிறோம் என்றுதானே சொன்னோம். அந்த ஆதாரமே இல்லை என்றால் நாம் இருப்பது எப்படி? நமது ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் இருப்பதை உணராதபோதும், நாம் இருந்திருக்கிறோம். அது மட்டுமல்ல, அதை அனுபவித்தும் இருக்கிறோம். இல்லையென்றால் நாம் விழித்தபின் சுகமாக உறங்கினோம் என்று சொல்லமுடியாது. எப்போதும், எந்த நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதனால் மாறாத ஒரு நிலை இருந்தாக வேண்டும். அதனால் இல்லாத ஒன்றை நாம் புதிதாகத் தேடவில்லை. இருக்கும் அதை எப்படி உணர்வது என்று தெரியாததால் தேடுகிறோம் என்பதுதான் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை.

ஆத்ம போதம் – 9

இல்லாத ஒன்றை நாம் புதிதாகத் தேடவில்லை. இருக்கும் அதை எப்படி உணர்வது என்று தெரியாததால் தேடுகிறோம் என்று நேற்று முடிந்தது தொடர்ந்து இன்று தேடுவோம்………..
அதாவது நமக்குத் தெரியாமல் இருப்பதைத்தான் அறியாமை என்கிறோம். சாஸ்வதமான ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நம் அனுமானம். ஏனென்றால் அது இல்லையென்றால் நாமும் இல்லை என்றாகிவிடும். நமது மற்ற நிலைகளை எல்லாம் கடந்தும், அவைகளை உள்ளடக்கியும் இருக்கும் ஒன்று ஏதோ காரணங்களால் தெரியாதபடி மறைந்து இருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன, ஏன், எப்படி என்று கேட்பது இருக்கட்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கியதால் பரந்து விரிந்து இருக்கவேண்டிய அது, மறைந்து இருப்பதால் ஒரு எல்லைக்குள் குறுக்கப்பட்டு இருக்கிறதாக நமக்குத் தோன்றுகிறது. மறைக்கும் தடைகளை நீக்கி விட்டால் இருப்பது தானாகத் தெரியும் என்பது சரிதானே?
எப்படி சூரியனை மறைத்து வைத்திருக்கும் மேகங்கள் விலகியவுடன் சூரியன் பளீரென்று தெரிகிறதோ, அதே போல அறியாமையால் மறைந்து இருப்பது போல் தோன்றும் அந்த ஆத்மாவை மறைத்திருக்கும் திரைகளை விலக்கிவிட்டால் ஆத்மாவும் தானாகவே ஒளிரும். (இந்த திரைகளைத்தான் நமது ஸ்ரீசக்ரபூஜையில் ஆவரணம் என்ற மறைப்பாகக்காட்டி அதனை நீக்கிக் கொண்டு ஸ்வயஆத்மா என்கிற சித் சக்தியை அடைதல் என்று காட்டினார்கள்.)
காணப்படும் எல்லா நிலைகளுக்குமே அந்த ஆத்மா காரணம் என்பதனால் அது சூரியன் போல் எல்லாவற்றையும் ஒளிர வைக்கவேண்டும். எப்படி சூரியன் உதித்ததுமே மலர்கள் மலர்வதில் ஆரம்பித்து சகல உயிர்களும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அதே போல ஆத்மாவின் சந்நிதானத்தில் நம் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் இவை எல்லாம் உலகில் நடக்க வேண்டும் என்பதற்காக சூரியன் உதிப்பதில்லை. அதேபோல நடக்கும் வேலைகளுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. இப்போது நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மறைக்கும் திரைகள் என்னென்ன என்பதும், முமுக்ஷூ எடுக்கும் பயிற்சிகள் எல்லாம் அந்தத் திரைகளை அகற்றுவதற்கே என்பதும்தான்.

அஜ்ஞான கலுஷம்ʼ ஜீவம்ʼ ஜ்ஞானாப்⁴யாஸாத்³வினிர்மலம் |
க்ருʼத்வா ஜ்ஞானம்ʼ ஸ்வயம் நஸ்²யேஜ்ஜலம்ʼ கதகரேணுவத் ||

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூயதாம்
அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்
அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு
அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்

கலங்கிய மாசுபடிந்த நீரில் தேத்தாங்கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் ஜீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப்போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்.

இதன் விரிபொருள்:
முதலில் சாதகனுக்குத் தன் உடலின் மேல் ஒரு அபிமானம் இருக்கும். அப்போது அவனுக்கு ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை அறிவு பூர்வமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பான். அதனால் அவன் தன் உடலுக்கு வரும் நன்மை, தீமைகள் எல்லாம் ஆன்மாவுக்கும் வருகிறது என்று தவறாக நினைக்கிறான். ஆன்மா எதுவும் செய்வதும் இல்லை, அந்தச் செயலால் வரும் விளைவுகளை அனுபவிப்பதும் இல்லை என்று அவனுக்குத் தெரியாததால் உடலையும் ஆன்மாவையும் பிணைத்து ஒன்றாகக் கருதுகின்றான். அதுதான் இங்கு கலங்கிய நீர் என்று கூறப்படுகிறது. இது அறியாமையால் வந்த விளைவு.
அறியாமையால் விளைந்தது என்றாலும், அறியாமை போகும் வரை அதைப் போக்க முயற்சிகள் தேவை. முயற்சிகள் சிரவண, மனன, நிதித்யாசன முறைகளில் செய்யப்படும். அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் என்பதாகும். குருவிடம் ஆன்மாவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிதல் முதல் படி என்றால், மற்ற இரண்டு படிகளையும் ஒருவன் தன் முயற்சியால் விடாப்பிடியாகத் தாண்டவேண்டும். எப்போதும் குருவின் அருள் சாதகனுக்கு உண்டு என்பதால், அவனுடைய தனிப்பட்ட முயற்சிகளின்போதும் அவரது அருள் கூடவே இருக்கும். முன்னது தூல வடிவில் இருந்தால், பின்னவை இரண்டும் ஸூக்ஷ்ம வடிவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமணர் சொல்கிறபடி புலியின் வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்ப முடியாதோ, அப்படியே குருவின் அருட்பார்வையில் பட்ட சீடனும் முக்தி நிலையை அடையாமல் மீள முடியாது.
வேதங்களே நமக்குப் பிரமாணங்கள் என்பதால் வேதத்தில் உள்ள மஹா வாக்கியங்களே ஏதோவொரு வடிவில் நமக்கு குருவின் மந்திரமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். இருக்கக்கூடிய ஆன்மா ஒன்றேயானாலும், ஒவ்வொரு மஹாவாக்கியமும் வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்பட்டவை. அதனால் நாம் அவைகளையே எடுத்துக் கொள்வோம். ரிக்வேதமாந ஐதரேய உபநிதஷத்தில் சொல்லப்பட்டுள்ள லக்ஷண வாக்கியமான “ப்ரக்ஞாநம்ப்ரஹ்ம” என்பது “உணர்வேபிரம்மம்” என்ற இலக்கண வடிவில் சொல்லப்பட்டுள்ளது. யஜுர்வேதம், தைத்திரீயஉபநிஷதத்தில் சொல்லப்பட்டுள்ள அனுபவ வாக்கியமான “அஹம்ப்ரஹ்மாஸ்மி” என்பது “நான் பிரம்மமாய் இருக்கிறேன்” என்ற அனுபவ வாயிலாய் சொல்லப்பட்டுள்ளது. சாமவேதம், சாந்தோக்கியஉபநிஷதத்தில் உபதேசவாக்கியமான “தத்வமஸி” என்பது “நீ அதுவாக இருக்கிறாய்” என்ற உபதேச வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதர்வணவேதம், மாண்டூக்யஉபநிஷதத்தில் சாக்ஷாத்கார வாக்கியமான “அயமாத்மாப்ரஹ்ம” என்பது “இந்த ஆத்மன் பிரம்மம்” என்ற யுக்திக்குப் பின் வரும் அனுபவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஏதோவொரு முறையில் குருவினால் வழங்கப்படும் மந்திர உபதேசத்தைக் கேட்டு, அதன் பொருளையும், விளக்கங்களையும் அவரிடமே அறிந்துகொண்டு, பின்பு அதை மனத்தில் நன்கு அசைபோட்டு, தேவையானால் மேலும் விளக்கங்களைக் கேட்டு அதன் பின்பும் தன் அறிவால் அலசியதும் நன்கு உள்வாங்கிக்கொண்டு, அதை வெறும் அறிவால் மட்டும் அறிந்து கொள்வதை விடுத்து அதன் உண்மையை உணர்வதற்கு அதன் பொருளை மனத்தால் நன்கு தியானித்து அந்தப் பொருளாகவே இருக்க முயல்வதுதான் சாதகனின் முயற்சிகள். இதற்கு மேல் அவனருளாலே அவன்தாள் வணங்கும் நிலை தானே வரும்.
ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும், அறிந்தாலும் உணர்வதற்குமான தடைகள் இவைகள்தான் என்றும், தன்னை இவைகளில் எது பாதிக்கிறது என்று சாதகன் அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதே இங்கு சொல்லப்படுவது.

ஆத்ம போதம் – 9 (a)

முதலில் ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். இதை முன்பே சொல்லியிருக்கணும். பரவாயில்லை. நாம் மிக உயர்ந்த விஷயமான ஆத்மாவைபற்றி தெரிந்து கொள்ள புறப்பட்டிருக்கிறோம் அல்லவா ! இங்கு நமது பூஜையோ ஜபமோ விஷயமில்லை. தயவு செய்து தினம் இரவு படுக்கும் முன் வழக்கம்போல் மொபைல் பார்ப்போமே அப்பொது இந்த ரிதன்பரா ஞானஸபா க்ரூப் பதிவான இந்த ஆத்மபோத பதிவை பொறுமையாக ஒருதரம் தினம் படியுங்கள். இன்று புரியாவிட்டாலும் நாளை புரியும், நாளை புரியாவிட்டாலும் இன்னொருநாள் புரியும். என்ன சரிதானே! என்று புரிகிறதோ (இங்கு புரிகிறது என்று நான் சொல்வது சங்கரர் எழுதியதோ என்எழுத்தோ அல்லது Theory யோ இல்லை. உங்களையே உங்களுக்கு நாம் யார் என்று புரியும்.) அன்று நிங்களும் இல்லை … நானும் இல்லை…. ஆத்மா ஒன்றே! அதுவரை மனனம் நிதித்யாசனம் பயில வேணும். இந்த நிலையில் புரிந்து கொண்டு இனி தினம் படியுங்கள். ஏதேனும் முக்கிய வினா – அல்லது சந்தேகம் இருந்தால் இதில் பயப்படாமல் பதிவிடுங்கள். உடனே அடுத்த பதிவில் குருநாதர் தெளிவிப்பார். சரியா !

ஆத்மபோதத்தில் ஆன்மாவை அறிய பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதை தொடர்ந்து காணுவோம்………..

அனாத்யாவித்யாநிர்வாச்யா காரணோபாதிருச்யதே |
உபாதித்ரிதயாதன்யமாத்மானமவதாரயேத் ||

ஆதியற்று இற்றென்று அறையொணா அஞ்ஞானம்
ஓதுவர் ஆதி உபாதியாய் – ஓதும்
உபாதிகளாம் மூன்றுடல்களின் வேறாய்
உபாதியில் ஆன்மாவை ஓர்

ஒரு தொடக்கமும் இல்லாத, வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாததுமான அறியாமையாகிய உபாதியை காரணசரீரம் என்று சொல்வார்கள். மூன்று சரீரங்கள் என்று சொல்லப்படும் ஸ்தூல, ஸூக்ஷ்மம், காரண உபாதிகளுக்கும் வேறாக உபாதியற்ற ஆன்மாவை உணர்ந்திடுவாய்.

இதன் விரிபொருள்:
“அவித்யா” என்கிற “அஞ்ஞானம்” பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமக்குப் புரிவதற்காக ஒரு பொருளைப்பற்றிய அறிவைப் பற்றி இப்போது பேசுவோம். நமக்குப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாததால் அந்தப் பொருள் இல்லாமலா போய்விட்டது? (உதாரணம்…. சீனாவிலே டிரைவர் இல்லாத கார் மற்றும் ரயில் தானே போகிறது என்கிறார்கள். நாம் பலர் பார்த்ததும் இல்லை. ஆநால் அது இருப்பது உண்மை.)
நம்மைப் பொருத்தவரை அந்தப்பொருள் இல்லை என்பதுதான் சரியான நிலை. அந்தப் பொருளைப் பற்றிய அறிவை நாம் பெறும்போது எப்போது பெற்றோம், எப்படிப் பெற்றோம் என்பதை விவரிக்க முடியும். ஆனால் அதைப் பற்றி அறியாதிருந்தோமே, அந்த அறியாமை எப்போது வந்தது என்பதையோ அதைப் பற்றிய மேலும் விவரங்களையோ நம்மால் கொடுக்க முடியாது. என்ன சொல்ல முடியும் என்றால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவு வந்ததும், அதைப் பற்றிய அறியாமை போயிற்று என்று சொல்லி அதுவரை அறியாமை இருந்தது என்றும் சொல்ல முடியும். அதாவது அந்த ரயிலை பார்த்தவர் வந்து சொன்னாலோ அல்லது டிவி யில் பார்ததோலோ தான் நாம் அறியாமை போகிறது. ஆனால் அறியாமை எப்போது தொடங்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அறியாமையைப் போக்க முடியும். இதே மாதிரிதான் ஆன்மாவை பற்றிச் சங்கரர் சொல்கிறார்.
ஆன்மாவைப் பற்றிய காரண சரீரமான “அவித்யா”வை அவர் விவரிக்கும்போது, “அநாதி” என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆன்மாவைப் பற்றி அது எப்போது தொடங்கியது என்று தெரிந்துகொள்ள முடியாது என்பதையும், “அநிர்வாச்யா” என்பதன் மூலம் அது எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியாது என்பதையும் கூறுகிறார். இதையே ரமணரும் அதை “அக்ஞானம்” என்று மொழிபெயர்த்து “ஆதியற்று” என்று சொல்லி அதன் ‘தொடக்கமில்லாத’ தன்மையையும், “இற்றென்று அறையொணா” என்பதனால் அதன் ‘இதுவென்று சொல்லமுடியாத’ தன்மையையும் விளக்குகிறார். அப்படிச் சொல்வதனால் இந்தக் காரண சரீரம் ஆதி உபாதியாய் இருக்கிறது. அதனால் இந்த உபாதி எல்லாவற்றிலும் மிக ஸூக்ஷ்மதாய் இருந்து அது இருப்பவருக்கும் தெரிவதில்லை, மற்றவர்க்கும் தெரிவதில்லை.
இதை இரண்டு கோணங்களில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். முதலாவதாக, ஸ்தூலதேகம் இல்லாதபோது அது மனம் போன்ற ஸூக்ஷ்ம தேகமாய் இருக்கிறது என்றும், அந்த ஸூக்ஷ்ம தேகத்தின் விதை போன்ற மூலமாய் இந்த மிக ஸூக்ஷ்மதேகமான காரணசரீரம் இருக்கிறதென்று நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டாவதாக, உண்மையில் இருக்கும் ஒன்றேயான ஆன்மாவை ஸ்தூல உபாதியான “நான் உடலே” என்ற அபிமானமும், சூக்ஷ்ம உபாதியான “நான், எனது” என்பன போன்ற மனத்தளவில் தெரியும் எண்ணங்களும், காரண உபாதியான “ஆன்மாவைப்பற்றிய அறியாமை” என்பதும் ஆன்மாவை அறியும் தடைகளாக இருக்கும் உபாதிகள் என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். முன்னது பிறப்பு-இறப்புக்கான காரண காரியங்களையும், அவை தொடர்பான நிலைகளையும் அலசுவதாக இருக்கிறது; பின்னது ஆன்மாவை நாடும் சாதகன் ஒருவன் செய்யவேண்டியது என்ன என்பதைக் காட்டுவதாக அமைகிறது. நாம் இந்த இரண்டாம் கோணத்தைத் தேர்ந்தெடுத்து மேற்கொண்டு செல்வோம்.

ஆன்மாவைப் பற்றிய அறியாமை என்பது தானும், தான் காணும் உலகமுமே உண்மை என நினைத்து, அதற்கு ஆதாரமாக ஆன்மா ஒன்று உண்டு என்பதைத் தெரியாமல் இருப்பது; அல்லது தெரிந்தாலும் அதை மறுப்பது என்பதே அத்தகையவர்களது நிலை. நாம் இதுவரை பார்த்த மூன்று விதமான உபாதிகளும் அவர்களுக்கு இருக்கின்றன என்றுதான் அதற்கு அர்த்தம். ஆன்மாவைப் பற்றித் தெரியாமல் இருப்பவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அவர்கள் தினமும் அடையும் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அவர்களே அலசும்படிச் சொல்லி அவர்களுக்கு மேலும் புரிய வைக்கலாம். ஆனால் அப்படி விளக்கங்கள் அளித்தும், ஆன்மாவை மறுப்பவர்களுக்கு என்ன சொல்லி விளங்கி வைக்க முடியும்? குதர்க்க வாதிகளுக்கோ, மடையர்களுக்கோ எத்தனை விளக்கினாலும் புரிய போவதும் இல்லை. அவர்கள் மறுப்பது விழிப்பு நிலையில்தான், அந்த விழிப்பு நிலை ஒன்றுதான் அவர்களது நிலையா, அவர்களது மற்ற இரண்டு நிலைகளுக்கும் அவர்கள் பதில் என்ன என்றுதான் கேட்கமுடியும். அவர்களது ஒரே ஒரு நிலையை மட்டும் வைத்துக்கொண்டு, உலகின் உண்மையை எப்படி நிலை நிறுத்த முடியும் என்றுதான் கேட்க முடியும். ஆன்மாவைப் பற்றித் தெரியாத பலரும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குக் காலம்தான் கனிந்து வழிகாட்ட வேண்டும். (நமக்கு வழி காட்ட தொடங்கிவிட்டது….. நமது ஸ்ரீவித்யா-சக்ர பூஜையில் இறுதியில் தத்துவசோதனம் என்ற ஒரு கிரியை இருக்கிறது நமக்கு தெரியும். இப்படியேதான் படிப்படியாக நமது பூஜை ஆத்மஞான அறிவை ஊட்டுகிறது. சிதானந்தஅலை இதுபற்றி நிறைய பேசும்.)
அந்தக் கால இடைவெளியில் அவர்கள் செய்யும் நற்காரியங்கள் அவர்களுக்குக் கைகொடுக்கும். இதுதான் சாதகன் ஆவதற்கு முன் ஒருவனுடைய காரணசரீர நிலை. (இதுவே காரணகலசம் என்று பாத்ராசாதனத்தில் ஒரு இடமே உள்ளது.) காரணசரீரத்தை விதை போல என்று முன்பு சொன்னோம் அல்லவா? பிறப்பு-இறப்பு கோணத்திலிருந்தும் இதனை நாம் அலசலாம். ஒரு விதை முளைப்பதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். எல்லா விதைகளுமே துளிர்த்து முளைப்பதில்லை; முளைக்கும் எல்லாமே வளர்வதில்லை; வளரும் எல்லாமே பூப்பது இல்லை; பூக்கும் எல்லாமே காய்ப்பதில்லை; காய்க்கும் எல்லாமே கனி ஆவதில்லை. இதே போன்றுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

ஆத்ம போதம் – 10 *கோசங்கள்*

ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். ….தொடர்ந்து நாளை காணுவோம்…. என்று 24 ஆம் தேதி முடித்திருந்தோம்‌… தொடர்ந்து பார்போம்.
ஆன்மாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் சாதகன் ஒருவனுக்கு, அவனது உடலும், உடல் சார்ந்த உலகமும் அவனுக்குத் தூலதேகமாகவும், அவனது மனோநிலைகள் அவனுக்கு ஸூக்ஷ்மதேகமாகவும் தடைகளாக நிற்கும். இங்கு முதலில் அவன் தன் மனத்தைக் கொண்டே விசாரம் செய்து, (தத்துவசோதநம்) தான் உடலுக்கும் அப்பால் இருப்பதை தன் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அலசுவதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். உடலால் குடும்பத்திற்காக, ஊருக்காக, நாட்டுக்காக உழைப்பது எல்லாம் ஒருவனைத் தன்னையும் கடந்து அனைவரிடமும் உள்ள தெய்வத்தன்மையை உணரச் செய்து அன்பு காட்டச் செய்யும். இது போன்ற பல வழிகள் உண்டு. அத்தகைய வாழ்க்கை முறைகள் அவனுக்கு மனக்கட்டுப்பாட்டைக் கொடுத்து, உடலைக் கடந்த ஆன்மாவைப் பற்றி அறிவதை புத்தி அளவில் கொண்டுவிட்டு அத்துடன் நின்றுவிடும். அங்கு மனமும் முழு அளவில் அப்படியே இருக்கும்.
அதன்பின் ஏதேனும் ஒரு தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து, இவையெல்லாம் நானல்ல என்றால் பின் தான்யார்? என்று விசாரத்தைத் தொடர்ந்து நடத்த, தன் உள்ளிருந்து வரும் ஆத்ம சக்தியால் மட்டுமே ஒருவன் தன் உள்ள நிலையை உணர முடியும். அதாவது, இங்கு “நான்யார்?” என்று கேட்கும் வரை விசாரம் புத்தி அளவில் இருக்கும். ஆனால் அதற்கு அந்த அறிவை வைத்துக்கொண்டே விடை தேட முயற்சிக்கக் கூடாது. அப்படி அறிவின் தூண்டுதலால் வரும் விடைகளை மௌனமாகக் கவனித்துக்கொண்டே – ஒவ்வொரு எண்ணமும் வரும்போது அதைத் தொடர முயற்சிக்காமல், அதைக் கவனித்துக்கொண்டே- இருக்கப் பழகப்பழக ஒருவன் தன் மனமும் இன்றி தான் எப்போதும் உள்ள நிலையை அடையலாம். இதனை அப்படி அடைந்த பெரியோர் கூறியிருக்கின்றனர். (இந்த பயிற்சிக்கு நமது உபாசனையில் அஜபாவிதானம் என்று ஒன்று உண்டு. இது எங்கே என்று காண ஸாதகர்கள் மேலே மேலே வர முயற்சிக்கவும். ஒரே ஜபம் ஒரே சாதனை என்று எத்தனை நாட்கள் செய்வது? இங்கே யோசியுங்கள்.)
அந்த நிலையில் ஆழ்உறக்கத்தில் இருக்கும் சுகநிலையையும், ஆனால் உறக்கத்தில் உணராத அதை அப்போதே உணர்ந்தும் அனுபவிக்கலாம் என்று அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றனர். அதனால் மூன்றுதேகங்களாகிய உபாதிகள் விலக, ஆன்மா தானே ஒளிவிட்டு நிற்பதை ஒருவன் தன் உணர்வினால் மட்டுமே அப்படி இருந்து அறிய முடியும். அந்த நிலையில் அறிவதற்கு என்று வேறாக இன்னொன்று ஏதும் இல்லை; அறிவே அறிவாய் தன்னை அறிந்து நிற்கிறது என்பவர்கள்தான் ஆன்மாவை உணர்ந்தவர்கள்.
இனி அடித்த பாடல்களை பார்க்கிறோம்….

பஞ்சகோசாதியோகேன தத்தன்மய இவ ஸ்தித: |
சுத்தாத்மா நீலவஸ்த்ராதியோகேன ஸ்படிகோ யதா ||

கோசங்கள் ஐந்து முதற் கூட்டுறவால் ஆன்மாவும்
மாசிலதே ஆயினும் அவ்வமயம் – நேரே சருவும்
நீல படாதி கலப்பால் நிர்மலமாம் படிகம்
போலவே ஒட்டாப் பொருள்

தன் எதிரில் நீலம் போன்ற வண்ணங்களுடன் உள்ள துணியால் ஒரு நிர்மலமான ஸ்படிகம் அந்தந்த வண்ணங்களுடன் காட்சி அளிப்பதுபோல, இயற்கையில் குற்றம் குறை இல்லாமல் விளங்கி எதிலும் ஒட்டாத ஆன்மாவானது அதை மறைக்கும் ஐந்து கோசங்களின் குணங்களோடு தோன்றுகிறது என்கிறார்.

இதன் விரிபொருள்:
ஆன்மாவுக்கு உபாதியாக தூல, ஸூக்ஷ்ம காரண தேகங்கள் இருப்பதாகப் பார்த்தோம். இங்கு சொல்லப்பட்டிருக்கும் அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆனந்தமயம் என்ற ஐந்து கோசங்களும் அந்த மூன்று தேகங்களின் விவரங்கள். கோசம் என்றால் உறை அல்லது மூடி. அவைகளை ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பதாகவும் கொள்ளவேண்டும். உதாரணமாக கத்தி ஒரு உரைக்குள் இருக்கும். ஆனால் அதில் ஒட்டாதல்லவா! அதுபோல.
இந்த உறைகளை எல்லாம் விலக்கினால் தானாக விளங்குவது ஆன்மா என்று பொருள். நிர்மலமாய் விளங்கும் ஆன்மா இந்தக் கோசங்களால் மறைக்க ப்படுவதால் அவைகளின் குணங்களோடு காணப்படுகின்றன. நிறம் எதுவுமில்லா ஒரு பளிங்கை கலர்த்துணி ஒன்று மறைத்து, பளிங்கை அந்த நிறத்தோடு உடையதாகக் காட்டுவதை அதற்கு உவமையாகச் சொல்கிறார் இங்கே.
நாம் சாப்பிடும் உணவால் உடல் உண்டாகி வளர்வதால், உடலாகிய ஸ்தூல தேகமே அன்னமயகோசம் ஆகும். பஞ்சபிராணன்களும், பஞ்ச கர்மேந்திரிய ங்களும் சேர்ந்து பிராணமயகோசம் ஆகும். பஞ்சஞானேந்திரியங்களும், மனமும் சேர்ந்து மனோமயகோசம். புத்தியாகிய அறிவின் இருப்பிடம் விக்ஞானமயகோசம். இந்தக் இறுதி மூன்று கோசங்களும் சேர்ந்ததுதான் ஸூக்ஷ்மதேகம். காரணதேகமாகிய மூன்றாவது தேகந்தான் ஆனந்தமயகோசம் ஆகும்.
இந்த கோசங்கள் ஆன்மாவை மறைப்பது மட்டுமல்லாது, தானே ஆன்மாவாக இருப்பதாகவும் நமக்கு காட்டும் வலிமை பெற்றன. அதனால் ஆன்மாவை உணர்ந்துவிட்டேன் என்று யாராவது சொன்னால், அவன் அனேகமாக இந்த கோசங்கள் எதிலோ மாட்டிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்படும். ஏனென்றால் கண்டவருக்கு விண்டு உரைக்க முடியாது அல்லவா! அந்த ஆன்மாவிலேயே லயித்துத்துத்தான் இருக்கத்தான் முடியும்.

