Category: Texts

காரைச் சித்தர் பாடல்கள் – கனக வைப்பு

மாளாத சக்தியடா மனிதன் சக்தி
மலிவாகக் கிடைக்குதடா கணத்துக் குள்ளே
மீளாத மார்க்கமடா மின்னாத் தாளை
மேவியுனக் குட்காணும் வேதை மார்க்கம்
ஆளாக வென்றேனு மெப்போ தேனும்
அனைவர்க்கும் கிட்டுமடா ஞானப் பேறு
தூளாகக் காமத்தைத் துரத்தி விட்டே
துணையாகக் கம்பத்தே தூங்கு வாயே. 1

தூங்குவாய்ச் சாமததே விழித்துக் கொள்ளு
தூங்காமல் தூங்கிவெறுந் தூக்கம் தள்ளு
நீங்காமமல் நியமித்தே நிறைந்து நில்லு
நிலமான சாமத்தைச் சுத்தம் செய்தே
ஆங்காரச் சாதியெலா மகற்றிப் போடு
அன்பாக வாதித்தே விரட்டிப் போடு
பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான்
பண்பாகப் போதித்தேன் சாதிப்பாயே. 2

குப்பையிலே பூத்திருப்பாள் மின்மி னுக்கி
கோலத்தே பொன்மேனி கொண்டு நிற்பாள்
தர்ப்பையிலே சிவப்பான தழலைப் போல்வாள்
தனக்குள்ளே சர்ப்பந்தான் சரண்புக் காடும்
அர்ப்பையடா சகவாசம் அணைந்து தொட்டால்
அனைத்தையுமே யெரித்திடுவாள் சலித்துக்கொள்வாள்
கர்ப்பையிலே தான்பிரித்துக் கண்ணி வைத்தே
கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர்.

சித்தர்மனம் மலர்ந்திட்டா லதுவே போதும்
வெத்துவெறும் விளையாட்டும் சித்தி யாகும்
துத்தியெனும் பணத்துத்தி யிலையின் சாற்றில்
துரிசறுத்துத் தவஞ்செய்வார் தவத்தின் போக்கில்
வித்திதெனும் விந்துவூடன் நாதங்கூட்டி
வேதமுழங் கிடஞான வீறு கொண்டே
துத்தமறத் தானொடுங்கத் தூய்மை பெற்ற
துப்புறவே சித்திக்காம் துறவு கோலே. 4

பயனில்லாச் சொல்லகற்றிப் பயனே கூறல்
பயனதையு மினிதான பழமாய்ச் செப்பல்
நயனில்லாக் கடுவழிக ளவைவிட் டோடல்
நாட்டமெலா மருள்நாட்ட மாகக் கொள்ளல்
அயனில்லா தெவையுந்தா னாகக் காணல்
அத்துவிதத் தாலின்பச் சித்தம் பேணல்
இவையெல்லா மருங்குணமா மீசற் கன்பாம்
இடர்நீக்கிச் சுடர்காட்டும் நியமந் தானே. 5

சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே
செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன்
சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே
சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார்
சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார்
சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார்
சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும்
சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்! 6

தேவாரம் வாசகந்தான் திகழக் கூட்டித்
திருவாயின் மொழியெல்லா முருவாய்ச் சேர்த்து
போவாரைப் போகாரைப் புலம்ப வைத்து
போக்கற்றார் தமக்குமொரு போக்குக் காட்டி
கோவாரம் பூவாரம் கொழிக்க விட்டு
கோலமுறச் செய்தாலும் குவல யத்தின்
பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது
புகன்றிட்டே னவள் போக்கைப் புகன்றிட்டேனே!

ஊறுசுவை யொளிநாற்றம் ஒளியே யென்ன
உலகத்திலே திரிந்து கடலிற் புக்கு
வீதிதிரை நுரைகுமழி விளையாட் டார்ந்து
வினைவிதிகள் வினைவெறிகள் வேகந் தேய்ந்து
ஆறுவரக் குருவருளை யணைந்து பொங்கி
அண்டாண்ட சாரத்தை யறிந்து கொண்டே
சாறுகொள்ளச் சிந்தனையுங் குவிந்து நிற்கும்
சகஜநிலை யேயோகசமாதி கண்டீர். 8

சிந்தித்தா லதுபாவம் சிணுங்கி னாலோ
சேருவது காமமடா தங்கி தங்கிச்
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில்
சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி
வந்தித்தால் வாதமடா வீண்வி வாதம்
வாகான மோகமடா மங்கிப் பொங்கி
நிந்தித்தால் நாசமடா நினைவுப் புந்தி
நிலையமடா மாயையதான் மயக்குத்தானே. 9

வருத்தித்தான் சொல்வதிலென் வலுவுண் டாமோ
வருத்துவதாற் பலங்குறையும் மௌனம் போகும்
அருந்தித்தான் பருகிடுவான் ருசியைக் காணான்
அமுதப்பால் குடித்தவனே அமர னாவான்
துருந்தித்தான் பசியறிவான் வாணி யானை
சோபையுறுஞ் சேணியனை விலக்கி யப்பால்
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும்
பொக்கமதே யாசனமாம் யோகங் கண்டீர். 10

பாருலகி லான்மாவின் ஞானம் தேடப்
பலநூல்கள் கற்றறிந்தும் தெளிவில் லாமல்
நேரியலும் நதியதன் நீர் குளியார் தேத்து
நெட்டிநீர் கசிந்திடுவார் நெறியைக் காணார்
சீரியலும் பற்றற்ற நீரைக் காணார்
தேக்கி வந்து சிதறியநீர்த் தேக்க முண்பார்
ஆரறிவார் அடடாடா அடடா டாடா
அடயோகத் தவநிலைநிலை யதனைத் தானே.

இல்லறமே நல்லறமா மென்று சொன்னால்
இன்பமெனப் பள்ளியறைக் குள்ளாகாதே
தொல்லறமே துறவறமே தனது வண்ணம்
துறந்திட்டா பற்றறவே துறந்தி டாமல்
சொல்லறமே யுலகமெல்லாம் கண்ணின் ரூபம்
சொர்ணமய மாம்சொர்க்கம் சுகவை போகம்
கல்லறமே கனகமணிப் பூஷ ணங்கள்
கமலத்தைக் காத்திடுவான் பத்ம யோகி. 12

பெற்றவர்கள் தங்கடனைத் தீர்க்க வேண்டும்
உற்றவர்கள் உறுகதியைப் பார்க்க வேண்டும்
பற்றுவர வத்தனையு முடிக்க வேண்டும்
பற்றில்லாப் பாமரைக் காக்க வேண்டும்
செற்றபுலன் பொறியடக்கிச்சேர வேண்டும்
சித்தமுறச் சிவபூஜை செய்யத் தானே.
கற்றவர்க்கே பலயோகம கனியும் பாரே.
கல்லாதவர் யோகமெல்லாம் பொல்லா யோகம். 13

யுகமாறிப் போச்சுதடா கலியுகத்தில்
யோகியவன் நிலைமாறிப் புரண்டு போவான்
சகமாறிப் போச்சுதடா சகத்தி லுள்ளோர்
தமைமறந்தார் பொருள் நினைத்தே தவிக்க லுற்றார்
அகமாறிப் போச்சுதடா காமம் கோபம்
அறுவகையாம் பேய்க்குணங்க ளதிக மாச்சே
புகழ்மாறிப் போச்சுதடா மனிதற் குள்ளே
பூரணர்கள் மறைந்துள்ள ரவரைக் காணே. 14

காலநெறி யாதுரைப்பேன் கேளாய் கேளாய்
காணவரு மாயிரமா வருடத் துள்ளே
பாலமடா வானத்துக கேற்ப பாதை
பகனவெடி சுகனவெடி பண்ணு வார்கள்
சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்து போகும்
சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப் போகும்
கோலமுறுங் குவலயமே சட்ட திட்டம்
கூறுமடா கொதிக்குமடா கோபம் தாபம்.

தீராத புயல்களெல்லாம் தினமுண்டாகும்
தீக்கங்கு எரிமலைகள் சிரிப்புக் கூடும்
தேராத நோய்களெலாம் தின முண்டாகும்
திசைகலங்கும் பூகம்பத் திறமே சாடும்
நேரான நெறியெல்லாம் நடுங்கி யோடும்
நெறியில்லா நெறியெல்லாம் நிறைந்தூ டாடும்
போராகக் குருதிகொப் பளித்துப் பொங்கும்
புகையாகப் புவனவளம் புதைந்து போகும். 16

தெய்வமெலாம் விண்ணாடிப் போகும் போகும்
தீமையெலாம் மண்ணகத்தின் தெருக்கூத் தாகும்
உய்யுமுண்மை யுளத்துண்மை யோடிப் போகும்
உலகவுண்மை விஞ்ஞானம் கூடிவேகும்
ஐயமில்லை யெனவகங்கா ரந்தான் துள்ளும்
ஐயையோ அகிலமெலாம் கள்ளம் கள்ளம்
துய்யநெறி காட்டிநின்றார் சித்தர் சித்தர்
தூலநெறி காட்டுகின்றா ரெத்தர் ரெத்தர். 17

விஞ்ஞான விதியெல்லாம் வேகம் வேகம்
வேகமினல் தாமத்தின் வித்தை வித்தை
அஞ்ஞான விதியெல்லாம் போகம் போகம்
அடடாடா கயிறறுந்த பொம்ம லாட்டம்
செய்ஞ்ஞானக் கதியெல்லா மரண வத்தின்
செயலன்றி வேறில்லை சென்மம் சென்மம்
மெய்யான விதியெல்லாம் யோகம் யோகம்
மின்னான சக்தியுடன் சாகம் சோகம். 18

வித்தென்பான் முனையென்பான் மின்வீச் சென்பான்
வெப்பென்பான் காந்தத்தின் கப்பே யென்பான்
வித்தையடா விண்ணெல்லாம் சுழலும் மார்க்கம்
விந்தையடா ஆகர்ஷண வியப்பே யென்பான்
வெத்தறிவாம் கனியறியான் மேற்றோ லுண்பான்
விஞ்ஞானி யவனறிவைப் பழிக்க வில்லை
சித்தறிவான் சத்தறிவான் சித்தன் சித்தன்
சித்தத் திலேசிருட்டிச் சித்தங் காண்பான்.

அடடாடா விஞ்ஞானி யறையக் கேளாய்
யாவைக்கும் காரணத்தை அறிவா யோநீ
அடடாடா வகிலாண்டக் கவர்ச்சி யேனோ?
அணுவுக்குள் மின்காந்த மமைந்த தேனோ?
கெடடாடா நேர்நிரையான் வின்க ளேனோ?
குவிந்திணைந்து பிரிந்தரனா யனமு மேனோ?
விடடா யிவையெல்லாம் மென்னே யென்னே!
விளக்கிடுவாய்க் களக்கமறச் சொன்னேன். 20

வெத்துலக விதியெல்லாம் வெப்பம் தட்பம்
விஞ்ஞான விதியெல்லாம் சேர்ப்பும் கூர்ப்பும்
செத்துலக விதியெல்லாம் யாதம் கூதம்
சீவனுடல் விதியெல்லாம் காமம் கோபம்
சத்துலக விதியெல்லாம் சகசம் சாந்தம்
தான்தானாத் தன்மயமாத் தழைவே தாந்தம்
சித்துலக விதிசத்தி னோடு சித்தாய்ச்
சேரனந்தத் தானந்தச் சீராம் வேராம. 21

வேரறியா வினைவறியும் விஞ்ஞானந்தான்
வேரறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானந்தான்
சார்பறியுஞ் செயலறியும் விஞ்ஞானந்தான்
சார்ப்புதஞ் சாரமதே மெய்ஞ்ஞானந்தான்
ஈரறியு மீர்மையெலாம் விஞ்ஞானந்தான்
இருமையெலா மொருமையுறல் மெய்ஞ்ஞானந்தான்
பாரறியும் பேதநெறி விஞ்ஞானந்தான்
பரமறியும் போதநெறி மெய்ஞ்ஞானந்தான். 22

காமத்தை விட்டிடடா கலகத்தை வெட்டிடடா
கருநொச்சிக் கவசத்தில் காமினியைக் கட்டிடடா
ஊமைக்கும் அத்தையடா உலகோர்க்கு நத்தையடா
உரையெல்லாம் மித்தையடா உனக்கவளே வித்தையடா
சாமத்தைக் கண்டிடடா சர்மத்தை வென்றிடடா
சகலத்தை யுந்தழுவும் சத்தியத்தில் நின்றிடடா
வாமத்தி யருளாலே வாதத்தி லேவெற்றி
மண்ணேல்லாம் பொன்னாகும் மார்க்கத்தைக் கண்டிடடா. 23

மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி
மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில்
கீலத்தின் கீழ்நெல்லிச் சாற்றைக் காய்ச்சிக்
கிறிகொண்ட சூதத்தில் நாதம் வாங்கிச்
சாலத்தான் நீர்மேலே நெருப்பைப் போட்டே
சாரத்தான் மலைதாங்கிக் குள்ளே யோட்டி
ஆலத்தா னமுதைத்தான் விழுதை நாட்டி
ஆறத்தா னமரத்தா னனைத்து மாமே. 24

வெப்பெல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய்
வினையெல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய்
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும்
அவற்றின்மே லாடுகின்றா ளன்னை யன்னை
துப்பெல்லாம் துரிசெல்லாம் சுத்தி சுத்தி
சொக்குமடா கைலாசச் சொர்க்க லிங்கம்
கப்பெல்லாம் நீங்குமடா காம தேனு
கறக்குமடா காயத்ரிக் கனிவாம் க்ஷீரம். 25

திருவான சேறையடா பஞ்ச சாரம்
திகழ்தெய் வமுஞ் சாரம் தேவிசாரம்
உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம்
உற்றதொரு புஷ்கரணி யதுவும் சாரம்
கருவான மானமதுவும் சாரம் சாரம்
கண்ணான சாரமதைக் கண்டேன் கண்டேன்
குருவான பலசாரக் கோப்பும் கண்டேன்
கோக்கனக மாஞ்சாரக் கொதிப்புங் கண்டேன். 26

சாரைக்கோட் டைக்குள்ளே சாரம் சாரம்
சார்ந்தநவி சாரக்கற் பூரம் பூரம்
கூரைக்கோட் டைக்குள்ளே கோரம் கோரம்
கொள்ளாமற் சிவயோனிக் குள்ளாம் வீரம்
வீரைக்கோட் டைக்குள்ளே விந்துப் பூவை
வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம்
காரைக்கோட் டைக்குள்ளே வந்த சித்தன்
கரையாட யண்டாண்டம் பூண்ட பத்தன். 27

பத்தனடா சித்தனடா பரம யோகி
பார்பிழைக்க வேயிந்நூல் பகருகிறேன்
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே
பேயன்யான் பேத்தலிவைப் பேணிப் பார்ப்பீர்
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின்
வித்தையுறும் வேதையெலாம் விரிவாச் சொன்னேன்
இத்ததையி லிந்நூலைப் போலே யில்லை
இதுகண்டார் வாதமுடன் வேதை கண்டார். 28

ஸ்ரீலலித லாவண்யம்

ஸ்ரீலலிதலாவண்யம்
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமங்களின் தமிழ்வர்ணனை

ஆக்கம்:
ஸ்ரீஅருட்சக்தி நாகராஜன்
(1978 இல் விடயல்கருப்பூரில் எழுதியது)

ஓம் சக்தி                                                                                                                           ஜெயசக்தி

காமாக்ஷி சரணாம் போஜம் பாவயந்தம் ஸதாஸ்ருதி!
அனந்தாநந்தநாதம் தம்ஸத்குரும் சித்தயே ஸதா!!

