ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம் – பகுதி – 1

ஸ்ரீசங்கரரின் ஆத்மபோதம் – எளிய வேதாந்தம்
விளக்கவுரை- ஸ்ரீஅருட்சக்தி நாகராஜஅய்யர்
(தினசரி வாட்ஸ்ஆப்பி‌ல் பகிர்ந்தது)

ஒம்ஶக்தி! ஜயசக்தி!
முன்னுரை-
03-08-18 ஆடி 18 ம் பெருக்கு முதல் ஸ்ரீஆதிசங்கரரின் ஆத்மபோதம் என்ற நூலில் இருந்து நமது பாடங்கள் தொடங்குகிறோம்.
அறிவுத்தேடலில் குருவிடம் அமர்ந்து அவர் சொல்வது கேட்டு அறிந்துகொள்வது முதல் வகை. நாமே பல புத்தகங்களையும் படித்து அறிவு பெறுவது இரண்டாம் வகை. கேட்டும், படித்தும் முற்றிலும் தெளிவு பெறாத நிலையில் அதை எழுதிப் பார்த்து அறிய முயற்சிப்பது மூன்றாம் வகை. பலரும் முதல் வகையிலும், சிலரும் இரண்டாம் வகையிலும் பயில, வேறு சிலரோ மூன்றாம் வகையில் அதை முயன்று பார்க்கிறார்கள். இவ்வகையில் நாம் தொடங்கலாம்

முதலில் குரு வணக்கம் செய்வோம்.

காமாக்ஷி சரணாம் போஜம் பாவயந்தம் ஸதாஹ்ருதி
அனந்தானந்த நாதம் தம் சிந்தயே ஸதா

ஓளி இருளை நீக்கும். கயிற்றில் தெரியும் பாம்பு. சூரியனை மறைக்கும் மேகம் என்ற உதாரணங்கள் எல்லாமே இப்படி அறிமுகம் ஆவது தான். ஒளி வந்தவுடன் இருள் தானாக விலகுவதுபோல பிரம்மத்தை உணர்ந்தவனுக்கு அதைப் பற்றிய அறியாமை தானாக விலகுகிறது. அதனால் பிரம்மம் ஒளி போன்றது. பாம்பு என்ற எண்ணம் இருட்டு இருக்கும் வரையில்தான். அங்கு ஒளி வந்ததும் அது கயிறு என்று தெரிகிறது. எங்கோ> எப்போதோ பார்த்த பாம்பு என்ற எண்ணத்தை இங்கு, இப்போது இருக்கும் வேறு ஒரு பொருளின்மேல் படரவிட்டாலும், ஒளி வரும்வரை பார்ப்பவனுக்கு அது பாம்புதான். இப்படியாக பலப் பலவாக இருப்பதைப் பார்க்கும் அறியாமை இருக்கும் வரை எல்லாம் ஒன்றாய் இருக்கும் பிரம்மத்தை உணரமுடியாது. எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு. மேகம் மறைந்தவுடன் தானே ஒளிரும் சூரியன் தெரிவது போல, தானே தானாய் இருக்கும் பிரம்மம் நாம் செய்யும் கர்மங்களால் இடையில் வந்த நமது உபாதிகள் மறைந்ததும் தானாய் ஒளிரும். இப்படியெல்லாம் உவமானங்களை வைத்துக் கொண்டு மேல் நிலை உண்மைகளை ‘பிரகரண கிரந்தங்கள்’ என்ற சில நூல்கள் விளக்கிச் சொல்லும். இப்படியான உண்மைகளும், உவமைகளும் எந்த நிலையில் சொல்லப்பட்டிருன்தாலும், அன்;த நிலைகளில் மேலிருன்து கீழே வர வர விவரங்களும், விளக்கங்களும் மிகுதியாக இருக்கும்.
அதாவது எந்த நிலையிலும் இருக்கும் விஷயம் ஒன்றுதான்; அதன் விளக்கங்களில் தான் அளவிலும் விவரங்களிலும் அந்தந்த நிலைகளில் சொல்லப்படுபவை மாறுபடுகின்றன என்பதை நன்கு புரின்து கொள்ளவேண்டும்.
ரிபுகீதை என்ற ஒரு கீதை உண்டு. அதில் ஒரு உண்மை சொல்லப்படுகிறது. அதை முதலில் படிப்போம்.
கறையற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
காண்பதுவுங் கேட்பதுவும் எவையு மில்லை
நிறைவுற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
நினைப்பதுவும் நினையாதும் எவையு மில்லை
மறைவற்ற பரப்பிரமம் ஒன்றே உண்மை
மற்றவெலாம் ஒருகாலும் இலவே இல்லை
குறைவற்ற அப்பிரமம் நானே என்று
கோதறவே எப்போதும் தியானஞ் செய்வாய் !…………
தோடரன்து பார்ப்போம். நீங்களும் இதனைப் படித்து உங்கள் சன்தேஹங்களையும், சிந்தனைகளையும் பகிரவும்.

ஆன்மபோதம் – 1 முதல் பாகம் – 4-8-18

உங்கள் சிந்தனைகளை பகிர்ந்தமைக்கு மகிழச்சி. தொடர்ன்து பார்க்கலாம். நாம் முதலில் சிந்தனைக்கு எடுத்துக்கொண்;டது ஆத்மபோதம். நீங்கள் ரிபுகீதை பற்றி கேட்டுள்ளீர்கள். புராணங்களில் அநேக கீதைகள் உண்டு. பிரபலமாக எல்லாருக்கும் தெரிந்தது கண்ணன் சொன்ன பகவத்கீதைதான். ரிபுகீதை பற்றி பிறகு சொல்லுகிறேன். முதலில் நாம் எடுத்துக்கொண்ட தலைப்பில் சிநிதிப்போம். ஆன்மா என்கிற ப்ரஹ்மத்தின் உண்மை தெரியவே ரிபுகீதை வசனத்தை உதாரணம் காட்டினேன். அவ்வளவுதான்.
ஆன்மாவைப்ற்றி தெரின்து கொள்ளவேணுமானால் முதலில் நமது தேக அமைப்பு பற்றி அறின்துகொள்ளவேணும். நமது தேகம் ஸ்தூல ஸூக்ஷம காரணம் என 3 நிலைகளில் அதாவது அடுக்குகளில் உள்ளது. நமது கண்ணால் காணும் இந்த தேகம் ஸ்தூலம். இரவில் நமது கனவில் நாம் உலா வருகிறோமே அது ஸூக்ஷமம். காரண தேகம் என்பது மனம் புத்தி சித்தம் அஹங்காரம் என்ற நால்வரின் கூட்டுருவம். இந்த 3 தேக அமைப்பைப்ற்றி விவரமாக நாம் அறியவேணும். இந்த 3 தேகத்திற்கு அன்னியமாக ஆனால் அவை இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது ஆன்மா. இந்த ஆன்மாதானே எல்லாவற்றையும் பிரகாசிபிக்கிறது.
இந்த ஆத்மசக்தி இல்லாமல் ஒண்ணுமே இயங்காது. இது எப்படி வெளிப்படு கிறதுன்னு பார்க்கலாம்.
ஆன்மா எப்பவும் பிரகாசிக்கும். அதை சுத்தி இருக்கிறது அவித்தை அல்லது காரண சரீரம். புத்தியை சூழந்த இது நித்திரை என்கிற ஆழ் உறக்க நிலை – ஸுஷுப்தியால் சூழப்பட்டு இருக்கும். காலம் கருமம் பிராணன் ஆகியவற்றால இந்த உறக்க கதவு கலைஞ்சா ஆத்ம ஒளி அகங்காரம் வழியா வெளி அறையில பிரகாசிக்கும். இது ஸ்வப்ன நிலை இல்லையா?
இந்த வெளி அறையிலிருன்து முற்றத்துக்கு வெளிச்சம் வரணும்ன்னா அது இன்திரியங்கள் என்கிற ஜன்னல் வழியாதான் வரும்.
இப்ப ஆத்ம தரிசனத்துக்கு. போகணும்!
பஞ்ச இன்திரியங்களையும் தாண்டிப்போக ஸ்வப்னம். அதையும் தாண்டிப்போக ஆழ்தூக்கத்தில அவித்தை. அகங்காரத்தையும் தாண்டிப்போக உள்ளே ஆன்மா மட்டுமே பிரகாசிக்கும்.
இப்ப ஆதி சங்கரரின் ‘ஆத்மபோத’த்தை பகவான் ரமணமகரிஷி தமிழில் மொழிபெயர்த்து ‘ஆத்ம போதம்’ என்று வெண்பா வடிவில் எழுத நேர்ந்தபோது இந்த வெண்பாவை மங்கலச் செய்யுளாக கொடுக்கிறார்.

*ஆன்மாவின் போதம் அருள் ஆசானாம் சங்கரன் அவ்
வான்மாவுக்கு அன்நியன் ஆவனோ – ஆன்மாவாய்
என்னகத்தே இருன்தின்று தமிழ் சொல்வானும்
அன்னவன் அன்றிமற்று யார்*

இச்செய்யுளில் ‘ஆத்மபோதத்தை நமக்கு அருளிய சங்கரர் ஆன்மாவின் வடிவமே அல்லாமல் வேறு என்னவாய் இருன்து நமக்கு அதை அருளினார்? இன்று அந்த ஆன்மாவே என்னகத்தில் இல்லாது போனால் அதைத் தமிழில் சொல்வதும் அதுவன்றி வேறு யார்?’ என்று கேட்கிறார். மிகவும் கூர்ன்து ஆராய வேண்டிய கேள்விகளை நம்மைப் பார்த்து பகவான் தொடுத்திருக்கிறார். எப்போதும் எல்லாமுமாய் இருப்பது ஆன்மாவே என்று தெரின்தும் புரியாதவர்கள் முன்பு சம்ஸ்க்ருதத்தில் எழுதிய சங்கரர்தான் இப்போது தமிழிலும் இயற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் கொள்ளலாம்.. அல்லது ரமணரே முன்பு சங்கரராய் இருன்து (அதாவது ஆன்மாவாய் இருன்து) முன்னதைத் தன்தார் என்றும் கொள்ளலாம் அல்லவா!

ஆத்ம போதம் -2

முன்பு சங்கரராய் இருன்து (அதாவது ஆன்மாவாய் இருன்து) முன்னதைத் தன்தார் என்றும் கொள்ளலாம் அல்லவா! என்று எழுதியிருன்தேன். சங்கரராய் இருன்தாலும் ரமணபகவானாய் இருன்தாலும் மற்று நாமாயிருன்தாலும் ஆத்ம வடிவமே எனலாம். ஆன்மாவே எல்லாம் என்றிருப்போருக்கு அன்றும் இன்றும் என்றும் ஆன்மாவே தானாகவும் இருக்கிறது; தன்னைப் பற்றிச் சொல்லாமலும் சொல்கிறது என்று புரியும். அதாவது ஆன்மா இல்லாது வேறு என்னதான் உலகில் இருக்கிறது என்பதே இங்கு அனைவரும் காண வேண்டிய உண்மை. இதுபற்றி மேலே சொன்ன ஒரு மங்கலச் செய்யுளிலேயே ஆன்மாவைப் பற்றி நல்ல போதனை செய்திருக்கிறார்.
இங்கு ஆத்ம சிந்ததனைக்கு பகவான் சம்பந்தமான சில குறிப்புகள் பார்ப்போம். நமது சிந்தனைக்கு இது தேவையே!
ரமணபகவான் வாழ்க்கையில் அவர் தானாகவே எழுதியது என்பது மிகவும் குறைவு. தெரியாது மறைன்து இயக்கும் ஏதோ காரணங்களால் உந்தப்பட்டு தெரின்து அருகில் இருக்கும் எவராலோ அது பற்றி விசாரிக்கப்பட்டு தானே உதிர்ந்த முத்துக்களைக் கோர்த்து வைக்கும் பணியைத்தான் அவர் செய்துள்ளார் என்பதுதான் பொருத்தம். அது போன்றே இந்தப் படைப்பும் உருவான நிகழ்ச்சியை ஒருவர் தனது நூலில் எழுதியிருப்பதை இங்கு பார்ப்போம்.
‘சம்ஸ்க்ருதபாஷை ஓரளவுக்குத் தெரிந்திருந்த முஸ்லீம் பண்டிதர் ஒருவர் ஆதிசங்கரர் சம்ஸ்க்ருதத்தில் இயற்றிய ஆத்மபோதத்தின் ஸ்லோகங்களுக்கு தமிழ் அனுவாதமாக பாடல்கள் எழுதி வெளிவன்திருந்தது. அதில் இரண்டு புஸ்தகங்கள் தபால் மூலமாக ஆஸ்ரமத்திற்கு வன்துள்ளன. ஒருவர் தபால் கொண்டு வரும்போது அத்துடன் சேர்த்து இந்த ஆத்மபோத நூலையும் பகவானிடம் கொடுத்தார். வழக்கம் போல் தபாலைப் பார்த்து விட்டு பிறகு அந்த நூலைத்திறப்பதும் பார்ப்பதும் பிறகு மூடி வைப்பதும் மறுபடி திரும்பப் புரட்டி பார்ப்பதுமாக இருந்தார் பகவான்.
புஸ்தகத்தை அப்படி இப்படி புரட்டும்போது பகவானின் முகத்தைப் பார்த்தால் உள்ளுக்குள்ளே ஏதோவொரு சிந்தனை இருப்பதுபோல் தோற்றமிருந்தது. அதன் பிறகு அந்தப் நூலை புத்தகசாலைக்குக் கொடுத்துவிட்டார். பிறகு வேறு ஒருவரைக்கூப்பிட்டு சங்கரர் நாகரிலிபியில் எழுதியுள்ள ஆத்மபோதம் நூலைக் கொண்டுவரச் சொன்னார். அதை அடிக்கடி புரட்டிப் பார்த்து வன்தார். பிறகு ஒரு காகிதத்தில் இரண்டு பாட்டுக்களை தமிழில் வெண்பாவாக எழுதினார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சுப்பராமையா என்னும் ஒரு பக்தர் பகவானை நோக்கி ‘என்ன! பகவான் ஏதோ நூலைத் திறப்பதும் படிப்பதும் மூடுவதும் எழுதுவதுமாக இருக்கிறதே! அது என்ன நூல்?’ என்று கேட்டார். அப்போது பகவான் தான் எழுதிய ஆத்ம போத ஸ்லோகத்தின் தமிழ் அனுவாதமான இரண்டு பாடல்களை அவரிடம் காட்டினார். அதைப் பார்த்த அவர் ‘இப்படியே மீதி சுலோகங்களையும் எழுதினால் நன்றாயிருக்குமே’ என்று கூறினார்.
பகவான் அதற்கு ‘சரி சரி அதெல்லாம் எதற்கு?’ என்று சொல்லி விட்டார். அதெல்லாம் எதற்கு என்று சொல்லளவிலே சொன்னாரே ஒழிய உள்ளே பகவானுக்கு ஏதோவொன்று தூண்டிக்கொண்டே இருன்திருக்க வேணும். இரண்டேநாளில் இன்னும் சில பாடல்கள் எழுதி ஒருவரிடம் காட்டி ‘நாம் எதற்கு எழுத வேண்டுமென்று சும்மாயிருன்தால் இது நம்மை விடாதுபோல் இருக்கிறது. ஒன்றுக்குப் பின் ஒன்றாக எதிரே வன்து நிற்கிறது! என்ன செய்கிறது!’ என்று சொல்லியிருக்கிறார். மேலும் சில பாடல்கள் எழுதியபிறகு ‘இனிமேல் இது நம்மை விடாது ஓய்! ஒரு புஸ்தகம் தைச்சுக்கொண்டு வாரும்!’ என்று சொல்லி தான் எழுதிய மங்கலவெண்பாவையும் காட்டினார்.
பிறகு சில நாட்களுக்குள்ளாகவே நூல் முழுவதும் (69 சுலோகங்களும்) தமிழ் வெண்பாக்களாக எழுதி முடிக்கப்பட்டன. பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்து ‘நாற்பது வருஷங்களுக்கு முன்னால் ஏற்பட்ட அந்த சின்ன மலையாள நோட்டுப் புஸ்தகத்தில் இது இருக்கிறது. அப்போ அதற்கு தமிழில் எழுதவேண்டுமென்ற எண்ணமே உண்டாகவில்லை’ என்று கூறினார். ‘எதற்கும் காலம் வரவேண்டாமா?’ என்று ஒரு பக்தர் சொன்னார்.
அதற்கு பகவான் ‘ஆமாமாம்! இப்போ இது ஒன்று எழுதியதும் இன்னொன்று தோன்றிக்கொண்டே வருகிறது. முன்னே எப்பவோ படித்த மாதிரியும் இருக்கிறது. இதற்கு முன் யாரும் இதை எழுதவில்லையே? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் பகவான்.
‘வெண்பாக்களாக இதுவரை யாரும் எழுதவில்லை’ என்று எதிரில் இருந்த முருகனார் கூறிவிட்டு மேலும் சொன்னார்; *பகவானுக்கு ஒன்றன் பின் ஒன்று தோன்றுவதில் என்ன ஆச்சரியம். ஒவ்வொரு கல்பத்திலும் வேதங்கள் பிரம்மாவிற்கு எதிரில் தோன்றுமென்பதுதானே புராண வரலாறு. இதுவும் அதைப் போன்றதுதான்!* என்று கூறினார்.
அதற்கு பகவான் சிரித்துக்கொண்டே ‘அது சரிதான்! ஜயதேவர் கதையில் வருவதுபோல யாராவது வன்து நான்தான் எழுதினேனென்று சண்டைக்கு வருவார்களோ என்னவோ!’ என்று சொல்லி முடித்தார்.
இப்படி (முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்ததுதல் பெறப்பட்டு) ஒரு ரஸமான பின்னணியுடன் இந்த ‘ஆத்ம போதம்’ தமிழில் உருவெடுத்தது. பகவான் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் இப்படி ஒரு காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. அந்த சம்பவங்களெல்லாம் யாரும் எழுதி வைக்காததினால் நமக்குத் தெரியவில்லை. ஏதோ சிலவற்றிற்கு மட்டுமே அவை எழுதப்பட்ட காரணங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.’

ஆத்ம போதம் – 3

எல்லோரும் படிக்கிறீர்கள் என்ற நிநைப்பில் தொடர்ந்து எழுதுகிறேன். ஒவ்வொரு கல்பத்திலும் வேதங்கள் பிரம்மாவிற்கு எதிரில் தோன்றும் …. என்பதிலே சிலருக்கு ஐயம். ஒவ்வொரு கல்பத்திலும் பிரம்மா வேறு வேறு தான்! ஆநால் ஜீவன்கள் மாத்திரம் விநைகளுக்கு ஏற்ப பிறக்கும் தான்! அதனாலே சங்கரர் ரமணர் இவாளெல்லாம் அப்படியே பிறந்து வருவாள்ன்னு இல்லை. மேலே ஆத்மபோதம் ஸ்லோகம் 2 பார்க்கலாம்.

தபோபி⁴: க்ஷீணபாபானாம்ʼ ஶான்தானாம்ʼ வீதராகிஸிணாம்ʼ |
முமுக்ஷூணாமபேக்ஷ்யோ ள்யமாத்மபோஸிதோ⁴ விதீ⁴யதே ||

தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய் சாந்தி
அவிர்ந்தவராய் ஆசை அறுந்தாராய் – பவமுக்தி
ஆதரம் ஆர்ந்தாருக்கு அடையத் தகும் ஆத்ம
போதமாம் ஈது புகல்

தவங்கள் செய்ததனால் மேலும் பாவங்கள் செய்வதை தவிர்த்தவர்களாகவும், மனத்தில் சாந்தி அடைந்தவர்களாகவும், உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாதவர்களாகவும், பிறப்பிறப்புச் சுழல்களில் இருந்து விடுபட விரும்புவோர்களாகவும் இருப்போர்களு க்கு என்று இந்த ஆத்ம போதம் சொல்லப்படுகிறது.

இதன் விரிபொருள்:
எடுத்த எடுப்பிலேயே முதல் ஸ்லோகத்திலேயே இந்தப் படைப்பின் தலைப்பு ஆத்ம போதம் என்றும் குறிப்பிட்டு, இதைப் படிப்பவர்களுக்கு வேண்டிய தகுதிகளையும், அதாவது யார் படிக்கலாம் என்றும், அவர்கள் படித்தால் என்ன பயன் விளையும், அதாவது ஏன் படிக்க வேண்டும், என்றும் விவரமாகச் சொல்கிறார். தகுதிகளைப் பற்றி நாம் மேலும் விவரமாக ஆராயலாம். இதைப் படிப்பவர்களுக்கு ஆன்மாவைப் பற்றிய ஞானம் (போதம்) கிடைக்கும் என்பது இதன் பயன் என்பதை அந்தத் தலைப்பிலேயே கொடுத்துள்ளார்.
மேலே இருக்கும் முதல் செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகளைப் படித்துவிட்டு அன்பர்கள் தனக்குத் தானே எடை போட்டுக்கொண்டு, தான் மேலும் படிக்கும் தகுதி வாய்ந்தவர்களா இல்லையா என்று குழம்ப வேண்டாம். ஒரு வேளை அந்தத் தகுதிகள் தொடக்கத்தில் இல்லை என்றாலும் கூட, மேலும் படிக்கப் படிக்க அந்தத் தகுதிகளை எப்படிப் பெறுவது, எப்போது பெறுவது என்று தன்னை அறியாமலேயே ஒவ்வொரு மனதிலும் வேர் விட்டுத்தழைத்து அதற்கேற்ற படிப்பவன் நாடவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் எண்ணம்.
ஆன்மாவைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பும் நாம் அதற்கு வேண்டிய தகுதிகளின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாமே.
எவன் ஒருவனுடைய வாழ்க்கையிலும் ஒரு கட்டம் வரும். அதுதான் அவன் ஏதேனும் ஒரு மரண சம்பவத்தைச் சந்திக்கும் கட்டம். இது ரமணர் போன்ற ஞானிகளுக்கும் வந்திருக்கிறது; தெருவில் போகும் ஒருவனை இடித்துத் தள்ளக்கூடிய வாகனத்திலிருன்து மயிரிழையில் தப்பியவனுக்கும் வந்திருக்கிறது; வாழ்வில் ஒன்றை மிகவும் எதிர்பார்த்து அது கிடைக்காது அலுத்துப்போய் இறந்து போகலாமா என்று யோசித்தவனுக்கும் வந்திருக்கிறது. அல்லது தான் மிகவும் நேசித்தவர் இறந்ததும் அவரது உயிரற்ற உடலைப் பார்க்கும்போதும் அது வந்திருக்கிறது. இந்த எண்ணம் வருவதற்கு இதுதான் தகுதி என்று எதுவும் கிடையாது. அப்படி வரும்போது மரணத்தைப் பற்றிய அவனுக்குள் உதிக்கும் எண்ணங்கள்தான் அவரவர்க்கு ஏற்ப வகைவகையாய் மாறுகின்றன. அதாவது வைராக்யம்.
எல்லோருக்கும் ஆரம்பம் பிறப்பு என்றாலும், அவனை மிகவும் சிந்திக்க வைப்பது அவனுக்கு ஒரு நாள் வரக்கூடிய அவனது இறப்புதான். ஏனென்றால் வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்து ஒருவன் வேண்டியது அனைத்தையும் பெற்றவனுக்கும் மரணம் வருகிறது. அதேபோல வாழ்க்கையை வாழத்தெரியாது தவித்து, இருப்பதையும் இழந்து, இன்னும் என்ன செய்வது என்றும் தெரியாது, இறப்பது ஒன்றுதான் தனக்கு விடுதலை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவனுக்கும் மரணம் வருகிறது. ஆக அனைவருமே மரணத்தை வாழ்க்கையின் உறுதியான ஒரு முடிவு என்றே பார்க்கின்றனர். ஆனால் இறப்பைப் பற்றி வைராக்கியமாக தீவிரமாக யோசிப்பவனுக்குத்தான் அந்த பிறப்பின் மறுபக்கம் என்று தெரிகிறது.
அதாவது பிறந்தால் இறப்பது நிச்சயம் என்றும், அப்போது தான் ஏன் பிறந்தோம் என்ற எண்ணமும் வருகிறது. அப்படி யோசிப்பவனு க்குத்தான் பிறப்பு இறப்பு என்ற ஒரு சம்சாரச்சுழலில் சிக்காமல் இருப்பது என்றால் என்ன என்ற எண்ணமும் கூடவே வருகிறது. அப்படி ஒரு சாகாநிலை இருக்குமானால் அதை எப்படி அடைவது என்ற சிந்தையும் உந்துதலும் இருப்பவனையே *முமுக்ஷூ* என்று கூறுகிறார்கள். அதாவது இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் *முமுக்ஷூ* என்ற ஸாதகன்.