ஆத்ம போதம் – 11 கோசங்கள்

நேற்று சொன்ன *பஞ்சகோசங்கள்* என்றதை இன்று சற்று விரிவாக சொல்லுகிறேன். அப்போதுதான் கொஞ்சமாவது புரிய வரும்… சரியா….
இந்த பஞ்சகோசங்கள் பற்றி பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி நமது தைத்ரியஉபநிஷதத்தில் வருகிறது. அதில் பஞ்சகோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை அதாவது கத்திக்கு உறை இருப்பது போல, மாம்பழத்திற்கு தோல் இருப்பது போல, மனிதனை சட்டை மறைப்பது போல என்று சொல்லலாம்.
பஞ்ச என்றால் ஐந்து. அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விக்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் ஆகியவையே இவை. நேற்றே பார்த்தோம்.
*அன்னமயகோசம்* : இது நமது ஸ்தூலதேகம். அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் அழிந்து விடுகிறது. தேகத்துக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்தும்.
*பிராணமயகோசம்* : வாயு அதாவது காற்று தேகத்தின் உள்ளும் புறமும் இருக்கிறது. வெளி உலகிலும் உள்ளது. தேகத்துக்குள்ளும் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே தேகத்தின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள்உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமயகோசம் என சொல்லப்படுகின்றன.
*மனோமயகோசம்* : உணர்ச்சிகள் அதாவது சுகம்-தூக்கம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமயகோசம் எனப்படும்.
*விக்ஞானமயகோசம்* : எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது சரி, எது தவறு? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்கரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத்திறனும் செய்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறைக்கு விக்ஞானமயகோசம் என்று பெயர்.
*ஆனந்தமயகோசம்* : ஆனந்தமயகோசம் என்பது இந்த உறை-அடுக்குகளுக்கெல்லாம் தாண்டி இருக்கும் நிலை ஒரு உணர்வு நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் (வேதாந்தம்) என்றுகூட சொல்லலாம்.
மனிதவாழ்க்கை என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியதுதான். ஐந்தாவதுகோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்துதான் இருக்கிறோம். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரேஉடலின்-ஒரேவாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகி தெளிந்து கொள்ளலாம். இப்படி எல்லாமே சேர்ந்ததுதான் இந்த தேகம் என்பதையும், எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமயகோசத்தை உணர முடியும் என்பதுதான் உள்ளார்த்தம்.
தைத்ரியஉபநிடஷதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரஹ்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிராணனே பிரஹ்மம், அடுத்து மனமே பிரஹ்மம், அடுத்து விஞ்ஞானமே பிரஹ்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் *ஆனந்தம் பிரஹ்மணோ வியஜானாத்* (ஆனந்தமே பிரஹ்மம் என அறியவும்) என முடியும். கோசங்கள் பற்றி இது போதும்.
மேலே தொடர்ந்து நாளை காணுவோம்……….

ஆத்மபோதம் – 12

வபுஸ்துஷாதிபிஹி கோஷைர்யுக்தம் யுக்த்யவதாதஹ |
ஆத்மானமந்தரம் ஷுத்தம் விவிச்ச்யாத்தண்டுலம் யதா ||

உடல் பஞ்சகோச உமி ஆதியோடு உள்
சுடர் பரிசுத்த ஆன்மாவைத் – திடமான
உத்தியினால் குத்தி ஒழித்து அவற்றை அரிசி
ஒத்தறிய வேண்டும் உணர்

உமியுடன் கூடிய நெல்லை பதமாக உலக்கையால் குத்தி அரிசியியைப் பிரித்து எடுப்பது போல, பரிசுத்த ஆன்மாவை மறைக்கும் உடல் முதலான ஐந்து கோசங்களை திடமான சுருதி யுக்திகளினாலும், சாஸ்திர விசாரங்களினாலும் நீக்கி, உள்ளே சுடர் விட்டு ஒளிரும் ஆன்மாவை உணரவேண்டும்.

இதன் விரிபொருள்:
முந்தைய பாடலின் கருத்து இங்கு தொடர்கிறது. ஐந்து வித்தியாசமான உறைகளால் ஆன்மா மூடப்பட்டிருப்பதால், எந்தெந்த உறைகள் சற்று பலமாகவும் அழுத்தமாகவும் இருக்கின்றனவோ அவைகளுக்குத் தகுந்தபடி ஆன்மாவும் அவைகளைப் போலவே தோன்றும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் இந்த நிலைமை வேறுபட்டாலும், அனைவருக்குமே மூடியுள்ள கோசங்களை நீக்குவதற்கு உண்டான வழிகளாக வெவ்வேறு விதமான யோக, தியானப் பயிற்சிகள் தேவைபடுக்கின்றன. ஆன்மா அவை எதனாலும் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொருவரது முன் வினைகளின் பயன்களே வெவ்வேறு கோசங்களாக இடையில் நின்று மறைப்பதால் அவைகளை எப்படி நீக்க வேண்டும் என்று ஒரு உவமானத்துடன் இங்கு விளக்குகிறார்.
பழையகாலத்தில் கிராமங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும், தங்கள் வயலில் அறுவடை செய்த நெல்லில் குடும்பத்திற்கு வேண்டிய அளவு ஒதுக்கி வைத்து, அதை வெயிலில் காய வைத்து நெற்குதிரில் சேமித்து வைத்திருப்பார்கள். எப்போதெல்லாம் அரிசி தேவையோ, அப்போது அந்த அளவு நெல்லை குதிரில் இருந்து எடுத்து வந்து கைகள் கொள்ளும் அளவு உரல் ஒன்றில் இட்டு, நின்றுகொண்டு நீளத்தடி போன்ற உலக்கையை உயர்த்தி, உரல் மேல் உள்ள நெல்லைக் குத்துவார்கள். இது ஓர் பதமாகச் செய்யப்படும். வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உலக்கையை கீழே போட்டால், அப்போது உரலில் உள்ளது பொடியாகி மாவாகிவிடும். அப்படிச் செய்தால் அதற்கு இடிப்பது என்று பெயர். இதற்கு மாறாக உலக்கையை பதமாகக் குத்தினால் நெல்லின் மேல் உறை போல் உள்ள உமி தனியாகவும், அதன் உள்ளே உள்ள அரிசி சேதமாகாமல் முழுதாகவும் பிரியும். பின்பு அந்தக் கலவையை முறம் ஒன்றில் போட்டுப் புடைத்தால் கனமான அரிசி முறத்தில் தங்கி, மெலிதான உமி தனியாகப் பறந்தோ, புடைக்கப்பட்டோ வெளியே விழும். இப்படியாக அரிசி நெல்லிலிருந்து பிரிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகத்தில் உலக்கையில் நெல் குத்துவதை ஆத்ம விசாரத்திற்கு உபமானமாக சங்கரர் காட்டியிருக்கிறார்.
அரிசிக்கோ உமி என்று ஒரேயொரு கவசம்தான் இருக்கிறது. ஆன்மாவுக்கோ நாம் இங்கு கண்டபடி பல கவசங்கள் இருக்கின்றன. அவைகளில் யார்யாருக்கு அது எவ்வளவு தடிமனாக இருக்கலாம் என்பதுவும் தெரியாது. உமியை மட்டுமே உறையாகக் கொண்ட அரிசிக்கே மேலே சொன்னபடி அவ்வளவு பாடுபட வேண்டும் என்றால், ஆத்ம விசாரத்தில் இன்னும் எவ்வளவு சிரமங்கள் இருக்குமோ தெரியாது. நெல்லை எவ்வளவு நேரம் உலக்கையால் குத்தவேண்டும் என்று யாராவது கேட்டால், அரிசி கிடைக்கும்வரை என்றுதான் சொல்லமுடியும். ஆக *ஆன்மாவை உணரும்வரை விசாரம் தொடர்ந்து நடக்க வேண்டும்* என்பது மட்டுமே தெரிகிறது.
ஒருவனுக்கு நல்வழி காட்டுபவர் ஸத்குரு என்பவர், சாதகன் எத்தனையோ நற்காரியங்களின் மூலமும், நற்பிறவி மூலமும் பெற்ற ஒரு வரம்தான் இந்த ஸத்குரு. அந்தக் குருவின் நல்லுபதேசங்களைக் கேட்டு, அதை மனதில் வாங்கி சிந்தித்து, அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியில் சென்று, தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும். தேவைக்கும் மேலாக வெளி விஷயங்களில் மனதைச் செலுத்தாது இருப்பதும், ஆன்மாவைத் தவிர வேறொன்றையும் நினையாது இருப்பதும் ஒன்றே இவனது வேலையாக இருக்கணும். முன்னேசொன்னது பயிற்சியின் போது நாம் கடைப்பிடிக்கும் வழி என்றால், பின்னேசொன்னது நாம் அந்த வழி சென்று உணரவேண்டிய குறிக்கோள் ஆகும். தினசரி வாழ்வில் ஆன்மாவை உணரமுடியாதபடி பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் அதாவது ஆத்மாபோதம் கைகூடும்.

ஆத்மபோதம் – 12 (a) ஆத்மஸாக்ஷி

நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் அதாவது ஆத்மபோதம் கைகூடும் என்பது உண்மை என்று கண்டோம். முதலில் அவை உபநிடதம் படிப்பதனாலோ, பாடம் கேழ்ப்பதினாலோ மட்டுமே வராது. நாம் ஆத்மா ஆத்மா என்கிறோமே இதுதானே ப்ரஹ்மம். இதுபற்றி அறிய வியாஸர் *ப்ரஹ்மஸூத்ரம்* இயற்றினார். பிறகு அவரே இது ஸூத்ரமாக இருப்பது மக்களுக்கு எளிதாக சென்றடைய வேணும் என்ற கருணையுடன் மஹாபாரதம் எழுதி அதில் தனியாக கண்ணன் வாயிலாக *பகவத்கீதை* என்ற அத்யாயத்தை வைத்தார். *உபநிஷதம்* என்பது வேதமே! அதனால்தான் சாதாரண மக்களுக்கு இதையெல்லாம் படித்து புரிந்து கொள்ள முடியாது என்று கருதி பின்நாட்களில் வந்த சங்கரர் தசஉபநிஷதங்களுக்கு, ப்ரஹ்மஸூத்ரத்துக்கு, பகவத்கீதைக்கு என பாஷ்யங்கள் என இயற்றினார் அந்த மூன்றுக்கும் செய்த பாஷ்யங்களுக்கு வேதாந்த *ப்ரஸ்‌தானத்ரயம்* என்று சொல்வார்கள். இதைப்படித்தால் வேதாந்த ஞானமான ஆத்மஞானம் ஏற்படும் என்பார்கள். ஆனால் அதுவும் அத்தனை சுலபமில்ல என கருதி அதே சங்கரர் பல பிரகரண கிரந்தங்கள் – துதிகள் என செய்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஆத்மபோதம். அதனால் தான் உங்களுக்கு இந்த துதியை இப்போது எடுத்து விளக்கி வருகிறது. மனதை அங்கு இங்கு அலைய விடாமல் இந்த கருத்தில் ஊன்றி படித்து புரிந்து கொள்ள பாருங்கள். பாடத்தை தொடருவோமா!

சங்கரர் அடுத்த பாடலுக்கு வருகிறார்……

தேஹேன்த்ரயமனோபுத்திப்ரக்ருதிப்யோ விலக்ஷணம் |
தத்வ்ருத்திசாக்ஷிணம் வித்யாதாத்மானம் ராஜவத்ஸதா ||

உடல்கருவி உள்ளமொடு புத்தி மாயை
விடவேறு அவற்றின் விருத்தி – யுடனே
எவைக்குமே சாட்சியாம் என்றும் ஆன்மாவை
அவைக்கு அரசன் போல அறி.

தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி, அக்ஞானம் முதலான இவைகளின் தன்மைக்கு வேறானதாய், அவைகள் செய்யும் காரியத்தோடு அனைத்திற்குமே சாட்சி மட்டுமே ஆன ஆத்மாவை எப்போதும் அவைகளுக்கு அரசனைப் போல அறிவாய்.
இதன் பொருள் :
இந்த *நான்* இந்திரியங்கள் என்கிற புலன்கள் (அதாவது மெய்-வாய்-கண்-மூக்கு-செவி) என இருக்கும் இந்த உடல் மட்டும் அல்ல, அதற்கும் மேலானவன்; அவைகளால் தெரியவரும் விஷயங்கள் தான் உலகத்தில் இருப்பவைகள். அதாவது இந்த இந்திரியங்கள் மூலமாக உணருகிறோமே சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்த என்கிற தன்மாத்திரைகள். இது பற்றிய எனது எண்ணங்களின் தொகுப்பான மனதிற்கும் மேலானவன்; எனது எண்ணங்களை வகைப்படுத்தி, தொகுத்து அவைகளினின்றும் பல உருவகங்களை உருவாக்கிச் செயல்படும் எனது புத்தியாகிய அறிவுக்கும் மேலானவன் என்று ஸ்தூலத்திலிருந்து ஸூக்ஷ்மநிலைக்கு “நான்” செல்லச் செல்ல ஓர் அமைதி கிடைக்கிறது. அந்த அமைதியில் நான் ஆழ்ந்து இருக்கும்போது, நான் இருக்கிறேனா என்ற சந்தேகமா வரும்? நான் இருப்பதால்தானே, எனது அந்த அமைதி நிலையையும் அனுபவிக்க முடிகிறது. மெதுவாக அந்த நிலையை விட்டு, நான் அங்கு வந்த வழியிலேயே பின்னோக்கிச் சென்றாலும் அமைதியில் இருக்கும் நான்தானே அப்போதும் இருப்பேன்? முன்பு அமைதியில் ஆழ்ந்த “நான்” இப்போது ஒரு சாக்ஷியாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
எப்போது புத்தி அடங்கி உலகினைப் பற்றி அறிவிக்காது, நமது இருப்பைப் பற்றி மட்டுமே அறிய வைக்கிறதோ அப்போது உள்ள “நான்” எனும் உணர்வு அப்போது மட்டும் அல்லாது, எப்போதும் உள்ள தனது இயல்பே என்று உணர்ந்து, தனது எல்லா நிலைகளிலும் அப்படியே ஒருவன் இருப்பதுதான் ஞானம் அடைவது அல்லது முக்திபெறுவது என்று அர்த்தம். அந்த நிலையில் ஒருவனுக்கு உலகம் என்று தனியாகத் தெரியாது, எல்லாம் தானே என்று உணரப்படும். அதனால் உலக காரியங்களில் ஈடுபடும்போதும் தனக்கே எல்லாம் செய்துகொள்வது போலவே உணரப்படும். அதனால் உலகமும், உலகில் உள்ளவைகளும் தெரிந்தாலும் அதை வேறாகப் பார்க்க மாட்டான். இந்த நிலையில் இவ்வுலகில் முன்பும் நமது காலத்திலும் அநேக மஹான்கள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். உதாரணம் சொல்வோமானால் ரமணபகவான், சேஷாத்ரிஸ்வாமிகள், பரமஹம்ஸர், கோடகநல்லூர் சுந்தரஸ்வாமிகள், நமது மஹாபெரியவா என நிறைய சொல்லலாம்.
எப்போது உலகம் என்ற ஒன்று தனியாகத் தெரிகிறதோ அப்போது தன்னையும், தன்னைத் தவிர உலகில் உள்ள அனைத்தையும் வேறு வேறாகவேப் பார்க்கும் மனநிலை வளரும். நடக்கும் அனைத்தையும் வெறும் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜாவை, ஆழ்ந்த அமைதி நிலைக்கு ஒப்பாக இங்கு சொல்கிறார். ஒரு ராஜாவின் கண்காணிப்பில்தான் அனைவரும் தத்தம் வேலைகளை செய்கிறார்கள். அதேபோல் உடல், மனம் இவைகளைக்கொண்டு நடக்கும் உலக காரியங்களை ஆத்மா ஒரு சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது பழைய கால போட்டோவை எடுத்துப்பார்த்தால், அந்தப் படம் எடுக்கப்பட்ட போது நம்மை நாமாக உணர்ந்த மாதிரிதானே இப்போதும் நம்மை உணர்கிறோம்! நமது உடல் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் எப்போதும் நம்மை நாமாகத்தானே உணர்கிறோம்! அந்த உணர்வில் எந்த மாற்றமும் இல்லையே? அப்படியானால் வேறு மாதிரி இருப்பது எது என்று சிந்தித்துப் பாருங்கள்…….

ஆத்மபோதம் – 13 பேதமற்ற ஆத்மா

நமது உடல் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் எப்போதும் நம்மை நாமாகத்தானே உணர்கிறோம்! அந்த உணர்வில் எந்த மாற்றமும் இல்லையே? அப்படியானால் வேறு மாதிரி இருப்பது எது என்று சிந்தித்துப் பாருங்கள்……. என்று முடித்திருந்தோமல்லவா….. சிந்திப்போம் வாருங்கள் ….

வ்யாப்ருதேஷ்விந்த்ரயேஷ்வாத்மா வ்யாபாரிவாவிவேகினாம் |
த்ருஷ்யதேப்ரேஷு தாவஸ்து தாவன்னிவ யதா ஸாஷி ||

கருவிகளின் தொழில் கண்ட அவிவேகி
கருத்தன் போன்று ஆன்மாவைக் காண்பான் – துரிதமாய்
ஓடும் மேகம் கண்டு உணர்விலி சந்திரனே
ஓடுகிறான் என்பதை ஒத்து.

ஆகாயத்தில் வேகமாக ஓடும் மேகங்களைப் பார்த்த பகுத்தறிவில்லாத ஒருவன் சந்திரனே வேகமாகப் போகிறது என்று சொல்வதைப்போல, ஐந்து கர்ம இந்திரியங்களின் மூலம் செய்யப்படும் செய்கையைப் பார்த்து உள்ளதையும் இல்லாதையும் பிரித்துப் பார்த்து அறியமுடியாதவன் ஆன்மாவே செயலில் ஈடுபடுவதாக நினைப்பான்.

இதன் விரிபொருள் :
உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது. நாம் பயணம் செய்யும் ரயில் வண்டி வழியில் ஒரு ஸ்டேஷனில் நின்றுகொண்டு இருக்கும்போது, பக்கத்துத் தண்டவாளத்தில் உள்ள மற்றொரு ரயில் எதிர்ப்புறமாகக் கிளம்பினால் நமது வண்டியே கிளம்பிவிட்டது போலத் தோன்றுவதும், மரங்கள் எதிர்திசையில் நகருவது போல தோன்றுவதும்‌ நம்மில் பெரும்பாலோரது அனுபவம். அதுவும் பிரமை தானே? அதேபோல இரவில் வானத்தில் உள்ள மேகக்கூட்டங்கள் நகரும்போது, அவைகளின் பின்னால் உள்ள சந்திரன் நகர்வதுபோல் நமக்குத் தோன்றும். அதை நன்கு கவனித்துப் பார்ப்பவனுக்குத்தானே எது நிலை கொண்டுள்ளது, எது நகர்கிறது என்று தெரியும்? அதே போல, உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்து அறிய முடியாதவன், ஆன்மாவின் சந்நிதானத்தில் உடலின் கர்ம இந்திரியங்களால் நிகழும் நிகழ்ச்சிகளை ஆன்மாவே ஈடுபட்டுச் செய்வதாக நினைக்கிறான். இல்லை நமது இந்திரியங்களின் சேஷ்டை அது.
எனவே இந்த பிரமை முதலில் நீங்கவேணும். என்ன செய்வது? மனம் சுத்தமாகணும். அதுக்கு வழி? என்ன டெட்டால் போட்டால் மனம் சுத்தமாகும்? ஒரே கேள்வியாக போகிறதே! சொல்கிறேன். நமது நித்யஜபமாகட்டும், பூஜையாகட்டும், கோயில் ஸ்வாமி தரிசனமாகட்டும், தீர்த்தாடனமாகட்டும் எல்லாமே மன சுத்திக்கே! ஜடகர்மாவினால் ஒருநாளும் ஆத்மா விளங்காது. அப்ப என்ன செய்யறது? கர்மா கட்டாயமாக செய்யவேண்டியதே! ஆனால் அதில் தத்துவதர்சனம் தேவை. கர்மா பண்ணும்போதே இது எதுக்கு என்கிற சிந்தனை, ஆர்வம் இருக்கணும். அப்படி ஆர்வம் வந்ததினாலேதான் *சிதானந்தஅலை* பிறந்தது. உதாரணம் சொல்கிறேன். பூஜையில் சங்கு வைத்து கொள்கிறோம். அது எங்கே இருந்து வந்தது? கடலில் ஆழத்தில் சேற்றில் இருந்தது. பின்பு அதை எடுத்து சுத்தி செய்து (முதலில் அதில் மிக மோசமான கெட்ட நாற்றமடிக்கும்.) நமது பூஜைக்கு வருகிறது. பின்பு நமது பூஜையில் அதுக்கு எத்தனை மந்த்ரசுத்தி செய்ய வேண்டியுள்ளது. பிறகுதான் அதன் மூலம் நம்மை அறிய வேண்டிய பூஜைக்கு அதனை உபகாரமாக வைதுக்கொள்ளுகிறோம். மேலே சற்று யோஜியுங்கள் நாம் கர்ப்பமாக இருக்கும்போது எத்தனை நாற்றமடிக்கும் குழியில் இருந்தோம்? நம்மை குரு எதனை ஸமஸ்காரங்கள் செய்து இங்கே ஆத்மாவை அறிய அதற்கான முறையில் ஜபம் என்றும், பூஜை என்றும், நியாசம் என்றும், ஹோமம் என்றும் செய்ய வைத்துள்ளார். அப்போது தான் இந்த தேகம் ஆத்ம தேடலில் ஈடுபடும். எதனாலாலாவது இவன் ஆத்ம ஞான வழியில் செல்லமாட்டானா என்கிற கருணை தான் காரணம்.

ஆத்மபோதம் – 14 ஆன்மா தான் எல்லாம்

எதனாலாலாவது இவன் ஆத்ம ஞான வழியில் செல்லமாட்டானா என்கிற கருணை தான் காரணம். இந்த அவ்யாஜகருணை யாருக்கு உண்டு? நமது ஸத்குருவுக்குத்தான்.
ஆன்மா தான் எல்லாம் என்னும்போது அவரும் நமது ஆன்மாவே அல்லவா! அதனால் தான் பலவழிகளில் நம்மை கொண்டு செல்கிறார். எல்லாரும் நாட்டில் இன்று நல்லாசிரியருக்கு வாழ்த்தும் வணக்கமும் சொல்லும் இன்று நாமும் அவரை வணங்கும் விதமாக இன்றைய பதிவு அமைகிறது… என்னே கருணை,,,!!!!!
இதனால் நமது இந்த்ரியங்களை அதன் வழியில் செல்லவிடாமல் ஆத்ம வழியில் திருப்பி விடுவோம். ஏனெனில் அந்த ஆத்ம ஒளியில் தான் அனைத்தும் நடக்கிறது… சங்கரர் தொடருகிறார்….

ஆத்மசைதன்யமாஸ்ரிதய தேஹேந்த்ரியமனோதியஹ |
ஸ்வக்ரியார்தேஷு வர்தந்தே சூர்யாலோகம் யதா ஜனாஹா ||

ஞானவொளி ஆன்மாவை நண்ணி உடல் பொறிகள்
மானதம் புத்தியிவை மன்னு தமக்கு – ஆன தொழில்
ஆற்றிடும் ஆதித்தன் அவிர் ஒளியால் மக்கள் தொழில்
ஆற்றுவது போலும் அறி.

சூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல, ஞானப் பிரகாசமான ஆத்மாவைச் சார்ந்து உடல், இந்திரியங்கள், மனம், புத்தி முதலானவைகள் தமக்குண்டான தொழில்களான விஷயங்களில் பொருந்தி செயல்படும் என்று அறிவாயாக.

இதன் விரிபொருள்:
ஆன்மாதான் எல்லாம், அது இருப்பதால்தான் மற்றதெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமானம்‌ சொல்கிறார். சூரியன் உதித்ததும் அனைவரும் தத்தமது தினப்படி வேலைகளை ஆரம்பித்துச் செய்கிறோமல்லவா! அந்த வேலைகள் நடப்பது சூரியன் உதித்தபின்தான் என்பதால் அதற்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்? வேலைகள் செய்தாலும், செய்யாவிட்டாலும் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு வந்தது? ஒன்றுமில்லை. அதேபோல ஆன்மா இருப்பதால்தான் இந்திரியங்களும், மனமும், புத்தியும் இயங்குகின்றன என்றாலும் அவைகளின் இயக்கத்தால் ஆன்மா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. உலகையே ஒளிர்விக்கும் கதிரவனைப் போல, எல்லா இந்திரியாதிகளையும் ஒளிர்வித்தாலும் ஆன்மா இங்கே நடக்கும் அனைத்துக்கும் வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மா எந்த இயக்கத்திலும் பங்கு கொள்வதில்லை.
இந்திரியங்கள், மனம், புத்தி இவைகளில் எதனை எடுத்துக்கொண்டாலும் மனிதர்களிலும் சரி மற்ற உயிர்வாழ் ஜீவஜந்துக்களிலும் சரி ஒன்றுக்கொன்று வேற்றுமைகள்தான் இருக்கும். மற்ற இனங்கள் அதைப் புரிந்துகொள்ளாது போனாலும், மனிதனும் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு சமத்துவப் பார்வை வளர வாய்ப்பே இல்லை. அது வளரவேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் ஆன்மா ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வதையும், அதுவே அனைத்தின் அடிப்படை உண்மை என்று தெளிந்து கொள்வதையும் மனித வளர்ச்சியின் பரிமாணங்களில் ஒன்று எனக் கொள்ளலாம்.
உலகியவாழ் ஜந்துக்களில் இப்போது நாம் காணும் மனித இனம் தோன்றியது ஆராய்ச்சியாளர்கள் கணக்குப்படி சுமார் 20, 30, ஆயிரம் ஆண்டுகள் முன்புதான் என்றாலும், அவர்களின் பரிணாமவளர்ச்சி சுமார் 300 ஆயிரம் ஆண்டுகள் முன்பே தோன்றிவிட்டன என்று சொல்கின்றனர். அந்தக் கால கட்டத்தில்தான் நம் மூளை தற்போதைய அளவிலும், திறமையிலும் வளர்வதற்கு ஏற்றபடி மண்டையோடுகள் முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதற்கு முன் தோன்றிய மனிதனைப் போன்று இரண்டு காலில் நடந்த மூன்று இனங்களின் மண்டையோடுகள் அளவில் சிறியதாகவே இருந்திருக்கின்றன. அதேபோல பேசும் தன்மைக்கு உண்டான குரல் வளமும், அமைப்பும் படிப்படியாகவே வளர்ந்திருக்கின்றன. பேசும் திறமையும், மூளை வளர்ச்சியுமே மற்ற வளர்ச்சிகளுக்கு ஆதாரமாய் இருந்திருக்கின்றன. மனிதனைப் போன்ற மற்ற இனங்களில் ஒன்றிரண்டு மனித இனத்துடன் கூடவே வளர்ந்து இறுதியில் மேலும் வளராது அழிந்தும் போய்விட்டன. இதெல்லாம் இன்றைய விக்ஞான ஆராய்ச்சியின் கணக்கு. இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது உடலுக்கு மூளையும் அதனால் இயங்கும் இந்திரியங்களும் எவ்வளவு முக்கியமோ அப்படியே மனித இனத்தின் இனி வரக்கூடிய பரிணாம வளர்ச்சிக்கு, அவனையும் உள்ளடக்கிய அனைத்து ராசிகளுக்குமான உயிரையும் தாண்டிய பொதுவான ஒரு அடிப்படை அமைப்பு தேவை என்பதும், அதுவே அனைத்தையும் உள்ளடக்கும் ஆத்மா என்றும் நாம் கொள்வது புரிந்துகொள்ளக் கூடியதே.
ஆத்மா இல்லையெனில் நாம் இல்லை என்பதை விட வேறு எதுதான் உண்மையாய் இருக்க முடியும்? மேலும் அதற்குக்காரணம் வேண்டுமானால், அனைத்து ராசிகளிலும் இப்படியாக யோசிக்கக் கூடிய இனம் மனித இனம் ஒன்றுதான் என்பதைச் சொல்லமுடியும். அதே சமயம் இந்த பிரபஞ்சத்தையும், தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அறிந்தாலும் தான்தான் பரிணாம வளர்ச்சியின் ஏணியில் இறுதியாக இருக்கிறான் என்பதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். அது தவிர ஆத்மாவை உணர்ந்து வாழ்ந்து காட்டிச் சென்ற சில ஆன்றோர்களையும் நமக்கு தெரியும். அதனால் அவனது தினசரி அனுபவங்களையும் தாண்டி மேலும் வளர்வதற்கான அநேக காரணக் கூறுகள் இருப்பதும் நமக்குத் தெரிகிறது.