உலகில் உயரவான பொருள் சக்தி வைபவம் தான். சக்திவைபவம் விரிவானதால் ஈண்டு அது சுருக்கமாய் அமைந்திருக்கிறது. அருள் அமைப்பிலே ஒரு நியதியைக் காணலாம்.

அன்னை ஆவிர்பாவம் – வாநவர் துதி – ஸ்ரீநகரவர்ணனை – பண்டவதம் – மந்த்ரஸ்வரூபம் – காமகலாவிளக்கம் – ஷடாதாரக்கடப்பு – நிர்க்குண ஸகுணஆராதனை – மஹாவாக்யத்துட்பொருள் அவளே……என்றபடி அமைந்துள்ள இவ்விளக்கம் ஸ்ரீலலிதா மஹாத்ரிபரசுந்தரியின் குணலாவண்யத்தைக் கூறுதலான் இது லலிதலாவண்யம் எனப் பெயர் பெறுகிறது.

இதனைப் படித்துணருங்கால் ஆத்மன் தன் இருதயக்குகையில் குடிகொண்டிருக்கும் நித்யானந்தத்தை நிச்சயம் உணரலாம். எதனையும் அருளும் குருசரணங்களில் ஆத்மஸமர்ப்பணம்.

ஸ்ரீலலிதலாவண்யம்

அருள் விலாசம் ஆன்மாவின் எழுச்சியை உண்டு பண்ணுங்கால் பராசக்தி குணங்களை பாரில் பரப்ப விரும்பி எழுந்த எண்ணக் கூட்டத்தினை எழுத்தில் வடிக்க அருட்சக்தி வழி செய்கிறது.

உணர்ச்சியின்பம் உருவத் தோற்றத்திற்கு வழி வகுக்கிறது. இறையின்பம் – ப்ரபஞ்ச உற்பத்தி. அல்லல் மலிந்து உயிர்கள் அல்லலுறும் காலை ஆண்டவன் பிரபஞ்சத்தில் – உலகில் உருக்கொண்டு உலவி – அறத்தை நிலைநிறுத்தி வருகிறான் என்பது ஆன்மீக உலகம் நன்கு அறியும். இறைத்தன்மை பொதுவானது. அதை ஆண் என்றோ பெண் என்றோ கூறமுடியாதல்லவா. அல்லல்படும் ஆன்மாக்கள் எந்தப்பெயர் கொண்டு அதை விளிக்கின்றனரோ அப்பெயரில் அவ்வுருவில் அது உலகில் தோன்றுகிறது. தத்துவத்தையும், வேதாந்தத்தையும், நாம் புரிந்து கொள்ள வேனுமானால் அதற்கு புராணத்தின் துணை அவசியம் தேவைப்படுகிறது. கதை மூலம் கருத்தினை உணரவைப்பது என்பது அறிவுரையின் அங்கம்.

ஆண்டவன் வானின்றிழிந்து வையகம் வந்தான் என்றால் – வான் எங்குள்ளது? அதன் தூரம் என்ன என்றெல்லாம் நாம் கதைபடிக்கும் போதோ புராணம் கேட்கும் போதோ விசாரிப்பதில்லை. ஆகாசத்திலிருந்து இறைவன் வருகிறான் என்றால் ஆகாசம் எங்குமுள்ளது இறைவனும் எங்குமுள்ளவன் – எங்குமுள்ளவன் எங்கிருந்து வருவது – என்பதெல்லாம் தத்துவவாதம். தத்துவம் அறிய தரணியோர்க்குப் பொழுதில்லை.
இறைச்சக்தி தன் ஒருசக்தியை தரணியில் பரப்பி ஒரு ஜீவனாக உருவெடுத்து – அல்லல் நீங்கவும், இன்பம் பெறவும் வழிசெய்கிறது. உலகில் மனித இனத்தில் அவதாரம் செய்து அதாவது இறங்கி வந்து தன் நிலையலிருந்து இறங்கிவந்து அவதார காரியத்தை செய்து முடித்து மறுபடியும் சக்தியுடன் கூடுகிறது. இதுபோல் தேவர்கள்துன்புற்றபோது இறைவன் அவர்களது துன்பம் துடைக்க அவதாரம் செய்திருப்பது புராணங்கள் மூலம் புரிகிறது.

முக்கட்பெருமான்மோனத்தவத்தை காமக்கலைஞன் மன்மேத்தேவன் மலரப்புகொண்டு தாக்கிய போதில் முக்கட்சுடர் அவனை முழுச்சாம்பலாக்கி நிற்க – தேவர்கள் காமக்கலைஞன் முக்கிய முணர்ந்து காலகாலனைக் கண்டு கழறிநிற்கும் வேளையில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதச்சாம்பல் – பண்டாசுரனாக வடிவெடுத்து தேவர்களை வருத்திய விருத்தாக்தம் வையகம் அறிந்த ஒன்று.
சொல்லடங்காத்துயருற்ற தேவர்கள் வேண்டிய தெய்வமெது என்றால் – அன்னை பராசக்திதான். கஷ்டம், துயரம் வந்தகாலையில் அதனை நீக்கும் மாபெரும் சக்தி – அன்னைதானே!‘அம்மா’ என்றழைத்தால் அருகே ஓடிவந்து அரவணைக்கும் குணம் அவளுக்குத்தானே உண்டு. குற்றத்தை மன்னிக்கும் குணம் தாய்க்குணம் அல்லவா! முதலில் வணங்கும் உறவும் தெய்வமும் அவளேதானே!

ஆகவேதான் ஆதிமுதல் அன்னையை அனைவரும் சரணம் எனப்பிடித்தார்கள்.
அன்னை ஆராதனம் அதிசிறப்பாக நடைபெற்றதன் முடிவிலே – பராசக்தி – கனிந்த தீயின் ஜொலிப்பிலே – ஒருமுகப்பட்ட த்யானத்தின் உணர்விநாலே – தன்னையே தீயில் இடுபொருளாகக்கொண்டு நிற்கும் சரணாகதியின் மத்தியிலே எழுந்த மாபெரும் சக்தி – அக்னிப்பிழம்பு – ஒளிச்சோதிவடிவம் ஓர் உருக்கொண்டு லலிதமான பொன்னுடலோடு கூட லலிதையெனப் பெயர் தாங்கி தரிசனம் தந்தாள். இந்த நிலை தேவியாகத்தின் முடிவிலே தோன்றுவதொன்று.

இங்கு பஹிர்யாகத்தின் முன் – பஹிர்முகமாக வேண்டிய தெய்வம் தன் உருக்கொண்டு எழுந்தது. இதையே அந்தர்யாகமாக – ஆத்மயோகமாக செய்யும் நிலையிலே – நீயே ஆத்மனாக, நீயே யோகியாக, நீயே தெய்வமாக, நீயே எல்லாமாக ஆவது அனுபவ சித்தாந்தம். ஆன்றோர் சத்தியவாக்கு. உண்மை உணர்ந்த நெஞ்சில் ஒளித் தோற்றமுண்டு. இங்கு உண்மைத் தெய்வத்தை உணர்ந்த போதில் ஒளித்தோற்றமாய் – இறைவி தோன்றினாள். தோன்றிய தெய்வத்தை தோத்திரம் செய்தனர் தேவர்கள்.

“எல்லையில்லாத பொருளுக்குத்தான் எல்லையற்ற சௌந்தர்யம் உண்டு தாயே!உன் சௌந்தர்யம் எல்லையற்றதம்மா! அசோகம், சம்பகம் முதலான மலர்களின் நறுமணத்தை உடையவளே. அம்மணம் உன் கூந்தல் கொடுக்கிறதம்மா!கஸ்தூரிக்கு உன் நெற்றியில் இருப்பதால் தானேபெருமையோ!காமக்கலைஞனின் வீட்டு தோரணம் தான் உன் புருவங்களோ! வெண்ணிற முகத்தில் வீசும் ஒளி நீரில் உறவாடி நீந்தும் மீன்கள் போன்றுள்ளதே என் நேத்திரங்கள். நாசியின் அழகை நட்சத்திர ஒளியை துள்ளி வீசும் உன் மூக்கணி காட்டுகிறதே! பிரபஞ்சத்தையே உன்னுடலாகக் கொண்டதால் சூரியசந்திரர்கள் உன் காது தோடுகளாக திகழுகிறார்களே! என் கன்னக்கண்ணாடியில் பிரபஞ்சம் பிரதிபலிக்கிறதே அம்மா!பவழம் போன்ற திருவருள் கொண்ட தாயே! காணக் கண்கூசும் உன் பல் வரிசையழகு சுத்தவித்தையே முளைவிட்டது போன்றுள்ளதே அம்மா! மூகனையும் பேசவைக்கும் வாசனை தாம்பூலமணம் மனதை கொள்ளை கொள்கிறதே! உன் குரல் நாததெய்வம் ஸரஸ்வதியின் வீணை ஒலியையும் மிஞ்சுகிறதே அம்மா! உன் மென்முருவல் எங்களை மட்டுமா சொக்க வைக்கிறது – காமேசனையும் மயக்குகிறதே தாயே! மங்கள சூத்திரத்துக்கு மகிமை அது உன் கழுத்தில் இருப்பதால் தானே தாயே! காமக்கலையின் சூக்ஷ்மபிந்து காமேசனையும் கலங்க வைக்கிறதடி! உன் திருவுடல் தாங்கிய ரத்தின பட்டாடையின் ஒளி உள்ளுருப்புக்களின் உயர்வழகை உள்ளளத்தில் உணர்த்தி உவகை கொள்ள செய்கிறதம்மா! அக இருளைப் போக்கும் குருவருளாய் புறஇருளைப் போக்கும் ரத்தின தீபங்களாய் ஒளி வீசித் திகழும் உன் திருவடித் தாமரைகளுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் அம்மா!

……. என்று பலபடித்தாய் தோத்திரம் செய்து முடித்தனர் தேவர்கள்.
காமேச்வரனை மணம் கொண்டாள் காமேச்வரி. உடல் பாதி உயிர் பாதியல்லவா! சிவமும் சக்தியும் சேர்ந்தொன்றாய் இருப்பது நியதியல்லவா! இருக்குமிடம் ஏற்றமிது எழில் நகரம். அதற்குத்தான் ஸ்ரீநகரம் என்ற திருநாமம். இதனையே மனக்கோட்டையில் கண்டு களிக்கவேணும்.

எந்தமனதில் காணுகிறோமோ அதுவே ஸ்ரீநகரத்தின் பிராகாரமாகும். மனம், புத்தி, அஹங்காரம் இம்மூக்கட்டும் மூன்றாகவும்: – ஒளிகொண்ட கதிரவன், தன்னொளி கொண்ட சந்திரன், மன்மததேவன்இவர்களின் ஒளி மூன்றாகவும் – நவரத்தினங்கள் உலோகங்கள் இவைகளினாலானது 19 ஆகவும் ஆக 25 மஹா பிராகாரங்களையுடைய ரத்தினத்தீவில் அமைந்த அந்நகரத்தின் ஸ்வரூபம் இது. மேருமலை உச்சிகரத்தில் உறைபவள் ஸ்ரீநகரத்தின் நடுநாயகியாம் நம்தேவியவள். அவளது வீட்டுக்கு சிந்தாமணி என்கிறார்களே! ஏனென்றால் பக்தன், ஸாதகன் சிந்தித்த எதனையும் ஸித்தித்து கொடுக்கும் திறமுடைய அவளது திருமந்திரத்துக்கு வாசஸ்தனமாக அது உடையதாலோ என்னமோ?

பிரம்மம் ஒன்றுதான் ஆனால் ஒன்றைப் பலவாக்கும் அவளது சத்தி இங்கு பிரம்மத்தையே ஐந்தாக்கி தனக்கு பிரம்மபீடமாக ஐந்துபிரம்ம ஆசனமாக அமைத்துக் கொண்டாளாம்.

பத்மம் என்றால் யானை என்ற பெயரை அறிவோம். இங்கு பெரிய பெரிய யானைகள் நிறைந்தகாடு. அந்தக்காட்டில் இருப்பவளாக அன்னையைச் சொல்கிறார்கள். மனமே ஒருகாடு. அதில் யானையின் நிறம் போன்று அனேக கரும்புள்ளிகள். அதன் மத்தியில் தான் இறைவியின் ஒளி வடிவம் உள்ளது. இதனைத்தான் மஹாபத்மாடவியில் அமர்ந்து காட்டுகிறாலோ!மேலும் நானாவித கதம்பமரங்கள் அடர்ந்த வனத்தில் வசிக்கிறாளாம். நானாவிதமான எண்ணக் கூட்டத்தில் தவிக்கும் புத்தி மாதிரி உள்ளது அந்த கதம்பவனம்.

துளிஅமிர்தம் பெற தேவர்கள் பட்ட பாடு நமக்கு தெரியும். பாத்திரத்தில் பெற்ற அமிர்தத்தை உண்டு சிறந்தவர் வானவர். இங்கோவெளில் அதே அமிர்தம் கடலாக சமுத்திரமாக நிறைந்துள்ளது. அதன் மத்தியில் ‘அவள்’ இருக்கிறாள்.கங்கையை, காவிரியைப் பூஜிக்கிறோம். இவைகள் நீர்நிலைகள். இதனைப் போல் அமிர்த நிலையையில் உள்ள அமிர்தத்தைப் பூஜிக்க வேண்டாமா? பூஜிக்கும் முறையும், விதானமும் அன்னை அருள் பெறும் உபாஸகஉலகம் நன்கறியும். அன்னை அருள்கொண்டு அமிர்தம் பருகும் மஹாவைபவம் அது. ஸ்ரீஸுதாதேவியின் சுகானந்த அருளை சூக்ஷ்மமாய் உணர்ந்து அவளில் மூழ்கும்ஆனந்த நிலை அவளருளால் அடையத்தக்கது. இங்கு சொல்லில்லை, பொருளில்லை, உணர்வில்லை, உருவமும் இல்லை. எல்லையற்ற ஆனந்தம் அனுபவ ஸித்தாந்தம் அது.