ஆத்ம போதம் 4

ஒருவன் இறன்துவிட்டால் அவன் இயற்கை எய்தினான் என்று சொல்கிறோம். தன்னைச் சுற்று முற்றும் பார்த்து இயற்கையில் என்ன நடக்கிறது என்று கூர்ன்து பார்ப்பவனுக்கு இதன் உண்மை புரியும். சுற்றியுள்ள மனிதர்கள் தன்னைப் போலவே விதவிதமாய் எண்ணுபவர்கள் ஆதலால், அவர்கள் தங்களது செயலால் தங்கள் சுற்றத்தை மாற்றி அதைத் தங்களுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளமுடிகிறது. அதைச் செயற்கை என்று சொல்லி, அதைச் செய்வதுதான் அவனது இயற்கை என்று தெரின்துகொள்கிறோம். அதுமட்டும் அல்லாமல் ஒவ்வொருவனும் வெவ்வேறு மாதிரியாக இருப்பவர்கள் என்பதும் அவனுக்குத் தெரிகிறது.
மனிதனைப் போலவே தன் இன விருத்தி என்று ஒரு சில விஷயங்களில் மற்ற ஜீவராசிகள் ஈடுபட்டாலும், மனிதனளவு ஒரு குடும்பம், சமூகம், தேசம், உலகம் என்ற விதவிதமான கட்டுக்கோப்பான வெளிப் பார்வைகள் இல்லாது, பொதுவாக கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அவைகள் வாழ்வதையும் அவன் பார்க்கிறான். ஒரு சில மிருகங்கள் கூட்டாக வேட்டையாடினாலும், வேறு பல விஷயங்களில் சேர்ன்து இருன்தாலும், அவனது பார்வை போல பொதுவாக அவைகளுக்கு இல்லை என்பதால் மட்டுமே அவைகளை ஒதுக்கிவிட முடியாது; அவைகளில் சிலவற்றிற்கு அவனை விடவும் கூர்மையான பார்வையோ, மோப்பமோ, இருளில் காணும் சக்தியோ, அதிர்வுகளை உணர்வதோ அல்லது அதுபோன்ற வேறு சில இந்திரியாதி விஷயங்களிலோ அவனை விடவும் அவைகளுக்குத் தேர்ச்சி இருக்கின்றன என்றும் அவன் தெரின்து வைத்திருக்கிறான்.
ஆனாலும் அவைகள் அப்படி இருப்பது அவனுக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதில் அவனுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உண்டு. அது மட்டுமல்லாது ஒன்று தனக்குத் தெரியும் என்பதோடு, அது தெரியும் என்பதும் தெரியும். ஆனால் அவைகளுக்கோ ஒன்று தெரியும், அப்படித் தெரிவதாலேயே அவைகள் தங்கள் தினப்படி வாழ்க்கையை நடத்துகின்றன, ஆனால் தனக்குத் தெரியும் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்பதிலும் அவனுக்குச் சந்தேகம் உண்டு. இங்குதான் மனிதன் அவைகளினின்றும் வித்தியாசப்படுகிறான் என்று இதுவரை தெரிந்து வைத்திருக்கிறான். அதாவது ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்.
நாம் நாமாக எப்போதும் இருக்கிறோம் என்றால் நமது உண்மை நிலை என்ன என்று கேட்டு அதை அறிய முயற்சிப்பவன் தான் முமுக்ஷூ. அந்த அறிவைப் பெற முயல்பவன் இந்த ஆத்ம போதம் சொல்லப்போவதைக் கேட்பதற்குத் தகுதியுள்ளவன் ஆகிறான். அந்த வேட்கை தீவிரமாக இருக்க வேண்டும் என்றால் அவன் எப்படிப்பட்டவனாக இருந்ததால் அந்த நிலைக்கு வன்திருப்பான் என்றும் சங்கரர் இங்கு கூறியிருக்கிறார்.
தன்னைத் தானே அறிவது என்பது ஒரு தீவிர முயற்சி என்பதால் அந்த நிலையை அடைவதற்கு ஒருவன் சில நிலைகளைத் தாண்டி வன்திருக்க வேண்டும். எப்போது ஒருவன் பிறப்பையும் இறப்பையும் தன் உடலோடு தொடர்புகொண்டு பார்க்கிறானோ, அப்போதே அவனுக்கு உடல் இருக்கிறது என்று உணரப்படுகின்ற விழிப்பு நிலையில்தான் உலகமும் தெரிகிறது என்ற உண்மையும் புரிகிறது. அத்தகைய உடல் இருப்பதே தெரியாத அவனது கனவு மற்றும் உறக்க நிலைகளிலும் அவனுக்குச் சில அனுபவங்கள் இருப்பதாலும், அந்தக்கனவைக் காணும் அவனுக்கே வேறோர் உடலும், அதனுடன் வேறோர் உலகமும் காணப்படுவதால் அவனுக்கு விழித்தவுடன் காணப்படும் உலகைப் பற்றிய சந்தேகம் வளர்கிறது.

ஆத்ம போதம் 5

கனவிலிருந்து விழித்தவுடன் சந்தேகம் வந்ததில் போன பாடம் நிற்கிறது.. நினைவு படுத்திக்கொள்ளுங்கள்……
உங்களுக்கு இங்கு ஒரு நல்ல செய்தி சொல்லவேணும். நேற்று வலைதளத்திலிருந்து மிக அபூர்வமான ஆத்மபோதம் நூல் Pdf கிடைத்தது. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் தமிழில் செய்யுளாக எழுதியது. இன்னும் நாம் தெளிவாக சிந்திக்க அது மிக்க உப யோகமாக இருக்கும்.
எப்போதும் இருக்கும் உண்மையான நிலையைத் தேடுபவனுக்கு வந்து வந்து போகும் இந்த உலகங்கள் எப்படி உண்மையாய் இருக்கும் என்ற எண்ணம் தீவிரமாக வளரும்போது அவனுக்கு உலக விஷயங்களில் ஆசைகள் இல்லாது போகின்றன. இதை ‘வீதராகிணாம்’ என்ற சொல்லால் சங்கரர் குறிப்பிடுகிறார். ஆசைபோகிறது என்றால் விரக்தி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் – அவைகளின் மேல் இருக்கும் ஈர்ப்பு வெகுவாகக் குறைகிறது என்று கொள்ளலாம். தினப்படி வாழ்வின் தேவைக்கு மேல் அநாவசியமான ஈடுபாடு தவிர்க்கப்படுகிறது என்று சொல்லலாம்.
எப்போது உலகியல் விஷயங்களில் ஈடுபாடு குறைகிறதோ அப்போதே அவை கிடைக்காததால் தனக்கு முன்பு வந்த ஓர் ஏக்கமும் பிறருக்குக் கிடைத்துவிட்டதால் வந்த பொறாமை கோபம் முதலானவைகளும் போய்விட்டன என்று நம்ப இடம் இருக்கிறது. இவை தவிர மனமும் உண்மை நிலை ஒன்றைத் தேடி ஒரு வைராக்கியத்தோடு இருப்பதால் இவை எல்லாம் ஒருமுகமாகச் சேர்ந்து மனத்தளவில் ஒரு அமைதியைக் கொடுத்திருக்கிறது. இதை ‘சாந்தானாம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.
உலக விஷயங்களிலும் முன்பு போல் நாட்டமில்லைஇ மனமும் அடங்கியிருக்கிறது என்னும்போது தனக்கும் பிறருக்கும் வேண்டிய வேலையை மட்டும் செய்வதால் நல்ல காரியங்கள் தவிர வேறு எதுவும் நடைபெற்றிருக்க முடியாது. தான் பிறர் என்ற பாகுபாடு இருந்தால்தானே தனக்கென ஒன்றும் பிறர்க்கு மற்றொன்றும் என்று செயல்கள் வளர்ன்து பாவம் செய்யத் தூண்டியிருக்கும். இப்போதுதான் அப்படி இல்லையே; அதனால் அவர்கள் பாவச் செயல்களை ஒழித்தவர்கள் ஆகிறார்கள். இந்த நிலையை ‘க்ஷீணபாபானாம்’ என்ற சொல் குறிப்பிடுகிறது.
இந்த மாதிரி நிலைமையை அடைந்திருப்போர் கீதை சொல்கிறபடி தன் சரீரத்தாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றுபட்டு தவம் செய்திருக்க வேண்டும். அப்படி அவை மூன்றும் நடன்திருக்கவில்லை என்றால் நான் என்ற அகந்தை ஓங்கியும் அதனால் இரட்டைகளான தான்-பிறர் என்ற பாகுபாடும் அதை ஒட்டிய பாவச் செயல்களும் நடந்துகொண்டிருக்கும்.
சுவரை வைத்துக்கொண்டுதான் சித்திரம் வரைய வேண்டும் என்பது போல் உலகின் நிலையற்ற தன்மையையும் அதனால் என்றும் உள்ள உண்மையையும் அறிவதற்கு உடலே முதல் காரணம் என்று மட்டும் அல்லாமல் கருவியாகவும் ஆகிறது. இதைக்கொண்டுதான் திருமூலர் உடம்பினில் உறுபொருள் கண்டேன் உடம்மையிருந்து ஓம்புகிறேன்……என்றார் போலும்.
முதலில் உடல் அளவில் உலக விவகாரங்களில் ஈடுபட்டு பல அனுபவங்களையும் பெற்று அப்புறமாக சில சந்தேகங்கள் வரவும் அதைப் பலரிடம் கேட்டும் பேசியும் படித்தும் தெளிந்தும் ஒரு நிலைக்கு வரும்போது மேற்கொண்டு கேட்டவைகளில் மனதை ஒருமுகப்படுத்தி மேலே செல்வதற்கு என்று ஒன்றன்பின் ஒன்றாக நமது பயிற்சி தொடங்குவதற்கு உடலும் அதைச் சார்ந்த மனமும் கருவிகளாக உள்ளன. நம்மை விடப் படித்த சான்றோர்கள் நல்வழி காட்டும் குருமார்கள் தினப்படி நாம் காணும் ஆசிரியர்கள் வேதம் ஓதும் அந்தணர்கள் என்று நம் வாழ்வில் இவர்கள் போல் வரும் பலப்பல பெரியோர்களிடம் நாம் காட்டும் மரியாதை அடக்கம் என்பது தவிர உடலைக் கட்டுப்படுத்தும் சில வழிமுறைகளான தூய்மையாய் இருத்தல் விரதம்காத்தல் சாத்விகஉணவருந்தல் என்பதனால் புலனடக்கம் வருவதால் சரீரத்தவம் என்ற முதல் படியில் வருகிறது. மற்றவரைப் புண்படுத்தாமல் பேசுதல் உண்மையே பேசுதல் அனைவரும் மகிழும்படி பேசுவது தவிர நல்ல ஆன்மிகத்தேடலைத் தூண்டியும் வளர்க்கவும் உதவும் நூல்களைப் படித்தல் என்பவை எல்லாம் வாக்தவம் என்ற இரண்டாம் படியில் வருகின்றன. தன்னைச் சுற்றியுள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பாய் இருத்தல் அமைதியோடு இருந்து தன் வாழ்க்கை மூலம் அனைவருக்கும் வழி காட்டுதல் எதற்குத்தேவையோ அதை மட்டும் பேசி பொதுவாக மௌனம் காத்தல் என்றிவ்வாறான இதய சுத்தியுடன் இருப்பது மானசதவம் என்ற மனதளவில் கடைப்பிடிக்கப்படும் தவமாக அடுத்த படியில் வருகிறது. இத்தகைய தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. இவைகள் எல்லாம் ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும். நமது முன்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள திரைகளை அகற்ற உதவும். இதனால் பாவச் செயல்கள் குறைந்து மனம் ஓர் அமைதி நிலைக்கு வந்து அதனால் உலகச் செயல்களில் தேவைக்கு மேல் அதிகமான நாட்டம் நமக்கு இல்லாதபடி செய்து பிறப்பு இறப்பு என்றால் என்ன என்று நம்மை முன்னே கூறியபடி சிந்திக்க வைக்கும். இத்தகைய தொடர் நிகழ்வுகளால் மட்டுமே ஆன்மாவைப் பற்றிய சிந்தனை பலப்படும். என்றும் உள்ள ஆன்மாவை உணர்வது என்பது வெறும் அறிவு பூர்வமானது என்றிருந்தால் தொடக்கத்தில் எடுத்துவைத்த வாதங்களைப் படித்ததுமே நாம் ஆன்மாவை உணர்ந்திருக்கவேண்டும். ஆனால் படிப்பது சிந்திப்பது என்பதெல்லாமே நமது மனம் அறிவு இவைகளின் மூலம் நடப்பதாலும் என்றும் உள்ள ஆன்மாவை திரை போட்டு நாமே மறைத்து வைத்திருப்பதால் அத்திரையை அகற்ற முயற்சி செய்வதே இந்தச் சிந்தனையின் முதல் பயன் என்பதாலும் நாம் அறிவு கொண்டு ஆன்மாவை உணரமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.

ஆத்ம போதம் – 6

இந்று சற்று நீண்ட பதிவு. பொறுமையாக படியுங்கள்.
நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம். பேரறிவு ஒளிரவேண்டும் என்றால் ஒளிரவேண்டியதுதானே? அது ஒன்றே உண்மை என்றால் பொய்யாகிய திரை எப்படி குறுக்கே நிற்க முடியும்? அது ஏன்வருகிறது? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கலாம். இப்போதைக்கு அதற்கெல்லாம் பதில் தேவை இல்லை. ஏனென்றால்இ இவைகளுக்கு பதில் சொன்னால் புரிவதற்கு நமக்கு இன்னும் கொஞ்சம் விவரங்கள் வேணும். அதனால் மேலே போவோம்.

போ³தோ⁴ளன்யஸாத⁴னேப்⁴யோ ஹி ஸாக்ஷான்மோக்ஷைகஸாத⁴னம் |
பாகஸ்ய வஹ்னிவஜ்ஜ்ஞானம்ʼ வினா மோக்ஷோ ந ஸித்⁴யதி ||

அறிவொன்றே நேர்முக்தி சாதனமாகும்
பிற சாதனங்களின் பேறாம் – அறிவின்றி
ஆகாது முக்தியுறல் அக்கினியின்றிப் பாகம்
ஆகாதவாறு என்று அறி

எப்படி மற்ற எல்லாப் பொருட்கள் இருந்தாலும் நெருப்பு இல்லாமல் சமையல் செய்யமுடியாதோஇ அப்படியே ஞானம் இல்லாது ஒருவனுக்கு முக்தி சித்திக்காது. ஏனென்றால் மற்ற வழிகள் எல்லாவற்றையும் விட தன்னைப் பற்றிய ஞானம் ஒன்றுதான் முக்தி அடைய நேர்வழி ஆகும்…..

இதன் விரிபொருள்:
இந்தச் செய்யுளில் ரமணர் ‘அறிவு’ என்ற சொல்லை பேரறிவை உணர்த்தும் ஞானம் என்பதைக் குறிப்பிடப்பயன்படுத்துகிறார். முன்பகுதியில் ‘அறிவு’ என்பதை நமது மூளையால் அலசப்பட்டு நமக்கு வரும் ‘மழெறடநனபந’ என்ற சொல்லைக் குறிப்பிடப் பயன்படுத்திநோம்.
இந்தச் செய்யுளை அலசுவதற்கு முன்னால்இ நாம் சிறிது பின்னோக்கி ஆதி சங்கரர் காலத்துக்குச் செல்லவேண்டும். அவரது காலத்தில் பற்பல சித்தாந்தக் கருத்துகள் பரவியிருந்தன. அவற்றில் ஒன்று பூர்வமீமாம்ச வாதம். அதன்படி வேதத்தின் நோக்கம் ஒருவன் செய்யவேண்டிய கர்மங்களை விவரமாகக் கூறுவதே. அந்த முறைப்படி செய்யப்படும் எந்த விதமான யாகம்இ யக்ஞம் போன்ற கர்மத்திற்கும் பலன்கள் உண்டு. ஆதலால் அதற்கென்றே உண்டான சில யக்ஞங்களைச் செய்து ஒருவன் முக்தி நிலையையும் அடையலாம் என்பதே அவர்களுடைய நிலை. அவர்களுக்கு கர்மம் வெறும் ஜடம்இ அதற்குப் பலன் தருவது கர்மபல தாதாவாகிய இறைவன் என்பதை வாதங்கள் செய்து நிரூபித்துஇ அவர்களில் சிலரைஇ பாரதம் முழுதும் சுற்றி வந்துஇ தான் பரப்பிக் கொண்டிருந்த அத்வைத மார்கத்திற்குக் கொண்டு வந்தவர் ஆதி சங்கரர். அப்படி மாறி வந்தவர்களில் ஒருவரான மண்டனமிஸ்ரர் என்பவர்தான் சுரேச்வராசார்யர் என்று பெயர் மாறி சங்கரரின் பிரதமசீடர்களில் ஒருவராகிஇ சிருங்கேரி சங்கரமடத்தின் முதல் ஆச்சாரியராக நியமிக்கப்படுகிறார்.
இறைவனை நினைத்துச் செய்யப்படும் செயல்கள் யாவும் நம் கருத்தைத் திருத்திக் கதிவழி காண்பிக்கும். ஆக கர்மயோகம் வழி காட்டும் என்பது சரி. அது போன்றே மற்ற யோகங்களும் ஒவ்வொரு விதத்தில் நம்மை முக்தியை நோக்கி இட்டுச் செல்லும். பூஜைஇ ஜபம்இ தியானம் முறையே இறைவனிடம் உள்ள பக்தியால் உடலாலும்இ வாக்காலும்இ உள்ளத்தாலும் செய்யப்படும் கர்மமே என்று ரமணபகவான் ஒரு இடத்தில் கூறுவார். அதில் முன்னது ஸ்தூலமாகவும்இ பின்னது நுண்ணியதாவும் இருப்பதால்இ நுண்ணியதாக இருப்பதே மற்றதைவிட மிக உயர்ந்தது என்பார். அதற்குக் காரணம் நாம் இவைகளினின்றும் நுண்ணியதான எண்ணத்தையும் தாண்டி உள்ளதை அடைந்து அந்தப் பேரறிவை உணரவேண்டும் என்பதே. அப்படிச் செல்லக்கூடிய ஞான வழி ஒன்றே நமது தவறான எண்ணத்தைச் சரி செய்து நமக்கு முக்தி அளிக்கும் என்றும் அதில் விவரமாகக் கூறுவார். அதுவே யோகங்களில் எல்லாம் சிறந்த மகா யோகம் என்றும் ரமணர் குறிப்பிடுவார்.
அதன்படி முமுக்ஷூ ஒருவன் அந்த அளவுக்கு விவேகம் கொண்டுஇ வேகத்தோடு ‘உந்து’வதால் அடையும் திறன் கொண்டுஇ அவன் ‘பற’க்கும் நிலைக்கு வரவேண்டும் என்றும் பொருள் வைத்து ரமணர் உந்திபற என்று உபதேசஉந்தியார் என்ற நூல் செய்தார். ஓர் ஆகாய விமானம் தரையில் வேகமாகச் சென்று உந்திக்கொண்டு பறக்கும் நிலையை அடைவது போன்றதுதான் இதுவும். இதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் தரை வழியாக ஓர் இடத்தை அடைவதைவிட ஆகாய மார்க்கமாக அங்கு அடைவது ஒரு நேர் கோட்டில் செல்வதாகவும் இருக்கிறதுஇ அதே சமயம் தரையில் இருக்கும் மலைஇ ஆறு போன்ற பல தடைகளையும் தாண்டுவதாகவும் அமைகிறது. அதே போன்று இங்கும் இந்த ஞானமார்க்கத்தில் சென்றால் உடல்இ மனம் இவைகளினால் வரும் தடைகளையும் தாண்டிஇ நேராக முக்தி நிலையை அடைய முடிகிறது. முக்தியடைய வெவ்வேறு வழிகள் சொல்லப்பட்டிருப்பதன் காரணமே ஒவ்வொருவரும் அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் வெவ்வேறு நிலைகளில் இருக்கின்றார்கள் என்பதே. பலருக்கும் தன் வாழ்க்கையின் பயனைப் பற்றியோஇ அல்லது அதன் காரணத்தைப் பற்றியோ யோசனை வருவதில்லை. எல்லோருக்கும் வாழ வேண்டும் என்றும்இ வாழ்க்கையில் சுகமாய் இருக்க வேண்டும் என்ற ஆவல் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் எதைச் செய்தால் அந்த சுகம் கிடைக்கிறது என்பதில் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.
ஒன்றன்பின் ஒன்றாகப் பொருளும் மாறிஇ அதன் மேல் உள்ள ஆசையும் மாறி ஒரு விதமாக ஓயும்போதும்இ அல்லது என்னதான் முயன்றும் ஏதும் நாம் ஆசைப்பட்டது கிடைக்காமலோஇ கிடைத்தும் அதை அனுபவிக்க முயலாமல் போவதாலோ விரக்தி வரும்போதும்இ ஒருவனுக்கு உலகின் மீதும் அதன் பொருள்களின் மீதும் உள்ள கண்ணோட்டம் நாளடைவில் மாறுகின்றன. எது செய்கிறதோ இல்லையோஇ காலம் இந்த நிலைக்கு ஒருவனைத் தள்ளிக்கொண்டு வரும். சிலருக்கு இந்தக் காலஅளவு குறைவாகவும்இ வேறு சிலருக்கு இது அதிகமாகவும் இருக்கலாமே தவிர கடைசியில் ஒருவன் இந்நிலைக்கு வந்தே ஆக வேண்டும். அப்போதும் ஒருவனது மனோநிலையைப் பொருத்தே அவன் எப்படி மாறுவான்இ அடுத்து என்ன செய்வான் என்பதும் இருக்கிறது. ஏனென்றால் எந்த நிலையிலும் மனிதன் மனிதன் தான். அவனது மிஞ்சியிருக்கும் ஆசாபாசங்களைப் பொருத்தே மேலே வரப்போவது அமையும்.
முமுக்ஷூவுக்குப் பல வழிகள் இருந்தன என்று சொன்னோம். அதை ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம்.
பலரும் செல்லும் பக்தி வழியின் முக்கிய அம்சம் இறைவனிடம் சரண் அடைவது. இது வெறும் சொல்லளவிலே மட்டும் இல்லாது மனத்தளவில் ஆழமாக இருந்தால்தான்இ அது பரிபூரண சரணாகதி ஆகும். அப்படி இருன்தால் சரணடைந்தவன் நான் தான் இறைவனிடம் சரணடைன்துவிட்டேனேஇ எனக்கு இது நடக்கவில்லையேஇ அது கிடைக்கவில்லையே என்று நினைக்கவும் மாட்டான்இ சொல்லவும் மாட்டான். அப்படிச் சரணடையும்போது மனம் பூரண அமைதி கொள்ளும். அப்போது அந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருப்பவன் யார் என்று கேட்டால் அவனால் என்ன சொல்லமுடியும்? நான் என்று சொல்வானா அல்லது இறைவன் என்பானாஇ அல்லது இறைவன் தன்னுள் இருப்பதால் என்பானா? அப்படியே எதுவும் சொன்னாலும் முன்பு இறைவன் அவனுள் இல்லாது போயிருன்தானாஇ இல்லாது போய் இருந்தால் அப்போது அவன் என்னவாய் இருன்தான் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் வரும்? ஆக பக்தி வழி மன அமைதியைக் கொடுக்கும் என்பதோடு சரி. அமைதியாய் இருக்கும் அவன் யார் என்பதற்கு அங்கு பதில் இல்லை. பக்தி வழியில் வரும் பெரும்பாலானோரின் செயலாக பூஜையையும்இ ஜெபத்தையும் எடுத்துக்கொண்டுஇ ரமணர் அவைகளை முறையே உடலாலும்இ வாக்காலும் செய்யப்படும் கர்மம் என்பார்.
அடுத்ததாக நாம் இறைவனிடம் ஒன்றாவதையே சிலர் யோகம் என்பார்கள். அல்லது நமது மனம் செல்லும் வழிகளைக் கட்டுப்படுத்த நமது புத்தியை ஒருமைப்படுத்துவது என்று சொல்லலாம். ராஜ யோகத்தில் பெரும்பாலும் இது மனதை உண்முகமாகச் செலுத்திஇ அதை அமைதிப்படுத்த ஏதேனும் சில பயிற்சிகளை உடலளவில் செய்வார்கள். நமது உடல் தூலம் என்றால்இ அந்த உடலுடனேயே முதலிலிருந்து இறுதிவரை இருப்பது சுவாசம் என்பதால்இ அதுதான் நாம் உயிருடன் இருப்பதைப் பிறர் அறியவும் உதவும் காணக்கூடிய பொருள். அது உடலைவிட நுண்ணியதானது. அதைப் பயிற்சிகள் மூலம் கட்டுப்படுத்தினால் நாம் காணமுடியாத நமது நுண்ணிய தேகமும் வசப்படும். அதன் மூலம் தூலமாய் இல்லாது நுண்ணிய வடிவில் இருக்கும் இறைவனுடன் நாம் ஐக்கியம் ஆகலாம் என்று பல தியான முறைகளையும் அவர்கள் சொல்வார்கள். அப்படித் தியானிப்பதாலும் மற்ற பல பயிற்சிகளாலும் மனமும் அமைதி அடையலாம்இ தூலமாய் விளங்கும் உலகின் மீதும் பற்றுதல் இல்லாது அதன் விஷயங்களிலிருந்தும் விலகியிருக்கலாம். ஆனால் அப்படி விலகியிருப்பவன் யார்இ அமைதியை அனுபவிப்பவன் யார் என்று கேட்டால் பதில் இருக்காது. இந்த யோகத்தின் அங்கமாய் விளங்கும் தியானத்தை ரமணர் உள்ளத்தால் செய்யப்படும் கர்மம் என்பார்.
மேலே சொல்லப்பட்ட முறைகள் எல்லாமே ரமணரைப் பொருத்தவரை விதம் விதமான கர்ம யோகங்கள்தான். இவை தவிரஇ செய்யப்படும் எந்தச் செயலும் இறைவனுக்காக என்றும்இ இறைவன் நமக்குக் கொடுத்த சக்தியால் என்றும் கருதிச் செய்வதையே குறிப்பாக கர்மயோகம் என்கிறார்கள். மேலே சொன்னதுபோல இதுவும் நிச்சயம் கதி வழி காட்டும். மன அமைதியையும் கொடுக்கும். ஆனாலும் நாம் செய்யும் கர்மத்தோடு பந்தப்பட்டது போலஇ அதாவது கட்டுண்டது போலஇ ‘நாம் செய்கிறோம்’ என்கிற நினைப்பு நமக்குச் சிறிதாவது இருக்கலாம். அதிலிருந்தும் கர்மத்திற்கு உண்டான விளைவுகளை எதிர்பார்ப்பதில் இருந்தும் நமக்கு விடுதலை கிடைக்குமா என்றால் அது நாம் செய்யும் கர்மத்தால் இல்லை என்பதே பதில். விடுதலை அல்லது முக்தி வேண்டுமானால்இ அதற்கு உரிய மனோநிலையும்இ அறிவும் வேண்டும். வெறும் கர்மத்தால் அது ஆவது இல்லை. மேலும் கர்மத்தில் ஈடுபடுவதால் அதன் நேரடி விளைவாக ஆன்மாவைப் பற்றித் தெளியலாமா என்றால் அதுவும் இல்லை. சாஸ்திரங்கள் சொல்கிறபடி கர்மங்கள்இ அதன் விளைவுகளையும்இ முறைகளையும் பொருத்து நான்கு வகைகளில் இருக்கின்றன.
ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறலாம். இது ‘ஆப்யகர்மம்’ எனப்படுகிறது. அதாவது ஒரு பலசரக்குக் கடைக்குச் சென்று அரிசி வாங்குவதையும்இ ஒரு பள்ளிக்குச் சென்று கல்வி பயில்வதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆன்மா ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்று இல்லாததால் ஆன்மாவை அப்படி அடைய முடியாது.
கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது ‘உத்பாத்யகர்மம்’ எனப்படுகிறது. ஆன்மா இப்போது இல்லாது வேறொரு சமயத்தில் கிடைக்கும் என்பதும் கிடையாது. ஏனென்றால் ஆன்மா எங்கும் அல்லாது எப்போதும் இருப்பது.
மூன்றாவது வகையான கர்மம்இ ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது ‘விகார்யகர்மம்’ எனப்படுகிறது. இது பாலைத் தயிராக மாற்றிக் காட்டுவது போலத்தான். ஆன்மாவை அப்படி மாற்றுவதற்கு முன்பு ஓர் உருவம்இ பின்பு வேறொன்று என்று அதற்குக் கிடையாது என்பதால் ஆன்மாவை அப்படியும் அறிய முடியாது.
நாலாவதாக ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்கினால் அந்தப் பொருளை நன்கு காணலாம். அதற்கு ‘சம்ஸ்கார்யகர்மம்’ என்று சொல்லப்படுகிறது. ஆன்மாவில் அசுத்தம் என்று ஏதும் கிடையாது. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே. ஆக இந்தக் கர்மம் செய்தும் நாம் ஆன்மாவை உணர முடியாது.
இப்படியாக எந்த விதமான யோகமுறைகளைப் பின்பற்றினாலும் அதைச் செய்வதில் மனம் ஈடுபடுவதால்இ மனத்திற்குச் சாந்தி கிடைக்கும். ஆக எல்லா வழிகளும் நன்மை தருபவையே. ஆனால் ஆன்மாவைப் பற்றி முழுமையாக உணர்ந்து முக்தி நிலை அடைவதற்கு ஞானம் ஒன்றே நேரடியான சாதனம்.
சமையல் செய்வதற்கு பாத்திரம்இ அடுப்புஇ பல வகைச் சாமான்கள்இ தண்ணீர் என்று எல்லாம் வேண்டும் என்பது போல மேலே சொன்ன வழிகள் எல்லாமே பயன் தரும் என்கிறார் சங்கரர். இங்கு முக்கியமாக என்ன இல்லை என்றால் அடுப்பை உபயோகிக்க வேண்டும் என்றால் நெருப்பு வேண்டுமல்லவாஇ அது இல்லாதுபோனால் மற்றவை இருந்து என்ன பயன்? அதேபோல மன அமைதிஇ உலகில் பற்றில்லாமைஇ நுண்ணிய அறிவு என்ற மற்றதெல்லாம் இருந்தும் அமைதி கொள்பவன் யார்இ பற்றில்லாதிருப்பவன் யார்இ அறிவுடன் இருப்பவன் யார் என்ற அந்தத் தேடல் இல்லாதுபோனால் மற்றவை இருந்தும் பயன் இல்லை என்கிறார். ஆகவே அந்தத் தேடலின் மூலம் நமக்கு சித்திக்கும் ஞானம் இல்லாது போனால் மற்றவை பயனில்லை என்று ஆகிறது.