ஆத்மபோதம் – 14 உள்ளது ஆன்மாவே

சீவராசிகளின் பரிணாமவளர்ச்சி எனும் ஏணியின் உச்சியில் ஒருவேளை மனிதன் இல்லாது போனாலும், சுற்றுமுற்றும் பார்த்து அவன் அறிந்தவைகளில் அந்த ஏணியின் மேல்நிலைகளில் தான் இருப்பது அவனுக்கு உண்மை. அவன் அந்த நிலையில் இருப்பதாலும், மேலும் அந்த வளர்ச்சிக்கு அவன் உதவலாம் என்பதாலும், அதற்கு உதவவேண்டிய கடமை தனக்கு இருப்பதை அவன் உணர்கிறான். சங்கரர் வாக்கியம் ஒன்று உள்ளது…. “ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம்” …. என்று. பிறவிகளிலேயே மனித பிறவி தான் உயர்ந்தது. இது கிடைப்பது மிக கஷ்டம் என்னும்போது நமது கடமை அதிகமாகிறது. எனவே இதனால் உந்தப்பட்ட அவன் அனைத்து ஜீவராசிகளையும் உள்ளடக்கி ஒரு சமத்துவப் பார்வையை வளர்க்கும் *ஆன்மா* எனும் ஞானத்தைப் பெறுவதே தனது பிறப்பின் பயன். உலகில் அப்படி வாழ்ந்து காட்டிச் சென்ற ஆன்றோர்களின் மூலம் இது தெரிகிறது. உலகில் மற்ற விஷயங்களை அறிவது சாதாரண அறிவென்றும், பிறப்பின் பயனை உணர்வதே பேரறிவு (அதுதான் ஞானம்) என்றும் தெளிவு பெற்ற அவன், அதனை அடைய முயற்சிக்கும் போது ஒரு முமுக்ஷு ஆகிறான். ஸ்ரீவித்யையிலே தீக்ஷை என்ற கிரியை உள்ளதை நாமறிவோம். அவ்வாறு தீக்ஷை பெற்றவன் முமுக்ஷுவே தான். இந்த தீக்ஷையின் அவசியமும், அதன் விவரங்களும் தனியாக ஒரு வகுப்பில் படிப்போம்…
இப்போது தொடர்ந்து அடுத்த பாடல் …..

தேஹேந்த்ரியகுணான்கர்மாண்யமலே சச்சிதாத்மனி |
அத்யஸ்யந்த்யவிவேகேன ககனே நீலதாதிவத் ||

தேகம் பொறிகள் திகழ் குணங்கள் வினைகள்
ஆகுமிவை தூய சச்சிதான்மாவில் – மோகத்தால்
கற்பிப்பர் சுத்த ககனத்தில் நீலமுதல்
கற்பித்தல் போலக் கருது

நிறமற்ற பரிசுத்தமான ஆகாயத்தில் நீலம் போன்ற வர்ணங்கள் இருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதுபோல, தூய்மை நிறைந்த ஸச்சிதானந்த வடிவமான ஆத்மாவில் உடல், ஐம்பொறிகள், இதனால் வரும் குணங்கள், நல்வினை, தீவினை ஆகிய இவை எல்லாவற்றையும் பகுத்தறிவில்லாத அவிவேகிகள் கற்பனை செய்துகொள்வார்கள் என்று தெரிந்துகொள்.

இதன் விரிபொருள் :
நமது உண்மையான நிலையை உணர்வதற்கு உடல் ஒரு கருவி என்று முன்பு பார்த்தோம். அந்த உடல் உலகில் இயங்கும் போது நாம் பிறந்தது, வளர்ந்தது, பார்ப்பது, கேட்பது போன்ற இயக்கங்களும், நம் வளர்ச்சியில் உள்ள இளமை, முதுமை போன்ற நமது நிலைகளும், ஆன்மாவைச் சார்ந்தது என்று ஆன்மாவைப் பற்றி அறியாத பாமரர்கள் கருதுவார்கள். அதில் உள்ள தவறை ஓர் உவமை மூலம் இங்கு சங்கரர் விளக்குகிறார்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்துக்கு நிறம், குணம் இவை எதுவும் கிடையாது. அதைப் பற்றி அறியாதவன் ஆகாயம் நீல நிறத்துடன் கூடியது என்று எப்படிக் நினைப்பானோ அதேபோல அவிவேகி ஆன்மாவை குணத்தோடு சம்பந்தப்படுத்தி தவறாக அறிகிறான். தொலைவில் இருப்பதால் ஆகாயம் நீல நிறமாகக் காணப்படுகிறது என்பதை விவேகி அறிவதுபோல ஆன்மாவையும் அவன் உடல், இந்திரியங்களுடன் சம்பந்தப்படுத்தாது அவை அனைத்துக்கும் மூலகாரணம் என்றும் அறிகிறான். இளமையும் முதுமையும் உடலைச் சார்ந்த நிலைகள் போல, பார்த்தல், கேட்டல் போன்றவை ஐம்பொறிகளைச் சார்ந்த தொழில்கள். இவைகளை ஆன்மாவுடன் தொடர்புகொண்டு பார்ப்பது ஆன்மாவைப் பற்றிய அறியாமையால்தான். இதில் *விவேகம்* எனப்படுவது தேகம், மற்றும் இந்திரியங்களின் குணங்களையும், ஆத்மவடிவத்தின் லக்ஷணத்தையும் பிரித்து அறிவதாகும். ஸித்தர்கள் இந்த நிலையில் இருப்பார்கள். ஸ்ரீசேஷாத்ரிஸ்வாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். ஆனால் ஸ்ரீஸ்ரீகாரைஸித்தர் அவர்களை நேரில் அனுபவித்திருக்கிறேன். அவரகளின் உணவு, உடை இரண்டும் அவருடைய செய்கைக்கு மாறுபட்டது. ஸ்ரீரமணபகவான் கூறுவதுபோல *உள்ளதை உள்ளபடி உள்ளத்தே உள்ளுவதே* உண்மை ஆகும்.
அடுத்து மனத்தின் இயல்பு, உபாதி என்பது பற்றி தக்க உபமானத்துடன் மேலே ஆத்மபோதம் தொடருகிறது……..

ஆத்மபோதம் – 15 மனஉபாதி

இன்றும் நாளையும் சனி + ஞாயிறு இரவு உங்களுக்கு படிக்க – சிந்திக்க இது….
தனக்கே உரிய ஸ்வபாவம்’, ‘தன் உண்மை இயல்பு’ …… அன்றைக்குக் குழந்தை வேஷத்தில் இருந்தவனும் இன்றைக்கு இப்போது நாமுள்ள இந்த வேஷத்திலிருப்பவனும் ஒரே ஆஸாமிதான். மற்றவர்களுக்கு தெரிவது அத்தனை வேஷத்துக்கும் ஆதாரமாக மாறாமலுள்ள அந்த ஆத்மாவினால்தான்…….. நமது ஆத்மாபோதம் சிந்தனைக்கு ஆசி கூறுவது போல் ஸ்ரீபெரியவா சொன்னது எத்தனை பொருத்தம் பாருங்கள். இதைத்தான் மன உபாதி என்கிறது வேதாந்தம். அதுபற்றி சங்கரர் அடுத்து என்ன சொல்கிறார் என்று இன்று பார்ப்போம்.
அஞ்ஞானான்மானசோபாதே கர்த்ருத்வாதீனி சாத்மனி |
கல்ப்யந்தேம்புகதே சந்த்ரே சலனாதி யதாம் பஸ: ||

மனமாம் உபாதி மருவு கர்த்தத்வ
இனமாய் அவற்றை அறிவின்மை – எனும் மயலால்
ஆன்மாவில் கற்பிப்பர் அப்பு அலைவை நீர் தோன்றும்
வான் மதியில் கற்பிக்குமாறு
வானத்தில் அசையாது நிற்கும் நிலவானது, நீரில் பிரதிபலிக்கும்போது அந்தத் தண்ணீரின் அசைவுகளால், நிலவே அசைவதாகப் தெரிகிறது நமது கற்பனை என்பதுபோல, மனமாகிய உபாதியால் ஏற்படும் *நான்செய்கிறேன்* *நான் அனுபவிக்கிறேன்* என்னும் அறியாமை மயக்கத்தினால் நடக்கின்ற அனைத்தையும் ஆத்மாவினுடையதாக நினைக்கின்றனர்.

இதன் விரிபொருள்:
முன்பு இதே போன்ற வேறோர் உவமையை நாம் பார்த்தோம். ஸூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் ஸன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று என்கிறார். ஒவ்வொருவனும் தான் ஆத்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான்செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆத்ம வடிவம்தான் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணித்துவிடுகிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையாநிலவின் அசைவுகள் என்ற இந்த உபமானத்தால் சங்கரர் விளக்குகிறார்.
தண்ணீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.
உபாதி என்பது ஆதாரம் ஆகும். இங்கு மனம்தான் ஆதாரம் என்பதால் “மனமாகிய உபாதி” என்று சொல்கிறது. நிலவின் பிரதிபிம்பம் நீரில் தோன்றுவதுபோல, ஆன்மாவின் சைதன்ய ஒளிக்கதிர்கள் நமது மனம் மூலம் நமக்குப் பிரகாசிக்கிறது. அதாவது ஆன்மாவே மனத்தை ஒளிர்விக்கிறது. எப்படி உடல் நமக்கு ஒரு தூலக் கருவியோ, அதேபோல மனம் நமது ஸூக்ஷ்ம கருவியாகும். இவைகளின் மூலமே நாம் ஆன்மாவை அறியவருகிறோம். ஆனாலும் அவைகள் கருவிகளே அன்றி அவைகளே முடிவானவை அல்ல.இதற்கு ந தத்ர ஸூர்யோபதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: …. என்ற நமது வேதமே சான்று.. அதாவது ஆத்மா பிரகாசிக்கவில்லையெனில் சூர்யனுக்கும், சந்த்ரனுக்கும் அக்னிக்கும் ஒளி இல்லை….. என்கிறது.
எப்படி நீரின் குணங்களும், நிறங்களும் ஆகாயத்தில் இருக்கும் நிலவைப் பாதிக்காதோ, அதேபோல மனதின் நினைவுகள் ஆன்மாவைப் பாதிக்காது. ஆனால் நீரில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பம் பாதிக்கப்படும்‌, மனதளவில் உருவாகும் எண்ணங்களும் செயல்களும் வினைச்சக்கரச் சுழற்சியால் பாதிக்கப்படும். அப்படிப் பாதிக்கப்படுவது மனமே அன்றி ஆன்மாவல்ல. ஆனாலும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாதவர்களுக்கு மனத்தின் சலனங்களும் ஆன்மாவின் சலனங்களாகவே தோன்றும். ஆக வினையை ஆற்றுவதும் அதன் பலன்களை அனுபவிப்பதும் மனம் எனும் உபாதியேயன்றி, ஆன்மாவல்ல. இதனை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள ஒருவன் ஆன்மாவை நோக்கி தன் முழு கவனத்தையும் திருப்ப வேண்டும்.

ஆத்மபோதம் -16 புத்தி ஆன்மாவுக்கா?
ரமணாஸ்ரமத்தில் பகவானிடம் சரணமடைந்த ஸ்ரீ ஜி. சேஷையர் என்றவர் ஸ்ரீபகவான் மௌனமாக இருந்தகாலத்திலும் அவர்களிடம் கேள்வி கேட்டு எழுத்து மூலம் அருளப்பட்ட மொழிகளால் தொகுக்கபட்டது *விசாரஸங்க்ரஹ வினாவிடை* என்ற நூல். இதில் நமக்கு தேவையான சில வாக்கியங்கள் உள்ளன…. “போகிறது , வருகிறது ஆகிய தொழில்கள் தேகத்தின் விஷயமே தவிர வேறில்லை என்று சொல்வது தேகமே “நான்” என்று சொல்வதாக தெரிகிறது. தேகம் பிறப்பதற்கு முன்னின்மை இல்லாததாலும், பஞ்சபூதாத்மாக இருப்பதாலும் சுஷுப்தியில் அபாவமாக இருப்பதாலும் பிணமாக ஆவதாலும் தேகத்தை நான் என்று சொல்வது கூடுமா? கட்டையை போன்ற ஜட பதார்த்தமாகிய இந்த தேகம் “நான்-நான்” என்று ஸ்புரித்து வழங்கிவருமா? …… இப்படியெல்லாம் நூலில் உள்ளது.
இனி சங்கரர் சொல்கிறார்….

ராகேச்சாசுகதுக்காதி புத்தெள சத்யாம் ப்ரவர்த்ததே |
சுஷுப்தோ நாஸ்தி தன்னாஷே தஸ்மாத்புத்தேஸ்து நாத்மனஹ ||

விருப்பு ஆசை துன்பு இன்பு மேலும் இவை போல்வ
இருப்பவாம் புத்தி இருப்பால் – இருப்பில்லாத்
தூக்கத்தில் இன்று அதனால் சொந்தம் அவை புந்திக்கே
ஓர்க்குக ஆன்மாவிற்காகுமோ

அன்பு, ஆசை, துன்பம், இன்பம் தவிர இவை போன்ற எல்லாமும் நமது புத்தியினால் உண்மையில் இருப்பனபோல தோன்றுகின்றன. புத்தி செயல்படாது இருக்கும் நம் உறக்கத்தில் அவை எதுவுமே தோன்றாததனால், அவைகள் புத்தியை மட்டுமே சார்ந்தவை ஆகும். அவை ஆத்மாவிற்கானது என்று சொல்ல முடியுமோ? என்று கூர்ந்து ஆராய்ந்து அறியவேண்டும்.

இதன் விரிபொருள்:
ஒருவனது வாழ்க்கை அனுபவங்களைப் பார்த்தால், அவைகளை சில பொருட்களின் மேல் இருந்த அவனது ஆசைகளால் விளைந்தவைகள். சிலவற்றின் மேல் அவனுக்கு இருந்த வெறுப்புகளால் விளைந்தவைகள். இப்படி மனத்தில் தோன்றிய விருப்பு-வெறுப்பு எண்ணங்களுக்கு ஏற்ப அவனது உடல் மற்றும் மனதளவில் அவைகள் இன்பமோ துன்பமோ கொடுத்திருந்தன. அத்தகைய மனமும் அதை இயக்கும் அவனது புத்தியும் அவனுக்கு எழும்பாத அவனது ஆழ்ந்த உறக்கத்தில், அவனுக்கு விருப்பமோ வெறுப்போ எதுவும் தோன்றுவது இல்லை.
உறக்கத்தில் இல்லாத விருப்பும், வெறுப்பும் ஒருவனது நினைவு மற்றும் கனவு நிலைகளில்தான் தோன்றுகின்றன. முழு நினைவோடு உள்ள நிலையான நினைவு நிலையில் ஒருவனுக்குத் ஸ்தூலதேகமும் அது சம்பந்தமான அனுபவங்களும் அமைகின்றன. ஒருவனது கனவு நிலையில் அவனுக்கு ஸூக்ஷ்மதேகமும், அதற்கேற்ற அனுபவங்களும் நேருகின்றன. நாம் காணும் கனவு அனுபவங்கள் கனவு நிலை இருக்கும் வரையில் நினைவு அனுபவங்களைப் போலவே நீடிக்கின்றன. ஆகையால் இவ்விரு அனுபவங்களுக்கும் தகுந்தபடியான வெவ்வேறு உடலும், மனமும் அதை இயக்கும் புத்தியும் தேவைப்படுகின்றன. கனவு நீங்கியவுடன் அங்கு இருந்ததெல்லாம் நீங்கியும், ஆனால் நினைவில் உள்ளவைகள் மீண்டும் தொடர்ந்து வருகின்றன என்ற ஒரு வித்தியாசத்தைத் தவிர நினைவு-கனவு அனுபவங்களில் வேற்றுமை ஏதும் இல்லை. கனவிலிருந்து விடுபட்டு நாம் நினைவு நிலை திரும்பியதும்தான் நாம் அதுவரை கண்டது நிலையற்ற ஒன்று என்று தெளிகிறோம். அத்தகைய நினைவு மற்றும் கனவு நிலைகளில்தான் நமது விருப்பு-வெறுப்பின் காரணமாக இன்ப-துன்பம் அடைகிறோம்.
ஆனால் ஆன்மாவோ எங்கேயும், எப்போதும் உள்ளது. அதனால் விருப்பும், வெறுப்பும் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், அந்த அனுபவங்கள் நமது உறக்க நிலை உட்பட எல்லா நிலைகளிலும் தோன்றவேண்டும். ஆனால் நமது உறக்க நிலையில் நமக்கு உடலைப் பற்றிய உணர்வோ, மனமோ, புத்தியோ கிடையாது என்றாலும், “சுகமாக உறங்கினோம்” என்று பின்பு நினைவில் சொல்லக்கூடிய அளவிற்கு ஓர் சுகானுபவம் மட்டும் இருக்கிறது. அந்த அனுபவம் நினைவு-கனவு நிலைகளில் உள்ளதுபோல விருப்பு-வெறுப்பு காரணமாக அமைவதில்லை. ஆகையால் விருப்பு-வெறுப்பு குணங்களையும், இன்ப-துன்ப நிலைகளையும் புத்தியுடன் கூடத்தான் தொடர்புபடுத்திச் சொல்லமுடியுமே அல்லாது, எப்போதும் இருக்கும் ஆன்மாவுடன் எப்படி சம்பந்தப்படுத்திச் சொல்ல முடியும்? அவைகள் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், உறக்கத்திலும் இன்ப-துன்பங்கள் நேர வேண்டும். ஆனால் அப்போது நமக்கு ஆனந்த அனுபவம் ஒன்றே அமைகிறது. ஆன்மா எப்போதும் உள்ளது என்றால், உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்த அனுபவம் நினைவு நிலையிலும் இருக்க வேண்டுமே! அப்படியென்றால் அதை நாம் ஏன் உணர்வதில்லை என்றுதானே இப்போது பார்க்கவேண்டும்?
நாளை பார்ப்போம்…….

ஆத்மபோதம் – 17 ஆத்ம லக்ஷ்ணம்

ஆன்மா எப்போதும் உள்ளது என்றால், உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்த அனுபவம் நினைவு நிலையிலும் இருக்க வேண்டுமே! அப்படியென்றால் அதை நாம் ஏன் உணர்வதில்லை என்று பார்க்க வேணும்…
ரமணர் சொல்வது: எழுவாயாகிய முதல் வேற்றுமை தெரியாவிட்டாலும் மற்ற வேற்றுமைகளில் வரும் வாக்கியங்கள் அனைத்தும் முதல் வேற்றுமையை ஆச்ரயித்தே விளங்குதல் போல … என்கிறார். ராமன் சீதையை மணம் முடித்தான். பின்பு அயோத்திக்கு அழைத்து வந்தான். இரு வாக்கியங்கள். ஆனால் இரண்டாவதில் எழுவாயாகிய ராமன் என்ற வார்த்தை வரவில்லை. இருந்தாலும் ராமன் தான் அழைத்து வந்தான் என்பது விளங்குகிறது. (தமிழ் இலக்கணம் சொல்கிறேன். ராமன் எழுவாய்— பலருக்கு இலக்கணம் என்பது Zero. அதுவும் தமிழ் சுத்தம்…. பரவாயில்லை. நான் எழுதுவதாவது புரியட்டும்.)
இதற்கு சங்கரரை பின் தொடருவோம்…

பிரகாஷோர்கஸ்ய தோயஸ்ய சைத்யமக்னேர்யதோஷ்ணாதா |
ஸ்வபாவ: ஸச்சிதானந்த நித்யநிர்மலதாத்மான: ||

அருக்கன் தனக்கொளி அப்புக்குத் தட்பம்
எரிக்கு உட்டணமும் இயல்பாய் – இருக்கையெனச்
சத்து சித்து ஆனந்தம் சார் நித்தம் சுத்தம் இயல்பு
ஆன்மாவுக்கு என்று ஓர்

சூரியனுக்குப் பிரகாசமும், தண்ணீருக்குக் குளிர்ச்சியும், நெருப்புக்குச் சூடும் அதனதன் இயல்பாக அமைவது போல, ஆன்மா ஸத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் இருப்பதோடு நித்தியமாயும், நிர்மலமாயும் இருப்பதே அதன் இயல்பு என்பதை உணர்வாயாக.

இதன் விரிபொருள்:
ஸச்சிதானந்தம் பற்றி சில வாக்கியங்கள் நமது உபாசனை மூலம் தெளிவோம்… “ஸத்” என்பது குஹாநந்தம். “சித்” என்பது சிதானந்தம். “ஆனந்தம்” என்பது அனந்தம். “காமம்” என்பது அனுபவம். இது நமது குருமண்டலியின் பெயராக இருப்பதால் உங்களுக்கு இப்போது கொஞ்சம் புரியும். இவர்கள் வேறு வேறு இல்லை. இவர்கள் தனித்தனியாக எங்கும் இல்லை. மந்த்ரம் தான் தனித்தனி. அனுபவம் உணர்வு ஒன்றே!)
இங்கு ஆன்மாவின் லக்ஷணங்கள் கூறப்படுகின்றன. “ஸத்” என்றால் இருப்பு, “சித்” என்றால் அறிவு, “ஆனந்தம்” என்றால் பேரின்பம். இவைகள் அனைத்தையும் கொண்டுள்ளது என்பது தவிர, ஆன்மா இங்கு உண்டு அங்கு இல்லை என்றில்லாது, இப்போது இருக்கிறது– அப்போது இருக்காது– என்றில்லாது எங்கும், எப்போதும் உள்ளதால் அது நித்தியமாயும், அது ஸூத்தமாய் எந்தவித கலப்பும் இல்லாததால் நிர்மலமாயும் இருப்பது அதன் இயல்பு. ஆதலால் இவை அனைத்தையுமே ஆன்மாவிலிருந்து பிரித்தறியமுடியாது. சூரியனிடமிருந்து பிரகாசத்தையும், தண்ணீரிலிருந்து குளிர்ச்சியையும், நெருப்பிலிருந்து சூட்டையும் அதனதனிடமிருந்து எப்படி தனியே பிரித்து அறியமுடியாதோ, அதேபோல ஆன்மாவிடமிருந்தும் மேற்சொன்ன அதன் தன்மைகளைப் பிரித்து அறியமுடியாது.
கூட்டத்தில் ஒருவர் மொட்டையாக இருந்தால், அவரை “ஏ மொட்டை” என்று தற்காலிகமாகக் குறிப்பிட்டுச்சொல்வதை *தடஸ்தலக்ஷணம்* என்று சொல்வார்கள். அதேபோல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்றிவ்வாறான தொழில்களைக் குறிப்பிட்டு இறைவனை வர்ணிப்பதும் “தடஸ்த”லக்ஷணப்படியே தான். இவைகளை இறைத்தன்மையில் இருந்து பிரித்து அறியமுடியும். ஆனால் இறைவனின் *ஆத்ம மயம்* என்ற *ஸ்வரூபலக்ஷணத்தை* அப்படிப் பிரித்து அறியமுடியாது. அப்படிப் பிரித்து அறியமுடியாத ஒன்றை அப்பொருளின் *தர்மம்* என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. அதாவது தண்ணீரின் தர்மம் குளிர்ந்து இருப்பதும், நெருப்பின் தர்மம் சூடாயிருப்பதும் போல, ஸச்சிதானந்தமும், நித்யத்வநிர்மலமும் ஆத்மாவிலிருந்து பிரித்து அறியமுடியாத தர்மங்கள் ஆகும்.
தண்ணீருக்குக் குளிர்விக்கும் குணத்தையும், நெருப்பிற்குச் சுடும் குணத்தையும், காற்றுக்கு சலித்துத்திரட்டும் குணத்தையும் யார் ஊட்டினார்கள்? அவை இயற்கையாகவே அதனதன் குணமாக இருப்பதுபோல, மனத்திற்கு ஒரு பொருளைப் பற்றும் குணமும், பற்றிய பொருளை அனுமானிக்கும் குணம் புத்திக்கும், அனுமானித்தபொருளை தனது என்று அபிமானிக்கும் குணம் அஹங்காரத்திற்கும், அபிமானித்தபொருளை சிந்திக்கும் குணம் சித்தத்திற்கும் இருப்பது இயற்கையாக நிகழ்வது. இவை எதையுமே அடக்க-அடக்க அவை மேலும் மேலும் எழும்பி ஒருவனை வதைக்கும். அவை அனைத்தையுமே இயல்பாக இருக்கும் ஆன்மாவின் ஸந்நிதானத்தில் நிகழும் நிகழ்வே என்றும், அதற்கும் தன் இருப்பிற்கும் தொடர்பில்லை என்று ஆன்மாவை முன்னிறுத்தி இருப்போமானால் நமது உள்ள நிலை காலப்போக்கில் தெளிவாகும். (பூஜையின் இறுதியில் ஸாமயிகாபூஜைக்கு பின்பு *தத்துவசோதனம்* என்று ஒன்று செய்கிறோமே! அது இதுதான். அதற்குத்தான் அதை மனப்பாடம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன்..நிச்சயம் ஒருநாள் கேழ்ப்பேள்)

ஆத்மபோதம் 18 வாழ்க்கையின் இறுதி

ஆன்மாவை முன்னிறுத்தி இருப்போமானால் நமது உள்ள நிலை காலப்போக்கில் தெளிவாகும் என்றோமல்லவா! அது எப்படியென சங்கரர் விளக்குறார்..

ஆத்மன: சச்சிதம்ஷச்ரவ புத்தேவ்ருத்திரிதி த்வயம் |
சம்யோஜ்ய ச விவேகேன ஜானாமீதி ப்ரவர்த்ததே ||

சத்து சித்து என்னத்தகும் ஆத்ம அம்சமும்
புத்தி விருத்தி புகல் ஒன்றும் – ஒத்த
இரண்டோடு மூடத்தால் யான் அறிகின்றேன் என்று
ஒருத்தன் தொழில் படுவன் ஓர்

“ஸத்” உருவம் எனப்படும் இருப்பும், “சித்” உருவம் எனப்படும் அறிவும் நமக்குத் தெரிகின்ற ஆத்ம சைதன்யவெளிப்பாடுகள். அவைகள் நம் புத்தியின் விருத்தியுடன் இணைந்து அறியாமையினால் “நான்அறிகின்றேன்” என்று ஒருவன் செயல்படுகிறான் என்பதை அறிவாயாக.