இப்படிப்பட்ட நிலையிலே நிலைகொண்டிருக்கும் நிமலையானவள் ‘காமாக்ஷி’ என்று பெயர்பெறுகிறாளே!அக்ஞானமும், அகங்காரமும் மிகுந்த மனம் படைத்த ஜீவன் ஆங்காரம் மிகுந்து ஆர்ப்பரிக்கிறது. அக்ஞானத்தால் அகந்தை மூடியிருக்கிறது. இவ்விருட்டு நீங்க ஓர் ஒளி வீசுகிறது. ஒளிக்கற்றைகள் பட்டவுடன் அக்ஞானமும், அஹங்காரமும் மடிகிறது அல்லது மறைகிறது. இதனை புராண உருவகப்படுத்திநோமானால் பண்டாசுரன் என்ற பெயர் பெற்ற அசுரன் தன் மமதையால் தேவர்களை துன்புறுத்திய காலை, அதாவது காமனைளால் பிறந்த பண்டன் காம வெறிகொண்டு அலைந்தகாலை பூவுடல் கொண்ட லலிதை பாசம். அங்குசம், பஞ்சபாணம் பூட்டிய கரும்புவில் இதனால் பண்டாசுரனை வதம் செய்கிறாள். இங்கு ஞானஉணர்வில் தெளிய வேண்டுவது அஹங்காரம், அழிவு. அகங்காரம் அழிந்து அக்ஞானம் நீங்கி ஒளி உருக்கொண்டுவிட்டால் அதுதானே முத்தி – அதுதானே மோக்ஷம் அதுதானே வீடுபேறு. பராணத்திலே வரும் அசுரவதம் நிகழ்ந்து தேவர்கள் இன்புற்றனர். காமபிந்துவிலிருந்து கிளம்பிய ஆசுரகுணம் காமங்களுக்கெல்லாம்,இவ்வுலக, அவ்வுலக ஆசைகளுக்கெல்லாம் மிகத்தொலைவில் – நிலைபெற்று அவைகளில் ஆட்படாத நிலையில், அவைகளை அருளும் தன்மையில் அமைந்து நிற்கும் ஸ்ரீகாமாக்ஷியால் வதம் செய்யப்படுகிறது என்பதைத்தான் இங்கு சூக்ஷ்மமாய் உணர வேணும்.

பார்வையாலேயே காமங்களையெல்லாம் ஆள்பவள், பார்வையாலேயே துன்பங்களையெல்லாம் போக்குபவள். பார்வையாலேயே முத்திப்பேற்றை அருளுபவள் என்றேல்லாம் அவள் சிறந்து விளங்குகிறாள். காமங்களை கொடுப்பவளும் அவள்தான். காமங்ளை நீக்குபவளும் அவள்தான். ஜன்ம ஜன்மாந்திரங்களில் ஆத்மன் அனுபவித்த விஷையானுபவங்கள் அவனிடத்திலே ஊறி லேசில் அவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. அவளருளால் இந்த விஷையானுபவ இச்சை நீங்கி ஆத்மாபிவிருத்திக்கு எண்ணம் ஏற்படுகிறது. ஆக விஷய இச்சை நசித்த இடத்திலே ஆத்ம இச்சை பிறக்கிறது என்பது தான் இங்கு உணரவேணும்.

எங்கும் பரந்துள்ளது பரவளி. இதனை அறிய பிரம்மாண்ட தத்துவம் அல்லது பிரபஞ்ச தத்துவம் புரிய வேணும். இதுவே உடற்கூறு அமைப்பிலும் பிண்டாண்டதத்துவமாய் சுருங்கி நிற்கிறது.

பிரம்மாண்ட தத்துவத்தை பராசக்தியாய் உருவகப்படுத்தினால் அவ்வுருவம் மூன்று பாகமாய் தெரியும். முகமண்டலம், கழுத்துமுதல் இடுப்புவரைஇடைமண்டலம், திருவடிமுடியக்கடை மண்டலம் என்று கூறலாம். அவளை ஆராதித்து அதாவது அவளின் மந்திரத்தை நாத்தழும்பேற நவின்று நலம்பெற்ற மகான்கள் அவளின் மந்திரமே அவளின் உடல் என்று கண்டு தெளிந்தார்கள். அந்த மகாமந்திரத்தை, மூன்று கூறாய் முன் நின்ற மந்திரத்தை,முதல்கூறுஅவளின் முக மண்டலமாயும் நடுக்கூறு இடைமண்டலமாயும், கடைக்கூறு பாதம்வரை உள்ள பகுதியாயும் தியானிக்க வேண்டுமென்று கூறியுள்ளதை உணர குருவருள் வேண்டும்.
மகாமகிமை பொருந்திய மந்திரங்களை கூறுபோட்டு அதன் குணங்களை விளக்கும் தனிப்பெருந்தகுதி மகான்களுக்கே உண்டு. தனியொரு வியக்தி தரணியில் சொல்ல தாயருள் வேண்டும் என்பது உறுதி.

அவளே எல்லாவற்றிற்கும் மூலம் மூலமாய் நின்றவளை காலத்தால் வணங்குகிறோம். வாக்பவம், காமராஜம், சக்தி என்ற முப்பிரிவு மந்தரத்தால் முதல்வியின் முழுஉடலை முப்புரிவாய் வணங்குகிறோம். இதனை அறிய வேணும் என்பது ஆன்றோர் வாக்கு. சூக்குமத்திற்குள் ஒரு காரணம் உண்டு என்பது தத்துவமல்லவா ? அக்காரணத்தை விளக்கப்போகுங்கால் ஒரே பிந்துவாய் பொலிவோடு தன் ஒளிகாட்டி நிற்கிறது. பின் அதுவே இரண்டாகி வசீகரண சைதன்யமாய அவ்யத்தமாய் வசீகரித்திருக்கிறது. பின் ஒரே பிந்து மூலமாய் ஜகத் காரணமாய் ஸ்தூலக்கண் காணா துரீயமாய்த் தோன்றுகிறது. ஒரே பிந்து பராசக்தி. இரட்டை பிந்து அவளும் இந்த பிரபஞ்சமும். மறுபடி ஒரே பிந்து விஷையானுபவம் மிக்க ஜீவன். தொடர்புடைய இம்மூன்றையுமே இடைவிடாத சுத்தசைதன்யம் ஒட்டி வைத்திருக்கிறது. அந்த சுத்தசைதன்யம் ஜீவசைதன்யமாய் ஜீவனின் மூலாதாரத்தில் புரிபோல சுருட்டிய நிலையில் இருப்பதாய்க்கண்டு தெளிந்த அறிஞர் கூற்று.உணர்ந்தால் அது கூற்றாயில்லாமல் சத்யம் எனத் தெளியலாம்.

ஸ்தூலமாய் விளக்கப்பட்ட மந்திரஸ்வரூபமும் சூக்ஷ்ம-காரணமாய்ப் புரிந்த வைபவமும் கண்டபின்பு, மூலாதாரத்தில் முழுக்கனலாய் சுயம்ஜோதி சைதன்யம் ஓங்காரமாய் எழும். அடுத்தடுத்த ஆதாரங்களிள் ஆங்காங்கே நின்று அது புரிவிக்கும் உணர்வெல்லாம் அல்லது அது கடந்து செல்லும் நடப்பெல்லாம் வாசிக்கட்டிலே நின்று ஆசையறுத்த யோகிகளுக்கே வெளிச்சம். இருந்தும் யோகியுமல்லாமல் போகியுமல்லாமல் ஆகிவந்த பரம்பரையில் தேடியடைந்த தெளிவினாலே சிறிது தெரியும் தன்மையும் உண்டு.

உச்சிக் கமலத்தில் ஓங்காரமாய் நின்று பிச்சிக்கலையாள் பெருக விடும் அமிர்தத்தை திகட்டாமல் பருக தேனமுதாளின் திருவடிகள் தண்ணுதலில் தெரிய வேண்டும். இதையே கண்டவர் விண்டிலர் என்று கூறுமாப் போலே அந்நிலையில் பெறும் அனுபவம் ஆனந்த அனுபவம். ஆனந்தத்தை உணர்த்த அகராதியில் வார்த்தைகள் இல்லை. இதுவே பேரனுக்ரஹம்.

சதாசிவ பதிவ்ரதையாய் இருந்து அனுக்ரஹம் செய்கிறாள். ‘அபேத பாவனம் ஸ்ரீசக்ரபூஜனம்’ என்கிறது உபநிஷதம். ‘நானே நீ நீயே நான்’ கொடுப்பதுமில்லை கொள்வதுமில்லை. மங்களத்தைக் கொடுப்பதும் அவள். அவளேதான் மங்களம்‘திக்குதிசை தெரியாமல் துணையில்லாமல் புகுந்திருக்கும் ஜீவனே!உனக்குப் பயமில்லையா? உன் பயத்தைப் போக்கி தனிவழி செல்லும் உன்னோடு தக்கதுணையாய் நின்று அமுதாட்டி அரவணத்து அழைத்துச் செல்கின்றாயே அம்மா! கனமான பாவமூட்டை கட்டுச்சோறாய் பாரமாய் அழுத்துகிறதே! அதனை லேசாக்கும் நித்தம் அவனையே அச்சோற்றை உண்ணச் செய்து பாவத்தைக் கரைத்து அவனை லேசாக்கி, லேசான நின் திருவடித்தாமரைகள் இரண்டையும் ஜீவனின் சிரசிலே தாங்கவைத்து குருவருளாய் குணமருளும் சிவபத்தினி! உன் செந்திருபாதங்களுக்கு சிறிய ஆன்மா சொந்தமடிதாயே ! என்றெல்லாம் வணங்கும் ஆத்மனுக்கு பக்தனுக்கு திருவனுக்ரஹம் செய்து விடுகிறாள் அன்னை.இவளை பக்தன் அன்னையாக மட்டுமா வணங்குகிறான். இல்லை. சுகாம்பரபெருவெளியாகவும் சிந்தனையிலே கண்டு வணங்குகிறான். இந்த குணமல்லாத, பெயரில்லாத, ஆதாரமில்லாத, குற்றமில்லாத, மாறுதலில்லாத, கூறுபோடமுடியாத, விருப்பு வெறுப்பு இல்லாத என்றுமே அழிவில்லாமல் நிலைபெறும் படியான பிரபஞ்சக்கட்டில் கட்டுப்படாத ஸ்தூலஸூக்ஷ்ம காரணம் மூன்றுமல்லாத, தனக்கு அதிபதி யாருமல்லாத, கவலை, காமம் எதுவுமற்ற நிர்மலமான ஒரு ஆனந்தத்தை ஆயிரம் பேர் சொல்லியும் துதிக்கிறானே! பிழையெல்லாம் போக்கி, சித்தம் அஹங்காரம் இதில் தெரியும் தூசிகளையெல்லாம் துடைத்து, அதை பாராசக்தி நித்தியமாய் உறையும் புனித இடமாக ஆக்குவதற்கு இந்த ஸ்ரீவித்யாஆராதனம் சிறந்துவிளங்குகிறது.
இவ்வாறு ஸச்சிதானந்த ரூபிணியாய் இருப்பவள் ஸகுணமாய் அன்னை வடிவத்தில் அடி மனதில் தோன்றி 64 விதமான உபசாரங்களை ஸ்தூலமாய் பெற்று ஸாதகனை ஒரு உபாஸககர்மாவில் இழுத்து அதனில் சிறக்க வழிசெய்பவலும் அவளே!
சுத்த சிவம் ‘சிவோஹம்’ பாவனையால் ஜகத்மாரணமாகிறது. இந்த ஜகம் முக்கூட்டு பிரபஞ்சமானது. இம்மாதிரி அநேக அகிலாண்டகோடி பிரம்மாண்டங்களையெல்லாம் இவள் இச்சையால் நடைபெறுகிறது. சிவோஹம் பாவனை சிவத்துக்கு ஏற்படவில்லையானால் அது செத்தசிவம் தான். அம்மாதிரி செத்தசிவம் ஐந்தை தான் தன் ஆஸனத்திலே அமைத்து ஆயிரம் கண்களுடன் ஆயிரம் பாதங்களுடன், படைத்தல்கடவுள் முதல் அணுவரை அவளே படைத்து, காத்து, அழித்து, உலகில் நடைமுறைச் சட்டங்களை வகுத்து (வர்ணாச்ரமம்) வேதங்களின் சிரஸிலே தன் பாத தூளியால் ஸிந்தூரப் பொட்டை இட்டு சிறக்கும் செல்வியவள். வாருணீ மதுவால் பெறும் ஆனந்தத்தேனை பருகச்செய்து மகிழ்வைக் கொடுக்கும் அவள் விஜயா முகூர்த்தத்தில் சிறக்கப்படுகிறாள். இருளைப் போக்கி ஞானம் அருளும் மஹாவாக்யம் கூறும் லட்சியப் பொருள் அவளே. தத்வம்அஸி. அம்மாவை ‘ஆயி’ என்று அழைக்கிறோம். ஞானிகள் ‘ஐயை’ என்று அழைக்கிறார்கள். இதுவே மகா வாக்கியத்தின் இருவேறு சொற்கள் என்பது புலனாகிறது. பாவனையில் செய்யும் பூசனையில் உலகிற்கு தந்தையாய் வாராஹியைக்கூறி அம்மாவாக குருகுல்லாவையும் கூறியிருப்பதை உபநிஷதம் உணர்விக்கிறது. மேலும் அஜபா காயத்ரீ ஸ்வரூபத்தில் ‘ஹம்ஸ’ மந்திரத்தின் உச்சாரணத்தால் சிறப்பவள். இவ்வாறு பலபடித்தாய் ஸ்வருப வர்ணங்களும் ஸித்தாந்த சொற்களுமாய் கூறப்பட்டதேவி குண்டலினிச் சக்தியாய் மூலாதாரத்தில் ஸாகினியாய் குடிகொண்டிருக்கிறாள். 16 தள விசுக்தியில் டாகினியாவும் 12 தளஅனாகதத்தில் ராகினியாயும், பத்துதள மணிபூரகத்தில் இரக்தவர்ண லாகினியாகவும்,ஆறுதளகமல ஸ்வாதிஷ்டானத்தில் காகினியாகவும் இருதள ஆக்ஞையில் ஹாகினியாய் வெள்ளை நிறத்துடனும் பிரகாசிக்கிறாள். 1000 இதழுடைய உச்சியில் உள்ள பிரஹ்மரந்த்ரம் என்ற நிலையில் யாகினியாய் சகலவிதகுண வர்ண பேதங்களாலும் பிரகாசிக்கிறாள்.
வாசனா விமர்சத்தால் இந்த பிறவி அடைந்திருக்கும் ஜீவன் தான் பிறவியை ஸபலமாக்கிக்கொள்ள அவளை தோத்தரிக்க வேண்டியவனாக இருக்கிறான். அவளுடைய நாம ஜபத்தினாலோ அவளுடைய மஹாமந்த்ர ஜப ஸித்தியினாலோ அவளுடைய ஸ்வரூப தரிசன பாக்கியத்தினாலோ குருவருளால் இப்பிறவி நோயை தீர்த்து கொள்ளுகிறான். நீ எவ்வழியில் ஆராதித்தாலும் அவ்வழியில் அவள் உன்னை நடத்தி செல்கிறாள்.