ஆத்மபோதம் – 7

இங்கு ஒரு சந்தேகம் வருகிறது. என்ன? கர்மங்கள் விசித்ரமாக பலவகையாக இருப்பதால் ஏதாவது ஒரு கர்மமே அக்ஞானத்தைப் போக்கட்டுமே – ஞானத்தால் ஆகவேண்டியதென்ன என்கிற விநாதான். இதன் பதிலாகத்தான் சங்கரர் தன் அடுத்த ஸ்லோகத்தை சொல்கிறார்.
அதன் தமிழ் செய்யுளைப்பார்ப்போம். இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீபொன்னையாமுதலியார் என்கிற சிவானந்தமூர்த்தி என்பவரின் கவிதை.

கன்மமஞ்ஞானந்தன்னை கலந்தவிரோதியாகும்
மன்னியங்கதவிர்தி வழங்கிடதல்ல
இன்னிய ஞானமொன்றேயிருணீக்குஞ்சுடரதொப்பர்
சொன்னவவ்வித்தை தன்னைத்துறந்திடுமுற்றுமனனோ!

இது சற்று கடினமான தமிழ்தான். ரமணரது போல் இருக்காது. பரவாயில்லை. நாம் அர்த்தம்தான் பார்க்கபோகிறோம்.
ஜடமாகிய யாகம் போன்ற கர்மமானது அக்ஞானத்துக்கு வேறாக இருப்பதால் அந்த அக்ஞானத்தை அழிக்க முடியாது. தனக்குத்தானே ஒளிவிடக்கூடிய ஞானமே இருளைப் போக்கும் சுடர்போல அக்ஞானத்தை போக்கிவிடும்.
சாத்திரங்களில் பலவிதமான கர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. முறைப்படி செய்தால் ஒவ்வொன்றுக்கும் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்பதும் உண்மை. அஷ்டமா சித்திகளும் இந்த வகையைச் சேர்ந்தவைதான். அதாவது செய்யப்படும் கர்மத்திற்கு அதன் விளைவு என்று ஒன்றிருக்கிறது. அவைகளை அனுபவிப்பவன் என்றும் ஒருவன் இருக்கிறான். கர்மங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு அதற்கான பலன்களையும் தொடர்ந்து அனுபவிப்பவன் என்ற நிலைதான் அவனுக்கு மிஞ்சுமே தவிர அதனால் அவனுடைய முக்திக்கு வேண்டிய அறிவு கிடைக்காது. கர்மங்கள் செய்து கொண்டிருப்பதால் அவைகளைச் செய்பவனுக்கு தான் செய்கிறோம் என்ற கர்வம் தலைக்கேறவும் வாய்ப்பு இருக்கிறது. அது தூலமாகவும் இருக்கலாம் நுண்ணியதாகவும் மாறலாம். ஸ்தூலமாக இருக்கும்போது அவனது அகந்தை வெளிப்படையாக மற்றவர்களை விரட்டுவது.. உதாசீனமாகப் பார்ப்பது என்று இவ்வாறாகத் தெரியும். நுண்ணியதாக மாறும்போது.. இவ்வளவு செய்திருக்கிறேனே அதற்கு இதுதானாபலன் என்று புலம்புவதாகவோ இவ்வளவு என்னிடம் வாங்கிக் கொண்டார்களே அதற்கு அவர்கள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று அரற்றுவதாகவோ ஆகிவிடும். அதனால் கர்மம் செய்பவன் எந்த மனநிலையில் செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறது. அதன்படி செய்பவனுக்கே ஞானம் பிறக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெளிவாகவே சொல்கிறார்.

இனி அடுத்த பாடல் ஆத்மா சரீரங்கள் தோரும் தனித்தனியாக இருக்கின்றதால் தனித்தனியாக அனுபவிக்கப்படுகின்றதால் அந்த ஆத்மாவுக்கு விடுதலை அதாவது மோட்சம் எப்படி கிடைக்கும் என்ற சங்கை வருகிறது. அதற்கு பதிலாகத்தான் அடுத்த ஸ்லோகம் வருகிறது…….

அவிரோதி⁴தயா கர்ம நாவித்⁴யாம்ʼ வினிவர்தயேத்
வித்⁴யாவித்⁴யாம்ʼ நிஹன்த்யேவ தேஜஸ்திமிரஸங்க⁴வத

அறியாமைக்குப் பகை அன்று அதனால் கன்மம்
அறியாமை தன்னை அகற்றாது – அறிவே
அழிக்கும் அறியாமை ஒளி அந்தகாரக்கும்பு
ஒழிக்குமாறு என்றே உணர்

அஞ்ஞானம் போக வேண்டுமென்று செய்யப்படும் கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால் அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படக் கூடியதால் அது ஒன்றே ஞானம் எனக்கு இல்லை என்ற அறியாமையைப் போக்கும். இங்கு ரமணர் அறிவு என்று சொன்னது ஞானத்தைக் குறித்தே! காரிருளை நீக்குவதற்கு எப்படி ஒளி தேவைப்படுகிறதோ அப்படியே அஞ்ஞானத்தை நீக்குவதற்கு ஞானம் தேவைப்படுகிறது.

இதன் விரிபொருள்:
கும்மிருட்டைப் போக்குவதற்கு ஒளி தேவைப்படுவது போல தனக்கு ஞானம் இல்லை என்ற அறியாமையைப் போக்குவதற்கு வேண்டியதே ஆத்ம ஞானம். அதைக் கர்மத்தால் செய்யமுடியாது. ஞானம் பெறுவதற்கும் ஏன் ஒரு கர்மம் சொல்லப்படவில்லை என்றால் அதன் காரணமே அப்படிச் செய்யமுடியாத காரியம் அது என்பதால்தான். எந்தக் கர்மமும் ஒருவனுடைய மனத்தின் ஈடுபாட்டால்தான் முடியும். ஆனால் ஆத்மஞானத்தின் முதல் படியே மனத்தைப் பற்றி விசாரிப்பதே. அதனால் கர்மம் செய்வதின் மூலம் அறிவது என்பது மனத்தைக்கொண்டே மனத்தைப்பற்றி விசாரிப்பது என்பதால் அது ஒரு திருடன் திருடனைப் பிடிப்பது போன்றது. அது முடியுமா? அது நாடகத்தில் வேண்டுமானால் நடக்கும். ஆனால் நடக்கும் வாழ்க்கையில் ஒருபோதும் நடப்பதில்லை. கர்மம் என்பது ஒரு வேலையில் ஒரு குறிக்கோளோடு ஈடுபடுவது. அது வேலை செய்யாது சோம்பேறி த்தனமாக இருக்கும் தமஸ் நிலைக்கு எதிரானது. ஆகவே கர்மம் தமஸ் நிலைக்கு எதிரி. கர்மம் தொடங்கியதும் தமஸ் நிலை முடிவடைகிறது என்று சொல்லலாம். ஆனால் கர்மம் செய்வதால் ஞானம் வரும் என்று எப்படிச் சொல்லமுடியும்? அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானது இல்லையே. மேலும் எல்லாவித கர்மங்களுக்கும் ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கிற வாழ்க்கையின் பயன் என்ன என்று கேள்வி கேட்டு. அதன் தொடர்பாக தனது வெவ்வேறு நிலைகளையும் அலசிப்பார்த்து விட்டு. அவை எல்லா வற்றுக்கும் ஆதாரமாக ‘நான் இருக்கிறேன்’ என்ற ஒரு தொடர் உணர்வு இருக்கிறதே இது என்ன? என்ற தேடலில் இருக்கும் முமுக்ஷூவிற்கு ஒரு தொடக்கமும் முடிவும் உள்ள கர்மம் எப்படிஒரு தொடக்கமோ முடிவோ இல்லாத ஞானத்தைப் பற்றி அறிய உதவும்?

ஆத்ம போதம் – 8

ஒரு தொடக்கமும் முடிவும் உள்ள கர்மம் எப்படிஒரு தொடக்கமோ முடிவோ இல்லாத ஞானத்தைப் பற்றி அறிய உதவும்? ………. இந்த விநாவைத் தொடர்ந்து மேலே பார்ப்போம்……..

நெருப்பை அணைப்பதற்கு தண்ணீரை உபயோகப்படுத்த வேண்டும்; ஏனென்றால் நீரும் நெருப்பும் ஒன்றுக்கொன்று எதிரி. அங்கு நீருக்குப் பதிலாக மண்ணெண்ணையோ, பெட்ரோலோ உபயோகப்படுத்தினால் என்னவாகும்? அதே போன்று அறியாமையைப் போக்க கர்மம் என்றால், நாம் முன்னே பார்த்தவாறு அகந்தை வேறு விதமாக வளர்ந்து, இருக்கும் பிரச்சினைகளை மேலும் வளர்க்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இருளும் வெளிச்சமும் ஒன்றுக்கொன்று முரணானவை. அதனால் இருட்டைப் போக்குவதற்கு ஒளி கொண்டு வந்தால் போதும். இருட்டைப் போக்க இருட்டால் முடியாது. ஸ்ரீபரமஹம்சர் சொல்லுவார்…… “உன்னுடைய இதயம் என்னும் குகையில் அக்ஞானம் என்னும் அந்தகாரம் சூழ்ந்துள்ளது. ஞானம் என்னும் வெளிச்சத்தை ஏற்றிவை. அஞ்ஞானம் தானே அகன்று விடும்”
இருளுக்கு என்று ஒரு தனி இருப்பு கிடையாது. எங்காவது இருட்டைக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த இடத்திற்கு வரும் ஒளியை மறைக்கும் செயலைச் செய்வது ஒன்றே அந்த வழி. ஆக ஒளி தானே….தானாக இருக்க முடியும், ஆனால் இருள் அப்படியில்லை. அதனால் ஓரிடத்தில் ஒளி வரவேண்டும் என்றால் அந்த இடத்தில் இருக்கும் மறைப்புகளையும், திரைகளையும் விலக்க வேண்டும் என்பதுதான். அப்படி ஒளி வந்ததும் இருள் எங்கே போயிற்று? எங்கேயும் போகவில்லை. இருள் என்று ஒன்று இருந்தால்தானே அது எங்கேயாவது போவதற்கு! அதனால் இருள் என்பதை மாயை என்பார்கள். இருட்டையே பார்த்துக்கொண்டு இருப்பவன் இருள் உண்மையாகவே இருக்கிறது என்றுதான் சொல்வான். கொஞ்சம் யோசித்தால்தானே அதன் உண்மை புலப்படும். உண்மையில் எந்ந நடந்தது இந்த இடத்தில். ஒளி இல்லாத இடத்திற்கு ஒளி வந்தது என்று சொல்வதுதானே பொருத்தம்? அதுபோலத்தான் அறிவு-அறியாமை என்ற இரட்டையின் குணமும்.
ஆன்மாவைப் பற்றிய ஞானம் என்பது மட்டுமல்ல; எந்த வகையான உலகியல் அறிவைப் பொருத்தும் அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது. ஆனாலும் மற்ற உலகியல் அறிவுக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால் முன்னது தன்னை விட்டு மற்றவைகளைப் பற்றி அறிவது, பின்னதோ அறிவுறும் தன்னைப் பற்றியே அறிவது. எப்படி ஒருவன் தானே திருடனாகவும் தானே போலீசாகவும் இருக்கமுடியும் என்பதுதானே உங்களுக்கு இப்ப வந்த ந்தேகம்? மேலும் படித்துப் புரின்துகொள்ளலாம்.

பரிச்சி²ன்ன இவாஜ்ஞானாத்தன்னாஸே² ஸதி கேவல: |
ஸ்வயம் ப்ரகாஸ²தே ஹ்யாத்மா மேகா⁴பாயேம்ʼsஸு²மானிவ ||

அறியாமையால் மறைவானது போல் ஆன்மா
அறவே அஹ்து ஏகமதாகி – நிறைவாய்
இலகுமே தானாய் இரியவே மேகம்
இலகும் ஆதித்தன் எனவே

எங்கும் இருக்கும் ஆன்மா அதைப் பற்றிய அறியாமையால் ஏதோ எல்லைக்குள் அடக்கப்பட்டது போல் மறைந்து கிடக்கின்றது. அந்த அறியாமை அழிந்ததும், மேகத்தால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சூரியன் மேகம் கலைந்ததும் எப்படி பளீரெந்று தெரியுமோ, அப்படியே இருக்கும் ஒன்றேயான ஆன்மா பரிபூரணமாகப் பிரகாசிக்கும்.
ஏதோ ஒன்று புதிதாக அடையப்படவேண்டியது என்றால், அது முன்னதாக இல்லாது இருந்தது என்றாகிறது. நம் உடல் அப்படிப்பட்டதுதான். முன்பு இல்லாது இருந்தது, பின்பும் இல்லாது போகிறது. ஆன்மா அப்படிப்பட்டதாக எப்படி இருக்க முடியும்? நாம் இருக்கும் ஒன்றைத்தானே தேடுகிறோம். ஏனென்றால் நாம் முன்பு பார்த்த நமது வெவ்வேறு நிலைகள் எல்லாம் வந்துவந்து போய்க்கொண்டு இருந்தனவாக உணர்ந்தோம். அதனால் அவை அனைத்துக்கும் ஆதாரமாய் இருக்கும் ஒன்றைத் தேடுகிறோம் என்றுதானே சொன்னோம். அந்த ஆதாரமே இல்லை என்றால் நாம் இருப்பது எப்படி? நமது ஆழ்ந்த உறக்க நிலையில் நாம் இருப்பதை உணராதபோதும், நாம் இருந்திருக்கிறோம். அது மட்டுமல்ல, அதை அனுபவித்தும் இருக்கிறோம். இல்லையென்றால் நாம் விழித்தபின் சுகமாக உறங்கினோம் என்று சொல்லமுடியாது. எப்போதும், எந்த நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதனால் மாறாத ஒரு நிலை இருந்தாக வேண்டும். அதனால் இல்லாத ஒன்றை நாம் புதிதாகத் தேடவில்லை. இருக்கும் அதை எப்படி உணர்வது என்று தெரியாததால் தேடுகிறோம் என்பதுதான் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை.

ஆத்ம போதம் – 9

இல்லாத ஒன்றை நாம் புதிதாகத் தேடவில்லை. இருக்கும் அதை எப்படி உணர்வது என்று தெரியாததால் தேடுகிறோம் என்று நேற்று முடிந்தது தொடர்ந்து இன்று தேடுவோம்………..
அதாவது நமக்குத் தெரியாமல் இருப்பதைத்தான் அறியாமை என்கிறோம். சாஸ்வதமான ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும் என்பது நம் அனுமானம். ஏனென்றால் அது இல்லையென்றால் நாமும் இல்லை என்றாகிவிடும். நமது மற்ற நிலைகளை எல்லாம் கடந்தும், அவைகளை உள்ளடக்கியும் இருக்கும் ஒன்று ஏதோ காரணங்களால் தெரியாதபடி மறைந்து இருக்கிறது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன, ஏன், எப்படி என்று கேட்பது இருக்கட்டும். எல்லாவற்றையும் உள்ளடக்கியதால் பரந்து விரிந்து இருக்கவேண்டிய அது, மறைந்து இருப்பதால் ஒரு எல்லைக்குள் குறுக்கப்பட்டு இருக்கிறதாக நமக்குத் தோன்றுகிறது. மறைக்கும் தடைகளை நீக்கி விட்டால் இருப்பது தானாகத் தெரியும் என்பது சரிதானே?
எப்படி சூரியனை மறைத்து வைத்திருக்கும் மேகங்கள் விலகியவுடன் சூரியன் பளீரென்று தெரிகிறதோ, அதே போல அறியாமையால் மறைந்து இருப்பது போல் தோன்றும் அந்த ஆத்மாவை மறைத்திருக்கும் திரைகளை விலக்கிவிட்டால் ஆத்மாவும் தானாகவே ஒளிரும். (இந்த திரைகளைத்தான் நமது ஸ்ரீசக்ரபூஜையில் ஆவரணம் என்ற மறைப்பாகக்காட்டி அதனை நீக்கிக் கொண்டு ஸ்வயஆத்மா என்கிற சித் சக்தியை அடைதல் என்று காட்டினார்கள்.)
காணப்படும் எல்லா நிலைகளுக்குமே அந்த ஆத்மா காரணம் என்பதனால் அது சூரியன் போல் எல்லாவற்றையும் ஒளிர வைக்கவேண்டும். எப்படி சூரியன் உதித்ததுமே மலர்கள் மலர்வதில் ஆரம்பித்து சகல உயிர்களும் தங்கள் தங்கள் வேலைகளில் ஈடுபடுகின்றனவோ, அதே போல ஆத்மாவின் சந்நிதானத்தில் நம் வேலைகளும் நடக்கின்றன. ஆனாலும் இவை எல்லாம் உலகில் நடக்க வேண்டும் என்பதற்காக சூரியன் உதிப்பதில்லை. அதேபோல நடக்கும் வேலைகளுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. இப்போது நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், மறைக்கும் திரைகள் என்னென்ன என்பதும், முமுக்ஷூ எடுக்கும் பயிற்சிகள் எல்லாம் அந்தத் திரைகளை அகற்றுவதற்கே என்பதும்தான்.

அஜ்ஞான கலுஷம்ʼ ஜீவம்ʼ ஜ்ஞானாப்⁴யாஸாத்³வினிர்மலம் |
க்ருʼத்வா ஜ்ஞானம்ʼ ஸ்வயம் நஸ்²யேஜ்ஜலம்ʼ கதகரேணுவத் ||

அறியாமையாம் கலக்கம் ஆரும் உயிர் தூயதாம்
அறிவுப் பயிற்சியினால் அவ்வறிவும்
அகற்றி அறியாமை அழியுமே நீர்மாசு
அகற்றும் தேற்றாம் பொடி ஒப்பாய்

கலங்கிய மாசுபடிந்த நீரில் தேத்தாங்கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் ஜீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப்போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்.

இதன் விரிபொருள்:
முதலில் சாதகனுக்குத் தன் உடலின் மேல் ஒரு அபிமானம் இருக்கும். அப்போது அவனுக்கு ஆத்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை அறிவு பூர்வமாக மட்டுமே தெரிந்து வைத்திருப்பான். அதனால் அவன் தன் உடலுக்கு வரும் நன்மை, தீமைகள் எல்லாம் ஆன்மாவுக்கும் வருகிறது என்று தவறாக நினைக்கிறான். ஆன்மா எதுவும் செய்வதும் இல்லை, அந்தச் செயலால் வரும் விளைவுகளை அனுபவிப்பதும் இல்லை என்று அவனுக்குத் தெரியாததால் உடலையும் ஆன்மாவையும் பிணைத்து ஒன்றாகக் கருதுகின்றான். அதுதான் இங்கு கலங்கிய நீர் என்று கூறப்படுகிறது. இது அறியாமையால் வந்த விளைவு.
அறியாமையால் விளைந்தது என்றாலும், அறியாமை போகும் வரை அதைப் போக்க முயற்சிகள் தேவை. முயற்சிகள் சிரவண, மனன, நிதித்யாசன முறைகளில் செய்யப்படும். அவை முறையே கேட்டல், சிந்தித்தல், தியானித்தல் என்பதாகும். குருவிடம் ஆன்மாவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிதல் முதல் படி என்றால், மற்ற இரண்டு படிகளையும் ஒருவன் தன் முயற்சியால் விடாப்பிடியாகத் தாண்டவேண்டும். எப்போதும் குருவின் அருள் சாதகனுக்கு உண்டு என்பதால், அவனுடைய தனிப்பட்ட முயற்சிகளின்போதும் அவரது அருள் கூடவே இருக்கும். முன்னது தூல வடிவில் இருந்தால், பின்னவை இரண்டும் ஸூக்ஷ்ம வடிவில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ரமணர் சொல்கிறபடி புலியின் வாயில் அகப்பட்ட இரை எப்படி தப்ப முடியாதோ, அப்படியே குருவின் அருட்பார்வையில் பட்ட சீடனும் முக்தி நிலையை அடையாமல் மீள முடியாது.
வேதங்களே நமக்குப் பிரமாணங்கள் என்பதால் வேதத்தில் உள்ள மஹா வாக்கியங்களே ஏதோவொரு வடிவில் நமக்கு குருவின் மந்திரமாக உபதேசிக்கப்பட்டிருக்கும். இருக்கக்கூடிய ஆன்மா ஒன்றேயானாலும், ஒவ்வொரு மஹாவாக்கியமும் வெவ்வேறு பார்வைகளில் சொல்லப்பட்டவை. அதனால் நாம் அவைகளையே எடுத்துக் கொள்வோம். ரிக்வேதமாந ஐதரேய உபநிதஷத்தில் சொல்லப்பட்டுள்ள லக்ஷண வாக்கியமான “ப்ரக்ஞாநம்ப்ரஹ்ம” என்பது “உணர்வேபிரம்மம்” என்ற இலக்கண வடிவில் சொல்லப்பட்டுள்ளது. யஜுர்வேதம், தைத்திரீயஉபநிஷதத்தில் சொல்லப்பட்டுள்ள அனுபவ வாக்கியமான “அஹம்ப்ரஹ்மாஸ்மி” என்பது “நான் பிரம்மமாய் இருக்கிறேன்” என்ற அனுபவ வாயிலாய் சொல்லப்பட்டுள்ளது. சாமவேதம், சாந்தோக்கியஉபநிஷதத்தில் உபதேசவாக்கியமான “தத்வமஸி” என்பது “நீ அதுவாக இருக்கிறாய்” என்ற உபதேச வழியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதர்வணவேதம், மாண்டூக்யஉபநிஷதத்தில் சாக்ஷாத்கார வாக்கியமான “அயமாத்மாப்ரஹ்ம” என்பது “இந்த ஆத்மன் பிரம்மம்” என்ற யுக்திக்குப் பின் வரும் அனுபவ முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படியாக ஏதோவொரு முறையில் குருவினால் வழங்கப்படும் மந்திர உபதேசத்தைக் கேட்டு, அதன் பொருளையும், விளக்கங்களையும் அவரிடமே அறிந்துகொண்டு, பின்பு அதை மனத்தில் நன்கு அசைபோட்டு, தேவையானால் மேலும் விளக்கங்களைக் கேட்டு அதன் பின்பும் தன் அறிவால் அலசியதும் நன்கு உள்வாங்கிக்கொண்டு, அதை வெறும் அறிவால் மட்டும் அறிந்து கொள்வதை விடுத்து அதன் உண்மையை உணர்வதற்கு அதன் பொருளை மனத்தால் நன்கு தியானித்து அந்தப் பொருளாகவே இருக்க முயல்வதுதான் சாதகனின் முயற்சிகள். இதற்கு மேல் அவனருளாலே அவன்தாள் வணங்கும் நிலை தானே வரும்.
ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும், அறிந்தாலும் உணர்வதற்குமான தடைகள் இவைகள்தான் என்றும், தன்னை இவைகளில் எது பாதிக்கிறது என்று சாதகன் அறிந்து அதற்கேற்ற பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதே இங்கு சொல்லப்படுவது.

ஆத்ம போதம் – 9 (a)

முதலில் ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். இதை முன்பே சொல்லியிருக்கணும். பரவாயில்லை. நாம் மிக உயர்ந்த விஷயமான ஆத்மாவைபற்றி தெரிந்து கொள்ள புறப்பட்டிருக்கிறோம் அல்லவா ! இங்கு நமது பூஜையோ ஜபமோ விஷயமில்லை. தயவு செய்து தினம் இரவு படுக்கும் முன் வழக்கம்போல் மொபைல் பார்ப்போமே அப்பொது இந்த ரிதன்பரா ஞானஸபா க்ரூப் பதிவான இந்த ஆத்மபோத பதிவை பொறுமையாக ஒருதரம் தினம் படியுங்கள். இன்று புரியாவிட்டாலும் நாளை புரியும், நாளை புரியாவிட்டாலும் இன்னொருநாள் புரியும். என்ன சரிதானே! என்று புரிகிறதோ (இங்கு புரிகிறது என்று நான் சொல்வது சங்கரர் எழுதியதோ என்எழுத்தோ அல்லது Theory யோ இல்லை. உங்களையே உங்களுக்கு நாம் யார் என்று புரியும்.) அன்று நிங்களும் இல்லை … நானும் இல்லை…. ஆத்மா ஒன்றே! அதுவரை மனனம் நிதித்யாசனம் பயில வேணும். இந்த நிலையில் புரிந்து கொண்டு இனி தினம் படியுங்கள். ஏதேனும் முக்கிய வினா – அல்லது சந்தேகம் இருந்தால் இதில் பயப்படாமல் பதிவிடுங்கள். உடனே அடுத்த பதிவில் குருநாதர் தெளிவிப்பார். சரியா !