இதன் விரிபொருள்:
ஒருவன் ஒரு செயலில் ஈடுபட்டாலும், ஈடுபடாவிட்டாலும் அவனது இருப்பைப் பற்றி எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. அதேபோல நல்ல விதமாகவோ, அல்ல வேறு விதமாகவோ இயங்கும் அறிவு ஒவ்வொருவனுக்கும் இருப்பதையும் நாம் நன்கு அறிகிறோம். இவை இரண்டுமே ஆன்மாவின் வெளிப்பாடுகள்தான் என்றாலும், அவை அவனவன் புத்தியினால் இருப்பதாகவும், இயங்குவதாகவும் அறியப்படுவது ஒருவனது அஞ்ஞானத்தினால் தான். ஆத்மா பார்ப்பதும் இல்லை, பார்க்கப்படுவதும் இல்லை. “ஸத்” தாகிய ஆன்மா “நான்” என்று சொல்லாது; “ஜடம்” ஆகிய உலகமும் தன்னை “நான்” என்று அறிவிக்காது. ஆத்மாவின் “ஸத்சித்” அம்சத்தையும், புத்தியின் விருத்தியில் ஒன்றையும் ஒன்றாக இணைத்து இடையில் தோன்றும் ஜீவன் ஒருவன் “நான் அறிகின்றேன்” என்று செயல்படுகிறான். இவ்வாறு சித்தையும், ஜடத்தையும் இணைத்து உருவாகும் ஜீவனை “சித்ஜடக்கிரந்தி” என்று சொல்வார்கள்.
இங்கே நமக்கு இன்னும் தெளிவிற்கு அம்மையின் நாமங்கள் இருக்கின்றன.
சித்சக்தி – (416) அவித்யை என்கிற அக்ஞாநத்தை போக்கும் சாமர்த்தியமுள்ள வித்யைக்கு “சித்” என்று பெயர். (வர்த்ததே சர்வபூதேஷு சக்தி:….. சித்சக்தி: சர்வபூதேஷு .. என்பதாக தேவி பாகவதமும் சொல்கிறது.)
ஜடசக்தி – ஜடாத்மிகா . மாயையின் பரிணாமவிசேஷம் தான் ஜடசக்தி. இதில் தெரிவதும் ஆத்மா தான் . ஆத்மா புத்தியில் பிரதிபலிக்கும்போது அதன் “ஸத்-சித்” வடிவம் புத்திக்கே உள்ளதாகத் தோன்றுகின்றது. (ஆத்மனே நம: — பரமாத்மனே நம: — என்று நமது சாமயிகா பூஜையில் நமது ஹ்ருதயத்தில் செய்து கொள்ளுகிறோமே இதை அறியத்தான். இப்போது புரிகிறதா ? நமது பூஜையே ஒரு ஆத்ம ஞான வழிகாட்டி என.—ஆத்மனே என்னும்போது நமது புத்தி சேர்ந்தது, பரமாத்மானே என்னும்போது சித் சேர்ந்தது என அறியவேணும்.)
அந்த புத்தியே தானாக ஒருவன் நினைக்கும்போது அவனுக்கு அஹந்தை உண்டாகிறது. (நான் ராமன், கிருஷ்ணன், கமலா என.) அப்போது அவன் தான்வேறு, தன்னால் காணப்படும் உலகம் வேறு என்று நினைக்கிறான். இதனால் உலகம் உள்ளதை உள்ளபடி உணராமல், ஒவ்வொருவனும் தனக்கே உரிய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் ஞான விசாரத்தினால் அஞ்ஞானம் அழிந்த ஜீவனுக்கு, ஜீவ பாவம் அழிந்து ஆத்ம வடிவம் ஒன்றே விளங்குகிறது. அந்த நிலையை அனுபவத்தில் உணர்வது ஒன்றே பிறந்த ஒவ்வொரு ஜீவராசியின் வாழ்க்கைப் பயணத்தின் இறுதியாகும்..
தொடருகிறார்….

ஆத்மனோ விக்ரியா நாஸ்தி புத்தேர்போதோ ந ஜாத்விதி |
ஜீவஹ சர்வமலம் ஞாத்வா ஞாதா த்ரஷ்டேதி முஹ்யதி ||

என்றும் விகாரம் இலது ஆன்மா புத்தியும்
என்றும் அறிவின்றியதே என்றாலும் – ஒன்றிய
சீவனே எல்லாம் தெரிவான் செய்வான் காண்பான்
பாவத்தான் மாமோகி பார்.

ஆன்மாவோ எந்தச் சமயத்திலும் எந்தவிதமான விகாரமும் இல்லாது இருக்கிறது. புத்திக்கோ என்றைக்குமே தானாகவுள்ள அறிவு என்பது கிடையாது. அப்படி இருந்தும் நான் என்னும் பாவத்துடன் ஒன்றுபட்ட ஜீவனே எல்லாவற்றையும் ‘நான் தெரிந்துகொள்கிறேன்’, ‘நான்செய்கிறேன்’, ‘நான்பார்க்கிறேன்’ ‘நான்எழுதுகிறேன்’ என்ற பாவத்தினால் மிகுந்த மோகமடைகிறான் என்பதைத் தெரிந்துகொள்.

இதன் விரிபொருள்:
ஆன்மாவுக்கு “இருப்பு” (அஸ்தி) என்ற ஒரு தன்மை தவிர பார்ப்பது, கேட்பது, செய்வது போன்ற குணங்கள் இல்லாததால் அது எந்த விகாரங்களையும் அடைவதில்லை. புத்தியும், தனக்குத் தானே ஊற்றெடுக்கும், அறிவற்ற ஜடப்பொருள் ஆதலால் அதுவும் தானாகவே எதையும் அறிவதில்லை. ஆன்மாவின் ஒரே குணமாகிய ஞானத்தை ஜீவன் புத்தியிடம் இருப்பதாக பாவித்து “தான் இதை அறிகிறேன்”, “அதை அறிகிறேன்” என்று கருதும்போது அங்கு “சித்” ஆகிய அறிவு அம்சமும், “ஜடம்” ஆகிய இது-அது என்கிற அம்சமும் கலந்தே வருகின்றன என்பதை அறியாது இருக்கிறான். அறிவாகிய “சித்” அம்சம், மற்றும் “நான்” எனும் இருப்பாகிய “ஸத்” அம்சம் இவைகளை அறியாது, “நான்” என்பதை உடலளவோடு குறுக்கும்போது மட்டுமே ஜீவனும் தெரிகிறது, உலகமும் தெரிகிறது. அதனாலேயே நமது விழிப்பு நிலையில் இவை இரண்டையும் அனுபவிக்கிறோம். ஆழ்உறக்க நிலையில் (சுஷுப்தி) அவைகள் காணப்படாது உறக்க அனுபவம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
புத்தி எனப்படுவது ஆன்மாவின் ஸந்நிதானத்தில் உருவாகும் அந்தக்கரண விருத்தியாகும். ஒருவன் “அதை-இதைப்பார்த்தேன்” என்று சொல்லும்போது பேரறிவாகிய “சித்” அம்சம் ஒரு சிற்றறிவாகக் குறுகிவிடுகிறது. ஜடம் எப்போதும் ஜடமாகவே இருக்கும். அதை உணர்வதற்கு அறிவு தேவை. அந்தக்கரணவிருத்தி இடையில் புதிதாக உண்டாவதால் ஒருவன் “நான் அறிகிறேன்” என்று தவறாக எண்ணி அதற்குக்காரணமான பேரறிவை உணராது சிற்றறிவைத் தான் கொண்டுள்ளதாக மயங்குகிறான்.
ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டில் உள்ள இரும்புத் துண்டு ஜடம். ஆனால் அது நெருப்பிலிருந்து சூட்டை பெற்றதால் அது நெருப்பைப் போன்றே எவராலும் தொடமுடியாது இருக்கிறது. அங்கு நெருப்பையும், இரும்பையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அல்லது குறடால் பிடித்துக் கொண்டிருப்பது இரும்புதான், நெருப்பு இல்லை என்றாவது சொல்ல முடியுமா? ஆனாலும் பின்பு அதைக் குளிர வைத்துவிட்டால், இரும்பு தனது ஜட நிலைக்கே திரும்ப வந்துவிடும். அதே போன்று ஜீவன் தனது “இருப்பு” எனும் தன்மை ஆன்மாவிலிருந்து பெறப்பட்டது என்பதையும், அது ஒன்றே அறிவுமயம் என்ற உண்மையையும் அறியாதவரை, தானே நெருப்பு என்று ஓர் இரும்புத் துண்டு தன்னைப் பற்றி நினைத்துக்கொள்வது போலத் தன்னைப்பற்றி மோகம் கொள்கிறான்….. (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நால்வர் பற்றி தனியாக அறிவோம்.)

ஆத்மபோதம் – 19 பிராந்தி

தானே நெருப்பு என்று ஓர் இரும்புத் துண்டு தன்னைப் பற்றி நினைத்துக்கொள்வது போலத் தன்னைப்பற்றி மோகம் கொள்கிறான்….. என்று முடித்திருந்தோம்..
மேலே சங்கரரை தொடருவோம்….

ரஜ்ஜுசர்ப்பவதாத்மானம் ஜீவம் ஞாத்வா பயம் வஹேத் |
நாஹம் ஜீவஹ பராத்மேதி ஞாதம் சேன்நிற்பயோ பவேத் ||

தன்னைத்தான் சீவன் எனத் தாம்பிலே பாம்பு போல்
உன்னியே அச்சம் உறுகின்றான் – தன்னைத்தான்
சீவன் அலன் யான் பரமான்மா என்று தேர்ந்ததனால்
ஆவன் அஞ்சானாய் அவன்.

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, *பரமாத்மவடிவமே* என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்.

இதன் விரிபொருள் :
பயம் என்பது எப்போது வருகிறது? தனக்கு ஒரு முடிவு உண்டு என்னும்போதும் – பிறரால் தனக்கு ஏதும் துன்பம் உண்டாகலாம் என்னும்போதும் வருவதுதான் பயம்.
பயத்திலேயே பெரிய பயம் மரணபயம் தான். அது தினம் தினம் தான் வருகிறதே! ராத்திரியில் கனவுக்கு பின் வரும் ஆழ்உறக்கம் என்ற சுஷுப்தி தான் தின பிரளயம் என்கிற மரணம். ( *இனியொரு பிறவி எனக்கில்லை இனிமேல்* — என்ற நாக-சுந்தரத்தின் பைரவி பாடலுக்கு ஒரு பொருள்–விளக்கம் எழுதணும் என்று நினைவு. விரைவில் எழுதுகிறேன். அது இங்கே பொருந்தும்.)
தனக்கு ஒரு ஆரம்பம் இருப்பதுபோல், ஒரு முடிவும் உண்டு என்பதை ஒருவன் உணரவேணும். உடலுக்கு பிறப்பு உண்டு என்றதால், இறப்பு அதன் முடிவு தானே. அதாவது அவன் தன்னைத் தனது தேகத்தோடு சேர்த்து அடையாளம் காண்கிறான். அப்படி அவன் தன்னை தேகமாக பார்ப்பது சரியில்லை என்றால் அவன் முடிவைப் பற்றி பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லையே! அதேபோல தன்னைத்தவிர வேறொருவர் என்பது இல்லாதுபோனால், அப்போதும் பிறரால் வரும் துன்பம் இல்லாது போய்விடும். அதனால் ஒருவனுக்கு தான் என்ற உணர்வு அழியப்போகும் உடலல்ல என்றாலும், இருப்பது தான் மட்டுமேயன்றி வேறு எவருமே கிடையாது என்றாலும் பயம் எப்படி வரமுடியும்?
இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வதால் வரும் வினைகள்தான் இந்தப் பயம், மற்றும் இவ்வுலக வாழ்க்கையில் நமக்குத் தோன்றும் பலவிதமான எண்ணங்களும். இந்த விதமான எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் நமது மனம் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு மனம் அமைகிறது. “இன்னிக்குள்ள உலகம் ரொம்ப மட்டமா இருக்கு” அப்படீன்னு சொல்றோமே. அது தப்பு தானே! இவன் காணும் உலகமும் அப்படியே அமைகிறது. அதனால் உலகம் என்று ஒரே ஒரு பொருள் நல்லதாகவோ, கேட்டதாகவோ கிடையாது. உள்ளதை உள்ளதாகப் பார்ப்பவனுக்குத்தான் இந்த உண்மை புலப்படும்.
இல்லாத ஒன்று இருப்பதாக நமக்கு ஏன் தோன்றுகிறது? இதற்கு வினாவுக்கு வருவோம். தனது நனவு-கனவு அனுபவங்களைக் கவனித்து பார்க்கவேண்டும். நினைவுலகத்தில் காண்பதின் சாயல்களையும் அதன் வெவ்வேறு கலவைகளையும்தான், ஒருவன் கனவுலகிலும் காண்கிறான். முதலில் தன்னைப் போலவே ஒருவனை கனவில் உருவாக்குவதில் தொடங்கி, அதன்பின் மற்ற கதைகளும் அங்கு அமைகின்றன. அவை எதுவுமே உண்மை அல்ல என்பது பின்புதானே தெளிவாகிறது? கனவு காணும் வரை அவை எல்லாமே உண்மைபோலத்தானே தெரிந்தது? கனவு-நான் இருக்கும்வரை கனவில் வரும் அனைத்தும் உண்மைபோலத் தெரிந்தாலும், அவை உண்மை அல்ல என்று தெரிவதற்கு நினைவு-*நான்* வரவேண்டியது ஆயிற்றே? அதேபோல உள்ளதை உள்ளபடி உணர்வதற்கு நினைவு-நானின் உண்மைவடிவம் தெரியவேண்டும். அதுவரை “நான்” என்பதை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவில்தான் மற்ற எதனையும் நாம் புரிந்துகொண்டிருக்க முடியும். அது உண்மையில் உள்ளதா, அல்லது இருப்பதாக நாம் கற்பித்துக்கொண்டிருப்பதா என்பது தெரியாது.
வேதாந்தத்தில் சர்ப்பம்-ரஜ்ஜு என்ற உபமானத்தை எங்கும் பார்க்கலாம்.
இருளில் சுருண்டு கிடக்கும் கயிறு ஒன்றை ஒருவன் மங்கிய ஒளியில் பார்க்கும்போது, அவன் எப்போதோ முன்பு பார்த்த பாம்பின் சாயலை அதில் பார்த்துவிட்டு அந்த கயிற்றை பாம்பு என (பிராந்தியாக) நினைத்து பயம் அடைகிறான். அதன்மேல் வெளிச்சம் பட்டதும், உண்மையை உணர்ந்து தான் பார்த்தது பாம்பல்ல – கயிறு என்று தெளிகிறான். அதேபோல எங்கும் பரவியுள்ள *ஆன்மசொரூபம்* என்று ஒருவன் தன்னை உணரவில்லை. தான் தற்போது காணும் உடல்தான் “நான்” என்று நினைப்பவன் தன்னை உடலளவில் குறுக்கிக் கொள்வதால், அவனுக்கு “தான்-பிறர்” என்ற பாவனை வருகிறது. அது தவிர மற்றவர்கள் தன்னைவிட வேறு தன்மையானவர்கள் என்ற எண்ணமும் வருவதால், அவர்களிடம் ஓர் பயமும் வருகிறது. இந்த பயம் போவதற்கு அவன் தன்னைப் பற்றி நன்கு அறிவதுதான் ஒரே வழி, ஒளி நன்கு பெருகியதும் இல்லாத பாம்பு போய்விட்டது. இருப்பது கயிறு மட்டுமே என்பதுதான் உண்மை. முக்காலத்திலும் அங்கு பாம்பு இல்லவே இல்லை. கயிறுதான் ஸத்யமல்லவா! இதுபோல் தேகம் எப்போதும் எங்கேயும் இல்லவேயில்லை. இருப்பது ஒரே ஆன்மா தான். அப்போதுதான் அவன் தன்னை அறிவான், அந்த அறிவு பெறப்பட்ட மூலமான ஆன்மாவே அறிவுமயமாய் இருப்பதை தெளிவான். தன்னைப் போன்றே காணும் அனைத்தும் இருப்பதை உணர்பவனுக்கு எதைக் கண்டு எங்கே பயம் வரும்?
தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் … என்றதற்கு ஸ்ரீரமணபகவான் வரலாற்றில் ஒரு நிகழ்வு. அனுபவம் நமக்கு வா அது தெரியணும்….

ஆத்மபோதம் – 20 *தேஹம் நானல்ல* (நாஹம்-தேஹம்) பின் யார்?

படிப்போம். புரியும். மேலே மேலே சாதனை பண்ணுவோம். குரு ளியபண்ணுவார். (புன:புன:)
வேதாந்தம் என்பது பற்றி சங்கரரும் ஏனய ரிஷிகளும், மஹான்களும் உபநிடதம் வாயிலாகவும், பாடல்கள் வாயிலாலாகவும் நிறைய சொல்லி எழுதி கொடுத்துள்ளார்கள். பிரபலமான பகவத்கீதை அனைவருக்கும் தெரியும். அதிலும் இதே வேதாந்தம்தான். கீதைப்பேருரைகள் என்று நாட்டில் நிறைய ஆங்காங்கு நடக்கிறது. ஆனால் வேதாந்தம் என்பது தேஹாத்மபுத்தியிலிருந்து வெளிவருவது என்று எளிமையாக வாழ்ந்து காட்டியவர்கள் நமது ஸ்ரீரமணபகவான். அவர்கள் திருவண்ணாமலை தவ வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால் ஆங்கு நடந்த பல நடைமுறைகளால் நமக்கு இந்த *தேஹாத்மபுத்தி* நன்றாக புரியும். திருவண்ணாமலையில் வெகு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. கண்ணீருடனேயே தான் அப்போதும் படித்தேன்.. இதை நான் சிலரிடம் நேரில் பகிர்ந்தும் இருக்கிறேன். ஆனால் இரு தினங்கள் முன்பு முகநூலில் வந்த அதே பதிவை சேமித்து வைத்தேன். இங்கு நேற்றுமுன்தினம் நமது ஆத்மபோதம் தொடர் எழுதி வரும்போது இங்கே இதனை சேர்த்தால் பொருந்துமே என்ற நினைவு வந்தது. அப்போதுதான் ஏன் இந்த பதிவை சேமித்து வைத்தேன் என்பது புரிந்தது. எல்லாம் குருவருள்தானே! அவனன்றி ஓரணுவும் அசையாது என்னுபோது தோன்றவைப்பதும், எழுதவைப்பதும் அவனே அல்லவா! தேஹம் நானில்லை என்றால் எழுதவைப்பதும் அந்த ஆத்மா தானே! வாருங்கள் “தேஹம் நானல்ல, நான் ஆத்மாதான்” என்ற நினைவுடன் நிகழ்ச்சியை தொடருவோம்…

ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம் (மே 2011) இதழில் வந்ததாம். நான் சற்று சுருக்கி நமது தலைப்புக்கு தேவையான விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். இதுவே சற்று நீண்ட பதிவு. பொறுமை தேவை. சிந்தனை தேவை.

1937-ம் ஆண்டு. (சரியா 80 ஆண்டுகள் முன்பு) சுப்பராமையா தனது மகள் லலிதாவுடன் ரமணாஸ்ரமம் வந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருவண்ணமலைக்கு வந்து ரமண தியானத்தில் மூழ்கி முத்தெடுப்பார் சுப்பராமையா. அவர் கல்லூரிப் பேராசிரியர் , கவிஞர். அறிஞர். அவருடன் அவர் பெண்கள் லலிதாவும், இந்திராவும் உடன் வந்தார்கள். இதில் பெரியவள் லலிதா சற்று துடுக்கு, சமர்த்து; இளையவள் இந்திரா சாந்தம், கம்பீரம். ரமணாஸ்ரமத்தின் தியானக்கூடம், நடுநாயகமாக பகவான் வீற்றிருப்பார். துடுக்கான லலிதா அன்று தன்னோடு விளையாட , ஒருவரும் இல்லை. அந்தப் பெரிய ஹாலில் பலரும் விறைப்பாக அமர்ந்தவாறும் , கண்களை மூடிக்கொண்டும் , ரமணரைத் தரிசித்துக் கொண்டும், பாராயணம் செய்துகொண்டும் இருக்கிறார்கள். லலிதாவுடன் விளையாட யாருமில்லை. தேடித் பார்த்ததில் *தாத்தாசாமிதான்* சும்மா’ இருக்கார். அவர்தான் எனக்கு லாயக்கு ‘ என நினைத்தாள். *சும்மா இருப்பது மாபெரும்தவம்* என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? ரமணரின் பக்கத்தில் போய் நின்றாள் லலிதா. அவருக்கு ஏதாவது சேவை செய்யவா? ம்ஹூம், ஒரே சேஷ்டைதான். விசிறியை ஆட்டி சத்தம் செய்வாள். நூல்களைப் புரட்டுவாள். அவைகள் கீழே விழும். சிலர் கண்களைத் திறந்து பார்ப்பர். நீண்ட பொறுமைக்குப் பிறகு விஷமம் அதிகமானால், பகவானே, “ஏய். என்ன பண்ற ….?” என்று லேசாக அதட்டுவார். உடனே லலிதா வாய்க் குவித்து, மெல்லத் தலையாட்டி, “சுவாமி, நா ஒண்ணுமேபண்ணலே, சும்மாதான் இருக்கேன்” என்பாளே அது கொள்ளை அழகு ! பகவானே சிரித்து, “இவ இப்படித்துறுதுறுன்னு ஏதேதோ செய்யறா, ஆனா நா ஒண்ணுமே செய்யல’ என்கிறா. ஒரு சிறுமி இதைச் சொல்ல முடியறது. ஆனா பெரியவா இதைப் புரிஞ்சுக்க முடியலையே” என்றார். கீதையின் சாரத்தை இப்படி குழந்தையின் மூலமா பிழிந்து கொடுத்தார் பகவான்.
1941-ம் ஆண்டு. மே மாதம் மூன்றாம் வாரம். மீண்டும் திருவண்ணமலையில் தன் குடும்பத்துடன் சுப்பராமையா. இந்தமுறை 9 வயது லலிதாவுடன், இளையவள் 5 வயது இந்திராவும் வந்திருந்தாள். பட்டுச் சொக்காவில் இருவரும் சிட்டுக்களாக ஓடியாடி எல்லோரையும் ஈர்த்தனர். முக்கியமாக பகவானுக்கு சிறியவள் இந்திராவை பிடித்துப் போயிற்று. பாடச்சொன்னால் பாடுகிறாள். ஆடச் சொன்னால் ஆடுகிறாள். இந்த லலிதாவுக்கு என்ன வந்தது? திடீரென சங்கோஜப்பட ஆரம்பித்து விட்டாளே! ‘நான் ஒரு பெண்’ என்ற தேகாத்மபுத்தி தலையெடுக்கும் வயதோ! அதனால் தான் பகவானின் திருமுன்பு அவளால் இருக்கமுடியல்லையோ? இந்திரா பாடி முடித்ததும், லலிதாவைப் பாடச் சொன்னார் பகவான். அவள் தயங்கினாள். பகவான் விடவில்லை. “என்ன லலிதா? யார் கிட்டேயும் நா எதுவும் கேட்கறதில்ல. நீ என்னையே கேட்க வச்சுட்டியே! இந்திராவைப் பாரு, அவ மாதிரி பாடு” என்றார். இவ்வளவிற்குப் பிறகே லலிதா பாடினாள். பிறகு இருவரும் சேர்ந்து ஆடினர். மகரிஷியின் சபை குழந்தைகளால் அன்று களை கட்டியது.
ஒருநாள் சுப்பராமையா ‘உபதேசஸாரம்’ என்ற தெலுங்கு நூலை பகவான் முன்பு அமர்ந்து படித்தார். அதன் முன்பக்கத்தில் சம்ஸ்கிருத மொழியில் நான்கு வரிகள் அச்சாகியிருந்தன. அதைப் பார்த்த சின்னவள் இந்திரா அதிலுள்ள மூன்று வார்த்தைகளை ‘நாஹம் தேஹம் – கோஹம் – ஸோஹம்’ – ( நான் தேகமல்ல – நான் யார்? – அவன் ‘நான்’) என்று எழுத்துக் கூட்டி கூட்டி ஒன்றாக வாசித்தாள். உதட்டோடு, உள்ளத்தையும் குவித்து வாசித்த அவளை மகரிஷி உற்று நோக்கினார். அவளிடம் ஏதோ ஒரு ஊற்று பெருக்கெடுப்பதை அவர் கண்டதுபோல் இருந்தது.
“இந்திரா, சரியாத்தான் நீ படிச்சேம்மா. இந்த வரிகளே உனக்குப் போதும். பாடலின் மிச்சபகுதிய நீ படிக்க வேண்டாம். நீ இப்போ வாசிச்சியே, அதான் எல்லா அறிவோடஸாரம். இனி இதையே மந்திரம் மாதிரி சொல்லிண்டிரு. உனக்கு எல்லாமே இது மூலம் ஸித்திக்கும்.” என்றார் பகவான். உடனே, தாத்தாசாமி தனக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த மூன்று வரி மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தாள் இந்திரா. சரியாகச் சொல்ல தைரியம் வந்ததும் சத்தமாகப் பல ராகங்களில் சொல்ல ஆரம்பித்தாள். பின் அவளைப்பார்க்கும் போதெல்லாம் பகவான், “அந்த மந்திரத்தைச்சொல்லு, பார்க்கலாம்” என்பார். அவளும் சொல்வாள், ஒரு சிஷ்யையாக! அவர் அவளது உச்சரிப்பையா கவனித்தார்? இல்லை. ஏதோ ஓர் உச்சநிலைக்கு கொண்டு செல்வதற்கு அவர் அவளைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். சுப்பராமையா அதைப் பார்த்து வியந்தார்.
இந்த மந்திரம் முதன்முதலில் பகவான், தமது முக்கியச் சீடரான காவ்யகண்டகணபதிமுனிவர் என்ற மிகப் பெரிய பண்டிதருக்குக்கூறியருளியது. ‘ஆஹா, இந்த மந்திரம்தான் என்னவோர் அருமையானது ‘ என சுப்பராமையா அதை ரசித்தார்.’ இம்மந்திரம் உயர்ந்த ஸாதகர்களுக்கானது. முதலில் கோஹம் ‘நான் யார்? ‘ என்ற விசாரத்தைப் பூரகமாக – உள்மூச்சாக ஸாதகன் இழுக்க வேண்டும். அடுத்து, ஸோஹம் – ‘அவனே நான்’ என்ற ‘வ்ருத்தியை’ கும்பகமாக – மூச்சாகக் கருதி , பிடித்து வைத்துப்பழக வேண்டும். முடிவில், ‘நாஹம் தேஹம்’ – ‘நான் உடலல்ல’ என்ற அனுபவம் ரேசகமாக – வெளிமூச்சாக விடவேண்டும். இதுவே *ஞானப்பிராணாயாமம்*. அறிவுஜீவியான சுப்பராமையாவின் புத்தியை ஒரு கேள்வி அடிக்கடி குடைந்து கொண்டிருந்தது. அறிவிலும், அனுபவத்திலும் மிக்க பக்தர்களும், ஸாதகர்களும் ஆன நாங்கள், மகரிஷியின் ஒரு உபதேசதிற்காகக் காத்துக்கிடக்கும்போது, இவர் ஏன் ஒரு சிறுமியிடம் இவ்வளவு பெரிய விஷயத்தைத் திணிக்கிறார் ? அவளுக்கு என்ன புரியும்? இது அவரின் சிந்தனை.
அன்று சுப்பராமையா தியானித்துக் கொண்டு இருந்தார். இந்திராவுக்குப் பசித்தது. அப்பாவைத் தொந்தரவு செய்யாது ஒரு மூலையில் அமர்ந்தாள். ஆன்மப்பசியோ, அடிவயிற்றுப்பசியோ அனைத்தையும் அறியும் பகவான் அவளைக் கவனித்தார். உடனே அவளது அப்பாவிடம், “கொழந்தைக்குப் பசிக்கிறது, அதை கவனிக்காம தியானம் எதுக்கு?” என்று கேட்டார் பகவான். ஒருநாள் பகவான் அந்த இரண்டு சிறுமிகளுடனும் விளையாட்டாகப்பேசிக்கொண்டு இருந்தார். லலிதாவின் கையைப்பார்த்து, “இது யாரோட கை?” என்று கேட்டார். அவள், “என் கை” என்றாள். “இல்ல” என்றார் பகவான். “இது யாரோட கண்ணு?” “என்னோட கண்ணுதான்” – லலிதா.” இல்ல”…….இவ்வாறு பகவான் லலிதாவிடம் ஒவ்வொன்றாகக் கேட்கவும், அவள் அவையெல்லாம் தன்னுடையது தான் என்று சொல்லி வந்தாள். முடிவில் பகவான், “எதுவுமே ஒன்னுடையதில்ல. உன் உடம்பே பகவனுக்குத்தான் சொந்தம்.” என்று கூறி முடித்தார். லலிதா புரியாமல் விழித்தாள். ஆனால் இந்த உரையாடலை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த இந்திரா “ஓ, அப்படியா!” என்று உள்ளுக்குள்ளேயே உச்சரித்துக்கொண்டாள்.
விடுமுறை முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் ஊருக்குச் செல்ல பகவானிடம் விடைபெற வந்தனர். காலை நேரம். பகவான் மலைக்குப் போகும் நேரம். லலிதா ஏதோ வேடிக்கைப் பார்த்தபடி இருந்தாள். ஆனால் இந்திரா எதையோ எதிர்பார்த்து ஏங்கியிருப்பதாகக் காணப்பட்டாள். பகவான் இந்திராவை விழுங்கும்படிப் பார்த்து, *”அப்போ நீ உன் இடத்துக்குப் போற. நா என்னோட எடத்துக்குப் போறேன்”* என்று கூறிவிட்டு அருணாசலமலையில் ஏற ஆரம்பித்தார்.
கொஞ்சமாவது பகவான் திரும்பிப் பார்க்க வேண்டுமே! ம்ஹூம், இந்திராவின் இதயம் பாரமானது. ‘தாத்தாசாமி! இனி நா உங்கள எப்பப் பார்ப்பேன்?’ என்று அவளது உள்ளம் விம்மியிருக்கும். ஆனாலும் ஓர் ஆறுதல். அவளுக்குத்தான் தாத்தாசாமி வழங்கிய மூன்று மந்திரங்கள் இருக்கே! அதைச் சொன்னால் நா எங்கிருந்தாலும் சாமி என்ன நல்லா கவனிச்சுப்பார் என மனதிற்குள் நினைதித்திருப்பாள்.
நாட்கள் வேகமாகச் சென்று இரண்டு வருடங்கள் ஆயின. 1943 -ஆம் ஆண்டு. இந்திரா அகத்திலும், புறத்திலும் நன்கு வளர்ந்திருந்தாள். அப்போதுதான் அவளுக்கு திடீரென வைசூரி வார்த்தது. இரண்டு வாரங்களில் படுத்த படுக்கையாகி வாடிப்போனாள். உண்ண முடியவில்லை. உறக்க மில்லை. உடல் வேதனையை அனுபவித்தாலும், பகவான் அருளிய மூன்று மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தால் போதும் இந்திராவின் முகம் பிரகாசிக்கும். மூச்சைச் சிரமப்பட்டு விட்டாலும், மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டு இருந்தாள். சுப்பராமையாவும் பிற பக்தர்களும் பகவானின் படத்தின் முன்பு அவளைக் கிடத்திப் பிரார்த்தித்தனர். கவிஞரான சுப்பராமையா, தமது மகள் ஒரு அற்புதமான சோககாவியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தார். இவள் தெரிந்துதான் ‘ஞானப்பிராணாயாமம்’ புரிகிறாளா?….. ஓ, இவளது ப்ராரப்தம் தெரிந்துதான் பகவான் அவ்வளவு பிரயத்தனம் எடுத்து இவளுக்குச் சொல்லித் தந்தாரோ!’ என சுப்பராமையா எண்ணினார். அதை எண்ணியபோதே பகவானிடத்தில் பக்தி இன்னும் பெருகியது. எஞ்சிய நாட்கள் ஏனையோருக்கு இறுக்கமாகச் சென்றாலும், இந்திரா எதனாலும் பாதிக்கப் படாமல் இருந்தாள்! கடைசியில் அந்த சோகமான நாளும் வந்தது. அன்று ஸ்ரீராமநவமி . ஏப்ரல் 13. பக்தர்கள் இந்திராவைச் சூழ்ந்து இருந்தனர். மூன்று மந்திரங்களையும், விடும் மூச்சாக ஓதிக்கொண்டே இந்திரா இறைவனடி சேர்ந்துவிட்டாள். அங்கு துக்கம் விசாரிக்க யாரும் வரவில்லை. யாராலும் அழ முடியவில்லை! ஏனெனில் அவள் தேகத்தைத் துப்பிவிட்டு, தெய்வப் பதத்தைச் சேர்ந்துவிட்டதாகப் பலரும் நம்பினார் ; உணர்ந்தனர்.
பல வருடங்கள் விசாரத்திற்குப் பிறகும் ஸாதகர்களுக்கு கிடைக்காத ஒரு ஸ்திதியை, அவள் குருவருளால் எளிதாகப் பெற்று, பகவானை எளிதாக அடைந்துவிட்டாளே! என்றுதான் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். இந்திராவின் உடலைப் புதைத்த இடத்தில் ஒரு கல்லறை எழுப்பினார் சுப்பராமையா. அதன்மீது *நாஹம் தேஹம் – கோஹம் – ஸோஹம்* என்ற வாக்கியங்களை பொறித்து வைத்தார். அது பக்தர்களுக்கு இன்றும் ஒரு வழிகாட்டியாக இருந்து விளங்குகிறது.
இந்த பதிவின் பின்பு இதன் தொடர்ச்சியாக நாளை பார்ப்போம்….