சாதகன் செய்யும் தீவ்ர பயிற்சியினாலே அவளை அறிந்து அவளது கருணையினாலே சிறந்து, தன் அக்ஞான இருட்டை போக்கிக்கொண்டு ஒருவராலுமே மீறமுடியாத அவளது ஆணைகளுக்கு உட்பட்டு எல்லாமே அவளது இடங்களாக இருந்தாலும், ஒருமனப்பட்ட அவளது ஸான்னித்தியத்தை ஸ்ரீசக்ரத்தில் கொண்டு ஸம்வித் ஸ்வரூபமான ஸ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரி ஸ்வரூபமாய் அவனுக்கு நலம் நல்குகிறாள். ஸாதகனைஅது பரம மங்கலமான ஒரு நிலையில் அமைக்கிறது. மலரும் மணமும் சொல்லும் பொருளும் அக்நியும்உஷ்ணமும் பிரிக்க முடியாததுபோலே சிவத்தையும் சக்கியையும் பிரிக்க முடியாது. ஒரே வடிவினளான சௌந்தர்மான லலிதையை உன்மனதில் கண்டு கண்டு உள்ளம் நெக்குருகி அதனால் உடல் புளகாங்கிதம் அடைந்து ஒருமைப்பட்டு நிற்கும் ஒரு உத்தம வேளை ஆத்மனுக்கு எது ஸத்தியமாய் ஸித்தித்துக் கொடுக்குமோ, அப்படிப்பட்ட குருசரணக்ருபா பலத்தை வேண்டி குவலயத்தில் இக்குணங்கள் சிறக்கும்படியான ஒருநிலை ‘அருட்சக்தி’யால் அமைகிறது.

श्रीमद्गुहानन्दाष्टकं / ஸ்ரீகுஹாநந்த நாதாஷ்டகம்

श्रीमद्गुहानन्दाष्टकं

यत्ताम्रपर्णीतटिनी सुजातं हिमाद्रिशृङ्गे परमापवृद्धिं
मन्मानसह्लादकरं त्रिवेण्यां भजेगुहानन्द पदाम्बुजंतत् 1

स्वात्माराम सुपञ्जरे सुविमले लीनं प्रकाशात्मकं
स्वच्छोद्भासि विमर्शनेऽति महिते हेतुं वरात्माभिधं
स्वाकारस्य निरूपणेऽतिगहने हेतुं गुहात्माह्वयं
वन्देऽस्मद्गुरुनाथमण्डलमहं ब्राह्मेबिले संस्थितं 2

यद्वेदागमशास्त्र सारमवदत्तत्त्वं शिवायै शिवो
यद्वेतान्त सुलक्ष्य मङ्गजरिपोतिं ललाटाम्बकात्
यद्ब्राह्मी सुरदीर्घिका तपनजा संगेमया सादितं
तद्ब्रह्मण्य समाह्वयं गुहपदं ध्यायामि मोक्षप्रदं 3

यत्पीताम्बुधि कुम्भजादि मुनिभिर्ध्यातंतु दह्राम्बरे
यत्पीताम्बरधारिणः सहभवानेत्रस्य मोदंकरं
यच्छान्ताद्रि सुमध्यगं सुमहसां ज्योतिःप्रदं शाश्वतं
तद्ब्रह्मण्य समाह्वयं गुहपदं ध्यायामि मोक्षप्रदं 4

यच्छान्तं शिवमद्वयंत्विति विदुर्वेदान्त वाचःपरं
यच्छान्तास्व कथासनाम्बुजगतं ध्यायन्तिचित्खेपरे
यच्छवेतारुणमब्ज रन्ध्रकमले संस्थं महानन्ददं
तद्ब्रह्मण्य समाह्वयं गुहपदं ध्यायामि मोक्षप्रदं 5

यत्पृथ्व्यादि शिवान्त तत्त्वमभवद्यत्षण्णवत्यात्मक
यद्वर्गाष्टकमातृकाकृतिपरं नादात्मकंचा भवत्
यत्सृष्टयादि सुपञ्चकृत्यकरणे पञ्चात्मकंचा भवत्
तद्ब्रह्मण्य समाह्वयं गुहपदं ध्यायामि मोक्षप्रदं 6

यद्भासा ग्रहतारचन्द्र हुतभुमित्रा: सदा भान्तिखे
यद्रूपा विधि विष्णु विश्वपतयः सेन्द्रादि दिवपालकाः
यन्नित्यं निगमान्त लक्ष्यमचलंत्वेकं सदाख्यंविदु:
तद्ब्रह्मण्य समाह्वयं गुहपदं ध्यायामि मोक्षप्रदं 7

यत्सत्यं सकलान्तरस्थ परचिद्रूपं पराख्यं विदु-
र्यत्सन्मात्र निजस्वरूप विभवंत्वेकं शिवाख्यं विदुः
यत्स्वाकार सुधाब्धिमग्न सुधियोजानन्ति सच्चिद्घनं
तद्ब्रह्मण्य समाह्वयं गुहपदं ध्यायामि मोक्षप्रदं 8

आत्मानन्दभव श्रीमद्गुहानन्दाष्टकं शुभं
चिदानन्देन रचितं यः पठेद्गुह एव सः ॥

ஸ்ரீகுஹாநந்தநாதாஷ்டகம்

யத்தாம்ரபர்ணீ தடிநீஸுஜாதம் ஹிமாத்ரிச்ருங்கே பரமாபவ்ருத்திம்
மந்மாநஸாஹ்லாதகரம் த்ரிவேண்யாம் பஜேகுஹாநந்தபதாம்புஜம்தத் ॥ 1

ஸ்வாத்மாராம ஸுபஞ்ஜரே ஸுவிமலேலீநம் ப்ரகாஶாத்மகம்
ஸ்வச்சோத்பாஸி விமர்ஶநேఽதி மஹிதே ஹேதும் வராத்மாபிதம்
ஸ்வாகாரஸ்ய நிரூபணேఽதிகஹநே ஹேதும் குஹாத்மாஹ்வயம்
வந்தேఽஸ்மத் குருநாதமண்டலமஹம் ப்ராஹ்மேபிலே ஸம்ஸ்திதம் ll 2 ll

யத்வேதாகமஶாஸ்த்ர ஸாரமவதத்தத்வம்ஶிவாயை ஶிவோ
யத்வேதாந்த ஸுலக்ஷ்யமங்கஜரிபோதிம் லலாடாம்பகாத்
யத்ப்ராஹ்மீ ஸுரதீர்கிகா தபநஜா ஸம்கேமயா ஸாதிதம்
தத்ப்ரஹ்மண்ய ஸமாஹ்வயம் குஹபதம் த்யாயாமி மோக்ஷப்ரதம் II 3 II

யத்பீதாம்புதி கும்பஜாதி முநிபிர்த்யாதம்துதஹ்ராம்பரே
யத்பீதாம்பரதாரிண:ஸஹபவாநேத்ரஸ்ய மோதம்கரம்
யச்சாந்தாத்ரி ஸுமத்யகம் ஸுமஹஸாம் ஜ்யோதி:ப்ரதம் ஶாஶ்வதம்
தத்ப்ரஹ்மண்ய ஸமாஹ்வயம் குஹபதம் த்யாயாமி மோக்ஷப்ரதம் ॥4

யச்சாந்தம் ஶிவமத்வயம்த்விதி விதுர்வேதாந்த வாச:பரம்
யச்சாந்தாஸ்வ கதாஸநாம்புஜகதம் த்யாயந்திசித்கேபரே
யச்சவேதாருணமப்ஜரந்த்ரகமலே ஸம்ஸ்தம் மஹாநந்ததம்
தத்ப்ரஹ்மண்ய ஸமாஹ்வயம் குஹபதம் த்யாயாமி மோக்ஷப்ரதம் 5

யத்ப்ருத்வ்யாதி ஶிவாந்த தத்வமபவத் யத்ஷண்ணவத்யாத்மக
யத்வர்காஷ்டகமாதகாக்ருதிபரம் நாதாத்மகம்சா பவத்
யத்ஸ்ருஷ்டயாதி ஸுபஞ்சக்ருத்யகரணே பஞ்சாத்மகம்சா பவத்
தத்ப்ரஹ்மண்ய ஸமாஹ்வயம் குஹபதம் த்யாயாமி மோக்ஷப்ரதம் 6

யத்பாஸா க்ரஹதாரசந்த்ர ஹுதபுமித்ரா: ஸதாபாந்திகே
யத்ரூபா விதி விஷ்ணு விஶ்வபதயஃ ஸேந்த்ராதி திவபாலகா:
யந்நித்யம் நிகமாந்த லக்ஷ்யமசலம்த்வேகம் ஸதாக்யம் விது:
தத்ப்ரஹ்மண்ய ஸமாஹ்வயம் குஹபதம் த்யாயாமி மோக்ஷப்ரதம் ॥7

யத்ஸத்யம் ஸகலாந்தரஸ்த பரசித்ரூபம் பராக்யம் விதுர்யத்
ஸந்மாத்ர நிஜஸ்வரூப விபவம்த்வேகம் ஶிவாக்யம் விதுஃ
யத்ஸ்வாகார ஸுதாப்திமக்ந ஸுதியோஜாநந்தி ஸச்சித்கநம்
தத்ப்ரஹ்மண்ய ஸமாஹ்வயம் குஹபதம் த்யாயாமி மோக்ஷப்ரதம்

ஆத்மாநந்தபவ ஸ்ரீமத்குஹாநந்தாஷ்டகம் ஶுபம்
சிதாநந்தேநரசிதம் ய: படேத்குஹ ஏவ ஸ:

श्रीगुरुगुह स्तोत्रं / ஶ்ரீகுருகுஹ ஸ்தோத்ரம்

श्रीगुरुगुह स्तोत्रं

श्रीताम्रपर्णी तटिनी सुपूतदेशेऽवतीर्णस्त्वति बाल्यएव
विश्वेविरक्तोऽति विचिनवृत्तः यस्तं गुरुं तं शरणं प्रपद्ये

स्वात्मामृताब्धौ विहरिष्णुनात्मानन्दाख्यनाथेन कटाक्षितोयः
श्रीमद्गुहानन्द पदेऽभिषिक्तः गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

नेपालराज्येश समर्पिताऽश्रमे श्रीमद्वदर्याश्रम एवयः स्थितः
भूपाल संसेवितपादपङ्कजः गुरुंगुहं सन्तत मानतोऽस्म्यहं॥

हिमाचले द्वन्द्वसहोविरक्तः स्वात्मावबोधामृत सिन्धुमग्नः
श्रीशान्त भूमी धरनाथ तुल्यः रराजयस्तं गुह मानतोऽस्मि ॥

श्रीकुम्भमेलाख्य महोत्सवेयः श्रीमत्त्रिवेणी तटमा जगाम
जगन्नियन्त्याः परमेशशक्त्या स्सङ्कल्पतस्तं गुह मानतोऽस्मि ॥

वर्णाश्रमाचार विहीन जीवन्मुक्ताग्रगण्यः करुणा सुपूर्णः
भक्तात्रिहन्ताच जगद्विहारीप श्श्री गुहं तं शरणं प्रपद्ये ॥

प्रद्योतनानेक समप्रकाशः विद्युल्लता पुञ्ज समानतेजाः
दृष्टोमया यो गुरु वेषधारी गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

यो दृष्टमात्रेण मदीयचित्त मोहान्धकारस्य दिनेश आसीत्
मदीय हृत्पङ्कजवोधदाता गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

यः पूर्णदृष्टया प्रविलोक्यदेवः श्रीमच्चिदानन्द सुनाथ इत्थं
मामाहनाथस्त्रिमलापहर्ता गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

वेदान्त संस्थाखिल वाक्यराशेः लक्ष्या चिदेकेति गुरूत्तमेन
येनोपदिष्टोऽहमयत्नतोमेदत्तस्स्ववोधोऽपि गुहं तमीडे ॥

गुहस्यतत्त्वं गुरुनाथ रूप गुहे नयेनाति रहस्य भूतं
आशुस्वबोध प्रदमेव सूक्तम्गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

आज्ञापितो द्वादशवर्षकालं रहस्युपास्ति समुपाचरेति
येनस्व नाथेन गुहाभिधेन गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

त्वन्मातृ भुक्तेः परमेवदेया भुक्तिर्नचेन्नास्ति ममापि भुक्तिः
उक्त्वेत्थमात्तं कबलत्रयं यत्येन स्वनाथं तमहं प्रपद्ये ॥

सर्वस्य शास्त्रस्यचतत्त्ववेत्ता पूजारहस्यज्ञ वरिष्ठआशु
भवेतिमामाह गुरूत्तमोयः गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

शान्ताचलस्थं प्रतिवर्षमेव दृष्ट्वा सुतृप्तोभव मां कुमारं
आज्ञप्त इत्थं गुरुणाहियेन गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

पुरीमयोध्यां व्रजसत्वरंत्वं मामेवमुक्त्वा शुतिरोदधेयः
तं सर्वहृत्पद्म गुहान्तरस्थं गुरुं गुहंतं शरणं प्रपद्ये ॥

यस्त्वश्विनौ प्रेषितवान्मदीय रोगस्य शान्त्यै भवरोग वैद्यः
सप्तर्षिपूज्येश शिवैक्यभूतः गुरुं गुहं तं शरणं प्रपद्ये ॥

अनन्तवाग्दान विधान दक्ष: श्रीमच्चिदानन्द रसप्रदाता
यः पुष्यमासेऽजनि कृत्तिकासु गुरुंगुहं तं शरणं प्रपद्ये

