(தொகுப்பு : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)
கே :மோக்ஷதத்தை எளிதாக அடையச் செய்வது எது?
ப : ஸ்ரீ குருவின் பாதுகை
கே : சம்சார தாபத்தினை குளிர வைப்பது எது?
ப : அன்னையின் பாததூளி
கே : காமேஸ்வரரின் மனத்தை மோஹிக்க செய்வது எது?
ப : அன்னையின் கடைக்கண் பார்வை
கே : மிகவும் பலம் வாய்ந்தது எது?
ப : வைராக்கியம் மிகுந்திருந்தும் மனிதர்களை மோஹிக்க வைக்கும் அன்னையிம் மஹாமாயை
கே : மிகவும் ஆச்சர்யத்தை தருவது எது ?
ப : பாபத்தை போக்கும் என்று தெரிந்திருந்தும் அன்னையை துதிக்காமல் இருப்பது
கே : ஸ்ரீ வித்யையில் முதலில் உபதேசிக்கப்படும் மந்திரம் எது?
ப : ஸ்ரீ மஹா கணபதி
கே : ஸ்ரீ பாலா மந்திரம் எப்படி பெறப்பட வேண்டும்?
ப : தீக்ஷையுடன்
கே : தீக்ஷையின் போது புது நாமம் எப்படி ஸ்ரீ குருவால் தரப்படுகிறது?
ப : சிஷ்யன் ஸ்ரீ குருவின் அங்கத்தை ஸ்பர்சிக்க அந்த அங்கத்தின் பீஜாக்ஷரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு
கே : ஸ்ரீவித்யா என்பது என்ன?
ப : ப்ரஹ்மவித்யையின் அடைவுக்கு அனுஷ்டிக்கப்படும் ஸாதனா முறை.
கே : அன்னை லலிதையின் முக்கிய மந்திரம் என்ன?
ப : பதினைந்து அக்ஷரங்கள் கொண்ட பஞ்சதசி மந்திரம். இது வித்யை என்று கூறப்படும். இதில் கவிலிருந்து தொடங்கும் காதி வித்யை சிறந்தது என்பர்.
கே : ஏன் ஸ்ரீமஹாகணபதி மந்திரம் முதலில் உபதேசிக்கப்படுகிறது.
ப : அது ப்ரத்யூக சமனி. எதுவும் மறக்காமல் நினைவில் இருக்கும்.
கே : பண்ட புத்திரர்களை வதம் செய்தது யார்?
ப : ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி
கே : ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமங்களை ஸ்ரீ ஹயக்ரீவர் அகஸ்தியரிடம் முதலில் என் கூறவில்லை?
ப : ரஹஸ்யத்தை கேட்காமல் கூறக்கூடாது, சிரத்தையுடன் கேட்பவர்க்கே கூற வேண்டும் என்பதால்.
கே : வரிவஸ்யா ரஹஸ்யம் என்ற ஸ்ரீ வித்யா விஷயங்களை கூறும் நூலை ஆக்கியது யார்?
ப : மஹான் ஸ்ரீ பாஸ்கர ராய மகி
கே : மஹான்ஸ்ரீ பாஸ்கர ராயர் செய்த யாகத்தில் வித்வான்கள் எந்த தேவிகளின் விவரங்களை கூற அவர்கள் எழுதமுடியாமல் கை சளைத்தனர்?
ப : 64 லக்ஷம் கோடி யோகினிகளின் பெயர் விவரங்களை
கே : அவ்வாறுகூறும்போது அவர் தோளில் அம்பாள் ஆரூடையாய் இருந்ததை கண்டு கொண்டவர் யார்?
ப : ஸ்ரீ குங்குமானந்தர் என்பவர்
கே : ஸ்ரீ குங்குமானந்தருக்கு அந்த பெயர் எப்படி ஏற்பட்டது?
ப : அவர் மீது உத்தூளனம் செய்யப்படும் விபூதி அனைத்தும் குங்குமமாக மாறிவிடுவதால்.
