ஜயசக்தி! சென்னையில் சென்ற 25-05-2007 இல் நடைபெற்ற ஸ்ரீபாலா மஹாமந்த்ர ஜப யக்ஞம் சமயம் “இடைமருதன்” என்கிற ஸ்ரீ M. கிருஷ்ணமூர்த்திஐயரால் ருதம்பரா ஞானஸபை சார்பாக வாசித்தளித்த கவிதை இதழ் கண்ணிருந்தும் குருடனாக காதிருந்தும் செவிடனாக மனமிருந்தும் மந்தனாக தணமிருந்தும் வறியவனாக இனமிருந்தும் தனியனாக சினமிகுந்து சீரழியும் பாமரனே! குணமிகுந்து நீ வாழ உனை நாடி வந்ததுவே! …… ஞான சொற்கொண்டல் வான் வெளியில் மின்னுகின்ற உடுக்களிலும் மோனமொழி பேசும்Read More →

ஜயசக்தி. மெய் பதினாறு – ஷோடச ஸத்யம் அன்றொரு நாள் காலையிலே எழுந்திருந்தேன் வானமதை நோக்கி நின்றேன் அதிசயித்தேன் பகலவனின் கிரணத்தை பார்த்திருந்தேன் தகதகக்கும் சுடரை யார் தோற்றுவித்தார்? -1 சற்று முகமசைக்க சீராக மரத்தினது இலை கண்டேன் கொத்தாக மலர் கொட்டும் கொன்றைப் பூக்கள் மெத்த அதிசயித்தேன் மனதில் மகிழ்ச்சி சத்தமின்றி செய்தது யார் ? யோசித்திருந்தேன்-2 பூனையொன்று குறுக்காலே போனதப்பா பூனைவந்தால் சகுனமோ நான் படைப்பைப் பார்த்தேன்Read More →

சித்தர் வழியில் சின்மய பூஜை மனதில் தோன்றிய சில (சிவ) வாக்கியங்கள். இதில் உபாசரே என்று அழைப்பது என் மனதை. ஸம்ப்ரதாய குரு தோத்திரம் மூலமூலமூலத்தை மனதில் கூறும் உபாசரே மூலமான பேர்களை முன்னர் கூறவேண்டுமே ஆலவேரின் மத்தியில் அமர்ந்து கூறும் மந்திரம் காலகாலகாலமாய் காதில் வந்து விழுந்ததே யாகமந்திர ப்ரவேசம் பூபுரத்தின் வாயிலில் பாதம் வைக்கும் உபாசரே ஸ்ரீபுரத்தின் சன்னிதியில் சோதியாக இருப்பதார்? ஸ்ரீபுரத்தின் உள்ளுக்குள் சிந்தை தன்னைRead More →

ஜயசக்தி ஆன்மபோதம் – 35 *புழுவண்டாதல்* எல்லா விதங்களிலும் ஆத்மாவே தெரியும் நிலைக்கு நாம் ஆட்படவேணுமானால் நமது அப்யாசங்களை தொடரவேணும் என்பதை உறுதி செய்யவேணும். இடையில் இதற்கு ஒரு பழைய 100 ஆண்டு கால ஆத்மபோதநூல் பாடலில் கண்டவாறு சில விளக்கங்களை இங்கு சொல்லுகிறேன். அக்ஞான காரியங்களான வாஸனைகளினாலே கலங்கியிருக்கிற ஜீவனை ஆத்மஞானமானது வெகு காலபயிற்சியினாலே முன்புள்ள அக்ஞானத்தை தொலைத்துவிட்டு அதன் வழியே அந்த அக்ஞானகாரியங்களான மனம், புத்தி, சித்தம்,Read More →

ஆத்மபோதம் – 24 ‘’நான் ப்ரஹ்மமே’’ ஆத்மஸ்வரூபம் நீதான் – உன்னை விட்டு வேறில்லை. இதுதான் குருபாதுகா மந்த்ரம் நமக்கு தினம் தினம் அறிவுறுத்துகிறது. குருபாதுகா மந்த்ரம் அருளப்படும்போது தன்னையும் தன்னுடைய ப்ரகாசத்தையும்-தானும் ப்ரகாசமும் ஒன்றாக ஆகும் விதத்தையும் குரு காட்டிக்கொடுக்கும் வண்ணம் அதன் தத்துவம் விரிகிறது. இங்கேயே அவர் நம்மை ஆத்மஸ்வரூபம் என்று கூறி விட்டார். அதனை ஸந்தேக விபரீதமற தெரிந்து கொள்ள ஸாதனை அவசியமல்லவா! ஸாதனையோடு கூடRead More →

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் விளக்கவுரை- ஸ்ரீஅருட்சக்தி நாகராஜஅய்யர் (தினசரி வாட்ஸ்ஆப்பி‌ல் பகிர்ந்தது) ஒம்ஶக்தி! ஜயசக்தி! முன்னுரை- 03-08-18 ஆடி 18 ம் பெருக்கு முதல் ஸ்ரீஆதிசங்கரரின் ஆத்மபோதம் என்ற நூலில் இருந்து நமது பாடங்கள் தொடங்குகிறோம். அறிவுத்தேடலில் குருவிடம் அமர்ந்து அவர் சொல்வது கேட்டு அறிந்துகொள்வது முதல் வகை. நாமே பல புத்தகங்களையும் படித்து அறிவு பெறுவது இரண்டாம் வகை. கேட்டும், படித்தும் முற்றிலும் தெளிவு பெறாதRead More →

ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம். மஹான் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் அவர்கள் மஹா பண்டிதர்.அவருடைய பாடல்களுக்கு தமிழ்ப்பாடல்கள் எழுதுவது என்பது கொசுவின் இறக்கையால் வானத்தின் பொத்தலை அடைப்பது போன்றது. ஆனாலும் அந்த மஹான் எழுதியதை படிக்கும் வியாஜத்தில் சிறிது சத்சங்கத்தில் மனம் தோயட்டும் என்ற நிலையில் இதை அங்கீகரிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அறிஞர்கள் ஏற்றுக்கொண்டு ஊக்குவித்தால் மகிழ்ச்சி அடைவேன். ஸ்ரீ குருபாதுகாப்யாம் நம: – நாகசுந்தரம் மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர்Read More →