श्रीचिदानन्दनाथ विरचितं श्रीगुरुगुह स्तोत्रं संपूर्णं

ஶ்ரீகுருகுஹ ஸ்தோத்ரம்

ஸ்ரீதாம்ரபர்ணீ தடிநீ ஸுபூததேஶேఽவதீர்ணஸ்த்வதி பால்யஏவ
விஶ்வேவிரக்தோఽதி விசிநவ்ருத்த: யஸ்தம் குரும் தம் ஶரணம் ப்ரபத்யே

ஸ்வாத்மாம்ருதாப்தௌ விஹரிஷ்ணுநாத்மாநந்தாக்யநாதேந கடாக்ஷிதோய:
ஶ்ரீமத்குஹாநந்த பதேఽபிஷிக்த: குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே ॥

நேபாலராஜ்யேஶ ஸமர்பிதாఽஶ்ரமே ஶ்ரீமத்வதர்யாஶ்ரம ஏவய: ஸ்தித:
பூபால ஸம்ஸேவித பாதபங்கஜ: குரும் குஹம் ஸந்தத மாநதோఽஸ்ம்யஹம் ॥

ஹிமாசலே த்வந்த்வஸஹோவிரக்த: ஸ்வாத்மாவபோதாம்ருத ஸிந்துமக்ந:
ஶ்ரீஶாந்தபூமீ தரநாத துல்ய: ராஜயஸ்தம் குஹ மாநதோఽஸ்மி ॥

ஶ்ரீகும்பமேலாக்ய மஹோத்ஸவேய: ஶ்ரீமத்த்ரிவேணீ தடமா ஜகாம
ஜகந்நியந்த்யா: பரமேஶஶக்த்யா ஸங்கல்பதஸ்தம் குஹமாநதோఽஸ்மி ॥

வர்ணாஶ்ரமாசார விஹீந ஜீவந்முக்தாக்ரகண்ய: கருணா ஸுபூர்ண:
பக்தாத்ரிஹந்தாச ஜகத்விஹாரீபஶ்ஶ்ரீ குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே ॥

ப்ரத்யோதநாநேக ஸமப்ரகாஶ: வித்யுல்லதா புஞ்ஜ ஸமாநதேஜா:
த்ருஷ்டோமயா யோ குரு வேஷதாரீ குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே

யோ த்ருஷ்டமாத்ரேண மதீயசித்த மோஹாந்தகாரஸ்ய திநேஶ ஆஸீத்
மதீய ஹ்ருத்பங்கஜவோததாதா குரும் குஹம் தம் ஶரணஂ ம்ப்ரபத்யே

ய: பூர்ணத்ருஷ்டயா ப்ரவிலோக்யதேவ: ஶ்ரீமச்சிதாநந்த ஸுநாத இத்தம்
மாமாஹநாதஸ்த்ரிமலாபஹர்தா குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே

வேதாந்த ஸம்ஸ்தாகில வாக்யராஶே: லக்ஷ்யா சிதேகேதி குரூத்தமேந
யேநோபதிஷ்டோఽஹமயத்நதோமேதத்தஸ்ஸ்வவோதோఽபி குஹம் தமீடே

குஹஸ்யதத்வம் குருநாத ரூப குஹே நயேநாதி ரஹஸ்ய பூதம்
ஆஶுஸ்வபோத ப்ரதமேவ ஸூக்தம்குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே

ஆஜ்ஞாபிதோ த்வாதஶவர்ஷகாலம் ரஹஸ்யுபாஸ்தி ஸமுபாசரேதி
யேநஸ்வ நாதேந குஹாபிதேந குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே

த்வந்மாத்ருபுக்தே: பரமேவதேயா புக்திர்நசேந்நாஸ்தி மமாபி புக்தி:
உக்த்வேத்தமாத்தம் கபலத்ரயம் யத்யேந ஸ்வநாதம் தமஹம் ப்ரபத்யே

ஸர்வஸ்ய ஶாஸ்த்ரஸ்யச தத்த்வவேத்தா பூஜாரஹஸ்யஜ்ஞ வரிஷ்டஆஶு
பவேதிமாமாஹ குரூத்தமோய: குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே ॥

ஶாந்தாசலஸ்தம் ப்ரதிவர்ஷமேவ த்ருஷ்ட்வா ஸுத்ருப்தோபவ மாம் குமாரம்
ஆஜ்ஞப்த இத்தம் குருணாஹியேந குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே ॥

புரீமயோத்யாம் வ்ரஜஸத்வரம்த்வம் மாமேவமுக்த்வா ஶுதிரோததேய:
தம் ஸர்வஹ்ருத்பத்ம குஹாந்தரஸ்தம் குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே ॥

யஸ்த்வஶ்விநௌ ப்ரேஷிதவாந்மதீய ரோகஸ்ய ஶாந்த்யை பவரோக வைத்ய:
ஸப்தர்ஷிபூஜ்யேஶ ஶிவைக்யபூத: குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே ॥

அநந்த வாக்தாந விதாந தக்ஷ: ஶ்ரீமச்சிதாநந்த ரஸப்ரதாதா
ய: புஷ்யமாஸேఽஜநி க்ருத்திகாஸு குரும் குஹம் தம் ஶரணம் ப்ரபத்யே

ஶ்ரீகுருகுஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

श्रीगुरुप्रकाशपञ्चकं / ஶ்ரீகு³ரு ப்ரகாஶ பஞ்சகம்

श्रीगुरुप्रकाशपञ्चकं
श्रीअरुट्शक्ति नागराजन् -श्रीकामेशानन्दनाथ विरचितः

गणपतिसपर्या तत्वप्रकाशं गुहानन्दमण्डल कविताप्रकाशं
चिदानन्दपदाब्ज रेणुप्रकाशं अनन्तानन्दश्रीगुरुप्रकाशं

श्रीविद्यामार्ग सत्यप्रकाशं ओघत्रयमण्डल नाथप्रकाशं
जगद्गुरुनाथमित्रप्रकाशं अनन्तानन्दश्रीगुरुप्रकाशं

वेदान्तरूपविमलप्रकाशं अत्यात्मरूपसमयप्रकाशं
अहंबोधतत्व आत्मप्रकाशं अनन्तानन्दश्रीगुरुप्रकाशं

नित्यात्मरूप ज्ञानप्रकाशं निरन्तराद्वैतभोधप्रकाशं
सामादिवेद पूर्णप्रकाशं अनन्तानन्दश्रीगुरुप्रकाशं

महानित्यारूपमातृप्रकाशं पदद्वयानन्तपादप्रकाशं
कामेशानन्द करुणाप्रकाशं अनन्तानन्दश्रीगुरुप्रकाशं

ஶ்ரீகு³ரு ப்ரகாஶபஞ்சகம்
ஶ்ரீஅருட்ஶக்தி நாக³ராஜன் – ஶ்ரீகாமேஶாநந்த³நாத² விரசித꞉

க³ணபதிஸபர்யா தத்வப்ரகாஶம்கு³ஹானந்த³மண்ட³ல கவிதாப்ரகாஶம்
சிதா³னந்த³பதா³ப்³ஜ ரேணுப்ரகாஶம்அனந்தானந்த³ஶ்ரீ கு³ருப்ரகாஶம்

ஶ்ரீவித்³யாமார்க³ ஸத்யப்ரகாஶம்ஓக⁴த்ரயமண்ட³ல நாத²ப்ரகாஶம்
ஜக³த்³கு³ருநாத²மித்ரப்ரகாஶம்அனந்தானந்த³ஶ்ரீ கு³ருப்ரகாஶம்

வேதா³ந்தரூபவிமலப்ரகாஶம்அத்யாத்மரூப ஸமயப்ரகாஶம்
அஹம்போ³த⁴தத்வ ஆத்மப்ரகாஶம்அனந்தானந்த³ஶ்ரீ கு³ருப்ரகாஶம்

நித்யாத்மரூப ஜ்ஞானப்ரகாஶம்நிரந்தராத்³வைத போ⁴த⁴ப்ரகாஶம்
ஸாமாதி³வேத³ பூர்ணப்ரகாஶம்அனந்தானந்த³ஶ்ரீ கு³ருப்ரகாஶம்

மஹாநித்யாரூப மாத்ருப்ரகாஶம்பத³த்³வயானந்த பாத³ப்ரகாஶம்
காமேஶானந்த³ கருணாப்ரகாஶம்அனந்தானந்த³ஶ்ரீ கு³ருப்ரகாஶம்

ஸ்ரீவித்யா பிரச்நோத்ர ரத்னமாலிகா

(தொகுப்பு : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)

கே :மோக்ஷதத்தை எளிதாக அடையச் செய்வது எது?

ப : ஸ்ரீ குருவின் பாதுகை

கே : சம்சார தாபத்தினை குளிர வைப்பது எது?

ப : அன்னையின் பாததூளி

கே : காமேஸ்வரரின் மனத்தை மோஹிக்க செய்வது எது?

ப : அன்னையின் கடைக்கண் பார்வை

கே : மிகவும் பலம் வாய்ந்தது எது?

ப : வைராக்கியம் மிகுந்திருந்தும் மனிதர்களை மோஹிக்க வைக்கும் அன்னையிம் மஹாமாயை

கே : மிகவும் ஆச்சர்யத்தை தருவது எது ?

ப : பாபத்தை போக்கும் என்று தெரிந்திருந்தும் அன்னையை துதிக்காமல் இருப்பது

கே : ஸ்ரீ வித்யையில் முதலில் உபதேசிக்கப்படும் மந்திரம் எது?

ப : ஸ்ரீ மஹா கணபதி

கே : ஸ்ரீ பாலா மந்திரம் எப்படி பெறப்பட வேண்டும்?

ப : தீக்ஷையுடன்

கே : தீக்ஷையின் போது புது நாமம் எப்படி ஸ்ரீ குருவால் தரப்படுகிறது?

ப : சிஷ்யன் ஸ்ரீ குருவின் அங்கத்தை ஸ்பர்சிக்க அந்த அங்கத்தின் பீஜாக்ஷரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு

கே : ஸ்ரீவித்யா என்பது என்ன?

ப : ப்ரஹ்மவித்யையின் அடைவுக்கு அனுஷ்டிக்கப்படும் ஸாதனா முறை.

கே : அன்னை லலிதையின் முக்கிய மந்திரம் என்ன?

ப : பதினைந்து அக்ஷரங்கள் கொண்ட பஞ்சதசி மந்திரம். இது வித்யை என்று கூறப்படும். இதில் கவிலிருந்து தொடங்கும் காதி வித்யை சிறந்தது என்பர்.

கே : ஏன் ஸ்ரீமஹாகணபதி மந்திரம் முதலில் உபதேசிக்கப்படுகிறது.

ப : அது ப்ரத்யூக சமனி. எதுவும் மறக்காமல் நினைவில் இருக்கும்.

கே : பண்ட புத்திரர்களை வதம் செய்தது யார்?

ப : ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி

கே : ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமங்களை ஸ்ரீ ஹயக்ரீவர் அகஸ்தியரிடம் முதலில் என் கூறவில்லை?

ப : ரஹஸ்யத்தை கேட்காமல் கூறக்கூடாது, சிரத்தையுடன் கேட்பவர்க்கே கூற வேண்டும் என்பதால்.

கே : வரிவஸ்யா ரஹஸ்யம் என்ற ஸ்ரீ வித்யா விஷயங்களை கூறும் நூலை ஆக்கியது யார்?

ப : மஹான் ஸ்ரீ பாஸ்கர ராய மகி

கே : மஹான்ஸ்ரீ பாஸ்கர ராயர் செய்த யாகத்தில் வித்வான்கள் எந்த தேவிகளின் விவரங்களை கூற அவர்கள் எழுதமுடியாமல் கை சளைத்தனர்?

ப : 64 லக்ஷம் கோடி யோகினிகளின் பெயர் விவரங்களை

கே : அவ்வாறுகூறும்போது அவர் தோளில் அம்பாள் ஆரூடையாய் இருந்ததை கண்டு கொண்டவர் யார்?

ப : ஸ்ரீ குங்குமானந்தர் என்பவர்

கே : ஸ்ரீ குங்குமானந்தருக்கு அந்த பெயர் எப்படி ஏற்பட்டது?

ப : அவர் மீது உத்தூளனம் செய்யப்படும் விபூதி அனைத்தும் குங்குமமாக மாறிவிடுவதால்.

கே : பஞ்ச்தசி மந்திரத்தை புனருக்தி (திரும்பவும்)) எண்ணாமல் இருந்தால் வருவது என்ன?

ப: ஒன்பது பீஜாக்ஷரங்கள்.

கே : சீடர்களுக்கு தீக்ஷையின் போது கண்ணைக் கட்டி ஶ்ரீ குருநாதர் சொல்வது என்ன?

ப : த்ரைபுரா சித்தாந்தம்

கே : த்ரைபுரா சித்தாந்தத்தில் கூறப்படும் தத்துவங்கள் எத்தனை?

ப : முப்பத்தாறு

கே : சாமயிக பூஜையில் சாதகர்களுக்கு எவ்விதம் பாத்திரங்கள் அளிக்கப்படுகிறது?

ப : தீக்ஷா ஜ்யேஷ்டர்களின் வரிசையில்

கே : நவாவரண பூஜையில் விசேஷார்க்யயத்தின் தத்துவம் என்ன?

ப : அது சுத்த ஞானஸ்வரூபம். எந்த. த்ரவியம் வைத்துக்கொண்டாலும் அது அதன் பிரதிநிதிதான்

கே : சாமயிக பூஜையை சாதகர்கள் உட்கார்ந்து கொண்டு செய்யலாமா?

ப: பூர்ண தீக்ஷை ஆனவர்கள் உட்கார்ந்து கொண்டு செய்யலாம், ஆனால் ஶ்ரீ குருவின் சந்நிதியில் அனைவரும் நின்று கொண்டுதான் செய்ய வேண்டும். தத்துவ சோதனம் மட்டும் உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும்.

கே : சாமயிகர்கள் ஶ்ரீ குரு தர்ப்பணம் எவ்வாறு செய்ய வேண்டும்?

ப : ஶ்ரீகுரு சந்நிதியில் ஸ்வகுருவை அவரது ஶ்ரீ பாதங்களிகும், பரமகுரு, பரமேஷ்டீ குருநாதர் பாதுகா தர்பணங்களை அவரது சிர்சிலும் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் ஶ்ரீ குரு பாதுகா தர்பணத்தை தனது சிரசில் செய்ய வேண்டும்.