ஆத்மபோதத்தில் ஆன்மாவை அறிய பயிற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதை தொடர்ந்து காணுவோம்………..

அனாத்யாவித்யாநிர்வாச்யா காரணோபாதிருச்யதே |
உபாதித்ரிதயாதன்யமாத்மானமவதாரயேத் ||

ஆதியற்று இற்றென்று அறையொணா அஞ்ஞானம்
ஓதுவர் ஆதி உபாதியாய் – ஓதும்
உபாதிகளாம் மூன்றுடல்களின் வேறாய்
உபாதியில் ஆன்மாவை ஓர்

ஒரு தொடக்கமும் இல்லாத, வார்த்தைகளால் விவரிக்கவும் முடியாததுமான அறியாமையாகிய உபாதியை காரணசரீரம் என்று சொல்வார்கள். மூன்று சரீரங்கள் என்று சொல்லப்படும் ஸ்தூல, ஸூக்ஷ்மம், காரண உபாதிகளுக்கும் வேறாக உபாதியற்ற ஆன்மாவை உணர்ந்திடுவாய்.

இதன் விரிபொருள்:
“அவித்யா” என்கிற “அஞ்ஞானம்” பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமக்குப் புரிவதற்காக ஒரு பொருளைப்பற்றிய அறிவைப் பற்றி இப்போது பேசுவோம். நமக்குப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாததால் அந்தப் பொருள் இல்லாமலா போய்விட்டது? (உதாரணம்…. சீனாவிலே டிரைவர் இல்லாத கார் மற்றும் ரயில் தானே போகிறது என்கிறார்கள். நாம் பலர் பார்த்ததும் இல்லை. ஆநால் அது இருப்பது உண்மை.)
நம்மைப் பொருத்தவரை அந்தப்பொருள் இல்லை என்பதுதான் சரியான நிலை. அந்தப் பொருளைப் பற்றிய அறிவை நாம் பெறும்போது எப்போது பெற்றோம், எப்படிப் பெற்றோம் என்பதை விவரிக்க முடியும். ஆனால் அதைப் பற்றி அறியாதிருந்தோமே, அந்த அறியாமை எப்போது வந்தது என்பதையோ அதைப் பற்றிய மேலும் விவரங்களையோ நம்மால் கொடுக்க முடியாது. என்ன சொல்ல முடியும் என்றால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவு வந்ததும், அதைப் பற்றிய அறியாமை போயிற்று என்று சொல்லி அதுவரை அறியாமை இருந்தது என்றும் சொல்ல முடியும். அதாவது அந்த ரயிலை பார்த்தவர் வந்து சொன்னாலோ அல்லது டிவி யில் பார்ததோலோ தான் நாம் அறியாமை போகிறது. ஆனால் அறியாமை எப்போது தொடங்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அறியாமையைப் போக்க முடியும். இதே மாதிரிதான் ஆன்மாவை பற்றிச் சங்கரர் சொல்கிறார்.
ஆன்மாவைப் பற்றிய காரண சரீரமான “அவித்யா”வை அவர் விவரிக்கும்போது, “அநாதி” என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆன்மாவைப் பற்றி அது எப்போது தொடங்கியது என்று தெரிந்துகொள்ள முடியாது என்பதையும், “அநிர்வாச்யா” என்பதன் மூலம் அது எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியாது என்பதையும் கூறுகிறார். இதையே ரமணரும் அதை “அக்ஞானம்” என்று மொழிபெயர்த்து “ஆதியற்று” என்று சொல்லி அதன் ‘தொடக்கமில்லாத’ தன்மையையும், “இற்றென்று அறையொணா” என்பதனால் அதன் ‘இதுவென்று சொல்லமுடியாத’ தன்மையையும் விளக்குகிறார். அப்படிச் சொல்வதனால் இந்தக் காரண சரீரம் ஆதி உபாதியாய் இருக்கிறது. அதனால் இந்த உபாதி எல்லாவற்றிலும் மிக ஸூக்ஷ்மதாய் இருந்து அது இருப்பவருக்கும் தெரிவதில்லை, மற்றவர்க்கும் தெரிவதில்லை.
இதை இரண்டு கோணங்களில் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். முதலாவதாக, ஸ்தூலதேகம் இல்லாதபோது அது மனம் போன்ற ஸூக்ஷ்ம தேகமாய் இருக்கிறது என்றும், அந்த ஸூக்ஷ்ம தேகத்தின் விதை போன்ற மூலமாய் இந்த மிக ஸூக்ஷ்மதேகமான காரணசரீரம் இருக்கிறதென்று நாம் புரிந்து கொள்ளலாம். இரண்டாவதாக, உண்மையில் இருக்கும் ஒன்றேயான ஆன்மாவை ஸ்தூல உபாதியான “நான் உடலே” என்ற அபிமானமும், சூக்ஷ்ம உபாதியான “நான், எனது” என்பன போன்ற மனத்தளவில் தெரியும் எண்ணங்களும், காரண உபாதியான “ஆன்மாவைப்பற்றிய அறியாமை” என்பதும் ஆன்மாவை அறியும் தடைகளாக இருக்கும் உபாதிகள் என்று இதனைப் புரிந்து கொள்ளலாம். முன்னது பிறப்பு-இறப்புக்கான காரண காரியங்களையும், அவை தொடர்பான நிலைகளையும் அலசுவதாக இருக்கிறது; பின்னது ஆன்மாவை நாடும் சாதகன் ஒருவன் செய்யவேண்டியது என்ன என்பதைக் காட்டுவதாக அமைகிறது. நாம் இந்த இரண்டாம் கோணத்தைத் தேர்ந்தெடுத்து மேற்கொண்டு செல்வோம்.

ஆன்மாவைப் பற்றிய அறியாமை என்பது தானும், தான் காணும் உலகமுமே உண்மை என நினைத்து, அதற்கு ஆதாரமாக ஆன்மா ஒன்று உண்டு என்பதைத் தெரியாமல் இருப்பது; அல்லது தெரிந்தாலும் அதை மறுப்பது என்பதே அத்தகையவர்களது நிலை. நாம் இதுவரை பார்த்த மூன்று விதமான உபாதிகளும் அவர்களுக்கு இருக்கின்றன என்றுதான் அதற்கு அர்த்தம். ஆன்மாவைப் பற்றித் தெரியாமல் இருப்பவர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லி, அவர்கள் தினமும் அடையும் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அவர்களே அலசும்படிச் சொல்லி அவர்களுக்கு மேலும் புரிய வைக்கலாம். ஆனால் அப்படி விளக்கங்கள் அளித்தும், ஆன்மாவை மறுப்பவர்களுக்கு என்ன சொல்லி விளங்கி வைக்க முடியும்? குதர்க்க வாதிகளுக்கோ, மடையர்களுக்கோ எத்தனை விளக்கினாலும் புரிய போவதும் இல்லை. அவர்கள் மறுப்பது விழிப்பு நிலையில்தான், அந்த விழிப்பு நிலை ஒன்றுதான் அவர்களது நிலையா, அவர்களது மற்ற இரண்டு நிலைகளுக்கும் அவர்கள் பதில் என்ன என்றுதான் கேட்கமுடியும். அவர்களது ஒரே ஒரு நிலையை மட்டும் வைத்துக்கொண்டு, உலகின் உண்மையை எப்படி நிலை நிறுத்த முடியும் என்றுதான் கேட்க முடியும். ஆன்மாவைப் பற்றித் தெரியாத பலரும் அந்த நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குக் காலம்தான் கனிந்து வழிகாட்ட வேண்டும். (நமக்கு வழி காட்ட தொடங்கிவிட்டது….. நமது ஸ்ரீவித்யா-சக்ர பூஜையில் இறுதியில் தத்துவசோதனம் என்ற ஒரு கிரியை இருக்கிறது நமக்கு தெரியும். இப்படியேதான் படிப்படியாக நமது பூஜை ஆத்மஞான அறிவை ஊட்டுகிறது. சிதானந்தஅலை இதுபற்றி நிறைய பேசும்.)
அந்தக் கால இடைவெளியில் அவர்கள் செய்யும் நற்காரியங்கள் அவர்களுக்குக் கைகொடுக்கும். இதுதான் சாதகன் ஆவதற்கு முன் ஒருவனுடைய காரணசரீர நிலை. (இதுவே காரணகலசம் என்று பாத்ராசாதனத்தில் ஒரு இடமே உள்ளது.) காரணசரீரத்தை விதை போல என்று முன்பு சொன்னோம் அல்லவா? பிறப்பு-இறப்பு கோணத்திலிருந்தும் இதனை நாம் அலசலாம். ஒரு விதை முளைப்பதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். எல்லா விதைகளுமே துளிர்த்து முளைப்பதில்லை; முளைக்கும் எல்லாமே வளர்வதில்லை; வளரும் எல்லாமே பூப்பது இல்லை; பூக்கும் எல்லாமே காய்ப்பதில்லை; காய்க்கும் எல்லாமே கனி ஆவதில்லை. இதே போன்றுதான் ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும்.

ஆத்ம போதம் – 10 *கோசங்கள்*

ஆன்மாவைப் பற்றி அறிவதற்கும் காலம் கனிந்து அதற்கேற்ற சூழ்நிலைகள் உருவாக வேண்டும். ….தொடர்ந்து நாளை காணுவோம்…. என்று 24 ஆம் தேதி முடித்திருந்தோம்‌… தொடர்ந்து பார்போம்.
ஆன்மாவைப் பற்றித் தெரிந்துகொள்ள முயற்சிக்கும் சாதகன் ஒருவனுக்கு, அவனது உடலும், உடல் சார்ந்த உலகமும் அவனுக்குத் தூலதேகமாகவும், அவனது மனோநிலைகள் அவனுக்கு ஸூக்ஷ்மதேகமாகவும் தடைகளாக நிற்கும். இங்கு முதலில் அவன் தன் மனத்தைக் கொண்டே விசாரம் செய்து, (தத்துவசோதநம்) தான் உடலுக்கும் அப்பால் இருப்பதை தன் விழிப்பு-உறக்க-கனவு நிலைகளை அலசுவதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். உடலால் குடும்பத்திற்காக, ஊருக்காக, நாட்டுக்காக உழைப்பது எல்லாம் ஒருவனைத் தன்னையும் கடந்து அனைவரிடமும் உள்ள தெய்வத்தன்மையை உணரச் செய்து அன்பு காட்டச் செய்யும். இது போன்ற பல வழிகள் உண்டு. அத்தகைய வாழ்க்கை முறைகள் அவனுக்கு மனக்கட்டுப்பாட்டைக் கொடுத்து, உடலைக் கடந்த ஆன்மாவைப் பற்றி அறிவதை புத்தி அளவில் கொண்டுவிட்டு அத்துடன் நின்றுவிடும். அங்கு மனமும் முழு அளவில் அப்படியே இருக்கும்.
அதன்பின் ஏதேனும் ஒரு தியானத்தில் மனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நிலையற்ற தன்மையை உணர்ந்து, இவையெல்லாம் நானல்ல என்றால் பின் தான்யார்? என்று விசாரத்தைத் தொடர்ந்து நடத்த, தன் உள்ளிருந்து வரும் ஆத்ம சக்தியால் மட்டுமே ஒருவன் தன் உள்ள நிலையை உணர முடியும். அதாவது, இங்கு “நான்யார்?” என்று கேட்கும் வரை விசாரம் புத்தி அளவில் இருக்கும். ஆனால் அதற்கு அந்த அறிவை வைத்துக்கொண்டே விடை தேட முயற்சிக்கக் கூடாது. அப்படி அறிவின் தூண்டுதலால் வரும் விடைகளை மௌனமாகக் கவனித்துக்கொண்டே – ஒவ்வொரு எண்ணமும் வரும்போது அதைத் தொடர முயற்சிக்காமல், அதைக் கவனித்துக்கொண்டே- இருக்கப் பழகப்பழக ஒருவன் தன் மனமும் இன்றி தான் எப்போதும் உள்ள நிலையை அடையலாம். இதனை அப்படி அடைந்த பெரியோர் கூறியிருக்கின்றனர். (இந்த பயிற்சிக்கு நமது உபாசனையில் அஜபாவிதானம் என்று ஒன்று உண்டு. இது எங்கே என்று காண ஸாதகர்கள் மேலே மேலே வர முயற்சிக்கவும். ஒரே ஜபம் ஒரே சாதனை என்று எத்தனை நாட்கள் செய்வது? இங்கே யோசியுங்கள்.)
அந்த நிலையில் ஆழ்உறக்கத்தில் இருக்கும் சுகநிலையையும், ஆனால் உறக்கத்தில் உணராத அதை அப்போதே உணர்ந்தும் அனுபவிக்கலாம் என்று அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கின்றனர். அதனால் மூன்றுதேகங்களாகிய உபாதிகள் விலக, ஆன்மா தானே ஒளிவிட்டு நிற்பதை ஒருவன் தன் உணர்வினால் மட்டுமே அப்படி இருந்து அறிய முடியும். அந்த நிலையில் அறிவதற்கு என்று வேறாக இன்னொன்று ஏதும் இல்லை; அறிவே அறிவாய் தன்னை அறிந்து நிற்கிறது என்பவர்கள்தான் ஆன்மாவை உணர்ந்தவர்கள்.
இனி அடித்த பாடல்களை பார்க்கிறோம்….

பஞ்சகோசாதியோகேன தத்தன்மய இவ ஸ்தித: |
சுத்தாத்மா நீலவஸ்த்ராதியோகேன ஸ்படிகோ யதா ||

கோசங்கள் ஐந்து முதற் கூட்டுறவால் ஆன்மாவும்
மாசிலதே ஆயினும் அவ்வமயம் – நேரே சருவும்
நீல படாதி கலப்பால் நிர்மலமாம் படிகம்
போலவே ஒட்டாப் பொருள்

தன் எதிரில் நீலம் போன்ற வண்ணங்களுடன் உள்ள துணியால் ஒரு நிர்மலமான ஸ்படிகம் அந்தந்த வண்ணங்களுடன் காட்சி அளிப்பதுபோல, இயற்கையில் குற்றம் குறை இல்லாமல் விளங்கி எதிலும் ஒட்டாத ஆன்மாவானது அதை மறைக்கும் ஐந்து கோசங்களின் குணங்களோடு தோன்றுகிறது என்கிறார்.

இதன் விரிபொருள்:
ஆன்மாவுக்கு உபாதியாக தூல, ஸூக்ஷ்ம காரண தேகங்கள் இருப்பதாகப் பார்த்தோம். இங்கு சொல்லப்பட்டிருக்கும் அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆனந்தமயம் என்ற ஐந்து கோசங்களும் அந்த மூன்று தேகங்களின் விவரங்கள். கோசம் என்றால் உறை அல்லது மூடி. அவைகளை ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பதாகவும் கொள்ளவேண்டும். உதாரணமாக கத்தி ஒரு உரைக்குள் இருக்கும். ஆனால் அதில் ஒட்டாதல்லவா! அதுபோல.
இந்த உறைகளை எல்லாம் விலக்கினால் தானாக விளங்குவது ஆன்மா என்று பொருள். நிர்மலமாய் விளங்கும் ஆன்மா இந்தக் கோசங்களால் மறைக்க ப்படுவதால் அவைகளின் குணங்களோடு காணப்படுகின்றன. நிறம் எதுவுமில்லா ஒரு பளிங்கை கலர்த்துணி ஒன்று மறைத்து, பளிங்கை அந்த நிறத்தோடு உடையதாகக் காட்டுவதை அதற்கு உவமையாகச் சொல்கிறார் இங்கே.
நாம் சாப்பிடும் உணவால் உடல் உண்டாகி வளர்வதால், உடலாகிய ஸ்தூல தேகமே அன்னமயகோசம் ஆகும். பஞ்சபிராணன்களும், பஞ்ச கர்மேந்திரிய ங்களும் சேர்ந்து பிராணமயகோசம் ஆகும். பஞ்சஞானேந்திரியங்களும், மனமும் சேர்ந்து மனோமயகோசம். புத்தியாகிய அறிவின் இருப்பிடம் விக்ஞானமயகோசம். இந்தக் இறுதி மூன்று கோசங்களும் சேர்ந்ததுதான் ஸூக்ஷ்மதேகம். காரணதேகமாகிய மூன்றாவது தேகந்தான் ஆனந்தமயகோசம் ஆகும்.
இந்த கோசங்கள் ஆன்மாவை மறைப்பது மட்டுமல்லாது, தானே ஆன்மாவாக இருப்பதாகவும் நமக்கு காட்டும் வலிமை பெற்றன. அதனால் ஆன்மாவை உணர்ந்துவிட்டேன் என்று யாராவது சொன்னால், அவன் அனேகமாக இந்த கோசங்கள் எதிலோ மாட்டிக்கொண்டிருக்கிறான் என்று பொருள்படும். ஏனென்றால் கண்டவருக்கு விண்டு உரைக்க முடியாது அல்லவா! அந்த ஆன்மாவிலேயே லயித்துத்துத்தான் இருக்கத்தான் முடியும்.

ஆத்ம போதம் – 11 கோசங்கள்

நேற்று சொன்ன *பஞ்சகோசங்கள்* என்றதை இன்று சற்று விரிவாக சொல்லுகிறேன். அப்போதுதான் கொஞ்சமாவது புரிய வரும்… சரியா….
இந்த பஞ்சகோசங்கள் பற்றி பிரித்துப் பார்க்கும் ஒரு பகுதி நமது தைத்ரியஉபநிஷதத்தில் வருகிறது. அதில் பஞ்சகோசங்கள் என்று இவை குறிப்பிடப்படுகின்றன. கோசம் என்றால் உறை அதாவது கத்திக்கு உறை இருப்பது போல, மாம்பழத்திற்கு தோல் இருப்பது போல, மனிதனை சட்டை மறைப்பது போல என்று சொல்லலாம்.
பஞ்ச என்றால் ஐந்து. அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விக்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் ஆகியவையே இவை. நேற்றே பார்த்தோம்.
*அன்னமயகோசம்* : இது நமது ஸ்தூலதேகம். அன்னம் அதாவது உணவால் தோன்றி, உணவால் வளர்ந்து, உணவின் மூலமாகிய மண்ணில் அழிந்து விடுகிறது. தேகத்துக்கும் வாழ்வுக்கும் உணவின் முக்கியத்துவம் என்னவென்பதை இது உணர்த்தும்.
*பிராணமயகோசம்* : வாயு அதாவது காற்று தேகத்தின் உள்ளும் புறமும் இருக்கிறது. வெளி உலகிலும் உள்ளது. தேகத்துக்குள்ளும் இது மூச்சுக் காற்றாக உள்ளது. இதன் இயக்கத்தாலேயே தேகத்தின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன. இதன் மூலம் செயலாற்றும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள்உறுப்புகள், அவற்றின் இயக்கங்கள், ஆகியவை பிராணமயகோசம் என சொல்லப்படுகின்றன.
*மனோமயகோசம்* : உணர்ச்சிகள் அதாவது சுகம்-தூக்கம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆதாரமான மனம், அதன் பல்வேறு அடுக்குகள், செயல்பாடுகள் ஆகியவை மனோமயகோசம் எனப்படும்.
*விக்ஞானமயகோசம்* : எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது? எது உண்மை, எது பொய்? எது சரி, எது தவறு? எது நிலைக்காது, எது நிலைக்கும்? இதுபோன்ற தர்க்கரீதியான தேடல்களை நம் பகுத்தறிவும் சிந்தனைத்திறனும் செய்கின்றன. அறிவின் இந்த இயல்புகளும் செயல்பாடுகளும் அடங்கிய உறைக்கு விக்ஞானமயகோசம் என்று பெயர்.
*ஆனந்தமயகோசம்* : ஆனந்தமயகோசம் என்பது இந்த உறை-அடுக்குகளுக்கெல்லாம் தாண்டி இருக்கும் நிலை ஒரு உணர்வு நிலை. இந்த நிலையை உணர்வதும் அடைவதும் ஆன்மிகத்தின் லட்சியம் (வேதாந்தம்) என்றுகூட சொல்லலாம்.
மனிதவாழ்க்கை என்பது இவை ஐந்தையும் உள்ளடக்கியதுதான். ஐந்தாவதுகோசம் நம் புலன் அறிவுக்கு அப்பாற்பட்டது. மற்ற நான்கு கோசங்களையும் நாம் உணரவும் அறியவும் முடியும். ஒவ்வொருவரும் உடல், மனம், அறிவு இதில் ஏதேனும் ஒன்றுடன் இணைந்துதான் இருக்கிறோம். அதற்கு மாறாக இவை ஒவ்வொன்றும் ஒரேஉடலின்-ஒரேவாழ்வின் வெவ்வேறு அடுக்குகள் என்பதை உணர்ந்தால் ஒருங்கிணைந்த விதத்தில் நம்மை நாமே அணுகி தெளிந்து கொள்ளலாம். இப்படி எல்லாமே சேர்ந்ததுதான் இந்த தேகம் என்பதையும், எந்த ஒன்றுடனும் நாம் நின்றுவிடக் கூடாது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்பவர் எல்லாக் கோசங்களையும் தாண்டி ஆனந்தமயகோசத்தை உணர முடியும் என்பதுதான் உள்ளார்த்தம்.
தைத்ரியஉபநிடஷதத்தில் எது பிரம்மம் என்னும் தேடலில் அன்னமே பிரஹ்மம் என்று முதலில் உணரப்படும். பிறகு இது படிப்படியாக நகர்ந்து பிராணனே பிரஹ்மம், அடுத்து மனமே பிரஹ்மம், அடுத்து விஞ்ஞானமே பிரஹ்மம் என்ற முடிவுகள் எட்டப்படும். கடைசியில் *ஆனந்தம் பிரஹ்மணோ வியஜானாத்* (ஆனந்தமே பிரஹ்மம் என அறியவும்) என முடியும். கோசங்கள் பற்றி இது போதும்.
மேலே தொடர்ந்து நாளை காணுவோம்……….

ஆத்மபோதம் – 12

வபுஸ்துஷாதிபிஹி கோஷைர்யுக்தம் யுக்த்யவதாதஹ |
ஆத்மானமந்தரம் ஷுத்தம் விவிச்ச்யாத்தண்டுலம் யதா ||

உடல் பஞ்சகோச உமி ஆதியோடு உள்
சுடர் பரிசுத்த ஆன்மாவைத் – திடமான
உத்தியினால் குத்தி ஒழித்து அவற்றை அரிசி
ஒத்தறிய வேண்டும் உணர்

உமியுடன் கூடிய நெல்லை பதமாக உலக்கையால் குத்தி அரிசியியைப் பிரித்து எடுப்பது போல, பரிசுத்த ஆன்மாவை மறைக்கும் உடல் முதலான ஐந்து கோசங்களை திடமான சுருதி யுக்திகளினாலும், சாஸ்திர விசாரங்களினாலும் நீக்கி, உள்ளே சுடர் விட்டு ஒளிரும் ஆன்மாவை உணரவேண்டும்.

இதன் விரிபொருள்:
முந்தைய பாடலின் கருத்து இங்கு தொடர்கிறது. ஐந்து வித்தியாசமான உறைகளால் ஆன்மா மூடப்பட்டிருப்பதால், எந்தெந்த உறைகள் சற்று பலமாகவும் அழுத்தமாகவும் இருக்கின்றனவோ அவைகளுக்குத் தகுந்தபடி ஆன்மாவும் அவைகளைப் போலவே தோன்றும் என்று பார்த்தோம். ஒவ்வொருவருக்கும் இந்த நிலைமை வேறுபட்டாலும், அனைவருக்குமே மூடியுள்ள கோசங்களை நீக்குவதற்கு உண்டான வழிகளாக வெவ்வேறு விதமான யோக, தியானப் பயிற்சிகள் தேவைபடுக்கின்றன. ஆன்மா அவை எதனாலும் பாதிக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொருவரது முன் வினைகளின் பயன்களே வெவ்வேறு கோசங்களாக இடையில் நின்று மறைப்பதால் அவைகளை எப்படி நீக்க வேண்டும் என்று ஒரு உவமானத்துடன் இங்கு விளக்குகிறார்.
பழையகாலத்தில் கிராமங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும், தங்கள் வயலில் அறுவடை செய்த நெல்லில் குடும்பத்திற்கு வேண்டிய அளவு ஒதுக்கி வைத்து, அதை வெயிலில் காய வைத்து நெற்குதிரில் சேமித்து வைத்திருப்பார்கள். எப்போதெல்லாம் அரிசி தேவையோ, அப்போது அந்த அளவு நெல்லை குதிரில் இருந்து எடுத்து வந்து கைகள் கொள்ளும் அளவு உரல் ஒன்றில் இட்டு, நின்றுகொண்டு நீளத்தடி போன்ற உலக்கையை உயர்த்தி, உரல் மேல் உள்ள நெல்லைக் குத்துவார்கள். இது ஓர் பதமாகச் செய்யப்படும். வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உலக்கையை கீழே போட்டால், அப்போது உரலில் உள்ளது பொடியாகி மாவாகிவிடும். அப்படிச் செய்தால் அதற்கு இடிப்பது என்று பெயர். இதற்கு மாறாக உலக்கையை பதமாகக் குத்தினால் நெல்லின் மேல் உறை போல் உள்ள உமி தனியாகவும், அதன் உள்ளே உள்ள அரிசி சேதமாகாமல் முழுதாகவும் பிரியும். பின்பு அந்தக் கலவையை முறம் ஒன்றில் போட்டுப் புடைத்தால் கனமான அரிசி முறத்தில் தங்கி, மெலிதான உமி தனியாகப் பறந்தோ, புடைக்கப்பட்டோ வெளியே விழும். இப்படியாக அரிசி நெல்லிலிருந்து பிரிக்கப்படுகிறது. இந்த ஸ்லோகத்தில் உலக்கையில் நெல் குத்துவதை ஆத்ம விசாரத்திற்கு உபமானமாக சங்கரர் காட்டியிருக்கிறார்.
அரிசிக்கோ உமி என்று ஒரேயொரு கவசம்தான் இருக்கிறது. ஆன்மாவுக்கோ நாம் இங்கு கண்டபடி பல கவசங்கள் இருக்கின்றன. அவைகளில் யார்யாருக்கு அது எவ்வளவு தடிமனாக இருக்கலாம் என்பதுவும் தெரியாது. உமியை மட்டுமே உறையாகக் கொண்ட அரிசிக்கே மேலே சொன்னபடி அவ்வளவு பாடுபட வேண்டும் என்றால், ஆத்ம விசாரத்தில் இன்னும் எவ்வளவு சிரமங்கள் இருக்குமோ தெரியாது. நெல்லை எவ்வளவு நேரம் உலக்கையால் குத்தவேண்டும் என்று யாராவது கேட்டால், அரிசி கிடைக்கும்வரை என்றுதான் சொல்லமுடியும். ஆக *ஆன்மாவை உணரும்வரை விசாரம் தொடர்ந்து நடக்க வேண்டும்* என்பது மட்டுமே தெரிகிறது.
ஒருவனுக்கு நல்வழி காட்டுபவர் ஸத்குரு என்பவர், சாதகன் எத்தனையோ நற்காரியங்களின் மூலமும், நற்பிறவி மூலமும் பெற்ற ஒரு வரம்தான் இந்த ஸத்குரு. அந்தக் குருவின் நல்லுபதேசங்களைக் கேட்டு, அதை மனதில் வாங்கி சிந்தித்து, அந்த உபதேசங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கை முறையை வகுத்து அதன் வழியில் சென்று, தன் உள்ளத்தாலும், உடலாலும், வாக்காலும் செய்யப்படும் செய்கைகள் அனைத்தும் ஆன்மாவை உணர்வதற்கே என்ற வைராக்கியம் கொண்ட சாதகனுக்கே ஆன்மாவை உணரும் பாக்கியம் கிட்டும். தேவைக்கும் மேலாக வெளி விஷயங்களில் மனதைச் செலுத்தாது இருப்பதும், ஆன்மாவைத் தவிர வேறொன்றையும் நினையாது இருப்பதும் ஒன்றே இவனது வேலையாக இருக்கணும். முன்னேசொன்னது பயிற்சியின் போது நாம் கடைப்பிடிக்கும் வழி என்றால், பின்னேசொன்னது நாம் அந்த வழி சென்று உணரவேண்டிய குறிக்கோள் ஆகும். தினசரி வாழ்வில் ஆன்மாவை உணரமுடியாதபடி பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் அதாவது ஆத்மாபோதம் கைகூடும்.