ஆன்மபோதம் – 21 ப்ரகாசம்

நேற்றைய தொடர் ஒரு கதை போல ஆனால் உண்மை சம்பவமாக படித்தோம். அது உங்களுக்கு மனதில் ஒரு வித்தியாசமான சிந்தனைகளை உண்டுபண்ணியிருக்கும். அதனால் இத்தொடரைப்படிக்கும் உங்களுக்கு சற்று ஆன்மவிழிப்பு ஏற்படுவற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுக்கின்றன.. சிலர் பதில் எழுதுகிறார்கள். சிலருக்கு எழுத வரலை. அவ்வளவுதான். மனதிலேயே சிந்திப்பது புரிகிறது. மகிழ்ச்சியே! எழுத வராவிட்டால் என்னிடம் தொலைபேசியில் பேசலாமே! என் தொலைபேசி எப்போதும என்னிடம் தயார் நிலையில் அருகிலேயே உள்ளது என உங்களுக்கு தெரியுமே! மறுபடியும் சொல்கிறேன். தயவுசெய்து இரவில் படுக்கும் முன் இதனை படியுங்கள் – படியுங்கள். பலனுண்டு. குரு என்பவர் வழிகாட்டி தான். அதோ! தெரிகிறதுபார். நீ சென்றடைய வேண்டிய லக்ஷ்யம் என்று காட்டுபவர்தான் அவர். வழியைத்தொட்டு அதன்வழியே சரியாக அதாவது அவர் சொன்ன வழியிலேயே சென்றாலேதான் லக்ஷ்யத்தை அடைய முடியும். சின்ன குழந்தையாக இருந்தாலும் இந்திரா ஸ்ரீபகவான் சொன்ன அந்த மஹாவாக்கியங்களை எத்தனை அழகாக ஒருமுகமாக சொன்னாள். உடனே அதற்கு அவளின் முன்வினை நல்வினை என்று வியாக்கியானம் செய்யலாம். இப்படி சொல்வது சரியில்லை. ஏன்? நமக்கும் முன்வினை நல்வினை இல்லையா? இல்லாமலா அற்புதமான ஸத்குரு மண்டலம் கிடைத்துள்ளது? எனவே வைராக்கியம் வேணும். ஸாதனை அவசியம். நிச்சயம் லக்ஷியத்தை எட்டலாம். ஆத்மா நம்மிடம் நன்றாகவே பிரகாசிக்கிறது. அதனால் தான் இத்தனை பெரிய. ஆத்மா சம்பந்தமான, உபநிஷத்பிரதிபாத்யமான விஷயத்தை எளிதாக எழுத, பேச, படிக்க முடிகிறது. முன்னமேயே சொல்லியிருக்கிறேன் வேதம் சொன்னதை. “ஆத்மபிரகாசம் இல்லையானால் வேறு ஒன்றும் பிரகாசிக்காது..” என்று (நதத்ர சூர்யோபாதி …. )
இது பற்றியே சங்கரர் அடுத்து தொடருகிறார்…..

ஆத்மாவபாசயத்யேகோ புத்தயாதீநீன்த்ரயாண்யபி |
தீபோ கடாதிவத்ச்வாத்மா ஜடைச்தைநார்வபாச்யதே ||

ஒரு பொருளாம் ஆன்மா ஒளிர்க்கும் மதிமுன்
கருவிகளைத் தீபம் கடாதி – பொருவ
ஒளியில் அவற்றால் ஒருபோதும் ஆன்மா
ஒளிர்க்கப்படாது என்று உணர்.

மண்சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவை. அதுபோல் ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் ஒளிரச் செய்யும். ஸ்வய பிரகாசமில்லாத ஜடமாகிய அவைகளினால் ஒளிமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்.

இதன் விரிபொருள்:
நமது கண்களால் நமக்கு வெளியிலுள்ள எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அந்தக்கண்ணால் நமது கண்ணையே பார்க்க முடிகிறதா? ஒரு கண்ணாடி கொண்டுதானே பார்க்கிறோம்? நம் மனம், புத்தி இவைகளின் துணை கொண்டு, பார்க்கும் நமக்கு அதற்கு வேண்டிய உறுப்பு இருக்கிறது என்றும், எதிரில் இருப்பவருடைய கண்களைப் பார்த்து அதேபோல நமக்கும் இருக்கவேண்டும் என்றும் அனுமானிக்கிறோம் அல்லவா? கண் என்பது ஒரு ஸ்தூலக்கருவி. மனம், புத்தி முதலியன நமது ஸூக்ஷ்மஅந்தக்கரணங்கள். கண்ணையும், கண்ணுக்கு எதிரே இல்லாதவற்றையும், வேறுபல சூக்ஷ்மமான ரகசியங்களையும் அறிவது நமது புத்தி என்றால், எதனால் அந்த புத்தி இயங்குகிறது என்று ஆராய்வதுதானே முறை?
குடம் போன்ற சாதனங்கள் இருளில் இருந்தால் அவை எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு ஒரு விளக்கு தேவையாகிறது. ஆனாலும் அந்த விளக்கைக் கொண்டு கதிரவனைப் பிரகாசிக்கச் செய்ய முடியுமா? குடம் என்ற ஜடப்பொருளால் எப்படி விளக்கைப் பிரகாசிக்கச் செய்யமுடியாதோ, அதேபோல சூரியனின் முன்பு மற்ற ஜடப் பொருளை காட்டும் விளக்கும் ஒரு ஜடம் போல்தான் ஆகிறது. நமது ஸூக்ஷ்ம புத்தியினால் காணவும் முடியாத ஜடப் பொருட்களை மானசீகமாகக் கண்டுபிடித்தாலும், அந்த புத்தியை ஒளிர்விக்கும் பொருள் முன்பாக புத்தியும் ஒரு ஜடமாகத்தான் ஆகிறது.
“ஸத்” ஆகவும், “சித்” ஆகவும் அறிவுமயமாகவே இருக்கும் ஆன்மா ஒன்றினால்தான் புத்தியும் அறிவொளி பெற்று, அந்தக் கரணங்களையும் அதனால் ஒளி பெறச் செய்து பார்ப்பது, கேட்பது முதலான செயல்களில் ஈடுபடச் செய்கிறது. எப்போது அந்த ஒளி அகல்கிறதோ அப்போதே அனைத்தும் செயலிழந்து விடுகின்றன. ஆகவே புத்தி என்ற நமது ஸூக்ஷ்ம கருவி கூட அந்த ஆத்மாவின் முன் ஜடம் ஆகிறது என்பதைக் குறிப்பிடும் முகமாகத்தான் “புத்தி முதலான” எனப் பொருள் தரும் “புத்தியாதி” என்ற சொல்லை இங்கே சங்கரர் போட்டிருக்கிறார். நமது தேகத்தின் இந்திரியங்கள் அனைத்துமே ஆன்மாவினால் ஒளி பெறப்பட்டு இயங்குகின்றனவல்லாது, இவை எதுவுமே ஆன்மாவை ஒளிர்விக்க இயலாது.
தொடர்ந்து பார்ப்போம்……

ஆன்மபோதம் – 22 *ஒளிதனில் ஒளியும் நீ*

ஆன்மஒளியால் தான் அனைத்தும் இயங்குகின்றன என பார்த்தோம்….

ஸ்வபோதே நான்யபோதேச்சா போதரூபதயாத்மானஹ |
ந தீபஸ்யான்யதீபேச்சா யதா ஸ்வாத்மபிரகாஷனே ||

விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் – விளங்கும்
அறிவுருவாம் ஆன்மா அறிந்திடத் தன்னைப்
பிரிதறிவு வேண்டப் பெறாது.

தானாகவே பிரகாசிக்கும் தன்மை உள்ள விளக்கு. அதனை விளக்கிக் காட்டுவதற்கு இன்னுமொரு விளக்கு தேவை இல்லாதது போல, ஞானவடிவமாகப் பிரகாசிக்கும் ஆன்மாவை அறிவதற்கு வேறொரு அறிவின் துணை அவசியமேயில்லை.

இதன் விரிபொருள்:

ஆன்மாவே நமது உள்உறுப்புக்களை ஒளிர்விக்கச் செய்கின்றன என்றால், அவை எதனாலுமே ஆன்மாவை அறியமுடியாது என்று ஆகிறது. ஆன்மா ஸ்வயம்பிரகாச ஸூர்யன் போல தானும் ஒளிர்கின்றது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஒளிர்விக்கின்றது. விளக்கு ஒன்று இருக்கிறது என்பதை அறிவதற்கு வேறு ஒரு விளக்கின் தேவை இல்லாததன் காரணம், அந்த விளக்கிற்கே ஸ்வயமாக ஒளிரும் தன்மை இருப்பதால்தானே? ஆன்மாவும் அதேபோல ஸ்வயம் பிரகாசமாக இருப்பதால் உள்உறுப்புக்களை ஒளிர்விக்கிறது, தானும் ஒளிர்கிறது. அப்படிப்பட்ட ஆன்மாவை அறிய வேறு ஒரு துணை தேவையில்லை.
இவ்வுலகில் ஒன்றைப் பார்ப்பதற்கு ஒருவனுக்குக் கண் வேண்டும். கண் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதில் மனம் செல்லவில்லை என்றால் ஏதும் தெரியப்போவதில்லை. உதாரணம் – நாம் வீட்டில் உட்கார்ந்து உருக்கமாக டிவி பார்ப்போம். அப்போது பக்கத்துவீட்டு மாமா உள்ளே வந்து பக்கத்தில் உட்காருவார். நம்மை தொட்டு என்ன சேதி ? என்பார். ஆஹா ! எப்ப வந்தேள்? என்போம் நாம். இது நமது அன்றாட அனுபவம்தானே! அப்போது நாம் மனம் டிவியில் இருத்தது. பக்கத்தில் நடப்பது தெரியலை. கண் பார்த்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை என்றால் ஏதும் தெரியாது என்பது தான் உண்மை.
அது தவிர பார்க்கும் சமயத்தைப் பொருத்து சூரியனோ, சந்திரனோ, நக்ஷத்திரமோ அல்லது ஒரு விளக்கோ ஏதோ ஒன்று தரும் ஒளியின் துணையும் வேண்டும். அந்தச் சமயத்தில் அவன் தன்கண்ணை மூடிக்கொண்டால், பார்க்கும் பொருளைப் பற்றி அவன் முன்பு அறிந்ததை அவன் தனது புத்தியினால் இப்போது உணர முடியும். ஆக கண் என்பது ஒரு ஸ்தூலக்கருவியாக இருப்பதுபோல, மனம்-புத்தி இவைகள் எல்லாம் ஸூக்ஷ்மகருவிகளாக அமைகின்றன. ஸ்தூலக்கருவிகளை ஸூக்ஷ்மகருவிகள் இயக்குகின்றன அல்லது அதற்கு துணை செய்கின்றன. ஸூக்ஷ்மகருவிகள் இல்லாத ஆழ்உறக்கத்தில் ஸ்தூலக்கருவிகளும் பயனில்லாமல் போகின்றன. அதாவது ஒவ்வொரு கருவிக்குப் பின்புலமாக வேறு ஒன்று அமைகின்றது. ஆழ்உறக்கத்தில் “நான்” எனும் உணர்வு இல்லாதபோது ஸூக்ஷ்ம கருவிகளும் இல்லாது போகின்றன. ஆக “நான்” எனும் ஆத்மாவே – உணர்வே அனைத்திற்கும் ஒளி தருவதாக இப்போது சொல்லலாம். இதனையே பகவான்ரமணர் உள்ளதுநாற்பது அனுபந்தத்தில் இவ்வாறு சொல்கிறார்:

ஒளி உனக்கு எது? பகலில் இனன் எனக்கு, இருள் விளக்கு
ஒளி உணர் ஒளி எது? கண்; அது உணர் ஒளி எது?
ஒளி மதி; மதி உணர் ஒளி எது? அது அகம்;
ஒளி தனில் ஒளியும் நீ என குரு; அகம் அதே.
“எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன். அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த ஸ்வயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு அழகாக விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர். இதைத் தான் திருமூலரும்…….
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே! ——— என்கிறார்.

ஆத்மபோதம் – 23 “இதுவல்ல-இதுவல்ல”

நாம் செய்யும் ஸாதனை பற்றி பகவான் சரித்திரத்தில் ஒரு உபதேச நிகழ்ச்சி இருக்கிறது. அதை பார்க்கலாம்.:
குஞ்சுஸ்வாமிகள் என்று ஒருவர். அவர் பகவானைப் பற்றி கேள்விப்பட்டவுடன் உடலில் அவருக்கு ஒரு இனம்புரியாத மாற்றம் ஏற்பட்டது. உடனே திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷிகளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிட்டார். கையில் போதுமான பணம் வேறு கிடையாது. திருவண்ணாமலையில் பிளேக் நோய் பரவியிருந்ததால் ஊருக்குள் செல்வதற்கு பலவிதமான தடைகள் இருந்தது. சிவபெருமானுடைய அருளால் எல்லா தடைகளும் விலக, திருவண்ணாமலை வந்து தனது குருநாதரான பகவான் ரமணமகரிஷியின் திருவடியை வந்தடைந்து பரமசாந்தியை அடைந்தார். பகவான் ரமணர் யாருக்கும் வாய்முகமாக எந்த உபதேசமும் செய்வதில்லை என்று கேள்விப்பட்டார். அதனால் முதல் முதலாக பகவான் ரமணர் எதை தன்னிடம் பேசுகின்றாரோ அதையே உபதேசமாக எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்தார். அந்த சமயம் ஒரு கொட்டாங்கச்சியில் உள்ள சூடான கஞ்சியை நான்கு நாய்க்குட்டிகள் குடிப்பதற்கு ஓடி வந்தன. அந்த குட்டிகளுக்கு அந்த கஞ்சி சுடப்போகிதே என்ற கவலையினால் பகவான் குஞ்சுஸ்வாமிகளைப் பார்த்து “நான்கையும்பிடி, ஒவ்வொன்றாக விடு” என்றார். அதன்படியே நான்கு நாய்க்குட்டிகளையும் பிடித்து ஒவ்வொன்றாக விட்டார். சரி, இதில் என்ன உபதேசம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் அல்லவா? ஆமாம். இது உபதேசம்தான். முக்தியை விரும்புகின்ற ஒருவன் (முமுக்ஷு) நான்கு செயல்களை முதலில் நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு அவைகளை ஒவ்வொன்றாய் விட்டுவிட வேண்டும்.
 நல்ல நூல்களைப் படித்தல், (உபதேச – சிரவணம்)
 மந்திரத்தை ஜபம் செய்தல், (மனனம்)
 தியானம் செய்தல், (நிதித்யாசனம்)
 ஆத்ம தத்துவத்தை விசாரம் செய்தல் (ஸவிகல்பஸமாதி)
என்ற நான்கையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஜபம் நன்றாக கைகூடி வந்துவிட்டால், பாராயணத்தை விட்டுவிடவேண்டும். தியானம் நன்றாக கைகூடிவிட்டால் ஜபத்தை விட்டுவிடலாம். ஆத்மதத்துவவிசாரம் கைகூடி விட்டால் தியானத்தை விட்டு விடலாம்” என்பதுதான் அந்த உபதேசம். இது அநேகமாக மஹாவாக்கியமே தானே! இதையேதான் சங்கரர் தொடர்ந்து சொல்கிறார்….

நிஷித்ய நிகிலோபாதீன்னேதி நேதீதி வாக்யாதஹ |
வித்யாதைக்யம் மகாவாக்யைர்ஜீவாத்மாபரமாத்மனோஹ ||

நேதிநேதி வாக்கினால் நீக்கி உபாதி எலாம்
மீதியாம் சீவான்மா மீதிலா – ஆதியாம்
அப்பரமான்மாக்களின் ஐக்கிய மாவாக்கியங்கள்
செப்புவது ஓர்ந்து தெளி

இந்தத் தேஹம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்தவாக்கின்படி நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று சொல்லும் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப் பரம்பொருளாகிய ஆன்மாவும் ஒன்றே என்று சொல்லும் வேத மஹாவாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து தெளிவாயாக.

இதன் விரிபொருள்:
இருப்பதைக் கொண்டுதான் பறப்பதை அறியவேண்டும் என்பார்கள். அதனால் நமக்கு நன்கு தெரிகின்ற வஸ்துக்களை ஆராய்ந்து அவைகளின் ஸத்யதன்மையை தெரிந்து கொள்ளும் வழிதான் *நேதி-நேதி* என்று சொல்லப்படும் விசாரம்.
அதாவது *இதுவல்ல-இதுவல்ல* என்பதாகும். நாம் ஒரு காரில் போகிறோம். டிரைவரான நாம் தான் ஓட்டுகிறோம், ஆனால் நாமே அந்த வண்டியல்ல என்று நமக்கு தெரியும் அல்லவா? அதைப் போன்றதே இந்த வழி. நமக்கு உடல் இருக்கிறது, ஆனால் நாம் உடல் அல்ல. அதே போன்று நமக்கு மனம், புத்தி இவைகள் இருக்கின்றன, ஆனால் மனம், புத்தி இவைகளும் நாம் அல்ல. மனத்தில் ஒன்று தோன்றும். புத்தியினால் கிளம்பும் எண்ணங்களும் நமக்கு வருகின்றன, ஆனாலும் அவைகள் நாம் அல்ல. இப்படியாக நமக்குத் தோன்றும் எதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம் என்று சொல்லி அவைகள் எதுவும் நாம் அல்ல என்று நீக்குவதுதான் இந்தவழி. அப்படியானால் அனைத்தையும் நீக்கிவிட்டு எஞ்சி இருப்பது யார்? அல்லது எது? என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், பார்க்கும் ஒரு ஆள் இருக்கிறான் அல்லவா? அவன் யார் என்ற ஒன்றுதானே மிஞ்சும்? அந்தக் கேள்வியையே மிக ஸூக்ஷ்மமாக அணுகினால், அவன் அப்படிக் கேட்பதற்கோ, உணர்வதற்கோ முன்பேயே அவன் இருந்தாக வேண்டும் அல்லவா? அப்படி இருப்பது ஒன்றே எங்கும், எப்போதும் உள்ள பரமாத்மா. (நம் வழியில் பராசக்தி-சித்சக்தி)
இதைதான் வேத மஹாவாக்கியங்கள் “உணர்வேபிரம்மம்” (ப்ரக்ஞானம் ப்ரஹ்மா) என்று ரிக்வேதஉபதேசமாகவும், “ஆத்மன்பிரம்மம்” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்று அதர்வணவேத ஸாக்ஷாத்கார உபதேசமாகவும், “அதுவாக நீ இருக்கிறாய்” (தத்வமஸி) என்று ஸாமவேதஉபதேசமாகவும், “நான் ப்ரஹ்மமாயிருக்கிறேன்” (அயமாத்மாப்ரஹ்மா) என்று யஜுர்வேத அனுபவவாக்கிய உபதேசமாகவும் சொல்லப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பரமாத்மாவும், நேதி-நேதி என்று தேடி மிஞ்சியுள்ள ஜீவாத்மாவும் வேறு வேறு அல்ல என்று விசாரித்து தெளிந்து கொள்ளவேணும் என்று கூறப்படுகிறது.
இருக்கும் தன்னை விட்டு இல்லாத பலவற்றைப் பிடித்துக்கொண்டு பலவிதமான உபாதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன், எப்போது அனைத்து உபாதிகளையும் நீக்கிவிட்டு தனது தன் ஸ்வயவடிவத்தைப் பார்க்க முயல்கிறானோ, அப்போதுதான் அவனுக்கு ஸ்வயம்பிரகாசமான ஞானம் கிட்டும்.
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே…………
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே” …
இந்த கண்ணதாசன் பாட்டை கேட்டிருபீர்கள்.
அதுவரை ஆத்மா ஸ்வயமாகப் பிரகாசித்தாலும், மற்றவைகள் மறைப்பதால் ஆத்மாவின் வீச்சை அவன் உணர முடியாது. மாறாக மனம், புத்தி போன்ற உள்ளுருப்புக்களின் அறிவார்த்தமான இயல்புகளே ஆத்மாவின் இயல்புகள் எனத்தவறாகவும் புரிந்துகொள்ள நேரிடும். அதற்குத்தான் நமது குருநாதர் வந்து ஸ்வரூபநிரூபணத்தை நமக்கு செய்தார். தினம் தினம் ஜபத்தின்போது மட்டும் அந்த வாக்கியத்த்கை சொல்வது கடமையாக போய்விட்டது. அதன் உள்ளார்த்தம் இப்ப கொஞ்சம் புரிகிறதா? அந்த ஸ்வரூபம் நீதான் – உன்னை விட்டு வேறில்லை. இதுதான் குருபாதுகா மந்த்ரம் நமக்கு தினம் தினம் அறிவுறுத்துகிறது.

பேரின்பக் கடல் – ॥ ஆநந்த³ஸாக³ரஸ்தவ: ॥

ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம். மஹான் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அவர்கள் மஹா பண்டிதர்.அவருடைய பாடல்களுக்கு தமிழ்ப்பாடல்கள் எழுதுவது என்பது கொசுவின் இறக்கையால் வானத்தின் பொத்தலை அடைப்பது போன்றது. ஆனாலும் அந்த மஹான் எழுதியதை படிக்கும் வியாஜத்தில் சிறிது சத்சங்கத்தில் மனம் தோயட்டும் என்ற நிலையில் இதை அங்கீகரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அறிஞர்கள் ஏற்றுக்கொண்டு ஊக்குவித்தால் மகிழ்ச்சி அடைவேன்.