கே : விஷேஷார்ய அமிர்தத்தை பூஜை செய்யாத காலங்களில் ஸ்வீகரிக்கலாமா?

ப : தவறு என்றே சாத்திரங்கள் கூறுகினறன.

கே : ஶ்ரீ வித்யா சாதனையில் ஒருவர் என் ஈடுபட வேண்டும்?

ப: வேதவேதாந்தங்களை கற்றுணர்ந்து, சாதன சதுஷடயங்களை அனுஷ்டித்து, மஹாவாக்கியங்கள் அனுபவமாகும் பொருட்டு முமூட்சுவானவனை சித்த சுத்திக்காக ஶ்ரீ வித்தையில் ஶ்ரீகுரு ஈடுபடுத்துகிறார். இதற்காகத்தானே தவிர மற்ற இகசவுக்கியங்களுக்ககவோ, பெருமைக்காகவோ வித்தையில் ஈடுபடுவது ஸ்லாக்யமல்ல

கே : ஶ்ரீவித்யாநவாவரண பூஜை எப்படி மஹாவாக்யங்களை அனுபவப்படுத்துகிறது ?

ப : யாஹாமந்திற பிரவேசம் முதல்சாந்திஸ்தவம் வரை ஒவ்வொரு செயலும் ஆத்மானுசந்தானத்தின் ஒவ்வொரு படியே. இதன் விவரங்கள் ஸபர்யா வாசனை மற்றும் அதையொட்டி எழுதப்பட்ட சிதானந்த அலை முதலிய கிரந்தங்களில் கண்டு தெளியலாம்.

சக்தி வாக்கியம்

ஜயசக்தி.

சக்தி வாக்கியம்

(சந்தம் : சிவவாக்கியம்)

வேதம் நாலு அங்கம் ஆறு ஊன்றி கூறும் மந்திரம்
பாதம் தலை மீதில் வைத்து பார்த்து கூறும் மந்திரம்
வாதம் வந்தபோது நம் வலியை நீக்கும் மந்திரம்
லலிதை லலிதை என்னும் மந்திரம் சாத்திரங்கள் ஓதுமே (1)

பாத்திரங்கள் பரப்பி வைத்து பூஜை செய்வார் பாரிலோர்
காத்திர மிவ்வுடல் என்று காத்திடுவ தெங்கனே
பாத்திரங்கள் பரப்பி வைக்கும் பூஜகரே கேளுமின்
பரத்தின் சக்தி லலிதையை பார்த்திடும் உம்முளே (2)

பிண்டமிதில் ஐம்பதை பொருத்தி வைப்பார் பூஜகர்
அண்டமிதில் அறிவு வந்து அமர்ந்தவா ரதெங்கனே
அண்டமிதில் உள்ள அறிவை நீர் பிண்டமுள்ளே பொருத்தினால்
கண்டகண்டமான மாய்கைமுன் மீண்டு வரலாகுமே(3)

கலியின் கோலம் என்றுமே காலம் வீணாய் செய்வரே
கலியின் கோலம் என்றிடில் கர்மயோகம் பொய்யதோ
பலிதமாகும் மந்திரம் பார்த்து கூற வல்லீரேல்
லலிதையென்னும் இன்பம் வந்து லீலையைச் செய்யுமே(4)

க வில் தொடங்கும் வித்தையை காதில் சொன்னார் குருவுமே
தாவும் மனத்தினை திருப்பி உள்ளே காணுவீர்
தாவும் மனத்தை திருப்பி உள்ளே கண்டபின்
மேவும் லலிதை திரு நகரில் ஆக்ஷி செய்யலாகுமே(5)

ஸ்ரீநகரம் சகத்தை விட்டு தூரமென்று கூறுவார்
ஸ்ரீநகரம் சென்று வந்தோர் ஜகத்தில்
ஆரும் உள்ளரோ
சரீரமிதினுள்ளே ஸ்ரீசக்கரத்தை அறிவீரேல்
ஸ்ரீநகரம் உம்முள்ளே சொலிக்கும் லலிதை வசிப்பளே(6)

தொல்லை தொல்லை என்று வாழ்வினை கூறுவார்
இல்லை இல்லை என்றுமே லலிதை வேதம் கூறுமே
தில்லை உள்ளே வசிக்கும் சிவன் சேர்ந்தவாரதெங்கனே
எல்லை இல்லை லலிதையும் எம்முளே இருப்பளே(7)

மண்ணும் கல்லும் வைத்து வீடு மேலே மேலே கட்டுவார்
கண்ணும் கருத்தும் அதிலே வைத்து காலமதை கழிப்பரே
மின்னும் லலிதை மேனி தன்னில் மெய்யாய் வாழ்வதறிந்திடில்
விண்ணில் உள்ள தெய்வத்தை வீட்டில் காணலாகுமே(8)

அஞ்சு அஞ்சு புலனை வைத்து ஆசையை அடைவரே
அஞ்சு அஞ்சு புலனும் உள்ளே ஆனவாறு அறிவரோ
அஞ்சு அஞ்சு புலனும் லலிதை கையில் ஆயுத மாகுமே
கொஞ்சி கொஞ்சி குலாவிடும் குழந்தையாக மாறுவார்(9)

அவித்தையும் அனாதியோ அகண்ட சக்தி அனாதியோ
தவித்திடும் தாபத்தால் தோன்றும் மனம் அனாதியோ
பவித்திடும் பிராரப்தம் போகமும் அனாதியோ
குவித்திடும் கொற்றவை கண்முன் நிற்கும் காட்சியே(10)

சண்ட முண்டனைக் கொன்ற சண்டிகை லலிதையே
விண்டுரைக்கும் வேதத்துள் விளங்குகின்ற லலிதையே
மாண்டுகை உபனிஷத்தில் மேவுகின்ற லலிதையே
மாண்டு போகும் மாந்தர்காள் போற்றுமின்கள் போற்றுமின்(11)

என்புதோல் போர்த்த உடல் இறவாது போகுமோ
கண்புரைத்துப் போகுமுன் கொற்றவளை காணுமின்
விண்ணுறையும் தெய்வத்துள் வைத்தாரே வள்ளுவர்
மண்ணுறையும் மாந்தரே மறவாது போற்றுமின்(12)

அன்பு கொண்டு வாழ்வதே மனித வாழ்வின் இலக்ஷியம்
வம்பு செய்யும் பேதைகாள் வேதாந்தம் கேளுமின்
அம்பு போன்ற அஞ்சு புலன் அவளின் கை ஆயுதம்
நம்பு நம்பு என்று சொல்லும் நாலுவாக்கியம் நவிலுவீர்(13)

ரக்தபீஜன் வேறல்ல ரத்தம் கொண்ட உடலிது
பக்தி செய்யும் மாந்தருக்கு பளிச்சென்று தெரியுமே
சக்தியவள் செய்வளே சம்ஹாரம் மனமிதை
உக்திகொண்டு பாருமின் உன்னுள்ளே லலிதையை(14)

காலம் காலம் என்று காலம் கடத்தும் பேதைகாள்
காலம் வித்தை கருமம் வித்தை குணத்தாலே பாருமின்
ஓலம் கொண்டு ஓடிடும் அவித்தையும் உம்முளே
பாலமாக இதுக்குமந்த குருவின் பாதம் உண்மையே(15)

லலிதை என்று சொல்ல சொல்ல லபிக்குமே ஆனந்தம்
லலிதை என்று சொல்ல சொல்ல தோன்றிடும் லக்ஷியம்
பலிதமாக ஆகிடும் பரகதியும் கதித்திடும்
சலிக்கும் வாழ்வின் சங்கதி சித்தத்தில் தோன்றிடும்(16)

அருக்கியம் தன்னை ஆவஹிக்கும் ஆன்றபெரிய அன்பரே
அருக்கியம் என்பதிங்கே ஆன்மஞான தீர்த்தமாம்
அருக்கியத்தை வைத்து நீர் ஆற்றும் பூஜை என்பது
திருக்கு திருசயம் அறிந்திடும் வேதாந்த காரியம்(17)

முழிப்பு வந்த எழுந்த பின்னர் கனவு பொய்யாய்ப் போகுமே
விழிப்பில் காணும் வியனுலகு வேறாக தோன்றிடும்
கழித்த காலம் கண் நொடியில் கரைந்திடும் மறைந்திடும்
அழிக்கும் உடல் மாய்ந்திடும் அதற்குள் அவளை அறிவீரே!(18)

தந்திரத்தின் சூக்குமம் தரணியிலே உயர்ந்தது
தந்திரத்தின் சூக்குமம் தரணியோர்கள் அறிகிலார்
தந்திரத்தின் சூக்குமம் தரணியோர்கள் அறிந்திடில்
சந்திரனும் சூரியனும் சுற்றும் வகை தெரியுமே(19)

வலது கண்ணும் இடது கண்ணும் சந்திரனும் சூரியன்
பலவகையாய் தோன்றுமிந்த பாரும் அவள் படைப்புதான்
தலையிலே வைத்து போற்றும் பாதுகையின் பொருளவள்
கலைந்திடாத உள்ளத்தில் கருத்து தோன்றலாகுமே(20)

ஆதிசிவன் பத்தினி அஹம் பதத்தின் நாயகி
வேதியர்கள் போற்றுகின்ற வேதத்தின் சிகையவள்
பாதிமதி சூடி நிற்கும் பைந்தவத்தின் பொருளவள்
சோதியான சுடரிலே சோபிக்கும் சுந்தரி(21)

அன்பிலே தோய்ந்து நிற்கும் அம்பிகையின் வழியிது
வம்புசெய்யும் மனிதருக்கு தோன்றாத வழியிது
சம்புநாதர் சொல்லிய சஹஸ்ரார வழியிது
தும்புரு நாரதர் தினம் செல்லும் வழியிது (22)

காமம் வேண்டாம் என்று சொன்னால் கொடிய மனசு கேட்குமோ
சாமம் நாலு வேதமும் சாத்திரங்கள் பல இருக்கையில்
நாமம் சொல்லி நல்லவளின் தாளை பற்றுமின்கள் பற்றுமின்
சேமம் வந்து சேர்ந்திடும் சகத்தில் நன்றாய் வாழலாம் (23)

நாளும் கோளும் சுற்றியே நாட்கள் போக்கும் மாந்தரே
நீளும் கர்மம் குறையுமோ நாட்கள் நகர்ந்து போகுமே
நாளும் கோளும் சுற்றி வரும் நாயகியின் பாதத்தை
கோளும் செம்மையாகுமே நலங்கள் யாவும் சேருமே (24)

பைந்தவத்தின் பைங்கிளி பேதம் போக்கும் தாயவள்
ஐந்தவிக்கும் அரசியாம் அருட்சக்தி ஆனவள்
சைந்தவியின் கண்ணனின் சகோதரியை போற்றுமின்
பந்தமெல்லாம் அகன்றிடும் பாதையும் புரிந்திடும் (25)

அன்பு என்று அரற்றுவார் அவனியிலே உள்ளவர்
அன்பு வைத்த உடலிது அந்தகனின் சொத்தலோ
அன்பு வைத்த உடலுக்குள் ஆண்டவளைக் காணுமின்
வம்பு இன்றி விலகிடும் யமனும் கண்ணில் மறையுமே (26)

ஆயிரம் பேச்சு பேசும் அகிலத்தின் மாந்தர்காள்
ஆயிரம் நாமங்கள் அவளுக்கென்று உள்ளது
ஆயிரம் நாமத்தை அறிந்து கூற வல்லீரேல்
போய் விடும் வினையெலாம் போக்கிடம் வேறில்லையே (27)

அன்னையோட மந்திரம் அநாதியான மந்திரம்
சென்னியிலே வைத்து சீவர் தினம் ஜெபிக்கும் மந்திரம்
சன்னதியாம் குருக்கள் செவியில் செப்பினிற்கும் மந்திரம்
கன்னல் போன்று காதினிக்கும் காதிவித்தை வித்தையே (28)

சதாசதா சுந்தரியை செப்புவோர்கள் சீடர்கள்
நிதானமாக நித்தியம் நாவில் ஊரும் மந்திரம்
சதாசிவன் சன்னதியில் சேர்த்து வைக்கும் மந்திரம்
இதாமிதாம் மபிராமியின் ஈகாரமான மந்திரம் (29)

ஆயிரங்கள் ஆயிரங்கள் அநேகமுண்டு வித்தைகள்
பாயிரங்கள் பாயிரங்கள் பாரிலுண்டு பாடல்கள்
தாயவளின் வித்தைக்கீடு தாரணியில் வேறுண்டோ
சேய்கள் நம்மை காத்து நிற்கும் சேருமின்கள் சேருமின் (30)

நோய்நொடிகள் நீக்குகின்ற அவுஷதமாம் அவள்பெயர்
காய்கறிகள் ஆக்குகின்ற காமினியும் அவளுரு
வாய் வழியே வீழும் ஜன்மவேரழிக்கும் வித்தையாம்
தாய் வழியே வந்த ஜன்மம் தாய் வழியே தீர்ந்திடும் (31)

ஆதிசிவன் அன்று செய்த அநாதியான பூஜையை
நேதி நேதி நேதி என்று கூறி மறை மதிக்கும் பூஜையை
பாதி உடல் பத்தினியை பராவென்னும் பூஜையை
வேதிகட்டி ஆற்ற வல்லார் வியனுலகில் உள்ளரோ (32)

நீரை நடுவில் நாட்டுவைத்து நீண்ட பூஜை செய்குவீர்
பாரை தன்னுள் பார்த்து வைக்கும் பாதையை அறிவீரோ
பாரை தன்னுள் பார்த்து நிற்கும் பூஜை தன்னை செய்திடில்
நீர் நிரப்பும் மாத்திரைகள் நம்முள் கூடலாகுமே (33)

குசுகுசுத்து கூறுவீர் பசுக்கள் என்று அகற்றுவீர்
மசமசக்கும் மாய்கையை மாற்றும் வித்தையல்லவோ
நசநசத்து போகும் உடலில் நாட்டமதை போக்கிடில்
கசகசக்கும் கன்மங்கள் கோடி தூரம் ஓடுமே (34)

சந்தனத்தால் மண்டலங்கள் சாற்றும் பூஜை செய்குவீர்
உந்தும் மனம் உண்மையிலே ஊறும் மண்டலமல்லவோ
உந்தும் மனம் தன்னை ஒரு க்ஷணம் ஒடுக்கினால்
சந்தனமாய் மணக்குமே சாற்றும் பூஜை அதுவலோ (35)

பரந்து பரந்து காரியம் பலகோடி செய்கிறீர்
விரிந்து பரந்த வியனுலகில் வீணான செயலதே
பரமான பராபக்தி பாவனையாய் செய்திடில்
உரமாகும் சக்தியால் உயர்வுகொண்டு உய்வரே (36)

ஆறுகாலம் செய்யும்படி ஆகமங்கள் கூறிடும்
காருகாலம் வந்தபின்னர் கார்மேகம் பொழியுமே
பேருகாலம் வந்தவுடன் சேயும் வந்து விழுந்திடும்
நேரம் காலம் இல்லையாம் மேருபூஜை செய்யலாம் (37)

களத்தகத்து காணியில் நெற்பயிர் உலர்த்தலாம்
மனத்தகத்து மேருவை தினம்தினம் பொருத்தலாம்
சினத்தகத்து அகற்றினால் சின்மயம் தோன்றிடும்
உளத்தகத்து செய்யும் பூஜை உயர்விலும் உயர்ந்தது (38)

ஊதல்காற்று வீசுகையில் உடலது நடுங்கிடும்
ஊக்கமது பெருகினால் உள்ள நடுக்கம் நீங்கிடும்
தேக்கமறு நினைவினால் தார்ட்யம் கைகூடிடும்
வாக்கமரும் தேவியும் வைராக்கியம் வந்திடும் (39)

ஐம்புலனும் மலரது அவனியில் மணந்திடும்
தும்புரு நாரதர் அலைந்திடும் மனமதே
சம்புநாதர் ஆடிடும் சபையும் அந்த அசபையே
வம்புபேச்சை விலக்கினால் வேதப்பொருள் விளங்குமே (40)

(வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம்)

மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம்

மதுமதியின்‌ கடிதங்கள்‌ – கடித வடிவில்‌ அமைந்த நாடகம்

(நாடக ஆக்கம் – வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்‌)

ஆதாரம் – குறிப்பு : ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில்‌ 448 வது நாமா “ஸ்வஸ்தி மதி” என்பது

உலகவிவகாரம்‌ உண்மையல்ல. இருப்பது போல்‌ தோன்றும்‌. உண்மையானது-ஸத்தானது, பரப்ரஹ்மம்‌ ஒன்றே. இதுவே தான்‌ ஆத்மா. இதன் முறைப்பெண்ணாக வர்ணிக்கப்படுகிறது.