கே : பஞ்ச்தசி மந்திரத்தை புனருக்தி (திரும்பவும்)) எண்ணாமல் இருந்தால் வருவது என்ன?
ப: ஒன்பது பீஜாக்ஷரங்கள்.
கே : சீடர்களுக்கு தீக்ஷையின் போது கண்ணைக் கட்டி ஶ்ரீ குருநாதர் சொல்வது என்ன?
ப : த்ரைபுரா சித்தாந்தம்
கே : த்ரைபுரா சித்தாந்தத்தில் கூறப்படும் தத்துவங்கள் எத்தனை?
ப : முப்பத்தாறு
கே : சாமயிக பூஜையில் சாதகர்களுக்கு எவ்விதம் பாத்திரங்கள் அளிக்கப்படுகிறது?
ப : தீக்ஷா ஜ்யேஷ்டர்களின் வரிசையில்
கே : நவாவரண பூஜையில் விசேஷார்க்யயத்தின் தத்துவம் என்ன?
ப : அது சுத்த ஞானஸ்வரூபம். எந்த. த்ரவியம் வைத்துக்கொண்டாலும் அது அதன் பிரதிநிதிதான்
கே : சாமயிக பூஜையை சாதகர்கள் உட்கார்ந்து கொண்டு செய்யலாமா?
ப: பூர்ண தீக்ஷை ஆனவர்கள் உட்கார்ந்து கொண்டு செய்யலாம், ஆனால் ஶ்ரீ குருவின் சந்நிதியில் அனைவரும் நின்று கொண்டுதான் செய்ய வேண்டும். தத்துவ சோதனம் மட்டும் உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும்.
கே : சாமயிகர்கள் ஶ்ரீ குரு தர்ப்பணம் எவ்வாறு செய்ய வேண்டும்?
ப : ஶ்ரீகுரு சந்நிதியில் ஸ்வகுருவை அவரது ஶ்ரீ பாதங்களிகும், பரமகுரு, பரமேஷ்டீ குருநாதர் பாதுகா தர்பணங்களை அவரது சிர்சிலும் செய்ய வேண்டும். மற்ற இடங்களில் ஶ்ரீ குரு பாதுகா தர்பணத்தை தனது சிரசில் செய்ய வேண்டும்.
கே : விஷேஷார்ய அமிர்தத்தை பூஜை செய்யாத காலங்களில் ஸ்வீகரிக்கலாமா?
ப : தவறு என்றே சாத்திரங்கள் கூறுகினறன.
கே : ஶ்ரீ வித்யா சாதனையில் ஒருவர் என் ஈடுபட வேண்டும்?
ப: வேதவேதாந்தங்களை கற்றுணர்ந்து, சாதன சதுஷடயங்களை அனுஷ்டித்து, மஹாவாக்கியங்கள் அனுபவமாகும் பொருட்டு முமூட்சுவானவனை சித்த சுத்திக்காக ஶ்ரீ வித்தையில் ஶ்ரீகுரு ஈடுபடுத்துகிறார். இதற்காகத்தானே தவிர மற்ற இகசவுக்கியங்களுக்ககவோ, பெருமைக்காகவோ வித்தையில் ஈடுபடுவது ஸ்லாக்யமல்ல
கே : ஶ்ரீவித்யாநவாவரண பூஜை எப்படி மஹாவாக்யங்களை அனுபவப்படுத்துகிறது ?
ப : யாஹாமந்திற பிரவேசம் முதல்சாந்திஸ்தவம் வரை ஒவ்வொரு செயலும் ஆத்மானுசந்தானத்தின் ஒவ்வொரு படியே. இதன் விவரங்கள் ஸபர்யா வாசனை மற்றும் அதையொட்டி எழுதப்பட்ட சிதானந்த அலை முதலிய கிரந்தங்களில் கண்டு தெளியலாம்.