ஆத்மபோதம் – 12 (a) ஆத்மஸாக்ஷி

நம்பிக்கையைத் தளரவிடாது தொடர்ந்து விடாமுயற்சி செய்பவனுக்கே ஞானம் அதாவது ஆத்மபோதம் கைகூடும் என்பது உண்மை என்று கண்டோம். முதலில் அவை உபநிடதம் படிப்பதனாலோ, பாடம் கேழ்ப்பதினாலோ மட்டுமே வராது. நாம் ஆத்மா ஆத்மா என்கிறோமே இதுதானே ப்ரஹ்மம். இதுபற்றி அறிய வியாஸர் *ப்ரஹ்மஸூத்ரம்* இயற்றினார். பிறகு அவரே இது ஸூத்ரமாக இருப்பது மக்களுக்கு எளிதாக சென்றடைய வேணும் என்ற கருணையுடன் மஹாபாரதம் எழுதி அதில் தனியாக கண்ணன் வாயிலாக *பகவத்கீதை* என்ற அத்யாயத்தை வைத்தார். *உபநிஷதம்* என்பது வேதமே! அதனால்தான் சாதாரண மக்களுக்கு இதையெல்லாம் படித்து புரிந்து கொள்ள முடியாது என்று கருதி பின்நாட்களில் வந்த சங்கரர் தசஉபநிஷதங்களுக்கு, ப்ரஹ்மஸூத்ரத்துக்கு, பகவத்கீதைக்கு என பாஷ்யங்கள் என இயற்றினார் அந்த மூன்றுக்கும் செய்த பாஷ்யங்களுக்கு வேதாந்த *ப்ரஸ்‌தானத்ரயம்* என்று சொல்வார்கள். இதைப்படித்தால் வேதாந்த ஞானமான ஆத்மஞானம் ஏற்படும் என்பார்கள். ஆனால் அதுவும் அத்தனை சுலபமில்ல என கருதி அதே சங்கரர் பல பிரகரண கிரந்தங்கள் – துதிகள் என செய்தார்கள். அதில் ஒன்று தான் இந்த ஆத்மபோதம். அதனால் தான் உங்களுக்கு இந்த துதியை இப்போது எடுத்து விளக்கி வருகிறது. மனதை அங்கு இங்கு அலைய விடாமல் இந்த கருத்தில் ஊன்றி படித்து புரிந்து கொள்ள பாருங்கள். பாடத்தை தொடருவோமா!

சங்கரர் அடுத்த பாடலுக்கு வருகிறார்……

தேஹேன்த்ரயமனோபுத்திப்ரக்ருதிப்யோ விலக்ஷணம் |
தத்வ்ருத்திசாக்ஷிணம் வித்யாதாத்மானம் ராஜவத்ஸதா ||

உடல்கருவி உள்ளமொடு புத்தி மாயை
விடவேறு அவற்றின் விருத்தி – யுடனே
எவைக்குமே சாட்சியாம் என்றும் ஆன்மாவை
அவைக்கு அரசன் போல அறி.

தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி, அக்ஞானம் முதலான இவைகளின் தன்மைக்கு வேறானதாய், அவைகள் செய்யும் காரியத்தோடு அனைத்திற்குமே சாட்சி மட்டுமே ஆன ஆத்மாவை எப்போதும் அவைகளுக்கு அரசனைப் போல அறிவாய்.
இதன் பொருள் :
இந்த *நான்* இந்திரியங்கள் என்கிற புலன்கள் (அதாவது மெய்-வாய்-கண்-மூக்கு-செவி) என இருக்கும் இந்த உடல் மட்டும் அல்ல, அதற்கும் மேலானவன்; அவைகளால் தெரியவரும் விஷயங்கள் தான் உலகத்தில் இருப்பவைகள். அதாவது இந்த இந்திரியங்கள் மூலமாக உணருகிறோமே சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்த என்கிற தன்மாத்திரைகள். இது பற்றிய எனது எண்ணங்களின் தொகுப்பான மனதிற்கும் மேலானவன்; எனது எண்ணங்களை வகைப்படுத்தி, தொகுத்து அவைகளினின்றும் பல உருவகங்களை உருவாக்கிச் செயல்படும் எனது புத்தியாகிய அறிவுக்கும் மேலானவன் என்று ஸ்தூலத்திலிருந்து ஸூக்ஷ்மநிலைக்கு “நான்” செல்லச் செல்ல ஓர் அமைதி கிடைக்கிறது. அந்த அமைதியில் நான் ஆழ்ந்து இருக்கும்போது, நான் இருக்கிறேனா என்ற சந்தேகமா வரும்? நான் இருப்பதால்தானே, எனது அந்த அமைதி நிலையையும் அனுபவிக்க முடிகிறது. மெதுவாக அந்த நிலையை விட்டு, நான் அங்கு வந்த வழியிலேயே பின்னோக்கிச் சென்றாலும் அமைதியில் இருக்கும் நான்தானே அப்போதும் இருப்பேன்? முன்பு அமைதியில் ஆழ்ந்த “நான்” இப்போது ஒரு சாக்ஷியாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
எப்போது புத்தி அடங்கி உலகினைப் பற்றி அறிவிக்காது, நமது இருப்பைப் பற்றி மட்டுமே அறிய வைக்கிறதோ அப்போது உள்ள “நான்” எனும் உணர்வு அப்போது மட்டும் அல்லாது, எப்போதும் உள்ள தனது இயல்பே என்று உணர்ந்து, தனது எல்லா நிலைகளிலும் அப்படியே ஒருவன் இருப்பதுதான் ஞானம் அடைவது அல்லது முக்திபெறுவது என்று அர்த்தம். அந்த நிலையில் ஒருவனுக்கு உலகம் என்று தனியாகத் தெரியாது, எல்லாம் தானே என்று உணரப்படும். அதனால் உலக காரியங்களில் ஈடுபடும்போதும் தனக்கே எல்லாம் செய்துகொள்வது போலவே உணரப்படும். அதனால் உலகமும், உலகில் உள்ளவைகளும் தெரிந்தாலும் அதை வேறாகப் பார்க்க மாட்டான். இந்த நிலையில் இவ்வுலகில் முன்பும் நமது காலத்திலும் அநேக மஹான்கள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். உதாரணம் சொல்வோமானால் ரமணபகவான், சேஷாத்ரிஸ்வாமிகள், பரமஹம்ஸர், கோடகநல்லூர் சுந்தரஸ்வாமிகள், நமது மஹாபெரியவா என நிறைய சொல்லலாம்.
எப்போது உலகம் என்ற ஒன்று தனியாகத் தெரிகிறதோ அப்போது தன்னையும், தன்னைத் தவிர உலகில் உள்ள அனைத்தையும் வேறு வேறாகவேப் பார்க்கும் மனநிலை வளரும். நடக்கும் அனைத்தையும் வெறும் ஸாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜாவை, ஆழ்ந்த அமைதி நிலைக்கு ஒப்பாக இங்கு சொல்கிறார். ஒரு ராஜாவின் கண்காணிப்பில்தான் அனைவரும் தத்தம் வேலைகளை செய்கிறார்கள். அதேபோல் உடல், மனம் இவைகளைக்கொண்டு நடக்கும் உலக காரியங்களை ஆத்மா ஒரு சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது பழைய கால போட்டோவை எடுத்துப்பார்த்தால், அந்தப் படம் எடுக்கப்பட்ட போது நம்மை நாமாக உணர்ந்த மாதிரிதானே இப்போதும் நம்மை உணர்கிறோம்! நமது உடல் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் எப்போதும் நம்மை நாமாகத்தானே உணர்கிறோம்! அந்த உணர்வில் எந்த மாற்றமும் இல்லையே? அப்படியானால் வேறு மாதிரி இருப்பது எது என்று சிந்தித்துப் பாருங்கள்…….

ஆத்மபோதம் – 13 பேதமற்ற ஆத்மா

நமது உடல் வளர்ந்தாலும், தேய்ந்தாலும் எப்போதும் நம்மை நாமாகத்தானே உணர்கிறோம்! அந்த உணர்வில் எந்த மாற்றமும் இல்லையே? அப்படியானால் வேறு மாதிரி இருப்பது எது என்று சிந்தித்துப் பாருங்கள்……. என்று முடித்திருந்தோமல்லவா….. சிந்திப்போம் வாருங்கள் ….

வ்யாப்ருதேஷ்விந்த்ரயேஷ்வாத்மா வ்யாபாரிவாவிவேகினாம் |
த்ருஷ்யதேப்ரேஷு தாவஸ்து தாவன்னிவ யதா ஸாஷி ||

கருவிகளின் தொழில் கண்ட அவிவேகி
கருத்தன் போன்று ஆன்மாவைக் காண்பான் – துரிதமாய்
ஓடும் மேகம் கண்டு உணர்விலி சந்திரனே
ஓடுகிறான் என்பதை ஒத்து.

ஆகாயத்தில் வேகமாக ஓடும் மேகங்களைப் பார்த்த பகுத்தறிவில்லாத ஒருவன் சந்திரனே வேகமாகப் போகிறது என்று சொல்வதைப்போல, ஐந்து கர்ம இந்திரியங்களின் மூலம் செய்யப்படும் செய்கையைப் பார்த்து உள்ளதையும் இல்லாதையும் பிரித்துப் பார்த்து அறியமுடியாதவன் ஆன்மாவே செயலில் ஈடுபடுவதாக நினைப்பான்.

இதன் விரிபொருள் :
உலகில் நடக்கும் காரியங்களுக்கும் ஆன்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இங்கு கூறப்படுகிறது. நாம் பயணம் செய்யும் ரயில் வண்டி வழியில் ஒரு ஸ்டேஷனில் நின்றுகொண்டு இருக்கும்போது, பக்கத்துத் தண்டவாளத்தில் உள்ள மற்றொரு ரயில் எதிர்ப்புறமாகக் கிளம்பினால் நமது வண்டியே கிளம்பிவிட்டது போலத் தோன்றுவதும், மரங்கள் எதிர்திசையில் நகருவது போல தோன்றுவதும்‌ நம்மில் பெரும்பாலோரது அனுபவம். அதுவும் பிரமை தானே? அதேபோல இரவில் வானத்தில் உள்ள மேகக்கூட்டங்கள் நகரும்போது, அவைகளின் பின்னால் உள்ள சந்திரன் நகர்வதுபோல் நமக்குத் தோன்றும். அதை நன்கு கவனித்துப் பார்ப்பவனுக்குத்தானே எது நிலை கொண்டுள்ளது, எது நகர்கிறது என்று தெரியும்? அதே போல, உடல் வேறு ஆன்மா வேறு என்று பிரித்துப் பார்த்து அறிய முடியாதவன், ஆன்மாவின் சந்நிதானத்தில் உடலின் கர்ம இந்திரியங்களால் நிகழும் நிகழ்ச்சிகளை ஆன்மாவே ஈடுபட்டுச் செய்வதாக நினைக்கிறான். இல்லை நமது இந்திரியங்களின் சேஷ்டை அது.
எனவே இந்த பிரமை முதலில் நீங்கவேணும். என்ன செய்வது? மனம் சுத்தமாகணும். அதுக்கு வழி? என்ன டெட்டால் போட்டால் மனம் சுத்தமாகும்? ஒரே கேள்வியாக போகிறதே! சொல்கிறேன். நமது நித்யஜபமாகட்டும், பூஜையாகட்டும், கோயில் ஸ்வாமி தரிசனமாகட்டும், தீர்த்தாடனமாகட்டும் எல்லாமே மன சுத்திக்கே! ஜடகர்மாவினால் ஒருநாளும் ஆத்மா விளங்காது. அப்ப என்ன செய்யறது? கர்மா கட்டாயமாக செய்யவேண்டியதே! ஆனால் அதில் தத்துவதர்சனம் தேவை. கர்மா பண்ணும்போதே இது எதுக்கு என்கிற சிந்தனை, ஆர்வம் இருக்கணும். அப்படி ஆர்வம் வந்ததினாலேதான் *சிதானந்தஅலை* பிறந்தது. உதாரணம் சொல்கிறேன். பூஜையில் சங்கு வைத்து கொள்கிறோம். அது எங்கே இருந்து வந்தது? கடலில் ஆழத்தில் சேற்றில் இருந்தது. பின்பு அதை எடுத்து சுத்தி செய்து (முதலில் அதில் மிக மோசமான கெட்ட நாற்றமடிக்கும்.) நமது பூஜைக்கு வருகிறது. பின்பு நமது பூஜையில் அதுக்கு எத்தனை மந்த்ரசுத்தி செய்ய வேண்டியுள்ளது. பிறகுதான் அதன் மூலம் நம்மை அறிய வேண்டிய பூஜைக்கு அதனை உபகாரமாக வைதுக்கொள்ளுகிறோம். மேலே சற்று யோஜியுங்கள் நாம் கர்ப்பமாக இருக்கும்போது எத்தனை நாற்றமடிக்கும் குழியில் இருந்தோம்? நம்மை குரு எதனை ஸமஸ்காரங்கள் செய்து இங்கே ஆத்மாவை அறிய அதற்கான முறையில் ஜபம் என்றும், பூஜை என்றும், நியாசம் என்றும், ஹோமம் என்றும் செய்ய வைத்துள்ளார். அப்போது தான் இந்த தேகம் ஆத்ம தேடலில் ஈடுபடும். எதனாலாலாவது இவன் ஆத்ம ஞான வழியில் செல்லமாட்டானா என்கிற கருணை தான் காரணம்.

ஆத்மபோதம் – 14 ஆன்மா தான் எல்லாம்

எதனாலாலாவது இவன் ஆத்ம ஞான வழியில் செல்லமாட்டானா என்கிற கருணை தான் காரணம். இந்த அவ்யாஜகருணை யாருக்கு உண்டு? நமது ஸத்குருவுக்குத்தான்.
ஆன்மா தான் எல்லாம் என்னும்போது அவரும் நமது ஆன்மாவே அல்லவா! அதனால் தான் பலவழிகளில் நம்மை கொண்டு செல்கிறார். எல்லாரும் நாட்டில் இன்று நல்லாசிரியருக்கு வாழ்த்தும் வணக்கமும் சொல்லும் இன்று நாமும் அவரை வணங்கும் விதமாக இன்றைய பதிவு அமைகிறது… என்னே கருணை,,,!!!!!
இதனால் நமது இந்த்ரியங்களை அதன் வழியில் செல்லவிடாமல் ஆத்ம வழியில் திருப்பி விடுவோம். ஏனெனில் அந்த ஆத்ம ஒளியில் தான் அனைத்தும் நடக்கிறது… சங்கரர் தொடருகிறார்….

ஆத்மசைதன்யமாஸ்ரிதய தேஹேந்த்ரியமனோதியஹ |
ஸ்வக்ரியார்தேஷு வர்தந்தே சூர்யாலோகம் யதா ஜனாஹா ||

ஞானவொளி ஆன்மாவை நண்ணி உடல் பொறிகள்
மானதம் புத்தியிவை மன்னு தமக்கு – ஆன தொழில்
ஆற்றிடும் ஆதித்தன் அவிர் ஒளியால் மக்கள் தொழில்
ஆற்றுவது போலும் அறி.

சூரியனின் பிரகாசமான ஒளியினால் உலக மக்கள் அவரவர் தமக்கான தொழிலைச் செய்வது போல, ஞானப் பிரகாசமான ஆத்மாவைச் சார்ந்து உடல், இந்திரியங்கள், மனம், புத்தி முதலானவைகள் தமக்குண்டான தொழில்களான விஷயங்களில் பொருந்தி செயல்படும் என்று அறிவாயாக.

இதன் விரிபொருள்:
ஆன்மாதான் எல்லாம், அது இருப்பதால்தான் மற்றதெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கு ஓர் உவமானம்‌ சொல்கிறார். சூரியன் உதித்ததும் அனைவரும் தத்தமது தினப்படி வேலைகளை ஆரம்பித்துச் செய்கிறோமல்லவா! அந்த வேலைகள் நடப்பது சூரியன் உதித்தபின்தான் என்பதால் அதற்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்? வேலைகள் செய்தாலும், செய்யாவிட்டாலும் அதனால் சூரியனுக்கு என்ன பாதிப்பு வந்தது? ஒன்றுமில்லை. அதேபோல ஆன்மா இருப்பதால்தான் இந்திரியங்களும், மனமும், புத்தியும் இயங்குகின்றன என்றாலும் அவைகளின் இயக்கத்தால் ஆன்மா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. உலகையே ஒளிர்விக்கும் கதிரவனைப் போல, எல்லா இந்திரியாதிகளையும் ஒளிர்வித்தாலும் ஆன்மா இங்கே நடக்கும் அனைத்துக்கும் வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கிறது. ஆன்மா எந்த இயக்கத்திலும் பங்கு கொள்வதில்லை.
இந்திரியங்கள், மனம், புத்தி இவைகளில் எதனை எடுத்துக்கொண்டாலும் மனிதர்களிலும் சரி மற்ற உயிர்வாழ் ஜீவஜந்துக்களிலும் சரி ஒன்றுக்கொன்று வேற்றுமைகள்தான் இருக்கும். மற்ற இனங்கள் அதைப் புரிந்துகொள்ளாது போனாலும், மனிதனும் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு சமத்துவப் பார்வை வளர வாய்ப்பே இல்லை. அது வளரவேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் ஆன்மா ஒன்று இருப்பதை ஒத்துக்கொள்வதையும், அதுவே அனைத்தின் அடிப்படை உண்மை என்று தெளிந்து கொள்வதையும் மனித வளர்ச்சியின் பரிமாணங்களில் ஒன்று எனக் கொள்ளலாம்.
உலகியவாழ் ஜந்துக்களில் இப்போது நாம் காணும் மனித இனம் தோன்றியது ஆராய்ச்சியாளர்கள் கணக்குப்படி சுமார் 20, 30, ஆயிரம் ஆண்டுகள் முன்புதான் என்றாலும், அவர்களின் பரிணாமவளர்ச்சி சுமார் 300 ஆயிரம் ஆண்டுகள் முன்பே தோன்றிவிட்டன என்று சொல்கின்றனர். அந்தக் கால கட்டத்தில்தான் நம் மூளை தற்போதைய அளவிலும், திறமையிலும் வளர்வதற்கு ஏற்றபடி மண்டையோடுகள் முதிர்ச்சி அடைந்திருக்கின்றன. அதற்கு முன் தோன்றிய மனிதனைப் போன்று இரண்டு காலில் நடந்த மூன்று இனங்களின் மண்டையோடுகள் அளவில் சிறியதாகவே இருந்திருக்கின்றன. அதேபோல பேசும் தன்மைக்கு உண்டான குரல் வளமும், அமைப்பும் படிப்படியாகவே வளர்ந்திருக்கின்றன. பேசும் திறமையும், மூளை வளர்ச்சியுமே மற்ற வளர்ச்சிகளுக்கு ஆதாரமாய் இருந்திருக்கின்றன. மனிதனைப் போன்ற மற்ற இனங்களில் ஒன்றிரண்டு மனித இனத்துடன் கூடவே வளர்ந்து இறுதியில் மேலும் வளராது அழிந்தும் போய்விட்டன. இதெல்லாம் இன்றைய விக்ஞான ஆராய்ச்சியின் கணக்கு. இந்தப் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது உடலுக்கு மூளையும் அதனால் இயங்கும் இந்திரியங்களும் எவ்வளவு முக்கியமோ அப்படியே மனித இனத்தின் இனி வரக்கூடிய பரிணாம வளர்ச்சிக்கு, அவனையும் உள்ளடக்கிய அனைத்து ராசிகளுக்குமான உயிரையும் தாண்டிய பொதுவான ஒரு அடிப்படை அமைப்பு தேவை என்பதும், அதுவே அனைத்தையும் உள்ளடக்கும் ஆத்மா என்றும் நாம் கொள்வது புரிந்துகொள்ளக் கூடியதே.
ஆத்மா இல்லையெனில் நாம் இல்லை என்பதை விட வேறு எதுதான் உண்மையாய் இருக்க முடியும்? மேலும் அதற்குக்காரணம் வேண்டுமானால், அனைத்து ராசிகளிலும் இப்படியாக யோசிக்கக் கூடிய இனம் மனித இனம் ஒன்றுதான் என்பதைச் சொல்லமுடியும். அதே சமயம் இந்த பிரபஞ்சத்தையும், தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அறிந்தாலும் தான்தான் பரிணாம வளர்ச்சியின் ஏணியில் இறுதியாக இருக்கிறான் என்பதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். அது தவிர ஆத்மாவை உணர்ந்து வாழ்ந்து காட்டிச் சென்ற சில ஆன்றோர்களையும் நமக்கு தெரியும். அதனால் அவனது தினசரி அனுபவங்களையும் தாண்டி மேலும் வளர்வதற்கான அநேக காரணக் கூறுகள் இருப்பதும் நமக்குத் தெரிகிறது.

ஆத்மபோதம் – 14 உள்ளது ஆன்மாவே

சீவராசிகளின் பரிணாமவளர்ச்சி எனும் ஏணியின் உச்சியில் ஒருவேளை மனிதன் இல்லாது போனாலும், சுற்றுமுற்றும் பார்த்து அவன் அறிந்தவைகளில் அந்த ஏணியின் மேல்நிலைகளில் தான் இருப்பது அவனுக்கு உண்மை. அவன் அந்த நிலையில் இருப்பதாலும், மேலும் அந்த வளர்ச்சிக்கு அவன் உதவலாம் என்பதாலும், அதற்கு உதவவேண்டிய கடமை தனக்கு இருப்பதை அவன் உணர்கிறான். சங்கரர் வாக்கியம் ஒன்று உள்ளது…. “ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம்” …. என்று. பிறவிகளிலேயே மனித பிறவி தான் உயர்ந்தது. இது கிடைப்பது மிக கஷ்டம் என்னும்போது நமது கடமை அதிகமாகிறது. எனவே இதனால் உந்தப்பட்ட அவன் அனைத்து ஜீவராசிகளையும் உள்ளடக்கி ஒரு சமத்துவப் பார்வையை வளர்க்கும் *ஆன்மா* எனும் ஞானத்தைப் பெறுவதே தனது பிறப்பின் பயன். உலகில் அப்படி வாழ்ந்து காட்டிச் சென்ற ஆன்றோர்களின் மூலம் இது தெரிகிறது. உலகில் மற்ற விஷயங்களை அறிவது சாதாரண அறிவென்றும், பிறப்பின் பயனை உணர்வதே பேரறிவு (அதுதான் ஞானம்) என்றும் தெளிவு பெற்ற அவன், அதனை அடைய முயற்சிக்கும் போது ஒரு முமுக்ஷு ஆகிறான். ஸ்ரீவித்யையிலே தீக்ஷை என்ற கிரியை உள்ளதை நாமறிவோம். அவ்வாறு தீக்ஷை பெற்றவன் முமுக்ஷுவே தான். இந்த தீக்ஷையின் அவசியமும், அதன் விவரங்களும் தனியாக ஒரு வகுப்பில் படிப்போம்…
இப்போது தொடர்ந்து அடுத்த பாடல் …..

தேஹேந்த்ரியகுணான்கர்மாண்யமலே சச்சிதாத்மனி |
அத்யஸ்யந்த்யவிவேகேன ககனே நீலதாதிவத் ||

தேகம் பொறிகள் திகழ் குணங்கள் வினைகள்
ஆகுமிவை தூய சச்சிதான்மாவில் – மோகத்தால்
கற்பிப்பர் சுத்த ககனத்தில் நீலமுதல்
கற்பித்தல் போலக் கருது

நிறமற்ற பரிசுத்தமான ஆகாயத்தில் நீலம் போன்ற வர்ணங்கள் இருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதுபோல, தூய்மை நிறைந்த ஸச்சிதானந்த வடிவமான ஆத்மாவில் உடல், ஐம்பொறிகள், இதனால் வரும் குணங்கள், நல்வினை, தீவினை ஆகிய இவை எல்லாவற்றையும் பகுத்தறிவில்லாத அவிவேகிகள் கற்பனை செய்துகொள்வார்கள் என்று தெரிந்துகொள்.