“ஸ்வஸ்திமதி” -என்ற பெயர்‌ (இது ப்ராதிபாஸிக ஸத்யம்‌)

“விஷயா” – இது வ்யாவகாரிக ஸத்யம்‌.  (ஆத்மாவின்‌ காதலியாக வர்ணிக்கப்படுகிறது).

“மதுமதி” – புத்தியின்‌ உருவகம்‌.

கடித வடிவில்‌ அமைந்த நாடகத்தில்‌ இடம்பெறும்‌ கதா பாத்திரங்கள்‌:

மனமோஹனன்‌ : கதாநாயகன்‌ (சஞ்சலத்தோடு கூடிய மனம்‌)

ஸ்வஸ்திமதி : கதாநாயகி

(ஏகரூபமாக வ்யாவஹாரிகத்திற்கும்‌, பிராதிபாஸிகத்திற்கும்‌ விலக்ஷணமாய்ப்‌ பாரமார்த்திக ஸத்தாரூபமாய்‌ உள்ள ஆத்மா. கதாநாயகனின்‌ முறைப்பெண்‌)

விஷயா: கதாநாயகனின்‌ காதலி (பஞ்சேந்த்ரிய விஷயங்கள்‌)

மதுமதி : கதாநாயக, நாயகிகளின்‌, தோழி (புத்தி)

இடம்‌ : காயாபுரி (அவர்கள்‌ வசிக்கும்‌ நகரம்‌)

மனமோஹனனுக்கு மதுமதி எழுதுவது,

ஒ மனமோஹனா ! உன்‌ போக்கு மிகவும்‌ விசித்திரமாய்‌ இருக்கிறது. நீ குழந்தையாய்‌ இருந்தபோதிலிருந்தே என்‌ நண்பன்‌. அப்போதெல்லாம்‌ நீ என்‌ அருகிலேயே இருப்பாய்‌. இப்போதெல்லாம்‌ நீ எதைப்பார்த்தாலும்‌ அது வேண்டும்‌-உடனே வேண்டும்‌ என்று சொல்லி அதையடைய பாடுபடுபிறாய்‌ அது கிடைத்ததும்‌ இன்னொன்று. அதற்குப்‌ பிறகு மற்றொன்று இப்படி நீ ஓடிக்கொண்டே இருக்கிறாய்‌.

இப்போது நீ ஒரு இளைஞன்‌. “ விஷயா” என்ற பெண்ணை நீ திருமணம்‌ செய்துகொள்ளப்போவதாகப்‌ பேச்சு அடிபடுகிறது ““விஷயா” உன்னைத்‌ தன்‌ வசப்படுத்திக்கொண்டுவிடப்போவதாகவும்‌ கேள்விப்படுகிறேன்‌.

ஓ மனமோஹனா! ஸ்வஸ்திமதி என்ற முறைப்பெண்‌ ஒருத்தி இருப்பதை நீ மறந்துவிட்டாய்‌ போலும்‌! அவள்‌ உனக்காகவே வெகுநாட்களாகக்‌ காத்துக்கொண்டிருக்கிறாள்‌. நீ ஒரு நாள்‌ நிச்சயம்‌ அவளை சந்திப்பாய்‌ என்று எண்ணி உலகத்தாரின்‌ கண்களுக்குத்‌ தெரியாமல்‌ அவள்‌ உன்னைச்‌ சுற்றிக்கொண்டு இருக்கிறாள்‌.

அவள்‌ நிலைமையைப்‌ பொருமல்தான்‌ நான்‌ இந்தக்‌ கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்‌. உடனே அவளை சந்திப்பாய்‌ என்றும்‌ உன்னைக்கேட்டுக்கொள்கிறேன்‌. மற்றவை நேரில்‌.

இவண்‌, மதுமதி

தோழி மதுமதிக்கு,

உன்‌ கடிதத்தை எனது அவசரமான பல வேலைகளுக்கு இடையே நான்‌ பார்க்க நேர்ந்தது உன்‌ அதிர்ஷ்டமே! உன்‌ கடிதத்தைப்‌ பார்த்தும்‌ எனக்குச்‌ சிரிப்புத்தான்‌ வருகிறது. எனக்கு நீ கூறியபடி “ஸ்வஸ்திமதி’ என்ற எந்த முறைப்பெண்ணும்‌ இருப்பதாகத்‌ தெரியவில்லை. விஷயாவும்‌ நானும்‌ ஒருவரையொருவர்‌ மிகவும்‌ நேசிக்கிறோம்‌. நான்‌ செல்லும்‌ வேகத்திற்கு ஈடுகொடுக்க அவள்‌ ஒருவளாலேயே முடியும்‌. அவள்‌ வசத்தில்‌ நான்‌ இருப்பதாக எழுதியிருந்தாய்‌. உண்மையில்‌ விஷயா தான்‌ என்‌ வசத்தில்‌ இருக்கிறாள்‌, மேலும்‌ அவள்‌ பல்வேறு ஆபரணங்களை அணிந்துகொண்டு எவ்வளவு அழகுடன்‌ இருக்கிறாள்‌ தெரியுமா ? ஸ்வஸ்திமதி என்ற முறைப்பெண்‌ நீ கூறியபடியே நான்‌ அறியாமல்‌ இருந்தாலும்‌, அவளுக்கு இத்தகைய சிறப்புக்கள்‌ ஏதேனும்‌ உண்டா ? சொல்‌. விஷயாவையே நான்‌ திருமணம்‌ செய்துகொள்ளப்போகிறேன்‌ என்பதில்‌ நான்‌ மிகவும்‌ உறுதியாக இருக்கிறேன்‌.

எனக்கு நிறைய வேலைகள்‌ உள்ளன. எனவே தொடர்ந்து கடிதம்‌ எழுதி என்னைத்‌ தொந்தரவு செய்யாதே.

இவண்‌,

மனமோஹனன்‌.

நண்பன்‌ மனமோஹனனுக்கு மதுமதி எழுதியது:-

ஒ! மனமோஹனா, உனக்கு என்ன ஆயிற்று ? ஸ்வஸ்திமிதியுடன்‌ கூடி விளையாடி இன்புற்றதையெல்லாம்‌ நீ மறந்து விட்டாய்‌ போலும்‌! உன்‌ இதய குஹையில்‌ “அவள்‌” எப்போதும்‌ இருப்பதாக அல்லவோ பெரியவர்கள்‌ கூறுகிறார்கள்‌ ! நீயானால்‌ அவளைப்‌ பார்த்ததே கிடையாதது போல்‌ பேசுகிறாயே! உன்‌ அருகிலேயே அவள்‌ “இப்போதும்‌’ இருக்கிறாள்‌ என்பதே என்‌ தீர்மானம்‌ “விஷயா’ விடமே உன்‌ முழு கவனமும்‌ இருக்கையில்‌ நீ எங்ஙனம்‌ ஸ்வஸ்திமதியை காணஇயலும்‌? விஷயாவைக்‌ கண்டு வியந்து பல விதமாய்‌ கூறினாய்‌! அதெல்லாம்‌ நீயாக கற்பனை செய்து கொண்டவை. அவள்‌ ஒரு மாயக்காரி. அவள்‌ இதற்கு முன்‌ பலரை மயக்கி “காலன்‌” என்ற தன்‌ அண்ணனிடம்‌ பிடித்துக்‌ கொடுத்திருக்கிறாள்‌! அவள்‌ அண்ணன்‌ மிகக்‌ கொடியவன்‌, பாரபட்சமில்லாமல்‌ அனைவரையும்‌ தனது சிறையில்‌ அவர்களை அடைத்து விடுவதே அவனது தொழில்‌! ஸ்வஸ்திமதி அவளிடமிருந்து முற்றிலும்‌ வேறான ஸ்வபாவமுடையவள்‌ அவள் அத்தகைய மாய வேலைகளை அறியாத சாதுப்பெண்‌. மிகுந்த அடக்கமுடையவள்‌.விஷயாவை சிறிது மறந்து விட்டு ஸ்வஸ்திமதியின்‌ சிறப்பாக, நான்‌ கூறுவதை சற்று பொறுமையுடன்‌ கேள்‌:-

விஷயா பல்வேறு ஆபரணங்களைப்‌ பூண்டிருப்பதாகக்‌ கூறினாயல்லவா ? உண்மையில்‌

அவை ஸ்வஸ்திமதிக்குச்‌ சொந்தமானவை. “முன்பொரு நாள்‌’ அவை அவளால்‌ கவர்நது செல்லப்பட்டன. ஆனாலும்‌ ஸ்வஸ்திமதி இயற்கையான அழகுள்ளவள்‌. அவளுக்கு அணிகலன்‌ எதுவும் தேவையில்லை. அவளை ஒருமுறை நீ கண்டிப்பாக சந்தித்தாயானால்‌ நீ உண்மையை உணர்ந்து இன்புறுவாய்‌. எனவே ‘விரைவில்‌’ அவளை சந்தித்து உண்மையை அறிந்து ஆனந்தமடைவாயாக என்று உன்னை கேட்டுக்கொள்கிறேன்‌.

இவண்‌, உன்‌ நலம்‌ நாடும்‌,

மதுமதி.

ஓ! தோழியே !

நீ உன்‌ “அறிவு’ வன்மையினால்‌ என்னை சலனப்பட வைக்கிறாய்‌. மேலும்‌ எனக்கு *சஞ்சலம்‌’ என்ற நோய்‌ வேறு ஏற்பட்டிருக்கிறது ! ஆனாலும்‌ விஷயா என்னை வந்துபார்க்காமல்‌ அவள்‌ பாட்டிற்கு மகிழ்ச்சியாக உலவி வருகிறாள்‌. அவள்‌ என்னைப்பற்றிக்‌ கவலைப்படுவதாகத்‌ தெரியவில்லை. என்றாலும்‌ அவள்‌ மீது நான்‌ வைத்த அன்பின்‌ காரணமாக. அவளை என்னால்‌ மறக்க இயலவில்லை. சஞ்சலத்தோடு கூடிய என்னை நீ வேறு பார்த்தால்‌ ஸ்வஸ்திமதி என்னும்‌ முறைப்பெண்‌ உண்மையாகவே இருப்பாளோ என சந்தேகிக்கிறேன்‌. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

உன்‌ பதிலை ஆர்வமுடன்‌ எதிர்நோக்கும்‌,

மனமோஹனன்‌.

சஞ்சலமே வடிவாக உடைய தோழன்‌ மனமோஹனனுக்கு,

உன்‌ நிலையைப்‌ பார்க்க எனக்கு மிகவும்‌ வியப்பாய்‌ இருக்கிறது. நீ ஸ்திரமில்லாத புத்தியை உடையவன்‌. சஞ்சலநோய்‌ உனக்கு ஏற்பட்டதும்‌ ஒருவிதத்தில்‌ நல்லது என்றே

நினைக்கிறேன்‌. விஷயாவின்‌ உண்மை இயல்பை இப்போதாவது புரிந்து கொள்‌! அவள்‌

உன்னை எப்போதும்‌ தனது அண்ணன்‌ காலனிடம்‌ பிடித்துக்கொடுக்கவே காத்துக்கொண்டிருக்கிறாள்‌. அவளிடமிருந்து கவனத்தைத்‌ திருப்பி உன்‌ அருகில்‌ இருக்கும்‌ ஸ்வஸ்திமதியை உணர்ந்துகொள்‌. அவளை நீ உன்‌ கண்ணைத்‌ திறந்துபார்த்தால்‌ உன்‌ நோயெல்லாம்‌ தீர்ந்து மிகுந்த ஆனந்தம்‌ அடைவாய்‌. ஸ்வஸ்திமதியின்‌ உறவினர்‌ ஒருவர்‌ கூடிய விரைவில்‌ அங்கு வருகிறார்‌. அவரை சந்தித்தால்‌ உனது மயக்கமெல்லாம்‌ தீர்ந்துவிடும்‌ என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

உனக்கு மேலும்‌ எழுதுவதற்கு எதுவும்‌ இல்லை.

இவண்‌,

மதுமதி.