ஸ்ரீ குருபாதுகாப்யாம் நம:
– நாகசுந்தரம்

மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அவர்கள் இயற்றிய
॥ ஆநந்த³ஸாக³ரஸ்தவ: ॥

(ஸ்ரீ ய. மகாலிங்க சாஸ்த்ரிகள் உரையை தழுவி
தமிழ் பாடல்கள் ஆக்கம் வேதாந்த கவியோகி நாகசுந்தரம்)

விஜ்ஞாபநார்ஹவிரலாவஸராநவாப்த்யா
மந்தோ³த்³யமே மயி த³வீயஸி விஶ்வமாது: ।
அவ்யாஜபூ⁴தகருணாபவநாபவித்³தா⁴-
ந்யந்த: ஸ்மராம்யஹமபாங்க³தரங்கி³தாநி ॥ 1 ॥

தனிமையிலே பார்க்கவெண்ணி தோது நேரம் இல்லையே
கனிவுகொண்டு அவளாக காட்சி தந்து நிற்கையில்
இனிமையான இக்கணம் என் இயலாமை சொல்வனே
மனிதன் எந்தன் மனதிலே மாதா வந்து நிற்பளே

ஆவேத்³யதாமவிதி³தம் கிமதா²ப்யநுக்தம்
வக்தவ்யமாந்தரருஜோபஶமாய நாலம் ।
இத்யர்த்²யஸே கிமபி தச்ச்²ரவணே நிதா⁴தும்
மாத: ப்ரஸீத³ மலயத்⁴வஜபாண்ட்³யகந்யே ॥2॥

சொல்வதெல்லாம் உனக்கு இங்கே சொல்லாமல் தெரியுமே
பலவிதமாய் சொல்கிறேன் எந்தன் பாரம் குறையுமே
கல்லான என்மனதின் புண்கள் ஆற சொல்கிறேன்
மலையத்துவஜன் பெண்ணே மனம் குளிர வைப்பளே

ஆக்ரந்தி³தம் ருதி³தமாஹதமாநநே வா
கஸ்யார்த்³ரமஸ்து ஹ்ருʼத³யம் கிமத: ப²லம் வா ।
யஸ்யா மநோ த்³ரவதி யா ஜக³தாம் ஸ்வதந்த்ரா
தஸ்யாஸ்தவாம்ப³ புரத: கத²யாமி கே²த³ம் ॥ 3 ॥

கதறி கதறி முகத்திலடித்து கண்ணில் நீர் விடுவனே
இதனை அறிந்து எந்தன் துக்கம் யாவர் மாற்ற வல்லரோ
பதத்தில் எந்தன் மனதை வைத்து பிரார்த்தனை செய்கிறேன்
உதவி செய்ய உந்தன் காதில் உரைத்து சொல்லி நிற்பனே

பர்யாகுலே மநஸி வாசி பரிஸ்க²லந்த்யாம்
ஆவர்தக³ர்த இவ சக்ஷிஷி கூ⁴ர்ணமாநே ।
கஸ்தேঽபி⁴தா³ஸ்யதி ஶிவே மமதாமவஸ்தா²ம்
காலே த³யஸ்வ கத²யாமி தவாது⁴நைவ ॥ 4 ॥

பேய் கணங்கள் கூடவந்து கூற்றுவனும் வருகையில்
வாய்குளறி காது குன்றி கண்ணும் மங்கி போகுமே
தாயாம் உந்தன் சன்னதி இன்றே வந்து நிற்கிறேன்
வாய்ப்பு வந்த பொது நெல்லை வாயில் தூவ வேணுமே

ப⁴க்திம் கரோது நிதராம் ஸுரஜாதிமாத்ரே
க்³ராமீணஜந்துரிவ பௌரஜநேஷு லோக: ।
அந்யத்ர தே³வி ப⁴வதீ³யபதா³ரவிந்தா³-
தா³க்ருʼஷ்யமாணமபி மே ஹ்ருʼத³யம் ந யாதி ॥ 5 ॥

பட்டிக்காட்டு மக்கள் வந்து பட்டிணத்தை சேர்வரே (அதுபோல்)
எட்டி நிற்கும் இமையவர் எனக்கு துணை இல்லையே
கட்டி உன்னை பிடித்து விட்டேன்க் காத்தருள் செய்வையே
எட்டியாக கசந்திடும் எந்தன் வினை அழிப்பையே

அங்கீ³குரு த்வமவதீ⁴ரய வா வயம் து
தா³ஸாஸ்தவேதி வசஸைவ ஜயேம லோகாந் ।
ஏதாவதைவ ஸுகரோ நநு விஶ்வமாத:
உத்³த³ண்ட³த³ண்ட³த⁴ரகிங்கரமௌலிப⁴ங்க:³ ॥ 6 ॥

ஏற்பையோ மறுப்பையோ எமக்கு கவலை இல்லையே
போற்பதத்தை போற்றி நாங்கள் புதுவழி காண்பமே
கூற்றுவனின் தூதர்கள் கொல்ல வந்து நிற்கையில்
மாற்றிடுவோம் வினைகளை அவரின் மண்டை உடையுமே

வேதா³ந்தவாக்யஜநிதம் விமலம் விசாரை:
ஆஸாத்³ய போ³த⁴மநுசிந்தநதோঽபரோக்ஷம் ।
முக்திம் வ்ரஜந்தி மநுஜா இதி ஸூக்திமாத்³யா-
மாலம்ப்³ய கஸ்தரிதுமர்ஹதி ஶைலகந்யே ॥ 7 ॥

வேதம் நாலு அங்கம் ஆறு வேதாந்த நூலு நூறு
உதவுமோ உபநிஷத்தும் ஓதுவது கடினமே
பதத்தை பாக்கள் பலவும் கூறி பிடித்து நிற்க வல்லிரேல்
சதம் சதம் சங்கரியின் சொரூபம் முன்னே நிற்குமே

ஏகைகவேத³விஷயா: கதி நாமஶாகா²-
ஸ்தாஸாம் ஶிராம்ஸி கதி நாம ப்ருʼத²க்³விதா⁴நி ।
அர்தா²வபோ³த⁴விது⁴ரோঽக்ஷரலாப⁴ ஏவ
கேஷாம் ந்ருʼணாம் கதிபி⁴ரஸ்து ஶரீரப³ந்தை:⁴ ॥ 8 ॥

வேதத்தின் சாகைகள் வேண்ட மட்டும் உள்ளது
வேதசந்தை உரக்க கூறி வித்துவானாய் ஆவதற்கு
போதுமோ இப்பிறப்பு பல பிறப்பு வேணுமே
அதுவும் கோடி ஒருவரே அர்த்தம் காண வல்லரே

ந்யாயா: பரஸ்பரவிபி⁴ந்நதி³ஶ: ஸஹஸ்ர-
முச்சா²வசாநி ச ப⁴வந்த்யுபப்³ருʼம்ஹணாநி ।
ஏவம் ஸ்தி²தே கி³ரிஸுதே நிக³மோபலாநாம்
தாத்பர்யஸாரமவதா⁴ரயிதும் க்ஷம: க: ॥ 9 ॥

மீமாம்ஸா சாத்திரங்கள் மேலே மேலே உள்ளது
ஆமாம் ஆமாம் அதற்கு உரை ஆயிரம் உள்ளது
உமையே இந்த உலகிலே வேதப்பொருள் விளங்குமோ
சமைத்திடும் சட்டி இங்கே சோறுசுவை அறியுமோ

அஸ்த்வக்ஷரக்³ரஹவிதி⁴ர்ஜநுஷாம் ஸஹஸ்ரை-
ராபாததோ ப⁴வது நாம ததோঽர்த²போ³த:⁴ ।
து³ர்வாதி³கல்பிதவிகல்பதரங்க³ஸாந்த்³ராந்
து³ஷ்பூர்வபக்ஷஜலதீ⁴ந் கத²முத்தரேய: ॥ 10 ॥

ஆயிரம் பிறப்பெடுத்து ஆயகலை அறிந்தாலும்
வாயினால் வேதம் சொல்லி விளக்கமது தந்தாலும்
பாய்விரித்து பலகையில் குயுக்தி செய்வோர் மத்தியில்
தோயுமோ உந்தன் உரு தோற்த்துதான் போவோமே

ப்³ரஹ்மேதி ஶக்திரிதி ப³ந்த⁴விமோசநீதி
மாயாமயீதி மத³நாந்தகவல்லபே⁴தி ।
ஸப்தாஷ்டஶப்³த³பரிவர்தநமாத்ர ஏவ
ஸாமர்த்²யமாவஹதி ஶாஸ்த்ரபரிஶ்ரமோঽயம் ॥ 11 ॥

பிரம்மம் சக்தி பந்தம் மோக்ஷம் என்று அரற்றும் அறிஞரே
உரைத்து கல்லில் அந்த உண்மை அறிவீரோ அறிவீரோ
அரனும் அந்த காமனை கண்ணால் எரிக்க வல்லரே
மரணம் இல்லா மகிமையை மேதை நீங்கள் உணர்வீரோ

தஸ்யை ப்ரஸீத³ஸி கி³ரீந்த்³ரஸுதே ய இத்த²ம்
ஸம்பாத³யேத ஶநகைரபரோக்ஷபோ³த⁴ம் ।
யஸ்மை ப்ரஸீத³ஸி ஸ ச க்ஷமதேঽவபோ³த்³து⁴-
மித்த²ம் பரஸ்பரஸமாஶ்ரயமேததா³ஸ்தே ॥ 12 ॥

அவித்தை நீக்கி அந்த ஞானம் அறியவைக்கும் அரசியே
அவித்தை நீக்கும் அறிஞரே உந்தன் ரூபம அறிவரே
பவித்த இந்த ஞானத்தை பாரில் நாங்கள் பெறுவமோ
தவிக்கும் மனம் உந்தன் தன்மை தானறியும் வகைஎதோ

ஆகர்ணய த்வமிமமப்⁴யுபக³ம்ய வாத³ம்
ஜாநாது கோঽபி யதி³ வா ஹ்ருʼத³யம் ஶ்ருதீநாம் ।
தஸ்யாப்யஸங்க்²யப⁴வப³ந்த⁴ஶதார்ஜிதோঽயம்
த்³வைதப்⁴ரமோ க³லது ஜந்மஶதை: கியத்³பி:⁴ ॥ 13 ॥

கோடி கோடி கோடி கோடி மாந்தரில் ஒருவரே
தேடி தேடி தேடி தேடி தேடியுண்மை அறிவரே
கூடி கூடி கூடி கூடி வந்த கர்மம் தீரவேண்டுமே
வாடி வாடி வாடி வாடி வாடிபோகும் வார்த்தையே

காலே மஹத்யநவதா⁴வபதந்க்வதா³பி
க்வாப்யந்திமே ஜநுஷி கோঽபி க³திம் லபே⁴த ।
இத்த²ம் ஸமர்த²நவிதி:⁴ பரமாக³மாநாம்
பர்யாயஸூக்திவித⁴யா நயநம் நஞர்தே² ॥14 ॥

பிறவியும் பல எடுத்து பந்த பாசம் தொலத்துமே
அறநிலை தானெடுத்து அறிவுநிலை நிலைத்துமே
பிறவி ஒன்று கடைசியில் பரகதி கிடைக்குமெனில்
என்று தான் ஈடேற்றம் எனக்குபுரிய வில்லையே

ஏகாபவர்க³ஸமயே ஜக³தோঽபவர்க:³
ஸர்வாபவர்க³ஸமயே புநரஸ்தஶங்க: ।
ஈத்³ருʼக்³வித⁴ம் கமபி பக்ஷமிஹாவலம்ப்³ய
ஸ்தா²தும் ஸுக²ம் க்ஷமமநேவ பதா² ப்ரவ்ருʼத்தை: ॥ 15 ॥

பிரளயம் வந்த போதிலே பரகதி கிடைக்குமென்று
தரணியில் உள்ள மாந்தர் சாதனைக்கு ஏதுவோ
நரனரும் இந்த வாதம் நாளும் செய்கின்றாரே
பரபரக்கும் மானிடா பந்தநீக்கிக் கொள்ளடா

அப்⁴யஸ்ய வேத³மவதா⁴ர்ய ச பூர்வதந்த்ர-
மாலக்ஷ்ய ஶிஷ்டசரிதாநி ப்ருʼத²க்³விதா⁴நி ।
அத்⁴யாபநாதி³பி⁴ரவாப்ய த⁴நம் ச பூ⁴ரி
ஶர்மாணி மாதரலஸா: கத²மாசரேயு: ॥ 16 ॥

சாத்திரம் பல கற்றோர் பாரினிலே உள்ளனர்
காத்திரமாய் உடல்வளர்க்க கற்றவித்தை தேறுமோ
மாத்திரபோது உந்தன் மலர்ப்பதம் மனம்வைத்திடில்
கோத்திரமும் வளர்ந்திடும் கொண்டவித்தை பயனுறும்

ஆயஸ்ய தாவத³பி கர்ம கரோது கஶ்சி-
த்தேநாபி மாதரதி⁴கம் கிமிவாநுபா⁴வ்யம் ।
அஸ்தே ஸுக²ம் ய இஹ பா⁴ரதவர்ஷஸீம-
ந்யாஸ்தே ஸ கிஞ்சிதி³த உத்தரதோঽபஸ்ருʼத்ய ॥ 17 ॥

வேத வழி பேணுவோர்க்கு பலன்பல உள்ளது வடக்கினிலே
காததூரம் கடந்து நிற்பர் கோரும் இன்பம் வடக்கினிலே
போதம் கொள்ளும் பலனை அடைய இங்கே இன்றே போதுமப்பா
எதற்கு சுவர்க்கம் செல்வோமோ இங்கே அந்த பலனிருக்க

கர்ம த்யஜேம யதி³ நூநமத:⁴ பதேம
யத்³யாசரேம ந கதா³பி ப⁴வம் தரேம ।
கர்ம த்யஜேதி³தி சரேதி³தி ச ப்ரவ்ருʼத்தா:
பா⁴வேந கேந நிக³மா இதி ந ப்ரதீம: ॥ 18 ॥

கர்மா செய்தால் பிறப்பெடுத்து பலனை அடைய வேண்டுமன்றோ
கர்மா விட்டால் நரகம்தான் காட்டும் வேதம் அறிவுரையாய்
கர்மா தன்னை விடுவோமோ கர்மா தன்னை வழுவோமோ
புரியவில்லை மனதிற்கு போகும் வழியை பார்ப்பதற்கு

கர்மண்யகர்மவிதி⁴ரேஷ யதா³சரந்தி
கர்மாணி தத்தத³நுப³ந்த⁴ஜிஹாஸயேதி ।
ஸத்யம் ததா²ப்யபி⁴நவோ ப⁴விதா ந ப³ந்த:⁴
ப்ராசீநப³ந்த⁴ஹரணே க இவாப்⁴யுபாய: ॥ 19 ॥

பலனை விட்டு கர்மா செய்தால் பிறவி பின்னர் வாருமோ
மூலமான முந்தி பிறவி கர்மா பலமும் துரத்தி வாருமே
நிலவுலகில் நாம் செய்யும் கர்ம பலனை கூட்டுமே
பலனை விட்டு செய்யவோ பலனை விடுத்தது செய்யவோ

ப்ராரப்³த⁴கர்ம கியதா³ரப⁴தே கியத்³வா
ப்ராரப்ஸ்யதே கியதி³த³ம் க இவாவத⁴த்தாம் ।
கால: கியாநிவ மயா ப்ரதிபாலநீயோ
யஸ்ய க்ஷணார்த⁴மபி கல்பஶதத்வமேதி ॥ 20 ॥

ஆராய்ச்சி செய்து முன்னர் பிறவி கணக்கை காணவோ
பிறவி தோறும் தொடர்ந்து வரும் கர்மா என்ன ஆவது
பரபரப்பாய் ஒரு க்ஷணமும் பல யுகமாய் ஆனதே
உறவு நீ அன்னையே எந்தன் கவலை அகற்றுவாய்

பும்ஸ: க்ஷணார்த⁴மபி ஸம்ஸரணாக்ஷமஸ்ய
ஸாங்க்²யாத³ய: ஸரணயோ ந விஶந்தி கர்ணம் ।
ஸங்க்²யாய கா³ங்க³ஸிகதா: ஸகலாஶ்ச ஸூக்ஷ்மா
பு⁴ங்க்ஷ்வேதி வாகி³வ மஹாக்ஷுத⁴யார்தி³தஸ்ய ॥ 21 ॥

இப்போமோக்ஷம் வேணுமென்ற வேட்கை தோணும் மனிதர்க்கு
இப்போதிந்த கங்கை மணலை எண்ணி நீர்குடிப்பாய் என்றுமே
ஒப்புவித்தால் ஆகுமோ எங்கோ ஓடி விட தோணுதே
தப்பாதிந்த அரை க்ஷணத்தில் தந்துவிடு மோக்ஷத்தை

ப⁴க்திஸ்து கா யதி³ ப⁴வேத்³ரதிபா⁴வபே⁴த³-
ஸ்தத்கேவலாந்வயிதயா விப²லைவ ப⁴க்தி: ।
ப்ரீதிஸ்த்வயி த்ரிஜக³தா³த்மநி கஸ்ய நாஸ்தி
ஸ்வாத்மத்³ருஹோ ந க²லு ஸந்தி ஜநாஸ்த்ரிலோக்யாம் ॥ 22 ॥

பக்தி என்னும் அன்பு இல்லா பாரில் இடம் உள்ளதோ
தக்க வைப்பார் தன்னிடம் தரணி மாந்தர் தயையையும்
விக்கல் வந்தால் தண்ணியை வாரி குடிக்க வேணுமே
எந்த பக்தி பரா பக்தி யானும் அறிய வில்லையே

ஆத்மா ஸமஸ்தஜக³தாம் ப⁴வதீதி ஸம்ய-
க்³விஜ்ஞாய யத்³விதநுதே த்வயி பா⁴வப³ந்த⁴ம் ।
ஸா ப⁴க்திரித்யபி⁴மதம் யதி³ ஸித்³த⁴மிஷ்டம்
வ்யர்த²ம் விஶேஷ்யமலமஸ்து விஶேஷணம் ந: ॥ 23 ॥

அன்பு உன்னில் வைத்திட்டேன் அதுவே பக்தி என்றிட்டால்
ஞானம் என்ற பெயரதற்கு நூலும் வைத்து விட்டதே
கனகனக்கும் சித்கனம் சிந்தையில் தோன்றுதே (அந்த)
ஞானம் போதுமே வீணில் வேறு வேண்டுமோ சாதனை

ஸ்வாத்மேதரத்வமவதா⁴ர்ய பரத்வபு³த்³த்⁴யா
யத்ப்ரீயதே கு³ருஜநேஷ்விவ ஸைவ ப⁴க்தி: ।
ஸ்யாதே³ததே³வமியமேவ து மே ஜிஹாஸ்யா
த்³வைதப்⁴ரமாத்கிமதி⁴கம் ப⁴வப³ந்த⁴மூலம் ॥ 24 ॥

ஜீவன் வேறு பிரம்மம் வேறு அதிலே பக்தி வைஎன்றால்
நமது கொள்கை துவைதமாய் நாட்டில் பேசி நிற்பரே
பாவத்தை நீக்கும் பரமது என்னில் வேறாய் ஆனதோ
சிவத்தை என்னில் காண்பதே எமது கொள்கை ஆகுமே

ஸேவைவ ப⁴க்திரிதி கர்மபத²ப்ரவேஶ:
ஸேவ்யப்ரஸாத³ப²லகா கில கர்மஸேவா ।
த்⁴யாநப்ரவாஹ இதி சேச்ச்²ரவணாத் த்ருʼதீய:
ப்ராகே³வ மாதரயமாகலிதோঽப்⁴யுபாய: ॥ 25 ॥

வேலை செய்தால் கூலியை வேந்தரும் கொடுப்பரே
காலை மாலை பூஜைக்கு கடவுள் பலன் தருவரே
மேலாய் தியானம் செய் என்றால் அதுவும் ஞான பெயரதே
கேளாய் மனமே ஞானமே குவலயத்தில் உயர்ந்தது

அத்ரைவ தா³ஸ்யஸி விமுக்திமதா²பி யாசே
மாத: ஶரீரபதநம் மணிகர்ணிகாயாம் ।
அஸ்து ஸ்வக்ருʼத்யமநுகம்பநமீஶ்வராணாம்
தா³ஸஸ்ய கர்மகரதைவ ததா² ஸ்வக்ருʼத்யம் ॥ 26 ॥

இருந்த இடத்தில் முக்தியை இறைவி நீயும் கொடுப்பவள்
இருந்தபோதும் என்மனம் காசிபோய் கங்கையில் கரைவதே
வருந்தி கர்மம் செய்வதே வேலைக்காரர் தன்மையே
பொருந்தி வந்து என்னிடம் கூலி தன்னை கொடுப்பையே

ஸத்³யோ ப⁴வேத்ஸுக்ருʼதிநாமுபதே³ஶலாப:⁴
பாபாத்மநாம் ப³ஹுதிதே² ஸமயே வ்யதீதே ।
இத்யாதி³பி:⁴ கில புராணவசோபி⁴ரம்ப³
வாராணஸீமபி ந யாசிதுமுத்ஸுகோঽஸ்மி ॥ 27 ॥

காசி செல்ல வேண்டுமெனில் கோடி புண்யம் வேண்டுமே
ஆசைகொண்டு விட்டாலும் நானோ பாபம் செய்கிறேன்
கேசம் தன்னை முடிந்து நானும் அந்த ஆசை துறந்தேனே
வேஷம் கலைத்து எனக்குமே உன்னருளை செய்வையே

ஆக்ராந்தமந்தரரிபி:⁴ மத³மத்ஸராத்³யை:
கா³த்ரம் வலீபலிதரோக³ஶதாநுவித்³த⁴ம் ।
தா³ரை: ஸுதைஶ்ச க்³ருʼஹமாவ்ருʼதமுத்தமர்ணை:
மாத: கத²ம் ப⁴வது மே மநஸ: ப்ரஸாத:³ ॥ 28 ॥

அகந்தை (அ)சூயை அவ்வளவும் அகத்தினிலே உள்ளது
சகத்தில் உள்ள பிணி அனைத்தும் சரீரத்தில் உள்ளது
அகமுடையாள் பிள்ளை பெண்டிர் அதிகாரம் பறக்குது
அகத்தினிலே குழப்பமே தெளிவு தன்னை தருவையோ

த⁴ந்யா: கதி த்ரிபு⁴வநே பரமோபபா⁴க்³யம்
ஸம்ஸாரமேவ பரமேஶ்வரி பா⁴வயந்த: ।
ஆபா⁴ஸரூபமவபோ³த⁴மிமம் ஸமேத்ய
க்லிஶ்யே கியத்கியத³ஹம் த்வமுநா ப⁴வேந ॥ 29 ॥

உலகமிது இன்பமென்று உலகில் பலர் வாழ்கிறார்
கலக்கமில்லை காட்சியில்லை கர்மம்தன்னை செய்கிறார்
கலகம் செய்யும் மனதின் இயல்பை சற்றுமே அறிகிலார்
சலசலக்கும் என்மனம் ஞானம் தன்னை விரும்புதே

கா ஸம்ஸ்க்ருʼதி: கிமபசாரநிப³ந்த⁴நேயம்
கீத்³ருʼக்³வித⁴ஸ்ய தவ கிம் க்ஷதமேதயேதி ।
ப்ரஶ்நே து நாஸ்மி குஶல: ப்ரதிவக்துமேவ
கே²த³ஸ்து மே ஜநநி கோঽப்யயமேவமாஸ்தே ॥ 30 ॥

சம்சாரம் ஏதுகொல் சஞ்சலங்கள் எதுகொல்
இம்மட்டோ துயரங்கள் இதன் விடை அறிகிலேன்
கம்மென்று இருக்கவோ எந்தன் மனம் துயரிலே
அம்மை உன்னை நினைக்கிறேன் அனுக்ரகம் செய்வையே

ஏவம் க³தஸ்ய மம ஸாம்ப்ரதமேதத³ர்ஹ-
மத்ரேத³மௌபயிகமித்த²மித³ம் ச ஸாத்⁴யம் ।
அஸ்மிந்ப்ரமாணமித³மித்யபி போ³த்³து⁴மம்ப³
ஶக்திர்ந மே பு⁴வநஸாக்ஷிணி கிம் கரோமி ॥ 31 ॥

உலகத்தின் சாட்சியே உமையம்மை நீயலோ
கலகம்செய்யும் என்மனம் கருத்தொன்றில் இல்லையே
விலகலாமோ வேண்டலாமோ வேறேதும் புரியலை
அலையும் எந்தன் உள்ளத்தை ஆதி உன்னில் வைத்திட்டேன்

ந ஜ்ஞாயதே மம ஹிதம் நிதராமுபாயோ
தீ³நோঽஸ்மி தே³வி ஸமயாசரணாக்ஷமோঽஸ்மி ।
தத்த்வாமநந்யஶரண: ஶரணம் ப்ரபத்³யே
மீநாக்ஷி விஶ்வஜநநீம் ஜநநீம் மமைவ ॥ 32 ॥

வேறேதும் கதியிலை வேண்டக்கூட வழியிலை
கூறஉகந்த உபாயமும் காட்ட ஓர் துணையிலை
மாறும் இந்த மனத்தினை மாற்றிட முயல்கிறேன்
கூற்றை மாற்றும் மீனாக்ஷி கூட வந்து அருள்வையே

கிஞ்சிந்மயா ஶ்ருதிஷு கிஞ்சிதி³வாக³மேஷு
ஶாஸ்த்ரேஷு கிஞ்சிது³பதே³ஶபதே²ஷு கிஞ்சித் ।
ஆக்⁴ராதமஸ்தி யத³தோ ப⁴வதீம் வரீதும்
கோ³ப்த்ரீதி காசிது³த³பத்³யத பு³த்³தி⁴ரேஷா ॥ 33 ॥

கொஞ்சம் வேதம் சுருதிகளும் ஆகமாதி சூத்ரமும்
அஞ்சி அஞ்சி அறிந்ததால் அறிந்தேன் உன்னை அன்னையே
அஞ்சிடாத அபயத்தை அருள்வாய் என்று அறிந்தனே
கூற்றின் கொட்டம் தன்னையே கொஞ்சம் அகற்ற வேண்டுமே

ப்³ரஹ்மைவமேவமஹமேஷ ததா³ப்த்யுபாய
இத்யாக³மார்த²விது⁴ரா: ப்ரத²மே த³யார்ஹா: ।
த்வத்³ரக்ஷகத்வகு³ணமாத்ரவிதோ³ த்³விதீயா
இத்யர்த²யே ஸத³தி⁴கார நிரூபணாய ॥ 34 ॥

பிரமமேது ஞானமேது எதுவும் அறியார் இருப்பரே
தரத்தில் நானும் குறைந்தவன் தாயுன்னை அறிந்தவன்
கரத்தைக் காட்டி கருணை செய்வாய் காப்பதில்நீ சிறந்தவள்
மரத்தை போன்ற என்மனத்தை மாற்றிநீ அமைப்பவள்

மாதா கரோஷி மமதாம் மயி யாவதீ³ஶ-
த்தாவத்³யதே மம தத: கிமிவாஸ்தி ஸாத்⁴யம் ।
மாமித்த²மித்த²முபயுங்க்ஷ்வ ந விஸ்மரேதி
கிம் ஸ்வாமிநம் த்வரயதே க்வசந ஸ்வப்⁴ருʼத்ய: ॥ 35 ॥

எனக்கு நீ உனக்கு நான் இந்த மட்டும் போதுமே
எனக்கு இந்த வேலையை தருவாய் என்று கூறுதல்
இனத்திலே அடுக்குமோ இந்த உலகு ஒப்புமோ
சனத்தில் நான் வேலைக்காரன் செப்புவது இல்லையே

த்யாஜ்யம் த்யஜாநி விஹிதம் ச ஸமாசராணி
நித்யேஷு ஶக்திமநுருத்⁴ய ஹு வர்திதவ்யம் ।
தத்³பு³த்³தி⁴ஶக்திமநுருத்³த்⁴ய ந கார்யஶக்தி-
மித்யேததே³வ து ஶிவே விநிவேத³யாமி ॥ 36 ॥

விடுவதை விட்டனே வேண்டியதை கொண்டனே
அடுத்து உன்னை தினம்தினம் அனுசரித்து நின்றனே
கடுத்த மனம் விடுத்து என்றன் கருத்தைநீ அறிவையே
தொடுத்த புட்பம் சாற்றியே தொண்டனாக இருப்பனே

ஆத்மைவ பா⁴ர இதி தம் த்வயி யோ நித⁴த்தே
ஸோঽங்கா³நி காநி கலயத்வலஸ: ப்ரபத்தே: ।
விஶ்வஸ்ய ஸாக்ஷிணி விலக்ஷணலக்ஷணா யா
விஸ்ரம்ப⁴ஸம்பதி³யமேவ ஸமஸ்தமங்க³ம் ॥ 37 ॥