இதன் விரிபொருள் :
நமது உண்மையான நிலையை உணர்வதற்கு உடல் ஒரு கருவி என்று முன்பு பார்த்தோம். அந்த உடல் உலகில் இயங்கும் போது நாம் பிறந்தது, வளர்ந்தது, பார்ப்பது, கேட்பது போன்ற இயக்கங்களும், நம் வளர்ச்சியில் உள்ள இளமை, முதுமை போன்ற நமது நிலைகளும், ஆன்மாவைச் சார்ந்தது என்று ஆன்மாவைப் பற்றி அறியாத பாமரர்கள் கருதுவார்கள். அதில் உள்ள தவறை ஓர் உவமை மூலம் இங்கு சங்கரர் விளக்குகிறார்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்துக்கு நிறம், குணம் இவை எதுவும் கிடையாது. அதைப் பற்றி அறியாதவன் ஆகாயம் நீல நிறத்துடன் கூடியது என்று எப்படிக் நினைப்பானோ அதேபோல அவிவேகி ஆன்மாவை குணத்தோடு சம்பந்தப்படுத்தி தவறாக அறிகிறான். தொலைவில் இருப்பதால் ஆகாயம் நீல நிறமாகக் காணப்படுகிறது என்பதை விவேகி அறிவதுபோல ஆன்மாவையும் அவன் உடல், இந்திரியங்களுடன் சம்பந்தப்படுத்தாது அவை அனைத்துக்கும் மூலகாரணம் என்றும் அறிகிறான். இளமையும் முதுமையும் உடலைச் சார்ந்த நிலைகள் போல, பார்த்தல், கேட்டல் போன்றவை ஐம்பொறிகளைச் சார்ந்த தொழில்கள். இவைகளை ஆன்மாவுடன் தொடர்புகொண்டு பார்ப்பது ஆன்மாவைப் பற்றிய அறியாமையால்தான். இதில் *விவேகம்* எனப்படுவது தேகம், மற்றும் இந்திரியங்களின் குணங்களையும், ஆத்மவடிவத்தின் லக்ஷணத்தையும் பிரித்து அறிவதாகும். ஸித்தர்கள் இந்த நிலையில் இருப்பார்கள். ஸ்ரீசேஷாத்ரிஸ்வாமிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். படித்திருக்கிறேன். ஆனால் ஸ்ரீஸ்ரீகாரைஸித்தர் அவர்களை நேரில் அனுபவித்திருக்கிறேன். அவரகளின் உணவு, உடை இரண்டும் அவருடைய செய்கைக்கு மாறுபட்டது. ஸ்ரீரமணபகவான் கூறுவதுபோல *உள்ளதை உள்ளபடி உள்ளத்தே உள்ளுவதே* உண்மை ஆகும்.
அடுத்து மனத்தின் இயல்பு, உபாதி என்பது பற்றி தக்க உபமானத்துடன் மேலே ஆத்மபோதம் தொடருகிறது……..

ஆத்மபோதம் – 15 மனஉபாதி

இன்றும் நாளையும் சனி + ஞாயிறு இரவு உங்களுக்கு படிக்க – சிந்திக்க இது….
தனக்கே உரிய ஸ்வபாவம்’, ‘தன் உண்மை இயல்பு’ …… அன்றைக்குக் குழந்தை வேஷத்தில் இருந்தவனும் இன்றைக்கு இப்போது நாமுள்ள இந்த வேஷத்திலிருப்பவனும் ஒரே ஆஸாமிதான். மற்றவர்களுக்கு தெரிவது அத்தனை வேஷத்துக்கும் ஆதாரமாக மாறாமலுள்ள அந்த ஆத்மாவினால்தான்…….. நமது ஆத்மாபோதம் சிந்தனைக்கு ஆசி கூறுவது போல் ஸ்ரீபெரியவா சொன்னது எத்தனை பொருத்தம் பாருங்கள். இதைத்தான் மன உபாதி என்கிறது வேதாந்தம். அதுபற்றி சங்கரர் அடுத்து என்ன சொல்கிறார் என்று இன்று பார்ப்போம்.
அஞ்ஞானான்மானசோபாதே கர்த்ருத்வாதீனி சாத்மனி |
கல்ப்யந்தேம்புகதே சந்த்ரே சலனாதி யதாம் பஸ: ||

மனமாம் உபாதி மருவு கர்த்தத்வ
இனமாய் அவற்றை அறிவின்மை – எனும் மயலால்
ஆன்மாவில் கற்பிப்பர் அப்பு அலைவை நீர் தோன்றும்
வான் மதியில் கற்பிக்குமாறு
வானத்தில் அசையாது நிற்கும் நிலவானது, நீரில் பிரதிபலிக்கும்போது அந்தத் தண்ணீரின் அசைவுகளால், நிலவே அசைவதாகப் தெரிகிறது நமது கற்பனை என்பதுபோல, மனமாகிய உபாதியால் ஏற்படும் *நான்செய்கிறேன்* *நான் அனுபவிக்கிறேன்* என்னும் அறியாமை மயக்கத்தினால் நடக்கின்ற அனைத்தையும் ஆத்மாவினுடையதாக நினைக்கின்றனர்.

இதன் விரிபொருள்:
முன்பு இதே போன்ற வேறோர் உவமையை நாம் பார்த்தோம். ஸூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் ஸன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று என்கிறார். ஒவ்வொருவனும் தான் ஆத்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான்செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆத்ம வடிவம்தான் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணித்துவிடுகிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையாநிலவின் அசைவுகள் என்ற இந்த உபமானத்தால் சங்கரர் விளக்குகிறார்.
தண்ணீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.
உபாதி என்பது ஆதாரம் ஆகும். இங்கு மனம்தான் ஆதாரம் என்பதால் “மனமாகிய உபாதி” என்று சொல்கிறது. நிலவின் பிரதிபிம்பம் நீரில் தோன்றுவதுபோல, ஆன்மாவின் சைதன்ய ஒளிக்கதிர்கள் நமது மனம் மூலம் நமக்குப் பிரகாசிக்கிறது. அதாவது ஆன்மாவே மனத்தை ஒளிர்விக்கிறது. எப்படி உடல் நமக்கு ஒரு தூலக் கருவியோ, அதேபோல மனம் நமது ஸூக்ஷ்ம கருவியாகும். இவைகளின் மூலமே நாம் ஆன்மாவை அறியவருகிறோம். ஆனாலும் அவைகள் கருவிகளே அன்றி அவைகளே முடிவானவை அல்ல.இதற்கு ந தத்ர ஸூர்யோபதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: …. என்ற நமது வேதமே சான்று.. அதாவது ஆத்மா பிரகாசிக்கவில்லையெனில் சூர்யனுக்கும், சந்த்ரனுக்கும் அக்னிக்கும் ஒளி இல்லை….. என்கிறது.
எப்படி நீரின் குணங்களும், நிறங்களும் ஆகாயத்தில் இருக்கும் நிலவைப் பாதிக்காதோ, அதேபோல மனதின் நினைவுகள் ஆன்மாவைப் பாதிக்காது. ஆனால் நீரில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பம் பாதிக்கப்படும்‌, மனதளவில் உருவாகும் எண்ணங்களும் செயல்களும் வினைச்சக்கரச் சுழற்சியால் பாதிக்கப்படும். அப்படிப் பாதிக்கப்படுவது மனமே அன்றி ஆன்மாவல்ல. ஆனாலும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாதவர்களுக்கு மனத்தின் சலனங்களும் ஆன்மாவின் சலனங்களாகவே தோன்றும். ஆக வினையை ஆற்றுவதும் அதன் பலன்களை அனுபவிப்பதும் மனம் எனும் உபாதியேயன்றி, ஆன்மாவல்ல. இதனை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள ஒருவன் ஆன்மாவை நோக்கி தன் முழு கவனத்தையும் திருப்ப வேண்டும்.

ஆத்மபோதம் -16 புத்தி ஆன்மாவுக்கா?
ரமணாஸ்ரமத்தில் பகவானிடம் சரணமடைந்த ஸ்ரீ ஜி. சேஷையர் என்றவர் ஸ்ரீபகவான் மௌனமாக இருந்தகாலத்திலும் அவர்களிடம் கேள்வி கேட்டு எழுத்து மூலம் அருளப்பட்ட மொழிகளால் தொகுக்கபட்டது *விசாரஸங்க்ரஹ வினாவிடை* என்ற நூல். இதில் நமக்கு தேவையான சில வாக்கியங்கள் உள்ளன…. “போகிறது , வருகிறது ஆகிய தொழில்கள் தேகத்தின் விஷயமே தவிர வேறில்லை என்று சொல்வது தேகமே “நான்” என்று சொல்வதாக தெரிகிறது. தேகம் பிறப்பதற்கு முன்னின்மை இல்லாததாலும், பஞ்சபூதாத்மாக இருப்பதாலும் சுஷுப்தியில் அபாவமாக இருப்பதாலும் பிணமாக ஆவதாலும் தேகத்தை நான் என்று சொல்வது கூடுமா? கட்டையை போன்ற ஜட பதார்த்தமாகிய இந்த தேகம் “நான்-நான்” என்று ஸ்புரித்து வழங்கிவருமா? …… இப்படியெல்லாம் நூலில் உள்ளது.
இனி சங்கரர் சொல்கிறார்….

ராகேச்சாசுகதுக்காதி புத்தெள சத்யாம் ப்ரவர்த்ததே |
சுஷுப்தோ நாஸ்தி தன்னாஷே தஸ்மாத்புத்தேஸ்து நாத்மனஹ ||

விருப்பு ஆசை துன்பு இன்பு மேலும் இவை போல்வ
இருப்பவாம் புத்தி இருப்பால் – இருப்பில்லாத்
தூக்கத்தில் இன்று அதனால் சொந்தம் அவை புந்திக்கே
ஓர்க்குக ஆன்மாவிற்காகுமோ

அன்பு, ஆசை, துன்பம், இன்பம் தவிர இவை போன்ற எல்லாமும் நமது புத்தியினால் உண்மையில் இருப்பனபோல தோன்றுகின்றன. புத்தி செயல்படாது இருக்கும் நம் உறக்கத்தில் அவை எதுவுமே தோன்றாததனால், அவைகள் புத்தியை மட்டுமே சார்ந்தவை ஆகும். அவை ஆத்மாவிற்கானது என்று சொல்ல முடியுமோ? என்று கூர்ந்து ஆராய்ந்து அறியவேண்டும்.

இதன் விரிபொருள்:
ஒருவனது வாழ்க்கை அனுபவங்களைப் பார்த்தால், அவைகளை சில பொருட்களின் மேல் இருந்த அவனது ஆசைகளால் விளைந்தவைகள். சிலவற்றின் மேல் அவனுக்கு இருந்த வெறுப்புகளால் விளைந்தவைகள். இப்படி மனத்தில் தோன்றிய விருப்பு-வெறுப்பு எண்ணங்களுக்கு ஏற்ப அவனது உடல் மற்றும் மனதளவில் அவைகள் இன்பமோ துன்பமோ கொடுத்திருந்தன. அத்தகைய மனமும் அதை இயக்கும் அவனது புத்தியும் அவனுக்கு எழும்பாத அவனது ஆழ்ந்த உறக்கத்தில், அவனுக்கு விருப்பமோ வெறுப்போ எதுவும் தோன்றுவது இல்லை.
உறக்கத்தில் இல்லாத விருப்பும், வெறுப்பும் ஒருவனது நினைவு மற்றும் கனவு நிலைகளில்தான் தோன்றுகின்றன. முழு நினைவோடு உள்ள நிலையான நினைவு நிலையில் ஒருவனுக்குத் ஸ்தூலதேகமும் அது சம்பந்தமான அனுபவங்களும் அமைகின்றன. ஒருவனது கனவு நிலையில் அவனுக்கு ஸூக்ஷ்மதேகமும், அதற்கேற்ற அனுபவங்களும் நேருகின்றன. நாம் காணும் கனவு அனுபவங்கள் கனவு நிலை இருக்கும் வரையில் நினைவு அனுபவங்களைப் போலவே நீடிக்கின்றன. ஆகையால் இவ்விரு அனுபவங்களுக்கும் தகுந்தபடியான வெவ்வேறு உடலும், மனமும் அதை இயக்கும் புத்தியும் தேவைப்படுகின்றன. கனவு நீங்கியவுடன் அங்கு இருந்ததெல்லாம் நீங்கியும், ஆனால் நினைவில் உள்ளவைகள் மீண்டும் தொடர்ந்து வருகின்றன என்ற ஒரு வித்தியாசத்தைத் தவிர நினைவு-கனவு அனுபவங்களில் வேற்றுமை ஏதும் இல்லை. கனவிலிருந்து விடுபட்டு நாம் நினைவு நிலை திரும்பியதும்தான் நாம் அதுவரை கண்டது நிலையற்ற ஒன்று என்று தெளிகிறோம். அத்தகைய நினைவு மற்றும் கனவு நிலைகளில்தான் நமது விருப்பு-வெறுப்பின் காரணமாக இன்ப-துன்பம் அடைகிறோம்.
ஆனால் ஆன்மாவோ எங்கேயும், எப்போதும் உள்ளது. அதனால் விருப்பும், வெறுப்பும் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், அந்த அனுபவங்கள் நமது உறக்க நிலை உட்பட எல்லா நிலைகளிலும் தோன்றவேண்டும். ஆனால் நமது உறக்க நிலையில் நமக்கு உடலைப் பற்றிய உணர்வோ, மனமோ, புத்தியோ கிடையாது என்றாலும், “சுகமாக உறங்கினோம்” என்று பின்பு நினைவில் சொல்லக்கூடிய அளவிற்கு ஓர் சுகானுபவம் மட்டும் இருக்கிறது. அந்த அனுபவம் நினைவு-கனவு நிலைகளில் உள்ளதுபோல விருப்பு-வெறுப்பு காரணமாக அமைவதில்லை. ஆகையால் விருப்பு-வெறுப்பு குணங்களையும், இன்ப-துன்ப நிலைகளையும் புத்தியுடன் கூடத்தான் தொடர்புபடுத்திச் சொல்லமுடியுமே அல்லாது, எப்போதும் இருக்கும் ஆன்மாவுடன் எப்படி சம்பந்தப்படுத்திச் சொல்ல முடியும்? அவைகள் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், உறக்கத்திலும் இன்ப-துன்பங்கள் நேர வேண்டும். ஆனால் அப்போது நமக்கு ஆனந்த அனுபவம் ஒன்றே அமைகிறது. ஆன்மா எப்போதும் உள்ளது என்றால், உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்த அனுபவம் நினைவு நிலையிலும் இருக்க வேண்டுமே! அப்படியென்றால் அதை நாம் ஏன் உணர்வதில்லை என்றுதானே இப்போது பார்க்கவேண்டும்?
நாளை பார்ப்போம்…….

ஆத்மபோதம் – 17 ஆத்ம லக்ஷ்ணம்

ஆன்மா எப்போதும் உள்ளது என்றால், உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்த அனுபவம் நினைவு நிலையிலும் இருக்க வேண்டுமே! அப்படியென்றால் அதை நாம் ஏன் உணர்வதில்லை என்று பார்க்க வேணும்…
ரமணர் சொல்வது: எழுவாயாகிய முதல் வேற்றுமை தெரியாவிட்டாலும் மற்ற வேற்றுமைகளில் வரும் வாக்கியங்கள் அனைத்தும் முதல் வேற்றுமையை ஆச்ரயித்தே விளங்குதல் போல … என்கிறார். ராமன் சீதையை மணம் முடித்தான். பின்பு அயோத்திக்கு அழைத்து வந்தான். இரு வாக்கியங்கள். ஆனால் இரண்டாவதில் எழுவாயாகிய ராமன் என்ற வார்த்தை வரவில்லை. இருந்தாலும் ராமன் தான் அழைத்து வந்தான் என்பது விளங்குகிறது. (தமிழ் இலக்கணம் சொல்கிறேன். ராமன் எழுவாய்— பலருக்கு இலக்கணம் என்பது Zero. அதுவும் தமிழ் சுத்தம்…. பரவாயில்லை. நான் எழுதுவதாவது புரியட்டும்.)
இதற்கு சங்கரரை பின் தொடருவோம்…

பிரகாஷோர்கஸ்ய தோயஸ்ய சைத்யமக்னேர்யதோஷ்ணாதா |
ஸ்வபாவ: ஸச்சிதானந்த நித்யநிர்மலதாத்மான: ||

அருக்கன் தனக்கொளி அப்புக்குத் தட்பம்
எரிக்கு உட்டணமும் இயல்பாய் – இருக்கையெனச்
சத்து சித்து ஆனந்தம் சார் நித்தம் சுத்தம் இயல்பு
ஆன்மாவுக்கு என்று ஓர்

சூரியனுக்குப் பிரகாசமும், தண்ணீருக்குக் குளிர்ச்சியும், நெருப்புக்குச் சூடும் அதனதன் இயல்பாக அமைவது போல, ஆன்மா ஸத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் இருப்பதோடு நித்தியமாயும், நிர்மலமாயும் இருப்பதே அதன் இயல்பு என்பதை உணர்வாயாக.

இதன் விரிபொருள்:
ஸச்சிதானந்தம் பற்றி சில வாக்கியங்கள் நமது உபாசனை மூலம் தெளிவோம்… “ஸத்” என்பது குஹாநந்தம். “சித்” என்பது சிதானந்தம். “ஆனந்தம்” என்பது அனந்தம். “காமம்” என்பது அனுபவம். இது நமது குருமண்டலியின் பெயராக இருப்பதால் உங்களுக்கு இப்போது கொஞ்சம் புரியும். இவர்கள் வேறு வேறு இல்லை. இவர்கள் தனித்தனியாக எங்கும் இல்லை. மந்த்ரம் தான் தனித்தனி. அனுபவம் உணர்வு ஒன்றே!)
இங்கு ஆன்மாவின் லக்ஷணங்கள் கூறப்படுகின்றன. “ஸத்” என்றால் இருப்பு, “சித்” என்றால் அறிவு, “ஆனந்தம்” என்றால் பேரின்பம். இவைகள் அனைத்தையும் கொண்டுள்ளது என்பது தவிர, ஆன்மா இங்கு உண்டு அங்கு இல்லை என்றில்லாது, இப்போது இருக்கிறது– அப்போது இருக்காது– என்றில்லாது எங்கும், எப்போதும் உள்ளதால் அது நித்தியமாயும், அது ஸூத்தமாய் எந்தவித கலப்பும் இல்லாததால் நிர்மலமாயும் இருப்பது அதன் இயல்பு. ஆதலால் இவை அனைத்தையுமே ஆன்மாவிலிருந்து பிரித்தறியமுடியாது. சூரியனிடமிருந்து பிரகாசத்தையும், தண்ணீரிலிருந்து குளிர்ச்சியையும், நெருப்பிலிருந்து சூட்டையும் அதனதனிடமிருந்து எப்படி தனியே பிரித்து அறியமுடியாதோ, அதேபோல ஆன்மாவிடமிருந்தும் மேற்சொன்ன அதன் தன்மைகளைப் பிரித்து அறியமுடியாது.
கூட்டத்தில் ஒருவர் மொட்டையாக இருந்தால், அவரை “ஏ மொட்டை” என்று தற்காலிகமாகக் குறிப்பிட்டுச்சொல்வதை *தடஸ்தலக்ஷணம்* என்று சொல்வார்கள். அதேபோல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்றிவ்வாறான தொழில்களைக் குறிப்பிட்டு இறைவனை வர்ணிப்பதும் “தடஸ்த”லக்ஷணப்படியே தான். இவைகளை இறைத்தன்மையில் இருந்து பிரித்து அறியமுடியும். ஆனால் இறைவனின் *ஆத்ம மயம்* என்ற *ஸ்வரூபலக்ஷணத்தை* அப்படிப் பிரித்து அறியமுடியாது. அப்படிப் பிரித்து அறியமுடியாத ஒன்றை அப்பொருளின் *தர்மம்* என்று குறிப்பிட்டுச் சொல்கிறது. அதாவது தண்ணீரின் தர்மம் குளிர்ந்து இருப்பதும், நெருப்பின் தர்மம் சூடாயிருப்பதும் போல, ஸச்சிதானந்தமும், நித்யத்வநிர்மலமும் ஆத்மாவிலிருந்து பிரித்து அறியமுடியாத தர்மங்கள் ஆகும்.
தண்ணீருக்குக் குளிர்விக்கும் குணத்தையும், நெருப்பிற்குச் சுடும் குணத்தையும், காற்றுக்கு சலித்துத்திரட்டும் குணத்தையும் யார் ஊட்டினார்கள்? அவை இயற்கையாகவே அதனதன் குணமாக இருப்பதுபோல, மனத்திற்கு ஒரு பொருளைப் பற்றும் குணமும், பற்றிய பொருளை அனுமானிக்கும் குணம் புத்திக்கும், அனுமானித்தபொருளை தனது என்று அபிமானிக்கும் குணம் அஹங்காரத்திற்கும், அபிமானித்தபொருளை சிந்திக்கும் குணம் சித்தத்திற்கும் இருப்பது இயற்கையாக நிகழ்வது. இவை எதையுமே அடக்க-அடக்க அவை மேலும் மேலும் எழும்பி ஒருவனை வதைக்கும். அவை அனைத்தையுமே இயல்பாக இருக்கும் ஆன்மாவின் ஸந்நிதானத்தில் நிகழும் நிகழ்வே என்றும், அதற்கும் தன் இருப்பிற்கும் தொடர்பில்லை என்று ஆன்மாவை முன்னிறுத்தி இருப்போமானால் நமது உள்ள நிலை காலப்போக்கில் தெளிவாகும். (பூஜையின் இறுதியில் ஸாமயிகாபூஜைக்கு பின்பு *தத்துவசோதனம்* என்று ஒன்று செய்கிறோமே! அது இதுதான். அதற்குத்தான் அதை மனப்பாடம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன்..நிச்சயம் ஒருநாள் கேழ்ப்பேள்)

ஆத்மபோதம் 18 வாழ்க்கையின் இறுதி

ஆன்மாவை முன்னிறுத்தி இருப்போமானால் நமது உள்ள நிலை காலப்போக்கில் தெளிவாகும் என்றோமல்லவா! அது எப்படியென சங்கரர் விளக்குறார்..

ஆத்மன: சச்சிதம்ஷச்ரவ புத்தேவ்ருத்திரிதி த்வயம் |
சம்யோஜ்ய ச விவேகேன ஜானாமீதி ப்ரவர்த்ததே ||

சத்து சித்து என்னத்தகும் ஆத்ம அம்சமும்
புத்தி விருத்தி புகல் ஒன்றும் – ஒத்த
இரண்டோடு மூடத்தால் யான் அறிகின்றேன் என்று
ஒருத்தன் தொழில் படுவன் ஓர்

“ஸத்” உருவம் எனப்படும் இருப்பும், “சித்” உருவம் எனப்படும் அறிவும் நமக்குத் தெரிகின்ற ஆத்ம சைதன்யவெளிப்பாடுகள். அவைகள் நம் புத்தியின் விருத்தியுடன் இணைந்து அறியாமையினால் “நான்அறிகின்றேன்” என்று ஒருவன் செயல்படுகிறான் என்பதை அறிவாயாக.

இதன் விரிபொருள்:
ஒருவன் ஒரு செயலில் ஈடுபட்டாலும், ஈடுபடாவிட்டாலும் அவனது இருப்பைப் பற்றி எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. அதேபோல நல்ல விதமாகவோ, அல்ல வேறு விதமாகவோ இயங்கும் அறிவு ஒவ்வொருவனுக்கும் இருப்பதையும் நாம் நன்கு அறிகிறோம். இவை இரண்டுமே ஆன்மாவின் வெளிப்பாடுகள்தான் என்றாலும், அவை அவனவன் புத்தியினால் இருப்பதாகவும், இயங்குவதாகவும் அறியப்படுவது ஒருவனது அஞ்ஞானத்தினால் தான். ஆத்மா பார்ப்பதும் இல்லை, பார்க்கப்படுவதும் இல்லை. “ஸத்” தாகிய ஆன்மா “நான்” என்று சொல்லாது; “ஜடம்” ஆகிய உலகமும் தன்னை “நான்” என்று அறிவிக்காது. ஆத்மாவின் “ஸத்சித்” அம்சத்தையும், புத்தியின் விருத்தியில் ஒன்றையும் ஒன்றாக இணைத்து இடையில் தோன்றும் ஜீவன் ஒருவன் “நான் அறிகின்றேன்” என்று செயல்படுகிறான். இவ்வாறு சித்தையும், ஜடத்தையும் இணைத்து உருவாகும் ஜீவனை “சித்ஜடக்கிரந்தி” என்று சொல்வார்கள்.
இங்கே நமக்கு இன்னும் தெளிவிற்கு அம்மையின் நாமங்கள் இருக்கின்றன.
சித்சக்தி – (416) அவித்யை என்கிற அக்ஞாநத்தை போக்கும் சாமர்த்தியமுள்ள வித்யைக்கு “சித்” என்று பெயர். (வர்த்ததே சர்வபூதேஷு சக்தி:….. சித்சக்தி: சர்வபூதேஷு .. என்பதாக தேவி பாகவதமும் சொல்கிறது.)
ஜடசக்தி – ஜடாத்மிகா . மாயையின் பரிணாமவிசேஷம் தான் ஜடசக்தி. இதில் தெரிவதும் ஆத்மா தான் . ஆத்மா புத்தியில் பிரதிபலிக்கும்போது அதன் “ஸத்-சித்” வடிவம் புத்திக்கே உள்ளதாகத் தோன்றுகின்றது. (ஆத்மனே நம: — பரமாத்மனே நம: — என்று நமது சாமயிகா பூஜையில் நமது ஹ்ருதயத்தில் செய்து கொள்ளுகிறோமே இதை அறியத்தான். இப்போது புரிகிறதா ? நமது பூஜையே ஒரு ஆத்ம ஞான வழிகாட்டி என.—ஆத்மனே என்னும்போது நமது புத்தி சேர்ந்தது, பரமாத்மானே என்னும்போது சித் சேர்ந்தது என அறியவேணும்.)
அந்த புத்தியே தானாக ஒருவன் நினைக்கும்போது அவனுக்கு அஹந்தை உண்டாகிறது. (நான் ராமன், கிருஷ்ணன், கமலா என.) அப்போது அவன் தான்வேறு, தன்னால் காணப்படும் உலகம் வேறு என்று நினைக்கிறான். இதனால் உலகம் உள்ளதை உள்ளபடி உணராமல், ஒவ்வொருவனும் தனக்கே உரிய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் ஞான விசாரத்தினால் அஞ்ஞானம் அழிந்த ஜீவனுக்கு, ஜீவ பாவம் அழிந்து ஆத்ம வடிவம் ஒன்றே விளங்குகிறது. அந்த நிலையை அனுபவத்தில் உணர்வது ஒன்றே பிறந்த ஒவ்வொரு ஜீவராசியின் வாழ்க்கைப் பயணத்தின் இறுதியாகும்..
தொடருகிறார்….