அன்புத்‌ தோழி மதுமதிக்கு மனமோஹனன்‌ எழுதியது:-

தோழி மதுமதிக்கு,

மிகுந்த ஆச்சரியமான நாடகம்‌ நடைபெற்றிருக்கிறது! நானும்‌ நீயும்‌ சண்டையிட்டுக்கொண்டதுதான்‌ மிச்சம்‌. நீ எழுதியிருந்தபடி ஸ்வஸ்திமதியின்‌ உறவினர்‌ (ஆத்மபந்து) இங்குவந்து எனது மயக்கத்தையெல்லாம்‌ தீர்த்துவிட்டார்‌. அவர்‌ கூறிய சிறந்த வாக்கியங்கள்‌ எனது சஞ்சல நோயை இருந்த இடம்‌ தெரியாமல்‌ விரட்டிவிட்டன. நீ எனது முறைப்பெண்ணை மற்றவர்‌ கூறுவதை வைத்துக்‌ கொண்டு புகழ்ந்துதள்ளியிருக்கிறாய்‌. உண்மையில்‌ நீ அவளைப்பார்த்ததே இல்லை போலும்‌ ! நானும்‌ எனது இயல்பாய்‌ இருந்த மயக்கத்‌ தன்மையினால்‌ காண்பது யார்‌ என்றே தெரியாத அளவுக்கு மயங்கி இருந்திருக்கிறேன்‌.

ஸ்வஸ்திமதியின்‌ உறவினர்‌ இங்கு வந்துபோது என்‌ நிலை மிகவும்‌ மோசமாக இருந்தது. என்னருகில்‌ அவர்‌ வந்து எனது சிரஸில்‌ கை வைத்தார்‌. அந்த க்ஷணமே எனது நோய்‌ தீர்ந்த தோடல்லாமல்‌ நான்‌ முன்பிருந்ததைவிட தேஜஸ்‌ உடையவனாகிவிட்டேன்‌. எனது பார்வை தெளிவுபெற்றது. அந்தநிலையில்‌ அவர்‌ “ஸ்வஸ்திமதி’ என்று அழைத்தார்‌. அப்போதுதான்‌ அந்த அதிசயம்‌ நிகழ்ந்தது. என்‌ கண்முன்‌ ஸ்வஸ்திமதியும்‌, விஷயாவும்‌ ஒரே தோற்றத்துடன்‌ காக்ஷி தந்தனர்‌. ஸ்வஸ்திமதிதான்‌ விஷயாவாக வேடமணிந்து நம்முடன்‌ விளையாடி இருக்கிறாள்‌ என்பதை அவர்‌ கூற, உணர்ந்தபோது நான்‌ மிகுந்த மகிழ்ச்சியுடன்‌ ஆச்சரியமும்‌ அடைந்தேன்‌. இனி, எங்கள்‌ இருவருக்கும்‌ நடக்கும்‌ விஷயங்கள்‌ மிகவும்‌ ரகசியமானவை. நான்‌ கூறிய இவ்விஷயங்களில்‌ உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்‌ ஸ்வஸ்திமதியின்‌ உறவினரை அண்டி உண்மையை அறிந்துகொள்‌.

இத்துடன்‌,

ஸ்வஸ்திமதியின்‌ கணவன்‌.

புதிய கதா பாத்திரம்‌ அறிமுகம்‌ – அகண்ட்‌ (அகண்டாகாரவருத்தி)

அன்புள்ள மனமோஹனனுக்கு!

நலம்‌. நலமறிய நாட்டம்‌. அங்கும்‌ இங்கும்‌ அலையும்‌ உனது தொழில்‌ இப்போது எப்படி இருக்கிறது? சஞ்சலமே இயல்பாக உடைய நீ தற்போது ஸ்ரீகுருவின்‌ சொற்படி நடக்க விரும்புகிறாய்‌ என நினைக்கிறேன்‌. முன்பு ஸ்வஸ்திமதியின்‌ உண்மையான இயல்பை அறிந்த நீ திரும்பவும்‌ உலக வாழ்வில்‌ மயங்கி விடாதே! இவ்விஷயத்தை சற்று தெளிவாக்கவே இக்கடிதம்‌.

இப்படிக்கு

மதுமதி

அன்புள்ள மதுமதிக்கு மனமோஹனன்‌ எழுதியது.

உனது கடிதம்‌ கண்டு ஸந்தோஷம்‌. ஓர்‌ மகிழ்ச்சியான செய்தி! எங்களுக்கு ஓர்‌ ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதற்கு என்ன பெயர்‌ வைக்கலாம்‌ என நீ தான்‌ முடிவு செய்யவேணும்‌. குழந்தையும்‌ ஆரோக்கியமாக உள்ளது. மற்றவை உனது பதில்‌ கண்டு.

இப்படிக்கு

மனமோஹனன்‌.

அன்புள்ள மனமோஹனனுக்கு!

இந்த உலகம்‌ மித்யை என கூறுவர்‌. ஈச்வரன்‌ மாயையின்‌ துணை கொண்ட ப்ரபஞ்சத்தை

தோற்றுவித்தார்‌. மற்றும்‌ அதனைப்படைத்து அதனுட்‌ புகுந்தார்‌. இந்த விஷயத்தை லலிதா ஸஹஸ்ரநாமம்‌- மித்யா ஜகத்‌அதிஷ்டானனா- என்கிறது. ஜகத்‌ மித்யைதான்‌ என்றாலும்‌ அதற்கு அதிஷ்டானமாக ப்ரஹ்ம சக்தி விளங்குகிறது. இவ்விஷயம்‌ ஸ்வஸ்திமதியின்‌ உண்மை இயல்பை அறிந்தபோது உனக்கு விளக்கவேண்டும்‌ என்று இருந்தேன்‌. நிற்க. ஸ்வஸ்திமதிக்கும்‌ உனக்கும்‌ ஆண்குழந்தை பிறந்தசெய்தி கெட்டு மிக்க மகிழ்ச்சி. அதற்கு “அகண்ட்‌”  (அகண்டாகாரவ்ருத்தி) என்று பெயர்‌ வை. அகண்ட்‌ வளர வளர உனக்கு பொறுப்புகள்‌ அதிகமாகின்றன என்பதை உணர்‌. உனது இயல்பான சஞ்சலத்தை நீ துறந்தால்‌ தான்‌ உன்‌ இந்த பொறுப்புகளை சரிவர ஆற்றமுடியும்‌.

ஸத்ஸங்கம்‌ என்ற சட்டையை அவனுக்கு அணிவித்தால்‌ ப்ராரப்த குளிர்‌ அவனை தாக்காது.

இப்படிக்கு

மதுமதி

(தொடரும்…)

வேதசக்தி நூல் வெளியீடு

ஜயசக்தி.
வேதசக்தி நூல் – அருட்சக்தி.
ஸ்ரீவித்யா உபாஸக ஆன்றோர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய ஒரு

புதியஅரியநூல்வேதசக்திவெளியீடு_செய்தி# இங்கே!

அன்னையின் அருளால் அருட்சக்தி ஆக்கிய வேதசக்தி தமிழ்ப்புத்தகம் இன்று உங்கள் முன்பு வருகிறது.
இதில்உள்ளவிஷயங்கள்
ஸ்ரீதேவ்யதர்வசீர்ஷ உபநிஷத்து, ஸ்ரீஅருணோபநிஷத்து, மற்றும் ஸ்ரீஸூக்தம் இவற்றின் பொருள் தமிழில் விரிவாக காணலாம். ஸ்ரீதேவ்யதர்வசீர்ஷ உபநிஷத்தில் ஸ்ரீவித்யாபஞ்சதசாக்ஷரி, ஸ்ரீபுவனேச்வரி (ஏகாக்ஷரி) ஸ்ரீசண்டிகாபரமேச்வரி (நவாக்ஷரி) மஹாவித்யைகள் கருவாகி உருவான விதம், வர்ணனை விரிவாக ஆராய்ந்துள்ளோம். ஸ்ரீஅருணோபனிஷத்தும் தேவிபரமாக பொருள் சிந்திக்கப் பட்டுள்ளது. மற்றும் ஸ்ரீஸூக்தத்தில் பஞ்சதசாக்ஷரி மஹாவித்யையின் அக்ஷரங்கள் அதனுள் எவ்வாறு உட்பொதிந்து கிடக்கின்றன என்ற விதமும் அருளால் ஆராயப்பட்டுள்ளது.
இந்நூல் தாராபுரம் அருகில் அங்கித்தொழுவு ஸ்ரீகாளியம்மன் கோவிலில் அய்யர்மலை பூஜ்யஸ்ரீபிரணவாநந்தஸ்ரஸ்வதி_ஸ்வாமிகள் அவர்களால் சென்ற 2020 மார்ச் 4 இல் நடந்த ஸ்ரீசண்டி ஹோமத்தில் வெளியிடப்பட்டது. அவ்வமயம்
உடன் இருந்து வெளியிட்டவர் கோவை
மஹாசாஸ்த்ரு பிரியதாஸன், ஸ்ரீவித்யாஉபாஸகர், ஆன்மீகபேச்சாளர், அடியேன் ஆத்மநண்பர் திரு Vஅரவிந்த்சுப்ரமணியம் அவர்கள். தொடர்ந்து ஸ்ரீஸ்ரீஸ்வாமிகள் ஸ்ரீமஹாஸௌபாக்கிய பராம்பிகா பீடம் அய்யர்மலையிலும் வெளியிட்டார்கள்.
இன்றுள்ள உலகத்தின் சூழ்நிலையால் சென்னை முதலிய வெளியிடங்களில் நேரில் தற்சமயம் வெளியிட வாய்ப்பில்லை என்பது யாவரும் அறிந்ததே! ஸ்ரீஸ்ரீஸ்வயம்ப்ரகாச ப்ரஹ்மேந்தர அவதூத ஸ்வாமிகள் சீடரான
சேந்தமங்கலம் பூஜ்யஸ்ரீகிருஷ்ணானந்த ப்ரஹ்மேந்தர அவதூத ஸ்வாமிகள் ஆச்ரமத்தில் அவர்களின் ஜீவியகாலத்திலேயே (சென்ற 1981 ஆம் ஆண்டு) இதன் கையெழுத்து பிரதி அவர்களால் படித்து அனுக்ரஹிக்கப்பட்டது. 1980 முதல் இப்போது வரை பலமுறை பலவிஷயங்கள் சேர்த்தும், நமது நண்பர், ஸதுபாஸக ப்ரியதமர், ஸ்ரீஆத்மானந்தர் என்கிற ஸ்ரீரமேஷ் நம்பூதிரி ஆங்கிலத்தில் எழுதியிருந்த சிலவிஷயங்களுடன் Edit செய்யப்பட்டது. பூஜ்யஸ்ரீ பிரணவாநந்தஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களாலும் படித்து அனுக்ரஹிக்கப் பட்டு, அவர்களாலேயே வெளியிடப்பட்டது அடியேன் பாக்யம்.

இப்போது கீழேயுள்ள லிங்கில் online மூலம் அன்பர்கள் வாங்கிக் கொள்ள வசதியாக கிடைக்கிறது.

https://routemybook.com/products_details/Veda-Sakthi-8655

கவிதை இதழ்

ஜயசக்தி!
சென்னையில் சென்ற 25-05-2007 இல் நடைபெற்ற ஸ்ரீபாலா மஹாமந்த்ர ஜப யக்ஞம் சமயம் “இடைமருதன்” என்கிற ஸ்ரீ M. கிருஷ்ணமூர்த்திஐயரால் ருதம்பரா ஞானஸபை சார்பாக வாசித்தளித்த கவிதை இதழ்

கண்ணிருந்தும் குருடனாக காதிருந்தும் செவிடனாக
மனமிருந்தும் மந்தனாக தணமிருந்தும் வறியவனாக
இனமிருந்தும் தனியனாக சினமிகுந்து சீரழியும் பாமரனே!
குணமிகுந்து நீ வாழ உனை நாடி வந்ததுவே! …… ஞான சொற்கொண்டல்

வான் வெளியில் மின்னுகின்ற உடுக்களிலும்
மோனமொழி பேசும் மேலான முனிவரிலும்
கானக்குயிலிலும் தேன்சொறியும் மலரிலும்
காணக்காண மகிழ்வூட்டும் கானசோலையிலுமிது……. ஞான சொற்கொண்டல்

நாணமிகு நங்கையரின் கனிவான குரலிலும்
நாணேற்றி வில்லாடும் நாடுகாக்கும் வீரத்திலும்
தானே நிறைந்திருக்கும் பரதேவி அறியாப்பாமரனே !
தானாக அறியவைக்க வந்ததுவே ……. ஞான ச் சொற்கொண்டல்

முக்குணபரிமாண முத்தொழில் புரிகின்ற
மும்மூர்த்தி செயற்பாட்டின் மூலவித்து பரதேவி
மூல மந்த்ர பெட்டகத்தின் அருள்மழைபெய்விக்க
காலபேதம் ஏதுமின்றி கடிதாக வந்ததுவே ……. ஞான ச் சொற்கொண்டல்

தில்லிக்கும் சென்னைக்கும் பாலம் கட்டி
துள்ளியோடிவந்து ஞாலம் தழைக்க
அள்ளித்தெளித்து விடும் அன்னையின் அருளமுதை
சொல்லிசொல்லி வசமாக்கும் …… ஞானச் சொற்கொண்டல்

மனித உருக்கொண்டு வந்தாளே பரதேவி !
புனித மேனியதில் புதுமை ஏதுமின்றி
வேட்டிசட்டையுடன் நம்மில் ஒருவராக
கட்டிக்காத்து உறவாடும் கவின்மிகுகருணை……. ஞானச் சொற்கொண்டல்

சுட்டெரிக்கும் வெய்யிலிலும் கொட்டுமழை சாரலிலும்
பட்டாலே மேனி சிலிர்க்கும் பனித்துளி தூரலிலும்
கட்டைவண்டி தவிர மற்றுமுள ஊர்துகளில்
நாட்டையே சுற்றி நலம் பரப்பும் நல்லவர்….. ஞானச் சொற்கொண்டல்

கெட்டி மேளம் கொட்டி கட்டியம் கூறாமல்
பகட்டின்றி பலவாறு ஏற்றம் செய் பாதமதை
விட்டிலாய் வீணே விளக்கினில் வீழாமல்
கெட்டியாய் பிடிப்பீர் மட்டிலா பக்தியுடன் …. ஞானச் சொற்கொண்டல்

தேவிக்கு நன்றி சொல்ல வேண்டுமெனில்
தேவிதாஸன் திருவடி சேவையொன்றே பொதுமன்றோ !
தாய்ப்பாலாய் பொழியுதம்மா பேரருளை நமக்காக
தாவிப்பறந்துவரும் தாய்க்கருணை …….ஞானச் சொற்கொண்டல்

ஞானப்பாலுண்ட தமிழ்க்குழவி சம்பந்தராய்
நாநிலத்தில் அருள்வாழ்வு வாழவேண்டின்
வானுலகம் போய்த்தேடவேண்டாம் பாமரனே !
பேணும் இக்குருபாத சேவையே கோடி பெறும் – அறிவாயே