சரணம் என்று அடைவதில் சாத்திரம்பல இருக்குது
அறியவில்லை எதுவுமே அண்டி உன்னை வந்திட்டேன்
வறியவன் உந்தன் பாதம் வலியவந்து அடைந்திட்டேன்
சரணம் என்று அடைவதே அசக்தன் என்றன் சக்தியே

த்வத்ப்ரேரணேந மிஷத: ஶ்வஸதோঽபி மாத:
ப்ராமாதி³கேঽபி ஸதி கர்மணி மே ந தோ³ஷ: ।
மாத்ரைவ த³த்தமஶநம் க்³ரஸத: ஸுதஸ்ய
கோ நாம வக்ஷ்யதி ஶிஶோரதிபு⁴க்திதோ³ஷம் ॥ 38 ॥

மூச்சும் பேச்சும் விடுக்கிறேன் மூலம் என்பது நீயலோ
துச்சமான செயலை செய்ய தாயும் நீ விடுவையோ
நிச்சயம் நானுண்ணும் உணவு நீ தந்ததே
மிச்சமின்றி உண்பது மாதா உந்தன் செயலதே

முக்திம் நிஷாத⁴யிஷதாம் நிஜயைவ பு³த்³த்⁴யா
ப்ராரப்³த⁴கர்ம ப⁴வது ப்ரதிப³ந்த⁴ஹேது: ।
த்வாமேவ ஸாத⁴நதயாபி ஸமாஶ்ரிதாநாம்
துல்யம் தத³ம்ப³ யதி³ கஸ்தவ வீரவாத:³ ॥ 39 ॥

உச்சத்தில் நிற்கும் ஞானி மிச்ச வினை மீள்வரோ
நிச்சயமாய் உன்னை நம்பும் எனக்கு வினை எங்கனே
அச்சம் ஏதும் இல்லையே அருள நீ இருக்கையில்
துச்சமாம் வினைகளும் தூரதூர ஓடுமே

ப்ராரப்³த⁴கர்ம கி³ரிஜே ப⁴வதா³ஶ்ரிதாநா-
மந்யத்ர ஸங்க்ரமய நாஶய வா ஸமூலம் ।
மர்த்யாஶ்ச க²ல்வபி விஷம் வபுஷி ப்ரஸக்தம்
ஸங்க்ராமயந்தி பரதோঽபி ச நாஶயந்தி ॥ 40 ॥

விடத்தை மாற்றும் வித்தகர் உலகில் பலர் உள்ளனர்
இடத்தை மாற்றி இன்பத்தை எளிதாக செய்பவர்
திடமாய் உன்னை நம்பினேன் தீர்மானம் செய்திடு
சடமான என்னை நீ சின்மயமாய் ஆக்கிடு

த்வத்³த³ர்ஶநஶ்ரவணசிந்தநவந்த³நாதி³-
ஷ்வக்ஷாணி தே³வி விநியுஜ்ய யதா²தி⁴காரம் ।
ரக்ஷேத்யஸங்க்²யப⁴வஸம்ப்⁴ருʼதயைவ மைத்ர்யா
ருந்த்⁴யாம் யதி³ ஸ்தி²ரமமூந்யது⁴நைவ ந ஸ்யு: ॥ 41 ॥

பராசக்தி உன்னை நான் பிறவி பல தொழுதிட்டேன்
தராதரம் பார்த்து என்னை தத்துவத்தில் ஆழ்த்துவாய்
கரத்தினால் பூஜை செய்து புலனைந்தால் போற்றுவேன்
பரபரக்கும் உடலிதை உன் பாதத்தில் கிடத்துவேன்

த்ராதவ்ய ஏஷ இதி சேத்கருணா மயி ஸ்யா-
த்த்ராயஸ்வ கிம் ஸுக்ருʼதது³ஷ்க்ருʼதசிந்தயா மே ।
கர்தும் ஜக³த்திரயிதும் ச விஶ்ருʼங்க²லாயா:
கர்மாநுரோத⁴ இதி கம் ப்ரதி வஞ்சநேயம் ॥ 42 ॥

கருணை உந்தன் மனதிலே வந்து விட்டால் போதுமே
பெரியதான புண்ணியம் நானும் பண்ண வேண்டுமோ
அரியதான அகிலத்தை ஆக்கிகாத்து அழிப்பவள்
அரியதோ என்னை காத்தல் அதையும நீ சொல்வையே

த்வய்யர்பிதம் ப்ரத²மமப்பயயஜ்வநைவ
ஸ்வாத்மார்பணம் வித³த⁴தா ஸ்வகுலம் ஸமஸ்தம் ।
கா த்வம் மஹேஶி குலதா³ஸமுபேக்ஷிதும் மாம்
கோ வாநுபாஸிதுமஹம் குலதே³வதாம் த்வாம் ॥ 43 ॥

அப்பைய தீக்ஷ்தரின் அன்புகுலத்தில் வந்தவன்
எப்போதும் உன்னை போற்றும் எங்கள் குல நாயகி
முப்போதும் போற்றுவேன் மாதா உந்தன் சரணத்தை
இப்போதே அருளுவாய் இக்காரணமே போதுமே

மௌட்⁴யாத³ஹம் ஶரணயாமி ஸுராந்தரம் சே-
த்கிம் தாவதா ஸ்வமபி தஸ்ய ப⁴வாமி மாத: ।
அஜ்ஞாநத: பரக்³ருʼஹம் ப்ரவிஶந்பரஸ்ய
ஸ்வத்வம் ப்ரயாஸ்யதி பஶு: கிமு ராஜகீய: ॥ 44 ॥

அரண்மனை பசுவது அந்தணர் வீட்டில் நுழைந்திட்டால்
அவரின் உரிமை ஆகுமோ அந்த பாலை கறப்பரோ
தவருதலால் உனைவிடுத்து துதிகளை செய்திட்டால்
அந்த தெய்வம் ஆகுமோ எந்தனுக்கு சொந்தமோ

ஆதா⁴ய மூர்த⁴நி வ்ருʼதை²வ ப⁴ரம் மஹாந்தம்
மூர்கா² நிமஜ்ஜத² கத²ம் ப⁴வஸாக³ரேঽஸ்மிந் ।
விந்யஸ்ய பா⁴ரமகி²லம் பத³யோர்ஜநந்யா
விஸ்ரப்³த⁴முத்தரத பல்வலதுல்யமேநம் ॥ 45 ॥

வீணிலே சுமை சுமந்து உடல் வேர்க்கின்ற மூடரே
ஊனிலே உள்ள அன்னை உயர்பதம் போற்றுமே
மானிலத்து குட்டைபோல் தாண்டிடலாம் பிறவியை
ஏனுமக்கு இன்னும் கவலை ஏற்ற தாய் இருக்கையில்

க்வேத³ம் பதிஷ்யதி வபு: க்வ ததோ நு க³ம்யம்
கோ த³ண்ட³யிஷ்யதி கியந்தமநேஹஸம் வா ।
கிம் தஸ்ய ஸந்தரணஸாத⁴நமித்யநந்தா
சிந்தா ஸ்தி²தா த்வயி ஶநைரவதாரிதா ஸா ॥ 46 ॥

சுமக்கும் இந்த சரீரம் சுற்றி எங்கே வீழுமோ
கமகமக்கும் கட்டையில் கரியாய் வெந்துபோகுமோ
அமுக்கும் இந்த கவலைகள் இறக்கி வைத்தேன் உன்னிடம்
அமுதம் தன்னை தந்திடும் அன்னை உன்னை நம்பியே

ஜ்ஞாநம் விஶேயமுத தேந விநோத்³த⁴ரேயம்
ப்ராரப்³த⁴மப்யபலபேயமுதாநுருந்த்⁴யாம் ।
இத்த²ம் ஸக்ருʼத்ப்ரபத³நைகவஶம்வதா³யா
மாதுர்மயி ப்ரவவ்ருʼதே மஹதீஹ சிந்தா ॥ 47 ॥

கவலை உனக்கு வந்தது காலில் நானும் வீழ்கையில்
இவனுக்கிங்கே அருள்வது எப்படி என்று யோசித்தாய்
ஞானத்தினை தருவனோ ப்ராரப்தம் தொலைப்பனோ
தானாய் இந்த கவலைகள் தாயுனக்கு வந்தததே

ஏதஜ்ஜடா³ஜட³விவேசநமேததே³வ
க்ஷித்யாதி³தத்வபரிஶோத⁴நகௌஶலம் ச ।
ஜ்ஞாநம் ச ஶைவமித³மாக³மகோடிலப்⁴யம்
மாதுர்யத³ங்க்⁴ரியுக³ளே நிஹிதோ மயாத்மா ॥ 48 ॥

சிவஞானம் வந்தபின் சக்தி உந்தன் சரணமே
பவநோய்கள் தீரவே படித்ததின் பயனுமாம்
தவதவமாய் செய்ததன் தார்மீக பலனதே
உவந்து நீ அருள்வையே உந்தன்காலில் சேருவேன்

ஷட்த்ரிம்ஶதா³வரணமத்⁴யஜுஷி த்வத³ங்க்⁴ரௌ
ஹாலாஸ்யநாத²த³யிதே நிஹிதோ மயாத்மா ।
பூ⁴பு⁴தலத்ரிதி³வவர்திஷு க: க்ஷமேத
தச்சக்ஷுஶாதி³ நிப்⁴ருʼதேந நிரீக்ஷிதும் மாம் ॥ 49 ॥

முப்பத்தி ஆறிலே மூழ்கி நிற்கும் உன்னிலே
தப்பித்து வந்த நான் எனதான்மாவை வைத்திட்டேன்
இப்போது என்னை யாரும் தன் கண்ணால் பார்ப்பரோ
செப்பும் எந்தன் நாவிலே ஸரஸ்வதிநீ நிற்பையே

ப³ந்த⁴ம் ஹரிஷ்யஸி ஸுக²ம் விதரிஷ்யஸீதி
நிஶ்சப்ரசம் நிகி²லமம்ப³ ததா³ஸ்த ஏவ ।
ஸம்ப்ரத்யஹம் த்வயி நிதா⁴ய ப⁴ரம் ஸமஸ்தம்
யாநிர்வ்ருʼணோமிகிமிதோঽபி மமாபவர்கே³ ॥ 50 ॥

சரணம் என்று உனை அடைந்தேன் உண்மையே
வரவிருக்கும் வீட்டிலே வந்த ஆசை போனதே
சரசரக்கும் புடவையில் சக்தி உன்னை காண்பனே
மரத்து போன மேனி போல் எந்தன் மனம் ஆனதே

காஶ்யாம் நிபாதய வபு: ஶ்வபசாலயே வா
ஸ்வர்க³ம் நய த்வமபவர்க³மதோ⁴க³திம் வா ।
அத்³யைவ வா குரு த³யாம் புநராயதௌ வா
க: ஸம்ப்⁴ரமோ மம த⁴நே த⁴நிந: ப்ரமாணம் ॥ 51 ॥

காசியிலே மரிக்கவை, சேரியிலே மரிக்கவை,
முத்தியினை கரத்தில் தா, அதோகதியில் தள்ளிடு
இன்றே உன் அருளைத்தா, என்றுமில்லை என்றுகூறு
உன்றன் சொத்து நானலோ உனக்கே உரிமை அல்லவோ

நாஹம் ஸஹே தவ கதா²ஶ்ரவணாந்தராயம்
நாஹம் ஸஹே தவ பதா³ர்சநவிச்யுதிம் வா ।
மோக்ஷம் தி³ஶைதத³விருத்³த⁴மித³ம் ந சேத்யா-
ந்நைவாஸ்து மாதரபவர்க³மஹோபஸர்க:³ ॥ 52 ॥

உந்தன் துதி செய்ய வேண்டும் உந்தன் பாதத்தில்
சந்ததமும் சாற்ற வேண்டும் சரணத்தில் பூவினை
இந்தநிலை மாற்றி உனக்கு முக்தி தருகிறேன் என்றால்
வேண்டாம் வேண்டாம் அந்த முக்தி வேண்டவேவேண்டாம்

ஆசூட³மாசரணமம்ப³ தவாநுவார-
மந்த:ஸ்மரந்பு⁴வநமங்க³ளமங்க³மங்க³ம் ।
ஆநந்த³ஸாக³ரதரங்க³பரம்பராபி⁴-
ராந்தோ³லிதோ ந க³ணயாமி க³தாந்யஹாநி ॥ 53 ॥

பாதாதி கேசம் வரை உன்னை பார்த்திட்டேன்
வேதாதிகள் கூறும் விழுபொருளன்றோ
நாட்கள் பல போனதம்மா நான் மறந்திட்டேன்
காட்சியதை காண்பதுவே எந்தன் கடமையே

பாஷாணதோঽபி கடி²நே ஶிரஸி ஶ்ருதீநாம்
ப்ராய: பரிக்ரமவஶாதி³வ பாடலாப⁴ம் ।
அம்ப³ ஸ்மரேயமம்ருʼதார்ணவமாத²லப்³த⁴-
ஹைய்யங்க³வீநஸு குமாரமித³ம் பத³ம் தே ॥ 54 ॥

வேதத்தின் சிகைஎதுவோ மிக கடினமானது
பாதத்தை வைப்பதனால் சிவந்து போனது
சீதளமாம் உந்தன் பாதம் சிரசில் வைக்கிறேன்
ஆதரவு எனக்கு எங்கு வேறு ஒன்றிலை

யே நாம ஸந்தி கதிசித்³கு³ரவிஸ்த்ரிலோக்யாம்
தேஷாமபி ஸ்வயமுபேதவதா கு³ருத்வம் ।
பாதே³ந மூர்த்⁴நி வித்⁴ருʼதேந வயம் தவாம்ப³
ஸம்ஸாரஸாக³ரமிமம் ஸுக²முத்தராம: ॥ 55 ।

முனிகணங்கள் மும்மூர்த்தி மேவும் தேவர்கள்
அனைவருமே உந்தன் சரணம் அடிபணிவோர்கள்
நானும் அதை சிரம் தரித்தேன் நாதரூபமே
ஊனில் உண்மை கண்டபின்னர் பிறவி வாருமோ

ஸாதா⁴ரணே ஸ்மரஜயே நிதிலாக்ஷிஸாத்⁴யே
பா⁴கீ³ ஶிவோ ப⁴ஜது நாம யஶ: ஸமக்³ரம் ।
வாமாங்க்⁴ரிமாத்ரகலிதே ஜநநி த்வதீ³யே
கா வா ப்ரஸக்திரபி காலஜயே புராரே: ॥ 56 ॥

காமன் தன்னை எரித்த கண்கள் இருவருக்கும் பொதுவிலே
ஆமாம் அந்த புகழனைத்தும் சிவன் அவர்க்கு போனதே
கொதித்து கூற்றை உதைத்தபாதம் இடதுஉனக்கு மட்டுமே
விதியை மாற்றும் வித்தை என்றும் உனக்குமட்டும் உரியதே

ஸ்யாத்கோமலம் யதி³ மநோ மம விஶ்வமாத:
தத்பாத³யோர்ம்ருʼது³லயோஸ்தவ பாது³காঽஸ்து ।
ஸ்யாத்கர்கஶம் யதி³ கரக்³ரஹணே புராரே:
அஶ்மாதி⁴ரோபணவிதௌ⁴ ப⁴வதூபயோக:³ ॥ 57 ॥

எந்தன் மனம் மிருதுவானால் என்றும் உந்தன் பாதுகை
அந்தவிதம் அதுவும் இல்லை அடிக்கல் என்று கூறினால்
பரசிவனை மணந்தபோது அம்மிக்கல்லாய் ஆகட்டும்
தரமெதுவும் இல்லைஎன்று தள்ள வழி இல்லையே

ப்ரஸ்நிக்³த⁴முக்³த⁴ருசிபாத³தலே ப⁴வத்யா
லக்³நம் த்³ருʼட⁴ம் யதி³ஹ மே ஹ்ருʼத³யாரவிந்த³ம் ।
ஏஷைவ ஸாக்³ரபு⁴வநத்³விஶதீபதித்வ-
ஸாம்ராஜ்யஸூசநகரீ தவ பத்³மரேகா² ॥ 58 ॥

எந்தன் மனம் தாமரை உன் பாதம் தனக்கு பாதுகை
அந்த பத்மம் ரேகையாய் உந்தன் பதத்தில் ஆனது
பத்மரேகை கொண்டதால் சக்ரவர்த்தியானாய் நீ
சுத்தமான என்மனத்தில் சூக்குமமாய் நிற்பையே

அப்ராக்ருʼதம் ம்ருʼது³லதாமவிசிந்த்ய கிஞ்சி-
தா³லம்பி³தாஸி பத³யோ: ஸுத்³ருʼட⁴ம் மயா யத் ।
தந்மே ப⁴வார்ணவநிமஜ்ஜநகாதரஸ்ய
மாத: க்ஷமஸ்வ மது⁴ரேஶ்வரி பா³லக்ருʼத்யம் ॥ 59 ॥

பிறவிக்கடல் தன்னிலே என்றும் தத்தளித்து நிற்கிறேன்
உறவாய் உந்தன் பாதத்தை இறுக்கி நானும் பிடிக்கிறேன்
பூவாய் விளங்கும் பாதத்தை பிடிக்கும் பாரம் பொறுத்துகொள்
நாவாய் போல கடத்துவேன் நானும் பிறவிக் கடலினை

யத்ராநமந்பஶுபதி: ப்ரணயாபராதே⁴
மந்த³ம் கில ஸ்ப்ருʼஶதி சந்த்³ரகலாஞ்சலேந ।
புஷ்பார்சநேঽபி ம்ருʼதி³தம் பத³யோர்யுக³ம் த-
ந்மாதஸ்துத³ந்தி ந கத²ம் பருஷா கி³ரோ மே ॥ 60 ॥

பரசிவனும் பணிகிறார் அவர் சிரச்சந்திரன் தொடுகிறான்
நாரதாதி முனிவர்கள் நல்ல புட்பம் சாற்றுறார்
கரடுமுரடு சொற்களால் நானும் உன்னை துதிக்கிறேன்
முரட்டு எந்தன் வார்த்தையால் மெலிய பாதம் நோகுமோ

அவ்யாஜஸுந்த³ரமநுத்தரமப்ரமேய-
மப்ராக்ருʼதம் பரமமங்க³ளமங்க்⁴ரிபத்³மம் ।
ஸந்த³ர்ஶயேத³பி ஸக்ருʼத்³ப⁴வதீ த³யார்த்³ரா
த்³ரஷ்டாஸ்மி கேந தத³ஹம் து விலோசநேந ॥ 61 ॥

பதயுகத்தை காணவே பரம கருணை செய்குவாய்
ப்தயுகத்தை எந்தன் கண்கள் பார்த்திடவே இயலுமோ
இதர வஸ்து காணவே இந்த கண்கள் இயலுமே
பதயுகத்தை காணவே பெரிய கண்கள் வேண்டுமே

தி³வ்யா த்³ருʼஶோঽபி தி³விஷத்³க்³ரஹணோசிதாநி
வஸ்தூநி காமமவதா⁴ரயிதும் க்ஷமந்தே ।
த்வந்மாத்ரவேத்³யவிப⁴வே தவ ரூபதே⁴யே
த்வத்³பா⁴வ ஏவ ஶரணம் பரிஶேஷிதோ ந: ॥ 62 ॥

திவ்ய கண்கள் தந்தாலும் தோற்றம் காண வழியிலை
தேவரும் காணா உந்தன் தேஜஸ் கண்கள் அறியுமோ
சாரூப்யம் ஆனபோதே உன்சொருபம் தெரியுமே
பேறாம் அபேதம் ஆனபின் உந்தன் பாதம் தெரியுமே

அஸ்மிந்மஹத்யநவதௌ⁴ கில காலசக்ரே
த⁴ந்யாஸ்து யே கதிபயே ஶுகயோகி³முக்²யா: ।
லீநாஸ்த்வத³ங்க்⁴ரியுக³ளே பரிஶுத்³த⁴ஸத்வாந்
தாநாத்மநஸ்தவ நகா²நவதா⁴ரயாம: ॥ 63 ॥

சுகரைபோன்ற முனிவர்கள் சொரூபத்தில் லயிப்பரே
நகங்கள் உனக்கு ஆவரே நன்றாய் ஜொலிப்பதாகுமோ
சகஜ நிலை நின்றிட சொரூப ஞானம் தேறுமே
சக்ர கதியாம் வாழ்விது சகஜ யோகம் ஆகுமே

ஆ ஶைஶவாந்மமதயா கலிதஸ்த்வயாஸா-
வாந்ருʼண்யமம்ப³ தவ லப்³து⁴மநா ம்ருʼகா³ங்க³க: ।
ஸ்வாத்மாநமேவ நியதம் ப³ஹுதா⁴ விப⁴ஜ்ய
த்வத்பாத³யோர்விநித³தே⁴ நக²ராபதே³ஶாத் ॥ 64 ॥

அமுத நிலை பதினாறும் திங்களின் கதிர்களே
அமுதம் கொடுத்து வளர்த்தது ஆதி உந்தன் ஆற்றலே
அம்மாவை நீ உந்தன் சிரத்தில் தரித்தாய்
அம்மதியும் உந்தன்கை நகமாய் ஆனான்

நாந்த: ப்ரவேஶமயதே கிமபி ஶ்ருதம் மே
நாஸ்திக்யவாத³ஶிலயா ப்ரதிருத்⁴யமாநம் ।
தத்பாதயாம்யஹமிமாம் மஹதீமத⁴ஸ்தா-
த்பாதோ³த³கேந கியதா பரதே³வதாயா: ॥ 65 ॥

நாத்திகம் என்ற கல்லது முட்டுகட்டை போடுமே
பத்திரமாய் எனைக்காக்க பிரவாகமாய் வந்திடு
நாத்திரமாய் சொல்ல எந்தன் நாவுமிங்கு தவறுமே
தோத்திரம் செய்ய என்னை பாத்திரமாய் ஆக்கிடு

ஸந்நாஹிபி:⁴ யமப⁴டை: பரிவார்யமாணே
மய்யர்ப⁴கே கருணயா ஸ்வயமாபதந்த்யா: ।
ஆகர்ணயேயமபி நாம விராமகாலே
மாதஸ்தவாங்க்⁴ரிமணிநூபுரஶிஞ்ஜிதாநி ॥ 66 ॥

யமதூதர் வரும் சமயம் எனக்கு முன்னே வந்திடு
மணிமணியாய் கோர்த்த உந்தன் சிலம்பு சத்தம் கேட்கவே
மகன் எந்தன் மனதினை மாதா நீ அறிவையே
அந்தகன் வருகையில் அருகிலே வந்திடு

ப்³ரஹ்மேஶகேஶவமுகை²ர்ப³ஹுபி:⁴ குமாரை:
பர்யாயத: பரிக்³ருʼஹீதவிமுக்ததே³ஶம் ।
உத்ஸங்க³மம்ப³ தவ தா³ஸ்யஸி மே கதா³ த்வம்
மாத்ருʼப்ரியம் கில ஜட³ம் ஸுதமாமநந்தி ॥ 67 ॥

உனக்கு பல பிள்ளைகள் உலகிலே உண்டலோ
அன்னை செல்ல பிள்ளையவன் அறிவிலே குறைந்தவன்
என்னைப்போல மூடனும் இந்த உலகில் இல்லையே
உனக்குகந்த பிள்ளைநான் எனக்கருள் செய்வையே

ஊரௌ ஶிரஸ்தவ நிவேஶ்ய த³யாவிதீர்ண-
ஸம்வ்யாநபல்லவஸமீரவிநீதகே²த³ம் ।
அத்ரைவ ஜந்மநி விபோ:⁴ பரமோபதே³ஶ-
மாகர்ணயேயமபி கிம் மணிகர்ணிகாயாம் ॥ 68 ॥

காசிவிச்வநாதர் அவர் காதிலோதும் மந்திரம்
கிடைக்குமோ கிடைக்குமோ என் அந்தியில்
புடவை தலைப்பால் வருடி யுந்தன்
தொடையிலே அமர்த்தி அருள் செய்வையே

காஞ்சீகு³ணக்³ரதி²தகாஞ்சநசேலத்³ருʼஶ்ய-
சண்டா³தகாம்ஶுகவிபா⁴பரபா⁴க³ஶோபி⁴ ।
பர்யங்கமண்ட³லபரிஷ்கரணம் புராரே:
த்⁴யாயாமி தே விபுலமம்ப³ நிதம்ப³பி³ம்ப³ம் ॥ 69 ॥

காஞ்சிதாம்மா உந்தன் ஊர் கடிதேசம் சோபிக்கும்
வாஞ்சிதத்தை அருளுகின்ற வேதமுதல் வாக்கியம்
கொஞ்சியே சிவனும் பேசும் நிதம்பத்தின் மண்டலம்
அஞ்சலென்று அருளுவாய் உன்னை நான் வணங்குவேன்

க³ர்பே⁴ நிவேஶ்ய பு⁴வநாநி சதுர்த³ஶாபி
ஸம்ரக்ஷிதும் கலிதநிஶ்சிதயா ப⁴வத்யா ।
ப்ராகாரமேவ ரசிதம் பரிதோঽபி நூந-
மூஹே ஸுவர்ணமயமேது³ரபட்டப³ந்த⁴ம் ॥ 70 ॥

இடைதரித்த ஒட்டியாணம் என்னவென்று தெரியுமா
இடையிலே நிற்கின்ற நல்ல சுவர் என்பனே
உந்தன் வயிறு உள்ளேதான் உலகம் முழுதும் உள்ளது
அதனைக் காக்கும் மதில்சுவர் உந்தன் ஓட்டியாணமே

முக்தாஶ்ச க²ல்வபி யதி³ த்ரிபுரே ப⁴வத்யா:
ஸ்தந்யாஶயா ஸ்தநதடம் ந பரித்யஜந்தி ।
அஸ்மாகமுத்³ப⁴டப⁴வஜ்வரதாபிதாநா-
மார்த்³ரீப⁴வந் து வத³நாநி குதோ ந ஹேதோ: ॥ 71 ॥

உந்தன் மார்பில் முத்தால் செய்த மாலைகள்
அனைத்து முத்தும் அந்த முக்தர்கள்
எனக்கும் வேண்டும் அன்னிலைகள்
ஞானத்தாய்ப்பால் அருந்திடுவேன்

நஷ்டோபலப்³த⁴மதி⁴க³த்ய ஶிஶும் சிராந்மாம்
வாத்ஸல்யவித்³ருதஹ்ருʼத:³ பரதே³வதாயா: ।
க்லித்³யத்பயோத⁴ரவிநி:ஸ்ருʼதது³க்³த⁴பி³ந்து³-
நிஷ்யந்த³பங்க்திரிவ தீ³வ்யதி ஹாரயஷ்டி: ॥ 72 ॥

கெட்டலைந்து நான் இனி நன்றானேன்
கிட்டவந்தால் தாய் பால் சுரக்கும்
முத்து மாலையாய் நானிருப்பேன்
சத்தாம் தாய்ப்பால் குடித்திடுவேன்

யத்தத்³த⁴நுர்ஜநமநோமயமைக்ஷவம் தே
தஸ்யாஸ்து தே³வி ஹ்ருʼத³யம் மம மூலதே³ஶ: ।
சாபாதி⁴ரோபணவிதௌ⁴ சரணாஞ்சலேந
ஸம்பா⁴வ்யதே கில ஸமாக்ரமணம் கதா³சித் ॥ 73 ॥

உந்தன் கையில் இருப்பதுவோ ஜீவர் மனமாம் கரும்புவில்
எந்தன் மனதை உன்னடி வைத்தேன் ஏனென்றால்
நாணை ஏற்றும்போதினிலே உந்தன் காலடி என்மீது
பற்றி நிற்கும் பதத்தையே பாங்காய் நானும் விரும்புகின்றேன்