ஆத்மனோ விக்ரியா நாஸ்தி புத்தேர்போதோ ந ஜாத்விதி |
ஜீவஹ சர்வமலம் ஞாத்வா ஞாதா த்ரஷ்டேதி முஹ்யதி ||

என்றும் விகாரம் இலது ஆன்மா புத்தியும்
என்றும் அறிவின்றியதே என்றாலும் – ஒன்றிய
சீவனே எல்லாம் தெரிவான் செய்வான் காண்பான்
பாவத்தான் மாமோகி பார்.

ஆன்மாவோ எந்தச் சமயத்திலும் எந்தவிதமான விகாரமும் இல்லாது இருக்கிறது. புத்திக்கோ என்றைக்குமே தானாகவுள்ள அறிவு என்பது கிடையாது. அப்படி இருந்தும் நான் என்னும் பாவத்துடன் ஒன்றுபட்ட ஜீவனே எல்லாவற்றையும் ‘நான் தெரிந்துகொள்கிறேன்’, ‘நான்செய்கிறேன்’, ‘நான்பார்க்கிறேன்’ ‘நான்எழுதுகிறேன்’ என்ற பாவத்தினால் மிகுந்த மோகமடைகிறான் என்பதைத் தெரிந்துகொள்.

இதன் விரிபொருள்:
ஆன்மாவுக்கு “இருப்பு” (அஸ்தி) என்ற ஒரு தன்மை தவிர பார்ப்பது, கேட்பது, செய்வது போன்ற குணங்கள் இல்லாததால் அது எந்த விகாரங்களையும் அடைவதில்லை. புத்தியும், தனக்குத் தானே ஊற்றெடுக்கும், அறிவற்ற ஜடப்பொருள் ஆதலால் அதுவும் தானாகவே எதையும் அறிவதில்லை. ஆன்மாவின் ஒரே குணமாகிய ஞானத்தை ஜீவன் புத்தியிடம் இருப்பதாக பாவித்து “தான் இதை அறிகிறேன்”, “அதை அறிகிறேன்” என்று கருதும்போது அங்கு “சித்” ஆகிய அறிவு அம்சமும், “ஜடம்” ஆகிய இது-அது என்கிற அம்சமும் கலந்தே வருகின்றன என்பதை அறியாது இருக்கிறான். அறிவாகிய “சித்” அம்சம், மற்றும் “நான்” எனும் இருப்பாகிய “ஸத்” அம்சம் இவைகளை அறியாது, “நான்” என்பதை உடலளவோடு குறுக்கும்போது மட்டுமே ஜீவனும் தெரிகிறது, உலகமும் தெரிகிறது. அதனாலேயே நமது விழிப்பு நிலையில் இவை இரண்டையும் அனுபவிக்கிறோம். ஆழ்உறக்க நிலையில் (சுஷுப்தி) அவைகள் காணப்படாது உறக்க அனுபவம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
புத்தி எனப்படுவது ஆன்மாவின் ஸந்நிதானத்தில் உருவாகும் அந்தக்கரண விருத்தியாகும். ஒருவன் “அதை-இதைப்பார்த்தேன்” என்று சொல்லும்போது பேரறிவாகிய “சித்” அம்சம் ஒரு சிற்றறிவாகக் குறுகிவிடுகிறது. ஜடம் எப்போதும் ஜடமாகவே இருக்கும். அதை உணர்வதற்கு அறிவு தேவை. அந்தக்கரணவிருத்தி இடையில் புதிதாக உண்டாவதால் ஒருவன் “நான் அறிகிறேன்” என்று தவறாக எண்ணி அதற்குக்காரணமான பேரறிவை உணராது சிற்றறிவைத் தான் கொண்டுள்ளதாக மயங்குகிறான்.
ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டில் உள்ள இரும்புத் துண்டு ஜடம். ஆனால் அது நெருப்பிலிருந்து சூட்டை பெற்றதால் அது நெருப்பைப் போன்றே எவராலும் தொடமுடியாது இருக்கிறது. அங்கு நெருப்பையும், இரும்பையும் பிரித்துப் பார்க்க முடியுமா? அல்லது குறடால் பிடித்துக் கொண்டிருப்பது இரும்புதான், நெருப்பு இல்லை என்றாவது சொல்ல முடியுமா? ஆனாலும் பின்பு அதைக் குளிர வைத்துவிட்டால், இரும்பு தனது ஜட நிலைக்கே திரும்ப வந்துவிடும். அதே போன்று ஜீவன் தனது “இருப்பு” எனும் தன்மை ஆன்மாவிலிருந்து பெறப்பட்டது என்பதையும், அது ஒன்றே அறிவுமயம் என்ற உண்மையையும் அறியாதவரை, தானே நெருப்பு என்று ஓர் இரும்புத் துண்டு தன்னைப் பற்றி நினைத்துக்கொள்வது போலத் தன்னைப்பற்றி மோகம் கொள்கிறான்….. (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நால்வர் பற்றி தனியாக அறிவோம்.)

ஆத்மபோதம் – 19 பிராந்தி

தானே நெருப்பு என்று ஓர் இரும்புத் துண்டு தன்னைப் பற்றி நினைத்துக்கொள்வது போலத் தன்னைப்பற்றி மோகம் கொள்கிறான்….. என்று முடித்திருந்தோம்..
மேலே சங்கரரை தொடருவோம்….

ரஜ்ஜுசர்ப்பவதாத்மானம் ஜீவம் ஞாத்வா பயம் வஹேத் |
நாஹம் ஜீவஹ பராத்மேதி ஞாதம் சேன்நிற்பயோ பவேத் ||

தன்னைத்தான் சீவன் எனத் தாம்பிலே பாம்பு போல்
உன்னியே அச்சம் உறுகின்றான் – தன்னைத்தான்
சீவன் அலன் யான் பரமான்மா என்று தேர்ந்ததனால்
ஆவன் அஞ்சானாய் அவன்.

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, *பரமாத்மவடிவமே* என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்.

இதன் விரிபொருள் :
பயம் என்பது எப்போது வருகிறது? தனக்கு ஒரு முடிவு உண்டு என்னும்போதும் – பிறரால் தனக்கு ஏதும் துன்பம் உண்டாகலாம் என்னும்போதும் வருவதுதான் பயம்.
பயத்திலேயே பெரிய பயம் மரணபயம் தான். அது தினம் தினம் தான் வருகிறதே! ராத்திரியில் கனவுக்கு பின் வரும் ஆழ்உறக்கம் என்ற சுஷுப்தி தான் தின பிரளயம் என்கிற மரணம். ( *இனியொரு பிறவி எனக்கில்லை இனிமேல்* — என்ற நாக-சுந்தரத்தின் பைரவி பாடலுக்கு ஒரு பொருள்–விளக்கம் எழுதணும் என்று நினைவு. விரைவில் எழுதுகிறேன். அது இங்கே பொருந்தும்.)
தனக்கு ஒரு ஆரம்பம் இருப்பதுபோல், ஒரு முடிவும் உண்டு என்பதை ஒருவன் உணரவேணும். உடலுக்கு பிறப்பு உண்டு என்றதால், இறப்பு அதன் முடிவு தானே. அதாவது அவன் தன்னைத் தனது தேகத்தோடு சேர்த்து அடையாளம் காண்கிறான். அப்படி அவன் தன்னை தேகமாக பார்ப்பது சரியில்லை என்றால் அவன் முடிவைப் பற்றி பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லையே! அதேபோல தன்னைத்தவிர வேறொருவர் என்பது இல்லாதுபோனால், அப்போதும் பிறரால் வரும் துன்பம் இல்லாது போய்விடும். அதனால் ஒருவனுக்கு தான் என்ற உணர்வு அழியப்போகும் உடலல்ல என்றாலும், இருப்பது தான் மட்டுமேயன்றி வேறு எவருமே கிடையாது என்றாலும் பயம் எப்படி வரமுடியும்?
இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வதால் வரும் வினைகள்தான் இந்தப் பயம், மற்றும் இவ்வுலக வாழ்க்கையில் நமக்குத் தோன்றும் பலவிதமான எண்ணங்களும். இந்த விதமான எண்ணங்களின் தொகுப்பைத்தான் நாம் நமது மனம் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கு ஏற்ப அவரவர்களுக்கு மனம் அமைகிறது. “இன்னிக்குள்ள உலகம் ரொம்ப மட்டமா இருக்கு” அப்படீன்னு சொல்றோமே. அது தப்பு தானே! இவன் காணும் உலகமும் அப்படியே அமைகிறது. அதனால் உலகம் என்று ஒரே ஒரு பொருள் நல்லதாகவோ, கேட்டதாகவோ கிடையாது. உள்ளதை உள்ளதாகப் பார்ப்பவனுக்குத்தான் இந்த உண்மை புலப்படும்.
இல்லாத ஒன்று இருப்பதாக நமக்கு ஏன் தோன்றுகிறது? இதற்கு வினாவுக்கு வருவோம். தனது நனவு-கனவு அனுபவங்களைக் கவனித்து பார்க்கவேண்டும். நினைவுலகத்தில் காண்பதின் சாயல்களையும் அதன் வெவ்வேறு கலவைகளையும்தான், ஒருவன் கனவுலகிலும் காண்கிறான். முதலில் தன்னைப் போலவே ஒருவனை கனவில் உருவாக்குவதில் தொடங்கி, அதன்பின் மற்ற கதைகளும் அங்கு அமைகின்றன. அவை எதுவுமே உண்மை அல்ல என்பது பின்புதானே தெளிவாகிறது? கனவு காணும் வரை அவை எல்லாமே உண்மைபோலத்தானே தெரிந்தது? கனவு-நான் இருக்கும்வரை கனவில் வரும் அனைத்தும் உண்மைபோலத் தெரிந்தாலும், அவை உண்மை அல்ல என்று தெரிவதற்கு நினைவு-*நான்* வரவேண்டியது ஆயிற்றே? அதேபோல உள்ளதை உள்ளபடி உணர்வதற்கு நினைவு-நானின் உண்மைவடிவம் தெரியவேண்டும். அதுவரை “நான்” என்பதை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ, அந்த அளவில்தான் மற்ற எதனையும் நாம் புரிந்துகொண்டிருக்க முடியும். அது உண்மையில் உள்ளதா, அல்லது இருப்பதாக நாம் கற்பித்துக்கொண்டிருப்பதா என்பது தெரியாது.
வேதாந்தத்தில் சர்ப்பம்-ரஜ்ஜு என்ற உபமானத்தை எங்கும் பார்க்கலாம்.
இருளில் சுருண்டு கிடக்கும் கயிறு ஒன்றை ஒருவன் மங்கிய ஒளியில் பார்க்கும்போது, அவன் எப்போதோ முன்பு பார்த்த பாம்பின் சாயலை அதில் பார்த்துவிட்டு அந்த கயிற்றை பாம்பு என (பிராந்தியாக) நினைத்து பயம் அடைகிறான். அதன்மேல் வெளிச்சம் பட்டதும், உண்மையை உணர்ந்து தான் பார்த்தது பாம்பல்ல – கயிறு என்று தெளிகிறான். அதேபோல எங்கும் பரவியுள்ள *ஆன்மசொரூபம்* என்று ஒருவன் தன்னை உணரவில்லை. தான் தற்போது காணும் உடல்தான் “நான்” என்று நினைப்பவன் தன்னை உடலளவில் குறுக்கிக் கொள்வதால், அவனுக்கு “தான்-பிறர்” என்ற பாவனை வருகிறது. அது தவிர மற்றவர்கள் தன்னைவிட வேறு தன்மையானவர்கள் என்ற எண்ணமும் வருவதால், அவர்களிடம் ஓர் பயமும் வருகிறது. இந்த பயம் போவதற்கு அவன் தன்னைப் பற்றி நன்கு அறிவதுதான் ஒரே வழி, ஒளி நன்கு பெருகியதும் இல்லாத பாம்பு போய்விட்டது. இருப்பது கயிறு மட்டுமே என்பதுதான் உண்மை. முக்காலத்திலும் அங்கு பாம்பு இல்லவே இல்லை. கயிறுதான் ஸத்யமல்லவா! இதுபோல் தேகம் எப்போதும் எங்கேயும் இல்லவேயில்லை. இருப்பது ஒரே ஆன்மா தான். அப்போதுதான் அவன் தன்னை அறிவான், அந்த அறிவு பெறப்பட்ட மூலமான ஆன்மாவே அறிவுமயமாய் இருப்பதை தெளிவான். தன்னைப் போன்றே காணும் அனைத்தும் இருப்பதை உணர்பவனுக்கு எதைக் கண்டு எங்கே பயம் வரும்?
தேஹம் நாஹம் கோஹம் ஸோஹம் … என்றதற்கு ஸ்ரீரமணபகவான் வரலாற்றில் ஒரு நிகழ்வு. அனுபவம் நமக்கு வா அது தெரியணும்….

ஆத்மபோதம் – 20 *தேஹம் நானல்ல* (நாஹம்-தேஹம்) பின் யார்?

படிப்போம். புரியும். மேலே மேலே சாதனை பண்ணுவோம். குரு ளியபண்ணுவார். (புன:புன:)
வேதாந்தம் என்பது பற்றி சங்கரரும் ஏனய ரிஷிகளும், மஹான்களும் உபநிடதம் வாயிலாகவும், பாடல்கள் வாயிலாலாகவும் நிறைய சொல்லி எழுதி கொடுத்துள்ளார்கள். பிரபலமான பகவத்கீதை அனைவருக்கும் தெரியும். அதிலும் இதே வேதாந்தம்தான். கீதைப்பேருரைகள் என்று நாட்டில் நிறைய ஆங்காங்கு நடக்கிறது. ஆனால் வேதாந்தம் என்பது தேஹாத்மபுத்தியிலிருந்து வெளிவருவது என்று எளிமையாக வாழ்ந்து காட்டியவர்கள் நமது ஸ்ரீரமணபகவான். அவர்கள் திருவண்ணாமலை தவ வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால் ஆங்கு நடந்த பல நடைமுறைகளால் நமக்கு இந்த *தேஹாத்மபுத்தி* நன்றாக புரியும். திருவண்ணாமலையில் வெகு நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை மிகவும் பாதித்தது. கண்ணீருடனேயே தான் அப்போதும் படித்தேன்.. இதை நான் சிலரிடம் நேரில் பகிர்ந்தும் இருக்கிறேன். ஆனால் இரு தினங்கள் முன்பு முகநூலில் வந்த அதே பதிவை சேமித்து வைத்தேன். இங்கு நேற்றுமுன்தினம் நமது ஆத்மபோதம் தொடர் எழுதி வரும்போது இங்கே இதனை சேர்த்தால் பொருந்துமே என்ற நினைவு வந்தது. அப்போதுதான் ஏன் இந்த பதிவை சேமித்து வைத்தேன் என்பது புரிந்தது. எல்லாம் குருவருள்தானே! அவனன்றி ஓரணுவும் அசையாது என்னுபோது தோன்றவைப்பதும், எழுதவைப்பதும் அவனே அல்லவா! தேஹம் நானில்லை என்றால் எழுதவைப்பதும் அந்த ஆத்மா தானே! வாருங்கள் “தேஹம் நானல்ல, நான் ஆத்மாதான்” என்ற நினைவுடன் நிகழ்ச்சியை தொடருவோம்…

ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம் (மே 2011) இதழில் வந்ததாம். நான் சற்று சுருக்கி நமது தலைப்புக்கு தேவையான விஷயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். இதுவே சற்று நீண்ட பதிவு. பொறுமை தேவை. சிந்தனை தேவை.

1937-ம் ஆண்டு. (சரியா 80 ஆண்டுகள் முன்பு) சுப்பராமையா தனது மகள் லலிதாவுடன் ரமணாஸ்ரமம் வந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருவண்ணமலைக்கு வந்து ரமண தியானத்தில் மூழ்கி முத்தெடுப்பார் சுப்பராமையா. அவர் கல்லூரிப் பேராசிரியர் , கவிஞர். அறிஞர். அவருடன் அவர் பெண்கள் லலிதாவும், இந்திராவும் உடன் வந்தார்கள். இதில் பெரியவள் லலிதா சற்று துடுக்கு, சமர்த்து; இளையவள் இந்திரா சாந்தம், கம்பீரம். ரமணாஸ்ரமத்தின் தியானக்கூடம், நடுநாயகமாக பகவான் வீற்றிருப்பார். துடுக்கான லலிதா அன்று தன்னோடு விளையாட , ஒருவரும் இல்லை. அந்தப் பெரிய ஹாலில் பலரும் விறைப்பாக அமர்ந்தவாறும் , கண்களை மூடிக்கொண்டும் , ரமணரைத் தரிசித்துக் கொண்டும், பாராயணம் செய்துகொண்டும் இருக்கிறார்கள். லலிதாவுடன் விளையாட யாருமில்லை. தேடித் பார்த்ததில் *தாத்தாசாமிதான்* சும்மா’ இருக்கார். அவர்தான் எனக்கு லாயக்கு ‘ என நினைத்தாள். *சும்மா இருப்பது மாபெரும்தவம்* என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? ரமணரின் பக்கத்தில் போய் நின்றாள் லலிதா. அவருக்கு ஏதாவது சேவை செய்யவா? ம்ஹூம், ஒரே சேஷ்டைதான். விசிறியை ஆட்டி சத்தம் செய்வாள். நூல்களைப் புரட்டுவாள். அவைகள் கீழே விழும். சிலர் கண்களைத் திறந்து பார்ப்பர். நீண்ட பொறுமைக்குப் பிறகு விஷமம் அதிகமானால், பகவானே, “ஏய். என்ன பண்ற ….?” என்று லேசாக அதட்டுவார். உடனே லலிதா வாய்க் குவித்து, மெல்லத் தலையாட்டி, “சுவாமி, நா ஒண்ணுமேபண்ணலே, சும்மாதான் இருக்கேன்” என்பாளே அது கொள்ளை அழகு ! பகவானே சிரித்து, “இவ இப்படித்துறுதுறுன்னு ஏதேதோ செய்யறா, ஆனா நா ஒண்ணுமே செய்யல’ என்கிறா. ஒரு சிறுமி இதைச் சொல்ல முடியறது. ஆனா பெரியவா இதைப் புரிஞ்சுக்க முடியலையே” என்றார். கீதையின் சாரத்தை இப்படி குழந்தையின் மூலமா பிழிந்து கொடுத்தார் பகவான்.
1941-ம் ஆண்டு. மே மாதம் மூன்றாம் வாரம். மீண்டும் திருவண்ணமலையில் தன் குடும்பத்துடன் சுப்பராமையா. இந்தமுறை 9 வயது லலிதாவுடன், இளையவள் 5 வயது இந்திராவும் வந்திருந்தாள். பட்டுச் சொக்காவில் இருவரும் சிட்டுக்களாக ஓடியாடி எல்லோரையும் ஈர்த்தனர். முக்கியமாக பகவானுக்கு சிறியவள் இந்திராவை பிடித்துப் போயிற்று. பாடச்சொன்னால் பாடுகிறாள். ஆடச் சொன்னால் ஆடுகிறாள். இந்த லலிதாவுக்கு என்ன வந்தது? திடீரென சங்கோஜப்பட ஆரம்பித்து விட்டாளே! ‘நான் ஒரு பெண்’ என்ற தேகாத்மபுத்தி தலையெடுக்கும் வயதோ! அதனால் தான் பகவானின் திருமுன்பு அவளால் இருக்கமுடியல்லையோ? இந்திரா பாடி முடித்ததும், லலிதாவைப் பாடச் சொன்னார் பகவான். அவள் தயங்கினாள். பகவான் விடவில்லை. “என்ன லலிதா? யார் கிட்டேயும் நா எதுவும் கேட்கறதில்ல. நீ என்னையே கேட்க வச்சுட்டியே! இந்திராவைப் பாரு, அவ மாதிரி பாடு” என்றார். இவ்வளவிற்குப் பிறகே லலிதா பாடினாள். பிறகு இருவரும் சேர்ந்து ஆடினர். மகரிஷியின் சபை குழந்தைகளால் அன்று களை கட்டியது.
ஒருநாள் சுப்பராமையா ‘உபதேசஸாரம்’ என்ற தெலுங்கு நூலை பகவான் முன்பு அமர்ந்து படித்தார். அதன் முன்பக்கத்தில் சம்ஸ்கிருத மொழியில் நான்கு வரிகள் அச்சாகியிருந்தன. அதைப் பார்த்த சின்னவள் இந்திரா அதிலுள்ள மூன்று வார்த்தைகளை ‘நாஹம் தேஹம் – கோஹம் – ஸோஹம்’ – ( நான் தேகமல்ல – நான் யார்? – அவன் ‘நான்’) என்று எழுத்துக் கூட்டி கூட்டி ஒன்றாக வாசித்தாள். உதட்டோடு, உள்ளத்தையும் குவித்து வாசித்த அவளை மகரிஷி உற்று நோக்கினார். அவளிடம் ஏதோ ஒரு ஊற்று பெருக்கெடுப்பதை அவர் கண்டதுபோல் இருந்தது.
“இந்திரா, சரியாத்தான் நீ படிச்சேம்மா. இந்த வரிகளே உனக்குப் போதும். பாடலின் மிச்சபகுதிய நீ படிக்க வேண்டாம். நீ இப்போ வாசிச்சியே, அதான் எல்லா அறிவோடஸாரம். இனி இதையே மந்திரம் மாதிரி சொல்லிண்டிரு. உனக்கு எல்லாமே இது மூலம் ஸித்திக்கும்.” என்றார் பகவான். உடனே, தாத்தாசாமி தனக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த மூன்று வரி மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தாள் இந்திரா. சரியாகச் சொல்ல தைரியம் வந்ததும் சத்தமாகப் பல ராகங்களில் சொல்ல ஆரம்பித்தாள். பின் அவளைப்பார்க்கும் போதெல்லாம் பகவான், “அந்த மந்திரத்தைச்சொல்லு, பார்க்கலாம்” என்பார். அவளும் சொல்வாள், ஒரு சிஷ்யையாக! அவர் அவளது உச்சரிப்பையா கவனித்தார்? இல்லை. ஏதோ ஓர் உச்சநிலைக்கு கொண்டு செல்வதற்கு அவர் அவளைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். சுப்பராமையா அதைப் பார்த்து வியந்தார்.
இந்த மந்திரம் முதன்முதலில் பகவான், தமது முக்கியச் சீடரான காவ்யகண்டகணபதிமுனிவர் என்ற மிகப் பெரிய பண்டிதருக்குக்கூறியருளியது. ‘ஆஹா, இந்த மந்திரம்தான் என்னவோர் அருமையானது ‘ என சுப்பராமையா அதை ரசித்தார்.’ இம்மந்திரம் உயர்ந்த ஸாதகர்களுக்கானது. முதலில் கோஹம் ‘நான் யார்? ‘ என்ற விசாரத்தைப் பூரகமாக – உள்மூச்சாக ஸாதகன் இழுக்க வேண்டும். அடுத்து, ஸோஹம் – ‘அவனே நான்’ என்ற ‘வ்ருத்தியை’ கும்பகமாக – மூச்சாகக் கருதி , பிடித்து வைத்துப்பழக வேண்டும். முடிவில், ‘நாஹம் தேஹம்’ – ‘நான் உடலல்ல’ என்ற அனுபவம் ரேசகமாக – வெளிமூச்சாக விடவேண்டும். இதுவே *ஞானப்பிராணாயாமம்*. அறிவுஜீவியான சுப்பராமையாவின் புத்தியை ஒரு கேள்வி அடிக்கடி குடைந்து கொண்டிருந்தது. அறிவிலும், அனுபவத்திலும் மிக்க பக்தர்களும், ஸாதகர்களும் ஆன நாங்கள், மகரிஷியின் ஒரு உபதேசதிற்காகக் காத்துக்கிடக்கும்போது, இவர் ஏன் ஒரு சிறுமியிடம் இவ்வளவு பெரிய விஷயத்தைத் திணிக்கிறார் ? அவளுக்கு என்ன புரியும்? இது அவரின் சிந்தனை.
அன்று சுப்பராமையா தியானித்துக் கொண்டு இருந்தார். இந்திராவுக்குப் பசித்தது. அப்பாவைத் தொந்தரவு செய்யாது ஒரு மூலையில் அமர்ந்தாள். ஆன்மப்பசியோ, அடிவயிற்றுப்பசியோ அனைத்தையும் அறியும் பகவான் அவளைக் கவனித்தார். உடனே அவளது அப்பாவிடம், “கொழந்தைக்குப் பசிக்கிறது, அதை கவனிக்காம தியானம் எதுக்கு?” என்று கேட்டார் பகவான். ஒருநாள் பகவான் அந்த இரண்டு சிறுமிகளுடனும் விளையாட்டாகப்பேசிக்கொண்டு இருந்தார். லலிதாவின் கையைப்பார்த்து, “இது யாரோட கை?” என்று கேட்டார். அவள், “என் கை” என்றாள். “இல்ல” என்றார் பகவான். “இது யாரோட கண்ணு?” “என்னோட கண்ணுதான்” – லலிதா.” இல்ல”…….இவ்வாறு பகவான் லலிதாவிடம் ஒவ்வொன்றாகக் கேட்கவும், அவள் அவையெல்லாம் தன்னுடையது தான் என்று சொல்லி வந்தாள். முடிவில் பகவான், “எதுவுமே ஒன்னுடையதில்ல. உன் உடம்பே பகவனுக்குத்தான் சொந்தம்.” என்று கூறி முடித்தார். லலிதா புரியாமல் விழித்தாள். ஆனால் இந்த உரையாடலை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த இந்திரா “ஓ, அப்படியா!” என்று உள்ளுக்குள்ளேயே உச்சரித்துக்கொண்டாள்.
விடுமுறை முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் ஊருக்குச் செல்ல பகவானிடம் விடைபெற வந்தனர். காலை நேரம். பகவான் மலைக்குப் போகும் நேரம். லலிதா ஏதோ வேடிக்கைப் பார்த்தபடி இருந்தாள். ஆனால் இந்திரா எதையோ எதிர்பார்த்து ஏங்கியிருப்பதாகக் காணப்பட்டாள். பகவான் இந்திராவை விழுங்கும்படிப் பார்த்து, *”அப்போ நீ உன் இடத்துக்குப் போற. நா என்னோட எடத்துக்குப் போறேன்”* என்று கூறிவிட்டு அருணாசலமலையில் ஏற ஆரம்பித்தார்.
கொஞ்சமாவது பகவான் திரும்பிப் பார்க்க வேண்டுமே! ம்ஹூம், இந்திராவின் இதயம் பாரமானது. ‘தாத்தாசாமி! இனி நா உங்கள எப்பப் பார்ப்பேன்?’ என்று அவளது உள்ளம் விம்மியிருக்கும். ஆனாலும் ஓர் ஆறுதல். அவளுக்குத்தான் தாத்தாசாமி வழங்கிய மூன்று மந்திரங்கள் இருக்கே! அதைச் சொன்னால் நா எங்கிருந்தாலும் சாமி என்ன நல்லா கவனிச்சுப்பார் என மனதிற்குள் நினைதித்திருப்பாள்.
நாட்கள் வேகமாகச் சென்று இரண்டு வருடங்கள் ஆயின. 1943 -ஆம் ஆண்டு. இந்திரா அகத்திலும், புறத்திலும் நன்கு வளர்ந்திருந்தாள். அப்போதுதான் அவளுக்கு திடீரென வைசூரி வார்த்தது. இரண்டு வாரங்களில் படுத்த படுக்கையாகி வாடிப்போனாள். உண்ண முடியவில்லை. உறக்க மில்லை. உடல் வேதனையை அனுபவித்தாலும், பகவான் அருளிய மூன்று மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தால் போதும் இந்திராவின் முகம் பிரகாசிக்கும். மூச்சைச் சிரமப்பட்டு விட்டாலும், மந்திரத்தை விடாமல் சொல்லிக்கொண்டு இருந்தாள். சுப்பராமையாவும் பிற பக்தர்களும் பகவானின் படத்தின் முன்பு அவளைக் கிடத்திப் பிரார்த்தித்தனர். கவிஞரான சுப்பராமையா, தமது மகள் ஒரு அற்புதமான சோககாவியத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தார். இவள் தெரிந்துதான் ‘ஞானப்பிராணாயாமம்’ புரிகிறாளா?….. ஓ, இவளது ப்ராரப்தம் தெரிந்துதான் பகவான் அவ்வளவு பிரயத்தனம் எடுத்து இவளுக்குச் சொல்லித் தந்தாரோ!’ என சுப்பராமையா எண்ணினார். அதை எண்ணியபோதே பகவானிடத்தில் பக்தி இன்னும் பெருகியது. எஞ்சிய நாட்கள் ஏனையோருக்கு இறுக்கமாகச் சென்றாலும், இந்திரா எதனாலும் பாதிக்கப் படாமல் இருந்தாள்! கடைசியில் அந்த சோகமான நாளும் வந்தது. அன்று ஸ்ரீராமநவமி . ஏப்ரல் 13. பக்தர்கள் இந்திராவைச் சூழ்ந்து இருந்தனர். மூன்று மந்திரங்களையும், விடும் மூச்சாக ஓதிக்கொண்டே இந்திரா இறைவனடி சேர்ந்துவிட்டாள். அங்கு துக்கம் விசாரிக்க யாரும் வரவில்லை. யாராலும் அழ முடியவில்லை! ஏனெனில் அவள் தேகத்தைத் துப்பிவிட்டு, தெய்வப் பதத்தைச் சேர்ந்துவிட்டதாகப் பலரும் நம்பினார் ; உணர்ந்தனர்.
பல வருடங்கள் விசாரத்திற்குப் பிறகும் ஸாதகர்களுக்கு கிடைக்காத ஒரு ஸ்திதியை, அவள் குருவருளால் எளிதாகப் பெற்று, பகவானை எளிதாக அடைந்துவிட்டாளே! என்றுதான் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். இந்திராவின் உடலைப் புதைத்த இடத்தில் ஒரு கல்லறை எழுப்பினார் சுப்பராமையா. அதன்மீது *நாஹம் தேஹம் – கோஹம் – ஸோஹம்* என்ற வாக்கியங்களை பொறித்து வைத்தார். அது பக்தர்களுக்கு இன்றும் ஒரு வழிகாட்டியாக இருந்து விளங்குகிறது.
இந்த பதிவின் பின்பு இதன் தொடர்ச்சியாக நாளை பார்ப்போம்….