ஆஸ்தா²ய தா³ருணதரம் கமபி ஸ்வபா⁴வ-
மத்யந்தது³ஷ்க்ருʼதக்ருʼதாமபி ஶிக்ஷணாய ।
க்³ருʼஹ்ணாஸி ஸாயகபதே³ குஸுமாந்யமூநி
மாத: ஸுதேஷு மஹதீ கில ரூக்ஷதேயம் ॥ 74 ॥

தவறு செய்யும் பிள்ளைக்கு தண்டனை தன்னை தருபவளாம்
துயருராத புஷ்பபாணம் தாயவள் தனது கைக்கொண்டாள்
அயர்வுரும் நம்புலன்கள் அவளிடம் ஆயுதம்
தயவு கொண்ட தாயவள் பாணம்வீசி நிற்பளே

பாஶம் ஸ்ருʼணிம் ச கரயோஸ்தவ பா⁴வயந்த:
ஸம்ஸ்தம்ப⁴யந்தி வஶயந்தி ச ஸர்வலோகாந் ।
சாபம் ஶரம் ச ஸக்ருʼத³ம்ப³ தவ ஸ்மரந்தோ
பூ⁴பாலதாம் த³த⁴தி போ⁴க³பதா²வதீர்ண: ॥ 75 ॥

பாசமும் அங்குசமும் பார்வதி கையிலே
நேசமுடன் நினைப்பவர்கள் நாடியது கையிலே கொண்டாள் வில்லும் அம்பும்
கைதொழுவார் பெறுவரே அரசாக்‌ஷி

பாஶாங்குஶௌ தவ கரே பரிசிந்த்ய ராக³-
த்³வேஷௌ ஜயந்தி பரமார்த²வித³ஸ்து த⁴ந்யா: ।
ஏகத்ர சாபமிதரத்ர ஶரம் ச மத்வா
வ்யாவர்தயந்தி ஹ்ருʼத³யம் விஷயாந்த⁴கூபாத் ॥ 76 ॥

பக்திசெய்யும் சான்றொர்கள் பாசஅங்குசம் நினைப்பார்கள்
எக்கணமும்தன் மனந்தனிலே இராகத்வேஷம் துறப்பார்கள்
வில்லும் அம்பும் விவேகிகள் உள்ளம் தன்னில் உவந்தேதான்
அல்லும் பகலும் அலைச்சலுறும் ஆசைதன்னை அழிப்பார்கள்

உத்க்ராந்தமாந்தரமித³ம் ஶரணம் ஜநாநா-
மப்யேதி சந்த்³ரமிதி ஹே ஶ்ருதயோ வத³ந்தி ।
ஆஸ்தாமித³ம் மம து தே³வி மநோঽது⁴நைவ
லீநம் த்³ருʼட⁴ம் வத³நசந்த்³ரமஸி த்வதீ³யே ॥ 77 ॥

மனித மனத்திற்கு அதிபதியாம் ஒளிரும் மதியெனும் மங்களத்தான்
எனக்கோ அம்மதியில்லை மனமும் அவன்கதி அடைவதில்லை
உன்முக மண்டல சந்திரனை என்அகம் தன்னில் வைப்பேனே
பின்னர் வருகின்ற பிறப்பெல்லாம் போதுமென்றெனக்கு அருள்வாயே

வித்³யாத்மநோ ஜநநி தாவகத³ந்தபங்க்தே:
வைமல்யமீத்³ருʼகி³தி வர்ணயிதும் க்ஷம: க: ।
தத்ஸம்ப⁴வா யத³மலா வசஸாம் ஸவித்ரீ
தந்மூலகம் கவியஶோঽபி ததஸ்தராம் யத் ॥ 78 ॥

சுத்தவித்தை வெண்மைபோல் ஒளிரும் உந்தன் பல்வரிசை
வித்தை தனக்கு அதிபதியாம் ஸரஸ்வதி அவளும் வெண்ணிறத்தாள்
கத்த வித்தை கவிஞர்களும் அவரின் கவிதையும் வெண்ணிறமே
உத்தம வெண்மையே உயர்வான அறிவின் குணமே அதை அடைவேன்

ஸ்வச்சா²பி தே வஹதி யத்கில த³ந்தபங்க்தி:
ஸ்வச்ச²ந்த³நிர்த³லிததா³டி³மபீ³ஜஶோபா⁴ம் ।
தந்மே ரஜோவ்யதிகராதி⁴கபாடலிம்நி
சித்தே பரம் பரிசயாதி³தி சிந்தயாமி ॥ 79 ॥

வெற்றிலை சிவப்பாய் உன் பற்கள் மாதுளபழம்போல் ஆகிடுமோ
குற்றம் கொண்ட என்மனமோ இரஜோகுணத்தை அடைந்ததுவே
மற்றதைப் பற்றி கவலையிலை மாதா உன்னை நினைத்திடுவேன்
சற்றே உந்தன் வெண்பற்கள் சிவப்பாய் ஆனதோ என்னினைவால்

அர்த⁴ம் ஜிதத்ரிபுரமம்ப³ தவ ஸ்மிதம் சே-
த³ர்தா⁴ந்தரேண ச ததா² ப⁴விதவ்யமேவ ।
தச்சிந்தயே ஜநநி காரணஸூக்ஷ்மரூப-
ஸ்தூ²லாத்மகத்ரிபுரஶாந்திக்ருʼதே ஸ்மிதம் தே ॥80 ॥

முப்புரம் எரித்தார் புன்சிரிப்பால் உன் பாதி
அப்புறம் இருப்பது மறுபாதி அதுவே உந்தன் புன்சிரிப்பு
அப்புறம் போனது என்முத்தேகம் அதுவே அதற்கு காரணமாம்
எப்புறம் நோக்கினும் தோன்றுவது உந்தன் அழகிய புன்சிரிப்பே

மத்க்லேஶத³ர்ஶநபரித்³ரவத³ந்தரங்க³-
ஹைய்யங்க³வீ நபரிவாஹநிப⁴ம் ஜநந்யா: ।
அந்தஸ்தமோபஹமநுஸ்மரதாம் ஜநாநாம்
மந்த³ஸ்மிதம் பு⁴வநமங்க³ளமஸ்து பூ⁴த்யை ॥ 81 ॥

ஸம்சாரக் கஷ்டத்தில் எந்தன் மனம் உருகுதே
அம்மாவென்றுனை அழைக்க நீயுமதில் உருகுவாய்
சிம்மத்தில் ஏறிவந்து ஜன்மமாயை நீக்கையில்
வம்புசெய்யும் மனமதுவும் நில்லாமல் நீங்குமே

ஸாம்ஸித்³தி⁴காநநஸரோருஹதி³வ்யக³ந்த⁴-
ஸாந்த்³ரீக்ருʼதேந்து³ஶகலாகலிதாதி⁴வாஸம் ।
தாம்பூ³லஸாரமகி²லாக³மபோ³த⁴ஸாரம்
மாதர்விதே⁴ஹி மம வக்த்ரகலாசிகாயாம் ॥ 82 ॥

வாய் மணக்கும் தாம்பூலம் வாசனையும் மணக்குமே
தாய் உந்தன் பிள்ளை நான் என்வாயில் உமிழுவாய்
மாய்கை நீங்கி மங்களத்தை மண்ணிலே அடைந்திட
சேயுந்தன் செய்யுளை செந்தமிழில் ஆக்குவேன்

நாஸாமணிஸ்தவ ஶிவே சிரஸம்ஸ்தவேந
ப்ரத்யாஹ்ருʼதே மநஸி பா⁴தி தபோத⁴நாநாம் ।
அஜ்ஞாநஸந்ததிநிஶாத்யயஸூசநார்த²ம்
ஆவிர்ப⁴வந்த்யஸுரதே³ஶிகதாரகேவ ॥ 83 ॥

முளைதெழுந்த வெள்ளிபோன்ற உன் புல்லாக்கு ஒளியினில்
களைத்திடாத முனிகணங்கள் காட்சியினைப் பெறுவரே
துளைத்திடாமல் துன்ப இருள் தொலைதூரம் போகுமே
திளைத்துனிற்கும் தரணியும் இன்பம் வந்து நிறையுமே

தாம்பூ³லக³ர்ப⁴பரிபு²ல்லகபோலலக்ஷ்ய-
தாடங்கமௌக்திகமணிப்ரதிபி³ம்ப³த³ம்பா⁴த் ।
அஸ்தத்³வயவ்யதிகராமலஸத்வமாத்³யம்
வர்ணம் பி³ப⁴ர்தி ஜட²ரே தவ வக்த்ரபி³ம்ப³ம் ॥ 84 ॥

வெற்றிலைக் குதப்பலால் வீங்கி நிற்கும் கன்னத்தில்
சுற்றி சுற்றி வந்திடும் உன் காதோலை முத்துமே
பற்றி பற்றி கர்ப்பத்தில் பிரகாசிக்கும் ஓமைப்போல்
சற்று தோன்றி சம்சார சாகரத்தை கடத்துமே

த³த்தே ஶ்ரியம் ப³ஹுவிதா⁴ம் குஶலாநி த³த்தே
த³த்தே பத³ம் ஸுரபதேரபி லீலயைவ ।
ஈத்³ருʼக்³விதா⁴ம்ப³ தவ த்³ருʼஷ்டிரிதோঽதி⁴கா வா
நாத்³யாபி கர்ணமதிவர்திதுமீஶ்வரீயம் ॥ 85 ॥

கர்ணன் என்ற ஒரரசன் கொடுப்பதிலே வள்ளலாம்
கர்ணத்தினை தாண்ட உந்தன் விழியினுக்கு இயலுமோ
சொர்ணமான உன்முகம் சொரூப ஞானம் அருளுமே
வர்ணமான வசனங்கள் வாக்கினிலே வாருமே

பாஶாணகூடகடி²ணே ஜநது³ர்விகா³ஹே
வ்யர்த²ம் மஹத்யுபநிஷத்³விபிநே ப்ரவ்ருʼத்தா ।
ஸேவ்யேத கேந தவ லோசநசந்த்³ரிகேய-
மேநாம் நிபாதய ஸக்ருʼந்மயி தப்யமாநே ॥ 86 ॥

வேதசிகை காட்டிலே வீணாகும் உன் விழினிலவு
தாகம் கொண்ட என்மனத்தில் ஒருதரம் விழுந்திடின்
மோகமோகமோகங்கள் மடிந்துவிழ லாகுமே
ஆகாரம் வேண்டுவோற்கே அன்னமளிக்க வேண்டுமே

காமம் ஶிவேந ஶமிதம் புநருஜ்ஜகா³ர
த்³ருʼஷ்டிஸ்தவேதி கிமியம் ஜநநி ஸ்துதிஸ்தே ।
லீலாப்ரஸூதபுருஷார்த²சதுஷ்டயாயா-
ஸ்தஸ்யா: பரம் து ஸ ப⁴வத்யவயுத்யவாத:³ ॥ 87 ॥

விழிக்கடையால் விழித்தெழுந்தான் விட்டுணுவின் புதல்வனும் (காமன்)
விழிக்கடையின் வேகமதால் காமன் மட்டும் விழிக்குமோ
தழைத்து நிற்கும் தர்மமும் அர்த்தமும் விழியினால்
மழித்து பெறும் மோக்ஷமும் கடைக்கண்ணால் கிடைக்குமே

ஸோமோ ஜக³ஜ்ஜநயிதேதி யதா³ஹ வேதோ³
நேத³ம் லதாபரமிதி ப்⁴ரமிதவ்யமார்யை: ।
ய: ஶைவவாமதநுவர்திப⁴வத்³த்³ருʼகா³த்மா
சந்த்³ரோ ஜக³த்ஸ்ருʼஜதி தத்பர ஏஷ வாத:³ ॥ 88 ॥

ஸோமனால் இவ்வுலகு சொக்கி நிற்கும் என்பரே
ஸோமநென்றால் பானம் என்று சகத்திலே நினைப்பரே
ஸோமனவன் உன்விழியென்று சாத்திரமும் சொல்லுமே
ஆமாமாம் அவ்விழியே அகிலத்தை காப்பதாம்

ஸூச்யக்³ரவத்³வஸுமதீமணுவச்ச மேரும்
த்³ருʼஷ்டிர்யத³ம்ப³ தவ பஶ்யதி தா³நஶௌண்டா³ ।
த்³ருʼஷ்டாஸ்த்வயா வயமபீஹ தத: ஸ்மராமோ
வேஶந்தமேவ ப⁴வஸாக³ரமுத்தரங்க³ம் ॥ 89 ॥

நீண்ட பூமி உன்விழியால் கொண்டை ஊசி ஆனதே
அண்டமெலாம் அருள் விழிக்கு அணுவாக ஆனதே
தொண்டரெலாம் உன்விழியை தொழுதுனிற்பதானதால்
பண்டுதோய்ந்த பவக்கடலும் சிறு குட்டையாகிப் போனதே

வாணீநிகேதநதயா க⁴நஸாரகௌ³ரா:
கல்ஹாரகேஸரருச: கமலாநுஷங்கா³த் ।
மாதர்ஜயந்தி ஶரணாக³தலோகசேதோ-
மாலிந்யமார்ஜநவஶாத³ஸிதா: கடாக்ஷா: ॥ 90 ॥

வாக்கினது அரசி உன்விழியின்வழி வசிக்கிறாள் (வெளுப்பு)
ஆக்கினை செய்துனிற்கும் இலக்குமியுன் விழியினுள் (சிவப்பு)
போக்கினிற்பர் பாவத்தை பக்தருமுன் விழியினால் (கருப்பு)
வெளுப்பு சிவப்பு கருமையால் வந்தவிதம் இவ்விதம்

ஆகர்ணமுல்லஸதி மாதரபாங்க³தே³ஶே
காலாஞ்ஜநேந க⁴டிதா தவ பா⁴தி ரேகா² ।
ஶைவாலபங்க்திரிவஸந்ததநிர்ஜிஹாந-
காருண்யபூரபத³வீகலிதாநுப³ந்த:⁴ ॥ 91 ॥

கருவிழிதான் குளமேன்றால் கண்மைதான் பாசியோ
இருவிழிக்குள் இவ்வுலகம் இமைப்போதில் இருக்குமே
திருவிழிக்குள் கண்மணியாய் திருத்தொண்டர் இருப்பரே
கருக்குழிக்குள் கிடக்காத கருத்தையது நல்குமே

விஶ்வம் ஸ்ருʼஜதி ஹந்தி ச ய: கடாக்ஷோ
விஶ்வஸ்யதாம் கத²மஸௌ சபலஸ்வபா⁴வ: ।
ஏஷோঽபி யாமநுஸரல்லப⁴தே யஶாம்ஸி
தாமேவ விஶ்வஸிமி தே³வி தவாநுகம்பாம் ॥ 92 ॥

உற்பத்தி செய்வதுவும் காப்பதுவும் அழிப்பதுவும்
சற்றும் நிலையில்லா உன்விழியின் செயலன்றோ
உற்றுப்பார்க்கின்ற நிலையில்லா விழியை நம்புவதோ
கற்று தெளிந்தோர்கள் கருத்தை நானறியேன்

அர்த⁴ம் கலங்கரஹிதா கருணைவ ஶம்போ⁴-
ரர்த⁴ம் கு³ணாஸ்ததி³தரே ஸகலா: ஸமேதா: ।
இத்யம்ப³ ஸம்ப்ரதி கில ஸ்பு²ரிதம் ரஹஸ்யம்
ஸம்பஶ்யதோ மம ப⁴வந்மயமைஶமர்த⁴ம் ॥ 93 ॥

பாதிஉடல் கொண்டதனால் பரசிவனின் குணங்களும்
மீதிஉடல் முழுதுமே மூளும் உந்தன் கருணையும்
தீதிலாத தத்துவம் உன்னால் தரணி வந்த தெங்கனே
பாதியும் மீதியும் என்னால் பாக்களாகி நின்றதே

அம்ப³ ப்⁴ருவோஸ்தவ விசேஷ்டிதமப்ரமத்தம்
ஸம்பஶ்யதாம் நிஜநிஜார்த²நிதே³ஶஹேதோ: ।
தந்மூலதே³ஶநிஹிதா நிப்⁴ருʼதா ஸுராணாம்
த்³ருʼஷ்டி: ப்ரயாதி ம்ருʼக³நாபி⁴விஶேஷகத்வம் ॥ 94 ॥

புருவத்தின் அசைவு கொண்டு கட்டளைகள் வாருமே
திருவான தேவர்கள் தெரிந்துகொண்டு செய்வரே
உருவான கஸ்தூரிப் பொட்டு அவர் பார்வை தன்னாலே
கருவான காமனைகள் ஆனவிதம் இவ்விதம்

ஸாரம் கணம் கணமக⁴ர்மருசாம் ஸஹஸ்ரா-
த்ஸங்க்³ருʼஹ்ய நிர்மிதமித³ம் தவ வக்த்ரபி³ம்ப³ம் ।
தாவத்ஸுதா⁴கரகலங்ககுலாநி பஶ்சா-
தே³கத்ர தே³வி நிஹிதாநி கசாபதே³ஶாத் ॥ 95 ॥

ஆயிரம் சந்திரரால் ஆனதுந்தன் பொன் முகம்
ஆயிரம் களங்கங்கள் போன இடம் எவ்விடம் ?
ஆயிரமாய் உன் கூந்தல் ஆனதிந்த கலங்கத்தால்
சாய்ந்து நிற்கும் உன்முகம் பாரமதைத் தாங்குமோ

விந்யஸ்தமிந்த்³ரமணிகந்த³லஸுந்த³ரேஷு
கேஶேஷு தே ஸ்ப²டிகநிர்மலமிந்து³க²ண்ட³ம் ।
ஆதா⁴ரஸங்க³திவஶாத³ஸிதாயமாந-
மிந்தீ³வரச்ச²த³வதம்ஸத³ஶாம் பி³ப⁴ர்தி ॥ 96 ॥

நீலக்கல்லின் நிறம்போல உந்தன் கூந்தல் விளங்குமே
நீலமான சந்திரன் கிரணங்கள் தோன்றுமே
பாலமாகும் சந்திரன் உன்பாலத்தில் நின்றனே
காலமெல்லாம் உன்முகம் என்கருத்தில் தோன்றுமே

சிந்தாமணிஸ்த்ரிபு⁴வநேஶ்வரி கௌஸ்துப⁴ஶ்ச
க்²யாதௌ மணீ தவ க்³ருʼஹாங்க³ணகுட்டிமஸ்தௌ² ।
கிம் ரத்நமந்யது³பலப்⁴ய கிரீடகோடிம்
வாசஸ்பதிப்ரப்⁴ருʼதயஸ்தவ வர்ணயந்து ॥ 97 ॥

இரண்டான இரத்தினம் கிடக்குத்துந்தன் வாயிலில்
இரத்தினங்கள் கிரீடத்தில் பொருத்தி வைக்கலாகுமோ
ப்ரஹச்பதியும் அறிவரோ பூக்கும் அந்த இரத்தினம்
சரசரக்கும் சிரசிலே சேர்த்து வைக்கலாகுமோ

ப்ராது³ர்ப⁴வத்தரணிபி³ம்ப³ஶதாருணாநி
பர்யாப்தஶீதகிரணாயுதஶீதலாநி ।
ஶ்ருʼங்கா³ரஸாரபரிவாஹமயாநி மாத-
ரங்கா³நி கேঽபி சரமே ஜநுஷி ஸ்மரந்தி ॥ 98॥

கருத்திலே உன்னுடல் சிவக்கடலாய் நிற்குமே
அருத்தம் மிக்க அவ்வுடல் அந்திஜன்மம் தோன்றுமே
பொருத்தமான பூவுடல் பூவுலகை மறைக்குமே
விருத்தரும் பாலராகும் விந்தையிலே விந்தையே

ப்ரத்யுக்³ரகுங்குமரஸாகலிதாங்க³ராக³ம்
ப்ரத்யங்க³த³த்தமணிபூ⁴ஷணஜாலரம்யம் ।
தாம்பூ³லபூரிதமுக²ம் தருணேந்து³சூட³ம்
ஸர்வாருணம் கிமபி வஸ்து மமாவிரஸ்து ॥ 99 ॥

குங்குமத்தைப் பூசிய கொழுந்தணல் மேனியும்
அங்கமெலாம் அணியினை அணிந்து நிற்கும் அழகுடன்
செங்கைநிற வாயிலே தாம்பூலம் தரித்துமே
எந்தன் முன்னே இப்போதே எழுந்து வந்து நிற்பையே

அர்த⁴ம் ஸ்த்ரியஸ்த்ரிபு⁴வநே ஸசராசரேঽஸ்மி-
ந்நர்த⁴ம் புமாம்ஸ இதி த³ர்ஶயிதும் ப⁴வத்யா ।
ஸ்த்ரீபும்ஸலக்ஷணமித³ம் வபுராத்³ருʼதம் ய-
த்தேநாஸி தே³வி விதி³தா த்ரிஜக³ச்ச²ரீரா ॥ 100 ॥

பாதி பேர்கள் பெண்களும் மீதி பேர்கள் ஆண்களும்
மோதி நிற்கும் உலகிது முப்புரத்தின் மூலமே
நேதி நேதி நேதி என்று வேதம் கூறும் உன்னையே
பாதியுடல் தரித்த உந்தன் பாகம் இப்பிரபஞ்சமே

நிர்மாஸி ஸம்ஹரஸி நிர்வஹஸி த்ரிலோகீம்
வ்ருʼத்தாந்தமேதமபி வேத்தி ந வா மஹேஶ: ।
தஸ்யேஶ்வரஸ்ய கி³ரிஜே தவ ஸாஹசர்யா-
ஜ்ஜாத: ஶ்ருதிஷ்வபி ஜக³ஜ்ஜநகத்வவாத:³ ॥ 101 ॥

படைத்தல் காத்தல் அழித்தல் மூன்றும் உந்தன் பாதம் செய்யுமே
உடையவராம் உந்தன் துணைவர் உண்மையிதை அறிவரோ
படைப்பவர் என்ற பேரை பரசிவனும் பேராய் பெற்று நிற்பரே
விடையுடன் உந்தன் பாதி விழுமி நிற்பதால் அப்பெயரதோ

ஸத்தாஸ்யக²ண்ட³ஸுக²ஸம்வித³ஸி த்ரிலோகீ-
ஸர்க³ஸ்தி²திப்ரதிஹதிஷ்வபிநிர்வ்யபேக்ஷா ।
த்வாமந்தரேண ஶிவ இத்யவஶிஷ்யதே கி-
மர்த⁴ம் ஶிவஸ்ய ப⁴வதீத்யநபி⁴ஜ்ஞவாத:³ ॥ 102 ॥

முத்தொழிலும் செய்வதற்கு மூலமே நீயலோ
எத்தொழிலும் இயலுமோ வேறெந்த பேருக்கும்
அத்தன் உந்தன் பாதிஎன்ப தறியாதோர் மொழியலோ
உத்தமமாய் இருப்பது ஒன்றுதான் அது நீயலோ

நாஸ்மிந்ரவிஸ்தபதி நாத்ர விவாதி வாதோ
நாஸ்ய ப்ரவ்ருʼத்திமபி வேத³ ஜக³த்ஸமஸ்தம் ।
அந்த:புரம் ததி³த³மீத்³ருʼஶமந்தகாரே-
ரஸ்மாத்³ருʼஶாஸ்து ஸுக²மத்ர சரந்தி பா³லா: ॥ 103 ॥

உந்தன் அந்தப்புரத்திலே அந்த காற்று வீசுமோ
விந்தையான உலகிதில் வேகும் அக்னி வாருமோ
சந்ததம் சீரும் நீரும் சபையிதனில் நுழையுமோ
உந்தன் பிள்ளை நாங்களோ உலவிநின்று குலாவுவோம்

த்வத்ஸந்நிதா⁴நரஹிதோ மம மாஸ்து தே³ஶ-
ஸ்த்வத்தத்த்வபோ³த⁴ரஹிதா மம மாஸ்து வித்³யா ।
த்வத்பாத³ப⁴க்திரஹிதோ மம மாஸ்து வம்ஶ-
ஸ்த்வச்சிந்தயா விரஹிதம் மம மாஸ்து சாயு: ॥ 104 ॥

வேண்டவே வேண்டாமுந்தன் உருவிலா கோயிலும்
வேண்டவே வேண்டாமுந்தன் பேரிலா வித்தையும்
வேண்டவே வேண்டாமுந்தன் பக்தியிலா வம்சமும்
வேண்டவே வேண்டாமுந்தன் நினைவிலா ஜன்மமே

த்வம் தே³வி யாத்³ருʼக³ஸி தாத்³ருʼக³ஸி த்வமீத்³ருʼ-
கே³வேதி வக்துமபி போ³த்³து⁴மபி க்ஷம: க: ।
மாமேவ தாவத³வித³ந்நதிபாமரோঽஹம்
மாத: ஸ்துதிம் த்வயி ஸமர்பயிதும் விலஜ்ஜே ॥ 105 ॥
எவ்விதம் நீயுமென்று எவருமிங்கு அறிவரோ
அவ்விதம் அவளுமென்று அறிஞரும் அறிவரோ
என்விதம் நானுமே ஏதென்று அறிகிலேன்
இவ்விதம் இருக்க நானும் உன்னை தொழுவனோ

காசித்க்ருʼதா க்ருʼதிரிதி த்வயி ஸாঽர்பிதேதி
காபி ப்ரமோத³கணிகா ந மமாந்தரங்கே³ ।
மௌட்⁴யம் மதீ³யமிஹ யத்³விதி³தம் மமைவ
கிம் த்வம்ப³ விஶ்வஸிமி தீ³நஶரண்யதாம் தே ॥ 106 ॥

தோத்திரம் செய்து உன்னை தோத்தரித்து நிற்பதென்னும்
வாத்திரம் எனக்கு இல்லை வீணிலே மொழிகிறேன்
சாத்திரம் கூறும் உண்மை சிறிது நானும் அறிகிலேன்
பாத்திரம் இவனுமென்று பாவப்பட்டு இரங்குவாய்

காலாநபாஸ்ய விஷுவாயநஸங்க்ரமாதீ³-
நஸ்தங்க³தே ஹிமகரே ச தி³வாகரே ச ।
அம்ப³ ஸ்மரேயமபி தே சரணாரவிந்த³-
மாநந்த³லக்ஷணமபாஸ்தஸமஸ்தபே⁴த³ம் ॥ 107 ॥

உதிக்கும் மறையும் சூர்ய சந்த்ரர் ஓர்நாளில் மறைவரே
உதிக்காமல் உன்னடியில் ஓர்நாளில் நிறைவரே
பதிதமான அந்த நாளில் என்பக்கம் நீ வருவையோ
கதியும் நீ விதியும் நீ வேறு துணை இல்லையே

சதுரத்⁴யாயீரூபம் கலஹம்ஸவ்யஞ்ஜநம் ஜக³ந்மாது: ।
அபரப்³ரஹ்மமயம் வபுரந்த: ஶஶிக²ண்ட³மண்ட³நமுபாஸே ॥ 108 ॥

பிரம்ம சூத்ரம் நீயலோ ஹம்ஸ நிலையும் நீயலோ
பிரம்ம சப்தம் நீயலோ சிரம் தரித்தாய் சந்த்ரனை
உறவு நீ உன்னையே உளம் தனில் தரித்தனே
பிறவி நீங்கி பேரின்ப நிலையில்நானும் நிற்பனே

॥ இதி ஶ்ரீ நீலகண்ட²தீ³க்ஷிதவிரசித:
ஶ்ரீஆநந்த³ஸாக³ரஸ்தவ: ஸம்பூர்ண: ॥

“பேரின்பக் கடல்” என்ற தமிழ்ப் பாடல்கள் நிறைவுற்றது.