ஆன்மபோதம் – 21 ப்ரகாசம்

நேற்றைய தொடர் ஒரு கதை போல ஆனால் உண்மை சம்பவமாக படித்தோம். அது உங்களுக்கு மனதில் ஒரு வித்தியாசமான சிந்தனைகளை உண்டுபண்ணியிருக்கும். அதனால் இத்தொடரைப்படிக்கும் உங்களுக்கு சற்று ஆன்மவிழிப்பு ஏற்படுவற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தென்படுக்கின்றன.. சிலர் பதில் எழுதுகிறார்கள். சிலருக்கு எழுத வரலை. அவ்வளவுதான். மனதிலேயே சிந்திப்பது புரிகிறது. மகிழ்ச்சியே! எழுத வராவிட்டால் என்னிடம் தொலைபேசியில் பேசலாமே! என் தொலைபேசி எப்போதும என்னிடம் தயார் நிலையில் அருகிலேயே உள்ளது என உங்களுக்கு தெரியுமே! மறுபடியும் சொல்கிறேன். தயவுசெய்து இரவில் படுக்கும் முன் இதனை படியுங்கள் – படியுங்கள். பலனுண்டு. குரு என்பவர் வழிகாட்டி தான். அதோ! தெரிகிறதுபார். நீ சென்றடைய வேண்டிய லக்ஷ்யம் என்று காட்டுபவர்தான் அவர். வழியைத்தொட்டு அதன்வழியே சரியாக அதாவது அவர் சொன்ன வழியிலேயே சென்றாலேதான் லக்ஷ்யத்தை அடைய முடியும். சின்ன குழந்தையாக இருந்தாலும் இந்திரா ஸ்ரீபகவான் சொன்ன அந்த மஹாவாக்கியங்களை எத்தனை அழகாக ஒருமுகமாக சொன்னாள். உடனே அதற்கு அவளின் முன்வினை நல்வினை என்று வியாக்கியானம் செய்யலாம். இப்படி சொல்வது சரியில்லை. ஏன்? நமக்கும் முன்வினை நல்வினை இல்லையா? இல்லாமலா அற்புதமான ஸத்குரு மண்டலம் கிடைத்துள்ளது? எனவே வைராக்கியம் வேணும். ஸாதனை அவசியம். நிச்சயம் லக்ஷியத்தை எட்டலாம். ஆத்மா நம்மிடம் நன்றாகவே பிரகாசிக்கிறது. அதனால் தான் இத்தனை பெரிய. ஆத்மா சம்பந்தமான, உபநிஷத்பிரதிபாத்யமான விஷயத்தை எளிதாக எழுத, பேச, படிக்க முடிகிறது. முன்னமேயே சொல்லியிருக்கிறேன் வேதம் சொன்னதை. “ஆத்மபிரகாசம் இல்லையானால் வேறு ஒன்றும் பிரகாசிக்காது..” என்று (நதத்ர சூர்யோபாதி …. )
இது பற்றியே சங்கரர் அடுத்து தொடருகிறார்…..

ஆத்மாவபாசயத்யேகோ புத்தயாதீநீன்த்ரயாண்யபி |
தீபோ கடாதிவத்ச்வாத்மா ஜடைச்தைநார்வபாச்யதே ||

ஒரு பொருளாம் ஆன்மா ஒளிர்க்கும் மதிமுன்
கருவிகளைத் தீபம் கடாதி – பொருவ
ஒளியில் அவற்றால் ஒருபோதும் ஆன்மா
ஒளிர்க்கப்படாது என்று உணர்.

மண்சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவை. அதுபோல் ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் ஒளிரச் செய்யும். ஸ்வய பிரகாசமில்லாத ஜடமாகிய அவைகளினால் ஒளிமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்.

இதன் விரிபொருள்:
நமது கண்களால் நமக்கு வெளியிலுள்ள எல்லாவற்றையும் பார்க்கிறோம். ஆனால் அந்தக்கண்ணால் நமது கண்ணையே பார்க்க முடிகிறதா? ஒரு கண்ணாடி கொண்டுதானே பார்க்கிறோம்? நம் மனம், புத்தி இவைகளின் துணை கொண்டு, பார்க்கும் நமக்கு அதற்கு வேண்டிய உறுப்பு இருக்கிறது என்றும், எதிரில் இருப்பவருடைய கண்களைப் பார்த்து அதேபோல நமக்கும் இருக்கவேண்டும் என்றும் அனுமானிக்கிறோம் அல்லவா? கண் என்பது ஒரு ஸ்தூலக்கருவி. மனம், புத்தி முதலியன நமது ஸூக்ஷ்மஅந்தக்கரணங்கள். கண்ணையும், கண்ணுக்கு எதிரே இல்லாதவற்றையும், வேறுபல சூக்ஷ்மமான ரகசியங்களையும் அறிவது நமது புத்தி என்றால், எதனால் அந்த புத்தி இயங்குகிறது என்று ஆராய்வதுதானே முறை?
குடம் போன்ற சாதனங்கள் இருளில் இருந்தால் அவை எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு ஒரு விளக்கு தேவையாகிறது. ஆனாலும் அந்த விளக்கைக் கொண்டு கதிரவனைப் பிரகாசிக்கச் செய்ய முடியுமா? குடம் என்ற ஜடப்பொருளால் எப்படி விளக்கைப் பிரகாசிக்கச் செய்யமுடியாதோ, அதேபோல சூரியனின் முன்பு மற்ற ஜடப் பொருளை காட்டும் விளக்கும் ஒரு ஜடம் போல்தான் ஆகிறது. நமது ஸூக்ஷ்ம புத்தியினால் காணவும் முடியாத ஜடப் பொருட்களை மானசீகமாகக் கண்டுபிடித்தாலும், அந்த புத்தியை ஒளிர்விக்கும் பொருள் முன்பாக புத்தியும் ஒரு ஜடமாகத்தான் ஆகிறது.
“ஸத்” ஆகவும், “சித்” ஆகவும் அறிவுமயமாகவே இருக்கும் ஆன்மா ஒன்றினால்தான் புத்தியும் அறிவொளி பெற்று, அந்தக் கரணங்களையும் அதனால் ஒளி பெறச் செய்து பார்ப்பது, கேட்பது முதலான செயல்களில் ஈடுபடச் செய்கிறது. எப்போது அந்த ஒளி அகல்கிறதோ அப்போதே அனைத்தும் செயலிழந்து விடுகின்றன. ஆகவே புத்தி என்ற நமது ஸூக்ஷ்ம கருவி கூட அந்த ஆத்மாவின் முன் ஜடம் ஆகிறது என்பதைக் குறிப்பிடும் முகமாகத்தான் “புத்தி முதலான” எனப் பொருள் தரும் “புத்தியாதி” என்ற சொல்லை இங்கே சங்கரர் போட்டிருக்கிறார். நமது தேகத்தின் இந்திரியங்கள் அனைத்துமே ஆன்மாவினால் ஒளி பெறப்பட்டு இயங்குகின்றனவல்லாது, இவை எதுவுமே ஆன்மாவை ஒளிர்விக்க இயலாது.
தொடர்ந்து பார்ப்போம்……

ஆன்மபோதம் – 22 *ஒளிதனில் ஒளியும் நீ*

ஆன்மஒளியால் தான் அனைத்தும் இயங்குகின்றன என பார்த்தோம்….

ஸ்வபோதே நான்யபோதேச்சா போதரூபதயாத்மானஹ |
ந தீபஸ்யான்யதீபேச்சா யதா ஸ்வாத்மபிரகாஷனே ||

விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் – விளங்கும்
அறிவுருவாம் ஆன்மா அறிந்திடத் தன்னைப்
பிரிதறிவு வேண்டப் பெறாது.

தானாகவே பிரகாசிக்கும் தன்மை உள்ள விளக்கு. அதனை விளக்கிக் காட்டுவதற்கு இன்னுமொரு விளக்கு தேவை இல்லாதது போல, ஞானவடிவமாகப் பிரகாசிக்கும் ஆன்மாவை அறிவதற்கு வேறொரு அறிவின் துணை அவசியமேயில்லை.

இதன் விரிபொருள்:

ஆன்மாவே நமது உள்உறுப்புக்களை ஒளிர்விக்கச் செய்கின்றன என்றால், அவை எதனாலுமே ஆன்மாவை அறியமுடியாது என்று ஆகிறது. ஆன்மா ஸ்வயம்பிரகாச ஸூர்யன் போல தானும் ஒளிர்கின்றது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஒளிர்விக்கின்றது. விளக்கு ஒன்று இருக்கிறது என்பதை அறிவதற்கு வேறு ஒரு விளக்கின் தேவை இல்லாததன் காரணம், அந்த விளக்கிற்கே ஸ்வயமாக ஒளிரும் தன்மை இருப்பதால்தானே? ஆன்மாவும் அதேபோல ஸ்வயம் பிரகாசமாக இருப்பதால் உள்உறுப்புக்களை ஒளிர்விக்கிறது, தானும் ஒளிர்கிறது. அப்படிப்பட்ட ஆன்மாவை அறிய வேறு ஒரு துணை தேவையில்லை.
இவ்வுலகில் ஒன்றைப் பார்ப்பதற்கு ஒருவனுக்குக் கண் வேண்டும். கண் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அதில் மனம் செல்லவில்லை என்றால் ஏதும் தெரியப்போவதில்லை. உதாரணம் – நாம் வீட்டில் உட்கார்ந்து உருக்கமாக டிவி பார்ப்போம். அப்போது பக்கத்துவீட்டு மாமா உள்ளே வந்து பக்கத்தில் உட்காருவார். நம்மை தொட்டு என்ன சேதி ? என்பார். ஆஹா ! எப்ப வந்தேள்? என்போம் நாம். இது நமது அன்றாட அனுபவம்தானே! அப்போது நாம் மனம் டிவியில் இருத்தது. பக்கத்தில் நடப்பது தெரியலை. கண் பார்த்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை என்றால் ஏதும் தெரியாது என்பது தான் உண்மை.
அது தவிர பார்க்கும் சமயத்தைப் பொருத்து சூரியனோ, சந்திரனோ, நக்ஷத்திரமோ அல்லது ஒரு விளக்கோ ஏதோ ஒன்று தரும் ஒளியின் துணையும் வேண்டும். அந்தச் சமயத்தில் அவன் தன்கண்ணை மூடிக்கொண்டால், பார்க்கும் பொருளைப் பற்றி அவன் முன்பு அறிந்ததை அவன் தனது புத்தியினால் இப்போது உணர முடியும். ஆக கண் என்பது ஒரு ஸ்தூலக்கருவியாக இருப்பதுபோல, மனம்-புத்தி இவைகள் எல்லாம் ஸூக்ஷ்மகருவிகளாக அமைகின்றன. ஸ்தூலக்கருவிகளை ஸூக்ஷ்மகருவிகள் இயக்குகின்றன அல்லது அதற்கு துணை செய்கின்றன. ஸூக்ஷ்மகருவிகள் இல்லாத ஆழ்உறக்கத்தில் ஸ்தூலக்கருவிகளும் பயனில்லாமல் போகின்றன. அதாவது ஒவ்வொரு கருவிக்குப் பின்புலமாக வேறு ஒன்று அமைகின்றது. ஆழ்உறக்கத்தில் “நான்” எனும் உணர்வு இல்லாதபோது ஸூக்ஷ்ம கருவிகளும் இல்லாது போகின்றன. ஆக “நான்” எனும் ஆத்மாவே – உணர்வே அனைத்திற்கும் ஒளி தருவதாக இப்போது சொல்லலாம். இதனையே பகவான்ரமணர் உள்ளதுநாற்பது அனுபந்தத்தில் இவ்வாறு சொல்கிறார்:

ஒளி உனக்கு எது? பகலில் இனன் எனக்கு, இருள் விளக்கு
ஒளி உணர் ஒளி எது? கண்; அது உணர் ஒளி எது?
ஒளி மதி; மதி உணர் ஒளி எது? அது அகம்;
ஒளி தனில் ஒளியும் நீ என குரு; அகம் அதே.
“எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ” என குரு சொல்ல, “நான் அதுவே” என்கிறான் சீடன். அந்த “நான்” என்பது “எப்போதும் அறிவோடு கூடிய தன்மயமாக இருக்கும்” ஆன்மாவிலிருந்து பெறப்பட்ட உணர்வு என்பதால், அந்த ஸ்வயம் பிரகாசமான பேரறிவை அறிவதற்கு வேறு எந்த அறிவின் துணையும் தேவை இல்லை. வேறு எதுவும் அந்தப் பேரறிவுக்கு ஒளி தருவதாகவும் இல்லை என்பதே இங்கு அழகாக விளக்கப்பட்டுள்ளது. அதனாலேயே எவரும் “நான் இருக்கிறேனா?” என்று கேட்பதில்லை. தான் இருக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே அனைவரும் மற்ற விஷயங்களை அறிகின்றனர், பேசுகின்றனர். இதைத் தான் திருமூலரும்…….
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தானே! ——— என்கிறார்.

ஆத்மபோதம் – 23 “இதுவல்ல-இதுவல்ல”

நாம் செய்யும் ஸாதனை பற்றி பகவான் சரித்திரத்தில் ஒரு உபதேச நிகழ்ச்சி இருக்கிறது. அதை பார்க்கலாம்.:
குஞ்சுஸ்வாமிகள் என்று ஒருவர். அவர் பகவானைப் பற்றி கேள்விப்பட்டவுடன் உடலில் அவருக்கு ஒரு இனம்புரியாத மாற்றம் ஏற்பட்டது. உடனே திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷிகளை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் சொல்லாமல் திருவண்ணாமலைக்கு கிளம்பிவிட்டார். கையில் போதுமான பணம் வேறு கிடையாது. திருவண்ணாமலையில் பிளேக் நோய் பரவியிருந்ததால் ஊருக்குள் செல்வதற்கு பலவிதமான தடைகள் இருந்தது. சிவபெருமானுடைய அருளால் எல்லா தடைகளும் விலக, திருவண்ணாமலை வந்து தனது குருநாதரான பகவான் ரமணமகரிஷியின் திருவடியை வந்தடைந்து பரமசாந்தியை அடைந்தார். பகவான் ரமணர் யாருக்கும் வாய்முகமாக எந்த உபதேசமும் செய்வதில்லை என்று கேள்விப்பட்டார். அதனால் முதல் முதலாக பகவான் ரமணர் எதை தன்னிடம் பேசுகின்றாரோ அதையே உபதேசமாக எடுத்துக்கொள்வது என்று முடிவு செய்தார். அந்த சமயம் ஒரு கொட்டாங்கச்சியில் உள்ள சூடான கஞ்சியை நான்கு நாய்க்குட்டிகள் குடிப்பதற்கு ஓடி வந்தன. அந்த குட்டிகளுக்கு அந்த கஞ்சி சுடப்போகிதே என்ற கவலையினால் பகவான் குஞ்சுஸ்வாமிகளைப் பார்த்து “நான்கையும்பிடி, ஒவ்வொன்றாக விடு” என்றார். அதன்படியே நான்கு நாய்க்குட்டிகளையும் பிடித்து ஒவ்வொன்றாக விட்டார். சரி, இதில் என்ன உபதேசம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் அல்லவா? ஆமாம். இது உபதேசம்தான். முக்தியை விரும்புகின்ற ஒருவன் (முமுக்ஷு) நான்கு செயல்களை முதலில் நன்றாக பிடித்துக்கொள்ள வேண்டும். பிறகு அவைகளை ஒவ்வொன்றாய் விட்டுவிட வேண்டும்.
 நல்ல நூல்களைப் படித்தல், (உபதேச – சிரவணம்)
 மந்திரத்தை ஜபம் செய்தல், (மனனம்)
 தியானம் செய்தல், (நிதித்யாசனம்)
 ஆத்ம தத்துவத்தை விசாரம் செய்தல் (ஸவிகல்பஸமாதி)
என்ற நான்கையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ஜபம் நன்றாக கைகூடி வந்துவிட்டால், பாராயணத்தை விட்டுவிடவேண்டும். தியானம் நன்றாக கைகூடிவிட்டால் ஜபத்தை விட்டுவிடலாம். ஆத்மதத்துவவிசாரம் கைகூடி விட்டால் தியானத்தை விட்டு விடலாம்” என்பதுதான் அந்த உபதேசம். இது அநேகமாக மஹாவாக்கியமே தானே! இதையேதான் சங்கரர் தொடர்ந்து சொல்கிறார்….

நிஷித்ய நிகிலோபாதீன்னேதி நேதீதி வாக்யாதஹ |
வித்யாதைக்யம் மகாவாக்யைர்ஜீவாத்மாபரமாத்மனோஹ ||

நேதிநேதி வாக்கினால் நீக்கி உபாதி எலாம்
மீதியாம் சீவான்மா மீதிலா – ஆதியாம்
அப்பரமான்மாக்களின் ஐக்கிய மாவாக்கியங்கள்
செப்புவது ஓர்ந்து தெளி

இந்தத் தேஹம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்தவாக்கின்படி நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று சொல்லும் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப் பரம்பொருளாகிய ஆன்மாவும் ஒன்றே என்று சொல்லும் வேத மஹாவாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து தெளிவாயாக.

இதன் விரிபொருள்:
இருப்பதைக் கொண்டுதான் பறப்பதை அறியவேண்டும் என்பார்கள். அதனால் நமக்கு நன்கு தெரிகின்ற வஸ்துக்களை ஆராய்ந்து அவைகளின் ஸத்யதன்மையை தெரிந்து கொள்ளும் வழிதான் *நேதி-நேதி* என்று சொல்லப்படும் விசாரம்.
அதாவது *இதுவல்ல-இதுவல்ல* என்பதாகும். நாம் ஒரு காரில் போகிறோம். டிரைவரான நாம் தான் ஓட்டுகிறோம், ஆனால் நாமே அந்த வண்டியல்ல என்று நமக்கு தெரியும் அல்லவா? அதைப் போன்றதே இந்த வழி. நமக்கு உடல் இருக்கிறது, ஆனால் நாம் உடல் அல்ல. அதே போன்று நமக்கு மனம், புத்தி இவைகள் இருக்கின்றன, ஆனால் மனம், புத்தி இவைகளும் நாம் அல்ல. மனத்தில் ஒன்று தோன்றும். புத்தியினால் கிளம்பும் எண்ணங்களும் நமக்கு வருகின்றன, ஆனாலும் அவைகள் நாம் அல்ல. இப்படியாக நமக்குத் தோன்றும் எதையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், உணர்கிறோம் என்று சொல்லி அவைகள் எதுவும் நாம் அல்ல என்று நீக்குவதுதான் இந்தவழி. அப்படியானால் அனைத்தையும் நீக்கிவிட்டு எஞ்சி இருப்பது யார்? அல்லது எது? என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், பார்க்கும் ஒரு ஆள் இருக்கிறான் அல்லவா? அவன் யார் என்ற ஒன்றுதானே மிஞ்சும்? அந்தக் கேள்வியையே மிக ஸூக்ஷ்மமாக அணுகினால், அவன் அப்படிக் கேட்பதற்கோ, உணர்வதற்கோ முன்பேயே அவன் இருந்தாக வேண்டும் அல்லவா? அப்படி இருப்பது ஒன்றே எங்கும், எப்போதும் உள்ள பரமாத்மா. (நம் வழியில் பராசக்தி-சித்சக்தி)
இதைதான் வேத மஹாவாக்கியங்கள் “உணர்வேபிரம்மம்” (ப்ரக்ஞானம் ப்ரஹ்மா) என்று ரிக்வேதஉபதேசமாகவும், “ஆத்மன்பிரம்மம்” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்று அதர்வணவேத ஸாக்ஷாத்கார உபதேசமாகவும், “அதுவாக நீ இருக்கிறாய்” (தத்வமஸி) என்று ஸாமவேதஉபதேசமாகவும், “நான் ப்ரஹ்மமாயிருக்கிறேன்” (அயமாத்மாப்ரஹ்மா) என்று யஜுர்வேத அனுபவவாக்கிய உபதேசமாகவும் சொல்லப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பரமாத்மாவும், நேதி-நேதி என்று தேடி மிஞ்சியுள்ள ஜீவாத்மாவும் வேறு வேறு அல்ல என்று விசாரித்து தெளிந்து கொள்ளவேணும் என்று கூறப்படுகிறது.
இருக்கும் தன்னை விட்டு இல்லாத பலவற்றைப் பிடித்துக்கொண்டு பலவிதமான உபாதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன், எப்போது அனைத்து உபாதிகளையும் நீக்கிவிட்டு தனது தன் ஸ்வயவடிவத்தைப் பார்க்க முயல்கிறானோ, அப்போதுதான் அவனுக்கு ஸ்வயம்பிரகாசமான ஞானம் கிட்டும்.
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே…………
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே” …
இந்த கண்ணதாசன் பாட்டை கேட்டிருபீர்கள்.
அதுவரை ஆத்மா ஸ்வயமாகப் பிரகாசித்தாலும், மற்றவைகள் மறைப்பதால் ஆத்மாவின் வீச்சை அவன் உணர முடியாது. மாறாக மனம், புத்தி போன்ற உள்ளுருப்புக்களின் அறிவார்த்தமான இயல்புகளே ஆத்மாவின் இயல்புகள் எனத்தவறாகவும் புரிந்துகொள்ள நேரிடும். அதற்குத்தான் நமது குருநாதர் வந்து ஸ்வரூபநிரூபணத்தை நமக்கு செய்தார். தினம் தினம் ஜபத்தின்போது மட்டும் அந்த வாக்கியத்த்கை சொல்வது கடமையாக போய்விட்டது. அதன் உள்ளார்த்தம் இப்ப கொஞ்சம் புரிகிறதா? அந்த ஸ்வரூபம் நீதான் – உன்னை விட்டு வேறில்லை. இதுதான் குருபாதுகா மந்த்ரம் நமக்கு தினம் தினம் அறிவுறுத்துகிறது.